அத்தியாயம்…9…1
“அப்போ இவங்களுக்கும் நான் வேணாம்.. அவங்களுக்கும் நான் வேணாமா…?” என்று சொல்லிக் கொண்டு வந்த வாசு தேவ் குரலில் அத்தனை ஒரு மாற்றம்… ஒரு மித மிஞ்சிய கோபத்தில் பிரதிபலிப்பாக ஒரு ஆக்ரோஷம்.. வருமே… அது போல இருந்தது வாசுதேவனின் பேச்சும் நடவடிக்கையும்..
வாசு தேவ்வுடன் படித்த.. தன் தங்கையை திருமணம் செய்து வைத்த அவனின் நண்பன் விமல் கூட…
“வாசு…” என்று அழைத்து அவன் தோள் தொட்டான்.. ஆனால் அதை தள்ளி விட்டவன்…
“எல்லோருக்கும் நீ தான் வேணுமா…. என்ன…? நிறம் படிப்பு எல்லாத்திலேயும் உன்னை விட நான் தானே டா பெஸ்ட்… உயரம். நீ கொஞ்சம் அதிகம்.. அது கூட நீ என்னை விட ஒன்னரை வயது பெரியவன்.. அந்த வயதில் நீ உயரமா வளர்ந்து இருக்க என்று கூட நினைத்து கொள்ளலாம்..” என்று சொல்லி கொண்டு வந்த வாசு தேவ்..
சாண்டில்யனை ஒரு முறை பார்த்து… “ ஒத்து கொள்கிறேன்.. நீ என்னை விட உயரம் ஜாஸ்தி தான்.. ஆனா அந்த சின்ன வயதில் தெரியாது தானே.. அப்போ மாமா தேர்வா நான் தான் இருக்கனும். ஆனா அவங்க உன்னை தான் தேர்வு செய்தாங்க… இங்கு என் அம்மா என் அம்மா.. இவனை வேணா தத்து எடுத்துக்கோங்க.. எப்படி இருந்தது தெரியுமா..? எப்படி இருந்தது தெரியுமா.?” என்று ஆவேசம் வந்தது போல் பேச. அனைவரும் அவனை தான் ஒரு வித பயத்துடன் பார்த்தனர்..
அதற்க்கும் வாசு தேவ்..” என்ன என்னை பாத்தா பைத்தியக்காரன் போல தோனுதா..?” என்று பொதுவாக கேட்டவன்..
சாண்டில்யன் அருகில் வந்து… “ என்ன நான் சைக்கோ என்று நீ நினைக்கிறியா…?” என்று கேட்டவன் சாண்டில்யனின் பதிலை எல்லாம் எதிர் பார்க்கவில்லை..
அவனே தொடர்ந்து… “ நினைப்ப நினைப்ப.. ஏன் நினைக்க மாட்ட.. உன்னை தான் எல்லோரும் தலையில் தூக்கி வெச்சி கொண்டாடினாங்கலே…அப்போ உன் பார்வைக்கு நான் சைக்கோவா தான் தெரிவேன்…
அதுக்கு தான் நான் உன்னை விட எல்லோர் பார்வைக்கும் பெஸ்ட்டா தெரியனும் என்று தான் நான் இந்த சி,ஏ படிப்பையே எடுத்து படித்தேன்…” என்றவனின் பேச்சில் சாண்டில்யா அதிர்ந்து தான் அவனை பார்த்தான்..
இத்தனையா தன் மீது அவனுக்கு பொறாமை இருந்தது என்பது போல… படிப்பு என்பது பிடித்து தன் வாழ்க்கைக்கு தேவை என்று நினைத்ததை படிப்பது.. அதிலும் என்னை வைத்து என்ன இது என்பது போல் தான் சாண்டில்யன் அவனை பார்த்து கொண்டு இருந்தது…
வாசுதேவ்.. “நான் ஒன்னும் படிப்பில் பிர்ல்லியண்ட் கிடையாது.. இந்த படிப்பை முடிக்க நான் என்ன எல்லாம் கஷ்டபட்டேன் என்று உனக்கு தெரியுமாடா….?” என்று கேட்டான்…
இது சாண்டில்யனுக்கே தெரியும்… “ இவன் சி.ஏ படிக்கும் போது சரியான உணவு இல்லாது.. தூக்கம் இல்லாது ரத்த வாந்தி எடுத்தான் என்று கூட வசும்மாவும் விசுப்பாவும் அங்கு வந்த போது சொல்லி இருக்கிறார்கள்.. இவன் கூட. ஏன் அப்படி ஒரே அட்டம்ட் பாஸ் ஆகனும் என்று நினைக்கிறான்..
சி.ஏ கஷ்டமான படிப்பு… செகண்ட் தேர்ட் முறை எழுதினா கூட போதுமே…” வாசு தேவ்வின் உடல் நிலையை நினைத்து சாண்டில்யன் அன்று சொன்னான்.
பின் அவனின் அந்த உழைப்புக்கு பலனாக அனைத்து தேர்விலும் முதல் முறையாகவே வெற்றி பெற்று.. தன் இருபத்தி ஐந்தாவது வயதிலேயயே… சி.ஏ முடித்து தன் தந்தை லாயராக இருக்கும் கம்பெனியில் தான் இவன் பயிற்ச்சி எடுத்தது.. பின் மூன்று ஆண்டுகளிலேயே தனியாக கிளையண்ட் பிடித்து அவனின் நண்பன் விமலும் இவனும் சேர்ந்து ஒரு அலுவலம் ஆரம்பித்ததில் சாண்டில்யன்.
“பரவாயில்லை..” என்று மனதில் மகிழ்ந்தவன் அடுத்த முறை வாசுதேவ்வை நேரில் பார்த்த போது..
அவனை வாழ்த்தவும் செய்தான்.. ஆனால் இவனின் இதற்க்கு பின் நான் இருக்கிறேன்.. என் மீது இருக்கும் அந்த பொறாமை அவன் சுத்தமாக நினைத்து பார்க்கவில்லை…
அதிர்ந்து தான் போனான்.. ஆனால் இது என்ன டா. அதிர்வு.. உனக்கு இன்னும் இருக்கிறது என்பது போல தான் அவனின் அடுத்து அடுத்த பேசிய பேச்சுக்கள் இருந்தன...
என் அப்பா அம்மா உன்னை என்னை விட பெருசா நினைக்கலாம்.. ஆனா என் தங்கைங்க இரண்டு பேருக்கும் நான் தான் டா முக்கியம்.. என் கூட படிச்ச என் பிரண்ட் விமலுக்கு என் பெரிய தங்கையை கல்யாணம் செய்து வைத்தேன்.. விமலும் நானுமே அவ்வளவு நெருக்கம்… அதனால சுமதி எப்போவும் உன் கூட சேர மாட்டா… அதே போல இன்னொரு தங்கை மாளவிக்காவை என் மாமா பையனுக்கு கொடுத்தேன்.. மாமா பொண்ணை நான் கல்யாணம் செய்து கொண்டேன்.. ஏன்னா இந்த தங்கை உறவும் என் கூட மட்டும் தான் இருக்கனும்..” என்று என்னவோ பெரியதாக சாதித்தது போல பேசிக் கொண்டு வந்தவன்…
பின்… “ ஆனா பாரு சாண்டில்யா.. உனக்கு எங்கேயோ மச்சம் இருக்கு தான்… அது இருக்க தொட்டு தானே… மாமா பையனுக்கு மாளவிகாவை கல்யாணம் செய்த பின்… பொண்ணை கேட்டா.. மாமாவும் மாமியும் சந்தியா கிட்ட கேட்டு சொல்றேன்.. அவள் சம்மதமும் முக்கியம் தானே என்று கேட்டாங்க.. அது எனக்கு சரி என்று தான் தோனுச்சி..
ஆனா மூன்று நாட்கள் கழிச்சி கூட பதில் வராம போக நான் மாமா வீட்டிற்க்கு போய் இருந்த போது அப்போ தான் மாமி சந்தியா கிட்ட.. அது தான் இப்போ என் பொண்டாட்டியாவும்.. என் குழந்தைக்கு அம்மாவுமா இருக்க சந்தியா கிட்ட என்னை கல்யாணம் செய்வதை பத்தி கேட்டாங்க.. அதுக்கு இவள் என்ன சொன்னா தெரியுமா… பெரிய அத்தான் சாண்டில்யன் அத்தானை வேணா கல்யாணம் செய்துக்கிறேன் என்று சொல்லிட்டு இருந்தா…” என்றவனின் பேச்சில் சந்தியா அதிர்ந்து போய் தன் கணவனை பார்த்தான்..
இத்தனை நேரம் வாசுதேவ் பேச்சை கேட்டு கொண்டு இருந்த சாண்டில்யன் கூட… “ ஏய் என்ன டா பேசுற.?” என்று அதட்டினான்.
ஆனால் வாசுதேவ் இந்த அதட்டலுக்கு எல்லாம் அடங்குவது போல காணும்..
சந்தியா தன்னை அதிர்ந்து போய் பார்த்ததை பார்த்தவன். “ என்ன டி.. நீ உன் அம்மா கிட்ட சொல்லலே… சொன்ன தானே..” என்று பல்லை கடித்து கொண்டு தன் மனைவியை பார்த்து கேட்டான்…
மாளவிகாவின் கணவனும் சந்தியாவின் அண்ணனுமான கமலக்கண்ணன்..
“ என்ன வாசு பேசுற பைத்தியம் போல….?” என்று அதட்டினான்…
அதற்க்கும் வாசு தேவ்,.. “ நான் பைத்தியம் போல பேசுறேன்னா… உன் அம்மா கிட்ட கேட்டு பாரு அவங்க சொல்லுவாங்க…” என்று சொன்னதும்.
கமலக்கண்ணன் தன் அன்னையை பார்த்தான்.. வசந்தி தன் மகனின் ஆமாம் என்று தலையாட்டியவர்.. இப்போது வாசுதேவ்வை பார்த்து..
“அப்போ அன்னைக்கு நானும் என் மகளும் பேசிட்டு இருந்ததை கேட்டிங்க.. பின் ஏன் அதை பத்தி இன்னை வரை பேசல….?” என்று கேட்டார்.
பாவன் தாய் மாமனான கணபதிக்கு இந்த விவரம் கூட தெரியாது மூன்றாம் மனிதராக பார்த்து கொண்டு இருக்க.
இப்போது வாசு தேவ்… “ என்ன சொல்ல சொல்றிங்க அத்தை.. என்ன சொல்ல சொல்றிங்க..ம் என் தங்கையை உங்க மகனுக்கு கல்யாணம் செய்யும் போதே, உங்க மகள் சந்தியாவை நான் கட்டலாம் என்ற ப்ளானில் தான் கல்யாணம் செய்தேன். ஒரு ஆறுமாசம் கழிச்சி பெண் கேட்டா. இப்படி கதை போகுது…. இதை சொன்னா… என்ன செய்வீங்க என் அம்மாவுக்கு தான் என்னை விட அவங்க சீமந்தபுத்திரனை தானே பிடிக்கும்.. தன் அண்ணன் மகளை கல்யாணம் செய்து கொடுத்துட மாட்டாங்க… அப்புறம் என்ன ஆகும்… என் ப்ளான் எல்லாம் சொத்தப்பல்ல தானே முடியும்…
மாளவிகா என்னை விட இவன் கிட்ட தானே நெருக்கம் ஆகிடுவா.. அதனால தான் சந்திரிபண்ணாம நான் அங்கு இருந்து வந்துட்டேன்…
ஒரு இரண்டு நாள் கழிச்சி உங்க கிட்ட சாதாரணமா பேசுவது போல.. “சந்தியாவுக்கு நீங்க வெளியிலேயே பாருங்க அத்த… ஏன்னா இன்னும் சாண்டில்யனுக்கு கல்யாணம் ஆகல.. அவனுக்கு ஜாதகத்தில் தோஷம் இருக்கு கட்டுற பொண்ணு செத்து போயிடும் என்று ஒரு பிட்ட போட்டேன்..” என்ற இந்த வார்த்தையில் சுமதி விமலை தவிர அனைவரும் அதிர்ந்து தான் போய் விட்டனர்..
சாண்டில்யனுக்கு மூச்சு முட்டுவது போலான ஒரு உணர்வு.. அதிர்வில் எழுந்து நின்றவன்… இப்போது அமர்ந்தால் தான் ஆச்சு. என்பது போல இருக்க அமர்ந்து கொண்டவன் தன் எதிரில் இருக்கும் தண்ணீர் பாட்டில் இருந்து தண்ணீரை குடித்த பின்னுமே… மனது பிசைந்து போயின.
எத்தனை எத்தனை திட்டங்கள்.. நான் என்ன வக்கீல் என் அருகிலேயே ஒரு கிரிமினலை வைத்து கொண்டு இனம் காணாது இருந்து விட்டேனே.
வாசு தேவ் தொடர்ந்து வாக்கு மூலம் கொடுப்பது போல. விமல் கிட்ட சொன்னேன்.. அவன் மூலம் சுமதி ஆன்ட்டி நான் பார்த்துக்குறேன் என்று சொன்னாங்க.. முதல் இடம் பெண் வந்த போது தான் சுமதி ஆன்ட்டி அம்மா கிட்ட நான் பொருத்தம் பார்க்குறேன் என்று எடுத்துட்டு போயிட்டு பொருந்தல என்று இரண்டு நாள் கழித்து கொண்டு வந்து கொடுத்தது…
ஆனா அதன் பின் எல்லாம் எனக்கு வெற்றி தான்… பெண் செத்துடுவா என்று சொன்னா யாரு பெண் கொடுப்பா.. . உன் வாயலேயே முதல்ல வாசுவுக்கு கல்யாணம் செய்ங்க என்று சொல்ல வெச்சேன்.. அதே போல நாம செத்துட்டா அந்த பயம் இருக்க தானே செய்யும்.. சந்தியாவை என்னால ஈஸியா கல்யாணம் செய்துக்க முடிந்தது…” என்று பொதுவாக பேசிக் கொண்டு வந்தவன்.. பின் சாண்டில்யன் அமர்ந்திருந்த இருக்கையின் பக்கத்தில் வந்து அமர்ந்தவன்..
“நாங்க குடும்பமா இருக்கும் போது உன் கண்ணுல நான் ஒரு வலியை பார்ப்பேன் சாண்டில்யா… அதுவும் சுமதி மகள் சடங்கில் நீ ஓரமா உட்கார்ந்து எங்களை எல்லாம் பார்த்த பாரு.. ஒரு பார்வை.. குமாரு நீ ஜெயிச்சிட்ட என்ற ஒரு மூமுமண்ட் தான்..” என்று சொல்லி சிரித்தவனையே பார்த்து கொண்டு இருந்த சாண்டில்யன் ஒன்றும் பேசவில்லை..
அதற்க்கும். “ என்ன சாண்டில்யா வலிக்குதா… சந்தியாவை நான் கல்யாணம் செய்ய தான் நான் அந்த பொய்யை சொன்னேன். அந்த பொய்யை சாந்தி ஆன்ட்டி தொடர்ந்தாங்க.. அவங்க அது போல செய்ய.. சொத்து காரணமா இருக்கலாம்.. ஆனா எனக்கு உன்னை விட இதுல நான் ஜெயிச்சிட்டேன் என்று ஒரு திருப்தி இருக்கு பாரு…” என்று பேசி கொண்டே போக.
சாந்தி தான்.. “ என்ன வாசு உனக்கு பைத்தியாம பிடிச்சி இருக்கு… எல்லாத்தையும் சொன்னா அவன் கல்யாணம் பண்ணி வந்து நிற்க மாட்டான்….” என்று சொல்ல.
வாசுதேவ்… “ ஆன்ட்டி அவனுக்கு நாம ஜாதகத்தில் செய்த விசயம் தெரிந்து விட்டது.. அம்மா ரூமில் இவனுடைய ஜாதகத்தை பார்த்தேன்..” என்று சொன்னவன்..
பின் மீண்டும் சாண்டில்யனை பார்த்து…. “ இப்போ என்ன செய்வ சாண்டில்யா. அந்த ஜாதகம் பொய் என்று சொல்லுவ அது தானே.. ஆனா நாங்க எல்லோரும் சேர்ந்து நீ சொல்றது தான் பொய்.. கல்யாணம் இத்தனை வருஷம் கழித்தும் நடக்கல.. என்று பொய்யா சொல்றான் என்று சொல்லுவோம்.. நீ ஒருத்தன் சொல்றதை நம்புவாங்கலா. இல்ல நாங்க இத்தனை பேர் சொல்றதை நமுவாங்கலா… ஏற்கனவே வக்கீல் பொய் சொல்வான் என்ற பேச்சு இருக்கு…” என்று சொன்னவன் தங்கள் முன் இருந்த அந்த பத்திரத்தை எடுத்து கொண்டவன்.
“நீ கைய்யெழுத்து எல்லாம் போட வேண்டாம்.. எப்படி இருந்தாலும்.. எல்லாமே எங்களுக்கு தானே ..” என்று விட்டான்.. சாண்டில்யன் ஒன்றும் பேசவில்லை..
அமைதியாக தன் அறைக்கு சென்று விட்டான்,.
ஆனால் சந்தியா அது போல அமைதியாக இருக்கவில்லை.. அவளுக்கு சாண்டில்யனை திருமணம் செய்யவில்லை என்ற வருத்தம் துலி கூட இல்லை… வாசுதேவுடான உறவை விரும்பி தான் இருந்தால் குடும்பமும் நடத்தினால், ஆனால் தன்னிடம் இது பற்றி ஒன்றும் சொல்லாது இது போல அனைவரின் முன்னும் தன் விசயத்தை போட்டு உடைத்ததை மிக அவமானமாக கருதினாள்…
இனி இதே வீட்டில் இருந்து கொண்டு சாண்டில்யன் முகத்தை எப்படி பார்ப்பேன்… என்று நினைத்து வேறு ஒரு மாதிரியாக போய் விட…
அதில் கணவனுடன் சண்டை இட்டு தன் மகளையும் அழைத்து கொண்டு தன் பெற்றோருடன் சென்று விட்டாள்… வாசுதேவ் அதை பெரியதாகவே எடுத்து கொள்ளவில்லை.. கோபத்தில் செல்கிறாள். கோபம் தெளிந்த பின் வந்து விடுவான் என்று நினைத்து கொண்டான்.
இப்போதைய அவன் மகிழ்ச்சியாக தான் பேசிய பேச்சுக்கு வாயை மூடிக் கொண்டு சென்ற சாண்டில்யனின் இந்த செயலே… தன் ப வெற்றியாக கருதினான்…
ஸ்ருதிகா ஸ்ரீ வீட்டிலோ… இவள் தாய் வீட்ய் சென்றதில் குழந்தைகளுக்குள் பிரச்சனை ஆகி இவளின் பெரிய அண்ணி அவளின் இரு குழந்தைகளஒ அடித்து விட.
அதை பார்த்த கலாவதி சண்டை போட்டாள். “குழந்தைங்க என்றால் சண்டை வர தான் செய்யும்… நான் பார்த்துட்டு தான் இருந்தேன் உன் பொண்ணு தான் இசையை முதலில் தள்ளி விட்டது.” என்று சொல்ல.
எப்போ எப்போ என்று காத்து கொண்டு இருந்த ஸ்ருதிகா ஸ்ரீயின் பெரிய அண்ணி கலாவதியை பிடி பிடி என்று பிடித்து கொண்டு விட்டாள்..
“அவள் தான் அறிவு இல்லாம டைவஸ் பண்றா என்றால், நீங்க ஒரு அக்காவா அவளுக்கு புத்தி சொல்லி புருஷன் வீட்டிற்க்கு அனுப்புறதை விட்டு விட்டு டைவஸ் செய்ய லாயரை ஏற்பாடு செய்யிறிங்க….”
நேற்று தான் குணசேகரன் சாண்டில்யனிடம் பேசியது.. இது தெரிந்து கொண்டு தான் ஸ்ருதிகாவின் அண்ணி அத்தனை ஆட்டம்… ஒரு மாதம் இரண்டு மாதம் என்றால் பரவாயில்லை.. ஆனால் காலம் முழுவதும் வைத்து கொள்ள வேண்டும் என்றால் யாரால் முடியும்.. அதுவும் இரண்டு பெண் குழந்தகள் வேறு…. என்று தான் பேசியது..
இவளின் இத்தனை பேச்சுக்கும் இரண்டு அண்ணங்களும் வாய் திறக்கவில்லை… குணசேகரன் தான்…
“என்ன இது.. இப்படி பட்டவன் கூட வாழு என்று சொல்றிங்க. அவன் நம்ம வீட்டு பெண்ணை ஏமாத்தி இருக்கான்… நியாயமா பார்த்தா நீங்க அவன் மீது கோபம் பட வேண்டும்..” என்று சொன்னவன்.
அனைவரையும் பார்த்து… “ இதுவே உங்க பெண்ணுக்கு இது போல நடந்து இருந்தா சும்மா இருந்து இருப்பிங்கலா.?” என்று குணசேகரன் கேட்டது தான் தாமதம் அனைவரும் அவனை பிடித்து கொண்டனர்.
“எங்க பொண்ணை சாபம் இடுறிங்கலா.?” என்பது போல பேச இதை எல்லாம் பார்த்த ஸ்ருதிகாவின் அன்னை அழுது கொண்டே…
“இதுக்கு தான்டி சொன்னேன் பாவீ… பாவீ… அம்மா வீடு எல்லாம் வந்து போகும் வீடா இருக்கும் வரை தான்டி மரியாதை…” என்று சொல்ல.
இப்படி ஒவ்வொரு ஒவ்வொரு பேச்சாக பேசிக் கொண்டே போக..
ஸ்ருதிகா ஸ்ரீ முடிவாக நான் தனியாக போகிறேன் என்று சொல்லி விட்டாள்…
கலாவதி குணசேகரனுக்கும் இது தான் சரி என்று பட்டது… தனியாக எப்படி எனும் போது கலாவதி..
“நான் என் பொண்ணு கூட இருக்கேன்…” என்று விட்டார்…
பின் அடுத்த நாளே ஒரு வீட்டை பிடித்து ஸ்ருதிகா ஸ்ரீ தனியாக சென்று விட்டாள்.. வீட்டிற்க்கு அட்வான்ஸ் கொடுத்தது அனைத்துமே ஸ்ருதிகா ஸ்ரீயின் பணம் தான்…
( என்னால் இவ்வளவு தான் ப்பா அடிக்க முடிந்தது…)