Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம், "கதையருவி" தளத்திற்கு தங்களை வரவேற்கிறோம்!

    இத்தளத்தில் எழுத எங்களை "vskathaiaruvi@gmail.com" என்ற மின்னஞ்சலில் தொடர்புக் கொள்ளவும். நன்றி!

Puthiyathoru Jodi....24..3

  • Thread Author
அத்தியாயம்….24…3

கணவன் இப்படி கேட்டதும் மஞ்சுளா பக் என்று சிரித்து விட்டாள்… உண்மையில் கணவன் இப்படியாக யோசிப்பான் என்று பெண்ணவள் நினைத்து கூட பார்க்கவில்லை…

அதுவும் தன் பேச்சுக்கு கணவன் எதிர்வினை ஆற்றாது அமைதியாக இருந்ததில் தான் தவறாக ஏதோ பேசி விட்டோம் என்று தான் நினைத்து கொஞ்சம் பயம் கூட வந்து விட்டது பெண்ணவளுக்கு… என்ன டா இது… இப்போது தான் வாழ்க்கை சுமூகமாக போய் கொண்டு இருக்கு.. இதை தான் ஏதோ பேசி கெடுத்து கொண்டு விட்டோமோ என்று.. அதுவும் கணவன் காரை ஓரம் கட்டியதில், பெண்ணவள் நிச்சயம் நான் தான் ஏதோ தவறாக பேசி இருக்கிறேன் என்று அவள் நிச்சயம் செய்து கொண்டவள்.

அப்படி நினைத்து பயந்து கொண்டு பெண்ணவள் இருக்க துகிலன் இப்படியான பேச்சில் சிரித்தவள் தன்னை கணவன் கோபமாக முறைத்ததில் பெண்ணவளுக்கு இன்னுமே தான் சிரிப்பு வந்தது… கணவனின் கோபம் முகம் கூட கூட பெண்ணவள் தன் சிரிப்பை கட்டுப்படுத்த தான் நினைக்கிறாள் ஆனாலுமே அது அடங்குவேணா என்று இருக்க…

ஒரு நிலைக்கு மேல் துகிலன்.. “ போதும் டி… நீ சிரிச்சா இன்னுமே அழகா தான் இருக்க … ஆனா இப்போ நான் இருக்கும் இந்த மனநிலைக்கு உன் சிரிப்பு எனக்கு கோபத்தை தான் கூட்டுது..” என்று கோபமாக பேசவும் தான் ஒரு நிலைக்கு தன் சிரிப்பை அடக்கினாள்..

ஆனால் சிரிப்போ சரி கோபமோ சரி… நாம் அடக்க நினைத்தால் அதன் தாக்கம் நம் முகத்தில் இன்னும் தெளிவாக எதிர் ஒலிக்கும். அது போல மஞ்சுளாவின் முகத்தில் பள பளப்பு கூடி.

“இல்லங்க இது வரை நான் தான் அதுவா இதுவா என்று யோசிச்சிட்டு இருந்தேன்… அதுக்கு காரணம்… உங்களுக்கு எந்த வகையிலுமே பொருத்தம் இல்லாத நான்… அந்த தாழ்வு மனப்பான்மையினால் கூட அப்படி நான் நினைத்து இருந்து இருக்கலாம்.. ஆனா நீங்க…. எனக்கு புரியல….” என்று சொன்னவள் அடக்கி வைத்து இருந்த சிரிப்பை சிரித்து விட்டாள்..

இப்போது துகிலனுக்கும் அவன் மனநிலையில் மாற்றம் வந்தது தான்.. அதனால் அவன் முகத்திலுமே லேசாக ஒரு புன்னகையின் சாயல்..

அதோடு மனைவி சொன்ன… தாழ்வு மனப்பான்மை என்ற பேச்சில் “ எனக்கு புரியல சில்க்கி… எதுல நீ எனக்கு இணை இல்ல என்று சொல்ற…. படிப்பு நீ படிச்சி இருக்க. அழகு.. அது இப்போ காரில் வைத்து சொல்றதை விட.. இன்னைக்கு நையிட் நம்ம பெட் ரூமில் வைத்து அதை தெளிவா உனக்கு நான் சொல்றேன்…” என்று சொன்னவன்..

பின் மீண்டுமே…. “எனக்கு தான் சில்க்கி… ஒரு மாதிரி குற்றவுணர்ச்சியா இருக்கு… உன் அக்கா அது போல செய்யாது போனால் உன் அத்தை மகனை கல்யாணம் செய்து இருந்து இருப்ப தானே… உனக்கு என்ன குறை இரண்டாம் தாரமா ஒரு குழந்தைக்கு அம்மாவா போகனும்…?” என்று கேட்டவனின் பேச்சில் கணவனை முறைத்து பார்த்தவள்..

பின் என்ன நினைத்தாளோ…. “ நானுமே உங்க கிட்ட பேசனுமுங்க. ஆனா காரில் இல்லை.. நம்ம வீட்டில் பேசலாம்.. பாவம் என்ன தான் நர்த்தகனை பார்த்துக்க நிறைய பேர் இருந்தாலுமே… அவன் உங்களை தான் தேடுவான்..” என்ற மனைவியின் பேச்சை துகிலன் பாதி ஒத்து கொண்டான்..

அதாவது… “ போகலாம் வீட்டிற்க்கு.. ஆனால் இப்போ எல்லாம் அவன் என்னை தேடுவதோடு உன்னை தான் அதிகம் தேடுறான்..” என்ற கணவனின் பேச்சில் பெண்ணவளுக்கு அத்தனை பெருமை… அதே மனநிறைவோடு வீடு வந்து சேர்ந்தனர்…

வாசலிலேயே நர்மதாவின் அம்மா வசந்தி நின்று கொண்டு இருந்தார்… அவன் கை பிடியில் நர்த்தகன்… துகிலன் காரை நிறுத்திய நொடி…

“ ம்மா…” என்று அழைத்து கொண்டு பிடித்து இருந்த தன் பாட்டியின் கையை விடுத்து ஓடி வந்தான்.

மஞ்சுளாவும் காரின் கதவை திறந்து சட்டென்று இறங்கியவள்..

“பேபி பார்த்து மெதுவா வா….” என்று சொல்லி கொண்டே அவள் தன் நடையின் வேகத்தை கூட்டி நர்த்தகனை நோக்கி சென்றாள்… துகிலனோ ஓட்டுனர் இருக்கையில் இருந்து இறங்கியவன் மனைவியை இரண்டே எட்டில் எட்டி பிடித்தவன்..

“ இப்போ எதுக்கு நீ இப்படி வேகமா நடக்குற…? இப்போ நீ குழந்தையை சுமந்துட்டு இருப்பதை அப்போ அப்போ மறந்து போயிடுற….” என்று சொன்னவனின் பேச்சில் மட்டும் தான் கண்டிப்பு தெரிந்தது.. ஆனால் அதற்க்கு எதிர் பதமாக மனைவியின் ஐந்து மாத கருவின் வயிற்று பகுதியின் மீது அழுத்தம் கொடுக்காது வைத்தான்.

அதற்க்குள் நர்த்தகனும் இவர்களிடம் வந்து விட. “ டாடி டாடி நானு நானு..” என்று சொல்லி தந்தையை நோக்கி தன் கையை நீட்டினான் தூக்கி கொள் என்பது போல…

துகிலனுமே சிரித்து கொண்டே மகனை தூக்கி கொண்டான்.. அவன் அடுத்து என்ன செய்வான் என்ன சொல்லுவான் என்று தெரிந்தே….

தந்தையை நினைப்பை மெய்பிக்கும் படியாக தான் தந்தை தன்னை தூக்கியதுமே தந்தை போல் ஒரு கை கொண்டு மட்டும் அல்லாது தன் இரு கையையும் மஞ்சுளாவின் வயிற்றின் மீது வைத்தவன்…

தன் அன்னையிடம்.. “ ம்மா நான் பேபி இல்ல ம்மா… உங்க வயித்துல இருக்கும் குட்டி தான் பேபி… நான் பேபிக்கு அண்ணன்.. அப்போ நான் பிக் பாய் தானே…

இனி நீங்க என்னை பேபி என்று கூப்பிட கூடாது…” கோபமாக பேசிய குழந்தையின் குரலில் அத்தனை கொஞ்சல்..

மஞ்சுளாவும்.. “ சாரி சாரி… டா செல்லம். இனி நான் உங்களை பேபி என்று கூப்பிட மாட்டேன்.. ஓகேவா செல்ல குட்டி…” என்று மகனின் பேச்சுக்கு பதிலுக்கு கொஞ்சினாள் மஞ்சுளா..

நர்த்தகனும் பெரிய மனிதனாக. “ ம் ஒகே ஓகே…” என்று சொல்ல. இதை பார்த்த துகிலனுக்கு சிரிப்பு வர பார்த்தது ஆனால் சிரிக்கவில்லை…

சிரிப்பு வர காரணம்.. இவர்களின் இந்த பேச்சை துகிலன் கடந்த மூன்று மாதமாக கேட்டு கொண்டு தான் இருக்கிறான்..

தன் மகன் என்னை பேபி கூப்பிடாதே என்று சொல்வதும். அதற்க்கு தன் மனைவி சரி சரி என்று சொல்வதும்… வந்த சிரிப்பை அடக்க காரணம் தான் சிரித்தால் இரண்டு பேரும் ஒன்று சேர்ந்து தன்னை வைத்து செய்ததின் முன் விளைவாக சிரிக்காது நல்ல கணவனாக மனைவியின் தோள் மீது கை போட்டு கொண்டு தன் வீட்டிற்க்குள் நுழையும் போது தான் தன் அத்தை தங்களை முறைத்து பார்த்து கொண்டு இருப்பதை துகிலன் பார்த்தது….

துகிலன் தன் அத்தையை பார்த்ததும் ஒரு சிரிப்போடு அவரை கடந்து போக தான் பார்த்தான் .. வசந்தியின் முகத்தை வைத்தே ஏதோ சரியில்லை என்பதை ஊகித்து கொண்டான்… இப்போது வசந்தியிடம் பேசி இப்போதைய இந்த மனநிலையை கெடுத்து கொள்ள அவன் விரும்பவில்லை.

அதோடு மனைவி எதிரில் அத்தை ஏதாவது பேச கூடும்… மனைவி இது போலான நிலையில் அவளின் மனநிலை மிக முக்கியம் என்று சென்ற முறை மருத்துவ பரிசோதனைக்கு சென்ற போது மருத்துவரும் கூறி இருக்க.. துகிலன் பிரச்சனை இல்லாது போக தான் நினைத்தது…

ஆனால் பிரச்சனை வேண்டாம் என்று துகிலன் மட்டும் நினைத்தால் போதுமா. அது எதிரில் இருப்பவர்களும் நினைக்க வேண்டாமா.?

வசந்தியின் இன்றைய மனநிலை… “ நீ வா சண்டைக்கு வா… சண்டைக்கு வாடா.” என்பது போன்ற மனநிலையில் தான் இருந்தது.

அவரின் இந்த மனநிலைக்கு காரணம் ஒன்று அல்ல எது ஏகப்பட்டதுக்கு இருந்தது…

அதில் முக்கியமானது முன் போல் தன் அண்ணன் வீடான இந்த வீட்டில் அவளுக்கு மரியாதை இல்லாது போய் விட்டது… தன் இரு பிள்ளைகளின் வாழ்க்கையை தன்னுடைய இரு பிள்ளைகள் பாழாக்கி விட்டார்கள் என்பது போலான பேச்சை துகிலனின் அன்னை துர்கா பேசிவிட்டார்…

அவரின் பேச்சுக்கு வசந்தியின் அண்ணன் தன் அமைதியின் மூலம் . எனக்குமே அந்த எண்ணம் தான் என்பதை நிருபித்தி விட்டார்..

அதுவும் துர்கா பேசிய… “நானுமே உன் பொண்ணை விவாகரத்து செய்ததில் என் மகன் மீது தான் அத்தனை கோபப்பட்டேன்.. ஆனா ஆனா கல்யாணம் பண்ணியும் என் மகன் பிரம்மச்சாரி போல வாழ்ந்து கொண்டு இருக்கான் இத்தனை வருஷம்..

சரி அது தான் போகுது.. எதோ கடவுள் புன்னியத்தில் அவன் வாழ்க்கை கொஞ்சம் சீராகி நல்ல மனைவி.. அவளுக்கும் இப்போ குழந்தை பிறக்க போகுது என்று விட்டாலுமே, உன் மகன்…

உன் மகன் மனைவியா வாழாது கூட என் மகன் வேறு ஒரு பெண்னை தேடி போகவில்லை.. உன் மகன். கிளி மாதிரி பொண்டாட்டியா என் மகள் இருக்கும் போதே குரங்கு போல இருக்கும் அந்த பெண்ணை பி.ஏ என்ற சாக்கில் கூட சேர்ந்து கூத்து அடிச்சி இருக்கான்…” என்று அத்தனை பேச்சி பேசி விட்டார் துர்கா…

இது போல எல்லாம் முன் துர்கா பேசியது கிடையாது.. அதோடு தன் வீட்டில் முன் எல்லாம் சாருமதி.

“அத்த அத்த.” என்று அழைத்தவள் இப்போது எல்லாம் ஒரு தெனவெட்டோடு தான் சுற்றி கொண்டு இருக்கிறாள்.. குழந்தைகளை கூட தன்னிடம் தருவது கிடையாது… சரி தன்னிடம் கொடுக்கவில்லை என்றாலும் பரவாயில்லை பெத்த தகப்பன் தன் மகனிடம் கூட குழந்தையை தருவது கிடையாது..

கேட்டால், “உங்க மகனை போலவே பொறுக்கியா வந்தா….?” என்று கேட்கிறாள்.. அதுவும் மகன் தன் கணவன் முன்பே…. பல்லை கடிக்க தான் முடிந்தது….

என்ன செய்ய. இவள் விவாகரத்து செய்யாது இங்கு மருமகளா இருப்பதே போதும் என்ற நிலையில் தான் இருந்தனர்.. வசந்தி வீட்டினர்…

நர்மதா விசயத்திலேயே கேட்பவர்களை கேள்விக்கு படில் சொல்ல மாலவில்லை வசந்தி குடும்பத்தினருக்கு… இதில் மகன் விசயமும் வெளியில் வந்தால் அவ்வளவு தான் என்று அமைதியாக அனைத்தும் கடந்து கொண்டு இந்த மூன்று மாதமாக இருந்தவருக்கு…

இன்று தன் பேரன் வேலையாளோடு வெளியில் வாசலை பார்த்து நின்று கொண்டு இருப்பதை பார்த்து விட்டு தான் இங்கு வந்தது..

“என்ன டா பட்டு குட்டி இங்கு நிற்கிற..?” என்று கேட்ட போது தன் அண்ணன் அண்ணி வெளியில் சென்று இருப்பது சொன்னவன் கூடவே.

“டாடி ம்மாவை கூட்டிட்டு வரேன்னு சொன்னாங்க… இன்னும் காணும்…” என்றும் சொல்ல.

இதை அந்த குழந்தை சாதாரணமாக தான் வசந்தியிடம் சொன்னது.. குழந்தைகள் தனக்கு பிடித்தமானவர்கள் வரும் நேரத்திற்க்கு இது போல வாசலில் காத்திருப்பது எல்லாம் ஒரு சாதாரண விசயம் தான்..

ஆனால் குற்றம் பார்க்கும் கண்ணுக்கு ஒரு குழந்தையை தனியே விட்டு விட்டு ஊரை சுத்த போயிட்டாங்க… என்று நினைத்து குழந்தையை வைத்து கொண்டு நின்று கொண்டு இருந்தவர் பார்த்த காட்சி.. அதாவது தன் பேரன் தன்னை விட்டு மஞ்சுளாவை தேடி ஓடியது…

மஞ்சுளா தன் பேரனை நோக்கி செல்லும் போது துகிலன் தன் மகனை விட மனைவிக்கு முக்கியத்துவம் கொடுத்தது.. பின் தன் பேரன் மஞ்சுளாவின் வயிற்றில் கை வைத்தது… ஒரு குடும்பமாக வருவது என்று பார்த்தவருக்கு அத்தனை புகைச்சல்..

அதோடு வீட்டிற்க்குள் எதோ வேலை நடந்து கொண்டு இருப்பதை பார்த்த வசந்திக்கு நர்த்தகன்..

“டாடி ம்மா ரூமை டெக்ரேட் பண்றாங்க.. உங்களுக்கு தெரியுமா பாட்டி இனி நான் ம்மா ரூமில் தான் படுக்க போறேன்.. ஜாலி ஜாலி…” என்று சொன்ன தன் பேரனின் இந்த மகிழ்ச்சிக்கு காரணமான மஞ்சுளாவை வசந்தி பாராட்டி இருக்கனும்… ஏன் என்றால் இது வரை நர்த்தகன் தனி அறையில் தான் படுத்து உறங்கி கொண்டு இருந்தான்..

மஞ்சுளா தான்…. தன் வயிற்றின் மீது கை வைந்து கொண்டு…

“இந்த குழந்தை பிறந்தால் இந்த குழந்தையை எந்த ரூமில் படுக்க வைப்பிங்க…?” என்று கேட்ட போது துகிலன்..

“என்ன குழந்தைக்கு தனி ரூமா. ஏன்… நம்முடன் தூங்கட்டும்.. என்று கணவன் சொன்ன போது தான் மஞ்சுளா..

“நீங்களும் நானும் மட்டும் இந்த ரூமில் இருந்தா அது அந்த அளவுக்கு நர்த்தகனை பாதிக்காதுங்க. ஆனா நாளைக்கு இந்த குழந்தையோடு இருந்தா, அந்த குழந்தை நாம மட்டும் தனி என்று அந்த குழந்தை மனதுக்கு தோனாதா…?” என்று கேட்ட போது தான் துகிலன் தன் தவறை உணர்ந்தது…

உண்மையில் இது வரை நர்த்தகன் தனி அறை படுத்து உறங்கியது… அதை பற்றி துகிலன் பெரியதாக நினைக்கவில்லை…

இந்த ஏற்பாட்டை செய்தது நரேன்.. ( நர்மதா) தான்… சில சமயம் தொழில் சம்மந்தமான பேச்சுக்களை படுக்கை அறையில் கூட பேசுவார்கள்… அப்போது குழந்தையின் தூக்கம் கெடும் என்று அவன்(ள்) தான் இந்த ஏற்பாட்டையே செய்தது….

அதோடு நரேன் ( நர்மதா) மூன்று மாதம் வரை தான் தாய் பால் கொடுத்தான்..(ள்) பால் சுரக்கவில்லை… அதன் தொட்டு குழந்தை தன் தாயை அந்த அளவுக்கு தேட மாட்டான்.

நரேனும். ( நர்மதாவும்) தொழிலை பார்க்க ஆரம்பித்து விட்டதால் குழந்தையை பார்க்க அனுபவமிக்க ஒரு பணிப்பெண்ணை நியமித்து விட….

நர்தகனுக்கு என்று தனியறை என்பது அனைத்திற்க்கும் வசதியாக தான் இருந்தது.. இப்போது மஞ்சுளா அது போல எல்லாம் தனக்கு பிறக்கும் குழந்தையை விட மாட்டாள்…

அப்போ நர்த்தகன்… என்று நினைத்தவன் குழந்தையை தங்களோடு படுக்க வைத்து கொண்டான்.. குழந்தையுமே ஐய் ஜாலி ஜாலி என்றதில் தான் குழந்தை ஒரு குடும்ப அமைப்பை எத்தனை எதிர் பார்த்து இருக்கிறான் என்பதையே அவன் புரிந்து கொண்டது..

அதன் தொட்டு தான் தங்களின் படுக்கை அறையை ஒரு சில மாற்றங்கள் செய்தது.. மஞ்சுளா அவள் அம்மா வீட்டிற்க்கு சென்று இருந்த சமயமாக பார்த்து அதை செய்து முடிக்க முடிவு செய்தவனாக….



வசந்தி தன் பேரனின் இந்த மகிழ்ச்சியில் அவருமே மகிழ்ந்து இருந்து இருக்க வேண்டும்… ஆனால் வசந்தியோ… தன் மகள் கணவனை அபக்கரித்ததோடு மகனையும் அபகரிக்க பார்க்கிறாள் என்று தான் மஞ்சுளாவை நினைத்தார்..

அதில் இது வரை தன்னை கட்டுப்படுத்தி கொண்டு இருந்த வசந்தி… வார்த்தையை விட்டார்….

“என் மகள் இப்படி ஆனது உனக்கு ரொம்ப வசதியா போயிடுச்சிலே…” என்று பேச ஆரம்பிக்கும் போதே.

துகிலன் தன் மனைவியிடம்… “ குழந்தை டல்லா இருக்கான் பாரு.. அவனுக்கு ஏதாவது சாப்பிட கொடுத்து விட்டு நீயும் ஏதாவது ஜீஸ் குடி.. டாக்டர் உன்னை டூ ஹவர்ஸ் கேப் விட்டு ஏதாவது ப்ரூட் ஜீஸ் எடுத்துக்க சொல்லி இருக்கிறார் தானே.. நாம உங்க அம்மா வீட்டை விட்டு வந்து த்ரீ ஹவர்ஸ் ஆகுது…” என்று சொன்னவன். பின் ஏதோ நியாபகம் வந்தவனாக….

“சாப்பிட்டு நம்ம ரூமுக்கு போகாதிங்க… அங்கு க்ளீனிங்க வேலை நடக்குது… பேக் சைட் கார்டனுக்கு போய் இருங்க…” என்று சொல்லி மனைவி மகனை அனுப்பி வைத்து விட்டு தான் துகிலன் தன் அத்தையை பார்த்தது..

“ம் சொல்லுங்க அத்த.. ஏதோ பேசுனிங்கலே… அது என்னது…?” என்று கேட்டவனிடம் வசந்தி முன் போல கோபமாக பேச வார்த்தைகள் வரவில்லை…

காரணம்… துகிலன் மஞ்சுளாவிடம் பேசும் விதம். சத்தியமாக இது போல இதமாக யாரிடமும் துகிலன் பேசி அவர் பார்த்தது கிடையாது.. ஏன் தன் அம்மா துர்காவிடம் கூட.. இது போல தன்மையாக பேசியது கிடையாது.

தன் மகளிடம் நெருக்கம் தான் துகிலன்.. ஆனால் அதில் தோழமை மட்டும் தான் வசந்தி பார்த்து இருக்கிறார்… காதல்.. துகிலனின் பேச்சில் மட்டும் அல்லாது பார்வையிலுமே மஞ்சுளாவை நடத்திய விதத்தில்…

“துகிலா இது போல நீ ஏன் என் பெண்ணிடம் நடந்துக்கல துகிலா…?” என்று கேட்டவரின் இந்த பேச்சில் துகிலன் தன் அத்தையை பார்த்தான்….
 
Well-known member
Joined
Jun 23, 2024
Messages
110
வசந்தி நீ நர்மதா பத்தி கவலைபட வேண்டாம் அவ வாழ்க்கைய அவ சரி பண்ணிக்குவா 🤭🤭🤭

நீங்கள் பெத்து வச்சிருக்க அந்த தறுதலை மகனை திருத்த பாரு 😣 😣 😣

துர்கா நீங்கள் எல்லாம் வசந்தி பத்தி பேசவே கூடாது 🤭 🤭 🤫 நர்மதாவுக்கு தான் உரிமைன்னு வந்த முதல் நாளே மஞ்சுவ அவமான படுத்துன ஆள் தானே நீங்க 😑😑😑😑😑

ஏம்மா வசந்தி அவன் ஒன்னும் கல்யாணம் ஆகி மூன்றாவது நாளே உங்க பொண்ணை துரத்தி விட்டுட்டு இன்னொரு கல்யாணம் செய்யல 😨😨😨😨😨😨
 
Last edited:
Active member
Joined
May 11, 2024
Messages
132
வசந்தியின் கேள்விக்கு துகில் என்ன பதில் சொல்லுவான் நம்மு அவன் தோழி ஆனால் மஞ்சு அவன் மனைவி இப்பொழுது வசந்தி மன அழுத்தம் வேதனை அவ்வாறு கேள்வி கேட்டு விட்டார் இனி 🤔🤔🤔🌺🌺🌺
 
Well-known member
Joined
Aug 16, 2024
Messages
362
வசந்தி நன்றாக வாங்கி கட்டிக் கொள்ள போகிறார் என்று மட்டும் தெரிகிறது.
 
Well-known member
Joined
Jun 1, 2024
Messages
144
நர்மதா அவளுக்கு பிடிச்ச மாதிரி வாழ்க்கையை தேர்ந்தெடுத்துகிட்டா..... இன்னமும் அவளுக்காக துகியை மஞ்சுவை பேசிட்டு இருக்காங்க வசந்தி 🥶🥶🥶🥶🥶🥶
தப்பு பண்ணின இவங்க பையனை என்ன செஞ்சாங்களாம் 😡😡😡

துகி லைப் இப்போ தான் காதல் குடும்பம்ன்னு அழகா மாறியிருக்கு 🥰🥰🥰
 
Joined
Mar 3, 2025
Messages
61
பாதிக்கபட்டது துகி குடும்பம் வசந்தி அது கூட நீ இன்னும் உணரல இதுல 5mark question வேற கேட்கிற
அஞ்சு மார்க் கேள்வி இல்லை மச்சீ. அகராதிலையே மீனிங் இல்லாத கேள்வி கேக்குது
 
Well-known member
Joined
Jul 14, 2024
Messages
291
அஞ்சு மார்க் கேள்வி இல்லை மச்சீ. அகராதிலையே மீனிங் இல்லாத கேள்வி கேக்குது
சிலபஸ் இல்லாத கேள்விக்கு பதில் அளிக்க வேண்டாம் (attend panna) ஆனா mark போடணும்
 
Top