Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம், "கதையருவி" தளத்திற்கு தங்களை வரவேற்கிறோம்!

    இத்தளத்தில் எழுத எங்களை "vskathaiaruvi@gmail.com" என்ற மின்னஞ்சலில் தொடர்புக் கொள்ளவும். நன்றி!

Negizhundha Nenjam...2

  • Thread Author
அத்தியாயம்…..2

நேத்ரன் எப்போதும் போல அன்றும் நேரம் கடந்தே வீட்டுக்கு வந்தான்… அந்த நேரம் எப்போதும் மந்ரா உறங்கி இருப்பாள்..

ஆனால் அன்று உறங்காது விழித்து இருப்பததை பார்த்தவன். என்ன என்று கூட கேட்காது குளியல் அறைக்குள் நுழைந்து தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு வந்தவன்..

அப்போதும் மந்ரா அதே நிலையில் அமர்ந்து இருப்பதை பார்த்து.. “ என்ன தூங்க்கவில்லையா…?” என்று கேட்டான்..

கேட்டவனுக்கு பதில் கொடுக்க வேண்டி மந்ரா வாயை திறக்கும் வேளயில், அதை கேட்க அங்கு இல்லாது அறையை விட்டு சென்றவனை பார்த்து மந்ராவுக்கு இன்னும் இன்னும் தான் கோபம் கூடியது..

நேத்ரன் சாப்பிட்டு முடித்து, பின் தன் குழந்தையை அவள் அறைக்கு சென்று பார்த்து விட்டு வரும் வரை அப்படியே இருந்தாள்..

இந்த முறை அவள் எதிர் பார்த்தது போல தான் “ என்ன தூங்கவில்லையா டார்லிங்க்..?” என்று கேட்டு கொண்டே படுக்கையில் படுத்தவன், அவன் பக்கத்தில் அமர்ந்த மந்ராவை அணைத்து கொண்டவன்…

“ ஓ இதுக்கு தான் தூங்கவில்லையா…?” என்று கேட்டவனுக்கு ..

“ இல்லை இதுக்கு இல்லை..” என்று பதில் சொல்ல தான் மந்ரா நினைத்தாள்.. ஆனால் சொல்லவில்லை…

இது போலான நிகழ்வுகள் கணவன் மனைவிக்குள் இப்போது எல்லாம் அறிதாகி போன நிலையில், இன்றைய அவனின் தேடலுக்கு வழி விட்டு, வழி தொகுத்து கொடுத்தாள்.. அனைத்தும் முடிந்த பின்…



நேத்ரனுக்கு என்ன புரிந்ததோ…” மந்ரா நீ சின்ன பெண் கிடையாது.. உடனே நான் என்ன கிழவியா..? என்று கேட்காதே..

. நல்லா படித்து… உன் அப்பாவின் தொழிலை தனியாக பார்த்துக் கொண்ட ஒரு பக்குவப்பட்ட பெண்… இன்று உன் நடவடிக்கையில் புதியதாக இருக்க காரணம்… அந்த பெண்ணை அத்வைத் கவனிக்கும் முறையை பார்த்து என்று எனக்கு தெரியும்..

அந்த பெண் வெளியில் அவ்வளவா போகாதவள்.. அதோட சின்ன பெண்.. மூன்று மாதம் முன் தான் அவள் காலேஜே முடிச்சி இருக்கா…அதை அத்வைத்தே உனக்கு சொன்னான்..

அதோடு இது போல் ஓட்டல்.. அது சாப்பிடும் முறை எதுவும் அந்த பெண்ணுக்கு தெரியல.. ஆனால் உனக்கு.. நம்ம ரெண்டு பேரோட ஸ்டெஜ் ஒன்னு எனும் போது, உனக்கு புதியதாக நான் சொல்லி தர ஒன்றும் இல்லை..

இதோட நான் உன்னை கல்யாணம் செய்ய காரணமே… உன் மெச்சூரிட்டி தான்.. காலேஜில் எல்லோரும் என்னை அப்ரோச் செய்ய நினைத்தாங்க..

ஆனால் நீ… என்னை மற்ற பெண்களை எப்படி பார்த்தியோ… அதாவது உன் பார்வையில் நட்பை தான்டி நான் வேறு எதுவும் பார்த்தது கிடையாது..

அந்த உன் மெச்சூரிட்டி பிடித்து தான் நீ ஒகே என்று டாடி கிட்ட சொன்னேன்… அதுவும் உன்னிடம் தெளிவா பேசிய பின் தான் என் சம்மதம் சொன்னேன். கூடவே என்னை பற்றி ஒரு விசயத்தையும் சொன்ன பின்.. உன்னிடம் ஒரு முறைக்கு இரு முறை கேட்ட பின் தான் நம் திருமணம் நடந்தது….

இல்லை என்றால் அந்த வயதிலேயே கல்யாணத்தை பத்தி நான் யோசிச்சி கூட இருந்து இருக்க மட்டேன்..

மூன்று வருடம் கழித்து திருமணம் செய்யும் போது, கண்டிப்பாக சின்ன பெண், தான் கிடைக்கும்..

அந்த பெண்ணுக்கு ஒன்னு ஒன்னா கத்து கொடுக்கும் பொறுமையும் எனக்கு இல்லை.. அத்வைத் அந்த பெண்ணை எப்படி கேர் செய்யிறான் என்று நீ நினைக்கிற..

ஆனால் இது ஒரு ஸ்டெஜூக்கு பின்.. இதுவே அவங்க வாழ்க்கையில் பிரச்சனையா முடியும்.. எவ்வளவு காலம் அந்த பெண்ணுக்கு அவன் சொல்லி கொடுத்து கொண்டு இருப்பான்… இரிடெட்டிங்கா இருக்காது…



என்னால் கண்டிப்பாக அது போல் எல்லாம் முடியவே முடியாது.. அதற்க்கு உண்டான நேரமும் என்னிடம் கிடையாது…” என்று சொல்லி கொண்டு வந்தவன் அதோடு விட்டு இருந்தால் கூட பரவாயில்லையாக இருந்து இருக்குமோ… என்னவோ..

எப்போதும் மனதில் நினைத்ததை மறைத்து பேசி பழக்கமில்லாத நேத்ரன்..

“ அதனால் தான் என்னோடு நீ மூன்று மாதம் பெரியவள் என்றாலும் பரவாயில்லை என்று நான் உன்னை மணந்தேன்…” என்று சொல்லி விட்டு அவன் உறங்கி விட்டான்..

ஆனாம் மந்ரா உறங்காது முழித்து கொண்டு இருந்தவள் மனது முழுவதும் அப்போ என்னை இவன் கல்யாணம் செய்ய என்னுடைய தகுதி என் வயது தானா…? இதே சிந்தனை தான் அவள் மனதில் ஓடிக் கொண்டு இருந்தது…

***********************************************************************

அன்றும் லேட்டாக அலுவலகத்திற்க்கு வந்த அத்வைத்தை, முறைத்து பார்த்தான் நேத்ரன்… அவன் முறைப்பில் ஏதோ சொல்ல வந்த அத்வைத்தை பேச விடாது…

“ ஏற்கனவே நேரம் ஆகி விட்டது.. நீ இப்போ பேசியும் நேரத்தை வீண் ஆக்காதே..” என்று அத்வைத்தை பேச விடாது அன்று அவர்கள் புதியதாக பெண்களுக்கு என்று பிரத்யோகமாக டிசைன் செய்த உள்ளாடைகளை பற்றிய விவரத்தை ஆஸ்திரேலியாவில் இருந்து வந்தவர்களோடு முக்கியமான பேச்சு வார்த்தைகளை முடித்து விட்டு….

மீண்டும் தங்கள் அலுவலகம் வந்த பின்னே.. நேத்ரன் …

“ ஸ் அப்பாடா என்று சொல்லி அவனுக்கு என்று பிரத்தியோகமாக இருக்கும் அறையில் இருந்த மெத்தையில் சாய்ந்து அமர்ந்தான்…

அமர்ந்தவனுக்கு காபியை கலந்து அவன் கையில் கொடுத்த அத்வைத் தனக்கும் ஒரு காபியை கையில் வைத்து கொண்டு அவன் எதிர் இருக்கையில் அமர்ந்தவன்..

“ ம் அப்புறம் நேத்ரா… என்ன..? ” என்பது போல் நேத்ரனை பார்த்து கேட்க..

“ அதை நான் கேட்கனும் அத்வைத்…. இப்போ எல்லாம் நீ நேரத்துக்கு ஆபிசுக்கு வரது கிடையாது… ஒரு நாள் இருந்தால் பரவாயில்லை..

மூன்று மாதமா. சரியா சொல்வது என்றால், அந்த பெண் சென்னை வந்ததில் இருந்து உன் கவனம் தொழிலில் இல்லை..

கேட்டா அந்த பெண்ணுக்கு சென்னை புதியது.. எங்கு என்றாலும் நான் தான் அழைத்து கொண்டு போகிறேன் என்று சொல்ற..

அது எல்லாம் உன் தனிப்பட்ட விசயம்.. நான் அதில் தலையிட மாட்டேன்.. ஆனால் உன் தனிப்பட்ட விசயம் நம்ம தொழிலை பாதித்தால்,

இப்போ நம்ம தொழிலாக இருப்பதை, என் தொழிலாக மட்டும் மாத்த வேண்டியதாகி விடும்..” என்ற அவனின் பேச்சில் உண்மையிலேயே… அத்வைத் பதறி விட்டான்..

“ என்ன நேத்ரன் சின்ன விசயத்துக்கு எல்லாம் இவ்வளவு பெரிய பேச்சு பேசுற…? என்று பர பரத்து கேட்டவனை, கூர்மையாக பார்த்தவன்..

“ தொழில் உனக்கு சின்ன விசயமா..?” என்ற அவன் கேள்விக்கு பதில் அளிக்க முடியாது சங்கடத்துடன் தலை குனிந்து இருப்பனை பார்த்த நேத்ரனுக்கு என்ன தோன்றியதோ…

“ சரி விடு.. இனி இது போல் ஆகாது பார்த்துக்க.. எந்த விசயத்துக்காகவும் என் தொழில் பாதிக்க கூடாது.. அவ்வளவே. என்றவனுக்கு..

“ சரி..” என்று சொன்னவன் பேச்சு கூட அவ்வளவு உறுதியாக இல்லை என்று தான் நேத்ரனுக்கு தோன்றியது.. அதை அத்வைத்திடம் சொல்லவும் செய்தான்…



“இது உன் பர்சனல் தான்..” என்று சொன்னவன்..

பின்.. “ அந்த பெண்ணை அவள் ஆபிசுக்கு கூட்டிட்டு போய் விடுவது.. பின் கூட்டி கொண்டு வருவது… இதனால் உனக்கு டைம் தானே வேஸ்ட்..

அந்த பெண்ணை தான் கல்யாணம் செய்துக் கொள்வதாக இருந்தால் ஏன் காலம் கடத்துற.. கல்யாணம் செய்துக்க வேண்டியது தானே. இந்த பிக்கப் ட்ராப் நேரமாவது மிச்சம் ஆகும்.” என்றதற்க்கு..

“ எங்க ஜாதகப்படி இன்னும் ஒரு வருடம் சென்று தான் கல்யாணம் செய்ய வேண்டுமாம்.. அப்போ தான் நாங்க சேர்ந்து வாழ்வோம் என்று இருக்கு..” என்றவனின் பேச்சில்..

“ இந்த காலத்தில் ஜாதகத்தை நம்பி கல்யாணத்தை தள்ளுவதா.. காமாடியா தான்டா இருக்கு..

இப்போ எல்லாம் கல்யாணமே தேவையில்லை… என்று லிவிங்க் டூ கெதரில் வாழ்க்கை ஓடிட்டு இருக்கு.. இப்போ போய்..” என்று , கிண்டல் செய்தவனை பார்த்து மெல்ல சிரித்த அத்வைத்..

“ எங்க வீட்டில் அது எல்லாம் ரொம்ப பார்ப்பாங்க நேத்ரன்… எங்க வீட்டில் பெண்கள் வேலைக்கே அனுப்ப மாட்டாங்க…” என்று சொன்னவனை நேத்ரன் அதிசயத்து தான் பார்த்தான்..

இந்த காலத்தில் இப்படி ஒரு குடும்பமா என்று நினைத்தவன்… “அப்போ இந்த பெண்ணை மட்டும் எப்படி..?” என்ற கேள்விக்கு..

ஸாகி என் அத்தை பெண்.. மாமா ஸாகி சொன்ன வயதா இருக்கும் போதே இறந்து விட்டார்..

அப்போதில் இருந்தே அத்தையும், ஸாகியும் எங்க வீட்டில் தான் இருக்காங்க… ஸாகி நல்லா படிப்பா.. அதோட அவளுக்கு காலேஜிலேயே காம்பசில் நல்ல வீலை நல்ல சம்பளத்திலும் கிடச்சது..

அதோட எங்க ஜாதகப்படி ஒரு வருடம் கழித்து தான் திருமணம் செய்யனும் என்றதும்… என் அம்மா தான் பேசியே சென்னைக்கு அனுப்பி வைத்தது..” என்றவனின் பேச்சில்..

“ ம் பரவாயில்லை.. உங்க அம்மாவாவது ப்ராட் மைன்டா இருக்காங்களே..” என்று அவரை பாராட்டினான்..

பாவம் அப்போது அவனுக்கு அவர்கள் வீட்டின் உண்மையான நிலை தெரியாது இப்படி சொல்லி விட்டான்..

அத்வைதோடு நட்பு ஆண்டுகணக்கில் இருந்தாலும், நேத்ரன் அவன் வீட்டுக்கு எல்லாம் சென்றது கிடையாது.. காரணம் அத்வைத் ஹாஸ்ட்டலில் தங்க்கி தான் படித்தான்..

நேத்ரனுக்கு சென்னையில் மெயின் சிட்டியில் வீடு.. அங்கு அங்கு அவன் தந்தை தங்கள் தொழிற்சாலை பக்கத்தில் அடுக்குமாடி குடியிருப்பை வாங்கி போட்டு இருக்கிறார்..

காரணம் தொழிற்சாலை சிட்டிக்கு வெளியில் இருப்பதால், சில சமயம் அதிகம் வீலை காரணமாக அதிக நேரம் தொழிற்சாலையில் இருக்கும் சூழல் இருந்தால் அங்கு பக்கத்தில் இருக்கும் அந்த ப்ளாட்டில் தங்கி கொள்வார்..

அதனால் நட்புக்கள் சந்திப்பு இது போல் ஒரு இடத்தில் நடப்பது போல் பார்த்து கொள்வதால், நேத்ரன் அத்வைத் வீட்டுக்கு செல்லும் வாய்ப்பு ஏற்படவே இல்லை..

அவன் தன் திருமணத்திற்க்கே… அலுவலகத்திலேயே வைத்து விட்டான்.. மந்ராவும் அப்படியே வைத்து விட்டாள்..

அதன் நெத்ரனுக்கு தனிப்பட்டு அத்வைத் குடும்பத்தை பற்றி ஒன்றும் தெரியாது.. அதனால் இப்போது அவன் தன் குடும்பத்தை பற்றி சொல்ல சொல்ல அவனுக்கு ஆச்சரியம் தான்..

நேத்ரனுக்கு அம்மா கிடையாது.. அவன் முழுவதும் தந்தையின் வளர்ப்பே… தந்தை பரம்பரை பணக்காரர்… வெளிநாட்டுக்கு வாசனை திரவியங்க்கள் தயாரித்து ஏற்மது செய்வது தான்.. அவர்களின் குடும்ப தொழில்..

அவர்களின் தரத்தை அடித்து கொள்ள வேரு ஒரு பிராண்ட் வராததால் இன்றும் அவர்களின் வாசனை திரவியம் தான் முன் நிலையில் உள்ளது..

சொல்வார்கள்.. அவன் என்னப்பா பணக்காரன் என்று.. ஆனால் பணம் படைத்தவர்கள் அதை தக்க வைத்து கொள்ள போராடும் அந்த போராட்டம் என்பது…

அதே நிலையில் தான் நேத்ரனின் தந்தை ரவீந்திரனும் இருந்தார்.. மனைவி இறந்த இரண்டாம் நாளே தொழிற்சாலையில் பிரச்சனை என்று அங்கு செல்ல வேண்டிய நிலை…

அதை பார்த்து வளர்ந்த நேத்ரனும் தன் தந்தையையே பின் பற்றினான் என்று தான் சொல்ல வேண்டும்..

இருக்கும் நிலையை ரவீந்திரன் சொல்லி விட்டார்… நான் எப்போதும் ஒய்வேன் என்னை எப்போது சாய்க்கலாம் என்று ஒரு கூட்டம் காத்து கொண்டு இருக்கிறது..

ஏழை என்பது தவறு கிடையாது.. ஆனால் பரம்பரை பணக்காரர்களின் நிலை கொஞ்சம் தாழ்ந்தாலும், அவனை மிதித்து போய் கொண்டே இருப்பார்கள் என்று..

அவன் தந்தை எதை மனதில் வைத்து சொன்னார் என்று தெரியவில்லை.. ஆனால் நேத்ரன் அந்த வார்த்தையை மனதில் ஆழ பதிய வைத்து கொண்டான்..

அவன் தந்தை எப்போதும் ப்ராக்டிக்கல் மேன்… அவனுக்கு திருமணம் செய்ததும், அவனை தனியாக செல்லும் படி சொல்லி விட்டார்..

நேத்ரனும் அதை மறுக்காது ஏற்று டி.நகர் முக்கிய பகுதி இருக்கும் பங்களாவில் வசிக்கிறார்கள்..

அதனால் அத்வைத்தின் மத்தியவர்க்கத்தின் அந்த நடவடிக்கை எல்லாம் அவனுக்கு ஆச்சரியத்தை கூட்டியது என்று தான் சொல்ல வேண்டும்..

ஆனால் நேத்ரனுக்கு இது எல்லாம் என்ன ஆச்சரியம்..? உனக்கு இன்னும் இருக்கு அது ஏகத்துக்கு என்பது தெரியாது தான் அவன் அடுத்த மாதம் இப்போது புதியதாக பெண்களின் உள்ளாடை..

அதுவும் மத்திய வயதுடைய பெண்களுக்கு என்று பிரத்தியோகமாக தயாரித்த உள்ளாடையை விளம்பரம் படம் எடுக்கவும்..

அதை அந்த ஆஸ்திரேலியே காரர்களிடம் அக்கிரிமெண்ட் போடவும் செல்ல இருப்பதால், அதுவும் சென்றால் இந்தியா வர நான்கு மாதம் ஆகும் என்ற நிலையில்,

சென்னையில் முடிக்க வேண்டிய வேலைகளை அவன் நேரம் காலம் பாராது உழைத்து கொண்டு இருந்தான்..

இப்போது எல்லாம் மந்ரா அவனை அதிகம் தொல்லை செய்வது கிடையாது… தொழில் பார்ட்டி..

பின் எப்போதாவது வெளியில் போகலாம் என்று கூப்பிட்டால் மட்டுமே வருபவள்.. அங்கும் அவனை நச்சரிக்காது இருந்தவளின் தன்னை புரிந்து கொண்ட அவளின் தன்மையில், இதற்க்கு தான் தன் சமவயதுடையரை மணக்க வேண்டும் என்பது…

தன் முடிவே சரி என்பது போல் மந்ரா நடக்க.. அத்வைத்தும் ஒரு சில நிகழ்வுகளுக்கு ஸாகியை அழைத்து வந்தான்..

வந்தவள் தன் குழந்தை ஸாகி பேபியின் கை பிடித்து கொண்டு பேபி போல் நிற்பது .. அத்வைத் யாரையாவது அறிமுகம் செய்து வைத்தால் கூட, அவர்களிடம் ஒன்ற முடியாது தனித்து இருப்பது..

முக்கியமாக ரெஸ்ட் ரூம் செல்வதற்க்கும், அத்வைத் துணை தேவையாக இருப்பதை பார்த்தவனுக்கு..

“ யப்பா இரிட்டெட்டிங்க்.. இவளை எல்லாம் இவன் எப்படி வாழ் நாள் முழுவதும் வைத்து சமாளிக்க போகிறான் என்று நினைத்து தலையை குலுக்கி கொண்டவனுக்கு தெரியவில்லை..

அந்த சமாளிக்க போகிறவனே இவன் தான் என்று…

அவன் ஆஸ்திரேலியா செல்லும் நாளும் வந்தது.. அவன் குழந்தை ஸாகி தந்தையை போல் சொல்வதை புரிந்து கொள்பவள்..

அதனால்.. “ பைடா ஸாகி பேபி.. “ என்று அவன் சொல்ல.. அந்த குழந்தையும் சமத்தாக..

“ பை டாட்..” என்று சொல்லி விடை கொடுத்தாள்…

நேத்ரனுக்கு வெளிநாட்டு பயணம் என்பது புதியது கிடையாது தான்.. வருடத்திற்க்கு மூன்று நாங்கு முறையாவது சென்று வருவது தான்.. என்ன ஒன்று மூன்று வாரம் .. அப்படி இல்,லை என்றால் ஒரு மாதம் காலம்.. அவ்வளவே..

இது போல் நீண்ட நாட்கள் அவன் சென்றது கிடையாது… நான்கு மாதம்.. இந்த முறை அவனுக்கே ஒரு மாதிரியாக தான் இருந்தது..

அதுவும் மந்ராவிடம் .. “ விமான நிலையம் வரை வருகிறாயா..?” என்று கேட்டதற்க்கு..

உடனே.. “ ம்..ம்” என்று தலையாட்டியவளை பார்க்க அவனுக்கு இம்முறை என்னவோ போல் தான் ஆனது..

எப்போதும் தன் உணர்ச்சியை அனைவரும் முன்னும் வெளிக்காட்டதவன்,.. விமான நிலையத்தில் மந்ராவிடம் விடை பெறும் போது.. அவளின் புரிந்துக் கொண்ட இந்த தன்மையில் ஈர்க்கப்பட்டவனாக…

அவளை இறுக்கி அணைத்தவன்… “ வந்ததும் நம்ம செகண்ட் ஹனிமூனுக்கு ரெடியா இரு டியர்..” என்ற பேச்சில் மந்ரா வெட்கப்பட்டளோ..இல்லையோ..

அத்வைத்தோடு வந்த ஸாகித்யா… தான் மந்ராவை அணைக்கும் போது “அய்யோ..” என்று தன் வாயில் கை வைத்து கொண்டவள்.. தான் மந்ராவிடம் சொன்ன



அந்த வார்த்தையில் அவள் முகம் சிவந்து தலை குனிந்து கொண்டவளின் செயல்களை பார்த்த நேத்ரனுக்கு..

“ நான் என்ன இவளையா அழைத்தேன்..” என்று தான் தோன்றியது.. ஏன் அப்படி அவன் நினைத்தான் என்று தெரியவில்லை.. ஆனால் நினைத்தான்..
 
Top