அத்தியாயம்….9
அத்வைத் நேத்ரன் சொன்ன அந்த அதிர்வு செய்தியை கேட்டு கொண்டு இருக்கும் போதே, ஸாகித்யா மயங்கியதை விட, நேத்ரம் மீது மயங்கியதில் தான் அவனுக்கு பதட்டத்தை கொடுத்தது..
அந்த நிலையிலும் அத்வைத் நேத்ரன் அருகில் வந்து ஸாகித்யாவை தன் மீது சாய்த்து கொள்ள பார்த்தவனின் செயலை பார்த்த நேத்ரனுக்கு அப்படி ஒரு ஆத்திரம் வந்தது..
இவன் வீட்டு பெண்.. அதவாது இவனுக்கு இன்னும் இவள் மனைவியாக கூட ஆகவில்லை.. ஆனால் தன் மீது அதுவும் சுய நினைவு இல்லாது தான் மயங்கி தன் மீது சரிந்தாள்..
அவள் கீழே விழ போகிறாள்.. அதுவும் அவள் மிக அருகில் கண்ணாடி டீப்பா வேறு இருந்ததில், அதன் மீது விழுந்து விட போகிறாள் என்று தான் அவன் சட்டென்று அவளை தன் மீது சாய்த்து கொண்டது.
இவன் இதையே தாங்க முடியாது. இப்படி பதறி போகிறான்.. அப்போ இவன் வீட்டு பெண் இழுத்து மூடி கொண்டு இருக்க வேண்டும்..
அடுத்த வீட்டு பெண்ணின் முந்தானை எப்போது விலகும் என்று பார்க்கும் வகையில் சார்ந்தவனாக இருக்கிறான்.. இத்தனை வருடம் பழகியும் இவனின் இந்த அழுக்கு குணம் தனக்கு தெரியாது போயிற்றே.. என்று நினைத்தவனுக்கு என்ன தோன்றியதோ..
ஸாகித்யாவை தன் மீது சாய்த்து கொள்ள வந்தவனிடம் கொடுக்காது, இவ்வளவு நேரமும் ஒதுங்கி இருந்த வேலையாள் ஒருவனை அழைத்தவன்..
“ தண்ணீர் கொண்டாங்க..” என்று சொன்னவன்.. அந்த வேலையாள் பார்க்க ஸாகித்யாவின் கன்னத்தை தட்டி..
“ ஸாகி ஸாகி..” என்று அவளின் மயக்கத்தை தெளிவிக்க முயன்றான்..
நேத்ரன் அத்வைத்தை கோபம் பட செய்ய தான் அவ்வாறு செய்தானே தவிர… அவன் மனதில் அப்போதைக்கு வேறு எந்த எண்ணமும் கிடையாது..
அத்வைத்துக்கு நேத்ரனின் ஒவ்வொரு செயல்களிலும் மனது பதை பதைத்து போனது..
இவன் செய்த செயல்கள் மறந்து.. அதனால் தான் அவள் மயங்கி போனாள் என்பதையும் மறந்து..
மயங்கி அவன் மீது தான் சாயனுமா..? ஏன் அவன் பக்கத்தில் ரவீந்திரன் சார் நிற்கிறார்.. அவர் மீது விழுந்து இருக்கலாமே..
ஏன் எதிரில் நான் நிற்கிறேன் என் மீது விழுந்து இருக்கலாமே.. முதலில் ஏன் அவள் நேத்ரன் பக்கத்தில் நின்றாள்.. இங்கு இவ்வளவு இடம் இருக்கு.. இவள் அவன் பக்கத்தில் தான் நிற்க வேண்டுமா..?
தான் செய்த செயல்களின் விளைவாக… இது அனைத்தையும், மனதில் தான் நினைத்தான். நேத்ரனின் முகம் பார்க்கவே அஞ்சி இருப்பவனுக்கு, இது கேட்க தான் தைரியம் ஏது..?
ரவீந்திரனும் நேத்ரனின் செயல்களை கவனித்து கொண்டு தான் இருந்தார்.. கூடவே அத்வைத்தின் பதட்டமான முகத்தையும் தான்..
ரவீந்திரனுக்கு அத்வைத் தான் காரணம் என்பதிலேயே எப்படி..? இவனால் முடிந்தது..இவனால் என்றால், தன் மகனையும் சேர்த்து தான்.. இதோ தெரிந்த பின்னும் அத்வைத்தை ஒன்றும் செய்யாது எப்படி இருக்கிறான்.. இவன் குணம் இது கிடையாதே.. என்ற எண்ணும் போது தான் நேத்ரன் மீது ஸாகித்யா மயங்கியது..
அப்போது அவருக்கு அது பெரியதாக தெரியவில்லை.. தவறாகவும் படவில்லை.. ஆனால் அத்வைத் அப்படி பதறி ஒடி வந்ததை பார்த்து, அவரும் நேத்ரன் நினைத்ததை தான் நினைத்தார்…
அத்வைத்துக்கு எதிர் விளைவாக நேத்ரன் ஸாகித்யாவின் கன்னம் தட்டியது.. அத்வைத்திடம் கொடுக்காது தானே அவளின் மயக்கத்தை தெளிவிக்க முயன்றதில், மகனின் முகத்தில் எந்த கள்ளமும் இல்லை.. என்று அவருக்கு புரிந்தது தான்..
ஆனால் அதே சமயம் அத்வைத்தை கோபப்படுத்த என்று நேத்ரன் செய்யும் செயல்கள், வேறு பின்விளைவுகளை ஏற்படுத்தினால், வேறு என்ன..? பாவம் இந்த பெண் முகத்தை பார்த்தாலே தெரிகிறது.. அப்பிராணி என்று…
ஸாகித்யாவின் பேச்சில் இருந்தே ரவீந்திரனுக்கும் புரிந்து விட்டது.. அனைத்து விசயங்களும், இவளையே வைத்து கொண்டு… அப்படி பட்டவளை நேத்ரனின் இந்த செயல் மூலம் அவள் பாதிப்புக்கு ஆளாக கூடாது என்று ஒரு பெரிய மனிதராக எண்ணினார்..
அனைவரையும் ஒவ்வொரு வகையில் பதைக்க வைத்த ஸாகித்யா அவள் மயக்கத்தில் இருந்து தெளிந்தாள்..
எப்போதும் அத்வைத்தை பார்த்தால், அவள் பார்வையில் காதல் பார்வை இருக்கிறதோ இல்லையோ.. கண்டிப்பாக அன்பு இருக்கும்.. கூடவே நன்றி உணர்வும்..
ஆனால் இப்போது அவனை பார்க்கவே ஸாகித்யாவுக்கு அவ்வளவு அருவெருப்பாக இருந்தது..
எப்படி நட்பு என்ற போர்வைக்குள் இப்படி ஒரு அக்க போரை செய்ய தோன்றியது..
அதுவும் என்னை வைத்துக் கொண்டு.. அப்போ என்னை பற்றி இவன் என்ன நினைத்து கொண்டு இருக்கிறான்… நான் இவ்வளவு நாள் செய்த செயலுக்கு என்ன பெயர்..
இவர்களை அந்த அறைக்குள் அனுப்பி நான் வெளியில் விளக்கு பிடித்தது போல் தானே..
இவன் அசிங்கம் செய்ய எப்படி தன்னை அழைத்து கொண்டு வந்தான்.. என்னை பற்றி இவன் எண்ணம் தான் நினைத்தா..?
என்னையும் அந்த குழந்தை ஸாகி பேபி என்று நினைத்து கொண்டானோ.. இது எல்லாம் நினைக்க நினைக்க.. கோபம் கோபத்தையும் தான்டி தன் இயலாமையில், சத்தம் போட்டு அழவில்லை என்றாலும், கண்களின் இருந்து கண்ணீர் அது பாட்டுக்கு வந்து கொண்டு இருந்தன..
அதை துடைக்கவும் தோன்றாது அப்படியே சிலை போல் தான் நின்று கொண்டு இருந்தாள்..
மயக்கத்தில் தெளிந்த பின்னும், நேத்ரனை விட்டு தள்ளி இருக்காது, அவன் அருகில் நெருக்கத்தில் இருந்த ஸாகித்யாவை ஒன்றும் சொல்ல முடியாத சூழ்நிலை அத்வைத்துக்கு,
அதோடு அங்கு இருந்து எப்போது போவோம். . அதோடு மந்ரா நிலை.. அதை நினைக்க நினைக்க தான் எங்கு ஸாகியை போலவே மயக்கம் அடைந்து விடுவோமோ என்ற பயம் கூடவே.
.யாரின் முகத்தையும் நிமிர்ந்து பார்க்க முடியாத அந்த சூழலில், நிற்கவே அவனால் முடியவில்லை..
ஸாகித்யா அழ அழ யாரும் அழ வேண்டாம் என்றும் சொல்லவில்லை.அதே சமயம் அவளுக்கு ஆறுதல் என்ற பெயரில் அட்வைசும் கொடுக்க முயவில்லை.. நேத்ரனும், ரவீந்திரனும்..
நேத்ரனுக்கு ஸாகியின் நிலை அப்போது தான் உரைத்தது.. இவள் தன்னோடு பாவம் என்று தான் அப்போது அவனுக்கு தோன்றியது.. இவளை வைத்து கொண்டே.. அப்போ இவளை இவன் என்ன மாதிரி நினைத்து விட்டான்.. இந்த சின்ன குழந்தைகளை வைத்து தம்பதியார்கள் செய்யும் காதல் போல்..
சீ சீ இது எல்லாம் காதலில் சேர்த்தி கிடையாது..
ஆனால் இந்த பெண் ஸாகித்யா.. என்று அவன் நினைத்து கொண்டு இருக்கும் போதே அந்த பெண் இன்னும் தன் பக்கம் மிக அருகில் வந்த போது தான் நேத்ரன் நிகழ் காலத்துக்கு வந்தது…
விசயம் இது தான்.. ஸாகியின் கண்ணீரை துடைக்க அத்வைத் அவள் அருகில் சென்று உள்ளான் ..
கூடவே.. “ ஹாஸ்ட்டலில் விட்டு விடுகிறேன்..” என்ற பேச்சோடு..
அவ்வளவு தான் ஸாகித்யாவின் முகத்தில் ஏதோ அசிங்கத்தை பார்த்தால், முகம் அருவெருத்து போகுமே.. அது போல் முகத்தை வைத்து கொண்டு..
அவசர அவசரமாக தன் கண்களில் வரும் கண்ணீரை துடைத்து கொண்டே.. எங்கு அத்வைத் தன்னை தொட்டு விட போகிறான் என்ற பதட்டத்தில் இரண்டு அடி பின்னால் நகர்ந்ததில்..
ஸாகித்யா நேத்ரனை தொட்டு விட்டு பின் சிறிது விலகி நின்றாளே தவிர.. முழுமையாக விலக வில்லை..
காரணம் இன்னும் கொஞ்சம் நகர்ந்தாலும், ஸாகித்யா அத்வைத் பக்கம் வர நேரிடும் என்றதால்..
அந்த வீட்டின் நிலை இன்னும் இன்னும் மோசமாக தான் ஆனது என்று சொல்லலாம்..
அத்வைத் இன்னும் கொஞ்ச நேரம் இங்கு இருந்தால் அது விபரிதமாக ஆகும்..
அது ஒரு பக்கம் இருந்தாலும்,ரவீந்திரனுக்கு, இனி ஒரு முறை இவன் முகத்தை தான் பார்க்க கூடாது..
அதை அவனிடம் சொல்லியும் விட்டார்.. “ போ.. இந்த வீட்டை விட்டு மட்டும் கிடையாது.. இனி இந்த ஊரை விட்டும் நீ போக வேண்டும்.. என் பணத்தை இது வரை நான் நல்ல விசயத்திற்க்கு மட்டும் தான் பயன் படுத்தி கொண்டு வந்து இருக்கிறேன்..
முதல் முறை தவறாக ஒருவனை அழிக்க பயன் படுத்த வைத்து விடாதே.. அதே போல் தான் என் மகன் எந்த இடத்திலும் கீழ் இறங்குவதில் எனக்கு உடன் பாடு கிடையாது..
அதுவும் ஒரு முறை கெட்ட பெண்ணுக்காக, நன்றி கெட்டவனிடம் இது பற்றி பேசுவது கூட எனக்கு பிடிக்காத ஒன்று..” என்று அத்வைத்திடம் பேசிக் கொண்டே ரவீந்திரன்..
இது இதோடு விட வேண்டும். இதை பற்றி ஆனாலும் நீ இவனிடம் பேசாதே.. அது நம் மதிப்பை தான் சரிக்கும் என்பது போல் பேசியவரின் பேச்சு நேத்ரனுக்கு புரிந்தது..
அவனும் அதை தானே நினைத்து அத்வைத் முகம் பார்க்க கூட விருப்பம் இல்லாது இருந்தான்..
ஆனால் ஒரு சிலது அவனிடம் பேச வைத்து விட்டது.. ஆனால் இனி இவனிடம் பேச்சு என்ன வேண்டி இருக்கிறது… அனைத்தும் செயலில் தான். இவனை சும்மா விட மாட்டேன்.. அவளை சும்மா விட்டு விடுவேன்…
சும்மா என்பது குழந்தை இல்லாது.. அதாவது ஸாகித்யாவை கொடுக்க கூடாது என்ற முடிவு எடுத்து இருந்தான்…
ஆனால் அவனுக்கு அப்போது தெரியவில்லை.. தன் பேபி ஸாகி மட்டும் இல்லாது .. ஸாகித்யாவையும் அத்வைத்திடம் கொடுக்காது இருப்பான் என்று.. அதுவும் அது வேண்டும் என்று செய்யாது தானே அமைந்து விட்டு, அதுவும் அத்வைத் செய்யும் சில செயல்களே ஸாகித்யாவை தன்னிடம் சேர்த்து விடும் என்று தெரியாது..
தந்தை சொல்வதற்க்கு முன்னவே.. நேத்ரனே அந்த முடிவை எடுத்து இருந்ததால் அமைதியாகி தன் தந்தை பேச்சை கேட்டு கொண்டு இருந்தான்..
அத்வைத்திற்கும் அங்கு இருக்க பிடிக்கவில்லை என்பதை விட முடியவில்லை என்று சொன்னால் சரியாக இருக்கும்..
அதனால் கோபமாக இருக்கும் ஸாகித்யா.. அவளின் அந்த முகம் அத்வைத்துக்கு கோபம் என்று தான் எடுத்து கொள்ள தோன்றியது..
இங்கு இருந்து அழைத்து சென்ற பின் சமாதானம் செய்து கொள்ளலாம் என்று மிக எளிதாக நினைத்து விட்டான் போலும்..
காரணம் தங்கள் வீட்டில் வளர்ந்தவள்… தன் தந்தை படிக்க வைத்து சாப்பாடு போட்டு வளர்ந்தவள் என்றதால், அவளை அவன் மிக எளிதாக நினைத்து விட்டான் போல..
பெண்கள் எதை வேண்டும் என்றாலும் தாங்கி கொள்வார்கள்..ஆனால் துரோகம்.. அதுவும் இது போலான துரோகத்தை பெண்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்..
ஒரு சில பெண்கள் திருமணம் முடிந்து தன் கணவன் நடத்தை சரியில்லாது போனாலும், அட்ஜெஸ்ட் செய்து வாழ்வதும்.. சுய சம்பாத்தியம் இல்லாது, தன் குழந்தைக்காக தான் இருக்கும்.. .
ஆனால் அந்த நிலையில் ஸாகித்யா இல்லையே.. இன்னும் திருமணம் ஆகவில்லை.. அதோடு அவள் சொந்த காலில் நிற்கிறாள்..
என்ன ஒன்று பயந்த சுபாவம்.. அது கூட அவள் அம்மா..
“அப்பா இல்லாதவள். யாரிடமாவது ஏதாவது பேசி, இல்லை எங்காவது அவளை பார்த்து விட்டு, அவள் மீது ஏதவாது பெயர் வந்து விட போகிறது என்ற எண்ணத்தில் ஸாகித்யாவை எங்கும் தனியாக அனுப்ப மாட்டார்..
அவள் படித்த பள்ளி , கல்லூரியும் அவள் வீட்டுக்கு பக்கமே இருக்கும் படி தான் செய்தனர்..
பார்க்கவும் நன்றாக இருப்பாள். அதோடு ஒரே பெண்.. அவளுக்கு சேர வேண்டிய சொத்து அப்படியே வரும் என்று நினைத்து தான் அத்வைத்தின் அன்னை சின்ன வயதில் இருந்தே, வீட்டில் பேச்சான அத்வைத்துக்கு ஸாகியை திருமணம் செய்வதை பற்றி ஒன்றும் சொல்லாது அமைதியாகி போனார்..
அவர்கள் இருக்கும் வீடு பரம்பரை வீடு.. பாகம் ஸாகியின் அன்னை கல்யாணிக்கும் தானே இருக்கிறது.. பிரியாது தனியாக தன் மகனே ஆளட்டும் என்ற எண்ணமும் அத்வைத்தின் அம்மா சித்ராவுக்கு உண்டு..
மற்றும் ஸாகித்யா அமைதியான பெண்.. எதிர்த்து பேச மாட்டாள்.. இதோ நன்றாக படித்து நல்ல வேலையிலும் சேர்ந்து விட்டாள்..
உறவுகள் நடுவில் மத்தியதரவர்க்கத்தில் இருந்து தாம் உயர்ந்து விடுவோம் என்றதில், இன்னும் இன்னும் ஸாகித்யாவை அவர் பொத்தி பார்த்து கொண்டார்..
அழகான பெண் …நாளை பின்னே காதல் என்று வந்து விட கூடாது பார்.. அதனால் தான்..
ஆனால் அது மற்றவர்களின் பார்வைக்கு, நாத்தனார் பெண் மீது சித்ராவுக்கு என்ன ஒரு அக்கறை … அப்படி தான் சொல்ல வைத்தது…
இவை அனைத்தும் ஸாகித்யா அத்வைத்தை திருமணம் செய்ய இருப்பவள் என்றதினால் தான் அவளுக்கு கிடைத்தது… அத்வைத்தோடான திருமணத்தை அவள் மறுத்தால்..
இதோ அதன் முதல் படியாக அத்வைத் ஸாகித்யாவை ஹாஸ்ட்டலில் விட்டு விடுகிறே என்று அழைத்த போது அவன் முகத்தை கூட பாராது,..
வேண்டாம் என்பது போல் தலையாடி மறுத்த ஸாகித்யா..
நேத்ரனை பார்த்து.. “ எனக்கு ஓலா..இல்ல உபர் கேப் புக் பண்ணி தர்றிங்களா..? நான் இன்னும் என் போனில் அதன் ஆப் ஏத்தல.” என்று நேத்ரன் முகத்தை பார்த்த வாறு பேசிக் கொண்டு இருந்தவள்..
தன் பின்.. “ நான் கூட்டிட்டு போறேன்.. எதுக்கு கேப் எல்லாம்..” என்று அவன் பாட்டுக்கு பேசிக் கொண்டு .. .
தவறு தவறு கத்திக் கொண்டு இருந்தவனின் பேச்சை காதிலேயே வாங்காதவள் போல் தான் நேத்ரனிடம் பேசினாள்..
நேத்ரன் உடனே .. “ என் காரில் ட்ரைவரோடு போ..” என்று சொல்லி வெளியில் நின்று கொண்டு இருந்த தன் ஓட்டுனருக்கு பேசியில் சொல்லி விட்டு.
“ம் சொல்லிட்டேன் உன் ஹாஸ்ட்டலின் அட்ரஸ் சொன்னால் அவன் விட்டு விடுவான்..” என்று சொன்னவன் கூடவே..
“நீ போனதும் எனக்கு போன் செய்..” என்றதோடு, தன் கைய் பேசியின் எண்ணையும் அவளுக்கு கொடுத்தான்…
ஸாகித்யா அவன் கொடுத்த எண்ணை தன் பேசியில் மிஸ்ட் கால் கொடுத்து விட்டு, பின் அந்த எண்ணை ஸாகியின் டாடி.. என்ற பெயரில் பதிவும் செய்து கொண்டாள்…
நேத்ரனும் அவளிடம் வந்த மிஸ்ட் கால் நம்பரை தன் கை பேசியில் ஸாகித்யா என்று உடனே பதிவு செய்து கொண்டான்…
இவை அனைத்தும் அத்வைத்தின் முன்நிலையில் தான் நடந்தன.. பின் நேத்ரன் வீட்டு ஓட்டுனரோடு ஸாகித்யா அவள் ஹாஸ்ட்டல் நோக்கி சென்றாள்…
ஸாகித்யா இங்கு வரும் போது அத்வைத்தோடு தான் வந்தாள். அதுவும் இரு சக்கர வாகனத்தில் தான்.. அது அவளுக்கு புதியது கிடையாது..
இருவருக்கும் எட்டு வயது வித்தியாசம்.. சின்ன வயதில் இருந்து அவனோடு இரு சக்கர வாகனத்தில் பயணித்து கொண்டு இருக்கிறாள்…
முதலில் தந்தை இல்லாது வளர்ந்த பெண்.. முதல் முறை இரு சக்கர வண்டியில் எனும் போது, மகிழ்ச்சியில் பயணித்து கொண்டு இருக்கிறாள்.
.
பின் அத்தானை தானே திருமணம் செய்ய போகிறோம் என்று யார் என்ன சொல்ல கூடும் என்ற பயம் இல்லாது பயணித்து கொண்டு இருந்தாள்..
.
ஆம் இனி இருந்தால் என்று சொல்ல வேண்டுமோ.. ஆம் இனி அவன் முகத்தை பார்க்க கூட பிடிக்காது போனவளுக்கு. அவனோடு வாகனத்தில் பயணிப்பாளா..?
அத்வைத்தின் நிலை இனி என்ன..? பார்க்கலாம்..