Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம், "கதையருவி" தளத்திற்கு தங்களை வரவேற்கிறோம்!

    இத்தளத்தில் எழுத எங்களை "vskathaiaruvi@gmail.com" என்ற மின்னஞ்சலில் தொடர்புக் கொள்ளவும். நன்றி!

Negizhundha Nenjam...8

  • Thread Author
அத்தியாயம்…8

அத்வைத்திடம் பேசிக் கொண்டு இருந்த ரவீந்திரன், அப்போது தான் ஒன்றை கவனிதார்… அது தான் மட்டும் தான் அத்வைத்திடம் பேசிக் கொண்டு இருக்கிறோம்.. தன் மகன் பேசுவது என்ன…?

அத்வைத்தின் பக்கம் பார்வையை கூட திருப்பாது, முகம் ஒரு வித இறுக்கத்துடன் கை மூடிக் கொண்டு தன்னை கட்டுப்படுத்தியவனாக அமர்ந்து கொண்டு இருப்பதை பார்த்து, யோசனையுடன் தன் மகனை கவனித்தார்..



இப்போது வீட்டில் போய் கொண்டு இருக்கும் பிரச்சனை சாதரணமானது கிடையாது.. மனது, மானம், குழந்தையின் எதிர் காலம் என்று அனைத்தும் சேர்ந்த பிரச்சனை தான் இது…



ஆனால் மற்றவர்களிடம் தன் பிரச்சனைகளை அவன் வெளியில் காட்ட மாட்டானே.. அதுவும் அத்வைத்தோடான நட்பு எத்தனை வருட நட்பு…



அவன் தன் வருங்கால மனைவியோடு வந்து இருக்கும் ;போது, நாகரிகத்திற்க்காவது பேசுவானே.. அனுபவம் வாய்ந்த அந்த மனிதருக்கு ஏதோ சரியில்லை என்று அப்போது தான் அவர் உணர்ந்தார்…



அதற்க்கு தகுந்தார் போல், தாங்கள் வந்ததில் இருந்து, ஏதோ ஒரு சூழல் காரணமாக அமைதியாக இருக்கும் வீட்டில், அடுத்து என்ன என்பது போல் சங்கடத்துடன் பார்வையை சுழல விட்டு கொண்டு இருந்த ஸாகித்யா..

சூழலை சகஜமாக்கும் பொருட்டு.. பொதுவாக.. “ மந்ரா அக்காவும், ஸாகி பேபியும் வீட்டில் இல்லையா..? “ என்று கேட்டவள்.. தன்னிடம் இருந்த கலர் பென்சிலை காட்டி..

“ போன முறை வரும் போது ஸாகி பேபி இதை கேட்டா..’ என்று சொன்னவள் தன் கையில் இருந்த பென்சில் பாக்ஸையும் காட்டினாள்..

நேத்ரன் பேச கூடாது.. இவனிடம் பேசுவது என்ன.. இனி நடந்த அந்த அசிங்கத்தை தன் வாயில் இருந்து வார்த்தைகளாக கூட வர கூடாது என்று நினைத்து கொண்டு இருந்தவன்…



ஸாகித்யாவை பார்த்து.. “ எப்போ உன்னிடம் கேட்டாள்..?”



நேத்ரனின் குரலே எப்போதும் ஒரு வித ஆளுமையுடன் தான் ஒலிக்கும்.. இப்போது தன் கோபத்தை அடக்கியவனாக, ஸாகித்யாவிடம் சாதாரணமாக பேச வேண்டும் என்று நினைத்து பேசினாலும், அது மிரட்டுவது போல் தான் ஸாகித்யாவுக்கு கேட்டது…



நேத்ரன் கோபக் காரன் என்று அத்தான் சொல்லி இருக்கிறார் தான்.. ஆனால் ஸாகித்யாவுக்கு இங்கு வந்த போது அவள் ஸாகி பேபி தன் டாடியை பற்றி பேச பேச..

கோபம் இருந்தாலும், மகளிடம் பாசமாக தான் இருக்கிறான்.. மனைவிக்கு இவ்வளவு சுதந்திரம் கொடுத்து இருக்கிறான்.. மனைவியை தனக்கு கீழ் வைக்காது தனக்கு சமமாக வைத்து நடத்துக்கிறான் என்று அவனை பற்றிய விசயங்களை ஸாகி பேபி.. தன் அத்தான்..மந்ரா அக்கா பேசியதில் வைத்து அவள் புரிந்து கொண்டது..

அதனால் தான் ஒட்டலில் நேத்ரனை பார்த்த உடன், முன் இருந்த தயக்கம் இல்லாது அவளே போய் அவனிடம் பேச்சு கொடுத்தது…



அப்போது தான் ஸாகித்யா தன்னிடம் கேட்ட இரு பொருளில் ஒன்றான குட்டி ஹார் பேன்ட் அன்று வாங்கியதை நேத்ரனிடம் கொடுத்தாள்..

மற்றோன்றை இப்போது மறவாது எடுத்து வந்து உள்ளதை, ஸாகி பேபியிடம் கொடுத்து, அவளிடம் சிறிது நேரம் செலவழிக்கலாம் என்று தான் தன் அத்தான் கூப்பிட்டதும் எப்போதும் போல் இங்கு வந்து விட்டாள்.

எப்போதும் தாங்கள் வரும் போது, வீட்டில் ஸாகி, மந்ரா அக்கா, வேலையாட்கள் மட்டுமே இருப்பர்.. இன்று தான் நேத்ரன் வீட்டில் நேத்ரனை பார்க்கிறாள்..

அவனை பார்த்ததும் சங்கடம் எல்லாம் படவில்லை.. அது என்னவோ அவள் இங்கு வரும் போது அவன் இலை என்றாலும், அவனை பற்றிய பேச்சு கேட்டு கொண்டு இருந்ததாலோ என்னவோ..

புதியவனாக அவளுக்கு தோன்றவில்லை.. .அதன் தொட்டே இப்போது வீட்டில் இல்லாதவர்களை பற்றி கேட்டது….



ஆனால் இப்போது நேத்ரனின் இந்த அதட்டல் தோனியிலும், ஒரு மாதிரியான அந்த பேச்சு தோரணையிலும்.. ஒரு வித சங்கடத்துடன் தன் அத்வைத் அத்தானை பார்த்தாள்…



அவனுக்குமே நேத்ரன் ஸாகியிடம் பேசும் தோரணை பிடிக்காது,

“என்ன நேத்ரா என்ன பிரச்சனை.. எனக்கு தெரியும் ஆபிசில் நான் பாதியில் போனது தான் உனக்கு கோபம் என்று, அப்படி இருந்தாலும் அந்த கோபத்தை நீ என் கிட்ட தான் காட்ட வேண்டும்.. பார் ஸாகி பயந்தது போல் ஆகி விட்டாள்.’ என்றவனின் பேச்சில்.. எழுந்தவன்…



அவன் முன் நின்று கொண்டவனின் பார்வை முழுவதும் அத்வைத்தின் முகத்தில் தான் நிலை பெற்று இருந்தன..

எப்படி பட்ட துரோகம்..? . எப்படி தன்னிடம் எதுவும் நடவாதது போல் பேசுகிறான்..? எப்படி தன் முகத்தை இவனால் பார்க்க முடிகிறது..? இப்படி அவன் மனதில் ஆயிரம் கேள்விகள் எழுந்தாலும்..



“ மந்ரா கிட்ட பேசல போல..” என்று சம்மந்தம் இல்லாது நேத்ரன் கேட்ட கேள்வியும், அதை அவன் கேட்ட விதத்தையும் பார்த்து.. இப்போது அத்வைத்தின் முகத்தில் பதட்டம் குடி கொண்டு விட்டது…



அவனுக்கு ஏதோ புரிவது போல்.. தன் முகத்தையே பார்க்காது இருந்தவன்.. இப்போது ஸாகித்யாவிடம் பேசும் முறை, தன்னிடம் பேசுவது அனைத்தையும் வைத்து பார்க்கும் போது…



அதுவும் நேற்று மந்ராவை மதியம் பார்த்து விட்டு வந்த பின் தன் தந்தை அழைத்து பேசிய விசயங்கள்.. தங்கள் திருமணம் பற்றியதில், அதிலேயே அவன் முழு கவனமும் இருந்து விட்டது..

அவனுக்குமே ஸாகித்யாவை விரைவில் திருமணம் செய்து கொண்டால் நல்லது என்று தான் நினைத்தான்.. அதன் தொட்டு அவனே தன் தந்தையிடம் பேச முற்படுகையில் அவரே..

“அது தான் அந்த ஜோசியாகரார் சொல்லி எட்டு மாதம் ஆகிறதே.. இன்னும் ஏன் கல்யாணத்தை தள்ளி போடுவது என்று உன் அத்தை சொல்றா.. எனக்கும் அது தான் சரி என்று படுது நீ என்னப்பா சொல்ற..?” என்று அத்வைத்தின் அபிப்பிராயம் கேட்ட போது மிகவும் நல்ல பிள்ளையாக..

“ உங்க விருப்பம் அப்பா…’ என்று ஒப்புதல் அளித்தான்.. கல்யாணம் அது ஸாகித்யாவோடு தான்.. அதில் அவன் மிக தெளிவாகவே இருந்தான்…



ஆனால் திருமணம் பின்.. மந்ரா.. அதை பற்றியதில் தான் அவனின் குழப்பம் நேற்றில் இருந்து மனதில் அரித்து கொண்டு இருந்தன…



அந்த குழப்பத்திலும், நேத்ரன் இந்தியாவுக்கு வந்து விட்டான். ஸாகித்யாவோ பேச முடியாது..

தான் பேசியில் அழைத்தாலும், நேத்ரன் தவறாக நினைக்க மாட்டான் தான்.. இருந்தும் எதற்க்கு ரிஸ்க் என்று நேற்று இரவு நினைத்தவனுக்கு,



இன்று காலை அந்த ரிஸ்க்கை எடுக்க தோன்றியது, நேற்று மந்ராவோடு இருந்த நேரத்தின் நினைவுகள்…



அதோடு நேத்ரனும் பேசியை எடுக்காது போகவும், அதை சாக்காக வைத்து கொண்டு இதோ எப்போதும் போல் வீடு என்றால் ஸாகித்யாவோடு…

மற்றவர்கள் கண்ணுக்கு தவறாக தெரியாது இருக்க, ஸாகித்யாவை அழைத்து கொண்டு வருவது போல் இன்றும் வந்து விட்டான்…



அத்வைத்தின் அனைத்து கணக்குகளும் சரியே..ஆனால் மேல் இருப்பவன் போடும் கணக்கு ஒன்று இருக்கிறது தானே..



அதில் அத்வைத்துக்கும், மந்ராவுக்கும் ஒரு குழந்தை என்று இருக்கும் போது, அதை யாரால் மாற்ற முடியும்..?



ஆது மட்டும் இல்லாது இருந்து இருந்தால், நேத்ரனின் பார்வையில் ஒரு துளி அளவு கூட சந்தேகம் வந்து இருக்காது தான்..



அத்வைத்துக்கு நேத்ரனின் இந்த பேச்சு, பார்வையில் கிலி ஏற்ப்பட்டு விட்டது.. அவன் தான் மாட்டுவோம் என்று ஒரு துளி அளவு கூட எதிர் பார்க்கவில்லை என்பது தான் உண்மை…



அதனால் என்ன பேசுவது என்று தெரியாது முழித்து கொண்டு இருக்கு போதே ஸாகித்யாவுக்கு தெரிந்தால், ஒரு வித பதட்டத்தோடு ஸாகியின் பக்கம் திரும்பினான்…



அங்கு ஸாகித்யாவும் ஒரு வித பதட்டத்தோடு தான் தன் துப்பட்டாவின் முனையை திருகி கொண்டு சண்டை இடுவது போல் இருக்கும் இவர்கள் இருவரையும் பார்த்தாள்.

.

அத்வைத்துக்கு அப்போது நேத்ரனுக்கு பதில் அளிக்க தோன்றவில்லை… இங்கு இருந்து ஸாகித்யாவை அழைத்து கொண்டு செல்ல வேண்டும் என்ற தோன்றிய நொடி..



“ ஸாகி வா போகலாம்..” என்று சொல்லி கொண்டே அவள் கை பற்றி அழைத்து கொண்டு தவறு …. தவறு இழுத்து கொண்டு போக முற்ப்பட்டான்..

ஆனால் அவனால் முடியவில்லை. ஏன் என்றால், ஸாகித்யாவின் மற்றோரு கை நேத்ரனின் வசம் இருந்தது..

ஸாகித்யா நேத்ரன் தன் கை பற்றியதில் தவறாக எல்லாம் நினைக்கவில்லை.. அவன் கை பற்றளின் அழுத்தம் கொடுத்த வலியில் தான் அவள் முகம் சுருங்கி வேதனை காட்டியதில், நேத்ரனின் கை பிடி தளர்ந்தது.. ஆனால் முழுமையாக விடுவிக்க வில்லை..



ரவீந்திரன் தான்.. “ நேத்ரா என்ன இது..? அந்த பெண் கையை விடு.. இது என்ன பழக்கம் அடுத்த பெண்ணின் கையை பிடிப்பது..? என்று ஒரு தந்தையாக மகனை அதட்டினார்..



“ நான் இவனுக்கு வர போகும்.. அதுவும் போகும் மனைவியின் கையை மட்டும் தானே பிடித்தேன்..” என்ற மகனின் பேச்சின் அர்த்தம் புரிந்தவராக.. ஸாகித்யாவை நேத்ரனின் பிடியில் இருந்து விடுவிக்க வேண்டி இருவருக்கும் நடுவே வர எழுந்து நின்றவர்.. நின்ற வாக்கில் அப்படியே இருக்கையில் சாய்ந்து விட்டார்..

ஏதோ பிரச்சனை இவர்களுக்குள்.. அதுவும் மந்ராவை வைத்து தான்.. என்று நினைத்தார்.. அவர் நினைத்தது, மந்ராவோடு தொடர்பில் இருப்பவன் அத்வைத்துக்கு வேண்ட பட்டவனாக இருக்கலாம்.

அத்வைத் மந்ராவுக்கு அறிமுகப்படுத்தி இருக்கலாம். இல்லை இவர்கள் மூவரும் காலேஜில் இருந்தே நட்பில் தானே இருந்தார்கள்.. இவர்கள் மூவரோடு அவனும் காலேஜில் படித்தவனாக இருப்பான்..



இப்படி ஏனைய இருப்பான்களை நினைத்தாரே ஒழிய.. அந்த இருப்பானில் அத்வைத்தை வைத்து ரவீந்திரன் பார்க்கவே இல்லை…

ஸாகித்யா நேத்ரனின் கை பிடியில் இப்போது வலி இல்லாது போக, தன் கையை மறந்தவளாக நேத்ரனின் பேச்சில் கவனத்தை செலுத்தினாள்..

ஆனால் அத்வைத்துக்கு வேறு எதிலும் கவனம் இல்லாது, ஸாகித்யாவை நேத்ரன் கை பிடித்த பிடியிலேயே அவன் பார்வை இருந்தது..

தான் கள்ளம் பிறரை நம்பான் என்று ஒரு பழ மொழி இருக்கும்.. அதற்க்கு ஏற்ப தான் அவன் மனது தாளம் தப்பி அடித்து கொண்டது..

“நேத்ரா எது என்றாலும், ஸாகியின் கையை விட்டு பேசு.. முதல்ல நான் அவளை அவள் ஹாஸ்ட்டலில் விட்டு விட்டு வருகிறேன். பின் பேசலாம்..” என்ற அத்வைத்தின் அவசரமான பேச்சில், நேத்ரன் புரிந்து கொண்டது இது தான்..

இவன் ஒரே சமயத்தில் இரட்டை சவாரி செய்ய நினைக்கிறான் என்று.. அதாவது மந்ராவை சும்மா.. அந்த சும்மாவில் தான் எவ்வளவு ஏகப்பட்ட அர்த்தங்கள் அடங்கி இருக்கின்றன..

அதன் கொடுத்த தாக்கத்தில் .. இவனிடம் பேசவே கூடாது என்று நினைத்து கொண்டு இருந்தவன் அதை விடுத்து..

“அது எப்படி ஸாகி கையை அவ்வளவு சீக்கிரம் விட்டு விட முடியும்…? ஆஸ்திரேலியாவில் இருந்து நான் வந்த அன்றே அவளை நீ கல்யாணத்துக்கு கூட்டிட்டு போனதால், நான் அட்டண் செய்தேன்

எனக்கு எவ்வளவு டையாடா இருந்தது தெரியுமா …? சரி அது தான் விடு என்று விட்டு விட்டாலும், வந்தவன் பாதியில் உனக்கு ஆபிசில் பிரச்சனை என்று சொல்லிட்டு அப்படியே ஒடி போயிட்ட..



நீ சென்னை வந்ததால் உன்னை கூட்டிட்டு போன வேலையால் நான்கு கம்பெனியின் ஆர்டர் கை விட்டு போய் விட்டது..

இப்படி எல்லாத்துக்கும் காரணம் ஸாகியா இருக்கும் போது, நான் அவ்வளவு சீக்கிரம் இந்த கையை விட்டு விடுவேனா என்ன..?”

பிடித்து இருந்த ஸாகித்யாவின் கையை அத்வைத்தின் முன் தூக்கி காட்டி நேத்ரன் பேச பேச.. அத்வைத் அவன் பிடித்து இருந்த கையையே யோசனையுடன் பார்த்தான் என்றால்,

ஸாகித்யாவோ.. ‘ இது என்ன அத்வைத் அத்தான் செய்யாததை எல்லாம் செய்வதா அத்தான் மேல் அபாண்டமா பழியை போடுகிறார்..’ என்று நினைத்து கொண்டவள்..

அதை சொல்லவும் செய்தார்.. “ அத்தான் என் கூட எல்லாம் வரவில்லை.. அவர் ஆபிஸ் வேலையை தான் முழு நேரமும் பார்க்கிறார்..அதுவும் லீவ் நாளில் கூட இங்க உங்க வீட்டுக்கு வந்து மந்ரா அக்கா கூட, எந்த இடஞ்சலும் இருக்க கூடாது என்று உங்க ஆபிஸ் ரூமில் தான் இரண்டு பேரும் வேலை பார்ப்பாங்க..

வேலை நேரத்தில் ஸாகி பேபி இடஞ்சல் செய்ய கூடாது என்று ஸாகி கூட இருக்க கூடவே என்னையும் கூட்டிட்டு வருவார்.. நீங்க அவர் வேலைக்கு பாராட்ட வில்லை என்றாலும் பரவாயில்லை..

ஆனால் இது போல் அபாண்டமாக பழியை போடாதிங்க.. நான் உங்களை என் மனதில் எவ்வளவு நல்ல விதமாக நினைத்து கொண்டு இருந்தேன் தெரியுமா..?’ என்று தன் அத்வைத் அத்தானுக்கு வக்கீலாக மாறி பேசிக் கொண்டு.. தவறு தவறு வாதாடி கொண்டு இருந்தாள்…

ஸாகித்யா பேச பேச நேத்ரன் அத்வைத்தை நக்கலாக ஒரு பார்வை பார்த்தவன்.

பின் ஸாகியின் பக்கம் திரும்பி.. “ பாராட்டு தானே கண்டிப்பாக பாராட்டி விடலாம்.. இவர் செய்த வேலைக்கு பாராட்டு மட்டும் போதுமா.. கூடவே பரிசும் கொடுத்தால் தானே நல்லா இருக்கும்..

இதில் என்ன ஸ்பெஷல் என்றால், என் கூட பிசினஸ் செய்து கொண்டு வேலையை மந்ரா கூட செய்ததால்,” என்று சொல்லிக் கொண்டு வந்தவன்.. சிறிது நிறுத்தி விட்டு அத்வைத்தை பார்த்தவன்..

“ கணவன் ஆகாது தந்தை ஆகும் பாக்கியத்தை மந்ரா உனக்கு கொடுத்து இருக்கிறாள்..” என்ற அவன் பேச்சு முடிக்கவும்..

இப்போது அத்வைத் அனைத்தையும் மறந்து விட்டான்.. ஸாகித்யா அங்கு இருப்பதையே மறந்தவனாக..

“ என்ன..? என்ன..? என்று அதிர்ச்சியோடு முதலில் கேட்டவன், ஸாகித்யா தன்னையே யோசனையுடன் பார்த்து கொண்டு இருப்பதை பார்த்தவன்.

.

பின் தன்னை சுதாகரித்து கொண்டவனாக.. “ நீ என்ன சொல்ற..? என்று கேட்டவன் பின்..

“ ஓ நீ தந்தையாக போறியா நேத்ரன்…? இது போல் ஆன சமயத்தில் நான் அவளை வேலை வாங்கியதால் தான் என் மீது கோபமா நேத்ரன்..” என்று அந்த சமயத்திலும் அத்வைத் சமாளிக்க தான் பார்த்தான்..

ஒரு நிமிடம் நேத்ரனே அவன் வாய் ஜாலத்தில் அதிசயத்து தான் போனான்…

“ ஆமா தந்தை தான்..நான் இல்லை நீ..” என்று சொன்னவனின் பேச்சில் ஏதோ பழி போட்டு விட்டால் ஒரு ரியாக்க்ஷன் காட்டுவார்களே அது போல் முகத்தை அதிர்ச்சியாக்கியவன்..

“ என்னை நேத்ரா நீயா சந்தேகப்படுற.. அதுவும் மந்ரா கூட .. என்ன நேத்ரா. உன் கிட்ட இருந்து நான் இதை எதிர் பார்க்கவில்லை..” என்று அதிர்ச்சியாகி போனவன் போல் சொன்னான்..



“ ரொம்ப அதிர்ச்சியாகி டையலாக் எல்லாம் இப்போவே வெஸ்ட் செய்யாதே… ஏன்னா இப்போ நான் சொல்ல போற விசயத்தில் நீ உன்னை உத்தமான காட்டிட்டு மந்ரா மீது மொத்த பழியையும் போட ஒரு சில டையலாக் மிச்சம் வைத்து கொள்..

ஏன்னா மந்ரா எட்டு வார கருவை சுமந்துட்டு இருக்கா… அது உன் குழந்தை என்பதில் நிருபிக்க சிரமம் பட தேவையில்லைல்;; நீ கலைக்க வேண்டும் என்று நினைத்தாலும், கலைக்க முடியாது..

உனக்கு அவள் பாடி ஸ்டெச்சர் தெரிந்த அளவுக்கு அவள் மெடிக்கல் ரிப்போர்ட் தெரியாதுலே..” என்று நேத்ரன் பேச பேச அத்வைத் அதிர்ந்ததோடு ஸாகித்தா அதிர்ச்சியாகியதால் மயங்கி நேத்ரன் மீதே சரிந்தாள்…
 
Top