அத்தியாயம்….18
அன்று தான் நேத்ரன் மந்ரா விவாகரத்து வழக்கு நீதிமன்றத்திற்க்கு வருகிறது. அன்று நேத்ரனோடு ஸாகித்யா தான் மிகவும் டென்ஷனாக இருந்தாள்…
அதை ரவீந்தரன் கவனித்தாலுமே, அதை பற்றி ஸாகித்யாவிடம் எதுவும் கேட்கவில்லை… தெரியும் மந்ராவோடான விவாகரத்தில் நேத்ரனுக்கும் அதில் பங்கு இருக்கின்றது என்று..
தான் வளர்த்த மகன் தன்னை போல் என்று பெருமை பட்டு கொண்டு இருந்தவருக்கு அப்போது தெரியவில்லை..
தன்னை போலவே அவன் தனித்து போவான்.. என்று…. அனைவருக்கும் ஒன்று போல் மனைவி வாய்ப்பது இல்லை தானே… அதை ரவீந்திரன் மறந்து போனார் தான்..
ஒரு சில கணக்குகள் தொழிலில் சக்ஸஸ் ஆக கூடும்…. ஆனால் வாழ்க்கையில்.. வாழ்க்கை என்பது கணக்கில் அடங்காதது என்று நேத்ரன் வாழ்க்கை அவருக்கு உணர்த்தியதால் தான்..
இப்போது எல்லாம் …அவர் வாழ்க்கையை கணக்கீடலில் சேர்க்காது, உணர்வில் சேர்த்தார்..
அதனால் தான் ஸாகித்யா ஏன் பதட்டமாக இருக்கிறாள் என்று உணர்ந்தே, எதுவும் பேசாது தன் மகன் வரட்டும் என்று ஹாலில் பேப்பர் படிப்பது போல் காத்து கொண்டு இருந்தார்…
முன் அதாவது தன் மகனின் திருமணம் மந்ராவோடானதில் பெரும் பங்கு ரவீந்திரனையே சேரும்… ரவீந்திரன் வாக்கிங் போகும் இடத்திற்க்கு தான் மந்ராவின் தந்தையும் வருவார்.
.
அப்போது அவர் மகளுக்கு வரன் தேடுவது தெரிந்ததில், அதுவும் அந்த பெண் தன் மகனோடு படித்தவள்.. கூடவே தன் தந்தையின் தொழிலையும் கவனித்து கொள்வதில், தன் மகனுக்கு பொறுத்தமாக இருப்பாள்..
அதோடு இருவரும் கூட படித்ததால், ஒருவர் பற்றி ஒருவருக்கு தெரியும் என்பதில் மந்ராவின் ஜாதகத்தை வாங்கிய உடன் தான் அவருக்கு தெரிய வந்தது..
மந்ரா நேத்ரனோடு மாதக்கணக்கில் பெரியவள் என்று.. அதுவும் மந்ராவை பற்றி நேத்ரனிடம் சொன்ன பின்..
வயது காரணத்தை பற்றி ரவீந்திரன் மகனிடம் சொன்ன போது… பரவாயில்லை என்று சொன்னவன்.. அவளையே திருமணம் செய்து எந்த வித பிரச்சனையும் இல்லாது வாழும் போது..
அவர் நினைத்தது.. இது தான். தன்னை போலவே, அவனை புரிந்து கொண்ட மனைவி அவனுக்கு கிடைத்து இருக்கிறாள் என்று.. நினைத்து அவர் நிம்மதி அடைந்தார்..
ரவீந்திரனும் தன் மனைவியோடு நேரம் காலம் பாராது எல்லாம் நேரம் செலவிட்டது கிடையாது..
அதற்க்கு அவருக்கு நேரமும் கிடையாது.. ஆனால் தன் மனைவியோடு தனித்து இருக்கும் சமயத்தில், உண்மையை சொல்ல போனால், அவர் தன் மகனை கூட மறந்து போவார்..
தன் மனைவியையும் தன் அன்பால் அனைத்தையும் மறக்கடித்தார்..
அதனால் தான் மனைவி இறந்த பின்னும் இன்னொரு துணையை அவர் நாட வில்லை..
தன் போல் தான் தன் மகன் வாழ்க்கிறான் என்று அவர் தப்பு கணக்கு போட்டதில் மந்ராவே தவறாக போய் விட்டாள்..
ரவீந்திரம் தன் மகன் செய்தது சரி தான் என்று அவர் சொல்லவில்லை.. ஆனால் மந்ரா செய்தது மிக பெரிய தவறு… தன் மனதை நேத்ரனிடம் வெளிப்படுத்தி இருக்கலாம்..
பின்னும் அவன் அப்படியே இருந்தால், அதாவது, நேத்ரனோடான வாழ்க்கையில் பிடித்தம் இல்லாது இருந்து இருந்தால், அதை நேத்ரனிடம் சொல்லி விட்டே பிரிந்து இருக்கலாம்..
விருப்பம் இல்லாத பெண்ணை இழுத்து வைப்பவன் நேத்ரன் இல்லையே… இப்படி நேத்ரனோடான முதல் திருமணம் தன் கணக்கீடலில் அடங்காது போகவும்…
இந்த திருமணமாவது அவனுக்கு நிலைத்து நிற்க வேண்டும் என்று அவர் ஆசைப்பட்டார்.. அதனால் ஸாகித்யாவின் தவிப்புக்கு உண்டான காரணம் புரிந்தும் தள்ளி இருந்து அவர் வேடிக்கை பார்க்க ஆரம்பித்தார்..
சிறிது நேரத்துக்கு எல்லாம் நேத்ரன் அங்கு வரவும் ஸாகித்யாவின் பட படப்பு இன்னும் தான் கூடியது… இங்கு தங்க ஆரம்பித்ததில் இருந்து..
ஆம் அந்த அடுக்குமாடி குடியுருப்பு வாசி அப்படி பேசியதில் இருந்து, ஸாகித்யா அங்கு செல்லவில்லை..
அவளின் பொருட்களை எல்லாம் ஒரு ஆளை வைத்து தான் அவன் எடுத்து வந்தான்.. அந்த வீடும் அப்படியே தான் இருக்கிறது.. ஸாகித்யாவோடான திருமணம் முடிந்த பின். அவ்வப்போது அவன் அங்கு சென்று வர திட்ட மிட்டு இருந்தான்…
அதனால் ரவீந்திரன்.. “ அதை விற்று விடலாம்..” என்று சொல்லும் அதை கேட்காது..
“ அந்த வீடு எனக்கு வேண்டும்..” என்று திட்டவட்டமாக சொல்லி விட்டான்… அப்போது ஸாகித்யா அங்கு தான் இருந்தாள். நேத்ரன் அங்கு செல்வேன்..அதுவும் திருமணம் முடிந்து என்ற அந்த வார்த்தையில்…
நேத்ரன் ஸாகித்யாவிடம் பக்கம் பக்கமாக பேசி எல்லாம் அவளை தேற்றவில்லை.. அவன் கேட்ட..
“ என் மீது நம்பிக்கை இல்லையா…? இல்லை என்றால் சொல்லி விடு டாட் சொன்னது போல் அதை விற்று விடுகிறேன்.. என்ன ஒன்று அந்த அபார்ட்மெண்ட் தான் நான் சம்பாதித்து வாங்கின முதல் பிராப்பர்ட்டி..” என்று சொன்னதுமே….
ஸாகித்யா அவசர அவசரமாக.. “ வேண்டாம் அதை விற்க எல்லாம் வேண்டாம்.. “ என்று சொன்னாள்…
நேத்ரன் .. “ அப்போ என் மீது நம்பிக்கை இருக்கு தானே..?” என்ற அவனின் கேள்விக்கு..
“ இருக்கு..” என்று சொன்ன ஸாகித்யாவின் முகத்தில் தெரிந்த தெளிவில் .. நேத்ரன்.. “ குட்..” என்று சொல்லும் போதே.. பேபி ஸாகி வந்து…
“ ஆன்டி வாங்க.. இன்னைக்கு ஜிங் ஜாங் கதை சொல்றேன் என்று சொன்னிங்கலே வாங்க ..” என்று சொல்லி அழைத்து சென்று விட்டாள்..
இரு ஸாகித்யாவும் சென்ற பின் தந்தை தன்னையே அதிர்ச்சியோடு பார்த்துக் கொண்டு இருப்பதை பார்த்து கண் அடித்து அந்த இடத்தில் விட்டு போனாலுமே, இன்று நேத்ரனின் நடவடிக்கையில் தெரிந்த துடிப்பில்… மெய் மறந்து தான் போனார்..
அதுவும் அந்த வீடு தான் சொந்தமாக சம்பாதியத்தில் தான் வாங்கிய முதல் சொத்து என்று சொன்னது எல்லாம் சுத்த பொய்… ஒரு சில பொய் கூட அழகு தான்.. அதை அன்று உணர்ந்தார்…
இப்போது ஸாகித்யாவின் முகத்தில் தெரிந்த பதட்டத்தை பார்த்த நேத்ரன்..
“ இன்று டைவஸ் எனக்கு.. நீ எதுக்கு இப்போ டென்ஷனா இருக்க..?” என்ற கேள்விக்கு, ஸாகித்யா பதில் அளிக்க வில்லை..
ஆனால் அவன் பேச்சில் அவள் மனது டென்ஷன் மறைந்து… அந்த இடத்தில் வருத்தம் வந்து குடி கொண்டு விட்டது..
அது கொடுத்த வருத்தத்தில்.. “ ஏன் இது போல் அப சகுனமா பேசுறிங்க…? சின்ன வயது முதல் பேசனவன் கூட தான் என் வாழ்க்கை தொடர முடியாது போய் விட்டது..
தானா வரும் வாழ்க்கையவது எனக்கு நல்ல படியா போகனும் என்று கடவுள் கிட்ட வேண்டிட்டு இருக்கே நேத்ரன் சார்.. இது போல் எல்லாம் பேசாதிங்க சார்.. வருத்தமா இருக்கு என்பதை விட பயமா இருக்கு..” என்று தன் மனதை அவள் தெளிவாக அவனுக்கு விளக்கினாள்..
நேத்ரனுக்கு தன் பேச்சில் இருந்த தவறை புரிந்து கொண்டு உடனே மன்னிப்பு கேட்டு விட்டான்..
ஸாகியின் மனநிலை அவனுக்கு புரிந்து தான் இருந்தது.. துணை இல்லாது அவள் வெளியில் கூட போகாதவளுக்கு கடந்த சில மாதங்களாக நடந்த நிகழ்வால், அவள் மனது எந்த அளவுக்கு பயந்து இருக்கிறது என்பதை..
இங்கு இருந்த சிறிது நாளில் அவள் முகமே அவனுக்கு காட்டி கொடுத்தது.. ஸாகித்யா தன் பயத்தை எப்போதும் மற்றவர்களிடம் சொல்லியே பழகி விட்டதால்..
ஒரு சில நாள் அவளே அவனிடம்…” எனக்கு ரொம்ப பயமா இருக்கு நேத்ரன் சார்… இந்த பிரச்சனை எல்லாம் இதோட முடிந்தால் பரவாயில்லைய்யா இருக்கும்..
என் வாழ்க்கையில் இது போல் எல்லாம் நடக்கும் என்று நான் நினைத்து கூட பார்த்தது கிடையாது…” என்று அன்றே பயந்து போய் சொன்னவளிடம். உன் விவாகரத்தா என்று கேட்டது தவறு தானே…
“சரி அது போல் சொல்லலே.. அப்படி பயமா இருந்தா இன்று நீ அங்கு வர வேண்டாம்..” என்று சொன்னதும்..
ஸாகித்யா.. “ பேபியை அழச்சிட்டு போகனும் தானே..” என்று ஸாகித்யா கேட்டதற்க்கு.
“பரவாயில்லை நான் சமாளித்து கொள்வேன்..” என்று பதில் அளிக்கவும் ஸாகித்யாவின் முகம் முதலில் தெளிந்தது தான்.. யோசித்தவள்…
பின் மீண்டும்..” வேண்டாம்.. வேண்டாம்.. நானும் வருக்கிறேன்.. என்னை வைத்து ஏதாவது பேச்சு வந்து நான் அங்கு இல்லை என்றால், அதை வைத்து அந்த லாயர் ஏதாவது பேச செய்வார்..
அதனால் பேபி நமக்கு கிடைப்பதில் தாமதம் ஆகும்..” என்று சொன்னவளின் முகத்தையே பார்த்து கொண்டு இருந்த நேத்ரனை பார்த்த ஸாகித்யா..
“என்ன..? என்ன..? அப்படி பார்க்கிறிங்க..?” என்று ஒரு வித தடுமாற்றத்தோடு தான் அவள் கேட்டாள்…
“ என்னோடான இந்த கல்யாணம் சூழ்நிலையில் தானே நடக்குது.. உனக்கு என்று விருப்பம் எல்லாம் இருந்து இருக்கும் தானே..?” என்ற அவனின் கேள்விக்கு பதில் அளிக்காத ஸாகித்யா..
“ என்னோடான இந்த திருமணம் கூட உங்களுக்கும் வேறு வழி இல்லாது தானே நடக்குது… மந்ரா அக்கா..” என்று சொன்னவளை நேத்ரன் பார்த்த பார்வையில்..
“ இல்ல அவங்க அப்படி இல்லாது இருந்து இருந்தால், நீங்க என்னை அப்படி நினைத்து கூட பார்த்து இருக்க மாட்டிங்க தானே..” என்று அவள் அவனை எதிர் கேள்வி கேட்டாள்..
அதற்க்கு அவனிடத்தில் பதில் இல்லாததால் மெளனமாகி போக..
ஸாகித்யா..” ஒரு சில விசயங்கள் இப்படி தான்.. நம்மையும் மீறி வாழ்க்கை அது வேறு ஒரு திசைக்கு தான் நம்மை இழுத்து கொண்டு போகுது… எந்த திசை என்றாலும், அதை நல்ல திசையாக மாற்றுவது நம்ம கையில் தான் இருக்கு..” என்று சொன்னவளின் பேச்சிலும் சரி.. முகத்திலும் சரி…. அவ்வளவு தெளிவு…
இப்போது இல்லாது போனதோடு அடுத்து நீதிமன்றத்திற்க்கு குழந்தையை கிளப்ப செய்ய வேண்டும்.. மேலும் அவளை மனதளவிலும் தயார் படுத்த வேண்டும் என்று நினைத்து தங்கள் அறை நோக்கி சென்றாள்..
ஆம் ஸாகித்யா பேபி ஸாகி அறையில் தான் தங்கி இருக்கிறாள்…
*****************************************************************
நீதி மன்றத்தில் மந்ராவின் வக்கீல் முதல் சொன்ன காரணமே மீண்டும் சொன்னார்..
நேத்ரனின் வக்கீல்.. “ அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள போகிறார்கள்..” என்று சொன்னதுமே..
மந்ராவின் வக்கீல்..” அப்போ நான் சொன்னது சரி தான் போல..” என்று எகத்தாளமாக சொல்ல…
இப்போது நேத்ரனின் வக்கீல்… “ நேத்ரன் சார் குழந்தையோடு தனித்து வாழுவார் என்று நான் என் வாதத்தில் ஒரு இடத்தில் கூட குறிப்பிடவில்லையே…
அனைவருக்கும் வாழ்க்கை.. குடும்ப வாழ்க்கை பொதுவானது தான்.. ஆனால் அது எந்த விதத்தில் கொன்டு போகிறோம் என்பது தான் இங்கு பிரச்சனை..
இதே மந்ரா மேடம் என் கட்சிக்காரரோடான திருமண முறிவு ஏற்பட்ட பின் மறு திருமணம் செய்து கொண்டு இது போல்.. அதாவது இப்போது அவர்கள் கர்ப்பம் தரித்து இருப்பதை யாரும் தவறாக பார்க்க போவது கிடையாது..
.
அவர்கள் முதல் குழந்தை அவர்களிடம் ஒப்படைப்பதில் கூட எந்த வித பிரச்சனையும் இங்கு இருக்க போவது கிடையாது..” என்று தன் வாதத்தை அவர் எடுத்து வைக்க..
அதற்க்கு மந்ரா லாயர்.. “ நான் இப்போ குறிப்பிடுவது.. இன்னும் விவாகரத்து கிடைக்காத நிலையில், இந்த பெண்ணை திருமணம் செய்ய போகிறேன் என்று சொல்வது…
அங்கு சென்று வந்ததை இரண்டும் கணக்கு போட்டு பார்த்தால்… அது எப்படி..?” என்று அவர் கேட்ட கேள்விக்கு, நேத்ரனின் லாயரால் உடனே பதில் அளிக்க முடியாது திணறும் போதே.. அடுத்து அடுத்து அமர்ந்திருந்த நேத்ரன் ஸாகித்யா ஒரே சமயத்தில் எழுந்து நின்று பேச அனுமதி கோரினர்…
நீதிமதி பெண் மணி ஒருவருக்கு பின் ஒருவர் வந்து பேச அனுமதி கொடுத்த பின்.. முதலில் ஸாகித்யா வந்து தன் தரப்பை சொன்னாள்..
எது உணர்வின் உணர கூடிய விசயம் என்று சொன்னாளோ.. அதற்க்கு நான் தயார் என்பது போல்..
“ அந்த லாயர்… திருமணம் முன்னவே.. ஏதோ அர்த்தம் வருவது போல் பேசினார்.. இல்லை என்று நான் நிருபிக்க என்ன செய்ய வேண்டும்..?” என்று கேட்க..
எதிர்கட்சி லாயர் வாயில் இருந்து அடுத்து வந்த வார்த்தை…
“ வெர்ஜின் டெஸ்ட் ..” என்பதே… ஏன் என்றால் அவரும் அப்படி தான் நம்பினார்.. கண்டிப்பாக இருவருக்கும் தவறான உறவு இருக்கும் என்று.. பெண் பார்க்க இப்படி இருக்கும் போது அப்படியே விட்டு விட முடியுமா..? என்பதே அவர் எண்ணம்..
ஆனால் இந்த வாதத்தை பார்வையாளர்கள் வரிசையில் இருந்து பார்த்து கொண்டு இருந்த நேத்ரன் ஒருவகையில் அதிர்ந்தான் என்றால், அத்வைத் வேறு ஒருவகையில் அதிர்ந்தான் என்று தான் சொல்ல வேண்டும்..
நேத்ரனோடான ஸாகித்யாவின் உறவை பற்றி நீதி மன்றத்தில் பேச சொல்லி அத்வைத் தான் சொல்லி இருந்தாலுமே, அப்படி இல்லை என்பது அத்வைத்துக்கு தெரியும் தானே..
கூடவே வளந்தவனை ஸாகித்யா அறியாது போனாலும், அத்வைத் அறிந்து வைத்து இருந்தான்…அதனால் அத்வைத்துக்கு ஒரு விதமான பட படப்பு என்றால்..
நேத்ரனுக்கு.. அவள் அப்போதே அதற்க்கு ஒத்துக் கொள்ளவில்லையே.. இப்போது .. அதுவும் ஸாகித்யா அப்படி சொன்ன பின்.. அவனுமே அவளின் உணர்வை உணர்ந்ததால், அந்த கேள்வி அவனுக்கு பிடிக்காது போனது…
ஆனால் நேத்ரன் எதிர் பாராது ஏன் நேத்ரனின் வக்கீல் கூட.. இந்த பெண் தான் அதற்க்கு ஒத்துக் கொள்ளவில்லையே..
அதற்க்கு சம்மதித்து இருந்து இருந்தால், தான் பிரச்சனை சுமூகமாக முடிந்து இருக்குமே.. இப்போது இவள் மறுக்க போகிறாள்.. அதையே பிடித்து..
“ தான் சொன்னது தான் உண்மை என்பது போல் வாதாட போகிறார்.. என்று நினைத்து கொண்டு இருக்க…
ஸாகித்யா “ நான் ஒத்துக் கொள்கிறேன். வர்ஜின் டெஸ்ட் எடுக்க ஒத்துக் கொள்கிறேன்..” என்று சொல்லி விட்டாள்..
அவளுக்கு அடுத்து நேத்ரன் அழைக்கப்பட..
“மந்ரா இப்போது வயிற்றில் வளரும் குழந்தையின் தந்தையை திருமணம் செய்து கொண்டால், நான் குழந்தையை மந்ராவிடமே வளர முழுமனதுடம் சம்மதம் சொல்கிறேன்..” என்று நேத்ரன் சொன்னதுமே..
அதைவைத் அந்த இடத்தில் இருந்து மாயமாக மறைந்து விட்டான்….
அவன் தான் திருமணம் செய்யும் எண்ணத்தில் மந்ராவோடு பழகவில்லையே…
பின் வேறு வழி இல்லாது மந்ராவே குழந்தையை நேத்ரன் வசம் ஒப்படைக்கும் படி ஆகி விட்டது..
வீட்டுக்கு வந்ததும் நேத்ரனிடமும், ஸாகியாவிடமும் ரவீந்திரன் சொல்லி விட்டார்..
எவ்வளவு சீக்கிரம் முடிமோ அவ்வளவு சீக்கிரம் உங்கள் திருமணத்தை நடத்தி முடித்திட வேண்டும் என்று..
தந்தையின் பேச்சில் நேத்ரன் ஸாகித்யாவை பார்க்க.. .அவள் தன் தலையாட்டலின் மூலம் தன் ஒப்புதலை தெரிவித்து விட்டாள்…
அவளுக்குமே உரிமை இல்லாது ஒரு வீட்டில் இருக்க என்னவோ போல் இருந்தது.. ஏற்கனவே எதுவும் செய்யாது. தன் மீது பழி சொல்ல காத்துக் கொண்டு இருக்கும் போது…
இப்போது நேத்ரனோடு தான் தன் திருமணம் என்று முடிவு செய்த பின் ஏன் அதை தள்ளிப்போட வேண்டும் என்ற எண்ணமும் அவளை இந்த திருமணம் உடனே நடக்க சம்மதிக்க வைத்தது…
அடுத்த ஒரு சுப முகூர்த்ததினத்தில் மிக எளிமையாக நேத்ரன் ஸாகித்யா திருமணம் இனிதே நடந்து முடிந்தது..
இன்னும் நான்கு அத்தியாங்களில் கதை முடிந்து விடும்..