Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம், "கதையருவி" தளத்திற்கு தங்களை வரவேற்கிறோம்!

    இத்தளத்தில் எழுத எங்களை "vskathaiaruvi@gmail.com" என்ற மின்னஞ்சலில் தொடர்புக் கொள்ளவும். நன்றி!

Negizhundha Nenjam...4

  • Thread Author
அத்தியாயம்….4

வீட்டுக்கு வந்த பின்னும், நேத்ரனுக்கு ஸாகித்யா பேசிய பேச்சே தான் மனதில் ஒடி கொண்டு இருந்தது..

குழந்தைக்கு என்று அவன் அதிக நேரம் ஒதுக்க முடியாது தான்.. ஆனால் கிடைக்கும் நேரத்தை, அவளுக்கு என்று முழுமையாக கொடுத்து விடுவான்..

வீட்டில் இருக்கும் நேரத்தில், ஒரு நாளுக்கு, அரை மணி நேரமாவது தன் குழந்தைக்கு என்று நேரத்தை ஒதுக்குவான்..

அதுவும் அந்த நேரம் தன் மகளுக்கானது மட்டும் என்ற வகையாக அந்த சமயத்தில் தன் கை பேசியை கூட சைலண்டில் போட்டு விடுவான்..

அப்படி பட்டவன் இன்று நீண்ட நாட்கள் கழித்து தன் தந்தையை பார்த்த குழந்தை ஆசையோடு ஒடி வந்து தன்னை அணைத்த போது .. சிறிது நேரமே தூக்கி வைத்து கொண்டது..

அதுவும் அவன் கவனம் தன் குழந்தையிடம் செலுத்தாத படி , ஸாகித்யா பேசிய பேச்சு மட்டுமே அவன் மனது முழுவதும் ஆக்கிரமித்து கொண்டு இருந்தது…

ஸாகி அவனிடம் என்ன சொன்னாளோ.. குழந்தை திரும்ப திரும்ப பேசினாள்.. ஆனால் அது என்ன என்று ஆராயும் நிலையில் அவன் இல்லாததால்… குழந்தையின் முகம் வாடி போனதை கவனித்தவன்…


“ஸாகி பேபி.. டாடிக்கு ரொம்ப டையாடா இருக்குடா செல்லம்… இன்னும் ஒன் வீக் கழித்து நாம ரொம்ப நாள் வெளியில் போவது போல் ப்ளான் பண்ணுவேனாம்… அவ்வளவு நாளும் டாடி ஸாகி பேபி கூடவே இருப்பேனாம்..” என்று சொல்ல..

ஸாகி தந்தையின் பேச்சில் மகிழ்ந்தவள்… பின் எதோ நினைவுக்கு வந்தவளாக… “ எனக்கு ஸ்கூல் இருக்குமே டாடி..” என்று உள்ளே போன குரலில் பேசியவளை தூக்கி பிடித்து கீழே விட்டவன்..

“ லீவ் போட்டு விடலாம்..” என்று தந்தை சொன்னதுமே..

“ ஹய் ஜாலி.. ஹய் ஜாலி..” என்று சந்தோஷத்தில் எகிறி குதித்தவள்..

“ ஒகே டாடி நீங்க ரெஸ்ட் எடுங்க.. நாம் அப்புறம் வெளியில் ஜாலியா போகலாம்..” என்று அவளுக்கு என்று நியமித்து இருந்த பணிப்பெண்ணோடு சென்றதும்..

தன் அலுவலக அறைக்கு செல்ல பார்த்தவன் முன் ஏதோ யோசனையுடன் தன்னிடம் பேச வந்த மந்ராவிடம்..

“ சாரி டார்லிங்… கொஞ்சம் என்னை தனியா விடு..” என்று சொல்லி தன் அலுவலக அறைக்குள் நுழைந்தவன்..

மனதில் ஸாகித்யாவோடு பேசிய உரையாடலே மீண்டும் அவன் மனதில் ஓடியது..

தன் முன் வந்தும் .. “ எப்படி இருக்கிங்க சார்…? எப்போ சார் ஊரில் இருந்து வந்திங்க..? அத்தான் சொல்லவே இல்ல..” என்று தன்னை விசாரித்தவளை நேத்ரன் ஆச்சரியத்தோடு தான் பார்த்தான்..

‘அன்று சும்மா ஒரு பார்வை பார்த்ததுக்கே அவள் அத்தான் பின்னே ஒளிந்து கொண்டவள் ..

இப்போ தைரியமா அவளே நம்ம கிட்ட பேசுறா..’ என்றுமனதில் நினைத்தாலும், பயந்த சுபாவம் உடைய அவளே தன்னிடம் பேசும் போது.. தான் பதில் கொடுக்காது போனால், அது நன்றாக இருக்காது என்று நினைத்து..

ஸாகித்யா கேட்ட அனைத்திற்க்குமே பதில் சொன்னான்..

“ ஓ அத்தானுக்கே தெரியாதா..? அது தான் மாமா அம்மூவை கல்யாணத்துக்கு கூட்டிட்டு போயிட்டு வான்னு சொன்னதற்க்கு, நேத்ரன் சார் கூட இல்ல…

இன்று முக்கியமான ஒரு மீட்டிங் இருக்கு என்று சொல்லிட்டார்.. நீங்க வரது தெரிந்து இருந்தால், என் கூட வந்து இருப்பார் … பாவம் மீட்டிங் இடை இடையே என்னை அழைத்து பஸ் ஏறிட்டியா…?

ஒழுங்கான பஸ்ஸில் தானே ஏறினே.. என்று கேட்டுட்டே இருந்தார்…” என்று ஸாகித்யா பேச.. பேச…

நேத்ரனின் மனதில்.. ஏன்..? எதற்க்கு..? என்ற கேள்வி தான் எழுந்ததே

எனக்கு பர்சனல் ஒர்க் இருக்கு.. சொல்லி இருந்தால், அடுத்து என்ன என்று அவன் கேட்டு இருக்க மாட்டான்.. தன்னை பற்றி அவனுக்கு தெரியுமே .

பின் ஏன் இவளை அழைத்து சென்றேன் என்று பொய் சொன்னான் என்று நினைத்து மனதில் இருந்த குழப்பத்தில், ஸாகித்யா அடுத்து என்ன பேசினாள் என்று கவனிக்க கூட இல்லை..

தன் கையில் ஏதோ கொடுத்து.. “ உங்க ஸாகி பேபி கிட்ட கொடுங்க.. அவள் என் கிட்ட இதை கேட்டா ..” என்று சொல்லி தன்னிடம் கொடுத்த பொருளை என்ன ஏது என்று கூட பாராது வாங்கி காரின் உள்ளே போட்டவன்.

காபி குடிப்பதையும் மறந்து வீட்டுக்கு வந்து விட்டான்..

இதோ இப்போது யோசிக்கும் போது தான்… ஸாகி பேபி இவளிடம் கேட்டதா சொன்னாளே.. அவள் எப்போ தன் குழந்தையை பார்த்தாள்..

அதுவும் இது வரை அவளை தான் அவ்வப்போது பார்த்த போது எல்லாம் தன்னிடம் பேசாதவள்.. இப்போது அவளே வந்து எப்படி பேசினாள்… என் கண் பார்வையில் கூட படாது தானே ஒதுங்கி தானே நிற்ப்பாள்....

இன்று எப்படி அவளே வந்து பேசினாள்.. புரியவில்லை… புரியாது தான் அன்றைய நாள் சென்றது…

அடுத்த நாள் விடியலில், அவன் குழப்பத்தின் முடிச்சு ஒன்று ஒன்றாக கழண்டு போவது தெரியாது, அன்று தன் அலுவலகத்திற்க்கு கிளம்பினான்..

சாப்பிடும் இடத்தில் மந்ரா குழப்பமான முகத்தோடு தன் எதிரில் அமர்ந்து கொண்டு இருப்பதை பார்த்தவனுக்கு,, தன்னையே அடித்து கொள்ள தான் தோன்றியது..

நான்கு மாதம் கழித்து வந்தவன் நேராக வீட்டுக்கு வந்து இருக்க வேண்டும்.. சரி அது தான் செய்யவில்லை.. நேற்று வந்த உடனாவது மனைவி குழந்தையுடன் நேரத்தை செலவிட்டு இருக்க வேண்டும் என்று நினைத்தவன்..

எழுந்து மனைவியின் அருகில் சென்றவன்.. “ சாரி டார்லி, நேற்று ஏதோ யோசனையில் இருந்துட்டேன்..” என்று வருந்தி பேசியவனின் பேச்சில் குழப்பமான அவள் முகம் கொஞ்சம் தெளிந்தது…

“ ஓகே நேத்ரா..” என்று சொன்னவள்..

“ பின் என்ன நேத்ரா ஏதாவது பிரச்சனையா…? ஆஸ்திரேலியாவில் போன விசயம் சக்ஸஸ் தானே ..?” என்று கேட்டாள்..

“ ம் அதில் ஒன்றும் பிரச்சனை இல்லை..” என்று சொன்னவன்..

பின் நேரம் ஆவதை உணர்ந்து.. “ சாரி டாலி ரொம்ப நாள் ஆபிசி போகாததால், நிறைய வேலை இருக்கு..” என்று சொன்னவனின் பேச்சில் மந்ரா..

ஒரு எதிர் பார்ப்போடு தன் முகத்தையே பார்த்து கொண்டு இருப்பதை பார்த்தவன்..

அவள் கன்னம் தட்டி..” உனக்கு ஒரு சர்பிரஸ் வைத்து இருக்கேன் டாலி ..”

இன்னும் இரண்டு நாள் கழித்து செகண்ட் ஹனிமூன் போவதை நினைத்து சொன்னவன் அலுவலகத்திற்க்கு கிளம்பி விட்டான்..

அலுவலகத்திற்க்கு இவன் வருவதற்க்கு முன்னவே அத்வைத் வந்து இருக்க.. அவனை ஒரு பார்வை பார்த்து விட்டு நேற்று ஸாகித்யாவை பார்த்தது… அவள் பேசியதை பற்றி பேசலாமா..? என்று யோசித்தவனுக்கு இப்பொது நேரம் கிடையாது என்று தன் வேலைகளை பார்க்க ஆரம்பித்து விட்டான்..

அதே போல் தான் அத்வைத்தும் எந்த பேச்சும் பேசாது , அவன் அறைக்கு சென்று வேலைகளை பார்த்து கொண்டு இருந்தான்..

ஒரு மணி நேரம் கடந்த நிலையில் தன் அறைக்கு வந்த அத்வைத்..

“ நேத்ரா ஸாகி ஆபிசில் அவளுக்கு ஏதோ பிரச்சனை போல… ரொம்ப பயந்து போய் பேசுனா… நான் கொஞ்சம் அர்ஜெண்டா போகனும்..” என்று சொன்னவன் தன் பதிலை கூட கேட்காது போனவனின் முதுகையே சிறிது நேரம் பார்த்தவன்..

பின் இவனிடம் பேச வேண்டும்… தெளிவாக பேச வேண்டும்.. இவன் எங்கு போகிறான்.. எங்கு வருகிறான்.. என்பது பற்றி எல்லாம் எனக்கு தெரிய தேவை கிடையாது..

இதனால் எனக்கு எந்த பாதிப்பும் கிடையாது… அது அவன் பர்சனல்.. ஆனால் வேலை நேரத்தில் இது போல் அடிக்கடி சென்றால், அது என் பிசினஸை பாதிக்கும்…

என் பிசினஸை பாதிக்கும், எந்த செயலையும் என்னால் அனுமதிக்க முடியாது.. அது யாராக இருந்தாலும் சரி.. என்று மனதில் முடிவு செய்த பின் அவன் தன் வேலைகளை தொடர்ந்து பார்க்க..

தான் ஆஸ்திரேலியா சென்ற பின் இங்கு தோன்றிய சில சந்தேகங்களை தீர்த்து வைக்க, அத்வைத் இல்லாததால், அவனின் பி,ஏ கோபிநாத் உதவியை நாட..

அவனும் அவனுக்கு தெரிந்தது.. முடித்த வேலை என்று சிலதை தான் அவனால் சொல்ல முடிந்தது.. காரணம் பல வேலைகள் முடிக்க படாது அப்படி அப்படியே இருப்பதை பார்த்த நேத்ரன் யோசனையுடன் கோபிநாத் முகத்தை பார்த்தான்..

அவனுக்கோ சொல்வதா..? வேண்டாமா..? என்ற தயக்கத்தில் எச்சிலை முழுங்கி கொண்டவனின் நிலை நேத்ரனுக்கு புரிந்தது..

அதனால்.. “ சொல் .. நான் இங்கு இல்லாத போது இங்கு என்ன நடந்தது… உண்மை சொன்னால் உன் வேலை தப்பும்.. இல்லை என்றால்,

முதலில் போக போவது உன் வேலை தான்..” என்று நேத்ரன் சொன்னதில், கோபி நாத் பயந்து தான் போனான்..

என்ன தான் அவன் அத்வைத் பி.ஏ வாக இருந்தாலும், இந்த ஆபிசின் எழுவது பர்சன் ஷேர் ஒல்டர் நேத்ரன் தான்.. இது இந்த ஆபிசின் வேலை செய்பவன் என்பதை விட, அத்வைத்தின் பிஏ வாக இருந்தால், அனைத்து நிலவரமும் அவனுக்கு தெரியும்..

அதனால் இந்த ஆபிஸை பொறுத்த வரை… நேத்ரனுக்கு தான் அதிக அதிகாரம் இருக்கிறது என்பதால், அனைத்தையும் ஒன்று விடாது சொல்லி விட்டான்..

“ நீங்க ஆஸ்திரேலியா போன பின் ஒன்று லேட்டா வருவார்.. இல்லை வந்தால் கொஞ்ச நேரத்துக்கு எல்லாம் கிளம்பி போய் விடுவார்..

ஒரு சில சமயம்.. மதியத்துக்கு வருவார்.. ஒரு சில சமயம் வர மாட்டார்.

ஒரு நாள் இரண்டு நாள் இருந்தால் பரவாயில்லை சார்.. இது அப்போ அப்போ நடப்பதால், வேலை பெண்டிங்க் நிறைய சேர்ந்து விட்டது சார்…

அதோடு நம்ம கம்பெனிக்கு வர இருந்த நான்கு ஆர்டர்.. நாம அவங்களுக்கு சரியா ரெஸ்பான்ஸ் கொடுக்க வில்லை என்று போய் விட்டாங்க சார்..” என்றவனின் பேச்சை முழுவதுமாக கேட்டவன்.. கோபி நாத்தை அனுப்பி விட்டான்..

அவனுக்கு நான்கு ஆர்டர் கேன்சல் ஆனது தெரியும் தான்.. ஆனால் அதற்க்கு அத்வைத் சொன்ன காரணம் வேறு..

“ முதலில் ஒரு மாதிரி பேசினாங்க.. பின் நாம் அக்ரிமெண்ட் போடும் போது வேறு மாதிரி பேசினாங்க நேத்ரன்..” என்று .

அப்போது கூட நேத்ரன் கேட்டான்.. “ நான்குக்கும் இதே ரீசனா..?” என்று.. அதற்க்கு அவன் ஏதேதோ சொல்லி சமாளித்து விட்டான்..

அப்போதே நினைத்தான் தான்.. இந்தியா சென்றதும்.,.. இதில் சம்மந்தப்பட்ட அந்த நாங்கு கம்பெனியிடம் பேச வேண்டும் என்று..

ஆனால் இப்போது அந்த நான்கு கம்பெனியிடம் பேச தேவையிறாது.. இவனிடம் மட்டும் பேசினால் அனைத்தும் தெளிந்து விடும் என்று..

இவ்வளவு மன குழப்பத்திலும், அவன் தன் வேலையை தொடர்ந்து கொண்டு தான் இருந்தான்…

அத்வைத் சென்று மூன்று மணி நேரம் கடந்தும் இன்னும் ஆபிசுக்கு வராது போக.. நேத்ரனுக்கு தெரிந்து விட்டது..

தாங்க்கள் வேண்டிய பிரிய நேரம் வந்து விட்டது என்று..

நேத்ரன் மதியம் சாப்பிட்டு விட்டு வெளியில் செல்ல வேலை இருந்ததால், தன் கார் சாவீயை எடுக்கும் போது, தங்கள் வீட்டு கார் ஒட்டுனரிடம் இருந்து அவனின் கைய் பேசிக்கு அழைப்பு வந்தது..

அதில் சொல்லப்பட்ட செய்தியில் பதறி போனவனாக மருத்துவமனைக்கு விரைந்தான்..



நேத்ரன் மருத்துவமனைக்கு சென்று… ட்ரைவரை அழைக்க.. அந்த ட்ரைவர்..

தான் எங்கு இருக்கிறேன் என்று சொல்லவும்,, அவன் சொன்ன மூன்றாம் தளத்திற்க்கு விரைந்து சென்றான்..

அந்த ஓட்டுனரை பார்த்ததும், நேத்ரன் ..” மந்ராவுக்கு என்ன ஆச்சு..? என்று கேட்டான்..

“ ஈசியாரில் இருக்கும் அப்பார்மெண்டுக்கு காரை எடுக்க சொன்னாங்க.. சார்… பின் என் கிட்ட நீ போ..

ஒரு மூன்று மணி நேரம் கழித்து வா.. எனக்கு இங்கு கொஞ்சம் வேலை இருக்கு என்று சொன்னாங்க சார்..

நான் மூன்று மணி நேரத்துக்கு முன்னவே அந்த அப்பார்மெண்டின் முன் நின்னுட்டு, மேடமுக்கு போன் செய்தேன் சார்..

அவங்க இன்னும் அரை மணி நேரம் வெயிட் பண்ணு என்று சொன்னாங்க.. சொன்னது போலவே வந்துட்டாங்க சார்..

ஆனால் பார்க்க ரொம்பவே டையாடா இருந்தாங்க.. நான் கூட என்ன மேடம் உடம்பு சரியில்லையா..? ஆஸ்பிட்டல் போகலாமா..? என்று கேட்டேன் சார்..

ஆனா அவங்க புட் பாய்சன் ஆயிடுச்சி… அது தான் வேறு ஒன்றும் இல்லை என்று சொல்லிட்டு காரில் ஏறினவங்க… கண் மூடிட்டு படுத்துட்டாங்க..

வழியில் அந்த புட்பாய்சனால், மூன்று முறை வாமிட்டும் பண்ணினாங்க சார்.. மூன்றாவது முறை வாமிட் பண்ணும் போது.. எங்காவது ஜூஸ் கடையில் காரை நிறுத்த சொன்னாங்க

நானும் ஜூஸ் கடை வந்ததும் காரை நிறுத்து விட்டு..” மேடம்.. மேடம் என்று கூப்பிட்டேன் … ஆனால் அவங்க கிட்ட இருந்து எந்த அசைவும் இல்லாது போகவும் பயந்து விட்டேன் சார்..

அது தான் உங்க குடும்ப மருத்துவமனைக்கே அழைத்து வந்து விட்டேன்..” என்று தன் மீது எந்த தவறும் கிடையாது..

நான் நேரத்துக்கு தான் அழைத்து வர சென்று விட்டேன்.. அதே போல்… மேடம் சொன்னது போல்.. ஜூஸ் கடையில் காரை நிறுத்தினேன் என்று நேத்ரன் தான் பேச பேச அவன் முகம் மாறுவதை கவனித்து கட கட என்று சொல்லி முடித்து விட்டான்.,..

அவன் முக மாறுதலுக்கு காரணம்.. மந்ரா ஏன் ஈசியாரில் இருக்கும் அப்பார்மெண்டுக்கு சென்றால் என்பதே..

பின் மருத்துவர் வருகைக்காக காத்து கொண்டு இருந்த போது, அவனை நோக்கி அந்த மருத்துவமனையின் மகப்பேரு மருத்துவர் வந்தார்..

என்ன ஏதாவது பெரிய பிரச்சனையா..? சடுதியில் நேத்ரனின் முகம் தீவிரத்தை பூசிக் கொண்டது, அந்த மகப்பேரு மருத்துவரின் முகத்தை பார்த்து..

ஏதாவது அவள் கற்பபையில் பிரச்சனையோ.. முதல் பிரசவத்தின் போதே சொன்னார்களே.. கற்ப பை வீக்காக இருக்கிறது ..

ஆனால் அவன் எதிர் பார்த்ததிற்க்கு எதிர் பதமாக தான் அந்த மகப்பேரு மருத்துவர் நேத்ரனிடம் பேசினார்…

“ நான் முதல் டெலிவரியிலேயே உன்னிடம் என்ன சொன்னேன் நேத்ரா..”

வயது நேத்ரானோடு பெரியவர்.. அதுவும் இவனை சிறு வயது முதலே தெரியும் என்பதால், பெயர் சொல்லி தான் அழைப்பார்..

“ என்ன ஆண்டி சொன்னிங்க..?” என்று கேட்டு விட்டான்..

“ நீ மறந்ததால் தானே இப்போ பிரச்சனையே ஆகி இருக்கு… மந்ராவுக்கு லோ பிரஷரா இருந்ததால் முதல் டெலிவரியே.. ரொம்ப பிரச்சனை கொடுத்துடுச்சி..

அதோடு அவள் கற்பபை ரொம்ப வீக்கா இருக்கு … இரண்டாவது குழந்தை பிறக்கும் போது இன்னும் பிரச்சனை கொடுக்க வாய்ப்பு இருக்கு..

அதனால பார்த்து நடந்துக்கோங்க என்று சொன்னேனா இல்லையா..?” என்று திட்டுவது போல் மருத்துவர் கேட்கவும்..

“ ஆமாம்..” என்று சொன்னவன்.. ஏன் இதை இப்போது சொல்கிறார் என்று அவன் நினைக்கும் போதே..

அவர் அடுத்து சொன்ன…

“ இப்போ அவங்க எட்டு மாதம் கருவை சுமந்துட்டு இருக்காங்க..” என்ற வார்த்தையில்.. சட்டென்று அங்கிருந்து சென்று விட்டான்..
 
Top