Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம், "கதையருவி" தளத்திற்கு தங்களை வரவேற்கிறோம்!

    இத்தளத்தில் எழுத எங்களை "vskathaiaruvi@gmail.com" என்ற மின்னஞ்சலில் தொடர்புக் கொள்ளவும். நன்றி!

Neeyen Kadhal Noolagam...2

  • Thread Author
அத்தியாயம்…2

மாதுரி இப்போது கூட தன் கணவனிடம் இதை பற்றி பேசி இருந்து இருக்க மாட்டாள் தான்..ஆனால் மூன்று மாதங்கள் முன் தான் ப்ரியா தனக்கு என்று ஒரு சொந்த வீட்டை கட்டி முடித்து கிரக பிரவேசமும் செய்து முடித்து இருந்தாள்..

அந்த வீட்டை கட்டி கொடுத்தது தன் கணவன் தான்.. கட்டி கொடுத்தது என்றால் தமிழ் மாறன் ஒரு பில்டிங்கன்செக்க்ஷன் வைத்து சொந்தமாக நடத்தி கொண்டு இருக்கிறான்…

தமிழ் மாறன் படித்தது என்னவோ எம்.பி.ஏ தான்… படித்து முடித்து வேலை செய்ய ஆரம்பித்தது ஒரு பில்டிங் கன்செக்க்ஷனிடம் அக்கவுண்ட்ஸை பார்க்கும் வேலையை தான் பார்த்தது… …

செலவு எவ்வளவு…? வரவு எவ்வளவு…? எத்தனை லாபம் என்று மூன்று ஆண்டுகளாக பார்த்த தமிழ் மாறன் என்ன நினைத்தானோ மூன்று ஆண்டுகள் கழித்து தன்னுடைய இருபத்தி ஐந்தாம் வயதில் தன் தந்தையிடம் சென்று..

“ப்பா என்னை நம்பி உங்க செட்டில்மெண்ட் பணத்தில் இருந்து ஒரு இருபது லட்சம் தர்றிங்கலாப்பா.. அதை நான் ஓரே வருஷத்திற்க்குள் வட்டியோடு கொடுத்து விடுறேன்…” என்று கேட்ட தன் மூத்த மகனிடம் சீனிவாசன் எதற்க்கு…? ஏன்….? என்று எதுவும் கேட்காது மகன் கேட்ட இருபது லட்சத்தை. தன் முப்பத்தி ஐந்து வருட மத்திய அரசில் வேலை பார்த்ததிற்க்கு அவர்கள் கொடுத்த செட்டில்மெண்ட் பணத்தில் இருந்து எடுத்து கொடுத்தார்.

கொடுக்கும் போது.. “வட்டி எல்லாம் வேண்டாம் தமிழ்… நான் கொடுக்கும் இந்த இருபது லட்சம் மட்டும் திருப்பி கொடுத்தா போதும்… இதை கூட கேட்க மாட்டேன் பா.. ஆனா பாரு உன்னோடு இன்னுமே எனக்கு இரண்டு மகன்களும் ஒரு பொண்ணும் எனக்கு இருக்காங்க.. இந்த பணம் அவங்களுக்கும் சொந்தமானது அதுக்காக தான் திருப்பி கொடுக்க சொல்றேன்…” என்ற தந்தையிடம் தமிழ் மாறன் ஒன்றும் சொல்லவில்லை.

சொல்லாது சொன்னது போலவே ஒரே வருஷத்தில் தன் தந்தையிடம் தான் வாங்கிய இருபது லட்சத்தை திருப்பி கொடுத்து விட்டான்.

ஆம் ஒரே வருடத்தில் அவன் லாபமாக பார்த்த தொகை முப்பது லட்சம்.. அவன் கணக்கு தவறாக போகவில்லை.

பன்னிரெண்டு வருடத்திற்க்கு முன்.. தன் வீட்டின் அடுத்த தெருவில் எட்டுநூறு சதுர அடியில் இடம் பதினெட்டு லட்சத்திற்க்கு வாங்கினான்.. தன் தந்தை கொடுத்த பணத்தில் மீதம் இருந்த இரண்டு லட்சமும் தான் இந்த மூன்று ஆண்டாக சம்பாதித்த பணத்தின் சேமிப்பையும். கூடவே நண்பர்களிடம் ஒரு மூன்று லட்சத்தையும் வாங்கி.. அந்த வீட்டிற்க்கு என்று அவன் செலவு செய்த தொகை… முப்பத்திரெண்டு லட்சங்கள்… அந்த வீட்டை அவன் விற்றது நாப்பத்தி மூன்று லட்சத்திற்க்கு…

லாபம் தான்… பதினொரு லட்சம் லாபம் தான்.. இன்னும் கேட்டால் தமிழ் மாறன் அந்த வீட்டை கட்டும் போதே ஒருவர் அட்வான்ஸ் செய்து அந்த இடத்தை புக் செய்து விட்டதினால், அவன் முதலீடு தங்காது அவன் கைக்கு வந்து விட்டதில் உடனே அடுத்த இடத்தை இதே போல அரை கிரவுண்ட் வாங்கி போட்டு விட்டான் தான்.

என்ன ஒன்று அவன் முதல் வீட்டில் பதினொரு லட்சம் நான்கே மாதத்தில் லாபம் பார்த்தாலுமே, அவன் கொஞ்சம் நஷ்டத்தில் தான் விற்றான் என்று தான் சொல்ல வேண்டும்...

ஆம் இவன் வாங்கிய மூன்றே மாதத்தில் இடத்தின் விலை மட மட என்று உயர்ந்ததில் ஒரு சதுர அடியின் விலை இவன் வாங்கிய போது இருந்ததை விட ஆயிரம் ரூபாய் அதிக அளவில் உயர்ந்து விட்டது.. அவன் அதை கவனத்தில் கொள்ளாது இத்தனை செலவு செய்தோம்.. இத்தனை லாபம் என்று கணக்கு போட்டான்..

அவன் போட்ட அந்த கணக்கு தவறு என்பதை அவன் அடுத்த இடம் வாங்கும் போது தான் அவனுக்கு தெரிந்தது… ஏன் என்றால் அடுத்த இடம் வாங்கும் போது நிலத்தின் மதிப்பு கூடி விட்டதால், தன் லாபத்தையும் அடுத்த இடத்தில் போட்டு தான் கட்டி முடித்தான்..

ஆனால் கெட்டதிலும் இரு நல்லதாக… அதில் ஒரு பாடம் கற்று அடுத்து அடுத்து அதை திருத்தி கொண்டவனாக ஒரே வருடத்தில் மூன்று வீட்டை கட்டி விற்று அவன் தந்தையிடம் வாங்கிய பணத்தை திருப்பி கொடுத்த போது அவன் குடும்பமே அவனை வியந்து தான் பார்த்தது…

பாக்கியலட்சுமிக்கு தன் முதல் மகன்.. தன் மற்ற இரண்டு மகன்கள் போல ஐடி படிக்காது எம்.பி.ஏ படித்து குறைந்த சம்பளத்திற்க்கு வேலைக்கு போவதில் அவருக்கு வருத்தமாக தான் இருந்தது..

அதுவும் தமிழ் வேலைக்கு சென்ற அடுத்த வருடமே விமலன். வர்மன் தன் படிப்பு முடித்து கேம்பஸ் இன்டர்வ்யூ மூலம் வேலை கிடைத்து இரண்டு வருடத்திலேயே ஐம்பது ஆயிரம் சம்பளம் வாங்க.. அதற்க்கு பாதி கூட சம்பளம் வாங்காத தன் மூத்த மகனை நினைத்து தன் கணவனிடம்.

“இவனுமே அடுத்த இரண்டு பசங்களை போல ஐடி படிச்சு இருந்து இருக்கலாமுங்க..” என்று பாக்கிய லட்சுமி குறைப்பட்டு கொண்ட போது சீனிவாசன்..

“இது போல ஒப்பிட கூடாது பாக்கியா…. அவங்க அவங்க பிடித்த படிப்பை படிச்சாங்க. அவ்வளவு தான். அவங்க அவங்க திறமைக்கு ஏற்ப முன்னேறி வரட்டும்..” என்று கணவன் சொன்ன போது கூட பாக்கியலட்சுமிக்கு தன் மன குறை தீரவில்லை தான்…

ஆனால் இப்போது ஒரே வருடத்தில் இருபது லட்சத்தை திருபி கொடுத்ததோடு தாங்கள் இருக்கும் மூன்றாம் தெருவில் தன் மகன் கட்டி கொண்டு இருக்கும் அந்த வீடு… முழுமை பெறும் நிலையில் இருப்பதை பார்த்து பாக்கியலட்சுமிக்கு பெருமை தாளவில்லை…

தமிழ் மாறனுக்கும் அடுத்து அடுத்து ஏறுமுகமாகவே தான் இருந்தது.. முதலில் தான் கட்டிடம் கட்டி கொடுப்பதற்க்கு ஒரு பெயர் வைக்காது அதை பதிவும் செய்யாது கட்டி கொடுத்தவன்.

தன் நான்காம் வீடு கட்டும் போது முறையாக பெயர் வைத்து அதை பதிவும் செய்து, அதில் தன் கணக்கை வைத்து கட்டினான்.. அப்போது தான் தமிழ் மாறனின் மனமும் வீட்டிற்க்கு தெரிய வந்தது.. அவன் தன் கன்செக்க்ஷன் கம்பெனிக்கு வைத்த பெயரின் மூலம்..

ஆம் தன் கன்செக்க்ஷன் பெயராக தமிழ் மாறன் வைத்த பெயர்.. மாதுரி…

பாக்கியலட்சுமி தான். “ என்ன இது…?” என்று கேட்டவரிடம்..

“இப்போ ஒரு பெயர் வைத்து விட்டு பின் மனைவி பெயர் மாத்துறதுக்கு பதிலாக இப்போவே எனக்கு வரும் மனைவி பெயரை வைத்து விட்டேன் ம்மா.” என்று விட்டான்.

பாக்கியலட்சுமிக்கு ஒரு அன்னையாக மகனை பற்றி தெரிந்து இருந்ததால், அடுத்து அதை மறுத்து ஒன்றும் சொல்லவில்லை.. ஆனால் அவருக்கு தன் நாத்தனார் மகளை எடுப்பதில் கொஞ்சம் மன வருத்தம் இருக்க தான் செய்தது..

காரணம் ஒன்று வசதி… தன் கணவனின் தங்கையின் வீடு அத்தனை ஒன்றும் வசதி கிடையாது.. அதோடு நாத்தனார் இறந்து விட்டார்… திருமணம் என்றால் சும்மாவா.. திருமண வேலைகள்.. அதற்க்கு அடுத்து பிள்ளை பேறு என்று எத்தனை இருக்கிறது… இதை எல்லாம் யார்…? பார்ப்பது…

இதை எல்லாம் விட முக்கியமான ஒன்று.. தன் மூத்த மருமகளாக தன் அண்ணன் மகளை எடுக்க தான் பாக்கியலட்சுமிக்கு ஆசை… என்ன செய்வது மகன் ஆசைப்பட்டு விட்டான்.. வேறு வழி இல்லாது தான் பாக்கியலட்சுமி தன் நாத்தி மகளை தன் மூத்த மகனுக்கு கட்டி வந்தது..

சீனிவாசன் தன் மகன் தன் கன்செக்க்ஷன் பெயர் வைத்ததின் மூலம் தன் மனதை தெரியப்படுத்தியதில் அத்தனை ஒரு நிம்மதி அவருக்கு.

தன் தங்கை இறந்து.. தன் தங்கை மகளே தன் மருமகளாக வருவதில். அவருக்கு ஒரு நிம்மதியும் கூட. தங்கை இறந்த புதியதில் சீனிவாசன் அவ்வப்போது தங்கை பிள்ளைகளை பார்த்து வந்து கொண்டு தான் இருந்தார்..

ஆனால் கால போக்கில் தன் சொந்த வேலையில் அது படிப்படியாக குறைந்து போய் குலதெய்வம் கோயிலுக்கு போகும் போது மட்டும்.. அருகில் இருக்கும் தங்கை வீட்டிற்க்கு சென்று வருவார் அவ்வளவே…

நினைத்து கொள்வார்… அந்த குழந்தைகளுக்கு ஒரே தாய் மாமன் நான் தானே… தாய் இல்லாத குழந்தைகளுக்கு தாய் மாமன் தானே தாயாக பார்த்து கொள்ள வேண்டும் என்று .. தான் அவர்களை சரியாக பார்த்து கொள்ளவில்லையோ என்ற குறை சீனிவாசன் மனதில் இருந்தது.

ஆனால் இப்போது தன் தங்கை மகளில் ஒருவளை தன் மருமகளாக கொண்டு வருவதில் அந்த குறை மறைந்து தன் வயதையும் மறந்தவராக தான் அந்த திருமணத்தை அத்தனை ஈடுப்பாட்டோடு அவர் நடத்தி முடித்தார்.. பாக்கியலட்சுமி தான் அடிக்கடி முனு முனுத்து கொண்டு இருப்பார்.

“என் அண்ணன் மகளை கட்டி இருந்தால், சீர் இத்தனை வந்து இருக்கும்.. அத்தனை வந்து இருக்கும்..”என்று…
பாக்கிய லட்சுமியின் இந்த முனு முனுப்பு எல்லாம் தன் கணவனிடம் மட்டும் தான்… மகனிடம் எல்லாம் இல்லை…

பின் பாக்கிய லட்சுமி தான் ஆசைப்பட்டது போல தன் அடுத்து இரண்டு ஆண் பிள்ளைகளான விமலன் வர்மன் இரண்டு பேருக்கும் தன் அண்ணன் மகள்களான அக்கா தங்கையை இரண்டு பேரை கட்டி வந்து தன் ஆசையை நிறைவேற்றி கொண்டார் என்பது வேறு விசயம்..

அடுத்து பாக்கிய லட்சுமி நினைத்தப்படி தான் இந்த வீடு சென்று கொண்டு இருக்கிறது.. இடையில் கணவன் இழந்தது ஒரு பெரிய துக்கம் என்றால், அதே ஆண்டு வர்மனுக்கு இரட்டை குழந்தையாக பிறந்ததில் மருமகளும் மகனோடு ஐடியில் வேலை பார்ப்பதால், குழந்தை பார்த்து கொண்டதில் தன் கணவன் இழந்த துக்கத்தை கொஞ்சம் கொஞ்சம் மறக்க தொடங்கினர்..

அதோடு தன் இரண்டு மகன்கள் தனித்து ஆளுக்கு ஒரு அடுக்குமாடி குடியிருப்பு வாங்கி போட்டதில், இதோ மகளுமே மூன்று மாதம் முன் அத்தனை பெரிய வீடு கட்டி கிரகபிரவேசம் செய்ததில் அத்தனை பெருமை பாக்கியலட்சுமிக்கு…

அதனால் தற்போது பாக்கிய லட்சுமிக்கு எந்த பிரச்சனையும் இல்லை.. அதே போல் மற்ற இருமருமகள்களுக்கும் பிரச்சனை கிடையாது.. சொந்த அத்தையே மாமியாராக ஆனதில் மாமியார் கொடுமை என்பது கிருத்திகா. தீபிகா இருவருக்கு இல்லாது தன் தாய் வீட்டில் இருப்பது போலவே தான் மாமியார் வீட்டிலும் இருக்கிறார்கள்..

கூடுதலாக அவர்கள் சம்பாத்தியம் கணவன் சம்பாத்தியம் மொத்தமாக சேமிப்பாக ஆகுவதில் அவர்களுக்கு மகிழ்ச்சியாக தான் இருக்கும்.. பின் என்ன இரண்டு குடும்பமும் வீட்டு செலவுக்கு என்று எதுவும் கொடுக்காது இத்தனை ஆண்டுகள் போவது என்றால் சும்மாவா.. மகிழ்ச்சி இருக்க தானே செய்யும்..

இப்போது அனைத்து பிரச்சனையும் மாதுரிக்கு தான்… மாதுரிக்கு சமீப காலமாக பெரிய தலை வலியை கொடுப்பது இந்த குடும்ப அரசியல் தான்… தெரிகிறது அனைத்தும் அவளுக்கு தெரிகிறது.. ஆனால் அவளாள் ஒன்றும் சொல்ல முடியாத நிலையில் தான் அவள் இருக்கிறாள்..

இது வரை தெரியாத போது அவள் இதை எல்லாம் யோசிக்கவில்லை. மகிழ்ச்சியாகவே தான் வாழ்ந்தாள். பின் என்ன. கட்டினா நான் இவளை தான் கட்டுவேன் என்று தேடி வந்து கட்டிய கணவன். அழகான பெண் ஒன்று ஆண் ஒன்றாக இரண்டு குழந்தைகள்..

திருமணம் முடிந்து பத்து ஆண்டுகள் ஆகும் நிலையிலும்.. திருமணம் முடிந்து அந்த முதல் இரவில் தன்னை எப்படி நாடினானோ.. அதே நாட்டம் இன்று வரை குறையாது இன்னும் கேட்டால் கூடி தன் கணவன் தன் மீது காதல் காட்டும் போது அவளின் மண வாழ்க்கையில் மகிழ்ச்சிக்கு எங்கு குறை இருக்க போகிறது…

பொருளாதாரம் கேட்கவே தேவையில்லை… வீட்டில் உள்ள அனைவர்களையும் விட அதிகம் சம்பாத்தியம் தன் கணவனுக்கு தான்… அதே போல் தன் கணவனை கேட்டு தான் அனைத்துமே நடக்கும்..

இது இது தான் சமீப காலமாக மாதுரிக்கு பிரச்சனை.. தன் கணவனிடம் அனைத்தும் கேட்டு நடத்துவது.. அவனே செய்ய வேண்டும் என்பதினாலா…? என்று.

மூன்று மாதம் முன் நாத்தனார் செய்த அந்த வீட்டின் கிரகபிரவேசம் செலவு முழுவதுமே அவள் கணவன் தான் செய்தது.. அதற்க்கு முன்னவே ப்ரியா தமிழ் மாறனிடம்.. “ ண்ணா எங்க மாமனார் எங்களுக்கு கொடுத்த அந்த இடத்தில் வீட்டை நீங்க தான் எனக்கு கட்டி தர வேண்டும் என்று அவர் கிட்ட சொல்லி விட்டேன் ண்ணா..” என்று சொன்ன போது தமிழ் மாறனும்..

“சரிம்மா..” என்றவன்.. அந்த வீடு கட்டி தர பொருட்கள் வேலையாட்களுக்கு உண்டான பணத்தை மட்டுமே ஸ்ரீ வச்சனிடம் இருந்து வாங்கியது..

அதாவது வெளியில் ஒரு சதுர அடிக்கு தமிழ் மாறன் இரண்டாயிரத்து இரு நூறு வாங்கினான் என்றால் ஸ்ரீ வச்சனிடம் ஆயிரத்து எட்டுநூறு தான் கணக்கு செய்து இது கொடுங்கள் என்றது..

இது உயர்ந்த தரம் தாழ்ந்த தரம் இல்லாது மத்தியதரமாக பொருட்கள் போட்டு கட்டும் வீட்டில் பட்ஜெட்…

ஆனால் வீடு எழ எழ ப்ரியா நாளுக்கு மூன்று நான்கு முறை தன் அண்ணனை அழைத்து..

“ண்ணா எனக்கு டையில்ஸ் வேண்டாம்.. மார்புல் வேண்டும் ண்ணா.. கேட் இப்படி.. ரெஸ்ட் ரூம் மாடல் கிச்சன்.. டூப்ளஸ் வீட்டிற்க்கு படிக்கட்டின் பிடி ஸ்டீல் அதில் கண்ணாடி வைத்து. பின் பால் கனியின் மாடல் வீட்டின் எலிவேஷன் என்று… அத்தனை பணத்தை தமிழ் மாறன் தான் போட்டு ப்ரியா வீட்டை கட்டி கொடுத்தது.

அதோடு விடாது கிரகபிரவேசம் பத்திரிக்கை வைக்கும் போதே. ப்ரியா.. தன் அம்மாவிடம்..

“ம்மா அண்ணா அண்ணிக்கு தீபாவளிக்கு வாங்கி கொடுத்த ஆரம் போலவே தான் எனக்கும் வரிசையில் வாங்கி வைக்கனும்..” என்று வரவு இத்தனை வேண்டும் என்று சொல்லி தான் பத்திரிக்கை வைத்தது..

தன் கணவன் தனக்கு வாங்கி தந்த அந்த ஆரம் பன்னிரெண்டு சவரன்.. ஏற்கனவே அந்த இப்போது கிரகபிரவேசம் செய்யும் அந்த வீட்டிற்க்கே பத்து லட்சத்திற்க்கு தன் கணவன் பணம் போட்டு தான் கட்டி கொடுத்தது..

மாதுரிக்கு இந்த கணக்கு கூட தெரியாது தான்… அவள் கணவன் தான்.. “ ப்ரியாவுக்கு வீட்டை பத்தி ஒன்றும் தெரியல மாது… அது போல வேண்டும் இது போல வேண்டும் என்று கேட்கிறா… நான் கொடுத்த பட்ஜெட் வேறு… அதை வைத்து பார்த்தா ப்ரியா சொல்லும் பொருள் மூன்று மடங்கு அதிகம் போகுது… தங்கை ஆசைப்படுறா.. இது எல்லாம் சொல்லவா முடியும்… அந்த பிரஜெக்ட் பணத்தை எடுத்து தான் ப்ரியா வீட்டிற்க்கு போடும் படி ஆகி விட்டது.” என்ற கணவனை மாதுரி தான் என்ன இது என்பது போல பார்த்தாள்..

மாதுரிக்கு கணவனின் தொழில் பற்றி தெரியாது.. ஆனால் இந்த குடும்பத்தை பற்றி அதுவும் சமீப காலமாக தான் தெரிந்து கொண்டு இருக்கிறாள்…

ப்ரியா தெரியாது எல்லாம் உங்க கிட்ட கேட்கல நல்லா தெரிந்ததினால் தான் கேட்டு இருக்கா என்று நினைத்தவள் அன்று ஒன்றும் கணவனிடம் சொல்லவில்லை.

அதே போல கிரகபிரவேசம் பத்திரிக்கை வைத்து விட்டு அண்ணி போல ஆரம் வேண்டும் என்று ப்ரியா கேட்ட போது இதுவுமே தன் கணவன் தலையில் தான் விழும் என்று தெரிந்தே.. அன்று மகள் மாப்பிள்ளைக்கு ராணியை வைத்து விருந்தை கொடுத்து தான் மாதுரி அனுப்பியது..

அதோடு அன்று விமலன்.. “ ப்ரியா அது தான் நம்ம சம்மி பெரியவள் ஆகிட்டு இன்னும் அவளுக்கு புட்டு சுத்தாம இந்த வீடு கட்டும் வேலையில் அப்புறம் தான் பண்ணனும் என்று மாப்பிள்ளை சொன்னார்.… இந்த கிரகபிரவேசம் வைக்கும் போதே கூட மஞ்சள் நீராட்டு விழாவையும் வைத்து விடலாமே…” என்று விமலன் அன்று சொன்னது சரியானது தான்,.

ஆனால் ப்ரியாவுக்கு அது சரியானதாக படவில்லை போல… “இப்போ அப்போ எப்போ வைத்தாலும் அண்ணாவா நீங்க எனக்கு சீர் செய்ய போறது இல்லலே… நான் எப்போ செய்தாலும் தமிழ் அண்ணா தானே செய்ய போறது..” என்று கோபத்துடன் கேட்டதற்க்கு விமலனும் தங்கைக்கு ஏதோ கோபமாக பதில் கொடுக்க தான் தொடங்கினான்.

ஆனால் அதற்க்குள் விமலன் மனைவி கிருத்திகா. “உங்க தங்கை சொல்வது சரி தானுங்கலே… அவள் எத்தனை விழா செய்தாலும்… அவங்க தமிழ் அண்ணன் அவளுக்கு செய்ய போறா… இடையில் நீங்க என்ன ஐடியா கொடுப்பது..” என்று சொன்னவள் கணவனை கண் காட்டியும் அடக்கி விட்டாள்.

அப்போது தான் மாதுரி ஒன்று யோசித்தது.. ப்ரியாவுக்கு ஒரு அண்ணன் மட்டும் கிடையாதே மூன்று அண்ணன்கள் தானே.. பின் ஏன் எல்லாம் இவரையே செய்ய சொல்றாங்க தன் மாமியார் என்று…

இதை சொன்னால் தான் குடும்பத்தை பிரிப்பவள் என்று தான் சொல்வார்கள்… அதனால் அன்று ஒன்றும் சொல்லவில்லை..

இருபத்தி ஐந்து வரிசை தட்டு ப்ரியாவுக்கு இருபத்து ஐந்து ஆயிரம் பட்டுப்புடவை… ஸ்ரீ வச்சனுக்கு பட்டு வேஷ்டி… ஏன் ப்ரியா மாமனாருக்கு கூட பட்டுவேஷ்டி மாமியாருக்கு பட்டு புடவை இரண்டு பிள்ளைகளுக்கு பட்டு உடை… அதோடு பன்னிரெண்டு சவரனில் ஆரம்.. என்று ப்ரியாவின் வீட்டு கிரகபிரவேசத்திற்க்கு அவள் கணவன் செலவு செய்த தொகை பத்து லட்சம்….

அவர்கள் வீடு கட்ட பத்து லட்சம் மொத்தம் ப்ரியா வீடு கட்டி முடிக்க தமிழ் மாறன் இருபது லட்சம் செலவு செய்து உள்ளான்..

மற்றவர்கள்.. மற்றவர்கள் என்றால் விமலன் வர்மன்.. ஒரு செலவும் இல்லாது தாய் மாமனாக சபையில் நின்று விட்டனர்..

மாதுரிக்கு என்ன என்றால், தன் கணவன் அதிகம் தான் சம்பாதிக்கிறான். ஆனால் மற்றவர்கள் சம்பாதிக்காது இல்லையே.. கணவன் மனைவி இருவரும் சேர்ந்து இரண்டு லட்சம் மாதம் வருமானம் வருகிறதே… அதோடு என்ன இது பத்து இருபது சவரன் சீரில் வைப்பது…? கேட்க ஒரு அளவு வேண்டாமா.? மாதுரி மனதில் அத்தனை இருந்தும் ஒன்றும் பேசாது தான் இருந்தாள்.

ஆனால் எதற்க்கும் ஒரு அளவு இருக்கிறது தானே… மாதுரியே யோசித்து யோசித்து தான் கணவனிடம் நேற்று இரவு கேட்டது..

அதற்க்கு கணவன் கேட்டதில் இனி ஒரு முறை இது பற்றி கணவனிடம் கேட்க முடியுமா…?

இதோ ப்ரியா நினைத்தது போல் தான் இருபது இல்லை இருபத்து மூன்று சவரனில் தாய் மாமன் சீராக நகை ஐம்பத்து ஒன்று வரிசை தட்டு… அந்த பதிமூன்று வயது பெண்ணிற்க்கு எதற்க்கு இருபத்தி ஐந்த ஆயிரத்திற்க்கு பட்டு புடவை என்று தெரியவில்லை.. ஆனால் ப்ரியா அத்தனை விலையில் தான் எடுத்தது.

தமிழ் மாறன்.. மாதுரி வங்கி கணக்கில் தான் தேவையான பணத்தை போட்டது.. மாதுரி இல்லாது எந்த ஒரு பொருளையும் அந்த வீட்டில் இருப்பவர்கள் வாங்க மாட்டார்கள்..

பாக்கியலட்சுமியும் மூத்த மருமகளாக மாதுரிக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை கொடுத்து விடுவார்.. அதே போல் தான் மற்றவர்களும்… அதில் எல்லாம் ஒரு குறையும் சொல்ல முடியாது.. ஏன் முன் எல்லாம் அதாவது தான் தமிழ் மாறனை திருமணம் செய்யும் முன்.. அத்தை பெண்ணாக ஏதாவது பொது விழாவில் பார்க்கும் போது ப்ரியா தன் மாமன் மகள்களாக க்ருத்திகா தீபிகாவுடன் தான் நெருக்கமாக இருப்பாள்..

தன்னை எல்லாம் ஒரு பொருட்டாக எல்லாம் அப்போது இந்த ப்ரியா தன்னை பார்த்தது கிடையாது. நடத்தியதும் கிடையாது.. இன்னும் கேட்டால் இவர்களை விட மாதுரி தான் சின்ன பெண்… அதாவது அந்த வீட்டின் இளைய மருமகளை விட மாதுரி சின்னவள் தான்…

அப்படி இருக்க இவளே போய் பேசினால் கூட.. சரியாக பேசாத இந்த ப்ரியா.. இப்போது எல்லாம் அந்த இரண்டு அண்ணிகளான கிருத்திகா தீபிகாவை விட தன்னிடம் கேட்டு கேட்டு செய்வதில் தான் மாதுரிக்கு சந்தேகம். இது தனக்கான.. அதாவது தான் இந்த வீட்டின் மூத்த மருமகள்.. அதற்க்கு கொடுக்கும் மரியாதையா இல்லை… அண்ணன் அண்ணியிடம் தான் பணம் கொடுப்பார்..

என்ன தான் இருந்தாலும் அண்ணனுக்கு அண்ணியை பிடிக்கும்… நெல்லுக்கு பாயும் தண்ணீர் புல்லுக்கும் பாயுதா..? என்ற சந்தேகம் மாதுரிக்கு இருக்க தான் செய்கிறது.

இதோ இன்று கூட பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பி விட்டு கணவன் வாங்கி வைத்து இருக்கும் பெரிய காரில் குடும்பமே நகைகடைக்கு வந்து அங்கு பதினெழு லட்சத்திற்க்கு பில் செட்டில் செய்த மாதுரியை ஜவுளிக்கடைக்கு குடும்பமாக அழைத்து வந்து விட.

மாதுரி ஒரு இடம் பார்த்து அமர்ந்து விட்டாள்.. அப்போது கூட ப்ரியா விடாது.. சேலை எடுத்து.. “ ண்ணி இது நல்லா இருக்கா..? இது நல்லா இருக்கா…?” என்று அங்கும் இங்கும் அலைந்து கொண்டு இருக்கும் ப்ரியாவிடம் மாதுரி..

‘முதல்ல உன் பொண்ணு இந்த பட்டு புடவை கட்ட போகுதா பட்டு பாவடை தாவணி எடு.’ என்று தான் சொல்ல நினைத்தாள்.

ஆனால் சொல்லவில்லை.. சொன்னால் கண்டிப்பாக இங்கேயே ஒரு நாடகத்தை நடத்தி முடித்து விடுவாள் தன் நாத்தனார் என்பது அவளுக்கு தெரியும்..

கணவனிடம் அன்றைய இரவில் கேட்டு தான் வாங்கி கட்டி கொண்டதே போதும். இனி ஒன்றும் தேவையில்லை… கணவன் அந்த வார்த்தையை அந்த அர்த்தத்தில் கேட்கவில்லை என்று இந்த ஒரு வாரம் காலமாக தன்னிடம் சொல்லி கொண்டு இருந்தாலுமே, அது மாதுரிக்கு புரிந்தாலுமே,ஏனோ இனி அடுத்து இதை வைத்து ஒரு பிரச்சனை வருவதை அவள் விரும்பவில்லை..

அதனால் மாதுரி ப்ரியா எந்த புடவை எடுத்து வந்து காட்டினாலும் எல்லாம் நல்லா இருக்கு நல்லா இருக்கு என்று சொல்லி விட்டு ஒரு புடவை எடுத்து பின் அதற்க்கு மேட்சிங்க என்று அனைத்தும் எடுத்து முடிக்க அன்று ஒரு நாள் பிடித்து விட்டது..

பின் தன்னையே தேற்றி கொண்டு விட்டால் மாதுரி.. கணவன் சொல்வது போல நல்லா தானே சம்பாதிக்கிறார்… தங்கைக்கும் தங்கை மகளுக்குமே இத்தனை செய்யும் போது தங்களை விட்டு விடுவாரா…? என்று நினைத்து தன்னையே தேற்றிக் கொண்டவளுக்கு தெரியவில்லை.

இனி அனைத்துமே மாற போகிறது என்று...
 
Well-known member
Joined
May 11, 2024
Messages
211
எல்லாருடைய உண்மையான முகத்தை பார்க்க வேண்டிய நேரம் வந்திடிச்சா
 
Top