Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம், "கதையருவி" தளத்திற்கு தங்களை வரவேற்கிறோம்!

    இத்தளத்தில் எழுத எங்களை "vskathaiaruvi@gmail.com" என்ற மின்னஞ்சலில் தொடர்புக் கொள்ளவும். நன்றி!

Negizhundhu Nenjam...22...1

  • Thread Author
அத்தியாயம்…22…1



“என்ன குழந்தை பாசம் ரொம்ப ஒவரா வழியுது..?” என்று இளக்காரமாக அத்வைத் மந்ராவிடம் கேட்டான்…



அந்த பேச்சுக்கு மந்ராவோடு, ஸாகித்யாவுக்கு தான் கோபம் அதிகமாக வந்தது.. அதிலும் உடல் நிலை சரியில்லாத குழந்தையை என்ன செய்யிறாங்க என்று.. அதை கேட்டும் விட்டாள்…



“ உடம்பு சரியில்லாத குழந்தையை வைத்து என்ன விளையாட்டு…? ” என்று கோபத்துடன் அத்வைத்தை பார்த்து கத்தினாள்..



“இப்போது அத்வைத்தின் பார்வை ஸாகித்யாவிடம் வந்தது..



“ அப்போ உன்னை வைத்து விளையாடாவா..? என்று கேட்டுக் கொண்டே அவள் கன்னத்தை தடவியவனின் முகத்தை அருவெருத்து பார்த்த ஸாகித்யா..



“ மேல கை வைக்கிற வேலையை வெச்சிக்காதே.. உன் விளையாட்டு வேறு எங்காவது வெச்சிக்கோ..” என்று சொல்லிக் கொண்டெ மந்ராவையும் ஒரு பார்வை பார்த்தாள் ஸாகித்யா…



அவளின் பார்வையை புரிந்துக் கொண்ட அத்வைத்.. ஒரு கேலி கலந்த சிரிப்போடு…



“ அவள் கூட விளையாடி போர் அடித்து விட்டது டா.. என் அத்தை பெத்த ரத்தினமே…” என்று ஸாகித்யாவின் கன்னத்தை திரும்பவும் லேசாக வருடி விட்டவனை ஸாகித்யா தீ பார்வை பார்த்தாள்..



“ பாருடா என் அத்தை மகளுக்கு வரும் கோபத்தை..” என்ற அத்வைத்தின் இந்த பேச்சு இந்த பார்வை அனைத்தும் ஸாகித்யாவுக்கு புதியது…



இவன் இப்படி தானா..? எப்படி எனக்கு இவனை பற்றி தெரியாது போயிற்று… என்று நினைத்தவளின் எண்ணம் அத்வைத்துக்கு புரிந்தது போல்..



அவளை கட்டி வைத்திருந்த இருக்கையின்

முன் மன்டியிட்டு அமர்ந்தவன்..





“ நான் உன்னை இதுக்கு முன் உன்னிடம் தப்பா.. இது போல் எல்லாம் பேசி இருக்கேன்னா.. பேசி என்ன நான் அப்படி

பார்த்தாவது இருக்கேன்னா…?” என்று அவன் கேட்ட கேள்விக்கு அவனே பதிலுமாக..



“ இல்லை தானே… இல்லை தானே சொல்… நான் நிஜமா உன்னை கல்யாணம் செய்து நல்ல முறையில் குடும்பம் நடத்தி…



நானும் சந்தோஷமா இருந்து… உன்னையும் சந்தோஷமா வைத்து கொள்ள தான் நான் நினைத்தேன்..” என்று இது வரை சாதரணமாக பேசிக் கொண்டு இருந்த அத்வைத்..







பின் ஏதோ நினைத்துக் கொண்டவனாக.. அவன் முகமும் குரலும் இரண்டும் ஒரு சேர மாறி… “ எல்லாம் எல்லாம் இதோ இதோ இவளாள் தான்… இவளாள் தான்..” என்று சொன்னவன்..





மந்ராவின் அருகில் சென்று அவள் தலையிலேயே நங்கு நங்கு என்று குட்டிக் கொண்டே இருந்தான்..



மந்ரா.. “ ஏய் உனக்கு பைத்தியம் ஏதாவது பிடித்துக் கொண்டதா.. விடுடா விடுடா..” என்று கத்திக் கொண்டே… அவன் கை பற்றி தடுத்து நிறுத்துவதும்…



அவனை விட்டு பின் நோக்கி நகர்வதுமாக இருந்தவளை இழுத்து பிடித்து அவளின் தலையில் கொட்டுவதை விடாது கொட்டி கொண்டு இருந்தான்..





ஒரு நிலைக்கு மேல் மந்ராவால் அவனின் அடியை கூட தடுத்து நிறுத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டதும் அல்லாது, அவளுக்கு மயக்கம் வருவது போல் ஆனது..



அவளின் நிலையை பார்த்து ஸாகித்யா கூட பதறியவளாக..





“ ஏய் ஏய் என்ன செய்யிற அவங்களை விடு… இந்த நிலையில் இருக்கிறவங்களை அடிக்கிற… நீ என்ன பைத்தியமா..?” என்று மந்ரா சொன்ன பைத்தியத்தை ஸாகித்யாவும் சொல்ல..



இப்போது மந்ராவை அடிப்பதை விட்டவன்..



“ ஆமாம் ஆமாம் பைத்தியம் தான்.. உன் மேல் நான் பைத்தியம் தான்..” என்று ஒரு சைக்கோ போல் சொன்னதையே திரும்ப திரும்ப சொன்னவனின் பேச்சில் ஸாகித்யா பயந்து போய் அவனை பார்த்தாள்..





காரில் ஏறியதும் அத்வைத்தால் தாங்கள் கடத்தப்பட்டு இருக்கிறோம் என்று தெரிந்து.. பின் இங்கு கட்டி வைத்த போது இல்லாத பயம் இப்போது ஸாகித்யாவுக்கு வந்தது..



இவர்களின் இந்த செயலில் அவளுக்கு கோபம் மட்டுமே இருந்தது.. அதுவும் உடல் நிலை சரியில்லாத குழந்தையை பள்ளியில் இருந்து மருத்துவமனை செல்ல தான் அவள் காரை புக் செய்தது..



இது என்ன பைத்தியக்காரத்தனம் என்று நினைத்தவள்.. அத்வைத் பைத்தியம் போல் பேசியதிலும், நடந்து கொண்டதையும், பார்த்து அவள் மனம் முழுவதும் பயம் பற்றிக் கொண்டது…



அதுவும் தான் மட்டும் இல்லாது குழந்தையும் இருக்கிறாள் என்பதில் அவளின் பயம் அதிகம் கூடியது.. கெட்டதிலும் ஒரு நல்லது என்பது போல் குழந்தைக்கு மயக்க மருத்தை கொடுத்து விட்டார்கள்..



இல்லை என்றால் இது எல்லாம் பார்த்தால், குழந்தை பயந்து போய் விடுவாள்.. அத்வைத்தின் பேச்சையும் செயலையும் பார்த்து..



இது கோபம் படும் நேரம் கிடையாது என்றறு நினைத்து..



“ தோ பாருங்க நீங்க செய்யிறது நல்லா இல்லை.. குழந்தைக்கு ஏதாவது ஆகிட போகுது.. முதல்ல அவளின் கட்டை அவிழுங்க.. என்னையும் அவிழ்த்து விடுங்க …

அவளுக்கு உடம்பு சரியில்லை ஹாஸ்பிட்டலுக்கு கூட்டிட்டு போகனும்.. எது என்றாலும் அப்புறம் பேசலாம்..” என்று மிக தன்மையாக காரியம் ஆக ஸாகித்யா அத்வைத்திடம் பேசினாள்…





அவள் பேச பேச இது வரை கத்திக் கொண்டு இருந்த அத்வைத்.. அவள் பேசி முடிக்கும் வரை அமைதியாக கேட்டுக் கொண்டு இருந்தவன்..



பின்.. “ என்ன சொன்ன..? என்ன சொன்ன..? திரும்பவும் சொல்லும்மா.. உன் அத்தான்.. அதாவது நீ இங்கு வந்ததில் இருந்து, அந்த முறை வைத்து கூப்பிடாத உன் அத்தானின் காது குளிர இன்னும் பேசுடா என் செல்லம்ம்ம்ம்.



யப்பா என் செல்லத்துக்கு இப்படி எல்லாம் பேச வரும் என்று எனக்கு இப்போ தான் தெரியுது பாறேன்..” என்று ஆச்சரியமாக சொன்னவன்..



“ ம் எல்லாம் அவன் கத்து கொடுத்த பாடமா..?” என்று முதல் பேச்சில் கிண்டல் தோணியில் பேசியவன்.. இந்த பேச்சில், கோபம் என்பதை விட, ஒரு வித ஆக்ரோஷம்.. வெறி என்று சொன்னால் சரியாக இருக்குமோ…



ஆனால் அவன் பேசும் விதம் சரியில்லை.. சரியாக சொல்வது என்றால் அவனே சரியில்லை என்று சொன்னால் சரியாக இருக்குமோ…



பின் முகத்தை ஒரு விதமாக விகாரமாக வைத்து கொண்டு..



“ அவன் இது மட்டும் தான் சொல்லிக் கொடுத்தானா..? இல்லை எல்லாத்தையும் சொல்லி கொடுத்து விட்டானா..” என்ற அவன் பேச்சில் முகத்தை சுளித்துக் கொண்டே திருப்பிக் கொண்டவளின் தாடையை தன் பக்கம் திருப்பி தன்னை பார்க்கும் மாறு வைத்தவனின் கை அழுத்தத்தில் அவள் முகம் வலியை பிரதிபலித்தது..



ஆனால் அதை எல்லாம் கவனிக்கும் நிலையில் இல்லை.. அதை மட்டுமா வேறு எதையும் கவனிக்கும்ம் நிலையில் அவன் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.



“பரவாயில்லை.. அவன் சொல்லி கொடுத்தாலும் எனக்கு பரவாயில்லை… நான் சொல்லி கொடுப்பதில் அவன் சொல்லி கொடுத்ததை எல்லாம்ம்ம்ம்ம்ம் மறக்கும் படி செய்யிறேன் பறேன்..” என்று ஒரு விதமாக சிரித்துக் கொண்டே தன் முகத்தை ஸாகித்யாவின் முகத்தில் அருகில் கொண்டு சென்றான்…



அத்வைத் முகம் தன் முகத்துக்கு அருகில் வந்தும், ஸாகித்யாவால் விலகவும் முடியவில்லை.. தன் முகத்தை வேறு பக்கமாக திருப்பவும் முடியவில்லை..





ஏன் என்றால் அவன் ஸாகித்யாவின் தாடையை பற்றி கொண்டது அவ்வளவு அழுத்தமாக இருந்தது..



“ அவனை போல் நான் இல்லட தங்கம்.. அவன் பார் நான் அவன் பொண்டட்டிய தொட்டு விட்டேன் என்று டைவஸ் வாங்கிட்டான்.. ஆனால் நான் அவன் தொட்ட உன்னை தொடுவது என்ன.. உன்னை கல்யாணமும் செய்துட்டு காலம் முழுவதும் உன்னை வைத்திருப்பேன்..” என்ற அவன் பேச்சில் ஸாகித்யா அதிர்ந்து போனவளாக அவன் முகத்தை பார்த்தாள்…



“ ஏன்டா செல்லம் பயப்படுற.. நான் உன் அத்தான்டா.. அதே அத்தான் தான்டா நான்… என்னை பார்த்து ஏன் பயப்படுற பயப்பட கூடாது… பயப்பட கூடாது என்ன..” என்று சொன்னவன்..





அவள் கன்னத்தை இரண்டும் பற்றிக் கொண்டவன்.. “ நீ ஓட்டலில் அவன் பக்கத்தில் இருக்கும் போது கன்னம் சிவந்து குனிந்தியேடா.. . அத்தானை பார்த்து வெட்கப்படு பார்க்கலாம்…” என்று அவன் ஒவ்வொரு பேச்சுக்கும் அவன் கை விரல் ஸாகித்யாவின் கன்னத்தில் அழுத்தம் கூட்ட..



ஸாகித்யாவின் கன்னம் அத்வைத் சொன்னது போலவே உண்மையாக சிவந்து போய் விட்டது தான்…



அதை பார்த்த அத்வைத்.. “ என் தங்கமடி நீ.. அத்தானை பார்த்து என்னம்மா சிவந்து போற.. நீ..’ என்று அவனுக்கு அவனே பேசிக் கொண்டவன்..





பக்கத்தில் இவனின் பேச்சை பயந்து போய் கேட்டுக் கொண்டு இருந்த மந்ராவிடம்..



“ நீ சொல் மந்தம்.. என் தங்கத்தின் கன்னம் சிவப்பில் என்னமா ஜொலிக்குதுல..” என்று அவன் பேச பேச இரு பெண்களும் பயந்து தான் போயினர்..





மந்ரா ஏதோ நினைத்து அவள் தான் அத்வைத்துக்கு திட்டம் தீட்டி கொடுத்தாள்.. தொட்டு விடு.. அவன் விட்டு விடுவான் என்று..





ஆனால் அப்போது இருவருக்கும் தெரியவில்லை.. தொடுவது என்ன தொட நினைத்ததே எவ்வளவு பெரிய தவறு என்பதை



அதைவைத் பேச்சி சாதரணமானவர்கள் பேசுவது போல் இல்லாது இருந்தது.. பேசினான் பேசினான் பேசிக் கொண்டே இருந்தான் என்பது போல் தான் அவன் பேச்சு இருந்தது..







கடைசியாக அவன் சொன்ன… “ சரி இனி பேச்சு இல்லை..” என்று சொல்லிக் கொண்டே அவனின் கை ஸாகித்யாவின் உடலில் பட்ட வாறே அவளை கட்டி வைத்த கயிற்றை விடுவித்தவன்..



அங்கு இருந்த கட்டிலையும் ஸாகித்யாவையும் ஒரு பார்வை பார்த்தவன் பின் மந்ராவிடம்..



“ உனக்கும் எனக்கும் ஒளிவு மறைவு இல்லை தான்.. நான் இல்லை என்று சொல்லவில்லை.. ஆனால் உன் முன்னே..





அதுவும் என் தங்கம் உன் போல் எல்லாம் இல்ல..அவள் கொஞ்சம் கூச்ச சுபாவம் இருக்கு.. அதனால கண்ணை மூடிக்கிறியா..” என்று அவன் பேச பேச ஸாகித்யா அதிர்ந்து போய் பின் நகர்ந்தவள் மந்ரா உதவி செய்வாளா என்பது போல் அவள் முகத்தை பார்த்தாள்..





மந்ரா வகுத்து கொடுத்த திட்டம் தான் இது.. ஆனால் இவன் இருக்கும் நிலைக்கு இது வேண்டாம் என்று…



“ அத்வைத் வேண்டாம் விடு.. “ என்று சொன்னவளை பார்த்து..







“ என்ன நீ தானே சொன்ன இவளை தொட்டா அவன் விட்டு விடுவான் என்று.. இப்போ வேண்டாம் என்று சொல்ற..





ஓ மந்தத்துக்கு பொறாமை.. இருக்கும் இருக்கும் தான்..” என்று அவளை பார்த்து பேசியவன்..





ஸாகித்யாவின் பார்த்து.. “ பார்த்தியாடா தங்கம் உன் அத்தான் மகிமையை… புருஷனை விட்டு என்னிடம் எதுக்கு வந்தா என்று உனக்கு புரியுதா இப்போ ..” என்று சொன்னவன்..





“ பின் நீயும் நாளை இவள் போல் தான் இந்த அத்தானை விட மாட்ட… அப்படி இந்த தாலி அப்படி இப்படி என்று நீ நினைத்தாலுமே.. உன் புருஷன்..” என்று சொன்னவன்,..





தப்பு தப்பு அவசரத்துக்கு தாலி கட்டியவன் எல்லாம்

புருஷனுக்கு சேர்த்தி கிடையாது… நான் உன்னை தொட்டுடேனா நீ கெட்டு போனவள் என்று அவனே உன்னை விட்டு விடுவான்..” என்ற பேச்சுக்கு..



“ நான் அப்படி என்று நீயா எப்படிடா சொல்வ..” என்று கேட்டுக் கொண்டே அந்த இடத்திற்க்கு வந்தான் நேத்ரன்…
 
Top