அத்தியாயம்….8
வேலையாளுக்கு உண்டான பணத்தை நான் கொடுத்து விடுகிறேன் என்று சொன்ன போது தமிழ் மாறனுக்கும் மாதுரிக்கும் கோபம் வந்தது தான்… ஆனால் இருவரும் ஒன்றும் சொல்லவில்லை..
தமிழ் மாறன் விரும்பி தன் அன்னையின் எதிர்ப்பையும் மீறி தான் மாதுரியை திருமணம் செய்து கொண்டது…
இருந்துமே அவனுக்கு தன் குடும்பம் தான் முதன்மையாக மனதில் வைத்து இருந்தான்.. தன் குடும்பம் என்றால் அப்பா அம்மா கூட பிறந்தவர்கள்.. இவை அனைவரும் சேர்ந்தது தான் தன் குடும்பம் என்ற எண்ணம் தான் அவனுக்கு..
ஆனால் ஒரு மாதம் முன் ஒரே நாளில் அவனின் அந்த எண்ணம் தவறு என்று காட்டி விட்டார்கள் தான்.. ஆனால் இன்றுமே தன் அன்னையை அவன் தவறாக எல்லாம் நினைக்கவில்லை… அவர்கள் ஒன்று நினைத்தார்கள்.. ஆனால் இப்படி ஆகும் என்று அவர்கள் நினைத்து பார்த்து இருப்பார்களா.? என்று ஒரு மகனாக அதை அவன் சரியாக தான் யோசித்தான்….
ஆனால் பாக்கியலட்சுமியின் இந்த பேச்சு அவனுக்கு கோபத்தை தான் கொடுத்தது.. இருந்துமே அதை அடக்கி கொண்டவனாக இருக்க..
மகனும் மருமகளும் ஒன்றும் சொல்லாது போனதில் சரி என்று சொல்ல ஒரு மாதிரி இருக்கு போல என்று நினைத்து..
“அப்பா பென்ஷன் வந்ததுமே மாதம் அதுல இருந்து பாதி உங்களுக்கு கொடுத்து விடுகிறேன் தமிழ்… மகனா உனக்கும் அதுல உரிமை இருக்கு தானே.” என்று அவர் பாட்டுக்கு பேசி கொண்டு போக.
தமிழ் மாறன் ஒன்றே ஒன்று தான் கேட்டான்.. “அப்பா இறந்து ஐந்து வருஷம் ஆகுது.. இந்த ஐந்து வருஷத்தில் நீங்க வாங்கிய அந்த அப்பாவின் பென்ஷனில் இருந்து எனக்கு தெரிந்து நீங்க ஒரு செலவும் செய்தது இல்ல.. ஏன்னா எல்லா செலவையும் நான் தான் செய்தது..
அப்போ அந்த பென்ஷன் எல்லாம் சேவிங்கஸ்ல தானே இருக்கும்.. இப்போ நீங்க எவ்வளவு வைத்து இருக்கிங்க.?” என்று தான் தமிழ் மாறன் தன் அம்மா பாக்கிய லட்சுமியிடம் கேட்டது.. அவன் இது வரை அம்மாவின் ஒய்வு ஊதியத்தை பற்றி பேசியதே கிடையாது.
ஒய்வு ஊதியம் என்ன.. பணத்தை பற்றி பேச்சை எடுத்தது கிடையாது.. இது தேவை என்று கேட்டால் பணத்தை மனைவியின் வங்கி கணக்கில் அனுப்பி விட்டு விடுவான்.. . நான் தான் செய்ய வேண்டுமா.. உங்களிடம் இல்லையா.? தம்பிகளிடம் இல்லையா..? என்ற கேள்வியே அவனிடம் இருந்து வராது…
பாவம் முதன் முதலில் கேட்கப்படும் மகனின் கேள்விக்கு பாக்கிய லட்சுமியினால் உடனே என்ன கொஞ்சம் யோசித்தும் கூட பதில் சொல்ல அவரால் முடியவில்லை..
காரணம் பெண்ணுக்கு பாதி செய்து விட்டார்.. மீதி இரண்டு வாரம் முன் தான் விமலனும் வர்மனும் இடம் வாங்க பணம் பத்தவில்லை என்று வங்கியின் மினிமம் பேலன்ஸ் மட்டும் வைத்து மற்றது அனைத்துமே எடுத்து கொடுத்தாயிற்று…
மாதுரிக்கு மாமியார் பாக்கிய லட்சுமியின் அந்த திரு திரு முழிப்பே காட்டி கொடுத்து விட்டது என்றால், தமிழ் மாறனுக்கு முன்பே இது பற்றி தெரியும் தான்..
‘ஏன் என்றால் வங்கியில் கடன் வாங்க தமிழ் மாறன் சென்ற போது அந்த வங்கியின் மேலாளர் தமிழ் மாறனோடு தான் படித்தவர்… .
அவர் தான் தமிழ் மாறனிடம். “ என்ன தமிழ் அம்மா ஒரு ஆறு மாசம் முன் அத்தனை டெப்பாசிட் க்ளோஸ் செய்துட்டாங்க.. இப்போ போன வாரம் உன் தம்பிகளோட வந்து இருப்பதை மொத்தமா க்ளோஸ் செய்துட்டு மினிமம் பேலன்ஸ் மட்டும் தான் இருக்கு..
அவங்க பேச்சில் இருந்து எனக்கு தெரிந்தது உன் தம்பிங்க இரண்டு பேரும் சேர்ந்து இடம் வாங்க போறாங்க போல…அதுக்கு தான் அம்மாவின் டெப்பாசிட்டை எல்லாம் உடைத்து எடுத்தது…” என்று சொன்ன அந்த மேலாளர்…
“உன் கிட்ட இதை சொல்ல கூடாது தான்.. ஆனாலும் மனசு கேட்கல தமிழ்… உங்க அம்மா கொஞ்சம் தூரமா நிற்க உன் தம்பிகளும் தம்பி மனைவிகளும் பேசுனதை வைத்து எனக்கு தெரிந்த விசயம்…
அம்மா கிட்ட அந்த இடம் வாங்க இந்த பேங்கில் தான் லோன் எடுத்தேன் என்று பொய் சொல்லி இருக்காங்க. அதே போல் இந்த பேங்கில் தான் அவங்க நகை எல்லாம் வைத்து இருப்பதா சொல்லி இருக்காங்க.. அதோடு இந்த பணத்தை கூட திருப்பி கொடுக்க இல்ல.. உங்க அம்மா கிட்ட இருந்தா உனக்கு கொடுத்துடுவாங்க என்று பேசிட்டு இருந்தாங்க தமிழ்..
இன்றைய உன் நிலை எனக்கு தெரியும் தமிழ்.. அதே போல நீ உன் குடும்பம் என்று எத்தனை செய்த என்றும் எனக்கு தெரியும்… உன் குடும்பம் உன்னை கை விட்டாலும்.. ஒரு நண்பனா என்னால முடிந்தது.. பேங்க மூலம் என்ன பேவர் உனக்கு செய்து தர முடியுமோ.. அதை செய்யிறேன் தமிழ்..” என்ற அந்த நண்பனின் கை பிடித்து கொண்ட தமிழ் மாறன்.
“சந்தோஷம் டா. ஆனா பாரு கடவுள் என்னை ஒரே அடியா தண்டித்து விடல. மனைவி மூலம் இன்னொரு வாய்ப்பு எனக்கு கொடுத்து இருக்காரு டா. கையில் இருந்த வைர நகைகளை காட்டி இதை அடமானம் வைக்க தான் வந்தேன்..” என்று சொன்ன தமிழ் மாறனிடம்..’உடனே அந்த வைர நகைகளை வைத்து பணத்த தமிழ் மாறன் கணக்கில் வருவது போல செய்து விட்டான்..
அதை நினைத்து தான் தன் அம்மாவிடம் தமிழ் மாறன் கேட்டான்.. கொஞ்சம் திரு திருத்த பின்..
“இல்ல டா விமலனும் வர்மனும் சேர்ந்து இடம் ஒன்று வாங்கி இருக்காங்க.. அது அவங்க எதிர் பார்த்ததை விட அதிகமா ஆகிடுச்சி போல.. அது தான் என் கிட்ட இருப்பதை கொடுத்தேன் அதுக்கு முன்ன ப்ரியா வீடு கட்ட கொஞ்சம் கேட்டா…” என்று சொல்லி கொண்டு வந்த பாக்கிய லட்சுமிக்கே தன் பேச்சில் இருந்த அபத்தம் தெரிய அமைதியாகி போனாள்..
இத்தனை நேரம் அம்மா மகன் பேச்சில் தலையிடாது இருந்த மாதுரி… “அத்த இன்னுமே உங்க பென்ஷன் அவங்களுக்கு தேவைப்படும் தான் அத்த.. ஏன்னா எல்லா இடத்திலுமே கடன் வாங்கி அதுக்கு வட்டி கட்டிட்டு இருக்காங்கலே…அதனால அவங்க சம்பளம் பணம் அவங்களுக்கு பத்தாம போகலாம்…
அத்த.. அதனால இனி உங்க பென்ஷன் பணம் அவங்களுக்கு தேவைப்படலாம்.. அதனால நீங்க எப்போவும் போல.. அதை அவங்க கிட்டயே கொடுத்து விடுங்க..” என்று மாதுரி சொன்னது தான் தாமதம்.
இது வரை மகன் பேத்தி பேரனை நினைத்து தன்மையாக பேசி கொண்டு இருந்த பாக்கிய லட்சுமி.. மாமியாராக பேச ஆரம்பித்து விட்டார்.
“என்ன டா சொல்றா இவள்… எப்போதும் போல அந்த மகன்களுக்கே கொடு என்று சொல்றா.. அதுக்கு என்ன அர்த்தம்…?” என்று தன் மகனிடம் கோபமாக கேட்க…
“மாது சொன்ன அர்த்தம் தான்மா…” என்று சொல்லி தமிழ் மாறன் முதன் முதலில் தன் தாயை எதிர்த்து பேசினான். பேச வைத்து விட்டார்கள் தன் குடும்பம் என்று அவன் இது நாள் வரை நினைத்து கொண்டு இருந்த அவனை சுற்றி இருந்த உறவுகளின் நடத்தையில்…
தமிழ் மாறனின் இந்த பேச்சில் பாக்கிய லட்சுமி அதிர்ந்து தான் போய் விட்டார்… மாதுரியை தான் தான் திருமணம் செய்து கொள்வேன் என்று சொன்ன போது அவருக்கு பிடிக்கவில்லை என்றாலுமே மகனை விருப்பத்தை நிறைவேற்றி தான் வைத்தார்…
முதலில் பிடிக்கவில்லை என்று சொன்னார் தான்.. அப்போது கூட மகன் தன்னை எதிர்த்து எல்லாம் பேசவில்லை..
“இது தான் என் விருப்பம்… உங்க விருப்பத்துக்கு தான் இந்த வீட்டிற்க்கு மருமகள் வர வேண்டும் என்றால் உங்க மத்த பிள்ளைகளுக்கு திருமணம் செய்து கூட்டிட்டு வாங்க..” என்று தான் சொன்னானே தவிர. இது போல் தன்னை ஒதுக்கியது போலான பேச வில்லை.
பாக்கிய லட்சுமி மகனின் இந்த பேச்சுக்கு கூட மருமகளின் மீது தான் பழியை போட்டார்…
“இவள் தான் உனக்கு இப்படி எல்லாம் சொன்னாளா டா.. தனியா வந்தது அம்மாவையும் பிள்ளையும் பிரிக்க தானா… உன் இந்த சூழ்நிலையை அவள் தனக்கு சாதகமா பயன் படுத்திக்க பார்கிறாளாடா. நான் உனக்கு வேத்துமை பார்ப்பது போல இது என்ன டா பேச்சு… இது…?” என்று மகனிடம் பேசிய பாக்கிய லட்சுமி..
மாதுரியிடம்… “உன் கையில் நீ எப்போதும் போட்டு இருக்கும் என் மகன் வாங்கி கொடுத்த வளையல் இல்லையே என்று பாவம் பார்த்து நான் பேசினேன் பாரு என்னை சொல்லனும்..” என்று சொன்னவனின் பேச்சில் தமிழ் மாறன் கோபத்துடன்..
“மத்தவங்க பாவம் பார்க்கும் அளவுக்கு என் மனைவியை விட்டு விட மாட்டேன் ம்மா.. இப்போ இந்த நிலை எல்லாம் கொஞ்சம் நாட்களுக்கு தான் ம்மா.. என்ன பேசினாலும் கொஞ்சம் பார்த்து பேசுங்க ம்மா..” என்ற இந்த மகனின் பேச்சில் பாக்கிய லட்சுமி மீண்டுமே தனிந்து போனவராக..
“அய்யோ நான் உன்னை ஒன்னும் குறைவா சொல்லலே தமிழ்.. எனக்கு என் மகனின் திறமையை பத்தி தெரியாதா டா..? இவள் தான் இப்போ இருக்கும் சூழ்நிலையை தனக்கு சாதமாக மாத்திக்க பார்க்கிறா தமிழ்..” என்று தன் பேச்சின் தவறை கூட மருமளின் மீது தான் போட்டார் பாக்கிய லட்சுமி..
“ஆமா அம்மா.. இருக்கும் எந்த சூழ்நிலையையுமே எனக்கு சாதமாக மாற்ற தான் பார்க்கிறா… மத்தவங்க போல இது வரை நல்லா இருந்த கப்பல் ஓட்டை விழுந்து விட்டது என்று தப்பித்து ஓடாது.. என்னோட கூட இருந்து அந்த ஓட்டையை அடைத்து விட்டு இதே கப்பலிலேயே நாம கரையை அடைந்து விடலாம் என்று இருக்கா பாரு… அவள் எந்த சூழலிலும் எனக்கு சாதகமா தான் ம்மா யோசுக்கிறா…
ஆனா பாரு நான் தான் அவள் பக்கம் யோசிக்காது குடும்பம் என்றால் எல்லோரும் தான் என்று தப்பா நினச்சிட்டேன்…
ஒரு முறை சொன்னா… எங்களுக்கு திருமணம் முடிந்து பத்து வருடம் ஆக போகுது.. ஒரு முறை ஒரே முறை சொன்னா தான்.. ஆனா பாரு நான் தான் அவள் எதுக்கு சொல்றா என்று கூட யோசிக்காது அவளை தப்பா பேசிட்டேன்… அப்படி என்ன தப்பா பேசிட்டேன் என்று ஒரு அம்மா கிட்ட சொல்ல முடியாத படி தான் பேசினேன்…
ஆனா அவள் இந்த ஒரு மாதம் காலமா அதை சொல்லி காட்டி நான் அப்போதே சொன்னேன் தானே நீங்க கேட்டிங்கலா..? அன்னைக்கு என்னை தப்பா பேசினிங்க.? என்று கேட்கவே இல்லேம்மா.. அவள் அப்படி கேட்டா கூட தப்பு கிடையாது ம்மா.
அன்னைக்கு அப்போ எல்லோருக்கும் அவ்வளவு செலவு பண்ணிங்க இப்போ பார்த்திங்களா…? என்று ஒரு முறை கூட குத்தி காட்டி என் கிட்ட பேசலேம்மா…? அந்த வீட்டுக்கு நீங்க ஒரே ஒரு மகனா மத்தவங்களும் இருக்காங்க தானே… இதுவும் என் கிட்ட அப்போவும் கேட்கல… இப்போவும் கேட்கலேம்மா..
ஆனா பாருங்க இப்போ நான் இப்படி ஆனதில் எல்லா விதத்திலுமே பாதிக்கப்பட்டு இருக்கிறது என் மனைவியும் என் குழந்தைகளும் தான்ம்மா… கேட்டா கூட தப்பில்லை தான்.. ஆனா கேட்கல…
ஆனா பாருங்க. நான் சம்பாதித்த மொத்த பணமும் ஒரு இடத்தில் முடங்கி விட்டது என்று தெரிந்த உடனே… மத்தவங்க அப்போ சாப்பிடும் சாப்பாடு கூட என்னுடையது தான்.. அதை சாப்பிட்டு முடித்ததுமே.. இனி மாச செலவை பத்தி கணக்கு போட ஆரம்பித்து விட்டாங்க… அன்னைக்கு என் மனைவி எல்லாத்திலுமே கணக்கு போட்டு இருந்தா… சொல்ல முடியாது நான் அப்படி கணக்கு போட விட்டு கூட இருந்து இருக்க மாட்டேன்..
ஒரு சில ஆம்பிள்ளைங்க புத்தி என்று ஒன்று இருக்கும்மா… பொண்டாட்டி.. இது போல சொன்னா. அவங்களை குடும்பத்தை பிரிக்க வந்தா வில்லியா தான் பார்ப்பாங்க… அவங்க சொல்றதை யோசிக்க கூட மாட்டாங்க…
நானுமே அப்படி தான் இருந்து இருப்பேன்.. அதுக்கு தான் யோசிடா நீ.. என்று ஒரு பிரச்சனையை கொடுத்து இருக்கான் போல. இதுவுமே ஒரு வகையில் நல்லதுக்கு தான் ம்மா. ஏன்னா யார்…? யார்…? எப்படி…? என்று எனக்கு தெரிந்தது பாருங்க.
இதே நான் வயது ஆன பின்னாடி எல்லாம் எல்லோருடையது என்று இருந்துட்டு இது போலான நிலை அப்போ வந்து இருந்து இருந்தா உண்மையில் ரொம்ப கஷ்டம் பட்டு இருந்து இருப்பேன் ம்மா..
ஒரு வகையில் இது நல்லது தான் என்று தான் நான் சொல்லுவேன்… இப்போவே முழிச்சிக்கிட்டது கூட.”
தன் மகன் இத்தனை இவ்வளவு பேசுவானா. மகனின் பேச்சில் அதிர்ச்சியாகி தான் பாக்கிய லட்சுமி மகனை பார்த்து இருந்தார்…
முப்பத்தியெழு வயது ஆகிறது.. தமிழ் மாறன் சின்ன வயது முதலே அதிகம் எல்லாம் பேசி பாக்கிய லட்சுமி பார்த்தது கிடையாது.. முதல் முறை இவ்வளவு நீண்டு தன்னிடம் பேசுகிறான்..
இதில் தான் சந்தோஷப்படுவதற்க்கு பதிலாக சங்கடம் தான் பட்டார்.. மகன் தன்னையுமே தவறாக நினைக்கிறானா என்று.. மகனிடம் இது வரை தனக்கு என்று ஒன்றும் வாங்கி கொண்டது இல்லையே… என் கணவன் எனக்கு வாங்கி கொடுத்த நகைகளே அவ்வளவு இருக்கு..அதுவே அவர் அவ்வளவு போட்டு கொள்ள மாட்டார்..
அதனால் மகனிடம் எதுவும் வாங்கி கொண்டது கிடையாது… என்ற தைரியத்தில் அதை பாக்கிய லட்சுமி மகனிடம் கேட்டும் விட்டார்…
அதாவது…. “நான் உன் கிட்ட ஒன்னுமே கேட்டது இல்லையடா…?” என்று கேட்டவருக்கு பதில் மருமகளிடம் இருந்து கிடைத்தது.
பாக்கிய லட்சுமியின் இந்த கேள்விக்கு… “ நீங்க ஒன்னுமே கேட்டது இல்ல அத்த. ஆனா பாருங்க மத்தவங்க கேட்கிறதை நீங்க ஆதரிப்பது போல தானே நடந்து கொண்டிங்க… இப்போ எனக்கு இரண்டு பிள்ளைங்க அத்த. அது ஆணோ பொண்ணோ… நான் இரண்டுக்கும் வித்தியாசம் பார்க்க மாட்டேன்..” என்று மாதுரி இதை சொல்லி முடித்தது தான் தாமதம்.
பாக்கிய லட்சுமி உக்கிரமாக மாதுரியை பார்த்தவர். “ அப்போ நான் ஒரு கண்ணில் வெண்ணையையும் ஒரு கண்ணில் சுண்ணாம்பையும் வைத்து கொண்டு இருக்கேன் என்று சொல்றியா…?” என்று மாமியார் கேட்க..
மருமகள் அசராது… “ ஆமாம்…” என்று விட்டான்…
“ எனக்கு இரண்டு பசங்க. பெண்ணை கல்யாணம் செய்து கொடுத்து விடுகிறேன்.. மாப்பிள்ளை மாதம் சம்பளக்காரன்.. என் மகன் பிசினஸ் செய்யிறான்… நல்லா சம்பாதிக்கிறான் என்று வைத்து கொள்ளுங்கள்…
அதுக்கு என்று எல்லாத்தையும் அவன் தலை மீது நான் போட்டு விட மாட்டேன்… ஏன்னா நான் என் இரண்டு பசங்களுக்கும் வித்தியாசம் பார்க்கல… அவங்களுக்குள் பொருளாதாரத்தில் ஏற்ற தாழ்வா இருக்கலாம்.. அது அவங்க அவங்க உழைப்பு முன்னேறி வர்றாங்க. ஆனா நான் இரண்டு பேரும் ஒன்னா இருக்கனும் ஒன்னா இருக்கனும் என்று நினச்சி என் மகனின் உழைப்பை பிடிங்கி எடுத்து கொண்டு என் மகளுக்கு கொண்டு போய் கொடுக்க மாட்டேன். அது நான் என் மகனுக்கு செய்யிற துரோகம்..” என்று சொல்லி விட்டாள்..
அதாவது பாக்கிய லட்சுமி தமிழ் மாறனுக்கு செய்தது துரோகம்.. என்ன தான் அவர் நடந்ததிற்க்கு அத்தனை காரணங்கள் அவர் மனதிற்க்குள் நினைத்து செய்தாலுமே… நீ செய்தது தவறு தான் என்பது போல் பேசிய மருமகளை ஒன்றும் சொல்ல முடியாது…
தன் மற்ற இருமகன்களின் வீட்டிற்க்கு சென்று விட்டார்.
அங்கோ மாதுரி சொன்னது சரி தான் என்பது போல் தான் நடந்தது..
அனைவரும் வேலைக்கு சென்ற பின்.. விமலனிடம் இருந்து போன் வரும்… “ ம்மா கேஸ் வெளியில் வந்து இருக்கும்மா சரியா இருக்கா என்று செக் பண்ணி வாங்கிக்கோங்க… ஓ டி பி நம்பர் இது என்று சொல்பவன் பணம் எங்கு வைத்து உள்ளேன் என்பதை சொல்ல மாட்டான்..
தனக்கு பி.பி சுகருக்கு போடும் மாத்திரை வாங்க பென்சன் பணத்தில் இருந்து எடுத்து வந்த பணத்தை கொண்டு தான் அந்த கேஸ்க்கு உண்டான பணத்தை கொடுத்து அன்று பாக்கிய லட்சுமி வாங்கியது…
பின் மீண்டுமே அதே தெருவில் இருக்கும் ஏடிஎமில் இருந்து தன் மாத்திரைக்கு என்று பணத்தை எடுத்து வந்தார் என்பது வேறு விசயம்…
பின் இதுவே பாக்கியலட்சுமிக்கு தொடர் கதையானது.இவர்கள் வேலைக்கு சென்ற பின் தான் பால் காரன்.. மாதம் பால் போடுவதற்க்கு பணம் கேட்க வருவான்… பேப்பர் அடுத்து சில காய்கறிகள்..
“அத்த கடைக்கு போய் காய்கறி எல்லாம் வாங்கி வர எங்களுக்கு டைம் இல்ல… இந்த ராணி இது தான் சாக்கு என்று பருப்பு சாம்பார் பருப்பு துவையல் மட்டும் செய்து வெச்சிட்டு ஓடி போயிடுறா. இதுக்கா நாம பன்னிரெண்டாயிரம் கொடுக்குறோம்… நம்ம தெருவிலேயே காய்கறி வண்டி வருது அத்த. வந்தா இந்த இந்த காய்கறிகள் வாங்கி வைத்து விடுங்க” என்று சொன்ன மருமகள் காய்கறி வாங்கவும் பணம் கொடுத்து விட்டு செல்லவது இல்ல..
ராணி சும்மாவா சமைக்கிறா… பன்னிரெண்டாயிரம் கொடுக்குறோம் தானே என்று சொன்னவள் ராணியின் சம்பளமான அந்த பன்னிரெண்டாயிரத்தையும் கொடுக்காது பாக்கியலட்சுமி தான் அதையும் கொடுத்தது எல்லாம் வேறு விசயம்..
இதில் மகள் ப்ரியா வேறு… “ ம்மா நான் ஜாக்கெட் தைக்க கொடுத்தேன் ம்மா.. உங்க மாப்பிள்ளை அத்தனை காசு எல்லாம் என்னால கொடுக்க முடியாது என்று சொல்லிட்டாரும்மா.. நீங்க என் நம்பருக்கு ஜீபே பண்ணிடுங்க ம்மா.” என்று சொன்ன ப்ரியா சொன்ன தொகை ஒன்பது ஆயிரம்.
என்றதும்.. “ என்ன டி ஒரு ஜாக்கெட் தைக்க எதுக்கு டி ஒன்பது ஆயிரம். ஒரு பட்டு புடவை விலையை சொல்ற.” என்று அதிர்ந்து கேட்டவரிடம் ப்ரியா அசால்ட்டாக..
“ம்மா இது ஆரி ஒர்க் செய்வதும்மா என் ஒரவத்தி மகளுக்கு காது குத்தி மொட்டை அடிக்கிறாங்க லே… அதுக்கு போட்டு போக தான் போன தீபாவளிக்கு நீங்க வாங்கி கொடுத்த அந்த சில்க் காட்டன் புடவைக்கு வேறு ஒரு ஜாக்கெட் வாங்கி ஆரி ஒர்க் தைக்க கொடுத்தேன்…”
பாக்கியலட்சுமி நினைத்து கொண்டார்… அந்த புடவையின் விலையே எட்டாயிரம் தான். இவள் அதுக்கு ஜாக்கெட் தைக்க ஒன்பது ஆயிரம் செலவு செய்வாளா.. என்று..
ஆனால் இதே பாக்கியலட்சுமி தான் அன்று… தமிழ் மாறன் பணத்தில் தீபாவளிக்கு என்று வீட்டிற்க்கு வந்து விற்க்கும் புடவைக்காரனிடம் எட்டாயிரம் கொடுத்து சில்க் காட்டன் புடவை வாங்கிய போது..
“வீட்டுக்கு ஒரே பெண் தமிழு அவள்… தீபாவளிக்கு காட்டன் புடவையோடு முடித்து விடுவீயா.. கடைக்கு கூட்டிட்டு போய் தான் அவளுக்கு பிடித்தது போல ஒரு பட்டு புடவை வாங்கி கொடுக்க கூடாதா..
நாம நல்லா இருந்தா மட்டும் பத்தாது தமிழ்… வீட்டு பெண்களும் நல்லா இருக்கனும்.. அவங்க கண் கலங்கினா வீட்டுக்கு ஆகாது..” என்று அன்று தமிழிடம் சொல்ல.
தமிழ் மாறனும் உடனே.. “ ம்மா நான் கட்டி கொண்டு இருக்கும் பில்டிங் பினிஷிங் ஸ்டேஜில் இருக்கும்மா… என்னால அங்கும் இங்கும் நகர முடியல.. பொங்கலுக்கு நீங்க சொன்னது போல வாங்கி கொடுத்து விடுகிறேன்..” என்று சொன்ன தமிழ் மாறன் .. சொன்னது போலவே பொங்கலுக்கு இருபது ஆயிரத்தில் ப்ரியாவுக்கு பட்டு புடவை எடுத்து கொடுத்து விட்டான் தான்..
பாக்கிய லட்சுமிக்கு இன்று அது எல்லாம் நியாபகத்தில் வந்ததில். ப்ரியா.
“ம்மா ம்மா.” என்று அழைத்து பேசியது காதில் விழவில்லை…
கத்தி மீண்டும்.. “ம்மா.” என்று அழுத்தி அழைக்கவும் தான் தான் பேசி கொண்டு இருக்கும் கை பேசியில் கவனத்தை வைத்தவர்…
“என்ன டி…” என்று பாக்கிய லட்சுமி எரிச்சலுடன் தான் மகளை கேட்டார்..
“என்ன ம்மா என்ன என்று கேட்கிறிங்க…? பணம் கேட்டேனே….?” என்று ப்ரியா பணத்திலேயே குறியாக கேட்க..
பாக்கிய லட்சுமிக்கு கோபம் வந்தது தான்.. ஆனாலுமே அடக்கி கொண்டு “ அடுத்த மாசம் பென்ஷன் வரட்டும் தரேன்…” என்று சொன்னார்..
ஆனால் ப்ரியாவோ… “ ம்மா என்ன ம்மா விளையாடுறிங்கலா…? நான் இந்த மாசம் கடைசியில் பங்கஷனுக்கு கட்ட கேட்டா நீங்க என்னவோ அடுத்த மாசம் பென்ஷன் வந்ததும் தரேன் என்று சொல்றிங்க.. ஏன் உங்க கிட்ட வேறு பணமே இல்லையா என்ன…?” என்று ப்ரியா கேட்டது தான் தாமதம் பாக்கிய லட்சுமி பொங்கி விட்டார்…
“இல்ல தான்டி இல்ல தான்.. எங்கு நீயும் உன் இரண்டு சின்ன அண்ணனுங்களும் என் கிட்ட பணத்தை விட்டு வைக்கிறிங்க….” என்று கத்த தொடங்கியவர்…
முடிக்கும் சமயம் பாக்கியலட்சுமியின் இரு மகன்களும் வீடு வந்து சேர்ந்து இருந்தனர்..