Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம், "கதையருவி" தளத்திற்கு தங்களை வரவேற்கிறோம்!

    இத்தளத்தில் எழுத எங்களை "vskathaiaruvi@gmail.com" என்ற மின்னஞ்சலில் தொடர்புக் கொள்ளவும். நன்றி!

Pirithariyaa Pithana Podhum-9

  • Thread Author
அத்தியாயம்..9



நீச்சல் குளத்தின் மீது அமர்ந்து கொண்டு காலை மட்டுமே நீரில் விட்ட வாறு.. கையில் இருந்த சிகரெட்டை மெல்ல மெல்ல இழுத்து விட்டு கொண்டு இருந்தவனின் காதில் கேட்ட கொலுசு சத்தத்தில்..

யார் என்று திரும்பியும் பாராது லிங்கா “ வா மது.. என் கிட்ட எதாவது பேசனுமா..?” என்று கேட்டான்..

அவன் கேட்ட கேள்விக்கு பதில் அளிக்காது வந்தவள் அவன் அமர்ந்து இருந்தது போலவே அவளும் நீச்சல் குளத்தில் காலை விட்டு லிங்காவுக்கு கொஞ்சம் இடை வெளி விட்டு அமர்ந்தாள்..

மது அமர்ந்தும் பேசுவாள் என்று நினைத்து அவளுக்கு அவகாசம் கொடுக்க நினைத்து அதன் பின் எதுவும் பேசாது தன் சிகரெட்டின் அளவை குறைத்து கொண்டு இருந்தவன் அது தீர்ந்ததும்…

இப்போது முழுவதும் அவளை பார்க்கும் வாட்டில் திரும்பி அமர்ந்த லிங்கா ..

திரும்பவும் அதையே கேட்க.. இப்போது மதுவுமே லிங்காவை நேர்க் கொண்டு பார்த்தவள்.. “நீங்க இன்னைக்கு அந்த பத்திரிக்கையாளர்கள் முன்னே பேசினது உண்மையா.. ? இல்ல உங்க பெயரை காப்பாற்ற நினைத்து முன் கொலையை தற்கொலையா மாத்தினது போல நீங்களும் மாத்திடுவீங்களா..?” என்று கேட்டவளின் குரலில் கோபத்தோடு ஒரு தீவிரமும் தெரிந்தது..

அவள் பேச பேச அவள் முகத்தை மட்டுமே தான் பார்த்து கொண்டு இருந்தானே தவிர.. முன் போல அவன் கண்கள் அவள் முகத்தை விட்டு கீழே இறங்கவில்லை..

அதே போல் தான் மதுவும் லிங்காவை பார்த்தாளே. தன் உடை சரியாக இருக்கிறதா என்று தான் அவள் கண்கள் போகும்., ஆனால் இப்போது.. முன் அவன் என்ன ட்ரஸ் என்று கேட்டானே.. அதே இரவு உடையை தான் இன்று அவசரத்திற்க்கு உடுத்தி இருந்தாள்..

எதுவும் சட்டை செய்யாது இருவரின் பேச்சும்.. இன்று நடந்த பிரச்சனையில் தான் இருந்தது..

மதுவின் பேச்சில் லிங்கா. “ அப்போ அவசர அவசரமா அமெரிக்காவில் இருந்து படிப்பை பாதியிலேயே விட்ட காரணம் இது தான் இல்லையா..?” என்ற கேள்விக்கு அவள் வாயால் பதில் சொல்ல வில்லை என்றாலும் அவள் பார்வை அவனுக்கு பதில் சொல்லி விட்டது..

இப்போது லிங்கா கேட்டான்.. “ சொல்..” என்று..

அதற்க்கு மது.. “ எதை சொல்ல சொல்றிங்க..” என்றதற்க்கு.

“எந்த பெண் உனக்கு வேண்டிய பட்ட பெண்.. இன்றைய தற்கொலை..” என்ற ஆரம்பித்தவனின் பேச்சை மது..

“தற்கொலை கிடையாது.. கொலை.. “ என்று அழுத்தம் திருத்தமாக சொன்னவளையே பார்த்து கொண்டே..

“ ம் கொலை… இதற்க்கு முன் இரண்டு கொலை நடந்ததா சொல்லி இருக்காங்க.. உனக்கு தெரிந்த பெண்.. முதலா இரண்டாவதா..?” என்று கேட்டான்..

அவன் கேள்விக்கு உடனே பதில் சொல்லும் நிலையில் மது இல்லை.. இப்போது வாய் திறந்தாளே கண்டிப்பாக வார்த்தைகள் வராது..

அந்த அளவுக்கு அவள் நெஞ்சு அடைத்து கொண்டு இருந்தது. பேச என்று உதட்டை அசைத்தாளே கண்டிப்பாக அழுகை தான் வரும்.

அதோடு இவனை எந்த அளவுக்கு நம்பிக்கையானவன் என்பது அவளுக்கு தெரிய வேண்டி இருந்தது..

அதுவும் இப்போது அந்த கல்லூரி இவனுடையது என்ற பட்சத்தில் அதன் பெயரை கெடும் ஒரு விசயத்தை இவன் செய்வானா..? என்று ஒரு பக்கம் யோசித்தாலுமே, இந்த வீட்டிற்க்கும் இவனுக்கும் இருக்கும் பிரச்சனை அவள் அம்மா சொல்லி தெரியும்.

அதோடு அந்த இரண்டு கொலைக்கு இவன் சம்மந்தப்பட்டு இருப்பான் என்ற சந்தேகம் இல்லாதவன் இவன்.. ஏன் என்றால் பதிமூன்று வருடங்கள் கழித்து இப்போது தான் இந்தியா வந்துள்ளான்..

அதனால் அந்த கொலைக்கும் இவனுக்கும் சம்மந்தம் கிடையாது.. ஆனாலுமே இப்போது நடந்த கொலையை வெளியில் கொண்டு வருவானா..? இல்லை கல்லூரி அதன் மூலம் கிடைக்கும் பணம்.. இதை பெரியதாக பார்ப்பானா..? என்று யோசித்துக் கொண்டு இருக்கும் போதே.

லிங்கா .. “உனக்கு வேறு வழி இல்லை மது.. நீ என்னை தான் நம்பியாக வேண்டும்.. கண்டிப்பா உன் நம்பிக்கையை நான் காப்பாற்றுவேன்.. தெரியும்.. நீ சொல்லாது எனக்கு இந்த விசயத்திற்க்காக தான் படிப்பை விட்டு, அதுவும் நம்ம காலேஜ் சேர்ந்து இருக்கேன் என்று எனக்கு புரியுது..

அதோடு இன்னைக்கு நீ ஹாஸ்ட்டல் பக்கம் தான் போயிட்டு வந்தேன் என்பதும் எனக்கு தெரியும்..” என்றவனின் பேச்சில்.

“ஆம். நான் ஹாஸ்ட்டல் போயிட்டு தான் வந்தேன்.. தினம் ஒரு முறையாவது என் கால் தன்னால் அங்கு போயிடும்.. இது நான்கு வருடங்கள் பழக்கம்..” என்று சொல்லி கொண்டே லிங்காவை பார்த்த மது.

“கேட்டிங்களே. கொலை செய்த பெண் உனக்கு தெரிந்த பெண்ணா என்று.. இல்ல. எனக்கு தெரிந்த பெண் கிடையாது.” என்று கூறியவளை யோசனையுடன் பார்த்து கொண்டு இருந்த லிங்கா..

அவள் அடுத்து சொன்னதில் அதிர்ந்து போய் அமர்ந்து இருந்தவன் எழுந்து நின்று விட்டான்..

“ என்ன ..? என்ன.. சொல்ற..? சும்மா உளறாதே… எனக்கு தெரியும்.. நீ பிறக்கும் போது எனக்கு எட்டோ ஒன்பதோ.. கொஞ்சம் விவரம் தெரியும் வயது தான்.. உன்னை நான் பார்ப்பதில் அதுவும் தான் நான் யோசிக்க வேண்டி இருக்கிறது..” என்றவனின் பேச்சை மது கவனிக்கவில்லை..

ஆனால் லிங்கா முதலில் அவள் சொன்ன. “ எனக்கு தெரிந்த பெண் கிடையாது.. என் கூட பிறந்தவள்… கூட பிறந்தவள் என்றால், முன்னே பின்னே கூட கிடையாது.. சேர்ந்து. புரியலையா…? ட்வீன்ஸ்..” என்ற மதுவின் அந்த பேச்சு தான் லிங்காவின் அதிர்வுக்கு காரணம்..

பின் மீண்டும் திரும்ப அதையே அழுத்தமாக சொல்ல.. இப்போது அதே யோசனை படிந்த முகத்துடன் அவள் அருகில் அமர்ந்தான்.. அவன் இடை வெளி எல்லாம் விட வில்லை.

“நீ சொல்வது நிஜமா…? ” என்று மீண்டும் தெளிவு படுத்தி கொள்ள கேட்க. இப்போது மது பதில் சொல்லவில்லை.. அவனை பார்க்கவும் இல்லை..

அவள் பார்வை நீரில் நிலைத்து இருந்தது.. ஆனால் அவள் மனது இங்கு இல்லை என்பதை நீரையே வெறித்து பார்த்து கொண்டு இருந்த அவள் கண்கள் அவனுக்கு சொன்னது.

இன்னும் நெருங்கி அவள் தோள் மீது லிங்கா கை வைக்க இப்போது திரும்பி அவனை பார்த்த மதுவின் கண்கள் கலங்கி ஏதோ சொல்ல வர முயல்வதும்.. சொல்ல முடியாது போவதுமாக அவள் நெஞ்சு தொண்டை ஏற்ற இறக்கத்தில் கண்டு கொண்டவன்..

“என்னை நம்பி சொல்லலாம் மது.. நான் பார்த்த வரைக்கும் இந்த வீட்டில் கூட நீ யாரோடவும் ரொம்ப க்ளோஸா இல்ல.. ஒரு வகையில் என்னை மாதிரி தான் நீயும் எனக்கு தெரியிற. அதனால தான் என்னவோ.. யாரையும் பார்க்க தோனத எனக்கு உன்னை பார்த்துட்டு இருந்தேன் போல..” என்றவனின் பேச்சை மது இப்போதும் கவனிக்கவில்லை ..

அதனால் தான் அவன் பேசாதது போலவே மது.. “ இது உங்க கிட்ட சொல்வது சரியா..? தப்பா…? என்று கூட எனக்கு தெரியல.. அதுவும் இப்போ அந்த காலேஜ் உங்களுடையது எனும் போது நான் சொல்வது எனக்கே கூட ஆபத்தா போக கூடும்..”

“ஆனா சொல்லனும்.. யார் கிட்டாவது சொல்லனும்.. சொல்லி தான் ஆகவேண்டும்.. நான் சரியா சாப்பிட்டு சரியா தூங்கி ஏன் குளிச்சிட்டு இருக்கும் போது கூட என் மனது முழுவதும் அவள் தான்.. அவள் தான்..”

“நான் சென்னை கூப்பிடாது இருந்து இருந்தால் உயிரோட இருந்து இருப்பா.. நான் தான் நான் தான் நம்ம ஸ்கூல்ல படி.. அப்போ தான் நம்ம பார்த்துக்க முடியும் என்று அவளை பேசி கன்வீன்ஸ் பண்ணி இங்கு வர வழைத்தேன்..”

“அதே போல் தான் காலேஜ் நம்ம காலேஜிலேயே படி என்று அவளை இங்கு தனியா விட்டு விட்டு நான் பாட்டுக்கு அமெரிக்கா போயிட்டேன்.. அட்லீஸ்ட் நான் இங்கு இருந்து இருந்தாலாவது.. அவள் உயிரோடு இருந்து இருப்பாளோ என்னவோ..” என்று சொல்ல ஆரம்பித்தவள் தன் கடந்த காலத்தை லிங்காவிடம் சொன்னவள்.

அந்த நாட்களுக்குள் அவளுமே சென்று விட்டாள்..

“அப்போ நான் பத்தாவது படித்து கொண்டு இருந்தேன்.. அப்போ என் கிட்ட தனியா செல் போன் எல்லாம் கிடையாது.. லேன் லைனுக்கு தான் கூப்பிட்டா. தாத்தா தாத்தா தான்.. உன் பிரண்டா உன் கிட்ட பேசனுமாம்..” என்று என்னை கூப்பிட்டார்.

நான் போன் எடுத்த உடனே.. அவள் அவள் உனக்கு அங்கு எந்த பிரச்சனையும் இல்லையே நீ நல்லா தானே இருக்கே..” அவள் யார். என்ன. என்று கூட சொல்லவில்லை..

“நான் நான் நல்லா இருக்கேன்னா. அது அது தான் அவள் முதல்ல தெரிஞ்சிக்க கேட்டா. ஆனா நான் அவள் நலனை கவனிக்காம விட்டு விட்டேன்.” என்று கண்கள் கலங்கி சொல்லி கொண்டு வந்தவள்.

பின் அவள் என்னை பார்த்து சொன்ன.. “ நான் பாட்டுக்கு அவள் அவள் என்று சொல்றேன் பாரு.. சஜனா.. அவள் பேரு சஜனா பேரு நல்லா இருக்குலே. பார்க்கவும் ரொம்ப நல்லா இருப்பா.. என்னை விட அழகு.. என்னை விட அறிவு.. அவள் என் கிட்ட பேசும் போது எல்லாம் நான் இதை தான் நினைப்பேன்.

அவள் கிட்ட நான் சொல்லியும் இருக்கேன்.. நீ ரொம்ப டேலண்ட் பர்சன் என்று.. நீ மட்டும் இங்க ஸ்கூல் எங்க காலேஜ் படிச்சா நீ இன்னும் நல்லா வரலாம்.. நல்லா வரலாம்..” என்று சொல்லி கொண்டு வந்தவள் அதற்க்கு மேல் அவளாள் பேச முடியவில்லை.. வாய் பொத்தி அழுதவளை லிங்காவால் கண் கொண்டு பார்க்க முடியவில்லை..

அவளை அணைத்து கொண்டவன்.. “மது வேண்டாம் விடு விடு.. நீ என் கிட்ட ஒன்னும் சொல்ல தேவையில்லை… வேண்டாம் வேண்டா, நான் ஒன்னும் சொல்ல வேண்டாம்.. நீ அமைதியா இரு எனக்கு அது போதும்..” என்றவனின் நெஞ்சு பகுதியில் தன் முகத்தை பொதித்து வைத்து கொண்டு இருந்தவள் நிமிர்ந்து அவன் முகத்தை பார்த்த மது.

“ இல்ல நான் சொல்லிடுறேன். முடியல.. எனக்கு இதுக்கு மேல உள்ளே வைத்து புழுங்க என்னால முடியல.” என்று சொல்லி கொண்டு வந்தவள் பின் தன்னை நிதானம் படுத்திக் கொண்டவளாக..

லிங்காவின் நெஞ்சில் இருந்து தன் முகத்தை எடுத்தவள் வழிந்த கண்களின் நீரை நீச்சல் குளத்தில் இருந்த நீரில் இருந்து முகத்தை அலம்பிய பின்..

லிங்கா அங்கு இருந்த டவலை கொடுத்ததை வாங்கி முகத்தை நங்கு அழுத்தி துடைத்து விட்டு.. திரும்ப அந்த டவளை லிங்காவிடமே கொடுத்து விட்டு.

“ இப்போ ஒகே. இப்போ ஒகே. ப்லீங் பெட்டர்..” என்று உண்மையில் நார்மல் ஆகியதால் இப்படி சொன்னாளா இல்லை.. இப்படி திரும்ப திரும்ப சொன்னால் நார்மாலாகி விடும் என்று நினைத்து சொன்னாளா.. ?

சொன்னவள் சிறிது நேரம் கழித்து தன்னையே திடம் படுத்திக் கொள்ள நேரம் எடுத்து கொண்ட பின்..

“ அன்னைக்கு போனில் பேசியது சஜனா.. நான் யார்.. பேசுவது.. யாராவது என்னிடம் விளையாடுறாங்களா.. என்ற சந்தேகம் தான்.. அதில் போனை வைக்க தான் நினைத்தேன்..

ஆனால் அந்த குரல்.. நிஜமா அதுல அவ்வளவு அக்கறை இருந்தது.. அந்த பேச்சு விளையாட்டு பேச்சு இல்ல எனக்கு தோனுச்சி . அதனால தான் அம்மா வந்து யார்.. என்று கேட்ட போது யோசிக்காது என் பிரண்ட் என்று சொல்லிட்டேன்..



அப்புறம் அவள் சொன்ன. இப்போ உன் பக்கத்தில் எல்லோரும் இருக்காங்க போல.. நான் ஈவினிங்க இந்த நேரத்தில் போன் செய்யிறேன்.. நீ போன் கிட்ட இரு.. எந்த சமயம் உன் வீட்டில் யாரும் இருக்க மாட்டாங்க என்று சொல்.. நான் உன் கிட்ட நிறைய பேசனும் என்று சொன்னா..

நான் அதுக்கு நேரில் பார்த்து பேசலாமே என்று சொன்னதற்க்கு தான். நான் மும்பையில் இருக்கேன் என்று சொன்னது…” என்று மது சொல்லி கொண்டு இருக்கும் போது லிங்காவுக்கு அப்போது ஒன்று நினைவுக்கு வந்தது.

அவனின் சின்ன அத்தை அதாவது மதுவின் அம்மா காயத்ரி..அப்பா மும்பையில் இருந்ததும்.. இவள் பிறந்து மூன்று மாதம் கை குழந்தையாக இருந்த போது தான் சென்னை வந்ததும்..



நினைத்தது சொல்லாது அமைதியாக மது சொல்வதை கவனிக்க ஆரம்பித்தான்..

அவளுமே ஒப்புதல் வாக்கு மூலம் போல்..நடந்தது அனைத்தையும் சொல்ல ஆரம்பித்தாள்.

அதாவது நாம் மும்பையில் இருப்பதால் நேரில் பார்க்க முடியாது என்றதும்.. மது.. “ மும்பையில் இருந்த உனக்கும் எனக்கும் என்ன சம்மந்தம்..? நாம் ஏன் பேச வேண்டும். அதுவும் இல்லாது நான் அப்பா அம்மாவுக்கு தெரியாம எல்லாம் பேச மாட்டேன்..” என்று அப்போது அவள் வயதிற்க்கு தகுந்தது போல் தான் மதுவின் பேச்சு இருந்தது..

ஆனால் சஜனாவின் பேச்சு வயதிற்க்கு மீறிய முதிற்ச்சி அவள் பேச்சில் தெரிந்தது..

“இந்த விசயம் …நீ அதாவது என்னோட பேசுவது யாருக்கும் தெரியாது தான் இருக்க வேண்டும் மது.. அதுவும் இப்போது மட்டும் கிடையாது எப்போதுமே..” என்றதில் மது மீண்டும் ..

“அப்படி வீட்டு பெரியவங்களுக்கு தெரியாது உன் கிட்ட பேச வேண்டும் என்ற எந்த அவசியமும் எனக்கு கிடையாது.” என்றவளின் பேச்சில்..

“ உன் கூட பிறந்த,.. அதுவும் கருவில் கூட உன் கூட இருந்த என்னோடு பேச உனக்கு தேவையில்லையா மது..” என்ற சஜனாவின் இந்த பேச்சும், அதை சொல்லும் போது அவள் குரலில் வெளிப்பட்ட பாசத்திலுமே, அதை அப்படியே விட மதுவுக்கு மனது இல்லாது..



மாலை இந்த சமயம் வீட்டில் யாரும் இருக்க மாட்டாங்க என்று தகவல் சொன்ன மது சொன்னப்படி தொலை பேசியின் அருகில் நின்று இருந்தாள்..

சஜனாவும் சரியாக அந்த நேரத்திற்க்கு மதுவை அழைத்து விட்டாள்..

விட்டவள் சுத்தி வளைக்காது.. ‘” நமக்கு முன் கூட பிறந்தவள் இரண்டு பேரு அக்கா இருக்காங்க மது..” என்றவளின் பேச்சை மது தடுக்க தான் பார்த்தாள்..

ஆனால் சஜனா .. “ இதோ பார் மது. எனக்கும் இங்கு ரொம்ப நேரம் பேச டைம் இல்ல. நம்ம அப்பா வர இன்னும் அரை மணி நேரம் இருக்கு.. அம்மாவை இப்போது தான் எனக்கு ஒரு பொருள் வேண்டும் என்று வாங்க அனுப்பி வைத்தேன்..

அவங்க வர இன்னும் அரை மணி நேரம் பிடிக்கும்.. சோ நமக்கு பேச நேரம் இருப்பது அரை மணிநேரம் மட்டும் தான்..

நான் எல்லாம் சொல்லி விடுகிறேன். சொன்னதற்க்கு பின்.. எந்த சந்தேகம் இருந்தாலும் என் கிட்ட கேளு மது..” என்று இருக்கும் சூழ்நிலையை மதுவுக்கு தெளிவு படுத்திய பின் சஜனா.



“ கொஞ்ச நாள் முன் தான் நம்ம பாட்டி இறந்தாங்க… போன மாதம் நம்ம அம்மா நம்ம அப்பா கிட்ட பேசினதில் தெரிய வந்த விசயம் தான் என்னோடு ஒரு பெண் பிறந்தது.. உன் கிட்ட ஏற்கனவே சொன்னது போல நமக்கு முன் இரண்டு அக்காக்கள்.. எந்த ஊரா இருந்தாலுமே, பெண் அதுவும் தொடர்ந்து இரண்டு பெண்.. அன்று பாட்டி சொல்லிட்டு தான் இருந்து இருக்காங்க போல..

மூணாவதா நாம் ஜனித்த போது பாட்டி ஆண் குழந்தையா இருக்கும் என்று ஆசையோடு ரொம்ப எதிர் பார்த்துட்டு இருக்காங்க..

மூனாவதும் பெண். அதுவும் இரண்டும் பெண் என்றால், பாட்டி ஆடி தீர்த்து விட்டாங்க போல. தெரியும் ட்வீன்ஸ் என்று.. ஆனா என்ன குழந்தை என்று சொல்லவில்லை..

இரண்டில் ஒன்றாவது ஆணா இருக்கும் என்று ரொம்ப எதிர் பார்த்துட்டு இருந்து இருக்காங்க… பெண் என்றதில் பிரச்சனை மருத்துவமனையிலேயே வெடித்து இருக்கு.

அப்போ தான் இப்போ உன் அம்மா அங்கு பிரசவத்திற்க்கு வந்து இருக்காங்க. அவங்களுக்கு திருமுணம் முடிந்து ரொம்ப வருடங்கள் கழித்து ரொம்ப வருஷம் குழந்தை இல்லாது ட்ரீட்மெண்ட் செய்து தான் குழந்தை உண்டாகி இருக்கு..

அதுவும் அந்த குழந்தை உண்டாக இரண்டு முறை முயற்ச்சி செய்து மூன்றாம் முறை குழந்தை உருவானது போல.. இது தான் கடைசி முயற்ச்சி என்று சொல்லி தான் டாக்டர் அந்த குழந்தை முயற்சி செய்து இருக்காங்க.. அது வெற்றி ஆகி விட்டது தான்..

ஆனால் குழந்தை இறந்து பிறந்ததில் இப்போ இருக்கும் உன் அம்மாவுக்கு உடம்பு ரொம்ப பிரச்சனை ஆகி ஐந்து நாள் ஐசியூவில் வைத்து இருக்காங்க.. பின் கூட முழுமையா குணமாகவில்லை போல..

நம் அம்மாவுக்கு இரண்டு பெண் குழந்தை அதுவும் ஏற்கனவே இரண்டு பெண் இருக்கு என்று தெரிந்து இப்போதைய உன் அப்பா நம்ம அப்பா பாட்டி கிட்ட பேசி இருக்காங்க.. அதாவது ஒரு குழந்தையை எங்களுக்கு தத்து கொடுத்து விடுங்க என்று..

அதற்க்கு பாட்டி உடனே ஒத்து கொண்டு விட்டாங்க ..ஆனால் அப்பா அம்மாவுக்கு உன்னை தத்து கொடுப்பதில் அவ்வளவு விருப்பம் கிடையாது..

பாட்டி ஒரு குழந்தை கொடுப்பது என்றால் இன்னொரு குழந்தையோடு உன் பொண்டாட்டி வீட்டுக்கு வரட்டும்.. இல்லை என்றால் நான் எங்காவது போய் விடுகிறேன் என்று பாட்டி அப்பா அம்மாவை எமோஷனல் ப்ளாக் மெயில் செய்து இருக்காங்க.

பின் தான் இப்போதைய உன் அப்பா அம்மாவை பற்றி விசாரித்து இவங்களும் மும்பை தானே என்று உன்னை சட்டப்படி தத்து கொடுத்து இருக்காங்க..

ஆனால் கொஞ்ச நாளில் உன் அப்பா அம்மா உன்னை அழைத்து கொண்டு அவங்க சொந்த ஊர் சென்று விட்டாங்க என்றதில் பாவம் அம்மா தான் கொஞ்சம் பயந்து போயிட்டாங்க.

பின் அப்பா தான் நல்லவங்க என்று தானே தத்து கொடுத்தோம்.. அதோடு குழந்தை இல்லாது தான் நம்ம குழந்தையை கேட்டாங்க… இங்கு வளர்ந்தா நாளாவதா ஒன்றா தான் வளர்ந்து இருப்பா.

அவங்க வசதி தான்.. ஒரே பெண் செல்வாக்கா தான் வளர்வா என்று அப்பா அம்மாவை ஆறுதல் படுத்தி பின் இருக்கும் எங்களை பார்த்துட்டு இருந்து இருக்காங்க பாட்டி இறந்ததும் அம்மா.. திரும்பவும் உன்னை பத்தி பேசினதாலா தான் எனக்கு எல்லாம் தெரிய வந்தது.” என்று அனைத்தும் சஜனா சொல்லி முடித்ததும்..



மதுவுக்கு அந்த வீடே சுழல்வது போல் ஆனது… உண்மையா..? உண்மையா.? என்று கேட்டு தெரிந்து கொண்டாள்.

பின் அப்போதும் சந்தேகம் விலகாது. “ என் அட்ரஸ் எப்படி உனக்கு தெரிந்தது போன் நம்பர் என்று கேட்டதும்.. அதற்க்கு அவள் விளக்கம் தந்தாள்..

அவள் தோழியின் அப்பா டிக்டீவ் வைத்து நடத்தி கொண்டு இருக்கிறார்.. நான் தத்து கொடுத்தால், அதை பற்றியதான சான்றிதழ் ஏதாவது இருக்கும் என்று.. யாரும் வீட்டில் இல்லாத போது பீரோவில் தேடி இருக்கிறாள்.

தேடியதில் கிடைத்தும் விட்டது… பின் அதை தான் தன் தோழியின் தந்தையிடம் தந்தது.

அவர் அதற்க்கு எளிதில் ஒத்து கொள்ளவில்லை.. ஆனால் சஜனா. தான் அந்த பெண் எப்படி இருக்கா என்று மட்டும் எனக்கு தெரிய வேண்டும் அங்கிள்.. நான் இதை என் அப்பா அம்மாவிடம் கூட தெரியப்படுத்த மாட்டேன் அங்கிள் என்று அவ்வளவு சொன்னதும் தான் ஒத்து கொண்டார்..



ஒரு வாரம் கழித்து தான் உன் முழு விவரமும் எனக்கு தெரியும் மது.. நான் சொல்வது உண்மை.. இதில் பொய் சொல்ல எதுவும் இல்லை..

அதோடு அப்பா அம்மாவுக்கு உன் அப்பா விவரம் மட்டும் தான் தெரிந்து இருக்கிறது.. அதாவது அந்த டிடெக்டீவ் அங்கிள் விசாரித்தது.. எஸ். எம் காலேஜ் ஸ்கூல் என்று சொன்னது எதுவும் இங்கு தெரியவில்லை..

நீ நல்லா இருக்க தானே. எனக்கு அது போதும்.. “ என்று விட்டாள்..

ஆனால் என்னால் தான் அதை கடந்து வெளியில் வர அவ்வளவு நாள் பிடித்தது.. கூடவே நான் எந்த ஆஸ்பிட்டலில் பிறந்தேன்.. அப்பா அம்மாவிடம் தனி தனியே கேட்டதற்க்கு இருவரும் வேறு வேறு மருத்துவமனையின் பெயரை சொன்னார்கள்.

பின் சஜனா ;போலவே ஏதோ கிடைக்குமா என்று தான் நானும் அப்பா அம்மா வீட்டில் இல்லாத சமயம் அவங்க அறையில் இருந்த பீரோவில் தேடினேன்.. கிடைத்தது.. சஜனா சொன்னது உண்மை தான் என்ற ஆதாரம் என் கண் முன்..

பின் நானே தான் சஜனாவுக்கு அழைத்து பேசினேன்.. அதோடு இங்கே அப்பா அம்மா நான் தத்து பெண் என்பதை யாருக்கும் சொல்லவில்லை..

அவங்க அப்பா அம்மாவுக்கு கூட தெரியாது தான் பார்த்து கொண்டாங்க.. அம்மாவுக்கு இறந்த அந்த குழந்தை பிரசவம் அங்கேயே பார்த்து கொண்டது, அந்த சமயம் இங்கு இருந்து யாரும் வராதது அதற்க்கும் வசதியாகவும் போய் விட்டது.

அதனால் எங்கள் பேச்சு தொடர்ந்தது.. ஆனால் யாருக்கும் தெரியாது பார்த்து கொண்டோம்..” என்று மது சொல்ல சொல்ல லிங்காவுக்கு ஏதோ புரிவது போல்..

அந்த பெண்.. அந்த பெண்.. என்று லிங்காவின் மனது உழலும் போதே அவன் நினைத்தது சரி தான் எனபது போல் தான் மது அடுத்து சொன்ன விசயங்கள் இருந்தது..






























 
Active member
Joined
May 11, 2024
Messages
193
Madhu ku ippadi oru flash back ah😥kuda pirantha twin sister iranthutala😥 yaara manasala close nu ninaikuramo avanga kitta thaan manasa thorakamudiyum❤️ madhu linga kitta nambi ellathaiyum solrana avana close ah ninaikura😍nice interesting ud sis ❤️
 
Well-known member
Joined
Jun 1, 2024
Messages
270
இறந்து போனது மதுவோட ட்வின் சிஸ்டரா...... பாவம் மது கூட சேர்ந்து இருக்குறதுக்காக வந்த பொண்ணை அநியாயமா கொன்னு இருக்காங்க.... ☹️☹️☹️
இன்னும் என்ன என்ன இருக்கோ..... 😨😨😨😨
 
Administrator
Staff member
Joined
May 9, 2024
Messages
1,454
இறந்து போனது மதுவோட ட்வின் சிஸ்டரா...... பாவம் மது கூட சேர்ந்து இருக்குறதுக்காக வந்த பொண்ணை அநியாயமா கொன்னு இருக்காங்க.... ☹️☹️☹️
இன்னும் என்ன என்ன இருக்கோ..... 😨😨😨😨
நன்றி பா
 
  • Like
Reactions: grg
Administrator
Staff member
Joined
May 9, 2024
Messages
1,454
Madhu ku ippadi oru flash back ah😥kuda pirantha twin sister iranthutala😥 yaara manasala close nu ninaikuramo avanga kitta thaan manasa thorakamudiyum❤️ madhu linga kitta nambi ellathaiyum solrana avana close ah ninaikura😍nice interesting ud sis ❤️
நன்றி பா
 
  • Like
Reactions: grg
Well-known member
Joined
May 12, 2024
Messages
330
Madhu antha kudumbathu varisu illai appo
 
  • Like
Reactions: grg
Top