அத்தியாயம்..23
நேத்ரன் நான் வெளிநாடு போக ஸாகித்யா தான் காரணம் என்று அவன் சொல்லி கேட்டதும், ஸாகித்யா முதலில் அதிர்ச்சியாகி நின்று விட்டாள் தான்…
பின் தான் தூக்கி வைத்திருந்த குழந்தை ஸாகித்யாவை பார்த்ததும், நேத்ரன் பேபியை சொன்னனா..? முதல் நாள் அவனை பார்த்த அன்று கூட தன் குழந்தையை அழைக்கும் போது பெயர் குழப்பத்தில், நேத்ரனின் அந்த அழைப்பில் நான் அதிர்ந்து தானே விட்டேன்…
அது போல் தான் இருக்கும் என்று நினைத்து அவள் தன் அதிர்ச்சியில் இருந்து வெளி வருவதற்க்குள் அவளை தெளிய விடாது போல்..
“ நண்பனுக்கு வர போகும் மனைவியை நான் தப்பா பார்க்க கூடாது என்று தான் நான் அந்த வெளிநாட்டு பயணத்திற்க்கே தயாரானேன்…
பார்க்காது இருந்தால், அந்த ஈர்ப்பு.. ஈர்ப்பு இல்லலே.. அந்த வயதை எல்லாம் கடந்த பின்னும் என்ன..? என்று நான் என்ன அவ்வளவு கேவலமானவனா..?உன் கிட்ட கூட சொல்லி இருக்கேன்..”
அடிப்பட்டதில் மூக்கை பிடித்து கொண்டு அதிர்ச்சியுடன் தன்னை பார்த்து கொண்டு இருந்த அத்வைத்திடம் … “ எதுக்கு நீ எங்கு போனாலும் ஸாகித்யாவை அழைத்து கொண்டு வர என்று.. நான் ஒரு சில பிசினஸ் பார்ட்டியை தவிர்க்க முடியாது வரும் போது எல்லாம் நீ அவளை அழைத்து வருவதை பார்த்து கேட்டேன்…
இப்படி எதிரில் வந்து அழகா நிற்பதால் தான் என் மனது தடுமாறுகிறது என்று நினைத்து…
ஆனால் நீ.. அவள் இந்த சொஸைட்டிக்கு ஏற்ப பழக வேண்டும் என்று காரணம் சொன்ன… அப்போ தான் நான் சைன் செய்த அந்த பிரஜெக்ட்டுக்கு ஆஸ்திரேலியா போகும் என்ற நிலை வரும் போது நானே போய் விட்டேன்… நீண்ட நாட்கள் பார்க்காது இருந்தால், பின் பார்த்தால் என் பார்வை சரியாக ஆகி விடும்..
அதோடு மந்ரா குழந்தையோடு என்றும் ஒரு வெளி நாட்டு ட்ரிப் ஏற்பாடும் செய்தேன்.. காரணம் என் கவனத்தை மனைவி குடும்பம் என்று செலுத்த வேண்டி..
ஆனால் இங்கு நான் வந்த போது எல்லாம் தலை கீழாக மாறி போய் விட்டது.. நண்பன் கல்யாணம் செய்யும் பெண்ணை அப்படி பார்ப்பதே தப்பு என்று நான் நினைத்து போக..
ஆனால் நீயோ இங்கு நண்பனின் மனைவியிடம் குடும்பம் நடத்தி குழந்தையையே கொடுத்து இருக்க…
இதே நான் ஸாகித்யாவை அப்படி பார்க்காது இருந்து இருந்தால், மந்ராவை நான் விரும்பி இருந்து இருந்தால், நீங்க நடந்து கொண்டதற்க்கு நீங்க இப்போ உயிரோட விட்டு வைத்து இருந்து இருப்பேனா…?” என்று நேத்ரன் பேச பேச அங்கு இருந்த மூன்று பேரும் அதிர்ந்து தான் நேத்ரனை பார்த்திருந்தனர்..
அத்வைத் ஒரு படி மேல் போய் … “ நீ தப்பு செய்துட்டு ரொம்ப ஒழுங்கு போல.. உன் பெண்டாட்டிக்கு டைவஸ் கொடுத்ததோடு என் கல்யாணத்தையும் நிறுத்திட்டு, அதையே வைத்து உன் காரியத்தையும் சாதித்துக் கொண்டுட்டலே..” என்று கேட்டவன்..
வாசலில் குழந்தையை தூக்கி வைத்து கொண்டு இருந்த ஸாகித்யாவை பார்த்து..
“ நான் ஒழுக்க கெட்டவன் என்று சொன்னியே பார்த்தியா.. இவன் பொஷிய… “ என்று அத்வைத் பேச்சில் நேத்ரனின் பார்வையும் வாசலை நோக்கி சென்றது..
அங்கு அதிர்வோடு தன்னை பார்த்து கொண்டு இருந்த ஸாகித்யாவை பார்த்தவன் வாய் திறந்து ஒன்றும் பேசவில்லை .. ஆனால் தன் பார்வையை அவளை விட்டு ஒரு துளியும் விலக வில்லை…
அத்வைத் ஸாகித்யா நேத்ரன் பேசியது கேட்டதில் கோபப்படுவாள்.. அவனிடம் கத்துவாள்.. என்று ஒரு வித எதிர் பார்ப்போடு அவளை பார்த்துக் கொண்டு இருக்க.. அவளோ..
தன்னையே பார்த்து கொண்டு இருந்த நேத்ரனை பார்த்தவள்.. பின் தூங்கும் குழந்தையை காட்டி..
“ ரொம்ப பயந்து போய் இருக்கா.. காய்ச்சலும் அதிகம் ஆனது போல் இருக்கு.. சீக்கிரம் ஆஸ்ப்பிட்டலுக்கு கூட்டிட்டு போகனும்..” என்று எதுவும் நடவாது போல் பேசியவளை மந்ராவும் சரி.. அத்வைத்தும் அதிர்ச்சியோடு பார்த்தான்..
நேத்ரனோ தன் பார்வையை அவளை விட்டு இன்னும் விலகாது அவளையே பார்த்துக் கொண்டு இருந்தானே ஒழிய… அவளிடம் பேசவும் இல்லை…
அவள் சொன்ன குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல வேண்டும் என்ற வார்த்தை அவன் காதில் விழுந்ததா என்று தெரியாது…
அந்த இடத்தை விட்டு அகலாது நின்று கொண்டு இருந்தான்.. என்ன ஒன்று அவன் பார்வையில் ஆராய்ச்சியும் சேர்ந்து கொண்டது அவ்வளவே..
மந்ராவுக்கு நேத்ரன் பேச்சில்… மனைவியாக தன் மீது வராத ஆர்வம் எப்படி ஸாகித்யாவின் மீது வந்தது..
அதுவும் அவளை விட்டு விலகினால், தன் நினைவில் இருந்து விலகுவாள் என்று நினைத்து வெளிநாட்டுக்கு போகும் அளவுக்கு ஸாகித்யா அவனிடம் தாக்கத்தை ஏற்படுத்தினாளா…?
ஏப்போதும் தொழில் என்று சுற்றிக் கொண்டு இருப்பவன்.. அவன் இதை தவிர வேறு எதுவும் யோசிக்க மாட்டானா..? என்று நினைத்தவளுக்கு…
மனைவியாக தான் ஒருத்தி இருக்கும் போதே, நேத்ரன் அவளை பற்றி யோசித்து இருக்கிறான்… என்று நினைத்த அதே சமயம்.. அது தவறு என்று அதை தவிர்க்கவும் நினைத்து இருக்கிறான் என்று கூடவே நினைத்தாள்..
நேத்ரன் அத்வைத்திடம் சொன்ன… “ ஏன் ஸாகித்யாவை எங்கு என்றாலும் அழைத்து கொண்டு வர்ற..?” என்று தன்னை திடப்படுத்தி கொள்ள கேட்டவனுக்கு..
அத்வைத் சொன்ன.. “ அவள் வெளி உலகத்தை தெரிந்து கொள்ள வேண்டும்..” என்ற அந்த பதில் உண்மை கிடையாது..
முன் எல்லாம் மந்ராவும் சரி அத்வைத்தும் சரி.. பேசும் போதும் பழகும் போதும் யாராவது தவறாக நினைப்பார்களா..? என்று நினைத்து பார்த்தது கிடையாது.. காரணம் அப்போது அவர்கள் மனதில் கள்ளம் கிடையாது..
ஆனால் அவர்கள் மனதில் கள்ளம் புகுந்த பின்… அவர்களின் தவறை மறைத்து பழக.. அவர்களுக்கு ஒரு கூரை தேவைப்பட்டது..
அந்த கூரையாக தான் அத்வைத்தும், மந்ராவும், ஸாகித்யாவை பயன்ப்படுத்தி கொண்டனர்… ஆனால் அந்த கூரை நேத்ரனின் மனதுக்கு நிழலாக கூடும் என்று நினைத்து கூட பார்க்கவில்லை..
நேத்ரனுக்கு ஸாகித்யாவை முதலில் பார்க்கும் போது எல்லாம் அவன் மனது சலனப்பட வில்லை.. ஆனால் அவளை ஒவ்வொரு முறையும் பார்க்கும் போது, அவனின் பார்வை தன்னால் அவள் மீது விழுந்தது…
எந்த அறியாமையை பார்த்து இது வாழ்க்கையை சலிக்க வைக்கும், என்று நினைத்தானோ.. அந்த அறியாமை தான் அவனை அவளை பார்க்க வைத்தது… என்று தெரியாது தான் அத்வைத்தும், மந்ராவும் அதற்க்கு தோதாக வழி செய்தும் கொடுத்து விட்டனர்…
என்ன ஒன்று நேத்ரன் தான் நினைப்பது தவறு என்று நினைத்து தன்னை திருத்தி கொள்ள பார்த்தான்… ஆனால் அத்வைத்தும், மந்ராவும் தவறை தவறு இல்லாது செய்தால், அது தவறு கிடையாது என்று நினைத்து விட்டனர்…
நேத்ரன் உண்மை சொன்னதும் ஸாகித்யா நேத்ரனின் சட்டையை பிடிப்பாள் என்று அத்வைத் காத்து இருக்க ஸாகித்யாவின் இந்த பேச்சில், அவனுக்கு இன்னும் இன்னும் தான் வெறி அதிகம் ஆனது..
அதில் ஸாகித்யா தான் சொல்லியும் அந்த இடத்தை விட்டு அகலாது நின்று கொண்டு இருந்தவன் பக்கம் வர பார்த்த ஸாகித்யாவை தன் பக்கம் இழுத்ததில் ஸாகித்யா குழந்தையோடு கீழே விழுந்திருந்தாள்..
நேத்ரனின் பார்வை ஸாகித்யாவின் வசம் மட்டும் இருந்து இருந்தாலும், அத்வைத் கண் இமைக்கும் நொடியில் ஸாகித்யாவை இழுத்ததால், நேத்ரன் தடுக்கும் முன்னவே அத்வைத் அவளை கீழே தள்ளி விட்டு இருந்தான்..
அதோடு விடாது அங்கு இருந்த பூஜாடியை கையில் எடுத்தவன் அவள் தலையில் போட எடுக்க.. குழந்தை பயத்தில் வீறிட்டு அழுதது..
ஆனால் இம்முறை அவன் கையை நேத்ரன் பற்றிக் கொண்டவன்.. அவனை தன் பக்கம் இழுத்து அடிக்க.. அடிக்க அடிக்க வாங்கி கொண்டு இருந்தவன். அவனுக்கு வலிக்கவே இல்லை என்ற வகையாக தான் அவன் பேச்சுக்கள் இருந்தன…
“ உனக்கு மட்டும் அவள் மேல கண் இல்லேடா..” என்று நேத்ரனை சொன்னவன்..
ஸாகித்யாவை.. “ உனக்கும் தானே அவன் மேல கண்ணா இருந்த… அது தானே கிடைத்தது சாக்கு என்று நினைத்து இவனை கட்டி கிட்ட..” என்று அதோடு விடாது…
அசிங்கமாக… “ நான் கட்டிக்க இருந்தவன் உன்னை ஒன்னும் செய்யல என்று என்னை கைய்யாலகாதவன் என்று நினச்சிட்டியா..? இல்ல என்னோட இவன் உன்னை அப்போ..அப்போவே நல்லாலாலா கவனிச்சிட்டானா…
தெரிந்து இருந்தால் நானே உன்னை கவனித்து இருப்பேனே.. நீ ரொம்ப நல்ல பெண் என்று நினைத்து தானே நான் உன்னை விட்டு வைத்து இருந்தேன்..” என்று தன் மனதில் இருந்த அழுக்கை எல்லாம் அவன் கொட்டினான்…
அத்வைத் பேச பேச முதலில் கோபத்தோடு குழந்தையோடு எழுந்த நின்ற ஸாகித்யாவின் முகம் போக போக… அவனின் பேச்சு எல்லைகள் மீறியதில் அருவெருத்து பின் அவன் கடைசியாக பேசிய பேச்சில் அவள் கண்கள் இரண்டும் குளம் கட்டி..
கண்ணீர் இப்போவோ அப்போவோ வரும் நிலைக்கு இருந்ததில், நேத்ரன் அத்வைத்தை அடிப்பதை விட்டு விட்டு ஸாகித்யாவிடம் சென்றான்..
அந்த நேரத்தை பயன் படுத்திக் கொண்ட அத்வைத் கீழே விழுந்து இருந்த பூ ஜாடியை, மீண்டும் கையில் எடுத்து கொண்டு தான் என்ன செய்கிறோம் என்று தன் நிலை இல்லாத காரணத்தால், அந்த ஜாடியை இவர் மீது தான் விழ வேண்டும் என்று ஒரு நிலை வைய்யாது அவன் பார்வை செயல் அனைத்திலும் தன்னை முற்றிலும் மறந்து போனவனாக..
பூ ஜாடியை ஒரு குற்றம் போக்காக எரிய பார்த்தவனின் கையை மந்ரா பற்றிக் கொண்டவள்…
“ குழந்தையின் மீது விழ போகுது அத்வைத்.. வேண்டாம்… அதை கீழே போடு… இன்னும் இன்னும் பிரச்சனையாக போகுது..”
அத்வைத் தன் நிலையில் இல்லை என்பதை அறிந்துக் கொண்டவளாக அவனை தடுக்க முயன்றாள்..
ஆனால் அவனோ அவளையும் கீழே தள்ளி விட்டு.. “ உனக்கு என் குழந்தை வயிற்றில் இருக்கு …அதை பெத்துட்டு வளர்க்க ஆசை இல்லை…
ஆனால் அவன் குழந்தை மீது ஆசை… அதுவும் அவன் உன்னோட ஆசை இல்லாது இருக்கும் போதே, அவனுக்கு பெத்த குழந்தை மீது தான் ஆசை இல்ல.. அவன் மட்டும் உன்னோடு தினம் தினம் இருந்து இருந்தால், நீ எங்கு இருந்து என்னை தேடி வந்து இருக்க போற…
காலேஜ் படிக்கும் போதே உனக்கு அவன் தானே ஒஸ்த்தி.. ஒருத்தன் உன்னை பார்க்கிறான் என்று கூட நீ உணராது தானே.. நேத்ரன் தான் பெஸ்ட் என்று சொல்லிட்டு இருப்ப.. “ என்று சொல்லிக் கொண்டு வந்தவன் பின் ஏதோ நினைத்துக் கொண்டவனாக..
“ ஆனா பார் உனக்கு நான் படுக்கையில் ஆவது நான் பெஸ்ட் என்று நினைத்த ஆனால் இவள் இவள்..” என்று ஸாகித்யாவின் மீது அடிக்க பார்த்தவனின் கையை நேத்ரன் மீண்டும் பற்றிக் கொள்ள பார்த்தான் தான்..
ஆம் அவனால் முயல மட்டும் தான் முயன்றது.. வெறி பிடித்தவனுக்கு எங்கு இருந்து தான் வலு வருமோ… அத்வைத்தை நேத்ரனால் ஒரு கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை…
நேத்ரன் உணர்ந்தான்.. அவன் அவனாக இல்லை என்று.. இல்லை என்றால் அவன் செய்த செயல்களுக்கும், அவன் ஸாகித்யாவை பேசிய பேச்சுக்கும் அவனை அடித்த அடியை அதோடு விட்டு இருக்க மாட்டான்…
அவன் தன் நிலை பிழண்டு இருப்பதால், அவன் பேசும் போதே தனக்கு தெரிந்த காவல் அதிகாரிக்கு மெசஜ் அனுப்பி விட்டான்.. கூடவே அவனின் நிலையையும்…
அதனால் தான் நேத்ரன் அத்வைத்திடம் தன் முழு பலத்தையும் காட்டாது, அவனிடம் இருந்து அந்த பூ ஜாடியை மட்டுமே கை பற்ற முயன்றுக் கொண்டு இருந்தான்..
நிலமை கை மீறி போகும் முன் அந்த இடத்திற்க்கு நேத்ரன் அழைத்த காவல் அதிகாரி வந்து விட்டார்… நேத்ரன் முதலிலேயே அத்வைத்தின் நிலையை சொல்லி விட்டதால், அதற்க்கு தகுந்த படி மருத்துவரையும் அழைத்த வந்து இருந்த படியால், காவல் அதிகாரி வந்த சிறிது நேரத்திற்க்குள் அந்த மருத்துவரும் வந்து விட..
அவனுக்கு மயக்க மருந்தை செலுத்தியே அந்த இடத்தில் இருந்து அவனை அழைத்து செல்லும் படி ஆகி விட்டது..
ஸாகித்யாவுக்கு இங்கு நடந்த நிகழ்வு ஒரு அதிர்ச்சி என்றால், மந்ராவுக்கு இன்னொரு வகையில் அதிர்ச்சியாகி விட்டது.. தான் தோன்டிய பள்ளத்தில் தானே விழுந்தது போலான நிலையில் அவள்..
நேத்ரன் அதிர்ச்சியில் இருந்த ஸாகித்தியாவிடம் இருந்து தன் குழந்தையை வாங்கி கொண்டவன்.. அவளின் தோள் பற்றி காரின் அருகில் அழைத்து போனான்.. அப்போது மட்டும் ஸாகித்யாவின் பார்வை நேத்ரன் பக்கம் வந்தது.. ஆனால் அவளின் அந்த அதிர்ச்சி பார்வை மட்டும் அப்படியே இருந்தது..
ஸாகித்யாவிடம் இப்போது.. இந்த இடத்தில் பேச முடியாது.. அதுவும் குழந்தை தங்களையே பயம் கொண்டு பார்த்தவளை பார்த்தவனுக்கு…
இப்போது குழந்தையை கவனிப்பது தான் முக்கியம் என்று அவளை மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை கொடுத்து விட்டு வீட்டுக்கு வந்து சேர்ந்த பின்..
குழந்தைக்கு உணவோடு மருத்துவர் கொடுத்த மருந்தையும் புகட்டி அவளை தூங்க வைத்த அனைத்தும் செய்த பின் நேத்ரன் ஸாகித்யாவை பார்த்து..
“ இப்போ கேள்..” என்று கேட்டான்..
அடுத்த ஒரே அத்தியாயம் தான் கதை நிறைவு பெறுவதற்க்கு…