Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம், "கதையருவி" தளத்திற்கு தங்களை வரவேற்கிறோம்!

    இத்தளத்தில் எழுத எங்களை "vskathaiaruvi@gmail.com" என்ற மின்னஞ்சலில் தொடர்புக் கொள்ளவும். நன்றி!

Negizhundha Nenjam...5

  • Thread Author
அத்தியாயம்…5

இதோடு ஒரு ஆண்மகனுக்கு அவமானம் இருக்க முடியுமா… ? நேத்ரனுக்கு தெரியவில்லை… வாழ் நாளில் இது போலான ஒரு நிகழ்வு தன் வாழ்கையில் வரும் என்று அவன் நினைத்து கூட பார்த்தது கிடையாது.. நெஞ்சு முழுவதும் அவமானம் அவனை கொன்று தின்றது என்று சொன்னால் அது மிகையாகது..

இருந்தும் தான் சந்திக்க வேண்டியவர்கள் இவனை அழைத்த போது..

“ இன்னும் கொஞ்ச நேரத்தில் அங்கு இருப்பேன்..” என்று சொல்லி விட்டு, அங்கு சென்று பேச வேண்டியதை பேசி விட்டு, அவர்கள் கொடுத்த ஒப்பந்த்ததில் கைய்யெப்பம் இட்டு வந்து இருந்தான்..

அங்கு இருந்து வந்த போது தான், தன் குழந்தை ஸாகியின் நினைவே அவனுக்கு வந்தது.. பின் அலுவலகம் செல்லாது தன் வீட்டுக்கு சென்ற போது தான் குழந்தையும் பள்ளியில் இருந்து வீட்டுக்கு வந்து இருந்தாள்..

தன் தந்தையை அந்த நேரத்தில் குழந்தை எதிர் பார்க்கவில்லை.. எதிர் பார்க்காதது கிடைக்கும் போது அது ஆனந்தத்தையும் தான்டி, பேரானந்தமாக தானே தெரியும்..

அதுவும் ஸாகி சின்ன குழந்தை.. குழந்தைகள் சிறு சிறு விசயத்திலும் திருப்தி பட்டு கொள்வார்கள்.. அந்த வகையில் அக்குழந்தை அந்த நேரத்தில் நேத்ரனை வீட்டில் பார்க்கவும்..

ஒடி வந்து கட்டி பிடித்துக் கொண்டவள்.. “ ஐயம் சோ ஹாப்பி டாட்..” என்று திரும்ப திரும்ப இதையே சொல்லி, தன் தந்தையின் கன்னம் இரண்டிலும் முத்தம் மிட்டு …முத்தம் இட்டு மகிழ்ந்து போனாள்.. அந்த சின்ன சிறு சிட்டு…

நேத்ரனுக்கும் அந்த சமயத்துக்கு ஸாகியின் அந்த முத்தம் இதமாக இருந்தன.. என்ன தான் தைரியமான ஆண்மகனாக இருந்தாலும், தான் மனைவியோடு நான்கு மாதம் இல்லாது, அவள் வயிற்றில் எட்டு வாரம் கரு வளர்ந்து இருக்கிறது என்று தெரிந்தால், அது எப்படி பட்ட ஆண்மகனையும் நொறுக்கி விடும்…

அவனின் மனதும் சுக்கு நூறாக நொறுங்கி போய் கிடக்கின்றது தான்.. அவனும் சதையும் ரத்தமும் கலந்த சாதாரண மனிதன் தானே…

அதுவும் அவன் எப்போதும் தொழில் என்பதிலேயே உண்மையாக இருக்க வேண்டும் என்று நினைப்பவனுக்கு, வாழ்க்கையில் எவ்வளவு உண்மையை எதிர் பார்ப்பான்..

தொழிலில் கட கட என்று பல படிக்கட்டுகளில் அநாவசியமாக ஏறி உச்சாணி கொம்பில் நிற்பவன்.. வாழ்க்கையில் அதற்க்கு எதிர் பதமாக தோற்று.. அதலா பாதலத்தில் இருப்பதாக கருதினான்..

மீண்டு வர வேண்டும்.. மீண்டு வந்து விடுவேன்.. அது அவனுக்கு தெரியும்.. ஆனால் இதில் இருந்து தான் மீண்டு வருவதற்குள், எத்தனை வேதனை..? எத்தனை அவமானங்கள்…? தான் தாங்கி கொள்ள நேரும்.. இதையும் அவன் நன்கு அறிந்து இருந்தான்..

ஒரு ஆழ மூச்சு எடுத்து விட்டவன்.. தன் மகள் ஸாகியிடம்..

“ பேபி நான் நேத்து சொன்னேன் தானே.. டூ வீக் சென்று… நாம் வெளியில் போகலாம்..” என்று நேத்ரன் சொல்லி கொண்டு இருக்கும் போதே..

அவனின் ஸாகித்யா.. “ ஆமாம்.. ஆமாம்.. டாடி.. மம்மி… ஸாகி பேபி… ரொம்ப ரொம்ப நாள் வெளியில் போகலாம் என்று சொன்னிங்க…” என்று சொன்னாள்.. அவளின் மழலை குரலில்



அதுவும் ரொம்ப என்று சொல்லும் போது, தன் கண் இரண்டையும் மூடி கையை விரித்து காட்டிய அந்த அழகில் மகிழ்ந்து போனவானாக கட்டி அணைத்து கொண்டவனுக்கு..

திடிர் என்று என்ன தோன்றியதோ.. தன் குழந்தையிடம் ஜாடையை தேடினான்.. அந்த செயல் ஒரு நொடி.. ஒரே நொடி தான் செய்தான்..

பின் தானே தன்னை தலையில் அடித்து கொண்டு என்ன செய்யிறடா..? இவ்வளவு சீப்பானவனா.. நீ..? குழந்தையிடம் ஜாடையை தேடுற.? அவனின் அந்த செயலில், மருத்துவர் சொன்ன..

“உங்க மனைவி எட்டு வாரம் கருவை சுமந்து கொண்டு இருக்கிறாள்..” என்று கேட்ட போது அவன் மனது அடி வாங்கியதை விட, இப்போது தன் குழந்தையிடம் தான் ஜாடையை தேடும் படி ஆகி விட்டதே என்று …இன்னும் இன்னும் அவனை அவமானம் எனும் பள்ளத்தில் பிடித்து தள்ள முயல..

இதில் இருந்து தான் மீண்டு ஆக வேண்டும்.. என்றதில் மட்டும் அவன் உறுதியாக இருந்தான்..

பின் அவன் எதை பற்றியும் யோசிக்காது.. தன் குழந்தையிடம்..

“நாம் சொன்னது போல் வெளியில் போகிறோம்.. அதுவும் ரொம்ப நாளுக்கு தான் பேபி.. ஆனால் இதில் மம்மி கிடையாது..” என்று சொன்ன உடன் ஸாகித்யா..

புரிந்து கொண்டவளாக.. “ ஓ மம்மிக்கு நிறைய வேலை இருக்கா..? “ என்று கேட்டவள்.. பின் அவளே..

“மம்மியும் இப்போ டாடி பிசினஸ் பார்த்துக்குறாங்கலே .. அது தான் நிறைய இப்போ எல்லாம் ஒர்க் பண்றாங்கலே டாடி…?” என்று அவனிடமே கேள்வி கேட்டு, அவளே பதிலும் அளித்தாள்..

அதோடு விடாது உபரி தகவலாக, அடுத்து அடுத்து குழந்தை பேசிய ..

“ அத்வை அங்கிளும் மம்மியும் வேலை பார்த்தா என் கூட எப்போவும் என் ஸாகி பேபி இருப்பாங்க.. அது போல மம்மியையும், அங்கிளும் வந்து, அங்கு வேலை பார்க்கட்டும்.. நாம ஜாலியா விளையாடலாம்..” என்று சொன்னவள்..

பின் முகத்தை பாவமாக வைத்து கொண்டு..

“ டாடி ஸாகி பேபி வந்தா எனக்கு போரே அடிக்காது தெரியுமா.. அவங்க ரொம்ப ஸ்வீட்..” என்ற தன் குழந்தை ஸாகித்யாவின் பேச்சில்..இன்னும் இன்னும் குழம்பி போனவனாக தான் ஆனான்..

தன் குழப்பத்தை தெளிவு செய்ய.. “ நீ என்ன சொல்றடா.. ஸாகித்யா கூட நீ விளையாடுவீயா ..? எப்போ..?” என்று கேட்டான்..

தன் தந்தையின் கை பற்றி கொண்டு குழந்தைக்கே உரிய உலகத்தில் புகுந்து கொண்டவளாக தன் தந்தையிடம்…



“ நீங்க ஊருக்கு போன அப்புறம். மம்மிக்கு என் கூட டைம் ஸ்பென் பண்ண நேரமே இல்லையா..

நான் ஒரே அழுதேன்.. டாடியும் இல்லே நீங்களும் இல்ல.. எனக்கு லீவ் வேற விட்டு இருக்காங்க… நிங்களும் என் கூட டைம் ஸ்பென் பண்ண மாட்டேங்க்குறிங்க.. நான் டாடி கிட்ட சொல்லி அவரிடமே போறேன் என்று சொன்னேனா..

மம்மி தான் பாவம்… டாடி இல்ல டாடி வேலையும் சேர்த்து மம்மி பார்க்க வேண்டி இருக்கு… அது தான் ஸாகி பேபி கூட இருக்க முடியல..

இதுக்கு போய் டாடியை டிஸ்ட்டப் பண்ணுவீயா..? டாடி நீ மூட் அவுட்டா இருந்தா , டாடியும் அங்கு மூட் அவுட்டா ஆகிடுவாருலே..

நான் வேணா ஒன்னு செய்யிறேன்.. சார்டடே.. சன்டேலே வீட்டில் வேலை பார்க்க அத்வைத் அங்கிள் வரும் போது, உனக்கு ரொம்ப பிடித்த உன் ஸாகி பேபியையும் அழச்சிட்டு வருவாங்க..

நீ குட் கேர்ளா … ஸாகி கூட விளையாடுவீயாம்…நானும் அத்வைத் அங்கிளும் ஆபிஸ் ரூமில் வேலை பார்ப்பேனம்.. ஆனால் ஒன்னு இதை பத்தி டாடி கிட்ட சொல்ல கூடாது..” என்ற மகளின் பேச்சில் நேத்ரனின் உதடுகள் தன்னால் ..

“ ஏன் என்று கேட்டியா..?” என்ற அவனின் கேள்விக்கு,

“ ம் டாடிக்கு வெளி ஆட்கள் அநாவசியமாக வீட்டுக்கு வரது பிடிக்காது தானே.. அத்வைத் அங்கிள் அப்பாவோட பிரண்ட்.. ஆனால் ஸாகித்யா..? அதுக்கு தான் சொல்றேன்..

அதனால ஸாகி மட்டும் இல்ல… அத்வைத் அங்கிளும் வரது சொல்லாதே.. அப்புறம் டாடி ஏன்..? எதற்க்கு..? என்று கேட்டுட்டு இருப்பார்..

பின் ஸாகித்யா வரதும் தெரிந்து விடும்.. அப்புறம் என் ஸாகி பேபிக்கு திரும்ப ரொம்ப போர் அடிக்க ஆரம்பித்து விடும்..” என்று அந்த குழந்தை சொல்ல சொல்ல நேத்ரன் என்ன மாதிரி உணர்கிறான் என்று அவனால் உணர முடியாத நிலைக்கு தள்ளப்பட்டான் என்று தான் சொல்ல வேண்டும்…

ஒரே நாளில் மனைவி.. நட்பு இருவரின் துரோகத்தையும் ஜீரணித்து கொள்ள அவனுக்கு தனிமை தேவைப்பட்டது…

“ ஸாகி பேபி டாடிக்கு ரொம்ப டையாடா இருக்குடா செல்லம்.. நீ போய் விளையாடுறியா..?’ என்றதற்க்கு..

“ ஒகே டாடி..” என்று சொன்னவளை குழந்தைக்கு என்று பணித்திருந்த பெண்மணியோடு அனுப்பி விட்டு, தன் அறைக்குள் சென்றவன் தான் மறு நாள் காலையில் தான் அவன் அறையில் இருந்து வெளி வந்தான்…

தன் அறைக்கு போகும் முன் தன் கைய் பேசியை அணைத்து விட்டு, தன்னை யாரும் தொந்தரவு செய்ய கொடுக்க கூடாது என்பதையும், வேலையாட்களிடம் சொல்லி விட்டு சென்றதால், கைய் பேசியும் அவனுக்கு தொந்தரவு கொடுக்க வில்லை..

அதே போல் வெளியாட்களின் தொந்தரவும் இல்லாது குறைந்தது பதினைந்து மணி நேரம் தனித்து இருந்தவன் மனதில் ஒரு தெளிவு வந்த பின் தான் அவன் தன் அறையை விட்டே வெளி வந்தது..

அதனால் அவன் முகத்தில் நேற்று இருந்த குழப்பம் மறைந்து.. அந்த இடத்தில் ஒரு தெளிவு காணப்பட்டது..

ஹாலுக்கு வந்ததும் முதலில் தன் குழந்தை ஸாகியை பற்றி தான் விசாரித்தான்.. குழந்தைக்கான பணிப்பெண்ணிடம்..

“ அவளை பள்ளிகூடத்தில் அனுப்பி விட்டேன்..” என்ற அந்த பெண்ணின் பதிலில்..

சரி என்றவன் நேற்றில் இருந்து சரியாக சாப்பிடாததால்.. வேலையாளிடம் சாப்பாடு வைக்கும் மாறு சொல்லி… வயிறு நிறைய உண்ட பின் தான் தன் கை பேசியையே அவன் இயக்கினான்..

அதில் ஏகப்பட்ட விடுப்பட்ட அழைப்புகள் இருந்தன.. தொழில் முறை பேச்சை மட்டும்.. அழைத்து பேசியவன்..

பின் தன் கைய் பேசியில் வந்த ஏகப்பட்ட அழைப்புக்கள் ஆன மனை… மந்ரா.. அத்வைத், பின் தன் தந்தை ரவீந்திரன்.. மந்ராவின் தந்தையிடம் இருந்து வந்த அழைப்புகள் என்று அது ஏகப்பட்டதுக்கு வந்து இருந்தன..

நேற்று இந்த அழைப்புகளை பார்த்து இருந்தால், அவன் எப்படி நடந்து கொண்டு இருப்பானோ.. ஆனால் இன்று அவன் அனைத்து செயல்களிலும் ஒரு நிதானமே காணப்பட்டது…

முதலில் தன் தந்தை ரவீந்திரனுக்கு தான் அழைத்தான். நேத்ரனின் அழைப்பு சத்தம் வீட்டுக்குள்ளேயே கேட்கவும், திரும்பி பார்த்தவன் … தன்னை நோக்கி தன் தந்தை நடந்து வந்து கொண்டு இருப்பதை பார்த்து, நேத்ரனின் விழிகள் கலங்க ஆரம்பித்தது தான்..

ஆனால் நொடியில் தன்னை தேற்றியவனாக.. “ வாங்க டாடி..” என்று ஒரு புன்னகை சிந்தியவனின் அருகில் சென்று அவன் தோளில் கை போட்டவர்..

“ என்ன முடிவு எடுத்து இருக்க நேத்ரா..?” என்ற அவரின் கேள்விக்கு ..

“என் நிலையில் நீங்க இருந்தால் என்ன முடிவு எடுத்து இருப்பிங்க டாடி..?” என்று நேத்ரன் திருப்பி தன் தந்தையை கேள்வி கேட்டான்..

ரவீந்திரன் ஒரு நிமிடம் கூட யோசிக்கவில்லை.. “ டைவஸ்… அது தான் நான் இங்கு வரும் போதே, நம் குடும்ப வக்கீலுக்கு போன் செய்துட்டு தான் வந்தேன்.. அவரும் இன்னும் கொஞ்ச நேரத்துல் வந்து விடுவார்..” என்று சொன்ன ரவீந்திரன்.

.மகனிடம்.. “ சாப்பிட்டியா..? என்று கேட்டார்..

“ ம் சாப்பிட்டு விட்டேன்..? என்று பதில் அளித்தவன்.. பின் யோசனை வந்தவனாக..

“ டாட் நீங்க..?” என்று கேட்டதும், நேத்ரனுக்கு பதில் அளிக்காது, அங்கு இருந்த வேலையாளை அழைத்து சாப்பிட எடுத்தும் வரும் மாறு சொல்லி, அவர் எடுத்து வந்து கொடுத்து, ரவீந்திரன் சாப்பிட்டு முடிக்கும் வரை அங்கு எந்த பேச்சு வார்த்தைகளும் இல்லாது அமைதியாக கடந்தது..

சாப்பிட்ட பின் தான்.. ரவீந்திரன்.. “ ஸாகி ஸ்கூல் போயிட்டாளா…”\?” என்று பேத்தியை பற்றி விசாரித்தார்…

“ ம் ரொம்ப சீக்கிரம் கேட்டுட்டிங்க..” என்று தந்தையை கிண்டல் செய்தாலும்.. “ ம் கிளம்பிட்டா அவள் ஸ்கூல் சென்ற பின் தான் நான் எழுந்தேன்.. இனி அவளை கேர் எடுத்து பார்க்க வேண்டும்..” என்ற மகனின் பேச்சிலேயே, மகன் என்ன முடிவு எடுத்து இருக்கிறான் என்பது ரவீந்திரனுக்கு புரிந்து விட்டது….

ஒரு தந்தையாக தன் மகனின் இந்த நிலையை பார்க்கும் போது ரவீந்திரனுக்கு வேதனையாக தான் இருந்தன..

நேற்று தங்கள் குடும்ப டாக்டர் தன்னை அழைத்து…

“ மந்ரா அபார்ட் பண்ணனும் என்று அடம்பிடிக்கிறா மிஸ்டர் ரவீந்திரன்.. உங்களுக்கே உங்க மருமகளின் நிலை தெரியும்.. அவளுக்கு எப்போதும் லோ பி.பி தான் இருக்கும்..

அவளுக்கு அபார்ட் செய்வது கொஞ்சம் பிரச்சனை கொடுப்பது… உங்க சன் கிட்ட ஏன் இப்படி கேர்லசா இருந்திங்க என்று கேட்டேன்.. அப்படி கோச்சிட்டு போய் விட்டார்..” என்று அந்த மருத்துவர் சொல்ல சொல்ல முதலில் மருமகளின் உடல் நிலையை நினைத்து தான் பயமாக இருந்தது..

அதுவும் இத்தனை மாதக்கருவை கலைப்பது என்பது… மிகவும் ரிஸ்க் ஆச்சே.. இத்தனை மாதங்கள் எப்படி கவனிக்காது விட்டு விட்டார்கள் என்று அவர்கள் மீது கோபமாக தான் இருந்தது..

‘அவர்களில் தன் மகனையும் தான் அவர் சேர்த்து கொண்டார்..

அதனை அந்த மருத்துவரிடம் கேட்கவும் செய்தார்.. “ இத்தனை மாதம் கழித்து அபார்ட் என்பது வேண்டாமே.. பிரசவம் தாங்கி கொள்ளும் படி மந்ராவை தேத்த முடியாதா..?” என்று அதை பற்றி ஒன்றும் தெரியாததால் ரவீந்தர் தன் சந்தேகத்தை அந்த மருத்துவரிடமே கேட்டார்..

ஆனால் அவர் சொன்ன பதிலான.. “ அபார்ட் செய்ய எல்லாம் காலம் கடந்து விட வில்லை மிஸ்டர் ரவீந்திரன்.. மூன்று மாத கருவை கூட தாயின் உடல் நிலை கருதி கலைத்து இருக்கிறோம்..” என்ற அவரின் பேச்சை இடையிட்டு ..

“அப்போ மந்ராவுக்கு எத்தனை மாதம்..?” என்று ரவீந்திரன் கேட்க..

“ எட்டு வாரம்.” என்ற அவரின் பதிலில், ரவீந்திரன் இதை பற்றி ஒன்றும் பேசாது பேசியை வைத்து விட்டார்..

அப்போது கூட… நேத்ரன் ஊரில் இருந்து இடையில் இந்தியாவுக்கு வந்து போனனா..? என்று தீர விசாரித்தார் தான்.. ஏன் என்றால் இது ஒரு சாதாரணமான விசயம் கிடையாது..

ஒரு பெண்ணை இப்படி என்று சட்டென்று சொல்ல கூடாது என்று நினைத்து தான் தன் மகன் தனக்கு தெரிந்த வரை இந்தியாவுக்கு வரவில்லை என்று தெரிந்தும், இன்னும் தீர விசாரித்தார்.. விசாரிப்பில் கிடைத்த பதிலில், தன் மகனுக்கு எப்படி பட்ட அவமானம் ஏற்பட்டு இருக்கிறது என்று தெரிந்து கொண்டவர்..

இப்போது தன் மகனை தான் பார்க்க வேண்டும் என்று, நேத்ரனின் பேசிக்கு அழைப்பு விடுக்க.. அது அணைக்கப்பட்டு இருக்கிறது என்று தெரிந்ததும்.. வீட்டு எண்ணுக்கு அழைத்து கேட்டார்..

அங்கு வேலையாள் கொடுத்த செய்தியில், தான் அவனை எந்த வகையிலும் தொந்தரவு கொடுக்காது அவனே தெளிந்து வரட்டு என்று அமைதி காத்தார்..

தெரியும் அவருக்கு தன் மகனை பற்றி நன்கு தெரியும்.. தெளிந்து விடுவான் தான்.. அனால் அவன் தெளிவதற்குள் அவன் மனது..?

இதோ காலையில் வந்து விட்டார்.. அவர் எதிர் பார்த்த தெளிவு தன் மகன் முகத்தில் கண்டார்.. கூடவே தன்னை பார்த்ததும் கலங்கிய அவன் கண்களும், அதை அவன் சமாளித்த விதமுமே…

ரவீந்திரனுக்கு மருமகளின் துரோகம் மட்டுமே தெரியும் .. அதனால் மருத்துவர் ரவீந்தரனை அழைத்த போது..

“அவள் தந்தையிடம் சொல்லி விடுங்க.. இனி இதை வைத்து என்னை அழைக்க கூடாது..” என்று சொல்லி விட்டார்..

அத்வைத் துரோகம் அவருக்கு தெரியாது.. தெரிந்தால்..
 
Top