Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம், "கதையருவி" தளத்திற்கு தங்களை வரவேற்கிறோம்!

    இத்தளத்தில் எழுத எங்களை "vskathaiaruvi@gmail.com" என்ற மின்னஞ்சலில் தொடர்புக் கொள்ளவும். நன்றி!

Negizhundha Nenjam...16

  • Thread Author
அத்தியாயம்….16

நேத்ரனுக்கு அத்வைத் சொல்லி சென்ற வார்த்தைகளே மீண்டும் மீண்டும் கேட்டு கொண்டு இருந்தது.. மந்ராவின் அந்த நடவடிக்கை சொன்னால் போதும், நீதிமன்றத்தில் குழந்தையை தன்னிடம் ஒப்படைத்து விடுவார்கள் என்று நம்பி கொண்டு இருந்தான்..



அதே காரணம் தன் மீது சொன்னால், குழந்தை தாயிடம் தான் இருக்க வேண்டும் என்று சொல்லி விடுவார்களோ.. என்று குழந்தை விசயத்தில் முதல் முறையாக பயந்தான்…



ஸாகித்யாவின் நிலை சொல்லவே தேவையில்லை.. தவறு செய்தவர்கள் தைரியமாக இருக்கிறார்கள்…



நான் என்ன செய்தேன்.. அத்வைத் அப்படி என்று தெரிந்ததும்.. நான் அவனை திருமணம் செய்ய மாட்டேன் என்று சொன்னேன்.. அது தப்பா…?







அவன் செய்த செயலுக்கு கண்டிக்காமல், திருமணத்திற்க்கு மறுத்த தன்னை திட்டுக்கிறார்கள்..



தான் அது போல் ஒரு செயலை செய்தால், இவர்கள் இப்படி தான் இருப்பார்களா…? கண்டிப்பாக இல்லை..



தன் மீது இருக்கும் பட்டத்தை எல்லாம் இந்த நேரம் கட்டி இருக்க மாட்டார்கள்.. இதோ ஒன்றும் செய்யாத போதே, தன் மீது எவ்வளவு பெரிய பழியை சுமத்தி இருக்காங்க..

ஆணுக்கு ஒரு நீதி..? பெண்ணுக்கு ஒரு நீதியா..? என்று எதேதோ எண்ணமிட்டு வந்து கொண்டு இருந்தவளின் கவனத்தை குழந்தை ஸாகி தடுத்து நிறுத்தினாள்.. பசி என்று சொல்லி..



ஆம் இன்னும் அந்த குழந்தையை விடாது தான் ஸாகித்யா சுமந்து கொண்டு இருக்கிறாள்…

குழந்தை பசி என்று சொல்லவும்.. காரில் தான் எடுத்து வந்த உணவு இருகிறது.. அதை எடுத்து வந்து கொடுக்கலாம் என்று நினைத்து தன்னோடு நடந்து வந்து கொண்டு இருந்த நேத்ரனை திரும்பி பார்த்தவளுக்கு, அங்கு நெரிந்த யோசனை படிந்த முகத்தை பார்த்து விட்டு…



கார் சாவீயை கேட்கலாமா…? வேண்டாமா..? என்று யோசனை செய்யும் போதே இவர்களை நோக்கி வந்த ரவீந்திரன் ஸாகித்யாவின் கையில் இருந்த குழந்தையை தான் வாங்கி கொண்டு..



“உங்க இரண்டு பேரையும் வக்கீல் கூப்பிடுறார்.. போய் என்ன என்று கேளுங்க ..” என்றவரிடம் ஸாகித்யா..



“ அங்கிள் குழந்தை பசி என்று சொன்னா…” என்றதற்க்கு ரவீந்திரன்..



“ நான் கொடுத்து கொள்கிறேன் மா..” என்று பதில் அளிக்க.. ஸாகித்யா மீண்டும் விடாது..



“ பேபி புட் காரில் இருக்கு.. கார் கீ இவர் கிட்ட இருக்கு ..” என்று சொல்லும் போதே நேத்ரனுக்கு இவ்வளவு நேரமும் இருந்த கடின தன்மை மாறி அங்கு மென்மை படிந்தது..



சிரித்துக் கொண்டே சாவீயை தன் தந்தையிடம் கொடுத்து விட்டு, ஸாகித்யாவோடு தங்கள் வக்கீல் அறையை நோக்கி சென்றான்…



அங்கு இவர்கள் இருவரையும் பார்த்த நேத்ரனின் குடும்ப வக்கீல்..

“ வாங்க நேத்ரன்.. “ என்று வர வேற்று ஸாகித்யாவையும் பார்த்துக் கொண்டே எதிரில் இருந்த இருக்கையை காட்டி அமரும் மாறு சொன்னார்..



அந்த வக்கீலில் பார்வை ஸாகித்யாவின் மீது சிறிது நேரம் படிந்து பின் தான் மீண்டது…



மிகவும் ஈசியாக முடிய கூடிய கேஸ்.. என்று நினைத்திருந்தவருக்கு, கடினம் ஆக்கியது ஸாகித்யா தானே.. அதனால் அந்த பார்வையா..? இல்லை தான் சொல்லும் விசயத்தை இந்த பெண் எப்படி புரிந்துக் கொள்வாள்..? என்ற யோசனையா..? என்று தெரியவில்லை..



ஆனால் நேத்ரன் கேட்ட கேள்விகள் ஆன…



“ குழந்தை நமக்கு தானே.. . இதில் வேறு ஏதாவது பிரச்சனையா..? என்ற கேள்விக்கு யோசனை படிந்த முகத்துடம்…



“ஆம்.. இல்லை..” என்று அந்த வக்கீல் நேத்ரனிடம் பேசிக் கொண்டு இருந்தாலுமே.. அவரின் பார்வை அவ்வப்போது ஸாகித்யாவின் மீது படிந்து மீண்டதை கவனித்த நேத்ரன்…. கூடவே அவர் கவனம் தன் பேச்சில் இல்லை என்பதையும் உணர்ந்தான்…



ஸாகித்யாவை காட்டி…. “ நீங்க என் கிட்ட தனிப்பட்ட முறையில் பேசனும் என்றால், இவங்களை வேணா வெளியில் இருக்க சொல்லட்டும்மா.?” டாட் ஸாகித்யாவையும் நீங்க அழைத்ததா சொன்னார்…” என்று நேத்ரன் வக்கீலிடம் கேட்டுக் கொண்டு இருக்கும் போதே…



. ஸாகித்யா தான் அமர்ந்திருந்த இருக்கையில் இருந்து எழ பார்த்தவளை வக்கீல் அவசர அவசரமாக..



“ வேண்டாம்.. போகாதிங்க… நீங்க இங்கேயே இருங்க … முக்கியமா உங்க கிட்ட பேச தான் கூப்பிட்டதே..” என்ற அவரின் பேச்சில் ஸாகித்யாவின் முகம் கொஞ்சம் மாறியது..



இவரும் மந்ரா வக்கீல் பேசுவது உண்மை என்று நினைத்து விட்டாரோ என்ற பதை பதைப்பு ஒரு பக்கம் இருக்க.. நான் இன்னும் என்ன என்ன கேள்விகள் எல்லாம் கேட்க வேண்டி இருக்கும்..





இன்னும் என்ன எல்லாம் பார்க்கனும் என்று அவள் நினைத்துக் கொண்டு இருக்கும் போதே நேத்ரன்..வக்கீல் ஸாகித்யாபை பற்றிய பேச்சி என்ற வார்த்தையில்…



“ அப்போ நீங்களும் மந்ரா வக்கீல் சொல்றதை தான் நம்புறிங்களா..? என்று கோபத்துடன் கேட்டான்..



“அப்படி நான் நம்பி இருந்தால், நான் இந்த யோசனை சொல்ல உங்களை நான் இங்கு அழைத்து இருக்க மாட்டேன்..” என்ற வக்கீல் பேச்சு புரியாது இருவரும் அவரை பார்த்தனர்..



இப்போது அந்த வக்கீல் இருவரும் ஒரு சேர பார்த்தவர் …பின் ஸாகித்யாவை மட்டும் பார்த்து..



“ நீங்க ஒரே ஒரு டெஸ்ட் எடுத்தா போதும்.. எல்லா பிரச்சனையும் தீர்ந்து போய் விடும்.. என்ற பேச்சில் நேத்ரன் யோசனையுடன்



அவரை பார்த்தான் என்றால்.. ஸாகித்யா குழப்பத்துடன் அவரை பார்த்தாள்…



அதே குழப்பத்துடன் ஸாகித்யா.. “ என்ன டெஸ்ட்..? என்ற கேள்விக்கு, வக்கீலிடம் உடனடியாக பதில் வராது, ஒரு வித சங்கடத்துடன் நேரனை பார்த்தவரை..



நேத்ரன் அதே யோசனையுடனேயே பார்த்து கொண்டு இருந்தான்…



பின் மிக தயக்கத்தோடு தான் அந்த வக்கீல்… “ வர்ஜின் டெஸ்ட் எடுத்தா போதும் .. “ என்ற அவரின் பேச்சில்..



நேத்ரன் தன் பிடித்தம் இம்மையை முகத்தில் அப்படியே காட்டினான் என்றால், ஸாகித்யா கோபத்துடன் எழுந்து கொண்டாள்..



வக்கீல் தான் பல வித சமாதானம் செய்து அவளை உட்கார செய்தார்…. நேத்ரன் அவளை சமாதானம் செய்வதில் எந்த வித உதவியும் செய்யாது.. இதில் தனக்கும் உடன் பாடு இல்லை என்பது சொல்லாது சொல்ல..



வக்கீல் இருக்கும் நிலையை தெளிவாக விளக்க ஆரம்பித்தார்..



“ பொதுவா இது போல் விவாகரத்து என்றால். குழந்தை அம்மாவிடம் தான் வளர வேண்டும் என்று சட்டம் சொல்கிறது.. அதுவும் பெண் குழந்தைக்கு ஒரு சில விசயத்திற்க்காக அம்மாவின் தேவை என்று கருதி அம்மாவிடம் வளர்வது தான் முறையும் என்று இருக்கு..



தந்தை வாரத்துக்கு ஒரு குறிப்பிட்ட நாள் வந்து பார்த்து செல்லலாம்.. ஆனால் நான் உங்கள் விசயத்தில் குழந்தை உங்களுக்கு சேரும் என்று நான் சொல்ல காரணம்…”



தன் முன் இருந்த மந்ராவின் மருத்துவ அறிக்கையை காட்டி.. “ இது கொடுத்த தைரியத்தில் தான்… குழந்தை ஒரு நல்ல சூழ்நிலையிலும், ஒழுக்கத்துடன் வளர வழி வகை செய்வதும் சட்டத்தின் பொறுப்பு அதை வைத்து குழந்தையை வாங்கி விடலாம் என்று நினைத்தேன்..





ஆனால் இப்போது அதே காரணம் அவங்க உங்கள் மீது சொல்லும் போது, முதலில் சட்டம் என்ன சொல்கிறதோ.. அதை செயல் படுத்த தான் முனையும்…



அதை தவிர்க்க… அதாவது அவர்கள் உங்கள் மீது வைத்த குற்ற சாட்டை தகர்த்தால் தான் முடியும் எனும் போது… நான் சொன்ன டெஸ்ட்டில் ரிப்போர்ட் தேவைப்படுத்து..



அதை கொடுத்தால் குழந்தை உங்களிடம் வரும் அதில் எந்த வித சந்தேகமும் இல்லை..” என்று அந்த வக்கீல் சொல்லி முடிக்க..



நேத்ரன்.. “ இல்லை…” என்றால் என்று கேட்டதும் வக்கீல் உடனடியாக..



“ எதையும் உறுதியாக சொல்ல முடியாது..’ என்று விட்டார்.. இந்த வார்த்தையை சொல்லும் போதே.. அவரின் பார்வை ஸாகித்யாவிடமே இருந்தது…







அவரின் பார்வையின் அர்த்தம் ஸாகித்யாவுக்கு புரிந்தது தான்.. இருந்தும் அவளுக்கு இதை மட்டும் ஒத்துக் கொள்ள முடியவில்லை.. அதை அவரிடம் சொல்லியும் விட்டாள்…



“எனக்கு புரியுது…? ஆனா எது என்றாலும், இது மட்டும் ஏத்துக்க எனக்கு ஒரு மாதிரியாக இருக்கு..” என்று வக்கீலிடம் சொல்லிக் கொண்டே நேத்ரனையும் பார்த்தாள்…



தன்னை அன்று காப்பாற்ற போய் தானே இன்று அவருக்கு அவர் குழந்தை கிடைப்பதில் பிரச்சனையாக இருக்கிறது… என்று அவள் நினைக்க..



நேத்ரனோ.. அவளை அன்று காப்பற்றியதோடு விட்டு இருக்கலாம்.. இல்லை வேலை கொடுத்ததோடாவது விட்டு இருந்து இருக்கலாம்…



தனக்கு சொந்தமான வீட்டில் அவளை வைத்ததோடு மட்டும் அல்லாது, தன் குழந்தைக்காக அங்கு சென்று வந்து இன்று அவள் பெயரை கெடுத்து வைத்து இருக்கிறோமே.. என்று நேத்ரன் ஸாகித்யாவுக்காக யோசித்தான்…





இந்த சோதனையை ஒரு பெண் எப்படி ஈசியாக எடுத்து கொள்வாள் என்று நேத்ரன் நினைக்க..





நேத்ரனை கவனித்த ஸாகித்யாவுக்கு அவன் முகத்தை பார்த்து என்ன நினைக்கிறான் என்று அவளாள் யூகிக்க முடியவில்லை..



தன்னை தவறாக அவன் நினைத்து விட கூடாது.. அதுவும் இவளை பார்த்ததால் தானே இந்த பிரச்சனை என்று நின்சித்தவள் ..



அதை பக்கத்தில் அமர்ந்திருந்த நேத்ரனிடம் சொல்லவும் செய்து விட்டாள்…



“ சாரி நேத்ரன் சார்.. எனக்கு பிரச்சனை இப்படி ஆகும் என்று எல்லாம் நான் நினைத்து கூட பார்க்கவில்லை…” என்று உண்மையாக வருந்தி நேத்ரனிடம் ஸாகித்யா மன்னிப்பு கேட்டாள்..



அதற்க்கு நேத்ரன் பதில் அளிக்கும் முன்.. வக்கீல்..



“ இப்போ உங்க சாரி எல்லாம் குழந்தையை அவரிடம் சேர்த்து விடாது..மா.. எனக்கு தெரியும்.. இது போல் டெஸ்ட் ஒரு பெண்ணுக்கு எடுப்பது எந்த அளவுக்கு மனம் அழுத்ததை கொடுக்கும் என்று..



ஆனால் நான் இதை விட வேறு மாதிரி கேஸ் எல்லாம் பார்த்துட்டு வந்து இருக்கேன்..அதை வைத்து பார்த்தால், நீ இதுக்கும் சம்மதிக்கலாம் என்று தான் தோன்றுக்கிறது…



என்னை பொறுத்த வரை இது உனக்கும் ஒரு வகையில் தீர்வு என்று தான் சொல்வேன்…” என்ற வக்கீலில் பேச்சில் என்ஸ்க்கு இதில் என்ன தீர்வு கிடைக்கும் என்று குழம்பி போய் ஸாகித்யா வக்கீலை பார்த்தாள் என்றால், நேத்ரன் அதை கேட்டே விட்டான்..



“ இது சொல்வது சங்கடமானது தான்.. ஆனால் இது உங்க எதிர் காலத்தில் இப்படியும் நடக்கலாம்.. நீங்க இந்த வர்ஜின் டெஸ்ட் எடுப்பதில் உங்களுக்கும் நேத்ரனுக்கும் தவறான உறவு இல்லை என்பது தெளிவாகி விடும்…



அதில் நேத்ரனுக்கு குழந்தை கிடைப்பதோடு, நாளை உங்கள் திருமணம் பேசும் போது மந்ரா அவர்கள் உங்கள் மீது சுமத்திய குற்றம் பொய் என்று ஆகி விடும் தானே..



உங்களை கல்யாணம் செய்பவருக்கு, இந்த கேசு பற்றி தெரிய வந்தாலுமே, உங்க கிட்ட இருக்கும் மருத்துவ சான்றிதழ் போதும்.. நீங்க பரிசுத்தமானவங்க என்று நிறுப்பிக்க….” என்று நாளை இதுவும் நடக்கலாம் என்று தான் அந்த வக்கீல் விளக்கினார்…



நேத்ரனுக்கு வக்கீல் பேச பேச இதனால் ஸாகித்யாவின் வாழ்க்கையும் நாளை பாதிக்குமா..? அதிலேயே அவன் மனது சுழன்றது..



தவறு செய்யாது ஏன் தண்டனை அனுபவிக்க வேண்டும்.. அவன் எண்ணம் இது தான்..



தனக்கு எனும் போது.. அந்த பரிசோதனையின் விருப்பம் இல்லாதவன்.. இது ஸாகித்யாவின் வருங்கால வாழ்க்கைக்கு நல்லது எனும் போது..



ஸாகித்யாவிடம்.. “ தவறாக நினைக்காதே ஸாகித்யா… இந்த பரிசோதனை கேட்கவே எனக்கே ஒரு மாதிரியா தான் இருக்கு..



ஆனல் இதனால் உன் எதிர் காலம்.. நல்லா இருக்கும் என்றால்…” என்றவனின் பேச்சை ஸாகித்யா முழுவதும் சொல்ல விடாது..



“ நான் எப்படி பட்டவள் என்பதை ஒரு மெஷின் வைத்து கொடுக்கும் அந்த மருத்துவ ஆரைக்கையஒ வைத்து என்னோடு ஒருத்தன் குடும்பம் நடத்தினால், அவன் எப்படி பட்டவனா இருப்பான் நேத்ரன் சார்…” என்று கேள்வி கேட்ட ஸாகித்யாவுக்கு நேத்ரனால் பதில் சொல்ல முடியவில்லை..

ஆம் உண்மை தானே.. இது தான் அந்த வக்கீலும் நினைத்தார்.. பெண் பார்க்க பயந்த சுபாவமாக தெரிக்கிறாள்…



கண்டிப்பாக இது போல் இருக்கும் பெண்கள்.. ஒருவரின் துணை இல்லாது வாழ முடியாது… பெண்களுக்கு கடைசி வரை வரும் உறவு திருமண உறவு தானே…. அதை சொன்னால் ஒத்துக் கொண்டு விடுவாள் என்று நினைத்து தான் வக்கீல் அப்படி பேசியது…



ஆனால் ஸாகித்யாவின் இந்த தெளிவான பேச்சில் அவளையே அவர் பார்த்து கொண்டு இருக்கு…



தொடர்ந்து ஸாகித்யா ஒரு வித கூச்சத்தோடு..

நான் கன்னியா என்று அவர் மனதாலும், உணர்வாலும் உணரனும் சார்.. அந்த உறவு தான் கடைசி வரை தொடரும்..” என்றவளின் பெச்சில் இரு ஆண்களும் பதில் சொல்லாது என்பதை விட அவர்க்ஸ்ளின் பதில் இல்லாததால் அமைதியாகி விட்டன..



ஆனால் குழந்தை தூங்கி விட்டதும்.. குழந்தையை பார்த்து கொள்ளும் பெண் மணியிடம் குழந்தையை கொடுத்து விட்டு,



காரில் ஏசியை போட்டு விட்டு.. “ குழந்தையை வைத்து இங்கேயே பார்த்து கொள்.. பத்திரம் என்று வக்கீல் அறைக்கு வந்த ரவீந்திரன்…



வக்கீல் சொன்ன வர்ஜென் டெஸ்ட்டில் ஆரம்பித்து.. இதோ ஸாகித்யாவின் பேச்சுக்கு இரு ஆண்களும் பேச முடியாது இருப்பது வரை பார்த்து கேட்டு கொண்டு இருந்தவர்..



ஸாகித்யாவின் கேள்விக்கு மட்டும் இல்லாது. குழந்தை நேத்ரனுக்கு கிடைக்கவும் ஒரு விசயம் சொன்னார்.. அது ஸாகித்யா நேத்ரனை திருமணம் செய்தால் அனைத்து பிரச்சனைக்கும் ஒரு முடிவுக்கு வரும் என்று…
 
Top