அத்தியாயம்….3
இத்தனை மாதமா என்று எப்போதும் இல்லாது இந்த முறை கொஞ்சம் தயங்கி போன நேத்ரனுக்கு, அதன் பின் அதை பற்றி யோசிக்க முடியாத அளவுக்கு வேலை, அவனை உள் இழுத்துக் கொண்டது…
அவன் உடல் உனக்கு ஓய்வு வேண்டும் என்று கெஞ்சுயும் ஓய்வு கொடுக்க முடியாத அளவுக்கு, வேலை ….வேலை …என்று அதன் பின்னே சுற்றிக் கொண்டு இருந்தவனுக்கு, அவன் உறக்கத்திற்க்கு என்று சிறிது நேரம் மட்டுமே அவனால் ஒதுக்க முடிந்தது..
அதில் எங்கு இருந்து மனைவியை அழைக்க… தன் தந்தையை அழைக்க.. இதுவும் அவன் ஆஸ்திரேலியா வந்து ஒரு வாரம் சென்ற நிலையில், அவன் தந்தை ரவீசந்திரனே.. இவனை அழைத்து..
“ என்ன நேத்ரா உன்னிடம் போனே காணும்..?” என்ற அவரின் கேள்விக்கு, நேத்ரன்…
“ டாட் நான் இந்தியாவில் இல்லை.. ஆஸ்திரேலியாவுக்கு வந்து இருக்கேன்..” என்றதில்..
“ ம் அத்வைத் சொன்னான்…” என்றவரிடம் நேத்ரனால் இங்கு வரும் போது சொல்லி விட்டு வர முடியவில்லை..
ஏன் என்றால் அப்போது ரவீந்திரனே இந்தியாவில் இல்லாது அவர் ஜெர்மனியில் இருந்தார்..
அங்கும்… இங்கும்… இருக்கும் காலம் வித்தியாசத்தால், அவனால் போன் செய்து பேச வேண்டும் என்று நினைக்கும் போது.. இந்த நேரம் டாட் தூங்கி கொண்டு இருப்பார் என்று நினைப்பவன்.
பின் பேசலாம் எனும் போது அவனின் ஒய்வு இல்லாது வேலை பளூவில் மறந்து விட்டான்..
இப்போது அவரே அழைத்து பேசவும் ஏனோ இந்த முறை அவனின் மனது குத்த செய்தது…
தந்தையை பார்த்தே ஒரு மாதம் ஆகி விட்டது என்பதையே அவன் அப்போது தான் உணர்ந்தான்..
தான் இங்கு வந்து ஒரு வாரம் தான் ஆக போகிறது… தான் இந்தியாவில் இருந்த ஒரு வாரம் முன் தான் அவர் ஜெர்மனி சென்றது..அதுவும் தன்னை அழைத்து இரண்டு நாள் முன்பே சொல்லி விட்டு தான் சென்றார்…
“ நான் வர இரண்டு வாரம் ஆகும்…” என்று..
அப்போதே என்னுடைய ஷெட்டியூல் எனக்கு தெரியும் தானே… தான் ஆஸ்திரேலியா சென்றால், வர குறைந்தது நாங்கு மாதமாவது ஆகும் என்று…
தான் சென்று அவரை பார்த்து இருக்கலாம் என்ற நினைவோடு , தந்தையிடம் நேத்ரன் பேசிக் கொண்டு இருந்தவனின் குரல் மாறுபாட்டால்..
“ என்ன நேத்ரா வேலை அதிகமா.. வாய்ஸ் டல்லா இருக்கு..? ஆனால் அதற்க்கு எல்லாம் நீ தளர்பவன் கிடையாதே…” என்று கேட்டவரிடம் சொல்லி விட்டான்..
“ நீங்க என்னிடம் ஜெர்மனி போகிறேன் என்று சொன்ன போதே நான் உங்களை வந்து பார்த்து இருக்கனும் டாட்.. எனக்கு அப்போதே ப்ளான் தான் இங்கு வருவதை பற்றி..” என்று மனதில் இருப்பதை சொல்லி விட்டான்…
நேத்ரன் இப்படி சொன்னதுமே, ரவீந்திரனிடம் இருந்து எந்த பதிலும் இல்லாது அமைதி காக்கா..
“ டாட் டாட்…” என்று நேத்ரனின் இரு முறை அழைப்புக்கு பின்..
“ ம் லைனில் தான் இருக்கேன் நேத்ரா… “ என்று சொன்னவர்..
பின்.. “ உன் அந்த சின்ன வயதிலேயே.. அதுவும் உன் அம்மா இறந்த புதியதிலேயே என்னால் உன்னுடன் டைம் ஸ்பெண் பண்ண முடியல…
அந்த வயதிலேயே இருக்கும் நிலை.. அதுவும் என் சூழ்நிலையை புரிந்து கொண்டு.. நீங்க என்னை பற்றி கவலை படாதிங்க டாட்.. நீங்க உங்க வேலையை பாருங்க என்று என்னிடம் சொன்னவன் நேத்ரா நீ…
அந்த நிலையில் கடந்து வந்த நான்.. இன்னும் கூட எனக்கு என்று கூட நேரம் ஒதுக்க முடியாது… வேலை பின்னே ஒடுபவனுக்கு நீ உன்னை பத்தி விளக்க வேண்டாம்..
அதே போல் என்னை வராததுக்கு வருந்தவும் வேண்டாம்..” என்று சொன்னவர் ..
பின் ரவீந்திரன் தயங்கிய வாறு…
“ மந்திரா எதாவது அவளுக்கு என்று டைம் ஸ்பெண் பண்ண மாட்டேங்குறே… என்பது போல் சண்டை போட்டாளா..? என்று கேட்டார்..
அதற்க்கு நேத்ரன்.. “ இப்போது இல்லை..” என்று விளக்கி சொல்லாது அந்த பேச்சை நேத்ரன் முடித்து கொள்ள பார்த்ததிலேயே..
இதை பற்றி தான் பேசுவது மகனுக்கு பிடிக்கவில்லை.. என்று தெரிந்து கொண்டவராக..
“ வீட்டுக்கு பேத்தியை பார்க்க போனேன்… இப்போ என்னம்மா பேசுறா.. “ என்று சொன்னவர்..
“ யாருடா அது ஸாகி பேபி..?” என்று கேட்டவருக்கு..
“ இது என்ன கேள்வி..?” என்று நினைத்தவன்..
“ டாட் உங்களுக்கு பிரச்சனை ஒன்றும் இல்லையே… பேத்தியை பார்த்துட்டு வந்தேன் என்று சொல்லிட்டு, அவளை பத்தியே கேட்கிறிங்க..?” என்று கேட்டான்..
“ நம்ம ஸாகி பேபி தான் அவளுக்கு என்று ஒரு ஸாகி பேபி இருக்காலாம்… அவள் ஸாகி பேபி அழகாம்…
அவள் ஸாகி பேபி நல்லா பாடுவாளாம்.. அவள் ஸாகி பேபி.. ரொம்ப ரொம்ப ஸ்வீட்டாம்..” என்று ரவீந்திரன் சொல்ல சொல்ல தான் தன் மகள் யாரை பற்றி சொல்கிறாள் என்பதே நியாபகத்திற்க்கு வந்தது....
“ அவள் அத்வைத்தின் பியான்ஸிப்பா..” என்று சொன்னவன் அடுத்து தங்கள் தொழிற்சாலையை பற்றி தொழில் ரீதியாக பேசி விட்டு கை பேசியை வைத்து விட்டான்..
உண்மையில் ரவீந்திரன் சொல்லும் வரை… அத்வைத்தின் வருங்கால மனைவி ஸாகித்யாவை பற்றிய சிந்தனை அவன் மனதில் எப்போதும் ஒரு நிமிடம் ஒரு நொடி கூட வர வில்லை என்று தான் சொல்ல வேண்டும்..
ஆனால் தன் வருங்காலத்தில் அவளை பற்றிய சிந்தனை இல்லாது அவன் வாழ்க்கையில் ஒரு நிமிடம் என்ன… ஒரு நொடி கூட அவனால் கடத்த முடியாது என்பது தெரியாதவனாக, அடுத்து ஸாகித்யாவை பற்றி அங்கு இருக்கும் போது மறந்து தனக்கு நேரம் கிடைக்கும் போது தன் மகள் ஸாகியிடம் பேசியவன்..
பின் மந்ராவை எப்போதாவது நேரம் கிடைக்கும் போது அவன் அழைப்பான்… அவள் வீட்டில் இல்லை என்றால், பின் பேசலாம் என்று நினைத்து சில சமயம் பேசி இருக்கிறான்… பல சமயம் மறந்தும் இருக்கிறான்..
இங்கு சென்னையில் தங்கள் பெண்கள் பிரத்தியோக உள்ளாடை…
அதன் ஷோ ரூம்.. அதை தயார் செய்யும் தொழிற்சாலை… அதன் அலுவலகத்தையும் அத்வைத் பார்த்து கொள்வதாலும், தங்கள் குடும்ப தொழிலை தந்தை பார்த்து கொள்வதாலும், இங்கு ஆஸ்திரேலியாவில் முடிக்க வேண்டியதை வேலையை அதி வேகமாக எந்த இடையூறும் இல்லாது முடித்து விட்டு, வர வேண்டிய நாட்களுக்கு இரு வாரம் முன்னவே இந்தியாவுக்கு வந்து இறங்கினான்..
அனைவருக்கும் சர்பிரைஸ் கொடுக்கும் திட்டத்தோடு.. அதோடு இந்த முறை இந்தியா சென்ற உடன் பிசினஸ் நினைவே இல்லாது தன் குடும்பத்தோடு வெளிநாடு செல்லும் திட்டத்தோடுதான் வந்தான்..
அது என்னவோ இப்போது எல்லாம் மந்ரா தன்னை அதிகம் தொல்லை செய்யாது, அவள் பேசியில் தன்னை அழைத்த போதும் தான் வேலையில் எடுக்காது விட்டாலும்,பின்னும் தான் அழக்காது மறந்து போனாலுமே.. அதை பெரிய விசயமா எடுத்து கொள்ளாது…
தானே இதை பற்றி சொன்னால் கூட….” இட்ஸ் ஒகே.. உங்களுக்கு டைம் இருந்தால் கூப்பிட்டு இருந்து இருப்பிங்க தானே..” என்ற அவளின் புரிந்து கொண்ட தன்மைக்காகவாவது அவளுக்கு என்று நேரம் செலவிட வேண்டும் என்ற திட்டத்தோடு தான் அவன் இந்தியா வந்து இறங்கியதே…
விமான நிலையத்தில் இருந்து நேத்ரன் வீட்டுக்கு போகாது, அவன் நேராக தன் ஆபிசுக்கு சென்றான்.. ஆஸ்திரேலியாவில் முடித்த ஒரு சில விசயங்களை தன் அலுவலகத்தினரிடம் கலந்து பேசி விட்டு வீட்டுக்கு செல்லலாம் என்று அவன் அங்கு போகும் போது…
அத்வைத்தின் பி,ஏ.. கோபிநாத் மிக டென்ஷனாக இருந்ததை பார்த்து..
“ என்ன கோபிநாத் என்ன பிரச்சனை..?” என்ற இவன் கேள்விக்கு, அந்த கோபி என்பவன் அதிர்ந்தானா..?
இல்லை இவன் குரலில் அதிர்ந்தானா….? என்று தெரியவில்லை.. ஆனால் முன்னதிற்க்கு இவனை பார்த்து இன்னும் அதிர்ந்து போனான் என்பது மட்டும் நிச்சயம்…
தன் கேள்விக்கு பதில் அளிக்காது, தன்னை இன்னும் அதிர்ச்சியோடு தன் முகத்தை பார்த்து கொண்டு இருப்பதை பார்த்து அவன் முன் சிட்டிகை இட்டவன்..
“என்ன இந்த உலகத்தில் தான் இருக்கிங்களா…?” என்ற நேத்ரனின் கேள்வியில் கிண்டல் இருக்கிறதா..? இல்லை கோபமா..? என்று யோசனையுடன் கோபிநாத் முழிக்க..
“ கோபிநாத்..” இந்த முறை நேத்ரன் அவன் பெயரை அழுத்தி உச்சரித்த விதத்திலேயே.. அவன் அதிர்ச்சி மாயமாகி போனது..
முன் அதிர்ச்சியை ஈடு கொடுக்கும் வகையாக நேத்ரன் கேட்ட.. கேட்காத கேள்விகளுக்கும் பதில் அளித்தான்…
“இன்னும் ஒன் அவர்ல ஒரு முக்கியமான மீட்டிங்க் இருக்கு சார்.. ஆனால் இன்னும் அத்வைத் சார் வரவில்லை.. போன் செய்தாலும், அது சுவிச் ஆப் என்று தான் வருது சார்..”
கட கட என்று ஒப்பித்தவனை பேச விடாது தன் கைய் நீட்டி தடுத்தவன்..
பின் நேரத்தை பார்த்து விட்டு.. “ இன்னும் ஒன் அவர் இருக்குல… இன்றைக்கு மீட்டிங்கில் பேச வேண்டிய பைலை டேபுல் மீது வை .. நான் என்னை ப்ரஷ் செய்து விட்டு வர்றேன்..” என்று சொன்னவன் நேரத்தை விரையம் ஆக்காது தன்னை சுத்தப்படுத்தி கொண்டு வந்தவன்..
கோபிநாத் பைலை மட்டும் வைக்காது முக்கியமானதை குறிப்பிட்டு இருந்ததை மட்டுமே பார்த்தவன் பின் வந்தவர்களோடு பேச்சு வார்த்தை முடிப்பதற்க்குள் அவனுக்கு போதும் போதும் என்று ஆகி விட்டது என்று தான் சொல்ல வேண்டும்..
வந்தவர்கள் சென்ற பின் தான் அவனுக்கு ஒய்வே கிட்டியது.. சிறிது நேரம் கழித்து இவன் அத்வைத்தை அழைக்க… இரண்டு முறை அழைப்பு விடு பட்டு பின் எடுக்கப்பட்டது..
நேத்ரன் எடுத்த உடன் ..” நீ எங்கு இருக்கே…?” என்ற கேள்விக்கு..
“ என்ன நேத்ரா கேள்வி இது.. ஆபிசில் தான் இரு..” என்று அவன் பேச்சை முடிக்க விட வில்லை..
“ நானும் ஆபிசில் தான் இருக்கேன்..” என்று நேத்ரன் சொன்னதுமே.. அந்த பக்கத்தில் இருந்து சிறிது நேரம் எந்த பதிலும் இல்லை..
பின் கொஞ்சம் தயங்கிய வாறு… “ ஸாகியின் ஆபிஸ் பிரண்டுக்கு கல்யாணம் … அவள் தனியா போக பயமா இருக்கு என்று சொன்னா.. அது தான் அவளை அழைத்து கொண்டு .. “ என்று சொல்லிக் கொண்டு வந்தவன் நேத்ரன் எதுவும் சொல்லாது இருக்கவும்..
அவனே.. “ இப்போ அவள் ஆபிசுக்கு தான் விட போறேன்.. இன்னும் கொஞ்ச நேரத்தில் நான் ஆபிசில் இருப்பேன்..” என்றதும்..
நேத்ரனிடம் இருந்து.. ‘ வா..” என்ற வார்த்தை மட்டுமே வந்தது..
அத்வைத் சொன்ன கொஞ்ச நேரம் என்பது ஒரு மணி நேரம் கணக்கு போல்.. ஒரு மணி நேரம் கழித்து வந்தவனை எதுவும் சொல்லாது அவன் முகத்தையே.. பார்த்து கொண்டு இருந்த நேத்ரனிடம்..
“ திட்டு கூட திட்டி விட நேத்ரா.. இது போல் எதுவும் பேசாது பார்க்காதே…” என்று சொன்ன பின்னும் , ஆழ்ந்து பார்த்தானே தவிர…எதுவும் பேச வில்லை ஏன் திட்ட கூட இல்லை..
சிறிது நேரம் அங்கு அமைதி மட்டுமே நிலவியது…
பின் நேத்ரனே… “ நான் இப்போ பேசுவது திமிர் பேச்சா இருக்கலாம்.. ஏன் ஆணவத்தில் பேசுறேன் என்று கூட நீ என்னை நினைக்கலாம்..” என்று சொல்லி கொண்டு வந்தவனை அத்வைத்..
“ இல்ல நேத்ரா..” என்று ஏதோ சொல்ல வந்தவனை பேச விடாது…
“ நான் பேசுடுறேன்.. நீ அப்புறம் முடிவு செய்..” என்று நேத்ரன் சொன்ன அந்த முடிவு என்ற வார்த்தையிலேயே அத்வைத் அதிர்ந்து போனவன் பின் அவன் அடுத்து பேசிய பேச்சான..
“ எனக்கு இது மட்டும் பிசினஸ் கிடையாது… எனக்கு என்று தனியா ஒரு அங்கிகாரம் வேண்டும் என்று தான். இந்த பிசினஸை தொடங்கினேன்..
அதே போல் என்னால் தனியாக செய்ய முடியவில்லை என்று உன்னை நான் பார்ட்னரா ஆக்கி கொள்ளவில்லை.. அது உனக்கே தெரியும்…
படிக்கும் போதே தனியா தொழில் செய்ய வேண்டும்… ஏதாவது சாதிக்க வேண்டும்… என்ற உன்னுடைய அந்த வெறி தான். நான் உன்னை என் கூட சேர்த்து கொள்ள காரணம்..
ஆனால் இப்போ அந்த பையர் உன் கிட்ட இல்லாதது போல் இருக்கு.. உன் கவனம் வேறு எதிலேயோ.. வேறு எதிலேயோ என்ன..? உன் பியான்ஸி மீது தான் உன் மொத்த கவனமும் இப்போ இருக்கு…
உனக்கு எது முக்கியமோ.. எனக்கு தெரியாது.. அது நீ தான் முடிவு செய்ய வேண்டும்.. ஆனால் எனக்கு எது முக்கியம் என்பதை நான்.. நான் மட்டுமே தான் முடிவு செய்வேன்..
எனக்கு என் தொழில் ரொம்ப ரொம்ப முக்கியம்.. அதுவும் நானே ஆரம்பித்த இந்த பிசினஸ் எனக்கு எல்லாத்தையும் விட மிக முக்கியம்..
உனக்கு ஒன் வீக் டைம் கொடுக்கிறேன்.. நீ உனக்கு எது முக்கியம் என்று நீயே யோசிச்சி முடிவு எடுத்து விட்டு .. பின் என் கிட்ட சொல்..
அதற்க்கு அடுத்து தான் நான் என்ன ஸ்டெப் எடுக்க என்று நான் எனக்கு முடிவு செய்ய வசதியா இருக்கும்..’ என்று நேத்ரன் நான் சொல்ல வேண்டியதை சொல்லி முடித்து விட்டேன் என்பது போல் தன் பேச்சை முடித்து கொண்டான்..
அவன் பேசிய பின்னும் அத்வைத்துக்கு சட்டென்று வார்த்தைகள் வரவில்லை…
நேத்ரன் இப்படி தன்னிடம் பேசுவான் என்று அவன் சிறிதும் நினைத்து பார்க்கவில்லை..
அதனால் தான் சட்டென்று அவன் பேச்சுக்கு பதில் சொல்ல முடியாது அமைதி காத்தான்..
பின்.. “ உன் அடுத்த ஸ்டெப் என்றால் என்ன.. ஸ்டெப்..?” என்று கேட்டவனை ஆழ்ந்து பார்த்தவன்..
“நீ இந்த பிசினஸுக்கு போட்ட உன்னுடைய தேர்ட்டி பர்சண்டேஜை உன்னிடம் கொடுத்து விட்டு… இதை நான் டெக் ஓவர் செய்து கொள்வேன்..” என்றதோடு அங்கு இருந்து வந்து விட்டான்..
நேத்ரன் பேசி விட்டான் தான்.. அவன் சொன்னது போல் அவனுக்கு அவன் பிசினஸ் ரொம்ப முக்கியம்.. அவன் பேசியதும் சரியே.. ஆனால் கொஞ்சம் பக்குவமாக சொல்லி இருக்கலாம் என்று நினைத்தவனுக்கு, தொடர் வேலையாளும்.. தற்ப்போது நடந்த பிரச்சனையாளும், மிகவும் சோர்வாக உணர்ந்தான்..
தன் வீட்டுக்கு இன்னும் கொஞ்ச நேரத்தில் சென்று விடலாம் தான்… ஆனால் இந்த ட்ராபிக்கில், காரை ஓட்டி கொண்டு போக வேண்டும் என்றால், ஏதாவது குடித்தால் தான் முடியும் என்று..
காரை ஓட்டிக் கொண்டே… பார்த்து கொண்டு வந்தவனுக்கு அங்கு இருக்கும் ஒரு ஓட்டல் கண்ணில் பட்டது..
அந்த ஓட்டலில் தான் முன் ஸாகித்யாவை அறிமுகம் படுத்த என்று அத்வைத் இங்கு அழைத்து வந்தது..
ஏனோ அந்த ஓட்டல் பார்த்த உடன் ஸாகித்தியாவின் முகம் கண் முன் வந்தன..
அவளாள் தான் அத்வைத்தை இவ்வளவு பேச வேண்டியதாக போய் விட்டது என்று நினைத்து கொண்டே காரை அந்த ஒட்டலின் முன் நிறுத்தி விட்டு இறங்கியவன் முன், அவன் இவ்வளவு நேரமும் யாரை பற்றி நினைத்து கொண்டு இருந்தானோ.. தவறு தவறு யாரை திட்டி கொண்டு இருந்தானோ… அந்த ஸாகித்யா வந்து நின்றாள்….