Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம், "கதையருவி" தளத்திற்கு தங்களை வரவேற்கிறோம்!

    இத்தளத்தில் எழுத எங்களை "vskathaiaruvi@gmail.com" என்ற மின்னஞ்சலில் தொடர்புக் கொள்ளவும். நன்றி!

Puthiyathoru Jodi....24...4

  • Thread Author
அத்தியாயம்….24…4

மனைவியும் மகனும் அங்கு இருந்து செல்லும் வரை தான் அவனின் முகம் இலகுவாக இருந்தது.. அவர்கள் சென்ற நொடி அவனின் முகத்தில் அத்தனை ஒரு மாற்றம்…

அதுவும்… “ ம் சொல்லுங்க… இப்போ ஏதோ என் கிட்ட கேட்டிங்கலே… அது இன்னொரு முறை கேளுங்க….?” என்று துகிலன் கேட்ட அந்த தோரனையானது… வசந்திக்கு கொஞ்சம் பயம் தட்டி விட்டது..

அப்படியான ஒரு குரலின் தன்மையில் தான் துகிலன் வசந்தியிடம் கேட்டது… வசந்தி துகிலன் கோபப்பட்டு பார்த்து இருக்கிறான் தான்.. ஆனால் இப்படியான ஒரு கோபத்தை பார்ப்பது இதுவே முதல் முறை..

அதில்… “ இல்ல துகிலா. நீ நம்ம நர்மதா கூட இருக்கும் போது இப்படி இல்லலே.. யாரோ ஒரு பெண் கிட்ட….” என்று வசந்தி மீண்டும் வாய் விட…

“யாரோ ஒரு பெண் இல்ல.. என் மனைவி.. அவள் என் மனைவி… அதே போல நர்மதா இல்ல நரேன்… அப்போ இப்போ எனக்கு ஒரு நல்ல பிரண்ட்… எப்போவுமே நல்ல பிரண்டா நரேன் இருப்பான்(ள்)…” என்று சொன்ன துகிலன்..

“பிரண்டுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை நான் எப்போதும் நரேனுக்கு கொடுப்பேன் தான். ஆனால் ஒய்ப் அது வேறு இல்லையா…?” என்று கேட்டவன்.

பின். “முதல்ல நீங்க என்னவோ கேட்டிங்கலே.. ஆ… நர்மதா இப்படியானது எனக்கு வசதியா போயிடுச்சி… இருக்கட்டும்.. அவளுக்கு அவனா இருக்க தான் ஆசை… அப்படி உணர்வுகளோடு தன்னோடு போராடி கொண்டு இருப்பவனை… (ளை) என் உணர்வுக்கும் நீ தான் பொறுப்பு என்று நான் அவன் (ள்) கிட்ட நின்னா தான் தப்பு…

கூட நான் மனைவி வீட்டில் எல்லா தேவையும் கொடுக்கும் போது இன்னொரு பெண்ணை தேடி போகலையே. உங்க மகன் போல…” என்று பல்லை கடித்து கொண்டு சொன்னவன்.

பின்… “ சாரு வேண்டாம் விட்டு விடு என்பதினால் தான் உங்க மகனின் காலும் கையும் நல்லா இருக்கு.. ஆனா இனி ஒரு முறை அவன் வேறு எங்காவது வாய் வைக்கிறதை பார்த்தேன். ஜென்மத்துக்கும் எதுவும் செய்ய முடியாதது போல பண்ணி விடுவேன்…” என்று ஆக்ரோஷமாக பேசிய பேச்சில்..

வசந்திக்கு அப்படி ஒரு பயம் தட்டியது… அதில்.. “ துகிலா அவன் உன் தங்கை புருஷன்.. அதோட உன் தங்கையின் குழந்தைக்கு அப்பா…” என்று சொல்லி வசந்தி… தன் மகனின் பாதுகாப்பை உறுதி செய்ய பார்த்தார்..

ஆனால் துகிலனோ….

“ நரேனை என் தங்கைக்கு புருஷனாகனும்.. அவள் குழந்தைக்கு அப்பாவாகவும் மாற்றி விடுவேன்.. தெரியும் லே… நரேன் நான் சொன்னதை தான் கேட்பான்…” என்று துகிலன் இப்படி சொல்லிய பின் வசந்தி அடுத்து வாய் திறப்பார்.. வாயை இறுக்க மூடிக் கொண்டு விட்டார்…

இதில் துகிலன் வசந்தியோடு பேசி கொண்டு இருந்த போது தான் விக்னேஷும் வைஷ்ணவியும் வீட்டிற்க்குள் சென்றது… அவர்கள் சென்றதில் ஒரு பிரச்சனையும் கிடையாது.. ஆனால் போகும் போது வைஷ்ணவி தன்னை கோபமாக பார்த்து கொண்டு போவதை பார்த்தவன்.

‘இந்த கொடுக்கு ஏன் இப்படி பார்த்துட்டு போகுது.. நாம் இதை என்ன செய்தோம்..’ என்று தான் நினைத்தான்..

பின் தன் மனைவியின் அருகில் சென்ற போது தன் மனைவியிடம் வைஷ்ணவி பேசியதை கேட்ட பின்பு தான் நாம ஒன்னும் செய்யாதது தான் வைஷ்ணவிக்கு கோபம் என்பதே தெரிந்தது அவனுக்கு….

வசந்தியிடம் பேசிய பின்.. இனி ஒரு முறை தங்கள் பக்கம் வர கூடாது என்று ஒரு பிரச்சனையை முடித்து விட்டு வீட்டிற்க்குள் சென்றவன் கண்ணுக்கு மனைவியும் மகனும் தென்படவில்லை…

தான் சொன்னது போல் பின் பக்கம் பூங்காவில் தான் இருப்பார்கள் என்று நினைத்து பின் பக்கம் நோக்கி சென்றான்..

அவனுக்கு மஞ்சுளா தங்கள் அறைக்கு செல்ல கூடாது.. இன்று இரவு தான் செல்ல வேண்டும்… ஒரு சர்பிரஸாக தங்கள் அறையை அவன் மாற்றம் செய்து கொண்டு இருக்கிறான்.. அதன் தொட்டு தான் பின் பக்க பூங்காவுக்கு செல்ல சொன்னது…

உன்னை சுற்றி இருப்பது அனைத்தும் கன்னி வெடி என்பது பாவம் துகிலனுக்கு தெரியவில்லை போல….

இதோ வைஷ்ணவி துகிலனை முறைத்து கொண்டு வந்தவள்… என்ன இன்றும் மனைவியை இவன் அழைத்து கொண்டு வரவில்லையா..? வைஷ்ணவி துகிலனை இப்படி தான் நினைத்தது…

பின் என்ன. இத்தனை நாள் தன் கணவனுக்கு உண்டான மரியாதை இங்கு இல்லை.. அனைத்துமே துகிலன் நர்மதாவிடம் கேட்டு தான் செய்கிறார்கள்… என் கணவனும் இந்த வீட்டு மகன் தான்.. அதே போல நானுமே இந்த வீட்டு மருமகள். நானுமே பெத்த படித்து இருக்கேன் என்று நினைத்து கொண்டு இருந்தவளிடம்.

அவன் நினைத்தது போலவே… தான்… “ இந்தம்மா.. இது உன்னுடைய பங்கு… இதனை என்ன செய்யனுமோ செய்.. இதற்க்கு உண்டான அங்கிகாரம் உங்க இரண்டு பேருக்கு மட்டும் தான் இருக்கு என்று …” பிரித்து கொடுத்து விட்ட பின்.. அதில் தன் கொடியை நடலாமே.. அது தான் நானுமே படித்து இருக்கேன்.. நானுமே பிசினஸ் பேங்கிரவுண்டில் இருந்து வந்த பெண் தான்.. என்று தானே சொல்லி கொண்டு இருப்பாள்…

முன் இவர்கள் தலையிட்டது.. இவர்கள் என்றால் துகிலனும் நர்மதாவும்… தலையிட்டது.. இதை நீ பார்த்துக்கோ நீ என்று பிரித்து தந்தது தான்.. முறையாக ஒன்றும் செய்யவில்லை.

அதனால் ஒன்றன் பாதிப்பு இன்னொன்றறையும் பாதிக்கும் தான். ஆனால் இப்போது அந்த குழுமத்தையே பிரித்து.. குழும பெயரோடு அவர் அவர் பெயரின் முதல் எழுத்தை இணைத்து. தனித்து கொடுத்து விட்டதில் விக்னேஷ் செய்யும் தவறின் பாதிப்பு அவன் குழுமத்தை மட்டுமே பாதிக்கும்..

அப்படியான ஒரு பாதிப்பை தான் சென்ற வாரம் விக்னேஷ் செய்த தவறால் அவனின் குழுமம் சந்தித்தது….

இதில் விக்னேஷ். அந்த இடத்தை வாங்க அவனின் மாமனாரையும் இழுத்து விட்டு விட்டான். பாவம் அதில் வைஷ்ணவிக்கு தன் தந்தையிடம் கூட அப்படி ஒரு திட்டு…

“நர்மதாவை பார்த்து பொறாமை பட்டா மட்டும் போதாது… அந்த நர்மதா மாதிரி நாம புத்திசாலியா என்று யோசிக்கனும்.. துகிலனுக்கு கொடுக்கும் மரியாதை என் புருஷனுக்கு கொடுக்கல என்று சொல்லுவியே… ஏன் கொடுக்கல என்று உனக்கு இப்போ புரியுதா…?

இந்த நிலை இப்படியே நீடித்தால் நீயும் உன் புருஷனும் உங்க பங்கு மட்டும் கிடையாது.. நான் இத்தனை வருஷம் சேர்த்து வைத்ததை கூட மொத்தமா காலி செய்து விட்டு விடுவீங்க.. இத்தனை வயசுக்கு மேல நான் யாரிடமும் கையேந்த முடியாது…” என்று மகளை திட்டியவர்..

மனைவியிடம்.. “ தோ பாருடி இனி ஒரு முறை மாப்பிள்ளைக்கு சான்ஸ் கொடுத்து பாருங்க என்று சொல்லிட்டு என் முன்ன வந்து நின்னா நான் கோர்ட்டுக்கு போக வேண்டி இருக்கும்.. நம்ம டைவஸ்க்குக்காக…

பாவம் இதனால் வைஷ்ணவி தன் அன்னையிடமும் அத்தனை திட்டு.

“நீ என்ன செய்வீயோ எனக்கு தெரியாது முன் போல மாத்து… அந்த நர்மதா பரவாயில்லை… உங்க சொத்தையும் சேர்த்து பாதுகாத்தா… ஆனா இப்போ வந்த பொண்ணு கை காரி தான் போல..

விவரமா எல்லாம் பிரிச்சி அவள் புருஷன் உழைப்பு தங்கள் தொழிலுக்கு மட்டும் இருந்தா தான் எல்லாரையும் விட நாம மேல வருவோம் என்று தெரிஞ்சி வெச்சி இருக்கா..

நீ அந்த பொண்ணு கிட்ட கெஞ்சி கொஞ்சி முன் போல ஆக பார்ப்பியோ. இல்ல மிரட்டி முன் போல மாத்துவீயோ எனக்கு தெரியாது.. ஆனா முன் போல மாறனும்.. அது தான் உனக்கும் உன் குழந்தைக்கும் நல்லது.. அவ்வளவு தான் நான் சொல்லுவேன்…” என்று திட்டி கொண்டு இருக்க..

அங்கு இருந்த இருக்கையில் அமர்ந்து கொண்டு விக்னேஷ் வீடியோ கேம் விளையாடி கொண்டு இருக்க… அதை கை காட்டி…

“இவன் உன்னை நடுத்தெருவில் நிற்க வெச்சி விடுவான் பார்த்துக்கோ….” என்று அனைவருடையதும் கேட்டு கொண்டு மாமியார் வீடு வர..

இதோ மஞ்சுளா இன்றும் வரவில்லையா. பேசலாம் என்று பார்த்தால் என்று நினைக்கும் போது தான் ஒரு பணிப்பெண்… ஏதோ உணவு பொருளை பின் பக்கம் எடுத்து செல்வதை பார்த்தது…

யாருக்கு என்று உணவை கொடுத்து விட்டு மீண்டும் வீட்டிற்க்குள் வந்த பணிப்பெண்ணிடம் கேட்ட போது தான் அந்த பணிப்பெண்….

“நம்ம மஞ்சு மேடத்துக்கு ம்மா…” என்று சொல்லி விட்டு சென்றதும்..

மஞ்சு மேடம் நான் ம்மாவா.. என்று மனதில் பொறுமிக் கொண்டே பின் பக்கம் நோக்கி சென்றவள் மஞ்சுளாவிடம் எடுத்த உடனே…

“நான் உன்னை எவ்வளவு பாவம் பார்த்தேன் தெரியுமா..?” என்று தான் வைஷ்ணவி பேசியது.

மஞ்சுளா அப்போது தான் குழந்தைக்கு உண்டான பானத்தை கொடுத்து விட்டு தன்னுடையதை குடித்து கொண்டு இருந்த போது வைஷ்ணவி இப்படி பேசவும்.

என்ன இவங்க ஏன் பாவம் பார்த்தாங்க… என்பது போல வைஷ்ணவியை மஞ்சுளா பார்த்தாளே தவிர… எதுவும் பேசவில்லை…

பேசவில்லை என்பதை விட வைஷ்ணவி மஞ்சுளாவை பேசவிட வில்லை என்று சொன்னால் சரியாக இருக்கும்..

பின்…. “ நர்மதாவை கூட நம்பிடலாம் போல. இத்தனை வருஷம் இருந்து தொழிலை பிரிக்கல.. ஆனா நீ… பரவாயில்லை…” என்று சொல்லி கொண்டு இருந்த சமயம் தான்.. துகிலன் அங்கு வந்தது.. வந்தவன் காதில் வைஷ்ணவி பேசியது அனைத்தும் கேட்டும் விட்டது…

துகிலனுக்கு தான்.. அய்யோடா என்று ஆனது… ஏன்டா நான் ஒரு கல்யாணத்திற்க்கு இரண்டு கல்யாணம் செய்துமே… நான் என் மனைவி கிட்ட ஒழுங்கா குடும்பம் நடத்தல டா… குடும்பம் கூட விடு.. ஒரு சின்ன சின்ன ரொமன்ஸ்… இது கூட பண்ண விட மாட்டிங்கலாடா என்று தான் மனதில் நொந்து கொண்டான்…

இன்று தான் மனைவிக்கு பார்க்கும் மருத்துவரை துகிலன் தனிப்பட்டு பார்த்து வந்தது.. அவனுக்கு ஒன்று கேட்க வேண்டி இருந்தது….

மனைவிக்கு நேற்றோடு ஐந்து மாதம் முடிவடைந்து விட்டது.. இனி எங்களுக்குள் தாம்பத்தியம் நடந்தால் குழந்தைக்கு பாதிப்பு ஏற்படாது தானே. என்று அவனுக்கு கேட்க வேண்டி இருந்ததினால் மருத்துவரை சென்று பார்த்தான்…

மருத்துவர்… “அது ஒன்றும் பாதிப்பு கிடையாது மிஸ்டர் துகிலன்.. என்ன ஒன்னு ஹார்ஷா எல்லாம் கூடாது.. “ என்று சொன்னதில் துகிலன் என்ன என்னவோ திட்டம் போட்டு அனைத்தும் செய்தால், நீங்க எல்லோரும் எங்கு இருந்துடா வர்றிங்க என்று நினைத்தாலும்..

வைஷ்ணவி தன் மனைவியிடம் இது போலான குரலி பேசுவதும் பிடிக்கவில்லை…

அதன் தொட்டு… “ என்ன செய்யனும் என்று நீ என் ஒய்ப் கிட்ட கேட்டுட்டு இருக்க வைஷ்ணவி… யாரோடு பார் பரவாயில்லை என்று நீ சொன்ன. முன் போல மாத்துன்னா.. அது முன் போல மாத்து சொல்ற. பிசினஸ்ஸா…. நீ தானேம்மா எனக்கு தெரியாதா தெரியாதா என்று சொல்லிட்டு இருப்ப.. உனக்கு தெரிந்த அனைத்து வித்தையும் தொழிலில் காட்ட வேண்டியது தானே…” என்று கேட்டான்..

அவனுக்குமே தெரியும்.. விக்னேஶ் சென்ற வாரம் சந்தித்த சரிவு.. ஆனால் எப்போதும் அனைத்தும் சரி செய்பவன்.. இப்போது செய்யவில்லை.

அவனின் தந்தை கூட. “ துகிலா அவனுக்கு ஒன்னும் தெரியாது ..’ என்று சொன்ன போது கூட.

“எப்போ தான் தெரிந்து கொள்வது..?” என்று கேட்டானே தவிர. தம்பிக்கு உதவவில்லை…

அது என்னவோ ஒருவர் மட்டும் அனைத்தும் பார்த்து மற்றவர்கள் அனைத்திலும் இருந்து விலகி… என்சாய் செய்வதும்.. ஆனால் மதிப்பு மரியாதை.. முக்கியமாக உரிமை இது எல்லாம் மட்டும் சரி சமமாக கொடுக்க வேண்டும் என்பது போலான பேச்சில்…

இது எல்லாம் கிடைக்க எப்படி உழைக்க வேண்டும் என்பது அனைவருக்கும் தெரிய வேண்டும் என்று விட்டான்.

இப்போது வைஷ்ணவியிடமும் துகிலன் அதை தான் சொன்னது.

“எத்தனை நாளைக்கு இப்படியே இருக்க முடியும்.. நீ படித்த பெண் தானே…. நீ பாரு…” என்று சொல்லி கொண்டு இருக்கும் போது தான் விக்னேஷ் மனைவியை அழைத்தது.

வைஷ்ணவி விட்டால் போதும் என்பது போல அந்த இடத்தை விட்டு ஓடி விட்டாள்…




 
Well-known member
Joined
Jun 23, 2024
Messages
110
ஏம்மா வைஷு உங்க பிஸ்னஸ்ல பிரச்சினை வந்தா அதை எப்படி சரி பண்றதுன்னு யோசனை கேட்டா துகி சொல்லி தருவான் அதை விட்டு அவனே வந்து பார்க்கணும் என்று எப்படி எதிர்பார்க்கலாம் 😨😨😨😨😨😨😨

துகி ரொமான்ஸ் பண்ண எவ்வளவு வேலை பார்த்தாலும் இப்படி ஏகப்பட்ட கரடிங்க உள்ள வந்திருது 😑 😑 😑
😑
 
Last edited:
Active member
Joined
May 11, 2024
Messages
132
துகில் வசந்திகிட்ட பேசி பயம் காட்டி வந்தா இங்க மஞ்சு கிட்ட வைஷு அவளை பிரிக்க வந்தவ ரேஞ்சுக்கு பேசுகிறாள் துகில் நல்லா பதில் கொடுத்தான் இனி 🤔🤔🤔🌺🌺🌺
 
Member
Joined
Mar 22, 2025
Messages
29
ஒன்னுக்கு இரண்டு உபத்திரத்துக்கு மூன்றுங்கிற மாதிரி இரண்டு கல்யாணம் செஞ்சு வசந்தி வைஷ்ணவி இன்னொருத்தர் யாருனு தெரியல அவனுக்குனே வருவீங்களாடா. விஜி மேம் நீங்க 24எபிக்கு மேல் போக மாட்டீங்களே அதனால 24.24 வரைக்கும் எழுதுங்கள் அப்போதாவது மஞ்சு கூட அவனுக்கு ஒரு சந்தோஷமான வாழ்க்கை வாழுறானானு பார்ப்போம்
 
Joined
Mar 3, 2025
Messages
61
அருமையான பதிவு 😍 😍 😍 😍.
டேய் ஈரோ பயலே சூப்பர் டா.
நரேனை தங்கச்சிக்கு இரண்டாம் கண்ணாலம் செஞ்சு வச்சிடுவேனு சொன்னியே 👏👏👏👏👏
நல்லதுதான் ஆனா நரேனோட மனசை மட்டும் பாக்காம உன்ற தங்கச்சி மனசு என்ன நெனைப்பு ன்னு தெரிஞ்சு செய் டா. பழைய மாதிரியே நர்மதா மஞ்சு கிட்ட இருந்தமாதிரி செஞ்சுடாதே.
 
Member
Joined
Mar 22, 2025
Messages
29
அருமையான பதிவு 😍 😍 😍 😍.
டேய் ஈரோ பயலே சூப்பர் டா.
நரேனை தங்கச்சிக்கு இரண்டாம் கண்ணாலம் செஞ்சு வச்சிடுவேனு சொன்னியே 👏👏👏👏👏
நல்லதுதான் ஆனா நரேனோட மனசை மட்டும் பாக்காம உன்ற தங்கச்சி மனசு என்ன நெனைப்பு ன்னு தெரிஞ்சு செய் டா. பழைய மாதிரியே நர்மதா மஞ்சு கிட்ட இருந்தமாதிரி செஞ்சுடாதே.
ஒரு பேச்சுக்கு தான் ஈரோ மிரட்டினது மத்தபடி இந்த விசயத்தில் தலையிட மாட்டான். மறுபடியும் நரேன் மஞ்சுவை மித்தமிட மஞ்சு நரேனை மித்தமிட அதெல்லாம் பார்க்கிற சக்தி ஈரோ இதயம் தாங்காது பாஸ்
 
Well-known member
Joined
Jun 1, 2024
Messages
144
எல்லாமே சுயநலம் பிடிச்சதுங்க.....😤.
ஒருத்தன் உழைக்க சும்மா ஜாலியா ஊரை சுத்திட்டு மரியாதை இல்லை உரிமை இல்லைன்னு பிரச்சனை பண்ணிட்டு இருந்தா..... இப்போ பிரிச்சு குடுத்தா உழைக்க கஷ்டமா இருக்கு இவங்களுக்கு..... பழையபடி மாத்தணுமாம்.... 😬😬😬😬

சுத்தியும் இத்தனை வில்லங்கத்தை வச்சுக்கிட்டு நீ ரொமான்ஸ் எதிர்பார்க்கலாமா துகி 🤣🤣🤣🤣🤣
 
Top