அத்தியாயம்….24
இது வரை ஒருவர் மாற்றி ஒருவர்… ஆள் ஆளுக்கு பேசிக் கொண்டு இருந்தனர்.. பேசியவர்கள் அனைவருமே ஒரு வகையில் குற்றம் செய்தவர்கள் தான்.. .
இன்று தன்னையும் குழந்தையும் கடத்தப்பட்டதே ஸாகித்யாவுக்கு மிக அதிர்ச்சியான விசயம்.. அதுவும் கடத்தியது அத்வைத்…
அவன் இன்று பேசிய பேச்சை கேட்டதில், அவனோடு எப்படி தான் ஒரே வீட்டில் இருந்தேன்.. அதுவும் ஒரு பெண்ணாக தனக்கு எந்த வித பாதிப்பும் இல்லாது…
அவன் பேசிய பேச்சு அவளை அவ்வாறு யோசிக்க வைத்தது… தன்னை தான் திருமணம் என்ற பேச்சு மட்டும் சிறு வயது முதலே வீட்டில் பேசாது இருந்து இருந்தால்..
தான் கண்டிப்பாக சிறு வயது முதலே பாலியல் தீண்டலுக்கு ஆளாகி இருக்க கூடும் என்ற வகையில் தான் இப்போது அத்வைத்தின் பேச்சிலும், நடவடிக்கையிலும் அவள் உணர்ந்தது..
அதுவும் அவனுக்கும் தனக்குமான ஒன்பது வயது வித்தியாசம்.. அவளை அவ்வாறு நினைக்க வைத்தது..
அதிலும் தன் சுபாவம்.. அதை எப்படி நாம் எதிர்த்து இருந்து இருப்போம்.. அப்படி பார்க்கும் போது இந்த வாழ்க்கை அவளுக்கு வரம் என்று தான் சொல்ல வேண்டும்..
சொல்லியும் இருந்து இருப்பாள்… கடந்த சில நாட்களாக ஸாகித்யாவின் மனம் மெல்ல மெல்ல நேத்ரன் பக்கம் சாய்ந்து கொண்டு தான் இருந்தது.. சாய வைத்து இருந்தான் நேத்ரன் தன் நடவடிக்கையால்..
இன்று அவன் பேச்சை கேட்காது இருந்து இருந்தால், கண்டிப்பாக இன்று தான் பயந்த பயத்திற்க்கு அவனை கட்டி பிடித்து தன் பயத்தை போக்கி இருக்க வேண்டும்,,
ஆனால் அதை இப்போது செய்ய முடியாது செய்து இருந்தது நேத்ரனின் பேச்சு.. அது எப்படி…? பக்கத்தில் மனைவி குழந்தை என்று இருக்கும் போது.. நண்பனின் வருங்கால மனைவி அதை விடு.
வேறு பெண் மீது எப்படி கண் போகும்.. இது தான் அவளின் கேள்வி…
ஆண்களை பற்றிய முழு விவரம் அவளுக்கு தெரியவில்லை… படித்தது அனைத்தும் பெண்கள் மட்டுமே படிக்கும் பள்ளியும், கல்லூரியும்..
சிறு வயதிலேயே தந்தை இறந்து தாய் மாமன் வீட்டுக்கு வந்தவள்.. அதனால் தந்தையின் குணம் அவள் அறிந்து வைத்திருக்க வில்லை.. தாய் மாமன் தன்னை பொறுத்த வரை நல்ல மனிதர் தான்…
தன்னை பொறுத்த வரை என்று தான் சொல்ல வேண்டும்.. ஏன் என்றால் அத்வைத்தையும் இது வரை அப்படி தானே நினைத்து கோண்டு இருந்தான்..
அவனின் நேர்மையான அந்த பிம்பம் தன்னுள் சுக்குள் சுக்குளாக உடையவில்லையா…? அது போல் அவருக்கு வேறு முகம் இருந்து இருக்க கூடுமோ…
இதோ தன் முன் கேள்வி கேட்டு அமந்து இருக்கிறானே..? இவனை நேற்று வரை… நேற்று என்ன நேற்று அவனே அவனை பற்றி சொல்லாத வரை.. நல்ல விதமாக தானே நினைத்து இருந்தேன்…
அவன் குழந்தை மீது காட்டும் அன்பு.. தந்தைக்கு கொடுத்த மரியாதை…தன் மீது காட்டிய காதல்.. ஆம் சிறிது நாளாக அவன் கண்ணில் தன் மீதான காதலை பார்த்தாளே…
அப்போ அது காதல் இல்லையா..? தன்னை திருமணத்திற்க்கு முன் பார்த்ததாக சொன்னானே… அது போலான பார்வையா..? கடவுளே… எனக்கு மனிதர்களை பற்றி தெரிந்து கொள்ள கூடிய அறிவு என்னிடம் இல்லையா…?
இல்லை இவர்கள் எல்லாம் தவறை மற்றவர்கள் தெரிந்து கொள்ளாதப்படி கச்சிதமாக செய்கிறார்களா..? என்று நினைத்து கொண்டு இருந்தாள்..
தன் பேச்சுக்கு எதுவும் பேசாது தன்னையே பார்த்து கொண்டு, ஏதோ நினைவில் இருந்தவளின் மன நிலை என்ன மாதிரியாக இருக்கும் என்று நேத்ரனால் நன்கு உணர முடிகிறது தான்..
அதுவும் அவள் முகம் காட்டிய வேதனையில் நேத்ரனின் முகமும் கசங்கி தான் போனது.. ஆனால் என்ன செய்ய…? அப்போது என் மனது என் வசம் இல்லையே…? என்று நினைத்தவன்.. மெல்ல அவள் கை மீது தன் கை பதித்தான்..
அதில் தன் நினைவில் இருந்து மீண்ட ஸாகித்யா தன் கை மீது இருக்கும் நேத்ரன் கையை பார்த்தாளே தவிர.. கை உதற எல்லாம் இல்லை..
ஸாகித்யாவின் பார்வை தன் கை மீது இருந்து மெல்ல மெல்ல மேல் எழும்பி நேத்ரனின் முகத்தில் வந்து முடிவடைந்தது…
அவனின் முகத்தையே சிறிது நேரம் பார்த்தவள்.. பின்… “ உண்மை எல்லாம் நீங்களே சொல்லி விட்டதால், நீங்க செய்த அந்த தப்பு சரியில் சேர்த்தது போல் ஆகி விடுமா..?” என்ற கேள்வுக்கு நேத்ரன் ஏதோ பேச வந்தான் தான்…
ஆனால் ஸாகித்யா அவனை பேச விடாது..
“இல்ல இல்ல நானே எல்லாம் முதல்ல பேசிடுறேன்… மந்ரா அவங்க தப்பை அவங்களே சொல்லி இருந்தால், அப்போ அவங்க செய்ததும் சரியா…?
இல்ல இது போலான விசயத்துக்கு ஆண் . பெண் என்று ஏதாவது இருக்கா..?” என்று கேட்டவள் பின் அவளே..
“ இருக்கு தான் போல.. கண்டிப்பா இருக்கு” என்று அவளுக்கு அவளே சொல்லிக் கொள்வது போல் சென்னவள்..
“ இதே அதாவது நீங்க சொன்னிங்களே.. அது போல.. எனக்கும் உங்க மீது அப்போதே பார்வை என்று சொல்லி இருந்தால், அதாவது கல்யாணம் செய்துக்க போறவன் பக்கத்தில் இருந்தாலும்,
அது என்னவோ உங்களை தான் என் கண் பார்க்கும் என்று நான் சொல்லி இருந்தால், என்னை பற்றி நீங்க என்ன நினைத்து இருப்பிங்க… “ என்று கேட்டவள்..
“ கண்டிப்பா நல்ல விதமா இருக்காது.. அது எனக்கு நல்லாவே தெரியும்…” என்று சொன்னவள்..
“ உங்களுக்கு மந்ராவுக்கும் என்ன வித்தியாசம்.. உடம்பாலும் அவங்க அத்வைத்தை தேடி இருக்காங்க… ம் முக்கியமான ஒன்று சொல்லி தான் ஆக வேண்டும்…
நீங்க நாம் செய்வது தப்பு என்று தோன்றி இருக்கு… அதற்க்காக என்னம்மா மென கெட்டு இருக்கிங்க… அந்த குற்றவுணர்ச்சி போக்க குடும்பத்தோட டைம் ஸ்பென் பண்ண நல்லா தான் திட்டம் போட்டு இருக்கிங்க..
ஆனா இங்கு நடந்ததில் நாம ரொம்ப நல்லர் என்ற எண்ணம் உங்களுக்கு வந்து விட்டது போல…” என்று அவள் பாட்டுக்கு கட கட என்று சொல்லிக் கொன்டு இருந்தவளின் குரலில் ஒரு மாற்றமும் இல்லாது சீராக தான் இருந்தது..
ஆனால் பின் சொல்ல வருவதும் பின் மென்று முழுங்குவதுமாக தத்தளித்து கொண்டு இருந்தவளின் தோளை பற்றிய நேத்ரன்…
“ ஸாகி விடுடா… தப்பு செய்தவன் நான் நீ ஏன் கஷ்டப்படுற.. உனக்கு ரொம்ப பிடிக்கலேன்னா சொல்லிடு.. நான் உன்னை எந்த விதத்திலும் கட்டாயப்படுத்த மாட்டேன்… டைவஸ் வேண்..” என்று சொல்லிக் கொண்டு வந்தவனின் வாயில் சுளிர் என்று ஒரு அடி விழவும், தன்னை அடித்த ஸாகித்யாவை அதிர்ந்து போய் பார்த்தான்..
“ நீங்க என்ன வருடதிற்க்கு இரண்டு டைவஸ் பண்ணிப்பிங்களா… பின் என்ன செய்வீங்க.. மூனாவதா ஒரு கல்யாணமா..? அப்புறம் நான்…
நானும் பண்ணிக்கிட்டா.. அவன் ஏதாவது செய்துட்டு அவன் ஏதாவது தப்பு செய்தால், அவனை விட்டு விட்டு இன்னொருத்தன். நட்புக்கு ஒரு கல்யாணம் துரோகத்திற்க்கு இன்னொரு கல்யாணம்… அப்படி பண்ணிக்கிட்டா போகலாமா…
ம் சொல்லுங்க செய்துக்கிட்டா….? நான் என்ன சொன்னேன்… இந்த நம் கல்யாணம் ஆகும் போது நான் என்ன சொன்னேன்… இந்த கல்யாணம் தான் என் முழு வாழ்க்கைக்கும் என்று சொன்னேன் தானே…?” என்று இது வரை பொறுமையாக பேசிக் கொண்டு இருந்தவளுக்கு அவன் டைவஸ் என்று சொல்லி விடவும் அவ்வளவு ஆவேசம் அவளுக்கு… பெண்கள் என்ன இவனுக்கு கிள்ளு கீரையா…?”
அதற்க்கு நேத்ரன்… “ இல்ல உன் முகத்தை பார்த்தாலே தெரியுதும்.. என் பேச்சு உன் மனதை எவ்வளவு கஷ்டப்படுத்தி இருக்கு என்று.. அதான்..’ என்று அவன் பேச்சை இழுத்து நிறுத்தவும்…
“ ஒ அதுக்கு டைவஸ் செய்துட்டு அடுத்து என்ன செய்யிறதா உத்தேசம்… ? இன்னொரு பெண்ணா… என்னை டைவஸ் செய்துட்டு பார்க்கனுமா..? இல்லே ஏற்கனவே பெண்ணை பார்த்த பின் தான்… என் கிட்ட டைவஸ் பத்தி பேசுறிங்களா..?” என்று கேட்டவளின் கேள்வியில் நேத்ரன் அதிர்ந்து தான் போய் விட்டான்…
தன் அதிர்ச்சியை முகத்தில் அப்பட்டமாக காட்டிய வாறு.. “ ஸகி என்ன பேசுற..?” என்று அதிர்ந்து போய் கேட்டான்..
“ என்ன ரொம்ப அதிர்ந்து போய் கேட்கிறிங்க…?” என்று அப்போதும் ஸாகித்யா தன் பேசும் விதம் மாறாது தான் கேட்டாள்..
முன் இருந்த அந்த இலகு தன்மை முகத்தில் இல்லை.. பார்த்த உடன் அவள் முகத்தில் மென்மை என்பதை விட.. ஒரு குழந்தை தனம் அவள் முகத்தில் குடி கொண்டு இருக்கும்…
அது முற்றிலும் மறைந்து போனவளாக தான் இப்போதைய அவள் முகம் நேத்ரனின் கண்ணுக்கு தெரிந்தது..
இப்போது நேத்ரனிடம் அந்த ஆளுமை பேச்சு மறைந்து.. குரல் தனிந்தே..
“ என்ன ஸாகி இப்படி பேசுற..?” என்ற கேல்விக்கு ஸாகித்யா..
“என்ன எப்படி பேசுறேன்..?” என்று அவனையே கேள்வி கேட்டாள்.. அதுவும் அவன் பதில் சொல்லும் வகை தெரியாத கேள்வியாக..
மீண்டும் நேத்ரன் தயங்கி தயங்கி…. “ நான் உனக்காக தான் ” என்று அவன் பேச்சை முடிக்கவில்லை..
“ ஒ இப்போ இந்த முடிவு எனக்காக என்றால், அப்போ என்னை பார்த்ததா சொன்னங்களே.. அதுவும் எனக்காக தானா…?
ஏதோ ஒரு படத்தில் கூட டையலாக் வரும்.. உன்னை அவன் கூட எல்லாம் நினைத்து கூட பார்க்க முடியல…
நீ எல்லாம் ராணி மாதிரி வாழ வேண்டிய பெண் என்று.. அது ;போல உங்களுக்கு என்னை பார்த்து தோன்றியதால் என்னை பார்த்திங்களா..? சொல்லுங்க…
ஆ நான் இன்னொன்றும் சொல்லியே ஆகனும்.. அந்த படத்தில் அவன் கடைசியா பைத்தியமா போயிடுவான்..” என்று நேத்ரனை பேச விடாது அவள் பாட்டுக்கு பேசிக் கொண்டு இருந்தவளையே நேத்ரன் திறந்த வாய் மூடாது கேட்டு கொண்டு இருந்தான்..
அவளை பார்த்த நாள் முதல்… அமைதியான பெண்.. அடக்கமான பெண்.. கேட்ட கேள்விக்கு பதில் அவ்வளவே… என்று பார்த்த ஸாகித்யாவை இப்படி மூக்கு விரைத்து கொள்ள .. கோபத்தால் முகம் சிவந்து போய் தொடர்ந்து பேசியதால் மூச்சு வாங்க அதையும் சட்டை செய்யாது பேசிக் கொண்டு இருந்தவளையே பார்த்து கொண்டு இருந்தான்..
பின் கடைசியாக ஸாகித்யா.. “ இது தான் என் வாழ்க்கை நான் டைவஸ் எல்லாம் கொடுக்க மாட்டேன்.. அதுக்கு என்று நீங்க செய்தது சரி என்று ஆகிடாது..
நீங்க செய்த இந்த செயல் எப்போதும் என் மனது விட்டு போகாது… அதனால நாளைய பின்ன ஒரு பெண்ணை நீங்க உத்து பார்த்தா கூட நான் உங்களை கேள்வி கேட்பேன்.. நீங்க அதுக்கு உண்மையா என்னிடம் பதில் சொல்லி தான் ஆக வேண்டும்..
ரொம்ப உத்தமர் போல் என்னையா.. அப்படி கேட்ட என்பது போல் இந்த கேள்வி எல்லாம் என் கிட்ட நீங்க கேட்க கூடாது.. அதே போல் வெளியில் என் மனைவி சந்தேக பிராணி என்பது போல் எல்லாம் என்னை பற்றி செய்தி பரப்ப கூடாது..
உங்களை போல் ஆண்கள் எல்லாம் இப்படி தானே நீங்க ஜொல் வழிய பார்க்க கூடாதா இடம் எல்லாம் உங்க கண் போகும்.. ஆனால் நாங்க அதை கேட்டால், என் பெண்டாட்டி சந்தேகப்படுறா என்று வெளியில் சொல்லி திரிய வேண்டியது..” என்று சொன்னவள்..
“ இப்போ நான் சொன்னது உங்களுக்கு புரியுதா…?” என்ற கேள்விக்கு நேத்ரனின் தலை தன்னால் நாளா பக்கமும் சுழன்றது…
“ நாளைய பின்ன என் பிரண்ஸ் என்று சொல்லி யாரையும் வீட்டுக்கு கூட கூட்டிட்டு வர நான் யோசிக்கனும் போல..”
இரவு உடை மாற்ற வேண்டிய நையிட்டையை கப்போர்டில் கை தேட வாய் தன்னால் முனு முனுக்க… தான் தேடிய நையிட்டி கையில் அகப்பட்டவும் அதை வெடுக்கு என்று எடுத்து கொண்ட ஸாகித்யா…
தன் பேச்சுக்கு வாயில் கை வைத்து அதிர்ந்து போய் பார்த்தவனை .. “ என்ன நீங்க செய்யாததை நான் சொன்னது போல பார்க்கிறிங்க.. நண்பனின் வரு..” என்று தொடர்ந்தவளின் பேச்சை கேட்க முடியாது லைட்டை அணைத்து விட்டு இரவு விளக்கை போட்டவன்.. போர்வையை போர்த்தி கொண்டான்..
சிறிது நேரம் கழித்து தன் மீது ஒரு கை விழவும், குழந்தை தான் போடுகிறாள் என்று நினைத்து அவன் திரும்பி பார்க்க..
அங்கு குழந்தைக்கு பதிலாக தன் குமாரி இருந்தாள்.. குழந்தையை படுக்கைக்கு அந்த பக்கம் போட்டு விட்டு அணையாக தலையணையையும் வைத்திருந்தவள் ஏதோ ஒரு முடிவோடு தான் இருக்கிறாள் என்று நேத்ரனுக்கு தெரிந்தது…
ஆனால் அது என்ன முடிவு..? என்று தெரியாது..அந்த மெல்லிய விடிவிளக்கின் ஒளி மூலம் தன் மனைவியின் முகத்தை ஆராய முற்ப்பட்டான்..
ஆனால் அதற்க்குள் ஸாகித்யா… “ என்ன ? என்ன..? என்ற அந்த என்ன என்று ஸாகித்யா கேட்கும் அந்த டோனே நேத்ரனுக்கு வில்லங்கமாக கேட்டது..
அதனால் பேசாது.. அவள் தன் மீது கை போட்டால், என்று தான் போடாது ஒரு முன் எச்சரிக்கையுடன் தான் நேத்ரன் இருந்தான்..
ஆனால் ஸாகித்யா.. “ ஓ துரைக்கு அடுத்த பெண் மீது தான் அப்படி இப்படி என்று பார்வை போகும் போல..
சொந்த பெண்டாட்டி என்று வந்து விட்டால் இவள் எங்கு போயிட போறா என்ற எண்ணம் வந்துடும் போல…” என்ற அவள் பேச்சில் அந்த அறையை முழு வெளிச்சத்திற்க்கு கொண்டு வந்தவன்..
எழுந்து அமர்ந்து அவளையும் எழுப்பி அமர வைத்தவன்..
“ ஸாகித்யா நான் உன்னை தப்பா.. நீ சொல்வது போல் அசிங்கமா எல்லாம் பார்க்கவில்லை சகி… பிடித்து அதாவது தோனுச்சி நாம் அவசரப்பட்டு கல்யாணம் செய்யாது இருந்து இருந்தால், உன்னை காதலித்து இருக்கலாமே என்று.. அது தான் உன்னை படுக்கைக்கு அப்படி எல்லாம் நினைக்கல ஸாகித்யா..” என்று தெளிவாக நேத்ரன் விளக்கிய பின்னும் ஸாகித்யா..
“ ஓ படுக்கை உங்க நினைப்பு அப்படி வேறு போகுமோ..” என்றவளை மேல பேச விடாது தன் வாய் மூலம் அவளை அடைத்த நேத்ரன்.. தன் கையில் மீண்டும் விளக்கை அணைத்து விட்டு..
தன் குழந்தையையும் ஒரு பார்வை பார்த்த வாறே… ஸாகித்யாவிடம் இன்னொரு குழந்தைக்கு உண்டான வழி வகை செய்து கொண்டு இருந்தான்..
அன்று முதல் அவர்களின் தாம்பத்தியம் இனிதாக தான் சென்று கொண்டு இருக்கிறது.. ஆனால் இடை இடையே நேத்ரனை ஸாகிதா எங்காவது வெளியில் போகும் போது இளம் பெண்களை கடக்கும் வேளயில் ஸாகியின் கண் தன்னால் அவன் மேல் விழும்…
நேத்ரனும் தன் மனைவி இப்போது தன்னை பார்ப்பாள் என்று உணர்ந்தே அவன் ஸாகித்யாவை பார்ப்பான்…
நேத்ரனால் தான் அப்படி இல்லை என்று சொல்லாது அவள் பார்வையில் மனது ரணம் ஆனாலும், தன் மனைவிக்கு தன் மீது நம்பிக்கை வரும் வரை தான் பொறுத்து தான் ஆக வேண்டும் என்று பொறுமை காத்திருந்தான்…
அவன் செய்த தவறின் விளைவு இது… அவன் வாழ்க்கை இனிமையில் சென்றாலும், அவன் மனது சிறிது சிறிதே தடுமாறினாலும்,, அதற்க்கு உண்டான தண்டனை அவனுக்கு வேண்டும் தானே…
அந்த தண்டனையை தான் ஸாகித்யா சிறுக சிறுக நேத்ரனுக்கு கொடுத்து கொண்டு இருந்தாள்..
என்ன ஒன்று அதை தன் மாமனாருக்கு தெரியாது…மகளுக்கு விளங்காது பார்த்து கொண்டவர்களின் வாழ்வு இப்படி சென்றது என்றால்,
இங்கு அத்வைத்துக்கு மனநிலை பிரண்டு விட்டது என்று அவர்கள் வீட்டில் அவனுக்கு சிகிச்சை கொடுத்து அவன் மனநிலையில் ஒர் அளவுக்கு முன்னேற்றம் இருந்தாலும், அதை வெளி உலகம் முழுவதும் நம்பாது போனது தான் வேதனையான விசயம்..
இங்கு மந்ரா மெடிக்கல் மிரக்கிள் என்பது போல் குழந்தை பிறக்கும் போது அவளை வாட்டி எடுத்து விட்டாலும், அவள் நல்ல மாதிரி பிழைத்து எழுந்து அவளுக்கு கடவுள் சரியான தண்டனை கொடுத்து விட்டார் என்று தான் சொல்ல வேண்டும்..
அவளின் தந்தை.. “ மந்ராவுக்கு ஏதாவது ஆனால், அந்த குழந்தை..” என்று தயங்கி தன் மகனை பார்த்த போது..
அவர் தம்பி மனைவி.. “ நாங்க எடுத்து வளர்த்து கொள்கிறோம் மாமா.. பெரியவங்க செய்த தப்புக்கு குழந்தை என்ன செய்யும்..” என்று சொல்லி விட்டாள்..
மந்ராவுன் தந்தை நினைத்தது போல் மந்ரா இறந்து இருந்தால் அது அவளுக்கு ஒரு விடிவாக அவள் குழந்தையும் நல்ல முறையில் தான் வளர்ந்து இருக்கும்..
ஆனால் தவறுக்கு தண்டனை அனுபவித்து தானே ஆக வேண்டும்.. அது தான் பிழைத்து எழுந்து… வாழ்க்கை எனும் [போராட்டத்தில் அனு தினமும் செத்து செத்து பிழைத்து கொண்டு இருக்கிறாள்..
அத்வைத்துக்கு மனநிலை சரியான பின்னும் அவனுக்கு என்று ஒரு வேலை கிடைக்காது… சரி சொந்தமாக தொழில் செய்யலாம்.. அதில் தான் தனக்கு முன் அனுபவம் இருக்கிறதே என்று நினைத்தாலும், அதற்க்கு முட்டு கட்டையாக அவன் வீடே அவனுக்கு ஆயின..
தொழில் செய்ய பணம் தராது மட்டும் அல்லாது, வங்கியில் பணம் கடன் வாங்கவும் சூரைட்டி கையெழுத்து போட கூட ஆள் இல்லாது.. தெளிந்தும் மற்றவர்களின் பார்வைக்கு அவன் பைத்தியக்காரனாக தான் நின்றான்…
பெண் தேடும் போதும் அவனின் இந்த பிரச்சனை முன் வந்து நின்று விட்டது…
ஏழை பெண்ணாவது பார்த்து கட்டி வைத்து விட்டால், அவன் சுமையை அவள் சுமப்பாள் என்று நினைத்து தான் அவன் வீட்டில் அவனுக்கு பெண் தேடியது…
“ ஏழை பெண் என்றால் என்ன உங்களுக்கு அவ்வளவு இலப்பமா..?” என்று பெண்ணை பெற்றவர்கள் கேட்டார்கள்….
அவனை பற்றி தெரிந்து கொண்டவர்கள்… “ நண்பனின் மனைவி மீதே கை வைத்தவனுக்கு எதுக்கு கல்யாணம்…? அதோடு பைத்தியமா வேறு இருக்கான்.. கூலி வேலை பார்க்கிறவனா இருந்தாலும் ஒழுக்கமானவனுக்கு தான் என் பெண்ணை கொடுப்போம்..” என்று ஒன்று போல் அனைவரும் ஒரே மாதிரி சொன்னதில் அத்வைத்தின் தாய்க்கு அப்படி ஒரு கோபம்..
அதன் தாக்கம் தன் மகன் மீது எதிரொலித்தது… “நீ செய்த செயல் பார்த்தியா..? நம்மளை எங்கு வந்து கொண்டு நிறுத்து இருக்கு… உனக்கு ஏன்டா புத்தி இப்படி போகனும்..? அழகா நல்ல பெண்ணா வீட்டிலேயே ஒரு பெண் இருக்க.உன் புத்தி மேய போனா இப்படி தான் ஆகும்..
நீ கெட்டதும் இல்லாது எங்க எல்லாரையும் சேர்த்து கெடுத்து வைத்து இருக்கியே..
ஒரு விசேஷ வீட்டில் தலை காட்ட முடியல… சொந்தக்காரங்க எல்லாம் உன்னை வைத்து தான் இலக்காரமா பேசுறாங்க… தலை இறக்கமா போயிடுச்சி..
யார் முன்னாடி நல்லா நான் தலை நிமிர்ந்து வாழனும் என்று ஆசைப்பட்டேனோ.. அவங்க எதிரில் தலை நிமிர முடியாது செய்து விட்டுட்டியே..” என்று அத்வைத்தை தினம் தினம் அவன் அம்மா பேசினார்..
அவரின் அளவுக்கு மீறிய பேச்சுக்கு மற்றொரு காரணம் ஸாகித்யாவின் செயல் என்றும் சொல்லலாம்..
அத்வைத்தின் அப்பா..அதாவது ஸாகித்யாவின் தாய் மாமாவே ஒரு முறை ஸாகித்யாவை தனியே சந்தித்து..
“ அந்த வீட்டிலும் சரி.. புதுசா கட்டி முடித்த வீட்டிலும் சரி.. உனக்கு சரி பாதி உரிமை இருக்கு… அதை கேட்டு வாங்கு .. இல்லை என்றால் தான் எந்த தப்பு செய்தோம் என்று கூட தெரியாது உன் அத்தையும் உன் அம்மாவும் வாழ்ந்து முடிக்கும் வரை உணராது போவாங்க..” என்றதில்..
அடுத்த நடவடிக்கையாக நேத்ரனின் உதவியோடு தனக்கு சேர வேண்டிய சொத்தை வாங்கி விட்டாள்..
நேத்ரன் கூட.. “ நமக்கு எதுக்கு..? என்று கேட்டதற்க்கு..
“ இதை நான் வாங்கி அநாதை விடுதிக்கு கூட கொடுத்து விடுவேன்.. ஆனால் அவர்களிடம் விட்டு வைக்க மாட்டேன்… இந்த சொத்திற்க்காக தானே அவங்க கெடு கெட்ட மகன் தப்பு செய்த போது கூட அதை பெரியதாக நினைக்காது எனக்கு அவனை கட்டி வைக்க பார்த்தாங்க..” என்று கணவனின் வாயை அடைத்து விட்டு… ஸாகித்யா சொத்தை பிடிங்கி கொண்டதில் அத்வைத்தின் அம்மாவுக்கு கோபத்தை மீறி ஆவேசம் வந்து விட்டது…
அதில் தன் நாத்தனாரை அதாவது ஸாகித்யாவின் அன்னையை வீட்டை விட்டு அனுப்பி விட்டார்…
ஸாகித்யா தன் தாயை தன்னோடு வைத்து கொள்ளவில்லை என்றாலும், தனியே வைத்து அவ்வப்போது பார்த்துக் கொண்டும், பணமும் கொடுத்து கொண்டும் தான் இருக்கிறாள்..பெற்ற கடமைக்காக.. எப்போது அத்வைத் தவறு செய்த போதும் அவனை மணக்க வேண்டும் என்று சொன்னாரோ அதில் இருந்தே தன் தாயின் மீது இருந்த பாசம் விட்டு விட்டது..
இப்போது அவருக்கு செய்வது மகளாக தன் கடமை என்று தான் செய்கிறாள்… அவள் மனது முழுவதும் பாசம் என்று ஒன்று உண்டு என்றால், அது மகள் ஸாகி பேபி.. அடுத்து தன் தாய் மாமன். மனைவி மகன் என்று பாராது தன் நலன் மட்டுமே நினைத்த அந்த மனிதர் மீது அவளுக்கு பாசத்தோடு நன்றி உணர்சியும் சேர்ந்து இருக்கிறது…
இங்கு மந்ரா குழந்தைக்கு தந்தை வேண்டி அத்வைத்தையே திருமணம் செய்து கொண்டாள்.. அத்வைத்தும் இருக்க இடம்.. சாப்பிட சாப்பாடு வேண்டி மந்ராவை மணக்க.. தினம் தினம் இருவருக்கும் ஒரு போர்க்கலாம் மாளும்..
ஸாகித்யாவுக்கு முன் போல் பயம் இல்லாது அப்போது அவள் முன் பார்த்த அந்த குழந்தை தனம் முற்றிலும் அகன்று.. ஒரு மிடுக்கோடு தங்கள் அலுவலகத்தில் அவள் நடந்து வருவதை நேத்ரன் ரசித்து பார்ப்பதை வழக்கமாக்கி கொள்ள..
அதற்க்கி ஸாகித்யா விடாது.. “ முந்தைய நியாபகத்திலேயே நீங்க என்னை பார்க்கறிங்க என்று நினைக்கிறேன்.. இப்போ நான் உங்க மனைவி..” என்று சொல்லும் போது எல்லாம் நேத்ரன்..
“ ஏன் மனைவியை பார்க்க கூடாதா..?” என்று அவன் கேட்ட கேள்விக்கு சாகித்யாவிடம் இருந்து…
“ எப்போதில் இருந்து நீங்க மனைவியை பார்க்க ஆரம்பித்திங்க.. உங்க பார்வை எல்லாம்….” என்று ஸாகித்யாவிடம் இருந்து இந்த பதில் தான் வரும் என்று தெரிந்தே பார்ப்பான் தன் மனைவியை தினம் தினம்…
தவறு செய்யாத ஸாகித்யா ஒவ்வொரு நாளும் அவள் வாழ்க்கையில் முன் நோக்கி சென்று கொண்டு இருந்தாள்:.. அன்பான தாயாக மாமனாருக்கு மகளாக கணவனுக்கு நல்ல மனைவியாக இருந்தாலும், அவ்வப்போது அவனுக்கு வைக்க வேண்டிய குட்டை வைக்க தவறாது அவள் வாழ்க்கை அழகாக தான் சென்றது..
நெஞ்சம் நெகிழலாம்.. அது தவறு கிடையாது.. இறுகி கிடக்க அது இரும்பு கிடையாது தான்.. ஆனால் நெகிழும் இடம் பொறுத்து தான் வாழ்க்கையும்.. அதற்க்கு உண்டான மதிப்பும் கிடைக்கும்…
நிறைவு