Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம், "கதையருவி" தளத்திற்கு தங்களை வரவேற்கிறோம்!

    இத்தளத்தில் எழுத எங்களை "vskathaiaruvi@gmail.com" என்ற மின்னஞ்சலில் தொடர்புக் கொள்ளவும். நன்றி!

Negizhundha Nenjam...21

  • Thread Author
அத்தியாயம்….21

அந்த பார்ட்டி முடித்து வீட்டுகு வந்த நேத்ரன் ஸாகித்யா தம்பதியர்களுக்கு, அன்று தங்கள் படுக்கை அறைக்கு செல்லும் போது, என்னவோ முதல் இரவு அறைக்கு செல்லும் போது வரும் கூச்சம் போல் இருவரும் உணர்ந்தனர்..



அதுவும் நேத்ரன்.. நான் என்னவோ இப்போது தான் முதல் முறையாக பெண்ணின் வாசனையை நுகர்வது போல் என்னடா நீ..? என்று அவனுக்கு அவனே கேட்டுக் கொண்டான்…



மந்ராவோட திருமண நாளின் முதல் நாளே அவர்களுக்குள் உறவு உண்டாகி விட்டது.. அதுவும் நேத்ரன்..



“ உனக்கு ஆட்சபனை இல்லை என்றால் இன்றே.. இல்லை என்றாலும் சொல்லி விடு.. பிரச்சனை கிடையாது..” மந்ராவோடான திருமண நாள் இரவில் நேத்ரன் தன் மனைவியிடம் இப்படி தான் கேட்டான்..

“ எங்க டீலிங் இது தான். பிடித்து இருந்தால், சைன் போடுங்க ..” என்று இது போல் தான் பேசி வைத்தான்.. பின் நடந்ததை நினைத்து பார்க்க கூட அவனுக்கு பிடித்தம் இல்லை..



ஆனால் இன்று.. அதுவும் ஓட்டலில் அவன் நடந்து கொண்டது அனைத்துமே வேண்டும் என்று தான் செய்தது..



அது என்ன.. எப்போது பார்த்தாலும், அவள் என் கண்ணை பார்த்து பேசுவது.. நான் என்ன அவளின் பாஸ் மட்டுமா…? வேறு எதுவும் போல அவள் கண்ணுக்கு நான் தெரியவில்லையா…?.





அந்த பார்ட்டி ஹாலில் இருந்து வெளியேறி காரை எடுத்துக் கொண்டு அந்த ஓட்டலில் நுழைவு வாயில் வரும் வரை.. அவன் மனது இதை தான் எண்ணிக் கொண்டு வந்தது..



திருமணம் முடிந்த அன்று ரவீந்திரன் தங்களை அழைத்து..

“ இனி ஸாகி பேபியும் நீயுமே… நேத்ரன் அறையில் தங்கி கொள்ளும்மா..” என்று சொன்னவரின் எண்ணம் நேத்ரனுக்க புரிந்தது..



அப்போது ஒரு சிரிப்போடு தான் அதை அவன் ஏற்றுக் கொண்டான்.. ஏற்றுக் கொள்ளும் போது வேறு எந்த எண்ணமும் அவனுக்குள் கிடையாது என்று தான் சொல்ல வேண்டும்..



ஸாகியும் அப்படி தான் உணர்ந்து இருக்க வேண்டும்.. தந்தை அப்படி சொன்னதும்.. தன் முகத்தை ஒரு பார்வை பார்த்தாள்.. அதில் ஏதாவது தன் முகத்தில் பிடித்தம் இன்மை தெரிகிறதா என்பது போல் ஒரு ஆராய்ச்சி பார்வை அவ்வளவே..



அதை உணர்ந்தவன் போல் நேத்ரன்.. “ எனக்கு ஒரு பிரச்சனையும் கிடையாது..” என்று இதை அவன் கண்ணால் எல்லாம் சொல்ல வில்லை.. வாயை திறந்து தான் சொன்னான்..









அதை பார்த்த தன் தந்தையின் முகத்தில் தெரிந்த நிரைவில் .. நேத்ரன் சிரித்துக் கொண்டே சென்று விட்டான்..



தந்தை சொன்னது போல் வேலையாட்களின் உதவியோடு இரு ஸாகித்யாவின் ஜாகையும் தனக்கு மட்டுமே ஆன அறையை தங்கள் அறை என்று சொல்லும் படி செய்து விட்டனர்..



தந்தையின் தலையிடு எல்லாம் வெளியோடு மட்டும் தானே நின்று விடும்.. அதனால் பெரிய படுக்கை.. படுக்கையின் நடுவில் ஸாகி பேபியை படுக்க வைத்து.. இருபக்கம் குழந்தைக்கு அரணாக நேத்ரனும் ஸாகித்யாவும் படுத்துக் கொண்டனர்..



தூங்கும் போது .. “குட் நையிட்..”





விழித்ததும்.. “ குட் மார்னிங்க்..” என்று அவர்களின் நாள் இப்படியாக தான் சென்று கொண்டு இருந்தது…





ஆனால் நேத்ரன் ஸாகித்யாவை நட்பு என்ற வட்டத்திற்க்குள் கொண்டு வர முயற்சி செய்யவில்லை..



நேத்ர என்ன தான் அனைத்தும் தான் கடந்து விட்டேன்…. இதனால் எனக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று வெளியில் காட்டிக் கொண்டாலும், உள்ளுக்குள் ஒரு ஆணாக அவன் பெரிதும் அடி வாங்கினான் என்று தான் சொல்ல வேண்டும்..



அதனால் நட்பு என்ற வார்த்தையே அவனுக்குள் வெப்பாங்காயாக கசந்தது… ஸாகித்யா தன் மனைவி இது மட்டும் தான் அவன் தன் மனதில் பதிய வைக்க முயன்றான்.. இல்லை அது ஏற்கனவே பதிந்து போய் விட்டதா..?



ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம்.. ஏற்கனவே பெண்ணை அறிந்த அவனுக்கே இன்று ஏனோ அவன் மனதில் பல இரசாயன மாற்றங்கள் அது பாட்டுக்கு அவன் உடலுக்குள் சுழன்றுக் கொண்டு இருந்தன.. அந்த இரசாயன மாற்றங்கள் அதுவே உருவானதா..? இல்லை ..



இவள் விட்டால், இப்படியே தான் இருப்பாள்..

பின் பிள்ளையை பெற்றவர்கள் இவளின் ஜாதகத்தை தன்னிடமே கேட்பார்கள் என்று நினைத்ததில் வந்த உரிமை உணர்வில், சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்தது போல் நிலை தான் நேத்ரனுக்கு…



அவனுக்கே இப்படி என்றால், ஸாகித்யாவின் நிலை சொல்லவும் வேண்டுமோ…





பார்ட்டிக்கு சென்று வந்த நாளில் வெளியிலேயே சாப்பிட்டதால், ஹாலில் அமர்ந்திருந்த ரவீந்திரன் இருவரையும் பார்த்து பொதுவாக சிரித்தவர்..



நேத்ரனிடம் “ உன்னிடம் பேச வேண்டும் நேத்ரா..” என்று ரவீந்திரன் கேட்டார்..





ஆனால் எப்போதும் உடனே .. “ என்ன டாட்..? என்று கேட்டுக் கொண்டே தன் அருகில் வந்து அமரும் நேத்ரன் …

அன்று தயக்கத்தோடு தூங்கி கொண்டு இருந்த குழந்தையையும், தூக்கிக் கொண்டு நின்றிருந்த ஸாகித்யாவை தயக்கத்தோடு ஒரு பார்வை பார்த்தானே தவிர.. .



அந்த இடத்தை விட்டு நகர்வது போல் காணும்…



ரவீந்திரன் தான்… “ என்ன நேத்ரா டையாடா இருக்கா..?” என்று மகனின் தயக்கத்தை பார்த்து கேட்டார்..



அப்போது நேத்ரன்.. “ ஆமாம்..” என்று தான் சொல்ல நினைத்தான்…



ஆனால் ஸாகித்யா… “ பேசிட்டு வாங்க..” என்று சொல்லோடு தங்கள் அறைக்கு செல்லவும்..



அதுவே அவள் தனக்காக தூங்காது காத்து கொண்டு இருப்பாள் என்று நினைத்து..



தன் தந்தையிடம் பேச சென்றான்.. அவர் பேசியதும் தொழில் முறை என்று பார்த்தால் அது முக்கியமான பேச்சு தான்..



ஆனால் அன்று அது அவனுக்கு முக்கியமானதாக தோன்றவில்லை.. அவனின் பார்வை மேல் நோக்கி தங்கள் அறை நோக்கியே சென்றது..

அதை கவனித்த ரவீந்திரன் மனது நிறைந்து தான் போனது.. அது கொடுத்த திருப்தியில், இனி தொழில் எல்லாம் அவருக்குமே இரண்டாம் பட்சமாக தான் என்று…



“ நீ பார்க்கவே ரொம்ப டையாடா தெரியுற.. எது என்றாலும் நாளைக்கு பேசலாம்.. நாளை என்றதும் சீக்கிரம் எல்லாம் வர தேவை இல்லை..” என்று ஏதோ மனதில் நினைத்து சொன்னார்…







தந்தை சொன்னதுமே நேத்ரன் ஒரு பேச்சுக்கு கூட பரவாயில்லை என்று சொல்லாது தங்கள் அறைக்கு சென்றவனுக்கு, ஸாகித்யா எல்லாம் காத்துக் கொண்டு இருக்கவில்லை … ஏமாற்றம் தான் காத்துக் கொண்டு இருந்தன..



ஆம் இரு ஸாகித்யாவும்.. ஒருவர் மேல் ஒருவர் கை போட்டுக் கொண்டு சுகமாக உறங்கிக் கொண்டு இருந்தனர்..



தன் மகள் மேலேயே தான் பொறாமை பட கூடும் என்று, அவன் அன்று தான் உணர்ந்தான்.

.

ஒரு சிறு கோபம் தன் மனைவி ஸாகித்யாவின் மேல்.. எனக்காக இவள் ஒரு அரை மணி நேரம் காத்துக் கொண்டு இருக்க கூடாதா என்று..







கூடவே சிறிது ஆதங்கமும்… “ தனக்கு அவள் மீது இருக்கும் தேடல்.. அவளுக்கு தன் மீது இல்லையோ என்று..



ஆனால் ஒன்று ஏதோ நினைத்தவனுக்கு, ஏதோ ஆனது போலான கதையாக தான் அன்று தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு குழந்தை ஸாகியின் இன்னொரு பக்கம் படுத்துக் கொண்டவனுக்கு, தூக்கம் வருவதாக இல்லை..



திரும்பி தன் மனைவி மகளின் பக்கம் பார்வையை திருப்பியவன்.. குழந்தை மீது ஸாகித்யா கை போட்டு படுத்துக் கொண்டு இருப்பதை பார்த்தவன் அவள் கை மீது தன் கையை பதிய வைத்தான்..



பின் குழந்தைக்கு இருவரின் கை பாராம் ஆகாதோ என்று நினைத்தவன் பின் சட்டென்று தன் கையை எடுத்துக் கொண்டவனின் மீது ஸாகித்யா கை தொடவும்..

தலையை தூக்கி குழந்தையின் அந்த பக்கம் பார்த்தவனுக்கு புன்னைகை முகம் கொஞ்சமும்… தூக்கம் முகம் மிச்சமுமான ஸாகித்யா தெரிய ..



ஏமாற்றம் இடந்த இடத்தில் ஒரு நிறைவு உண்டானது.. அது தந்த மன நிறைவோடு அன்றைய இரவை கழித்தவனுக்கு அடுத்த இரவும் அதே போல் தான் ஆனது..



ஆனால் அதற்க்கு காரணம் ஸாகித்யா கிடையாது.. நேத்ரன்… தந்தையின் தொழிலில் ஏதோ பிரச்சனை என்று தன்னை அழைத்ததும் அங்கு விரைந்து சென்றான்..



அங்கு யூனியன் தலைவர் என்ற போர்வையில் தொழிலாளிகளை தூண்டி விட்டு பேசுபவனின் பேச்சி ஏனோ நேத்ரனுக்கு சரியாக படவில்லை…



இது இவனே பேசுகிறானா… இல்லை யாரோடு தூண்டுதளில் பேசுகிறானா.. என்று தான் நினைக்க தோன்றியது அவன் பேச்சும்… பேசும் முறையும்…



ஒரு பார்வை சந்தேகத்துடன் அவனை பார்த்த வாறு தான் மற்ற தொழிலாளியுடன் பேசிக் கொண்டு இருந்தான்..



அவன் வரும் போது இருந்த சத்தம் …கூச்சல்.. குழப்பம்.. நேத்ரன் பேச பேச கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து கொண்டு வர வர..



அந்த யூனியன் தலைவரின் முகத்தில் ஒரு கலவரம் தெரிந்தது.. கூடவே அவனின் கைய் பேசிக்கு ஒரு அழைப்பும் வர.. அதை ஏற்று அந்த பக்கம் சென்று பேசி விட்டு வந்தவனை நேத்ரனும் கவனித்து கொண்டு தான் இருந்தான்…



வந்தவன் .. “ இவர்களின் பிரச்சனைகளை தீர்த்து வைப்பது தான் என் வேலை.. நீங்க எது என்றாலும் என்னிடம் தான் பேச வேண்டும்..” என்று ஒரு அதிகார தோரணையில் அவன் பேசினான்..

அதற்க்கு நேத்ரன் .. “ நானும் உன் போல் தான் தொழிலாளி பிரச்சனைகளை தீர்த்து வைப்பது தான் என் வேலை..” என்று சொன்னவன்..

மற்ற தொழிலாளிகளை பார்த்து.. “ நான் சொன்னதற்க்கு எல்லாம் ஓகே தானே..” என்று கேட்டதற்க்கு..

அனைவரும் ஒரு மனதாக… “ சரி..” என்றதில்..



அவனின் அடுத்த இலக்காய் நேத்ரனின் தந்தை ரவீந்திரனிடம் சென்றது… எங்கு அடித்தால் நேத்ரன் விழுவானோ.. அங்கு அடித்தான்.. அந்த யூனியன் தலைவர்..



“ என்னய்யா நீ…” என்பது போல் மரியாதை அற்ற வார்த்தகளை அவன் ரவீந்திரனிடம் பிரயோகம் செய்ய..



இவ்வளவு நேரமும்.. இது எதை நோக்கான இலக்கு என்று தெரிந்து, நேத்ரன் தன் மனதில் அமைதி அமைதி என்று தனக்கு தானே சொல்லிக் கொண்டு இருந்ததை அனைத்தும் தூக்கி போட்டவனாய் அவனின் காலர் சட்டையை பிடித்து.. அடித்தும் விட்டான்..பின் என்ன வெடித்தது தொழிலாளர்கள் பிரச்சனை…



எது நடக்க கூடாது என்று அவன் நினைத்தானோ அது நடந்து விட்டது.. நடந்ததை நினைத்து வருந்தாது அடுத்து அடுத்து சமாளிக்கும் மார்க்கமாக பேசி ஒரு வகையாக பிரச்சனை முடிய இரவு பத்தை கடந்து விட்டது..



பேச்சுக்கு நடுவில் தனக்கு தெரிந்தவனை அழைத்து அந்த யூனியன் தலைவரின் பேசியை கொடுத்து..



இந்த எண்ணுக்கு இன்று அழைத்து பேசியவர்கள்.. அதுவும் குறிப்பாக தான் பேசிக் கொண்டு இருக்கும் போது… அவனுக்கு பேசியில் வந்த அழைப்பின் நேரத்தை கணக்கிட்டு சொல்லி..



யார் அழைத்தது தெரிய வேண்டும் என்று சொன்ன அரை மணி நேரத்திற்க்குள் அழைத்த விவரம் அவனுக்கு வந்து விட்டது..









அன்றைய நாளில் அந்த யூனியன் தலைவருக்கு அழைத்தவர் இரண்டே பேர் தான்.. மந்ரா… அத்வைத்.. அதுவும் நேத்ரன் குறிப்பிட்டு சொன்ன நேரத்திற்க்கு வந்த அழைப்பு அத்வைத்திடம் இருந்து வந்து இருந்தது…



யார்.?. என்று தெரிந்த நேத்ரனுக்கு காரணம் தெரியவில்லை.. இது எல்லாம் தனக்கு ஒரு பிரச்சனையும் இல்லை என்பது இருவருக்கும் தெரியும்…



அப்படி இருக்க.. எதற்க்காக இது என்று நினைத்துக் கொண்டே இருந்தவனுக்கு அழைப்பு வீட்டை மேற்பார்வை இடுபவரிடம் இருந்து வந்தன..



இரு ஸாகித்யாவும் இன்னும் வீட்டிற்க்கு வரவில்லை என்று…



இப்போது நேத்ரனுக்கு காரணரம் புரிந்து விட்டது. இருந்தும் பதற வில்லை.. ஆனால் வீட்டின் மேற்பார்வை பார்ப்பவரிடம் கோபமாக கத்தினான்…



“ பேபி ஸ்கூல் முடிந்து வரும் நேரம் மூன்று மணி.. இப்போது மத்து மணி.. அப்போ ஏழு மணி நேரம் என்ன செய்தாய் என்று…



“ ஸாகித்யா மேடத்திடம் இருந்து எனக்கு மெசஜ் வந்தது சார்… நானும் பேபியும் வெளியில் போகிறோம் வர லேட் ஆகும் என்று..



“ மெசஜ்..” என்று அவரிடம் பல்லை கடித்து வார்த்தைகளை துப்பியவனுக்கு அடுத்து கேட்ட கேள்விக்கு உண்டான விடை தெரிந்தே கேட்டான்..



“ இப்போது மட்டும் எனக்கு ஏன் போன் செய்திங்க .?” என்று..



“ மேடமுக்கு போன் செய்தா சுச் ஆப் என்று வருது சார்.. திரும்ப திரும்ப அழைத்தால் அதே வரவும் தான் உங்களிட ம் சொன்னேன்..” என்ற அவரின் பதிலுக்கு விடை அளிக்காது பேசியை அணைத்து விட்டவனுக்கு தெரியும் இரு ஸாகித்யாவையும் கடத்தியது யார்..? என்று..



ஆனால் ஏன்..? ஒருவர் என்றால் காரணம் தெரியும்.. இருவர் என்பதால் இது தான் என்று நேத்ரனால் ஒரு தெளிவுக்கு வர முடியவில்லை…



ஆனால் அவன் நினைத்த அந்த ஏன் என்பதற்க்கு உண்டான காரணம் என்ன என்பது போல் இரண்டு நாட்களுக்கு முன் ஒதுக்கு புரமான இடத்தில் வீட்டை வாடகைக்கு எடுத்த வீட்டில் குழந்தையையும் ஸாகித்யாவையும் கட்ட வைத்து இருக்க..



அவர்கள் முன் நிலையிலேயே மந்ராவும் அத்வைத்தும் சண்டை இட்டுக் கொண்டு இருந்தனர்…

மந்ரா.. “ எதுக்கு குழந்தையையும் இங்கு கூட்டிட்டு வந்தே.. பார் எப்படி பயந்து போய் இருக்கா…. முதல்ல கட்டை அவிழ்த்து விடு..” என்று சத்தம் மிட..



அத்வைத்.. “ எனக்கு வேறு வழி இல்லாததால் தான். இப்படி ஆகி விட்டது…” என்று முதலில் அத்வைத் மந்ராவிடம் தன்மையாக சமாதானமாக தான் பேசினான்..



ஆனால் அத்வைத்தின் அந்த சமாதான பேச்சை ஏற்க்கும் மனநிலையில் மந்ரா இல்லை.. காரணம் பேபி ஸாகிக்கு காய்ச்சல்…



பள்ளியில் இருந்து ஸாகித்யாவுக்கு அழைப்பு வந்ததால் தான்.. அவள் அலுவலகத்தில் இருந்து ஒரு கேப் புக் செய்து பள்ளிக்கு விரைந்தது..



பின் குழந்தையை அழைத்து கொண்டு வேறு ஒரு கேப்பை புக் செய்து காத்து கொண்டு இருக்கும் போது ஒரு கார் வந்து அவள் அருகில் வந்து நிற்கவும்..

தான் புக் செய்த கேப் என்று நினைத்து தான்.. முதலில் குழந்தையை காரில் அமர வைத்து பின் தான் அமர்ந்த பின்..



ஒடிபி எண் சொல்வதற்க்கு முன் காரை இயக்கியதோடு மட்டும் அல்லாது அதிக வேகத்தை பார்த்து..



“ நீங்க நான் புக் செய்த கேபா..?” என்று ஸாகித்யா கேட்கும் போது.. ஓட்டுனரின் பேசிக்கு ஒரு அழைப்பு வந்தது..



அதை ஏற்றவன் சொன்னது இது தான்… “ இல்ல அவங்க மட்டும் தனியா இல்ல.. குழந்தையோடு தான்..” என்ற பேச்சுக்கு…



பேசியின் அந்த பக்கத்தில் இருந்து என்ன சொல்ல பட்டதோ…



“ இல்ல நான் சொன்னேன்… ஆனால் அத்வைத் சார் தான் பரவாயில்லை என்று சொன்னார்..” என்ற பேச்சில் ஸாகித்யா அதிர்ந்து தான் போய் விட்டாள்…
 
Top