அத்தியாயம்….3
“இத்தனை சம்பாத்தியம் இருந்தால் தான், அந்த பெண் என்னை கட்டிக்கனும் என்றால், எனக்கு அப்படிப்பட்ட பெண் எனக்கு வேண்டாம் ம்மா….” என்று சொன்னவனின் பேச்சில் அத்தனை அழுத்தம் இருந்தது…
மகன் ஒரு முடிவை அத்தனை எளிதாக எடுக்க மாட்டான்… அப்படி எடுத்து விட்டால், யார் என்ன சொன்னாலுமே அதை அவன் மாற்றிக் கொள்ளவும் மாட்டான் என்று அன்னையாக கெளசல்யா உணர்ந்து இருந்தாலுமே,
அதே அன்னையின் தன்மையில் ஒன்றான அந்த பெண்ணின் புகைப்படத்தை பார்த்ததும் மகனின் முகத்தில் தெரிந்த அந்த மகிழ்ச்சியை நினைத்து…
“இல்லேப்பா… என்ன தான் இருந்தாலுமே இந்த காலத்திற்க்கு….” என்று பேசிக் கொண்டு வந்தவர்… அடுத்து அவர் என்ன சொல்லி இருந்து இருப்பாரோ..
ஆனால் அதற்க்குள் ஜெயேந்திரன்… “எந்த காலத்துக்குமே தன் மனைவி பணத்திற்க்காக தான் என்னை கல்யாணம் செய்து கொண்டா என்பது … இழுக்கு தான்ம்மா.. அதுவும் எனக்கு.. ம் வேண்டாவே வேண்டாம்…” என்று சொன்னவைன் அந்த மறுப்பில் முன்பு இருந்ததை விட இன்னுமே அதிகம் தெரிந்தது..
மகன் இப்படி சொல்லி விட்ட பின்பு அடுத்து என்ன செய்ய முடியும்…? கெளசல்யா மட்டும் அல்லாது அனைவருமே அமைதியாகி தான் விட்டனர்..
ஆனால் இரண்டு நாட்கள் பின் கெளசல்யா பெண் வீட்டில் இருந்து இன்னுமே எந்த ஒரு செய்தியும் வராது போய் விட.. இந்த இடம் அவ்வளவு தான் போல என்று நினைத்து கொண்டு… அன்று தன் மூத்த பெண்ணை கை பேசியில் கூப்பிட்டு.. தன் மன தாங்களை கொட்டினார்…
அப்போது அவர் பக்கத்தில் குடும்ப உறுப்பினர் அனைவரும் தான் இருந்தனர்.. நம் ஜெயேந்திரனை தவிர….
பெரிய மகள் வித்யா…. “ ம்மா விடுங்கம்மா. இதையே நினச்சி உங்க உடம்பை கெடுத்துக்காதிங்க… என்னை கேட்டா அந்த பெண்ணுக்கு நம்ம வீட்டிற்க்கு வர கொடுத்து வைக்கல என்று தான் நான் சொல்லுவேன்… தம்பி சொல்றதும் சரி தான் ம்மா. விடுங்க… சும்மா இதை பத்தியே பேசிட்டு இருக்காதிங்க…” என்று தன் பெரிய மகளும் இப்படி கூறி விட…
பின் அங்கு இருந்த அனைவருமே அதையே தான் சொன்னார்கள்… அதுவும் அந்த வீட்டின் மூத்த மருமகள் சொன்ன..
“அந்த பெண்ணை ஜெய்க்கு பிடிச்சி இருக்கு இருக்கு என்று திரும்ப திரும்ப அதையே சொல்லாதிங்க அத்தை…. அது ஜெய் தம்பி மனசு இன்னுமே அந்த பெண் ஆழ பதிந்து போய் விட போகிறது… ஆழ பதிந்து.. சரி எல்லாம் சொல்லியாவது அந்த பெண்ணை கல்யாணம் செய்து கொள்ளலாம் என்று எல்லாம் யோசிப்பவரும் இல்ல உங்க சின்ன மகன்.. நான் என்ன சொல்ல வரேன் என்று உங்களுக்கு புரியும் என்று நினைக்கிறேன்..” என்று ஜெயந்தி சொன்னதுமே… கெளசல்யா அடுத்து அதை பற்றி வாயே திறக்கவில்லை…
வசீகராவை பிடித்து இருக்கிறது என்று இவர்கள் தரகரிடம் சொல்லி ஒரு வாரம் இரண்டு வாரம். கடந்து இதோ ஒரு மாதமும் தொட்டு விட… இந்த இடம் அவ்வளவு தான் முடிவு செய்து விட்டனர்.
ஜெயேந்திரனுக்குமே அந்த எண்ணம் வந்து விட்டது… என்ன தான் பணத்தை வைத்து தனக்கு இந்த பெண் வேண்டாம் என்று சொல்லி விட்டாலுமே, அவன் அதை சொல்லும் போதே அவன் மனதில் அழுத்ததை அவன் உணர்ந்தான்…
ஒரு நம்பிக்கையும்… ஏன் நாம் இப்படி நினைக்க வேண்டும் பார்க்கலாம்.. பார்க்கலாம்.. இந்த பெண் தான் எனக்கு மனைவி என்றால் கண்டிப்பாக மனைவியாக ஆவாள் என்று இத்தனை நாள் அவன் கொண்ட அவனின் அந்த நம்பிக்கையானது நாள் போக போக அது கரைந்து.. இதோ இன்று இல்லை… அந்த பெண் தனக்கு இல்லை என்று முடிவுக்கு வந்தவன்.
இனி இந்த பெண் புகைப்படம் தன் அறையில் இருப்பது தவறு.. இங்கு இருந்தால் நான் அடிக்கடி எடுத்து பார்க்கிறேன்… இது நல்லதிற்க்கு கிடையாது.. என்று நினைத்து அந்த புகைப்படத்தை வெளியில் எடுத்து செல்ல தான் கையில் எடுத்தது..
பின் கடைசியாக ஒரு முறை பார்த்து கொள்கிறேன் … இனி பார்க்க முடியாது தானே என்று சொல்லி பார்க்க ஆரம்பித்து ஒரு மணி நேரம் கடந்த பின்னுமே… அவனின் பார்வை அந்த புகைப்படத்தில் மட்டுமே இருந்தது.
வசீகராவை பார்க்க பார்க்க பேசாது தன் சம்பாத்தியம்.. தான் வாங்கி வைத்து இருக்கும் இடத்தை சொல்லியே இந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ளலாமா…? நான் நேரம் தாழ்த்தும் இந்த நேரத்தில் இந்த பெண்ணுக்கு வேறு யாரோடாவது என்று நினைத்தவனால் அதற்க்கு மேல் நினைவினால் கூட அடுத்து அவன் மனது யோசிக்க முடியவில்லை..
அதில் சட்டென்று தன் அறையை விட்டு வெளியில் வந்து விட…. அங்கு கூடத்திலோ… அவனின் அம்மா முகம் முழுவதும் மகிழ்ச்சி நிறைந்து இருக்க கை பேசியில் ..
“சரிங்க தரகரே.. ரொம்ப சந்தோஷம்.. ம் சரி நாங்களே நல்ல நாள் பார்த்து சொல்றோம்… நாளை கூட முகூர்த்த நாள் தான் ஒரு பத்திரிக்கை வந்து இருக்கு… வீட்டில் கலந்து பேசிட்டு நாளைக்கு கூட பெண் பார்க்க வரோம்….” என்று பேசியவரின் பேச்சிலும் மகிழ்ச்சியே… இத்தனையும் கை பேசியில் பேசியவர்… பின் அதை வைத்த பின்.. ஆர்வமுடன் தன்னையே பார்த்து கொண்டு இருக்கும் அனைவரையும் விட்டு விட்டு..
குழப்பத்துடனும்.. ஒரு வித எதிர் பார்ப்புடனும்… தன்னை பார்த்து நின்று கொண்டு இருந்த சின்ன மகன்….