அத்தியாயம்…23
லிங்கா இப்படி என்று நினைத்து பார்க்காத வகையில் இருந்தது தங்கள் கல்லூரி விடுதியின் கொலை பின் விவரங்கள்…
“ யார் லிங்கா அது… ? எனக்கே அவனை உடனே பார்க்கனும் போல இருக்கே…” என்று இந்த கேஸை விசாரணை செய்யும் இன்ஸ்பெக்டர் லிங்காவிடம் கேட்டான்..
இத்தனை நாள் பழக்கத்தில் இருவரும் பெயர் சொல்லி ஒருமையில் கூப்பிடும் அளவுக்கு பழக்கமாகி விட்டது..
லிங்காவும் ஒரு யோசனையுடன்.. “எனக்கும் அவனை பார்க்கனும் போல் தான் இருக்கு..” என்று சொன்னவனிடம்..
“ஒரே வீட்டில் இருந்தும் நீயும் பார்த்தது இல்லையா..?” என்று கேட்ட்டவனுக்கு..
“ பாட்டி டெத் அன்னைக்கு இருந்ததா லேசான நியாபகம்.. நான் உன்னிப்பா கவனிக்கல.. அதுக்கு அடுத்து வீட்டில் சேது பதி என்ற ஒரு நபர் இருப்பது போலவே இல்லாது தான் இருந்தது.
ஒரே நாள் என் பள்ளியில் புதுசா ஒரு ஆசிரியரை என் பர்மிஷன் இல்லாது நியமித்து இருந்தப்ப கேட்ட போது தான் அந்த பெயரே வீட்டில் அடிப்பட்டது..
நானும் அந்த நபரை கண்காணிக்கும் லிஸ்ட்டில் தான் வைத்தேன்.. ஆனா இந்த கேஸ் விசயமா கிடையாது.. “ என்று சொன்ன லிங்கா பின் விளக்கமாக மேகாவை பற்றி அனைத்தும் சொல்லி முடித்தான்..
லிங்கா சொன்னவை அனைத்தையும் கேட்ட மதன்.. “ யப்பா பணம் இருந்தால் போதும் சுக போகமா வாழலாம் என்று நினைத்தேன்.. நான் வெளியில் ஹான்டில் செய்த குற்றவாளிகளை நீ வீட்டுக்குள்ளேயே ஹான்டில் செய்து கொண்டு இருக்க..
ஆனாலும் இந்த கேஸில் இப்படி ஒரு ட்வீஸ்ட்டை நான் எதிர் பார்க்கல லிங்கா. யப்பா என்ன கிரிமினல் மைன்ட். நான் கூட இது போல இந்த கேசில் ஏதாவது ஒரு அந்தரங்க வீடியோ விசயம் இருக்கும் என்று எதிர் பார்த்தேன் தான்..
நீயும் அந்த ஷைலஜா பெண் அந்த செல்லை காட்டி உறுதி செய்தி விட்ட. நான் நினைத்த இன்னொன்னும் அந்த ரூமில் மட்டும் கண்டிப்பா கேமிரா இருக்கும்.. வருடத்திற்க்கு ஒரு பெண்ணை தேர்ந்தெடுத்து இது போல வீடியோ எடுத்து அந்த பெண்ணை மடக்குறாங்க.. அந்த வீடியோவுக்கும் வழிக்கு வராத பெண்களை இந்த விசயம் வெளியில் போக கூடாது என்று தீர்த்து கட்டிட்டு தற்கொலையா மாத்திடுறாங்க என்று யூகித்தேன்..
ஆனால் இது என்ன லிங்கா இப்படி இருக்கு..?” என்று அந்த கேசின் முடிவு தெரிந்ததில் இருந்த இன்ஸ்பெக்டர் அதை பற்றிய திரும்ப திரும்ப சொல்லி கொண்டு இருந்தார்.
லிங்காவுமே இதை எதிர் பார்க்கவில்லை தான்.. அவனுமே ஷைலஜா பேசியில் வந்த அந்த வீடியோவை பார்க்கும் முன்னவே.. இது போல் தான் இருக்கும் என்று கணித்து இருந்தான்.. ஏன் என்றால், இறந்த பெண்கள் அனைவரும் அழகு என்ற வார்த்தை குறைவு. பேரழகோடு இருந்தனர்..
ஆனால் தான் என்ன..? யாருமே யோசிக்க கூட முடியாத ஒரு விசயம் இதில் இருக்கும் என்று அவன் நினைத்து பார்க்கவில்லை.
பின் அனைத்துமே மின்னல் வேகத்தில் நடந்து முடிந்தது… அதற்க்கு முதலில் கோகுல் கரணை திரும்பவும் அழைத்து பேசினார் காவல் அதிகாரி.
முதலில் அவர்களுக்கு நடந்த விசயங்களை முழுமையாக விளக்கி சொன்ன காவல் அதிகாரி. அதாவது உங்களை அந்த சேதுபதி மீன் என்று பாவித்து உங்களை வலையில் வீழ்த்த உங்கள் மனைவியை புழுவாக உங்களிடம் அனுப்பி வைத்து இருக்கிறான்..
இதில் என்ன ஒரு விசயம் என்றால் உங்கள் மனைவிமார்களும் அப்பாவிகள் தான்..” என்று கிரண் கோகுலிடம் சொன்ன மதன்..
“அவர்களுமே ஒரு கட்டாயத்தில் தான் உங்களை திருமணம் செய்து இருக்காங்க.. எனக்கு தெரிய வேண்டியது எல்லாம் உங்க இரண்டு பேருடைய திருமணமும் காதல் திருமணம் என்று சொன்னிங்க. எங்கு பார்த்திங்க.. எப்படி உங்களுக்கு அறிமுகம் ஆச்சி என்பது தான்..” என்று இன்ஸ்பெக்டர் கேட்க.
கரண்.. கோகுலிடம் இருந்து காவல் துறை அதிகாரிக்கு உடனே பதில் கிடைக்கவில்லை.. ஏன் என்றால் சொன்ன விசயத்தை ஜிரணித்து கொள்ளவே அவர்களால் முடியவில்லை..
பின் காவல் அதிகாரி அவர்களை அதிர்ச்சியில் இருந்து விடுப்பட காபி வர வழைத்து கொடுத்து விட்டு , அவர்களுக்கு அவகாசமும் கொடுத்த பின் மீண்டும் காவல் அதிகாரி கேட்டான்..
இப்போது இருவரும் அவர் அவர் தொழிற்சாலையில் காலேஜ் ஸ்டுடண்ட் விசிட் என்று தங்கள் பேக்டரியில் தான் என் மனைவியை பார்த்தேன்..
பார்த்ததும் பிடித்தது.. பின் பேசியதில் இன்னும் பிடித்ததில் திருமணம் செய்து கொண்டேன் என்று இருவரும் ஒன்று போல் தான் சொல்லினர்..
இதை மதன் எதிர் பார்த்தது தான்.. ஆனால் அவன் எதிர் பாராத ஒன்றை அந்த கோகுலும், கரணும் கூறினர்..
“நீங்க சொன்னது போல முதலில் என் மனைவியை அவங்க ப்ளாக்மெயில் செய்து என்னை காதலிக்க வைத்தாலுமே, பின் உண்மையில் தான் அவள் என்னை விரும்பினா… “ என்பது..
பின் காவல் துறை அதிகாரி தன் விசாரணையை இன்னும் வேகத்தை கூட்ட அதற்க்கு தடைக்கல்லாக வீட்டின் மூத்த பெண் மாப்பிள்ளை மகள் மருமகள் இதில் லிங்காவின் சித்து சுகந்தியும் பெரியவர் சோமசுந்தரத்திடம்..
“ பள்ளி கல்லூரி இழுத்து மூட தான் இதை உங்க பேரன் கையில் கொடுத்திங்களா.. இதில் எங்க உழைப்பும் இருக்கு.. முதலில் இது போல நம்ம பள்ளி கல்லூரி பெயர் அடிப்பட்டால் நம்ம குடும்ப மானமும் தானே போகும்.. வீட்டில் அடுத்து அடுத்து கல்யாணம் செய்ய பெண்களை வீட்டில் வைத்து கொண்டு..” என்று பேச.
அதற்க்கு சோமசுந்தரம் தீர்த்து சொல்லி விட்டார்…
“ அத்தனை பெண்களின் பாவத்தை கொட்டிய பின் தான் எனக்கு அந்த கல்லூரி நிலைக்கும் என்றால், அது தேவையே இல்லை..” என்று சொன்னவர்..
“ நம்ம வீட்டில் கல்யாணம் நடக்கும் பெண்கள் இருக்காங்க..இந்த விசயம் எல்லால் வெளியில் வந்தால் நாளை பின்னே நம்ம வீட்டு பெண்களுக்கு எப்படி திருமணம் நடக்கும்.?” என்று கேட்ட சுகந்தியிடம்..
“நீ சொன்னதையே தான் நானும் கேட்கிறேன்.. நம்ம வீட்டில் இத்தனை பெண்களை வைத்து கொண்டு அந்த பெண்களுக்கு நடந்ததை மூடி மறைக்க பார்ப்பது நியமா..? அந்த இடத்தில் உன் பெண்ணை வைத்து பார்..” என்று விட்டார்..
இன்னும் கேட்டால் வீட்டில் இருப்பவர்களுக்கு இன்னும் முழு விவரமும் தெரியாது.. என்ன ஏது என்று ஆனால் காது வாக்கில் சேதுபதியின் பெயர் மட்டுமே வெளி வந்தது..
இன்ஸ்பெக்டர் விசாரணை என்று சேதுபதியை விசாரிக்க சென்ற வாரம் வீட்டிற்க்கு வந்த போது தான் தலை மறைவு என்று விவரமே வெளியில் வந்தன..
சோமசுந்தரத்திற்க்கு மட்டுமே முழுவிவரமும் தெரியும்.. “ யாரா இருந்தாலும் தண்டனை அனுபவித்து தான் ஆக வேண்டும்.. அதே போல எது நடந்தாலுமே உண்மை வெளி வரட்டும்..” என்று விட்டார்..
லிங்காவுக்கு தன்னிடம் வந்த பின் பள்ளி கல்லூரிக்கு இது போல் ஒரு நிலை வந்து விட்டது என்று தாத்தா நினைக்க கூடாது என்று தான் அவன் அனைத்துமே சொல்லி விட்டான்..
அவன் மதிக்கும் சின்ன அத்தை குடும்பம். தாத்தா தன்னை தவறாக நினைக்க கூடாது அவனுக்கு அவ்வளவு தான் வேண்டும் மற்றவர்கள் பற்றி எல்லாம் அவனுக்கு கவலையே கிடையாது.
பின் சேதுபதியை தீவிரமாக தேடியதில், இந்தியா வரைப்படத்தில் கண்ணுக்கும் கருத்துக்கும் வராது ஒரு சின்ன கிராமத்தில் இருப்பதாக தகவல் வர.
அந்த கிராமத்தில் இருக்கும் காவல் நிலையத்தின் உதவியோடு சேதுபதி கைது செய்யப்பட்டு சென்னைக்கு அழைத்து வரப்பட்டான்..
தீவிர காவல் துறை விசாரணையில் எங்கு அடித்தால் உண்மைகள் வெளி வரும் என்ற சூட்சுமம் தெரிந்து காவல் அதிகாரிகளின் வழியில் சேதுபதி அனைத்து உண்மைகளையும் சொல்ல ஆரம்பித்தான்..
அதாவது காவல் துறை அதிகாரி விசாரணை செய்த போது கிடைத்த தகவல்களை தான் அவனுமே சொன்னான் கூடுதல் தகவல்களாக..
“அந்த வீடியோவை காட்டி நாங்க சொன்னதை நீங்க செய்யலேன்னா இந்த வீடியோ சோஷியல் மீடியாவில் விட்டு விடுவோம்..” என்ற மிரட்டிலில்..
“நிறைய பெண்கள் குடும்ப மானம் என்று ஒத்து கொண்டு நாங்க காட்டிய வசதியான பையன்களை காதலித்து திருமணம் செய்து கொண்டு ஒரு வருடமோ இரண்டு வருடமோ..கழித்து நாங்க சொன்ன சமயம் விவாகரத்து கேட்டு . அதில் கிடைக்கும் பெரும் தொகையான அந்த ஜீவானம்சத்தை நான் வாங்கி கொள்வேன்..
ஆனால் ஒரு சில பெண்கம் மறுத்ததோடு, என்னையே மிரட்டிய பெண்களை தான் கொலை செய்து தற்கொலையா மாத்திடுவேன்..” என்று சொல்ல.
“ இதை எல்லாம் நீ ஒருத்தன் மட்டுமா செய்தே .. கண்டிப்பா முடியாது. உன் கூட யார் கூட்டு.? சொல்.. உன் மாமனாரா..? மச்சானா…? இல்ல மனைவியேவா..?” என்று காவல் துறை அதிகாரி மிரட்டிய மிரட்டலில்..
தன் நண்பன் பெயரான ப்ரதீப் என்று சொல்ல அவனையுமே கைது செய்தது காவல் துறை.. அனைத்தும் சரி தான் இனி கல்லூரி என்று இப்போது லிங்காவின் யோசனை செல்ல.. அன்று முழுவதும் ஒரு மாதிரியான மனநிலையில் தான் லிங்கா இருந்தான்.. அவனின் அந்த குழப்பத்தை அவன் முகத்திலும் அப்பட்டமாக தெரிந்தன..
எந்த செய்திதாளை எடுத்தாலுமே, இவன் கல்லூரி பள்ளி பற்றிய செய்திகள் தான் வந்த வண்ணம் இருந்தன.
இன்னும் கேட்டால் பள்ளியில் இது போல் பிரச்சனை இல்லை தான்.. ஆனால் பள்ளியும் கல்லூரியில் தொடர்புடையது தானே என்று ஒரு சிலர்..
தங்கள் குழந்தைகளின் டீசியை வாங்கி வேறு பள்ளியுல் சேர்க்கும் முயற்ச்சியில் இறங்கி இருந்தனர்.. அதுவும் குறிப்பாக மாணவிகளின் டீசியை தான் பெரும் பாலும் வாங்கப்பட்டது..
தாத்தா தன்னை நம்பி கொடுத்த பள்ளி கல்லூரி இப்படி சரிவை நோக்கி செல்வதை அவன் மனமே தாங்கி கொள்ளாத போது தாத்தா… அதை நினைத்து தான் லிங்காவின் மனது இன்னும் வேதனை அடைந்தன.
ஆனால் தாத்தா .. “இதில் உன் தவறு என்ன இருக்கிறது.?” என்று அவர் தான் பேரனுக்கு ஆறுதல் தந்தார்.. இருந்தும் தாத்தாவின் முகத்தை பார்த்தே லிங்காவுக்கு தெரிந்து விட்டது.
அவர் வெளியில் சொல்லவில்லை என்றாலுமே,மனத்திற்க்குள் அவர் வேதனை அடைக்கிறார் என்பதை.
கனடாவில் இருக்கும் கலைச்செல்வனும் அந்த சமயம் இந்தியாவுக்கு குடும்பத்துடன் வந்து இறங்கி விட்டார்.. மருமகனின் மனநிலையை புரிந்தவராக…
வந்தவர் லிங்கா இருக்கும் வீட்டிற்க்கு தான் வந்தார்.. வந்தவரை ஹாலில் மாட்டி இருந்த தன் சகோதரியின் புகைப்படத்தை பார்த்து தன் சகோதரியே சிரித்த முகத்துடன் தன்னை வர வேற்பது போல் உணர.
இந்த உணர்வு தானே சென்ற முறை தான் இந்தியா வந்த போது இந்த வீட்டில் தான் உணராத உணர்வு.. என்று அந்த வகையில் அவர் நிம்மதி அடைந்தாலுமே, தன் மருமகன் லிங்காவின் சோர்ந்த முகத்தை பார்த்து..
என்னடா நீ இப்படி இருக்க…? நீ நியாயத்தை தானேடா செய்த. இதுல நீ கவலை பட ஒன்றும் இல்ல.. காலேஜ் ஸ்கூல் பத்தியான கவலையை விடு லிங்கா..”
“இப்போது உன் நிர்வாகத்தின் அருமை தெரியவில்லை என்றாலுமே, போக போக புரிஞ்சி இப்போதையை விட இன்னும் கூடுதலாக உன் ஸ்கூல் காலேஜில் அட்மிஷன் போட எப்படி போட்டி நடக்கும் பார்.” என்று சொல்லி அவனை தேற்றினார்..
லிங்காவுக்கு இந்த கவலையை விட மேலும் ஒரு கவலையாக மது.. ஆம் மதுயை பற்றிய கவலை தான் அவனுக்கு இன்னும் அதிகம் ஆக்கியது.
சேதுபதியை மதன் விசாரணை செய்து அனைத்தும் முறையாக செய்த பின் லிங்கா மதனிடம் அனுமதி பெற்று கொண்டு மதுவோடு லிங்கா சேதுபதியை சந்தித்து பேசினான்..
லிங்கா சேதுபதியிடம் பேசும் முன் மது முந்தி கொண்டு..
“சஜனாவையும் அது போல வீடியோ எடுத்தியா…?” என்று ஆக்ரோஷத்துடன் கேட்டவளிடம் சேதுபதி.
“ இல்ல..” என்று மறுப்பாக தலையாட்டியவன்.. நான் ஒரு ஸ்டெப் எடுத்து வைக்கும் முன்னவே அவள் சுதாகரித்து கொண்டு விட்டாள்..
அவன் அந்த கேமிராவை கண்டுப்பிடித்து வார்டனிடம் கூட இல்ல அவள் நேராக போலீசை அழைத்து விட்டாள்.. எவ்வளவு பெரிய புத்திசாலியாக இருந்தாலுமே, எங்காவது தவறி விடுவாங்கலே… அது அவள் அந்த போலீஸை அழைத்து தவறு செய்து விட்டாள்.” என்று சேது பதி கூற.
இதை கேட்டு கொண்டே அங்கு வந்த காவல் துறை அதிகாரி .. “ நீ தப்பு செய்துட்டு. அந்த பெண் செய்தா என்று சொல்றியே உனக்கு அசிங்கமா இல்ல.. “ என்று சொன்னவன்..
லிங்காவிடம் . “ முன் இருந்த போலீஸ் இவன் ஆளு தானே லிங்கா. அந்த பெண் போலீஸை அழைத்ததும் அவன் இவனுக்கு சொல்லி இருப்பான்.. அது தான் அந்த பெண்ணையும் முடித்து விட்டாங்க.
அந்த பெண் போலீஸ்க்கு போகாது வேறு யாரிடமாவது இந்த விசயம் சொல்லி இருந்தால், அந்த பெண் உயிர் தப்பி இருக்குமோ என்னவோ…” என்று அந்த காவல் அதிகாரியின் பேச்சு தான் மதுவை இன்னும் குற்றவுணர்வில் தள்ளியது.
சொல்ல முயன்றாளே. ஆனால் நான் தானே அவள் அழைப்பை ஏற்கவில்லை.. ஏற்று இருந்தால், சாஜனா மட்டும் அல்லாது இப்போது இறந்த பெண்ணின் இறப்பை கூட தடுத்து நிறுத்தி இருக்கலாமே.. என்று சொல்லி சொல்லி மாய்ந்து போய் விட்டாள்..
லிங்கா மட்டும் அல்லாது வீட்டில் இருந்த அனைவரும் அவளை தேற்றும் படி ஆகி விட்டது.. ஆம் சாஜனா இறப்பில் ரகசியம் மட்டும் தான் வெளி வந்தன.. உறவு வெளி வராது ரகசியம் ரகசியமாகவே பாதுகாக்கப்பட்டது.
ரகசியம் என்பது வெளியில் வரவிடாது செய்வது தானே. அதை தான் லிங்கா செய்தான்.. காயத்ரிக்கும் சத்யதேவனுக்கு முதலில் சஜனாவின் இறப்பை பற்றி மீண்டும் தோன்டி துறுவும் போது. அவள் யார் என்று தெரிந்தால், மது தங்களுக்கு தத்து பெண் என்பது வெளியில் வந்து விடுமோ என்று பயந்து தான் போனார்கள்.
ஆனால் அதை வெளி வராதப்படி பார்த்து கொண்டான் லிங்கா.. ஏன் நண்பன் போல் இந்த கேசில் ஒருவருக்கு ஒருவர் உதவியாக இருந்த இன்ஸ்பெக்டர் மதனிடம் கூட இந்த உண்மையை கூறவில்லை என்றால் பார்த்து கொள்ளுங்கள்..
மதுவிடம் கூட சொல்லி விட்டான்..” இந்த உண்மை தெரிந்தால் வேதனை தான் மிஞ்சும் ..” என்று.
அதனால் சஜனா மதுவோடு படித்த பெண். அதனால் தாள முடியவில்லை என்பது மட்டுமே குடும்பத்திற்க்கும் மற்றவர்களுக்கும் தெரிந்த விசயமாக இருந்தது..
இதனால் மதுவுக்கு கிடைத்த ஒரே நல்ல விசயம்.. சஜனா நல்ல பெண். முன் தற்கொலை என்று கேஸ் ஜோடித்ததில் சஜனா மட்டும் அல்லாது இறந்த மற்ற பெண்களின் ஒழுக்கத்தையும் அழித்தவர்கள்..
இப்போது உண்மைகள் வெளி வந்ததால் சஜனா மட்டும் அல்லாது இறந்த மற்ற பெண்களின் ஒழுக்கம் இல்லாதவர்கள் என்ற அந்த கலங்கம் துடைக்கப்பட்டது..
என்ன ஒன்று இந்த உண்மை தெரிந்த உடன் காயத்ரியின் மனது அவ்வளவு சங்கடப்பட்டு போனது.. அவளுமே உண்மை தெரியாது சஜனாவை தவறாக தானே நினைத்தார்..
மதுவுடன் ஒட்டி பிறந்த பெண் அவள்.. பிறந்த குழந்தைகளில் முதல் கையில் கிடைத்த குழந்தையை தூக்கி கையில் கொடுத்தார் குழந்தைகளின் பாட்டி.
இதே அந்த பாட்டியின் கையில் மது இல்லாது சஜனா கிடைத்து இருந்தால், தங்களுக்கு தத்து குழந்தையாக சஜனா தானே கிடைத்து இருப்பாள்.. என்ற அந்த நினைவே அவள் மனதை ஆட்டக்காண செய்து விட்டது.
கூட பிறந்த குழம்ந்தைகள் தாங்கள் சகோதரி என்று தெரியாதே ஒன்றாக பழகி இருக்கிறார்கள்.. கூட பழகின பழக்கத்திற்க்கே மது இப்படி இடிந்து போய் இருக்கிறாளே..
இறந்தவள் தன் கூட பிறந்தவள் என்ற உண்மை மட்டும் மதுவுக்கு தெரிந்தால்… தன் பயத்தை கணவனிடம் கூறிய காயத்ரி..
“இந்த உண்மை என்னைக்கும் மதுவுக்கு தெரியவே கூடாதுங்க..” என்று கணவனின் கைப்பற்றி கூறினார்..
தன் மகளுக்கு சஜனா யார் என்று தெரிந்ததினால், மட்டும் அல்லாது, அவளை சென்னைக்கு அழைத்து நாமே கொன்று விட்டோமே என்ற குற்றவுணர்ச்சியோடு.. இப்போது காவல் துறை அதிகாரி சேதுபதியிடம் விசாரணையின் தெரிந்த விசயமான..
“நாம மட்டும் அவள் செல்லில் கூப்பிட்ட உடன் எடுத்து பேசி இருந்தால், அவள் இறந்து இருக்க மாட்டா தானே.. ஈஷ் அத்தான்.. ” என்று தன் குற்றவுணர்ச்சி கூடியதில் எந்த நேரமும் அழுது புலம்பி கொண்டு இருந்தவளிடம் லிங்கா தன்மையாக பேசினால் இது வேலைக்கு ஆகாது என்று நினைத்து.
“சரி நீ சஜனா போனை அட்டெண் செய்து இருந்தால், அமெரிக்காவில் இருந்த நீ என்ன செய்து இருப்ப..? என்ன செய்து இருக்க முடியும்…? சொல்..” என்ற லிங்காவின் கேள்விக்கு மது உடனடியாக பதில் சொல்ல முடியவில்லை.
சிறிது யோசித்தவள். “ அப்பாவிடம் சொல்லி..” என்று சொல்லும் போதே சஜனா யார் என்று சொல்வது என்ற யோசனையில் மது தன் பேச்சை பாதியில் நிறுத்தியவளிடம்..
“என்ன இப்போ புரியுதா..?” என்று லிங்கா கேட்டான்.
மது அப்போதும் விடாது… “ இல்ல வேறு யார் கிட்டேயாவது.” என்று சொல்ல..
“ சஜனா முதல்ல உன் கிட்ட பேசும் போதே உன் வீட்டு ஆட்கள் மீது தான் சந்தேகம் என்று சொல்லி இருக்கா.. இப்போ அவள் சொல்லி இருந்தால் நீ அவங்க கிட்டயே சஜனாவை அனுப்பி வைப்பியா..?” என்று கேட்ட லிங்கா…
“லிசன் மது.. கண்டிப்பா அங்கு இருந்து நீ சஜனாவிடம் உடனே போலீஸ்க்கு போய் உதவி கேள் என்று தான் சொல்லி இருப்ப… உனக்கு மட்டும் அங்கு இருப்பது குற்றவாளிக்கு வேண்டியப்பட்ட ஆள் என்று உனக்கு தெரியுமா..? என்ன சொல்..
நீ சஜனா பற்றி சொல்லிட்டு அன்னைக்கு என் கிட்ட என்ன என்று சொன்ன..? உனக்கு நியாபகம் இருக்கா…? அவள் இறந்ததோடு அவள் பெயரையும் கலங்கப்படுத்திட்டாங்க.. அது இல்ல என்று எல்லோருக்கும் தெரியனும் என்று தானே சொன்ன. இப்போ அது நடந்து விட்டது தானே.
இதோ வெளியில் உண்மை வந்ததினால், தடைப்பட்டு கொண்டு இருந்த சஜனா வின் சகோதரிக்கும் திருமணம் முடிவு ஆகி இருக்கு தானே..” என்று சொன்னான்..
ஆம் லிங்கா சொன்னது உண்மை தான்.. சஜனாவின் மீது சுமத்தப்பட்ட அந்த அபாண்ட பழியினால், சஜனாவின் சகோதரியின் திருமணத்திலும் பிரச்சனை வந்தது.
இதோ உண்மை வெளி வந்த பின். சஜனாவின் பெற்றோர். மதுவின் உண்மையான பெற்றோரும் அவர்கள் தான்…
ஒரு மீடியா சஜனாவை பற்றிய பேச்சில்..
“ என் மகளை பற்றி எங்களுக்கு தெரியும். அவள் தற்கொலை செய்யும் அளவுக்கு கோழையும் கிடையாது.. அதே போல் படிக்க சென்றவள் அபார்ஷன் செய்யும் அளவுக்கு ஒழுக்கம் கெட்டவளும் கிடையாது..
ஆனால் இது மத்தவங்களுக்கு எல்லாம் தெரியாது தானே.. இந்த கேஸ் திரும்ப எடுத்து உண்மை வெளி வந்ததால் ரொம்ப நாள் தடைப்பட்டு கொண்டு இருந்த என் மூத்த பெண்ணின் திருமணம் முடிவு ஆகி இருக்கு..”
சஜனா தாய் கொடுத்த அந்த பேட்டியை ஹாலில் இருந்து தான் கேட்டு கொண்டு இருந்தார்கள்..
சஜனாவை பற்றி பேச பேச மதுவுக்கு அப்படி ஒரு அழுகை வெடித்தது.. மற்றவர்களின் பார்வைக்கு அது சஜனாவுக்கு மட்டுமானது என்று தான் நினைத்து கொண்டனர்.
ஆனால் லிங்காவுக்கு மட்டும் தானே அது சஜனாவுக்கு மட்டுமே ஆனது இல்லை என்பது தெரியும். அதனால் உணர்ச்சி வசப்பட்டு எங்கு உண்மை சொல்லி விட போகிறாள் என்று லிங்கா மதுவும் தோள் மீது கை போட்டு அவளை அணைத்து பிடித்த வாறே.. தேற்றுவது போல..
“மது கண்ரோல்… கண்ரோல்..” என்று மதுவும் காதில் ஏதோ சொல்ல. அது மற்றவர்களின் பார்வைக்கு ஆறுதல் சொல்வது போல் தான் தெரிந்தது.
ஆம் மற்றவர்களின் பார்வைக்கு படும் படி தான் லிங்கா மதுவின் தோள் மீது கை போட்டு ஆறுதல் சொன்னது எல்லாம்..
தெரியும் இப்போது வீட்டில் இருப்பவர்கள் அனைவர்களுக்குமே லிங்கா மதுவின் விருப்பம் தெரியும் தான்.. தெரிந்ததும் காயத்ரி சத்யதேவனுக்கும் மகிழ்ச்சி தான்.. தாத்தாவுக்கு சொல்லவே தேவை இல்லை. ஆனால் மற்றவர்களுக்கு எதுவும் சொல்ல முடியாத சூழ்நிலையில் தான் மற்றவர்கள் இருந்தார்கள்..
காரணம் லிங்கா அனைவரின் முன்னும் தனக்கு பதிமூன்று வருடங்கள் முன் நடந்த அநியாயத்திற்க்கு நியாயம் செய்து விட்டான்.. மேகாவை வைத்தே..
.