சோமசுந்தரத்துடன் லிங்கா அவர்கள் கல்லூரியின் விடுத்திக்கு வந்து விட்டான்..அங்கு இவர்களுக்கு முன்னவே காவல் துறை அதிகாரிகள் வந்து இருக்க சோமசுந்தரத்தை பார்த்ததுமே மரியாதையுடன் வர வேற்றவர்கள் அருகில் நின்று கொண்டு இருந்த லிங்காவையும் பார்த்தனர்..
லிங்கா நிர்வாகத்தை ஏற்றதை உடன் சட்டப்படி அறிக்கை விட்டு அனைவருக்கும் தெரியப்படுத்தி விட்டதால், காவல் துறை அதிகாரிகளுக்கு லிங்காவை தெரிந்து இருந்தது..
அதனால் அந்த காவல் துறை அதிகாரி லிங்காவிடம் தான் தன் பேச்சை தொடங்கினார்.
கல்லூரி விடுத்தியின் சட்ட திட்டங்கள் லிங்கா சொல்ல. அதை கவனமாக கேட்டு கொண்டார் காவல் துறை அதிகாரியும்..
“ படிக்க வந்தவங்க எதுக்கு தான் இது போல குதித்து தற்கொலை செய்து கொள்றாங்களோ எனக்கு தெரியல சார்.. படிக்கும் வேலையை மட்டும் பார்ப்பது இல்ல. இந்த காதல் ப்ரேக்கப் என்று பிரச்சனைகளை இந்த பெண்களே இழுத்து விட்டுக்கிறாங்க..” என்ற அந்த காவல் அதிகாரியின் பேச்சில்..
லிங்கா.. “ தற்கொலை என்று தான் முடிவு செய்து இருக்கிங்களா..?” என்று கேட்க.
இப்போது அதிர்ந்து போய் காவல் அதிகாரி லிங்காவின் முகத்தை பார்த்தார்..
பின் .. “ என்ன சார்.. இது உங்கள் கல்லூரி விடுதி.. நீங்களே கொலையா இருக்குமோ என்பது போல சந்தேகம் கேட்கிறிங்க..” என்று அதிர்வது போல கேட்டார்.
“ உண்மை தற்கொலை என்ற பட்சத்தில் நல்லது தான்.. ஆனாலுமே அந்த பெண் ஏன் தற்கொலை செய்து கொண்டாங்க என்று தெரிய வேண்டும் இல்லையா.? அப்படி தற்கொலை இல்லாத பட்சத்தில் குற்றவாளியை கண்டுப்பிடிக்கனும் தானே…
ஏனோ அந்த பெண் இறந்தது எனக்கு சொந்தமான கல்லூரி விடுதியில், என்னால் தவறு என்ற பட்சத்தில் அதை கண்டுக்காது எல்லாம் விட முடியாது .. விடவும் கூடாது.” என்று லிங்கா திட்ட வட்டமாக கூறி விட்டான்..
லிங்காவின் பேச்சுக்கு காவல் அதிகாரியும். “ இப்போது தான் பாடியே பார்த்துட்டு வந்தேன் இன்னும் இன்வெஸ்ட்டிகேஷன் தொடங்கினால் தான் தெரியும்..” என்று காவல் துறை அதிகாரி சொல்லும் போதே அவருக்கு பெரும் மலைப்பாக இருந்தது..
அவரின் அந்த முக பாவனையை கவனித்த லிங்கா.. “ என்ன ..?” என்று கேட்டதற்க்கு..
அந்த காவல் அதிகாரி.. “ உங்களுக்கு இது தெரிந்து இருக்குமா என்ன என்று தெரியல… ஐந்து வருடம் முன் இதே போல் தான் ஒரு பெண் தற்கொலை இந்த ஹாஸ்ட்டலில் செய்து கொண்டாள்,.. அதுவும் இந்த அறையில் தங்கி இருந்தவள் தான்…” என்று சொன்னதில்..
லிங்காவுக்கு மது கேட்ட. “ அதே அறையில் தங்கி இருந்த பெண்ணா.. என்ற கேள்வியும் நியாபகத்தில் வர..
“அப்படியா..? ” என்று மட்டும் கேட்டு கொண்டான்.. பின் செய்ய வேண்டியது சட்டத்திட்ட படி தான் நடக்க வேண்டும் என்று கூறி வெளியில் வந்த போது..
அனைத்து பத்திரிக்கை துறையினரும் வந்து இருக்க.. அவர்கள் தங்கள் வேலையை..
அதாவது .. “ என்ன சார் . உங்க கல்லூரி விடுதியில் கொலை நடந்து இருக்கு.. இதுக்கு நீங்க என்ன சொல்ல போறிங்க..?” என்று ஒரு பத்திரிக்கையாளன் லிங்காவின் வாயின் உள்ளே மைக்கை நுழைக்காத குறையாக அருகில் வந்து கேள்வி கேட்டான்..
அப்போது தான் வெளியில் வந்து கொண்டு இருந்த காவல் அதிகாரியை பார்த்த லிங்கா. அவரை அழைத்து பக்கத்தில் நிற்க வைத்து கொண்டவன்..
“என்ன போலீஸ் ஆபிசர்.. இது கொலையா..? தற்கொலையா..? என்று நான் கேட்ட போது எனக்கு தெரியாது.. இப்போது தான் பாடியை பார்த்துட்டு வர்றிங்க.என்று சொன்னிங்க.
ஆனா இவங்க பாருங்க. பாடியை கூட பார்க்காது .. பிரேத பரிசோதனை செய்யாது இது கொலை என்று சொல்றாங்க. “ என்று சொல்ல.
அதற்க்கு மூத்த பத்திரிக்கையாளர் ஒருவர். “ என்ன சார் கிண்டல் செய்யிறங்கலா.” என்று கோபத்துடன் கேட்டார்.
“ இல்ல கிண்டல் இல்ல சார். கிண்டல் இல்ல.. நிஜமா நான் வந்த உடனே இது கொலையா இருக்குமா. என்று தான் கேட்டேன்.. அதுக்கு சார் தான் பார்த்ததும் எப்படி சொல்லி விட முடியும்.. இனி இன்வெஸ்ட்டி கேஷன்… பிரேத பரிசோதனை இருக்கு என்று சொன்னார்..
அப்படி இருக்க வெளியில் இருந்த நீங்க முகத்திற்க்கு முன்னே மைக் நீட்டி கொலை என்று சொன்னா..” என்று இவ்வளவு நேரமும் கிண்டல் போல நையாண்டி குரலில் பேசிக் கொண்டு வந்தவன்..
கடைசியாக தன் வார்த்தையை முடிக்கும் முன்…. “ இந்த கோபம் நான் பட வேண்டியது… உண்மை கண்டு பிடிப்பதற்க்குள் இது தான் என்று நீங்க சொன்னதற்க்கு நான் கோபபட்ட வேண்டும்.. உங்கள் இந்த பேச்சால் எங்க கல்லூரி பெயர் கெட்டு போக கூடும் என்பதில் நான் தான் கோபப்பட வேண்டும்..” என்று பேச.
இவன் பேச்சுக்கு இன்னொரு பத்திரிக்கையாளர்.. “ அது தானே சார்.. உங்களுக்கு உங்கள் கல்லூரி பெயர் காப்பற்ற பட வேண்டும்.. வருட வருடம் மாணவர்கள் மாணவிகள் சேர்க்கை மூலம் கல்லா கட்ட வேண்டும்.. அதுக்கு கொலையை கூட தற்கொலையா மாற்றிடுவீங்க… என்று மாற்றி விடுவீங்க..” என்று சொன்ன அந்த பத்திரிக்கையாளர்..
மேலும்.. “ இது ஒன்றும் உங்கள் ஹாஸ்ட்டல் விடுத்தியில் முதல் தற்கொலை கிடையாது… அதுவும் சரியா மாடியில் இருந்து குத்திக்கிறாங்க. அது எப்படி தான் ஒன்று போல நடக்குதோ.. எல்லாம் காசு கொடுத்து அரசியல் சட்டம் எல்லாத்தையும் விலைக்கு வாங்கி விடுவது..
இதோ நான் இவ்வளவு பேசிட்டு போறேன்.. சொல்ல முடியாது என்னை என்ன செய்வீங்க என்று.. ஆனாலும் நான் மனசாட்சி படி நடக்கிறவன்.. சொல்லாமல் என்னால் இருக்க முடியவில்லை..” என்று கூடியவன்.
பின் காவல் அதிகாரியை பார்த்து ..” என்ன சார் நீங்க சொல்லுங்க நாளை பத்திரிக்கையில் என்ன வரனும்.. நாங்க உண்மையை எழுதினாலும், அது வெளி வர போவது கிடையாது.. ஏன்னா நீங்க பேச வேண்டியவங்க கிட்ட பேசிட்டு நீங்க நினைத்ததை தான் வெளி வர வைப்பிங்க.
அது தான் எதுக்கு இரண்டு வேலை.. சொல்லுங்க.. என்ன வரனும் என்று அதை அப்படியே என் பத்திரிக்கை ஆபிசுக்கு கொடுத்துட்டு என் வீட்டுக்கு போயிடுறேன்..
ஆனா சார் என்ன தான் என் குடும்பத்தை நினைத்து எழுதினாலும், எனக்கும் ஒரு வயது பெண் இருக்கு, அதே வயதுடைய பெண்ணை பத்தி..” என்று சொல்லிக் கொண்டு வந்த அந்த பத்திரிக்கையாளர்..
“ சரி சார்.. வீண் பேச்சு கூட எதுக்கு..” என்று கூறியவர்.. தன் பக்கத்தில் இருந்த இன்னொரு பத்திரிக்கையாளரிடம்..
“ என்ன என்று சொல்லுங்க சார். அதையே நான் என் எடிட்டரிடம் கொடுத்து விடுகிறேன்..” என்று பேசி கொண்டு இருந்தவனை அப்போது தான் அங்கு வந்த சிவ பிரகாஷ்.
அந்த பத்திரிக்கையாளரை பார்த்து.. “ ஏய் என்னடா விட்டா பேசிட்டே போற..” என்று சொல்லி கொண்டு வந்தவரை லிங்கா அவரை மேலே பேச விடாது தடுத்து விட்டான்..
சிவ பிரகாஷ் அப்போதும்.. விடாது.. “ அவன் நம்ம காலேஜ் பத்தி தப்பா பேசுறான். உனக்கு என்ன தெரியும்.. நீ இப்போ வந்தவன்.. இதை இந்த அளவுக்கு உயர்த்த நான் என்ன எல்லாம் செய்து இருக்கேன்..” என்றவனின் பேச்சை கூர்ந்து கவனித்த லிங்கா.
“ ஆமாம் நான் இப்போ தான் வந்து இருக்கேன்.. எனக்கு இங்கு நடந்தது ஒன்னும் தெரியல தான்.. நீங்க என்ன என்ன செய்து இந்த கல்லூரியை உயர்த்தி இருக்கிங்க என்று இனி தான் பார்க்கனும்.” என்று சொன்னவன்..
பின் பொதுவாக அனைத்து பத்திரிக்கையாளர்களையும் பார்த்து.
“முதலில் நான் உங்க கிட்ட மன்னிப்பு கேட்கிறேன். நான் இப்போது தான் இந்த கல்லூரியின் நிர்வாக பொறுப்பை ஏத்து இருக்கேன்.. இது வரை எப்படியோ.. ஆனால் இனி.. அதாவது கொலையாக இருந்தால், அது தற்கொலை என்று மாற்ற மாட்டேன்,. இதனால் இந்த கல்லூரியே இழுத்து மூட வேண்டிய நிலை வந்தாலுமே..” என்றவனின் பேச்சை ஒரு சிலர் பாரட்ட செய்தனர்..
ஆனால் ஒரு சிலர் .. “ புது துடப்பம்.. நல்லா தான் சுத்தம் செய்யும்.. போக போக தேய்ந்து..குப்பையை விட்டு விடும்..” என்றும் கூறினர்
.பின் லிங்கா தனியாக காவல் துறை அதிகாரியை பார்த்து.. “ எது என்றாலும் பரவாயில்லை.. உண்மையான அறிக்கை வர வேண்டும்..” என்று சொன்னவன்..
பின் “ இது போல இரண்டு தற்கொலை செய்த பெண்களை பற்றியும், இன்வெஸ்ட்டிகேஷன் செய்த விவரமும் எனக்கு வேண்டும்..” என்று கூறிய லிங்காவை அந்த இளம் காவல் அதிகாரி பெருமையுடன் தான் பார்த்தார்..
“ பெண்கள் விவரம் தெரிவிக்கிறேன் சார்.. ஆனால் அப்போது இதை இன்வெஸ்டிகேஷன் செய்த போலீஸ் ஆபிசர் வேறு.. அது பார்த்து தருகிறேன் சார்.” என்று விட்டார்..
லிங்கா. “ சார் எல்லாம் வேண்டாமே.. சேம் ஏஜ். பேர் சொல்லியே கூப்பிடுங்க..” என்றவனிடம்..
அந்த காவல் துறை அதிகாரியும்.. “ அப்போ நீங்களும் பெயர் சொல்லி கூப்பிடு லிங்கா.” என்றதும் சிரித்தவன்..
“ ட்யூட்டியில் இருக்கும் போது முடியாது.. ஆப் ட்யூட்டியில் இருக்கும் போது கூப்பிடுகிறேன்.. “ என்று அவரிடம் விடை பெற்று வீடு வந்த போது அவனுக்கு ஒரு தனி பஞ்சாயத்து வீட்டில் காத்து கொண்டு இருந்தது..
அவன் வீட்டிற்க்குள் நுழையும் போது சிவ பிரகாஷ் தான்.. “ வர்றான் கேளுங்க மாமா..” என்று சோமசுந்தரத்தை முடுக்கி விட்டு கொண்டு இருந்தார்…
லிங்காவே தன் தாத்தாவின் எதிரில் அமர்ந்தவன்.. “ என் கிட்ட என்ன கேட்கனும் தாத்தா. எது என்றாலும் கேட்க உங்களுக்கு மட்டும் தான் உரிமை இருக்கு.. ஆனா எது என்றாலும் நீங்களா கேட்டதா தான் இருக்கனும்..” என்றவனின் பேச்சில்.
சிவ பிரகாஷ் மீண்டும் ஏதோ ஆரம்பிக்க. அவரை பேச விடாது கை சைகையில் தடுத்து நிறுத்தினான் லிங்கா.
அதை பார்த்த காஞ்சனா. “ அப்பா என்னப்பா இது.. என் புருஷன் இந்த வீட்டு மூத்த மாப்பிள்ளை.. இத்தனை வருடம் உங்களுக்கு எல்லா விதத்திலும் உதவியா இருந்தார்.. நேற்று வந்த சின்ன பையன் என் வீட்டுக்காரரை அசிங்கப்படுத்துறான்.. நீங்க பார்த்துட்டு அமைதியா இருக்கிங்க. இது நல்லா இல்ல அப்பா.” என்று தன் தந்தையிடம் கேட்ட காஞ்சனா ..
பின் தன் கணவனை பார்த்து.. “ வேண்டாங்க வேண்டாம்.. இனி நாம இந்த வீட்டில் இருந்தால், நமக்கு மரியாதை கிடையாது..நமக்கு என்ன சொத்து இல்லையா.வீடு இல்லையா. பணம் இல்லையா.?
ஜெய பிரகாஷை காண்பித்து.. “இவனுக்கு பள்ளி நிர்வாகத்தில் விருப்பம் இல்ல என்று உதவி செய்திங்க… ஆனா அதற்க்கு இவங்க நல்லா கை மாறு செய்து விட்டாங்க.. வாங்க நாம போகலாம்..” என்று ஆவேசத்துடன் கத்தியவர் பின்..
தன் மகன் மகளை பார்த்து. “ இன்னும் என்ன என் வாயை பார்த்துட்டு இருக்கிங்க. போங்க போய் உங்க பொருளை எல்லாம் எடுத்து வைக்கிற வழிய பாருங்க..”என்று அவர் பேச மகனும் மருமகளும் தங்கள் அறைக்கு செல்ல பார்த்தவர்களை சிவ பிரகாஷ் தடுத்து நிறுத்தி விட்டு..
தன் மனைவியிடம்.. “என்ன காஞ்சனா நீ பேசுவது… நல்லா இருக்கும் போது கூட இருப்பதற்க்கு பேரு உறவு கிடையாது… இப்போது கல்லூரி விடுதியில் பிரச்சனை.. நீ சொன்னது போல இத்தனை ஆண்டு கட்டி காப்பாற்றிய காலேஜை என்னால அப்படியே விட்டு விட்டு வர முடியாது…
எல்லாம் சரி செய்து விட்ட பின் நீ சொன்னது போல இந்த வீட்டை விட்டு போய் விடலாம்..” என்று சிவ பிரகாஷ்.. சொன்னவர்..
அந்த கடைசி வார்த்தை வீட்டை விட்டு போய் விடலாம் என்று சொல்லும் போது அவரின் பார்வை லிங்கா மீது தான் இருந்தது.. அந்த கண்களில் அவ்வளவு வன்மம் இருந்தது..
இரவில் தன் தளத்தில் குளத்தின் அருகில் அமர்ந்து இருந்தவன் மனது முழுவதும் அந்த பத்திரிக்கையாளன் பேசிய பேச்சே மீண்டும் மனது வந்து போயின.
நிச்சயமாக அவன் பேசியதில் உண்மை இருப்பது போல தான் லிங்காவுக்கு தோன்றியது.. அப்போ அவன் பேச்சில் உண்மை என்றால், தங்கள் கல்லூரி.. அந்த விடுதி. தற்கொலை.. அதுவும் இளம் பெண்கள். என்று ஒன்றுக்கு ஒன்று இணைத்து அவன் யோசிக்கும் போது அவனின் அருகில் கொலுசு ஒலி கேட்டது…