அத்தியாயம்….6
ரவீந்திரன் தன் மகனோடு அதிக நேரம் எல்லாம் செலவிட்டது கிடையாது தான்.. ஆனால் அவனை நன்கு புரிந்து கொண்ட தந்தையாக தான் அவர் விளங்கினார்..
அதே போல் தான் நேத்ரனும், தந்தையின் நிலை அறிந்து நடந்து கொள்வான்.. அதனால் தான் தன் தாய் இறந்து தந்தை தன்னிடம் நேரத்தை செலவிட முடியாத காரணத்தை புரிந்து கொண்டவனாக, அந்த வயதிலேயே பக்குவமாக நடந்து கொள்வான்..
தந்தை யாருக்காக.. ? இவ்வளவு கஷ்டப்படுகிறார் என்று தெரிந்து கொண்டு, கூடிய மட்டும் அவருக்கு தன்னால் வேதனை அடையாது பார்த்து கொள்வான்..
ஒரு சமயம் இதே பக்குவம் தன் மனையிடம் இருக்கும் என்று நினைத்து கொண்டானோ.. அதனால் தான் வயதில் தன்னை விட மாதத்தில் மூத்தவளாக இருந்தாலும், பரவாயில்லை என்று நினைத்து திருமணம் செய்து கொண்டானோ.. எதுவோ..
ஆனால் திருமண வாழ்வு தொழிலில் போடும் கணக்கு கிடையாது என்பதை, காலம் அவனுக்கு புரிய வைத்து விட்டது.. ஆனால் அதற்க்கு அவன் கொடுத்த விலை…
நேத்ரனிடம் அவன் தந்தை பேசவில்லை என்றாலும், மகனைய் புரிந்து கொண்ட ரவீந்திரன் தன் குடும்ப வக்கீலை வர சொல்லி தான் இங்கு வந்தார்..
ஆனால் மந்ரா வீட்டில் அவள் தந்தைக்கு நிலமை தெரியாது, அவளின் தந்தை ராம் மோகன்..
“ அது எப்படி ஆஸ்பிட்டலில் இருந்து அப்படியே போய் விடுவான்.. மனைவி என்ற பாசம் வேண்டாமா..?” என்று கோபத்துடன் தன் மகனிடம் கத்தி கொண்டு இருந்தார்..
அந்த மகன் எதுவும் பேசவில்லை.. காரணம் இவ்வளவு நடந்து தமக்கை அமைதியுடன் இருக்கிறாள் என்றால், தவறு இவள் மேல் இருப்பதால் தான் இருக்கும் என்று நினைத்து , அமைதி காத்து நின்றான்..
தான் இவ்வளவு பேசியும் மகன் எதுவும் பேசாது இருப்பதை பார்த்து ராம் மோகன் இப்போது மகனை திட்ட ஆரம்பித்து விட்டார்..
“நீ எல்லாம் என்ன, தம்பி..? நான் எல்லாம்..” என்று கோபத்துடன் ஆரம்பித்தவரை கை நீட்டி தடுத்த மந்ராவின் தம்பி பிரசாந்த்..
“ முதல்ல அக்கா கிட்ட என்ன பிரச்சனை என்று கேளுங்க.. ?” என்று சொன்னான்..
“ அவள் கிட்ட என்னடா கேட்கிறது…? அது தான் கல்யாணம் ஆன நாளில் இருந்து நான் தான் பார்த்துட்டு தானே இருக்கேன்.. சீமந்தம் முடித்து இங்கு வந்தவளை அவர் எத்தனை முறை வந்து பார்த்து இருக்கார்..
அதே போல் குழந்தை இந்த தேதியில் பிறக்கும் என்று சொல்லியும், அவர் வெளிநாட்டுக்கு போய் உட்கார்ந்து கொண்டதில் இருந்தே தெரியல.. அவருக்கு மனைவி மீது இருக்கும் அக்கறை..?” என்ற தந்தையின் பேச்சு அனைத்தும் சரி தான்..
ஆனால் ஒன்றை தவிர.. “ ஸாகித்யா கொடுத்த தேதிக்கு இரண்டு வாரம் முன்பே பிறந்து விட்டாள்.. டாக்டர் கொடுத்த தேதிக்கு இந்தியாவில் இருப்பது போல் தான் நேத்ரன் பார்த்து கொண்டான்…
இதை வைத்து பார்த்தால், நேத்ரன் மீது தவறு இல்லை தான்.. ஆனால் ராம் மோகன் முந்தி சொன்ன விசயங்கள் சரி ..எனும் போது பிரசாந்த் அமைதியாகி விட்டான்..
மகனின் அமைதி தந்தைக்கு இன்னும் உத்வேகத்தை கொடுத்தது போலும்…
, “பார்த்தியா..? பார்த்தியா..? நீயே அமைதியாக ஆகிட்டே.. வா போகலாம் கேட்கலாம்.. அப்பனும் மகனும் போன் போட்டா எடுக்க வில்லை.. வா என்ன என்று கேட்டுட்டு வரலாம்..
நாம தனியா போக கூடாது… சொந்தக்காரங்க நாளு பேரை கூட்டிட்டு போய் என்ன என்று கேட்கனும்..” என்ற இந்த வார்த்தையில் தான் மந்ரா வாய் திறந்தாள்..
“ வேண்டாம் டாட்..” என்று..
“ அது எப்படி மா அப்படியே விட்டு விட முடியும்..? அவங்க பணக்காரங்க என்றால், நாமும் பணக்காரங்க தாம்மா.. நீ எதுக்கும் பயப்படாதே டாடி நான் இருக்கேன்..
நம்ம சொந்தக்காரங்க நாளு பேரை கூட்டிட்டு போய் நான் பேசுற பேச்சில், இனி உன் கணவர் உன்னை இப்படி இலக்காரமாக நடத்த கூடாது.
.அவங்க்களோடு நாம் எதில் குறைந்து விட்டோம்… என்று உன்னை இப்படி கீழே நடத்துவதற்க்கு..?” என்று அவர் பாட்டுக்கு கத்தி கொண்டு இருந்தார்..
பிரசாந்த் அமைதியாக அவள் முக பாவனைகளையே கவனித்து கொண்டு இருந்தான்.
தன் சகோதரி தந்தை பேச பேச அவள் முகம் இன்னும் வெளுக்க ஆரம்பித்ததை பார்த்து விட்டு ..
தந்தையிடம்.. அமைதியாக இருங்க.. என்ன ஏது என்று கேட்காது.. நீங்க பாட்டுக்கு கத்திட்டு இருக்காதிங்க…” என்று தந்தைக்கு மீறி குரல் உயர்த்தி பேசி விட்டு தன் சகோதரியை பார்த்து..
“ சொல்.. நீ சொன்னா தான் என்ன என்று எங்களுக்கு தெரியும்.. ஆஸ்பிட்டலில் உங்க வீட்டு கார் ட்ரைவர் சேர்த்தான் என்று சொல்ற..
பின் அத்தான் வந்தார் .. வந்த உடன் போயிட்டார்.. அதனால் நீ இங்கு கிளம்பி வந்ததா சொல்ற..
நீயே ஏன் கிளம்பி வந்த.. என்னை கூப்பிட்டு இருக்கலாம்.. இல்ல டாடியை கூப்பிட்டு இருக்கலாம் தானே..
அது எல்லாம் விடு.. திடிர் என்று மயக்கம் வர்ற அளவுக்கு உடம்புக்கு என்ன பிரச்சனை..?” என்று தம்பி கேள்வி மேல் கேள்வி கேட்டான்..
ஆனால் அதற்க்கு பதில் சொல்ல தான் மந்ராவால் முடியவில்லை.. கடைசியாக உடம்புக்கு என்ன என்று கேட்டதற்கு சொல்லி விட்டாள்..
“ நான் மாசமா இருக்கேன்..” என்று..
அவ்வளவு தான் அந்த பாசக்கார தந்தை.. “ மாதமா இருக்கும் பெண்ணையா தனியா விட்டு விட்டு போய் விட்டான்..” என்று இன்னும் இன்னும் நேத்ரனை ராம் மோகன் கத்தி கொண்டு இருந்தார்..
ஆனால் பிரசாந்த். தான்.. அவளின் வயிற்று பகுதியை பார்த்த வாறு..” அப்படி தெரியவில்லையே..?” என்ற அவனின் கேள்விக்கு..
மந்ரா சொன்ன.. “ இரண்டு மாதம் தான்..” என்ற அவளின் பதில் தம்பிக்கு புரிந்து விட்டது..
பாவம் அந்த தகப்பனுக்கு புரியாது.. “ அவளே டையடா இருக்கா.. நீ நம்ம பெண்ணையே கேள்வி மேல்.. கேள்வி கேட்பியாடா..?” என்ற தந்தையின் பேச்சுக்கு அவரை பார்த்து முறைத்த பிரசாந்த்..
“ ஆஸ்திரேலியா போன அத்தான் நான்கு மாதம் கழித்து இப்போ தான் இந்தியாவுக்கு வந்து இருக்கார்… நியாயமா பார்த்தா இப்போ உங்க மகளை நீங்க வெட்டி போடனும்.. நான் இவளை இழுத்து வைத்து அடிக்கனும்..
ஆனால் நாம தான் படித்து தொழில் செய்து மேல் மட்டத்தில் இருக்கோமே.. டீசன்ஸியை வேறு கடை பிடித்து ஆக வேண்டும..” என்ற மகனின் பேச்சு, பாவம் அந்த பாசக்கார தந்தைக்கு அப்போது தான் புரிந்தது போல்..
புரிந்த உடன் பிரசாந்த் போல் அவர் டீசன்ஸி எல்லாம் பார்க்கவில்லை..
“ சீ சீ நீ என் பெண்ணா..?” என்று சொல்லி கன்னம் கன்னமாக அரைந்து விட்டார்..
அரைந்த பின்னும் அவருக்கு கோபம் அடங்குவேனா என்று தான் இருந்தது.. இப்போது அவருக்கு பயம் பற்றி கொண்டது..
இது வெளியில் தெரிந்தால், சொந்தக்காரர்கள்.. தொழில் செய்யும் இடத்தில் மதிப்போடு வாழ்ந்து வந்து விட்டு இப்போது..
இது வரை நாம் அங்கு சென்று சண்டை இடலாம் என்று மகனை அழைத்து கொண்டு இருந்தவர் இப்போது..
“ மாப்பிள்ளை வீட்டவர்கள் வந்தா என்னடா செய்யிறது..?” என்று பாவமாக பிரசாந்தை பார்த்து கேட்டார்.. பாவம் எந்த தந்தைக்கும் இது போல் ஆன நிலை வர கூடாது..
முதல்ல இந்த மாப்பிள்ளை என்று கூப்பிடுவதை நிறுத்துங்க.. அவரை நான் புரிந்து கொண்ட வரை.. இதோடு எல்லாவற்றியையும் முடித்து கொள்வார் என்று தான் நான் நினைக்கிறேன்.. என்ற பிரசாந்தின் பேச்சில் மந்ரா அதிர்ந்து போய் தான் அவனை பார்த்தாள்..
தன் செயல் இது வரை கொண்டு செல்லும் என்று அவள் எதிர் பார்க்கவில்லை.. தன்னை அதிர்ச்சியோடு பார்த்த மந்ராவை பார்த்த பிரசாந்த்..
“ இது போன்ற விளையாட்டின் முடிவு இது தான் என்று உனக்கு தெரியாதா..? இல்ல தெரியாது தவறு நடந்து விட்டது என்று சொல்ல போறியா..?
சொன்னாலும் யாரும் நம்ப மாட்டாங்க.. ஏன்னா..? உனக்கு டீன் ஏஜ் கிடையாது.. சொல்லு இப்போவாவது சொல்.. யார்..?” என்ற தம்பியின் கேள்விக்கு பதில் அளிக்க முடியாது தலை குனிந்து இருந்தவளின் நிலையை பார்த்த பிரசாந்த்..
“ யாருன்னு தெரியுமா..? இல்ல.. “ என்ற அவனின் பேச்சில் .
மந்ரா .. “ பிரசாந்த்..” என்று கத்தி விட்டாள்..
இது எல்லாம் கேட்கும் படி வந்து விட்டதே என்று ராம் மோகன் தலை மேல் கை வைத்து அமர்தவர் அமர்ந்தவர் தான்..
“ சும்மா என் கிட்ட கத்தாதே.. இன்னும் கொஞ்ச நாளில் ஊரில் இருக்கிறவங்க எல்லாம் கேட்பாங்க.. அதுக்கு உண்டான பதில் சொல்லி தானே ஆக வேண்டும்..” என்ற தம்பியின் பேச்சில் மந்ரா அதிர்ந்து போனார்…
ஆம் சமூகத்தின் முன் பதில் சொல்லி தானே ஆக வேண்டும்.. மருத்துவர் உனக்கு கருகலைப்பு செய்ய முடியாது.. அது உன் உயிறுக்கே ஆபத்தாக போய் விடும் என்று சொல்லிய நிலையில்,
அதுவும் ஒருவர் கிடையாது.. மூன்று மருத்துவரும் தன் மருத்துவ அறிக்கையை பார்த்து விட்டு..
“ ரொம்ப ரிஸ்க்… இது எங்க ஆஸ்பிட்டலில் செய்து விட்டு உங்களுக்கு எதாவது ஆகி விட்டால், அது எங்க ஆஸ்பிட்டலுக்கு தான் பிரச்சனை..” என்று கை விரித்த நிலையில்..
மந்ரா இந்த குழந்தையை பெற்று கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கும் போது.. யாருக்கு என்ன பதில் சொல்வது என்று யோசிக்கும் போதே..
இதோடு இன்னும் பிரச்சனை இருக்கிறது என்று தெரியப்படுத்தும் வகையாக அந்த வீட்டின் தொலை பேசிக்கு அழைப்பு வந்தது..
அழைத்தவர் அவர்களின் குடும்ப வக்கீல் தான்… விவரம் இது தான்..
“ இப்போது தான் ரவீந்திரனின் குடும்ப வக்கீல் நான் உங்க குடும்ப வக்கீல் எனும் முறைக்கு என்னிடம் அழைத்து பேசினார்… அவர் மகனுக்கு உங்க மகளிடம் இருந்து விவாகரத்து வேண்டுமாம்..
அப்படி இல்லை என்றால் பாதிப்பு யாருக்கு என்று நாங்க சொல்ல தேவையில்லை என்று அவங்க பக்கத்தில் இருந்து சொல்லி இருக்காங்க…” என்று ரவீந்திரன் குடும்ப வக்கீல் சொன்னதை, அப்படியே ஒப்புவித்த இவர்களின் குடும்ப வக்கீல்.
.”உங்க முடிவு என்ன..? என்று கேட்டு சொல்ல சொன்னார்..”. என்றதற்க்கு..
ராம் மோகனால் என்ன செய்ய முடியும்..? இது வரை வந்து கத்தி அசிங்கப்படுத்த வில்லையே என்று சந்தோஷப்பட்டு கொள்ள வேண்டியது தான் என்று நினைத்தவர் மகளை கூட ஆலோசனை கேட்காது..
“அவங்க சொன்னது போலவே செய்து விடலாம்..” என்ற ராம்மோகனின் பேச்சு அவர்கள் குடும்ப வக்கீலுக்கே அதிர்ச்சியாக தான் இருந்தது..
அவர் இது போல் லேசில் விடுபவர் கிடையாதே… அப்படி என்றால், வக்கீல் மூளை அவசர அவசரமாக கணக்கு போட்டது…
ரவீந்திரனின் வக்கீல் அழைத்து இப்படி என்று சொன்னதுமே, வக்கீல் இதில் எவ்வளவு பீஸ் வாங்கலாம்..
ராம் மோகன் கண்டிப்பாக இதை சுமூகமாகவிட மாட்டார்.. இதை வைத்து நாம் எவ்வளவு சம்பாதிக்கலாம் என்று நினைத்தவனுக்கு ராம்மோகன் இப்படி சொல்லவும்..
ஏமாற்றம் தான்.. ஆனால் இது அப்படி விடும் ரகமில்லை என்பது போல், ரவீந்திரன் வக்கீல்
“குழந்தை அவர்களிடம் தான் ஒப்படைக்க வேண்டும் என்று சொல்றாங்க..” என்ற பேச்சில்..
“அது எப்படி..?தன் மகள் தவறு செய்து இருந்தாலும், குழந்தையை தாயிடம் இருந்து பிரிப்பதா..? நாங்க யோசிக்க வேண்டும்..” என்ற ராம் மோகனின் பேச்சு அந்த வக்கீலுக்கு ஊக்க மருந்தாக இருந்தது..
அந்த வக்கீலுக்கு தெரிந்து விட்டது.. ராம் மோகன் முதலில் விவாகரத்துக்கு சம்மதம் சொன்னதுமே.. தவறு இவர்களிடம் தான் என்று..
இருந்தும் தன் வாய் திறமையில்.. “ குழந்தை அம்மாவிடம் தான் வளர வேண்டும்.. அதுவும் பெண் குழந்தை அம்மாவிடம் தான் வளர வேண்டும் என்று சட்டம் சொல்கிறது..
நீங்க கவலை படாதிங்க ராம் சார்.. குழந்தையை உங்களிடம் வாங்கி கொடுப்பது என் பொறுப்பு..” என்று நிலமை தெரியாது வாக்கு கொடுத்தான்..
ராம் மோகனுக்கும் குழந்தையை விடுவதில் விருப்பம் கிடையாது.. மந்ராவும்..
“ குழந்தை எனக்கு வேண்டும் டாட்.. நான் தப்பு செய்து விட்டேன் தான்.. ஆனால் ஸாகி.. டாட் ஸாகியை நான் தானே டாட் வளர்த்தேன்… நேத்ரனுக்கு அவள் கூட டைம் ஸ்பென் பண்ண எங்கே நேரம் இருந்தது..?
டாட் எப்படியாவது என் குழந்தையை என்னிடம் வாங்கி கொடுத்து விடுங்க டாட்..” என்று கை பிடித்து கதறிய மகளின் அழுகையில் அவள் செய்த மற்றதை விடுத்து..
“ சரி நான் வாங்கி தருகிறேன்..” என்று இவர் சொன்னதும் தான் மந்ராவின் அழுகை நின்றது..
மந்ராவுக்கு அழுகை தான் நின்றதே ஒழிய.. மனது.. அது பாட்டுக்கு ஓலம் இட்டு கொண்டு இருந்தன..
நேத்ரன் தன்னை சேர்த்து கொள்வது என்ன..? பார்க்கவே விரும்ப மாட்டான் என்று இத்தனை ஆண்டுகள் வாழ்ந்த வாழ்க்கையோடு, இத்தனை ஆண்டு நண்பனாக இருந்த நேத்ரனை நன்கு அறிந்து இருந்தாள்.. என்ன அறிந்து என்ன பயன்.. .
அத்வைத் நேத்ரனுக்கு அழைத்து அழைத்து பார்த்தான்.. அவன் எடுக்காது போக வீட்டு பேசிக்கு அழைத்தான்.. வேலையாட்கள் நேத்ரன் சொன்ன..
“ அவரை யாரும் டிஸ்ட்டப் செய்ய வேண்டாம் என்று சொல்லி விட்டார்..” என்ற பதிலே திரும்ப திரும்ப சொல்ல..
இதோ நேத்ரன் வீட்டுக்கு வந்து விட்டான்.. கூடவே ஸாகித்யாவையும் அழைத்து கொண்டு..
திருட்டு மாங்கா ருசிக்கும் என்றதினாலேயா..? இல்லை தன் வருங்கால மனைவி என்று தன் வீட்டிலேயே மந்ராவோடு அழகோடு மிளிரும் ஸாகித்யாவின் கை பிடிப்பது மட்டுமே அதுவும் தேவைக்கு எனும் போது இருப்பவன்..,
மந்ராவிடம் நேரம் கிடைக்கும் போதும்.. இல்லை நேரத்தை உருவாக்கியும் கூட கூடி களிக்க தோன்றியது..
ஸாகித்யா எப்போது என்றாலும் தனக்கு உரியவள்.. தனக்கு மட்டுமே உரியவள் என்று நினைவு அவனின் கையை கட்டி விட்டதோ.. ஆனால் மந்ரா அப்படி கிடையாதே..
அதுவும் நேத்ரனின் மனைவி தன்னை நாடி அவளே வரும் போது அத்வைத்தின் மனது பேதலித்து தான் போய் விட்டது..
நேத்ரன் அத்வைத்துக்கு நல்ல நண்பன் தான் அதில் எந்த வித சந்தேகமும் கிடையாது.. ஆனால் ஒரு சில சமயம் நேத்ரனின் வெளிப்படையான பேச்சு.. அத்வைத்தின் மனதை காயப்படுத்தி செய்து இருக்கிறது..
அதுவும் கல்லூரியில் பெண்களை பற்றி பேச்சு வரும் போது ஒரு சமயம்..” ஏன்டா அந்த பெண் நல்லா தானே இருக்கா..? ஏன் இப்படி அவளை அசிங்கப்படுத்தினே…..?” என்று கேட்டதற்க்கு…
“ சாப்ட்டா பேசுனா.. அந்த பெண்ணுக்கு என் பேச்சு நம்பிக்கையாகும்,… அது தவிர வேறு பெண்களும் படை எடுத்து வருவாங்க.. உனக்கு இந்த பிரச்சனை கிடையாது..” என்ற அந்த வார்த்தை அவனை பலமாக தாக்கியது..
அன்று உன்னை தேடி பெண் வர மாட்டார்கள் என்று சொன்னவனின் மனைவி தன்னை தேடி வந்ததும் கிறங்கி தான் போனான். இந்த கிறக்கம் இனியும் இருக்குமா..?..
இவனின் துரோகத்துக்கு நேத்ரன் பதில் அடி என்னவாக இருக்கும்..? ஸாகித்யாவுக்கு அத்வைத் செய்த செயல் தெரிய வந்தால், …