அத்தியாயம்….21,..2
தன் தந்தை தன்னிடம் சொன்ன விசயத்தை கேட்ட பின் குரு மூர்த்திக்கு ஏன் இதை கேட்டேமோ என்று நினைத்து விட்டான்.. கேட்ட விசயத்தையும் இதில் இருந்தே குரு மூர்த்தி தெரிந்து கொண்டு விட்டான் தான்.. நானுமே அது போல பிளாக் மெயில் செய்து தான் பிறந்து இருப்பேன் என்பதும்..
தன் வீட்டை சுற்றி பார்த்தான் குரு மூர்த்தி… எங்கும் தன் அன்னையின் புகைப்படம் அங்கு மாட்டப்படவில்லை…
ஒரு சில வீட்டில் பூஜை அறையில் கூட இறந்தவர்களின் படம் இருக்கும்.. ஆனால் தன் வீட்டில் பூஜை அறையில் கூட தன் அன்னையின் படம் இல்லாது இருப்பதற்க்கு உண்டான காரணம் குரு மூர்த்திக்கு இப்போது தான் தெரிந்தது..
சின்ன வயது முதலே தன் அன்னை இல்லை என்பதை அவன் உணர்ந்ததே இல்லை.. அவனின் மாமா விசுவநாதன் அவனை அப்படி உணர விட்டது இல்லை…
இவனுமே தன் அன்னையை பற்றி எல்லாம் நிறைய யோசித்தது கிடையாது.. பத்து பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் போது நினைத்து கொள்வான்..
தன் அப்பா அம்மாவை பற்றி பேசி தான் கேட்டதே இல்லையே என்று… அதே போல அம்மா படம் இல்லாது.. அவர்களுக்கு எதுவும் பூஜை செய்யாததையும் நினைத்து இருக்கிறான்.
பின் அவனே அப்பா படித்தவர்… அவர் வேலை எதை பற்றியும் யோசிக்க கூட நேரம் இருக்காது.. அதோடு படித்தவர் நிதர்சனத்தை புரிந்து கொண்டு அதை ஏற்று கொண்டு விட்டார் போல என்று அவனுக்கு அவனே அவனின் டீன் ஏஜ் வயதில் இதை பற்றி நினைத்து இருக்கிறான்.
தன் மாமா வீட்டிலோ தந்தைக்கு எதிர் பதமாக அவர்களின் வீட்டின் பூஜை அறையில் ஆள் உயர அளவுக்கு அவனின் அன்னையின் படம் மாட்டப்பட்டு இருக்கும்..
அதே போல தன் அன்னையின் திதி அன்று அத்தனை பேருக்கு அன்னதானம் போட்டு… ஐய்யரை வர வழைத்தும் அனைத்துமே முறையாக செய்து விடுவார்.. ஆனால் அங்கு தன் தந்தை சென்றது கிடையாது….
தன் தந்தை ஏன் அம்மாவை பற்றி பேசியது கிடையாது. இது போல திதி செய்யவில்லை என்று எல்லாம் நினைத்தது கிடையாது அவன்…
பின் வளர்ந்த பின் குரு மூர்த்தி இப்படி யோசிப்பதை கூட விட்டு விட்டான்.. அவர் அவர் விருப்பம் என்று.. ஆனால் இப்போது தான் குரு மூர்த்திக்கு புரிகிறது.. தந்தையின் விருப்பமே வேறாக இருக்க கட்டாயப்படுத்தி தான் தன் அன்னையை அவருக்கு தன் மாமா திருமணம் செய்து வைத்து இருக்கிறார் என்பது.. இப்போது தான் குரு மூர்த்திக்கு அனைத்தும் புரிகிறது. தன் தந்தைக்கு அனைத்துமே கட்டாயப்படுத்தி திணிக்கப்பட்டு இருக்கிறது என்று..
பிடிக்காது திருமணம் செய்து கொண்டவர்கள் காலப்போக்கில் பிடித்து விட கூடும்.. ஆனால் தன் தந்தைக்கு செய்த இந்த திருமணம். வேறு ஒரு பெண்ணை விரும்பியவனை.. அவன் விரும்பிய பெண்ணை கடத்தி வேறு ஒரு பெண்ணை வலுக்கட்டாயமாக திருமணம் செய்து வைத்தால்,. காலம் என்ன ஜென்மம் ஆனாலுமே பிடிக்காது..
இதை ஏன் தன் மாமா உணரவில்லை.. என்று நினைத்த குரு மூர்த்தியின் எண்ணம். அவனின் ஈஸ்வரியின் பக்கம் சென்றது..
நானுமே அவள் கழுத்தில் அவள் அனுமதி கேட்காது தானே தாலி கட்டினேன்.. இதுவுமே திணிக்கப்பட்டது தானே… அப்போ ஈஸ்வரியுமே காலம் முழுவதுமே தன்னை ஏற்க மாட்டாளா…? என்று நினைத்த மனம். இல்லை தன் தந்தையும் ஈஸ்வரியும் ஒன்று இல்லை..
தன் தந்தை வேறு ஒரு பெண்ணை விரும்பினார்.. ஆனால் ஈஸ்வரி அப்படி கிடையாது.. அதே போல தன் அம்மா தன் அப்பாவை தன்னோடு வாழ வேண்டும் என்று அவரை நிர்ப்பந்தம் செய்து இருக்கிறார்.
ஆனால் நான் அப்படி இல்லையே… இதோ நேரத்தை கொடுத்து இருக்கிறேன். எத்தனை நாள் எத்தனை மாதம் எத்தனை ஆண்டுகள் ஆனாலுமே நான் காத்திருக்க தயார் என்று அவன் நினைக்க…
ஆனால் உன் ஈஸ்வரி உன் வீட்டிற்க்கு வர இன்னும் நீ நிறைய நாட்கள் எல்லாம் காத்திருக்க தேவை கிடையாது.. உன் வீட்டிற்க்கு உன் ஈஸ்வரி வர உன் அத்தையே காரணமாக இருக்க போகிறாள் என்று தெரியாது..
தன் வேலைகளை பார்க்க வெளியில் வந்தவன்.. பின் இன்னும் இரண்டு பேரை அவனின் ஈஸ்வரியின் பாதுகாப்புக்கு வேண்டி ஆட்களை ஏற்பாடு செய்து விட்ட பின் தான் தான் விலை பேசி முடித்த அந்த கார் ஷோ ரூமுக்கு வந்தான்.. அதில் ஒரு சில மாற்றங்களை செய்ய வேண்டி ஆட்களை வர வழைத்தவன்.
என்ன…? என்ன…? அதில் மாற்றங்கள் செய்ய வேண்டும் என்று சொன்னவன் மீண்டுமே ஈஸ்வரியின் பாதுகாப்புக்கு வேண்டி ஏற்பாடு செய்து இருந்தவர்களை.. தன் கை பேசியின் மூலம் அழைத்த குரு மூர்த்தி..
ஓரு முறைக்கு இரு முறை.. “ ரொம்ப ரொம்ப கவனமா இருக்கனும்.. பார்த்து… “ என்று சொன்னவனிடம்…
அந்த ஆட்கள். “ சரி சார். சரி சார்.. நாங்க கவனமா தான் சார் இருக்குறோம்..” என்று சொன்னவன் பின் அவன் தன் கைய் பேசியை வைத்த தண்டாயித பாணி
“இன்னும் இந்த மகி பொண்ணை யார் என்ன செய்ய போறாங்க என்று இந்த குரு சார் அடிக்கு ஒரு தபா போன் போட்டு பார்த்து பார்த்து என்று சொல்லிட்டு இருக்கார்... அது தான் விசுவநாதன் சார் ஜெயிலுக்கு போயிட்டார். மூன்று மாசம் கழித்து தான் வருவார். அந்த ஸ்ருதி பொண்ணு அவர் அப்பா நிலமையே பரவாயில்லை என்பது போல் தான் யார் என்று கூட தெரியாது இருக்காங்க.. ஆனா இவரு என்றால் பார்த்து பார்த்து என்று சொல்லிட்டு இருக்காரு..
விசுவநாதன் சார் ஜெயிலில் இருந்து வெளியில் வந்தா தான் நமக்கு வேலையே.. இந்த மூன்று மாசமும் சும்மா இருந்தே பணத்தை வாங்க கொள்ள வேண்டியது தான்..” என்றவனிடம்..
மற்றொருவனான சுகுமார்…” எனக்கு என்னவோ குரு சார் இத்தனை தபா போன் செய்து பத்திரம் பத்திரம் என்றதில் ஏதோ விசயம் இருக்குமோ என்று எனக்கு தோனுது டா…” என்று சொன்னவனிடம்..
தண்டாயித பாணி “ பிரச்சனையா..? யாரால் இந்த மகி பொண்ணுக்கு பிரச்சனை வந்து விட போகிறது.. இந்த மகி பொண்ணுக்கு நம்ம விசு சார் ஸ்ருதி பொண்ணு இவங்களை விட்டா வேறு யாரு எதிரியா இருந்து விட போறாங்க நீயே சொல்லு…”
இவர்கள் மூன்று பேருக்கும் விசுவநாதனையும் தெரியும்.. குரு மூர்த்தியையும் தெரியும்.. அன்று மகியின் பாதுகாப்புக்கு பின் தொடர்ந்தவர்கள் தான் இவர்கள்… அதனால் அன்று நடந்த விசயங்களை வைத்து இவர்களுக்குமே அனைத்துமே ஒரளவுக்கு தெரியும் தான்..
அதனால் தான் மகேஷ்வரி என்ற பெண்.. சாதாரண ஒரு பெண் தானே… ஸ்ருதியை வைத்து தான் மகிக்கு பிரச்சனை.. அதுவும் பிரச்சனை கொடுக்க கூடிய இருவருமே இப்போது மகியை ஒன்றும் செய்ய முடியாது என்ற நிலையில் அவர்கள் இருவரும் இருக்கும் போது.. மகிக்கு என்ன பிரச்சனை வந்து விட போகிறது…” என்று நினைத்து விட்டனர்..
மீண்டுமே அந்த சுகுமார் சொன்ன… “ எதுவும் இல்லாமலாயா குரு சார் இத்தனை முறை சொல்லுவார்.
அதோட அன்னைக்கு ஸ்ருதி பொண்ணுக்கு கூட என்ன ஆச்சு… ஏதோ அவங்க குடிப்பதில் கலக்கி கொடுத்துட்டு… அதனால தானே இத்தனையும் ஆச்சு…” என்று அவன் திரும்ப திரும்ப சொன்ன போது கூட தண்டாயித பாணி…
“ஸ்ருதியின் அப்பா நம்ம விசுவநாதன் சார் செய்யும் தொழில் மதுவிற்பனை.. அவர் நிறைய இடத்தில் ஏழரையை கூட்டி இருந்து இருக்கார்.. அதனால ஆகாதவன் ஒருத்தன் நம்ம சார் மீது இருக்கும் வன்மத்தை அவர் பொண்ணு மேல கொட்டிட்டு போயிட்டான்.. ஆனா மகி பொண்ணு அப்படியா…? அவர் அப்பா மாமா அத்தான் எல்லோரும் யார் வம்பு தும்புவுக்கும் போதாவங்க… அவங்க வீட்டு பொண்ணு யார் என்ன செய்து விட முடியும்.. இந்த பொண்ணும் வெளியில் அப்படி ஒன்னும் போவது இல்லை..
அப்படி போனா கூட அந்த பொண்ணு அத்தான் கூட தான் போய் வருது… அது எல்லாம் மகி பொண்ணுக்கு ஒன்னும் ஆகாது.. கொஞ்சம் சரக்கை போட்டுட்டு வருவோம்.. வா நாம போய் சரக்கை அடிச்சிட்டு வருவோம்..” என்று சொன்ன போது கூட சுகுமார்.
“குரு சாருக்கு தெரிந்தா திட்டுவார் டா.. அவர் என்ன சொல்லி இருக்கார்.. உங்க இந்த வேலை எல்லாம் நையிட்ல மட்டும் வைத்து கொள்ளுங்கள்… அதுவும் காலையில் சீக்கிரம் போதை தெளிவது போல தான் அளவா தான் இருக்கனும் என்று தானே நம்ம கிட்ட சொல்லி இருக்காரு… நீ என்ன என்றால் பகலிலேயே என்னை கூப்பிடுற..” என்று இத்தனை சொன்ன சுகுமார் கடைசியில் “இப்போ வேண்டாமே..” என்று சொன்னவனின் மறுப்பு அத்தனை வலுவாக இல்லை..
சுகுமார் குரு மூர்த்திக்கு பயந்து சொன்னது அனைத்துமே உண்மை தான் என்றாலும், சரக்கு என்று சொல்லி அவனின் ஆசையையும் தூண்டி விட்டு விட்டதால், குடித்தால் தான் என்ன.? அது தான் அந்த மகி பொண்ணு எப்போவாவது தானே வெளியில் போகுது. என்று எண்ணம் சுகுமாருக்கும் வந்து விட்டது..
தண்டாயித பாணிக்கு சுகுமாரின் வீக்னெஸ் புரிந்து விட.
“சரி அப்போ நீ வேணா இங்கேயே தேவுடு காத்துட்டு இரு. நானும் இன்னொருவனையும் காட்டி விட்டு.
“போய் போட்டுட்டு வரோம்.” என்று சொன்னவன் ஜாடையில் குடிப்பது போல செய்தும் காட்ட..
சுகுமாரனுக்கு கொஞ்சம் நஞ்சம் இருந்த அந்த தயக்கமும் போய் விட்டதில்… “ குரு சார் கிட்ட பதில் சொல்லனுமே என்று தான் அப்படி சொன்னேன்.. அதுக்கு என்று என்னை விட்டு நீ போயிடுவியா…” என்று கேட்ட சுகுமாரன் தண்டாயித பாணியுடன் சரக்கு அடிக்க.. இது வரை மகி இருக்கு வீட்டின் வீதியில் இருந்தவர்கள்… மகிக்கு ஆபத்து வராது என்று நினைத்து சென்று விட்டனர்.. இது அன்று மட்டுமே நடை பெறவில்லை..
முதல் முறை ஒன்றும் நடவாது போனதில் இனியும் நடவாது என்று நினைத்து இதையே தொடர்ந்து செய்ய ஆரம்பித்து விட்டனர்… இவர்களின் இந்த செயல்களை வேறு ஒரு க்ரூப் கவனித்து தாமரைக்கு அனைத்தும் சொல்கிறார்கள் என்று தெரியாது..
குரு மூர்த்தி கேட்கும் போது எல்லாம்.. “ மேடம் வீட்டு எதிர்க்க தான் சார் இருக்கோம்.. அது எல்லாம் நாங்க பார்த்து கொள்கிறோம் சார்.. நீங்க கவலை படாதிங்க சார்.” என்று சொன்னவனின் பேச்சை குரு மூர்த்தியும் பாவம் நம்பி விட்டான்…
இவர்கள் நினைத்தது போல் தான் சாரதாவும் நினைத்து விட்டார் போல அதனால் தான்.. மகேஷ்வரியிடம்… “ எனக்குமே முன் அந்த விசுவநாதனை நினைத்து தான் பயந்துட்டு இருந்தேன்.. இப்போ அவன் ஜெயில்ல இருப்பதினால் இனி உனக்கு பிரச்சனை ஒன்றும் இல்ல. நீ பயம் இல்லாது காலேஜிக்கு போயிட்டு வா மகி குட்டி.. எத்தனை நாளுக்கு தான் காலேஜிக்கு போகாம வீட்டில் இருந்து படிப்ப… அதோடு அடுத்த கட்டம்மா மேற்படிப்பு என்று நீயுமே அடுத்தது பார்த்துட்டு போகனும் தானே…” என்று சொல்ல.
மகேஷ்வரிக்கும் தன் அத்தை சொல்வது சரி தான் என்று தோன்றியது… அதோடு முன் தான் சாரதாவுக்கு உடல் நிலை சரியில்லாது இருந்தது.. இப்போது கொஞ்சம் பரவாயில்லை என்ற நிலையில் தான் அவர் இருக்கிறார்.
அதோடு அவளின் மாமா ராம் சந்திரனும் வீட்டில் இருப்பதால், அத்தைக்கு உதவியாக அவர் இருக்கிறார்.. அவளுக்குமே வீட்டில் இருந்து படிப்பதில் கொஞ்சம் போர் தான் அடிக்கிறது..கல்லூரிக்கு போனால் நன்றாக இருக்கும் என்ற எண்ணம் தான் அவளுக்கும்…
இப்போது அத்தையும் அதை சொல்லி விட சரி நாளையில் இருந்து செல்லலாம் என்று நினைத்தவள்.
அதை தன் அத்தையிடமும் சொல்லி விட்டாள்..இத்தனை நேரமும் இவர்களின் பேச்சை இடையூறு செய்யாது கேட்டு கொண்டு இருந்த சித்தார்த்.
“சரி தான் மகி. நானுமே இதை தான் நினைத்தேன் எத்தனை நாளைக்கு வீட்டில் இருந்து படிக்க முடியும் என்று… “ சொன்னவன் பின் தயங்கி தயங்கி…
“காலேஜில் எல்லோருக்கும் கொஞ்சம் ஒரளவுக்கு விசயம் தெரிந்து விட்டது மகி.. அதை பத்தி உன் கிட்ட பேச கூடும்.. நீ எல்லாத்தையும் தைரியமா பேஸ் பண்ணி தான் ஆகனும் மகி.” என்று சொன்னவனிடம்..
மகியுமே.. “ சரி தான் அத்தான் எல்லாமே பேஸ் பண்ணி தானே ஆக வேண்டும்.. அத்தோடு நான் ஒரு தப்பும் செய்யலையே… நான் ஏன் பயந்து வீட்டில் இருக்கனும்.. முன் கூட அத்தை தான் ரொம்ப பயந்தாங்க.. அதோட நான் அத்தைக்கும் உடம்பு கொஞ்சம் முடியாது போகவும் தான் நான் கூட இருந்தா அத்தையை பார்த்து கொள்ளலாம் என்று தான் இருந்தேன்.. இனி நான் வரேன் அத்தான்.” என்று சொன்னவள் கூடவே.
“இனி உங்களுக்கு காலேஜ் வேலையில் டைம் ஆனா… நான் தனியா வீட்டிற்க்கு வந்துடுவேன் அத்தான்.” என்றும் சொல்லவும் .அனைவரும் சரி என்று தான் விட்டனர்…
காரணம் விசுவநாதன் சிறையில் இருக்கிறார்.. ஸ்ருதிக்கோ தானே யார் என்று தெரியாது மனநல மருத்துவமனையில் இருக்கும் போது அவளாள் மகிக்கு என்ன பிரச்சனை வந்து விட போகிறது என்று நினைத்து சாரதா வீட்டிலுமே மெத்தனமாக தான் இருந்து விட்டனர்…
ஒரு வாரம் மகி வெளியில் எந்த பிரச்சனையும் இல்லாது தான் கல்லூரிக்கு சென்று வந்தது..
ஆனால் கல்லூரியில் அவள் தந்தை பற்றிய வழக்கின் மூலம் அனைவருக்கும் அனைத்தும் தெரிந்து விட்டது போல.. அதனால் மகியின் கழுத்தை உத்து உத்து பார்ப்பதும் அவர்களுக்குள் பேசி கொள்வதுமாக தான் இருந்தனர்..
ஆனால் மகி அதை எல்லாம் கண்டு கொள்வது இல்லை.. வதனி மட்டும் மகியிடம் வந்து அவளின் கை பிடித்து.
“உண்மையில் அந்த ஸ்ருதி உன் அப்பா அம்மாவை கார் ஏத்தி கொன்னது எல்லாம் எனக்கு சத்தியமா தெரியவே தெரியாது… சாரி மகி சாரி மகி.” என்று தன்னிடம் மன்னிப்பு கேட்ட வதனியிடம் மகி முகத்தில் அரைந்தது போல் பேசி விட்டாள்..
“அந்த ஸ்ருதியை கூட ஒரு வகையில் சேர்த்து விடலாம்.. ஏன்னா உண்மையில் என் அப்பா அம்மாவின் மீது வேண்டும் என்று எல்லாம் அவள் கார் ஏத்தவில்லை…
அந்த சமயம் அவங்க நிலையில் இல்லை.. ஸ்ருதி என் கிட்ட பேசும் போது கூட என் அப்பா அம்மாவை அவள் தான் கார் ஏற்றினால், அதனால் தான் அவங்க இறந்து விட்டாங்க என்ற விசயம் தெரியாது..
அன்னைக்கு உண்மையில் நடந்தது ஒரு விபத்து தான்.. ஆனா அந்த விபத்தில் இறந்த என் அப்பாவின் இறப்பை அசிங்கப்படுத்தியது தான் பிரச்சனை…” என்று சொன்ன மகி..
“பின் நீ யாருக்காவது உண்மையா இரு.. இந்த சமயம் ஸ்ருதிக்கு தான் உன் துணை தேவை எனக்கு கிடையாது..” என்று சொல்லி தன்னை விட்டு தூரம் நிறுத்தி விட்டாள்…
அதனால் மகிக்கு கல்லூரியிலும் பிரச்சனை என்று சொல்ல முடியாத அளவுக்கு தான் சென்றது என்ன ஒன்று யாராவது அவளின் கழுத்தை அப்படி உத்து பார்க்கும் போது மட்டும் மகி நினைத்து கொள்வாள். இதை பற்றி அத்தையிடம் பேச வேண்டும் என்று.. ஆனால் பேச மறந்து விட்டாளா என்று தெரியவில்லை…
இது வரை மகி தன் கழுத்தில் இருந்த தாலியை பற்றி பேசவில்லை..
காலையில் சமையலுக்கு அத்தைக்கு உதவி செய்து விட்டு கல்லூரிக்கு செல்பவள் மாலை சித்தார்த் கல்லூரி விட்ட உடன் வந்தால், அவனோடு வருவாள் இல்லை என்றால் பேருந்தில் தான் வருவாள்..
குரு மூர்த்திக்கு இது தெரிய வர பல்லை கடித்து கொண்டான்.. மகி வீட்டில் இதை பற்றி பேசலாம் தான். ஆனால் என்ன என்று குரு மூர்த்தி சொல்லுவான்…
“என் அத்தை மீது எனக்கு சந்தேகமா இருக்கு.. அதனால ஈஸ்வரியை தனியா அனுப்பாதிங்க என்றா சொல்ல முடியும்…”
ஏற்கனவே தன் குடும்பத்தின் மீது அவர்களுக்கு நல்ல அபிப்பிராயம் கிடையாது… என் அப்பா செய்த புன்னியம். இன்னுமே ஈஸ்வரி கழுத்தில் நான் கட்டிய தாலி இருப்பது..
இதில் அத்தையை பற்றி சொன்னால், இப்போது என் அப்பாவுக்காக பார்க்கிறவங்க. என் அப்பாவே மகியை என் வீட்டிற்க்கு அனுப்பு என்று கேட்டால் கூட அனுப்ப மாட்டார்கள் என்று.. நினைத்து அவனின் ஈஸ்வரியின் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்து இருந்தவர்களை அழைத்து.
“பஸ்ஸில் போறா பார்த்து தண்டா..” என்று சொன்ன போது தண்டாயித பாணியும் ..
“சரி குரு சார் நாங்க பார்த்துக்குறோம்…” என்று சொன்னவன்..
தண்டாயித பாணி குரு மூர்த்தி சொன்னது போல மகி பேருந்தில் வரும் போது மட்டும் கவனமாக அவளை பின் தொடர்ந்தார்கள்…
மகி என்ன செய்கிறாள். எந்த சமயம் எங்கு போகிறாள்.. என்று அனைத்து விவரங்களும் உடனுக்கு உடன் தாமரைக்கு சென்று விடும்.. தாமரை ஏற்பாடு செய்து இருந்த ஆட்களின் மூலம்..
அன்று தாமரை அவள் ஏற்பாடு செய்து இருந்த ஆட்களை வெளியில் சென்று சந்தித்தாள்..
“அவளை பஸ்ஸில் வரும் போது கடத்த முடியாதா..? என்று கேட்டாள்..
அதற்க்கு அந்த அடியாட்கள்… “ இல்ல மேடம் அந்த சமயம் குரு சார் ஏற்பாடு செய்தவங்க ரொம்ப கவனமா கண்காணித்து கொள்றாங்க. அதுவும் பொது இடத்தில் ரொம்பவும் கஷ்டம் மேடம்..” என்று சொல்ல.
“அப்போ எப்போ தான் அவளை தூக்க போறிங்க …? பத்து நாளா அந்த தெருவையும்.. அவளுக்காக என் அண்ணன் மகன் வைத்து இருக்கும் ஆட்கள் என்ன செய்யிறாங்க என்று சொல்லவா உனக்கு சொலையா பத்து லட்சம் கொடுத்து இருக்கேன்…?” என்று கோபத்துடன் தாமரை கேட்ட போது.
அவர்கள் எப்போது…? எப்படி…? மகியை தூக்குவதை பற்றி அவர்கள் திட்டம் தீட்டியதை நிதானமாக அவர்கள் சொன்ன போது தாமரையின் முகம் மெல்ல மெல்ல அந்த தாமரை போலவே மலர்ந்து விட் டது…
அனைத்தும் கேட்ட தாமரை.. “நீங்க சொன்னதை மட்டும் அச்சு பிசகாம செய்துட்டிங்க.. .. ஆளுக்கு பத்து பத்து லட்சம் உங்களுக்கு கொடுத்து விடுவேன்..” என்று சொல்ல.
அவர்கள் நான்கு பேருக்கும் அந்த பத்து லட்சம் ஒரு ஊன்று சக்தியாக இருக்க..தங்கள் திட்டத்தை அன்றே செயல் படுத்த முடிவு செய்து விட்டனர்..
அதன் படி என்றும் போல தான் அன்று மகி தன் அத்தைக்கு சமையலுக்கு உதவி செய்தவள் கல்லூரிக்கு கிளம்பி சென்று பின் அன்று சித்தார்த்துமே கல்லூரியில் இருந்து நேரத்திற்க்கே வருவதால் மகி அன்று சித்தார்த்தோடு தான் வீடு வந்து சேர்ந்தாள்.
பின் வீடு வந்த பின் தன் அன்றாட வேலையான முகம் கழுவி வீட்டில் உடுத்தும் உடை அணிந்து விட்டு காபி குடித்த பின்… அன்று தான் படிக்க வேண்டியதை தன் மாமான் ராம் சந்திரன் உதவியுடன் படித்தவள் இரவு உணவுக்கு சாரதா வேண்டாம் என்று மறுக்க மறுக்க அவருக்கு உதவி செய்த பின்.. அனைவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்ட பின்..
மகி சாப்பிட்ட மேஜையை சுத்தம் செய்ய… சாரதா சமையல் அறையில் பாத்திரத்தை ஒழித்து போட்டு மேடை சுத்தம் செய்து விட்டு.. எப்போதும் போல இரவு தொலைகாட்சியை போட்டு அமரும் சமயம் ராம் சந்திரன் சரியாக செருப்பை மாட்டி கொண்டு வெளியில் கிளம்பி விட்டார்…
அவர் செருப்பை மாட்டவும் மகி தன் அத்தையை பார்க்க. சாரதாவுமே மகியை பார்த்தார்.. பின் இருவரும் சிரித்த பின் மீண்டும் டிவியை பார்க்க தொடங்கினர்..
அப்போது தான் சித்தார்த்துக்கு ஒரு அழைப்பு வந்தது.. ஒரு மருத்துவமனையில் இருந்து ஒரு சின்ன பெண்ணுக்கு ரத்தம் தேவை என்று.. அது சித்தார்த்தின் ரத்த பிரிவாக இருக்க. அவனுமே அம்மா மகியிடம் சொல்லி வெளியில் கிளம்பி விட்டான்…
சாரதா டிவி பார்த்து கொண்டே. “ இன்னுமே உன் மாமா இந்த பழக்கத்தை விட மாட்டேங்குறார் மகி குட்டி.” என்று சொல்ல..
அதற்க்கு மகியோ.. “ என்ன அத்த மாமா என்ன இப்போ டாஸ் மார்க் கடைக்கா போகிறார். இந்த முனையில் இருக்கும் பொட்டி கடைக்கு வாழைப்பழம் வாங்க தானே போகிறார்.. “ என்று சொன்னதற்க்கு தான் சாரதா.
“தினம் தினம் நம்ம வீட்டு முன்ன எல்லா பழமும் வந்து வித்துட்டு போறாங்க. காலையில் கூட நான் மாதுளை பழம் வாங்கும் போது உங்களுக்கு வாழைப்பழம் வாங்கட்டுமா…? என்று கேட்டதற்க்கு வேண்டாம் வேண்டாம் என்று சொல்லிட்டாரு..
அது என்னவோ சாப்பிட்ட பின் அவரே நடந்து போய் அந்த இரண்டு வாழைப்பழத்தை வாங்கி சாப்பிட்ட தான் அவருக்கு சாப்பிட்டது போலவே இருக்கும்.. அப்போ தான் அவருக்கு ஜீரணமும் ஆகும் போல..” என்றும் கிண்டலாக சொன்ன சாரதா…
“அந்த வாழைப்பழத்தை தான் கூட வாங்கினா என்ன.. அது என்ன தினம் தினம் போய் வாங்குவது என்றே தெரியல.. அந்த கடைக்காரன் மட்டும் என்ன..? ப்ரஷ்ஷாவா டெய்லி வாங்கி விற்கிறான்..” என்று சாரதா அங்கலப்பாய் கூற.
தன் அத்தை சொன்ன விதத்தில் மகி சிரித்து விட்டாள் பின்..
“அத்த இதுவுமே நல்லதுக்கு தான் அத்த… சாப்பிட்ட உடன் தூங்காது கொஞ்ச தூரம் காலார நடந்து பழம் சாப்பிட்டு பின் மீண்டும் வீட்டிற்க்கு வந்தா. வாங்கிக்கு வாங்கிங்கும் ஆச்சு… வெளியில் போனா கொஞ்சம் மைன்ட் ப்ரியா ஆகும்.. சாப்பிட்ட சாப்பாடு கொஞ்சம் ஜீரணமும் ஆகிடும்..” என்று சொன்ன மகியிடம்..
“அது என்னவோ போ…” என்று சலித்து கொண்டார்.. அப்போது தான் மகியின் கை பேசி அழைத்தது.
அப்போது நேரம் பத்து இந்த சமயம் யார் என்று எழுந்து போய் தன் கைய் பேசியை எடுத்து பார்க்க. அவளின் மாமா ராம் சந்திரன் தான் அழைத்து இருந்தார்.
மகி தன் அத்தையிடம்.. “மாமா தான் அத்தை.” என்று சொல்லி கொண்டே கை பேசியின் அழைப்பை ஏற்றவள்..
“சொல்லுங்க மாமா..” என்று பேசியதும்.. அந்த பக்கத்தில் இருந்து பேசிய குரல் அவளின் மாமா ராம் சந்திரனுடையது கிடையாது…
அதுவும் அவர் சொன்ன. “ இந்த செல் வைத்து கொண்டு இருந்தவருக்கு ஆக்சிடண்ட் ஆகிடுச்சிம்மா. இவருக்கு நீங்க என்ன வேண்டும்… நாங்க இவரை. ஒரு மருத்துவமனையின் பெயரை சொல்லி அங்கு அழைத்து கொண்டு போகிறோம் ம்மா… நீங்க அங்கு வந்துடுங்க..” என்று மகியை பேச விடாது ராம் சந்திரன் பேசியில் இருந்து அழைத்தவர் பேச.
மகிக்கோ.. முதலில் அவர் சொன்ன அந்த ஆக்சிடண்ட் என்ற வார்த்தையிலேயே பேச்சு வராது சிலையாகி விட்டாள் என்று தான் சொல்ல வேண்டும்…
அதுவும் ஒரு வருடம் முன் இதே போல் ஒரு விபத்து.. பின் அந்த இழப்பு அவள் கண் முன் வந்து சென்றது.
அதுவும் அதில் இருந்து தொடர்ந்து வந்த பிரச்சனைகள்.. இப்போது அந்த பிரச்சனைகள் எல்லாம் தீர வில்லை என்றாலுமே, இப்போது தான் வாழ்க்கை கொஞ்சம் பரவாயில்லையா என்று போய் கொண்டு இருக்கிறது..
இது என்ன..? என்று அதிர்ந்தவள். அவர்கள் சொன்ன அந்த மருத்துவமனையின் பெயரை கேட்டதும்..
மகி உடனே.. “ வேண்டாம் வேண்டாம்.. அந்த ஆஸ்பிட்டல் வேண்டாம்..” என்று மறுத்து விட்டாள்..
அந்த மருத்துவமனை சமீபத்தில் தான் அங்கு உடல் உறுப்பு திருட்டுக்காக விபத்து என்று வந்தவர்களை கோமா ஸ்டேஜோ.. இல்லை இறந்து விட்டார்கள் என்று சொல்லிய விசயத்தில் ஒரு பெரிய பிரச்சனையை சந்தித்து இருந்தது..
அதனால் மகி.. “ இப்போ எங்கு இருக்கிங்க…?” என்று கேட்ட போது.. தாங்கள் இருக்கும் தெரு முனை தான் என்றதில்..
“நானுமே வரேன்.. அது வரை நீங்க மாமா கூட துணையா இருங்க ப்ளீஸ் சார்…” என்று சொன்னவள்..
பின் தன் அத்தையிடம் விசயம் சொல்ல. சாரதாவுமே மகி நினைத்ததை தான் நினைத்தார்.
மகி தான். “ அத்த பெரிய அடி எல்லாம் கிடையாது சின்ன அடி தான் அத்தை..” என்று சொல்லி விட்டு போக பார்த்தவளிடம்..
“நானும் வரேன் மகி.. சின்ன பெண்.. இந்த நேரம் தனியா எப்படி.?” என்று கேட்டவரிடம் மகி..
“அத்த மாமா கூட துணைக்கு நிற்பவர் நல்லவர் போல தான் தெரியுது.. நானும் கூட இருக்கார் என்று தான் சொல்றார்.. நான் அவர் உதவியுடன் ஆஸ்பிட்டலுக்கு போறேன்.. நீங்க அத்தானுக்கு போன் செய்து விசயம் சொல்லுங்க.. அவர் வந்த பின் நீங்க அத்தான் கூட வாங்க அத்த.. நான் என்ன என்றாலுமே போன் செய்து சொல்லுறேன்…” என்று கட கட என்று பேசிக் கொண்டே மகி அவர்கள் வீட்டின் வாசலை தான்டி விட்டாள்…
வெளியில் சென்ற மகி இப்போது தன்னை அழைப்பாள்.. அப்போது அழைப்பாள் என்று என்று பார்த்து கொண்டு இருந்தவர்.. சரி சித்தார்த்துக்கு அழைக்கலாம் என்று தன் கைய் பேசியை வீட்டில் தேடும் சமயம் தான்.. ராம் சந்திரன் வீட்டிற்க்குள் நுழைந்தது…
சாரதா தன் கணவனை பார்த்த போது அவருக்கு ஒன்றுமே புரியவில்லை..
“என்னங்க உங்களுக்கு பெரிய அடி எல்லாம் படலையே…?” என்று கேட்டு கொண்டே தன் கணவனை மேலும் கீழம் பார்த்த சாரதாவுக்கு அப்போது கூட புரியவில்லை…
சதி செய்து தன் மருமகளை வெளியே வர வழைக்க தான் இப்படி சொன்னது என்று..
“ அடியா. என்ன அடி…?” என்று கேட்ட ராம் ..
பின் அதை பற்றி பேசாது.. “ சித்து இருக்கானா என் செல் தொலைந்து போயிடுச்சி… வழியில் ஒருவட் போனில் இருந்து என் போனுக்கு அழைத்தேன் ஸ்வீச் ஆப் என்று வருது.. என்ன செய்யனும்.. தெரியல போலீஸ் ஸ்டேஷனில் போய் கம்பிளையிண்ட் செய்யனுமா…? இல்ல இப்போ அதுக்கும் வீட்டில் இருந்தே செய்ய வசதி இருக்கா.?” என்று ராம் சந்திரன் கேட்க.
ராம் சந்திரன் பேச்சுக்கு எந்த பதிலும் சொல்லும் நிலையில் நம் சாரதா இல்லை.. கணவன் என் செல் தொலைந்து விட்டது என்று கணவன் சொன்ன அந்த வார்த்தையிலேயே என்றதிலேயே சாரதா பேய் அடித்தது போல தன் கணவனையே தான் பார்த்து கொண்டு இருந்தாரே தவிர.. அடுத்து கணவன் பேசியது எதுவும் அவர் மூளையில் பதிவாகவில்லை..
சாரதா அப்படி நிற்கவும்.. “ போன் போனா போது சாரும்மா.. பழைய போன் தான். நானுமே மாத்தனும் என்று தான் நினைத்து கொண்டு இருந்தேன்..
இந்த கம்பிளையிண்ட் செய்யனும் என்று சொல்றது கூட அதை வைத்து ஏதாவது செய்ய போறாங்க என்று தான்…” என்று சொன்ன போது கூட சாரதா அப்படியே நின்று கொண்டு இருப்பதை பார்த்து..
“சாரதா சாரதா.” என்று மனைவியின் தோள் பற்றியவர் பின்..
“மகியும் சித்துவும் படுக்க போயிட்டாங்கலா என்ன…?” என்று கேட்டார்…
அதற்க்கும் சாரதாவிடம் இருந்து பதில் இல்லாது போகவும் தான் ராம் சந்திரன் பயந்து போய் விட்டார்.
“ சாரும்மா சாரும்மா என்ன ஆச்சு.? என்ன ஆச்சு..? உன் உடம்புக்கு ஏதாவது செய்யுதா என்ன..” என்று கேட்டவர் பின் சத்தமாக.
“ மகி சித்து மகி சித்து. என்று சத்தமாக அழைத்த போதும் யாரும் வராது குரலும் கொடுக்காது போகவும் அவரே இருவரின் அறையை போய் பார்த்தவர் இருவரின் அறையிலும் அவர்கள் இல்லாது போக மீண்டும் மனைவியிடம் வந்த ராம் சந்திரன்.
“மகியும் சித்துவும் எங்கே சாரும்மா…?” என்று கேட்டார்.
சாரதாவும் இத்தனை நேரத்தில் ஒரளவுக்கு தெளிந்தும் விட.
கட கட என்று அனைத்தும் ஒன்று விடாது பதட்டத்துடம் சொன்னவர்..
சித்தார்த்துக்குமே கைகள் நடுங்க அழைப்பு விடுத்தவர்.. அப்போது தான் இரத்தம் கொடுத்து விட்டு வெளியில் வந்த மகனிடம் அனைத்துமே கூறியவர்.. இதையும் சேர்த்து தான் சொன்னது..
“நீங்க என்ன செய்வீங்கலோ ஏது செய்வீங்கலோ எனக்கு தெரியாது என் மருமகள் விடியறதுக்குள்ள எந்த வித பிரச்சனையும் இல்லாது அவள் வீடு வந்தாகனும்…” என்று சொன்னவர் பின் அவர் நேராக சென்று அமர்ந்த இடம் அவர்களின் பூஜை அறையில் தான்…
குரு மூர்த்து அன்றோடு தன் பப்பை வேறு ஒருவரிடம் கை மாற்றி விட்டவன்.. பின் தன் புதுய சோரூமுக்கு சென்று அனைத்து வேலைகளையும் முழுமை பெற்று இருந்ததை ஒரு பார்வை இட்டவன் வெளியில் வந்தவன் அந்த கார் ஷோரூமின் முகப்பில் பெயர் பலமையாக ஈஸ்வரி என்ற பெயரில் படிந்து இருந்த அந்த தூசியை தன் கை குட்டை கொண்டு துடைத்து கொண்டு இருந்த இருந்த போது அதை பார்த்த அங்கு வேலை செய்து கொண்டு இருந்தவன் இவனிடம் ஒடி வந்தவன்.
“சார் நீங்க ஏன் இதை எல்லாம் செய்யிறிங்க சார். காலையில் தான் சார் துடைத்து விட்டேன்… மெயின் ஏரியா அது தான் சார் கார் பஸ் போவதில் தூசி படிந்து விடுது.” என்று சொன்னவனுக்கு எந்த பதிலும் முதலில் சொல்லாது அந்த ஈஸ்வரி என்ற பெயரில் துளி தூசி கூட இல்லாது நன்றாக துடைத்த பின்..
அந்த வேலையாளிடம். “ கார் ஷோ ரூம் மெயினான இடத்தில் தான் வைக்கனும் ஒதுக்கு புரமான இடத்தில் வைக்க இது என்ன பலானா விசயமா என்ன…?” என்று கிண்டலாக கேட்டவன் பின்..
ஈஸ்வரி என்ற அந்த பெயர் பலகையை காட்டி.. “ இதில் ஒரு தூசி கூட இருக்க கூடாது.. காலையில் தான் துடைத்தேன்.. மாலையில் தான் துடைத்தேன் என்ற இந்த கணக்கு எல்லாம் சொல்ல கூடாது.. எப்போதுமே ஈஸ்வரி இந்த பெயரில் ஒரு தூசி கூட இருக்க கூடாது அவ்வளவு தான் சொல்லுவேன்..” என்று சொன்னவனுக்கு அப்போது தெரியவில்லை…
தன்னவளின் பெயரான அந்த ஈஸ்வரி என்ற அந்த பெயர் பலகையில் கூட தூசி இருக்க கூடாது என்று நினைப்பவளின் அந்த ஈஸ்வரிக்கே கலங்கம் வைக்க வேண்டி அதற்க்கு உண்டான வேலைகள் நடந்து கொண்டு இருக்கிறது என்று…
அது ஒரு ஒதுக்கு புரமான ஏரியா. அங்கு வாழ்க்கை தரத்திலும் பொருளாதாரத்திலும் தாழ்ந்தவர்கள் தான் பெரும்பாலோர் வசித்து கொண்டு இருக்கும் ஏரியா அது.
அந்த ஏரியாவில் இருக்கும் ஒரு டிகடையில் தான் நம் மகியோடு கல்லூரியில் படிக்கும் வசந்த் டீ குடித்து கொண்டு இருந்தான். அவன் வீடும் அந்த ஏரியா தான்.
டி குடித்து கொண்டே தன்னை சுற்றி ஒரு பார்வை பார்த்தான்.. அனைவருமே வாழ்க்கை தரத்தில் தாழ்ந்தவர்கள் தான். வசந்துக்கு தன் ஏழ்மை பற்றியோ… தான் இங்கு இருப்பதை பற்றியோ அவமானமாக நினைக்கவில்லை..
ஆனால் இங்கு ஒரு சில விசயங்கள் சட்டத்திற்க்கு புரம்பாக நடைப்பெற்று கொண்டு இருக்கிறது.. அவன் வீட்டிற்க்கு எதிரில் தான் ஒரு மாடி வீடு உள்ளது.. அந்த ஏரியாவிலேயே அது தான் கொஞ்சம் பெரிய வீடு…
ஆறு மாதம் முன்… தான் அங்கு இருந்தவர்கள் வீடு காலி செய்தனர்.. வேறு புதிய குடித்தனம் அங்கு வந்தது..
ஒரு மூத்த பெண்மணி.. பின் ஏழு இளம் வயது பெண்மணிகள்.. அங்கு இருப்பவர்கள் முதலில் யார் என்ன என்று எல்லாம் விசாரிக்கவில்லை தான்..
தினம் தினம் வேலைக்கு சென்றால் தான் அவர்களின் பிழைப்பே ஓடும்.. இதில் அடுத்த வீடு என்ன ஏதூ என்று நின்று பார்க்கவும் கேட்கவும் எல்லாம் யாருக்கும் நேரம் கிடையாது.
ஆனால் மூன்று மாதம் கழித்து அனைவரும் பேசியது அந்த வீட்டை பற்றி தான். இரவு ஆனால் நிறைய ஆடவர்கள் அந்த வீட்டிற்க்கு வந்து செல்வது பற்றியான பேச்சு.. பின் அது என்ன இடம் என்று இங்கு இருந்த ஆண்களில் ஒரு சில சபல புத்திகாரர்கள் சென்று வந்ததில் உறுதி ஆகி விட்டது…
காவல் நிலையத்தில் சொல்லி ஆகி விட்டது.. அவர்களும் வந்தார்கள் தான்… என்ன ஒன்று அவர்கள் வந்தது அவர்களை பிடிக்க கிடையாது… என்ன ஒன்று கஸ்டமர்களாக இல்லை என்றால் மாமூல் வாங்கி செல்ல.
அனைவருமே ஏழை. இதில் தங்களின் பாட்டு பாடவே சரியாக இருக்கும் போது இது போல எல்லாம் யார் பார்ப்பர்.. அப்படியே விட்டு விட்டனர்.
இதில் அந்த வீதியில் அனைவரோடு மிகவும் பாதிக்கப்பட்டது யார் என்றால் வசந்த் குடும்பத்தினர் தான்…
காரணம் வசந்துக்கு தந்தை இல்லை.. இவனுக்கு கீழ் மூன்று தங்கைகள்… நீங்களெ நினைத்து கொள்ளுங்கள்… வசந்தின் தாய் ஒரு கட்டட தொழிலாளி… வசந்தின் தங்கைகள் மூன்று பேரும் படிப்பவர்கள்.. இந்த வீட்டை காலி செய்து விட்டு போய் விடலாம் என்று பார்த்தால் இது சொந்த வீடாக போய் விட்டது.
புரம்போக்கு இடம் தான்.. வசந்தின் தந்தை இங்கு வீடு கட்டியதால் இது வரை வாடகை கொடுக்காது ஜீவனம் போய் கொண்டு இருக்கிறது.. அதனால் இங்கேயே இருக்கும் சூழ் நிலை…
மூன்று பெண்களை வைத்து கொண்டு அது போலான ஒரு இடத்தில் இருப்பது என்பது வயிற்றில் நெருப்பை கட்டி கொண்டு தான் இருப்பது.. ( நான் நிறுத்த வேண்டும் என்ற இடத்திற்க்கு இன்னும் வளர்ந்து கொண்டே போவதால் பதிவு செய்து விட்டேன்…)