Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம், "கதையருவி" தளத்திற்கு தங்களை வரவேற்கிறோம்!

    இத்தளத்தில் எழுத எங்களை "vskathaiaruvi@gmail.com" என்ற மின்னஞ்சலில் தொடர்புக் கொள்ளவும். நன்றி!

காதலினால் கரம் பிடித்த பெண்ணவளை....2

  • Thread Author
அத்தியாயம்…2

பெண்ணவளுக்கு அப்போது தான் அந்த பேச்சின் தீவிரம் புரிந்து.., “ அய்யோ நான் சும்மா தான் பார்த்தேன்..” என்று சொல்லி விட்டு ஆடிட்டர் சொன்ன வேலையை கூட மறந்தவளாக தன் அலுவலகத்திற்க்கு ஓடி வந்து விட்டாள்…

அலுவலகம் வந்த பின் தான் அய்யோ ஆடிட்டர் திட்டுவாரே என்று நினைத்தது.. ஆனால் அன்று அதை பற்றி அந்த ஆடிட்டர் எதையும் இவளிடம் கேட்கவில்லை.. அதே போல் இவள் வாங்க சென்ற கணக்கு வழக்கு பில் அனைத்தையும் வெற்றி மாறன் அலுவகத்தில் இருந்து வந்த ஒருவன் ஆடிட்டரிடம் கொடுத்ததோடு, ஆடிட்டர் கேட்ட விவரங்களையும் சொல்லி விட்டு தான் சென்றான்… .

அதன் பின் அந்த ஆடிட்டர் கனகராஜ் இவளிடம் ஏக பவ்யம் காட்டி தான் பேசியது… இவள் பன்னிரெண்டாவது முடித்த உடனேயே பவுண்டேஷன் முடித்து விட்டு இன்டெர் முடித்ததும் இங்கு மூன்று வருடங்கள் ஆர்ட்டிக்கல் ஷிப்க்காக தான் ஆடிட்டர் கனகராஜிடம் பயிற்ச்சி பெற்று வருகிறாள்..

இரண்டு வருடங்கள் கடந்து விட்டது.. இன்னும் ஒரு வருடம் தான்.. ஆனால் அந்த ஒரு வருடம் எப்போது முடியும் என்பது போல் தான் கனகராஜ் அவளிடம் நடந்து கொள்வார்.

காரணம் அவளின் மகளும் இதே படிப்பை தான் படித்து கொண்டு இருக்கிறாள்.. ஆனால் இவளை விட ஐந்து வருடங்கள் பெரியவள்..

அந்த பெண் ஒரு டிகிரி முடித்து விட்டதால் பவுண்டேஷன் எழுதாது… இன்டெர் எழுதினாள்.. ஆனால் அதில் கூட இத்தனை வருடத்தில் ஏ க்ரூப் மட்டுமே முடித்து இருக்க. இப்போது பி க்ரூப் முடிக்கவே அவள் போராடி கொண்டு இருக்கிறாள்...

ஸ்வர்ணாம்பிகையின் இந்த புத்தி கூர்மை அவருக்கு பிடிக்கவில்லை போல். ஒருவரை வளர விடாது தடுக்க வேண்டும் என்றால், அவரின் தன்னம்பிக்கையை குலைத்தால் போதும்…

அதை தான் கனகராஜ் ஸ்வரணாம்பிகையிடம் செய்து கொண்டு இருந்தார்..ஆனால் இப்போது அதற்க்கு எதிர் பதமாக அத்தனை பவ்யம்.. தான் கேட்காமலேயே ஒரு சில சூட்சுமங்களையும் கூட படிப்பில் சொல்லி தருவது என்று இருந்தார்.

என்ன டா என்று யோசிக்கும் போது தான் .. இதற்க்கு காரணம் வெற்றி மாறன் என்பது அவளுக்கு ஒரு நாள் தெரிய வந்தது….

ஆம் ஆடிட்டர் கனகராஜ் அலுவலகத்திற்க்கே வந்து . அதுவும் அவரின் அறையிலேயே தான் வெற்றி மாறன் இவளை கூப்பிட்டு வைத்து பேசியது.. கனகராஜை வெளியில் அனுப்பி விட்டு…

ஒரு ஆண்மகன்.. அதுவும் அழகான ஆண் மகன்.... மீண்டும் மீண்டும் தன் விருப்பத்தை சொன்ன போது இளம் வயதில் இருக்கும் இருபத்தி ஒரு வயதான ஸ்வர்ணாம்பிகையும் ஒரு கட்டத்தில் விரும்ப ஆரம்பித்து விட்டாள்… ஒரு கட்டத்தில் என்பதை விட.. முதலிலேயே வெற்றி மாறன் தன் விருப்பத்தை சொன்ன போது பெண்ணவளுக்கு பிடித்து தான் இருந்தது..

ஆனால் வெற்றி மாறன் வீட்டவர்களை நினைத்து. இது நமக்கு சரிப்பட்டு வராது… என்று நினைத்து அவள் ஒதுங்கி போக. வெற்றி மாறனோ விடாது தன் காதலை சொல்லி.. வெற்றியும்.. பெற்று இதோ இன்று திருமணம் வரை வந்து விட்டான்..

பாவம் ஸ்வர்ணாம்பிகைக்கு தெரியாத ஒரு விசயம்… அவன் காதல் சொன்ன உடனேயே இவள் ஏற்று இருந்து இருந்தால், அவன் காதலில் இத்தனை தீவிரத்தை காட்டி இருந்து இருக்க மாட்டானோ என்னவோ…

ஆனால் என்ன எது நடந்தாலுமே. இதோ வெற்றி மாறன் ஸ்வர்ணாம்பிகை கழுத்தில் தாலியை கட்டி விட்டான்… இன்னுமே கூட ஸ்வர்ணாம்பிகை முகம் தெளிவு இல்லாது தான் இருந்தது..

அதை கூட்டும் வகையாக… தாலி கட்டி முடித்ததும் வெற்றி மாறன். இவள் காதில்.. “ நீ இன்னும் தைரியமா இருக்கனும் புரியுதா…?” என்று சொன்னவனை பெண்ணவள் குழப்பம் மிகுந்து பார்த்தாள்..

அவளின் பார்வையில் வெற்றி மாறன்… “ இல்ல இப்போ எங்க வீட்டில் இருந்து எல்லோரும் வந்துட்டு இருக்காங்க.. அவங்க என்ன பேசினாலும் கொஞ்சம் அமைதியா போயிடு…” என்று சொன்ன சென்ற நொடி வரை காதலனாக இருந்து,.. இந்த நொடி கணவனாக மாறியவனை பெண்ணவள்..

“என்ன பொறுத்து போகனும்.. எனக்கு புரியல மாறா ….?” என்று கேட்டவளிடம்..

இது வரை இருந்த மாறன் மாறி போனவனாக. “இது போல பெயரை எல்லாம் இனி நம்ம ரூமில் மட்டும் வெச்சிக்கோ டா கோல்ட்.. பெரியவங்க முன் வேண்டாம்…”

சொன்னவனின் இந்த பேச்சு ஸ்வர்ணாம்பிகைக்கு புதியதாக இருந்தது.. தாங்கள் காதலித்து வரும் இந்த ஆறு மாத காலமாக.. தான் இந்த பெயரை வைத்து தானே கூப்பிடுகிறோம்.. அப்போது ஒன்றும் இவன் சொன்னது இல்லையே.. பெண்ணவளுக்கு குழப்பம்.

இந்த குழப்பம் ஆரம்பம் தான். இனி தான் வெற்றி மாறனின் மாற்றத்திலா. இல்லை பிறந்த வீட்டிற்க்கும் புகுந்த வீட்டிற்க்கும் இடையே இருக்கும் கடல் அளவு இருக்கும் வித்தியாசத்தினாலா பெண்ணவளின் வாழ்க்கையே ஆட்டம் காண போகிறது என்று தெரியாது..

மீண்டும் அதே பேச்சான… “ மாறா.” என்று ஸ்வர்ணாம்பிகை அழைக்கும் போதே கணவன் பார்த்த அந்த பார்வையில் சட்டென்று வாயை மூடிக் கொண்டாள்..

அதே சமயம் வெற்றி மாறன்… தன் உதவியாளர் விவேக்கை அழைத்து… தன் அலுவலகத்தில் மேனஜராக பணி புரியும் அறுபது வயதை தொட இருக்கும் சுப்புராயை காட்டி,,,

“அவர் காது பட நாங்க கம்பெனி கெஸ்ட் அவுஸ்க்கு போக போறதா சொல்…” என்று சொல்லி விட்டு மனைவியோடு விவேக்கிடம் சொன்னது போல தன் கம்பெனி கெஸ்ட் அவுஸ்க்கி தன் ஆடி காரை செலுத்தினான்..

வழியில் மனைவி ஏதோ பேச முயற்சி செய்த போது எல்லாம் வெற்றி மாறன்..

“ப்ளீஸ் கோல்ட். கொஞ்ச நேரம் பேசாமல் வா….” என்று சொல்லி விட்டான்..

பாவம் ஸ்வர்ணாம்பிகைக்கு நான் கேட்க வேண்டியதை யாரிடம் கேட்பேன்.. இவனிடம் தானே அதுவும் இல்லாது பெண்ணவளின் மனதில் நிறைய சந்தேகங்கள்… எப்படி இவன் வீட்டிற்க்கு தெரிந்தது.. அங்கு வருவார்கள் என்றால் இவன் ஏன் கெஸ்ட் அவுஸ்க்கு அழைத்து செல்கிறான்..

இவை அனைத்தையும் விட தன் வீட்டுக்கு செல்ல வேண்டுமே… அதை நினைத்தாலே பெண்ணவள் மனதில் அத்தனை குற்றவுணர்ச்சி… அவளுக்கு இது வரை அவள் வீட்டில் எதற்க்கும் மறுப்பு தெரிவித்தது கிடையாது..

அவள் படித்து கொண்டு இருக்கும் படிப்பு.. படித்த பள்ளி கல்லூரி ஆடை என்று அனைத்துமே அவள் விருப்பம் தான்… ஆனால் முதல் முறை சென்ற மாதம் தான் அவள் தான் வெற்றி மாறனை காதலிக்கிறேன் என்று சொன்ன நொடி..

“பையன் என்ன செய்கிறான் டா… ?” என்று அவனின் தந்தையும் தாயும் கேட்டனர்… எடுத்த உடனே காதல் என்று சொன்னதும் மறுப்பு தெரிவிக்கும் ரகம் இல்லை.. ஏன் என்றால் அவர்களே காதலித்து தான் மணந்து கொண்டது…

ஆனால் மகள்… சொன்ன…. “ மாறன் குழுமம் டாடி நம்ம ரிலேடீவ்..” என்று இவள் சொன்ன நொடி இருவரும் ஒரு சேர.

“உனக்கு அந்த பேமிலி செட் ஆகாது டா. வேண்டாம்… டா….” என்று தான் சொன்னது.

ஆனால் காதல் வந்து விட்டால் அதை ஜெயிக்க வைக்க தானே மனது ஆயிரம் வழி தேடும்.. அது போல் தான் பெண்ணவள்…

“டாட். அந்த வீட்டவங்க போல எல்லாம் மாறன் இல்லே டாட்..” என்று மாறனுக்காக இவள் வாதாடினாள்.

ஆனால் அவள் பெரற்றோர் சொன்னது இது தான்… “ பிறந்ததில் இருந்தே வளர்ந்த விதம் ஒன்னு இருக்கு அம்பிகை.. அது மாறாது.. அப்படி அந்த பையன் அப்படி பட்டவன் இல்லேன்னா… அவங்க வீட்டு பெண்கள் ஏன் படிச்சி வேலைக்கு போகாது இருக்காங்க. வெளி வேலைக்கு கூட வேண்டாம்.. ..

அவங்களுக்கு சொந்தமாக எத்தனை தொழில் இருக்கு. அதை கூட பார்த்து கொள்ளலாம் தானே… ஏன் அந்த வீட்டு பெண்களை படித்த உடனே கல்யாணம் செய்து கொடுத்து விடுறாங்க.” என்று அவள் தந்தை கேட்ட கேள்விக்கு பெண்ணவளிடம் பதில் இல்லை..

காரணம் இது வரை இதை பற்றி.. என்ன இருவரும் தத்தம் குடும்பத்தை பற்றி கூட பேசியது கிடையாது.. ஸ்வர்ணாம்பிகை எப்போதாவது பேச ஆரம்பித்தால் கூட மாறன்..

“கோல்ட் நாம மீட் பண்றதே எப்போவோ தான்.. இந்த நேரத்தில் நம்மை பத்தி மட்டும் பேசலாமே….”

தன் கை பற்றி வெற்றி மாறன் கேட்ட போது எல்லாம் பெண்ணவளின் தலை தன்னால் அசைத்து இசைந்து கொடுத்து விடும்…

காரணம் அவளுமே மாறனுடன் ஆன இந்த சந்தீப்பை ஆவளுடன் எதிர் பார்த்து காத்து கொண்டு இருந்து இருப்பாள்..

சரியாக சொல்வது என்றால் மாறன் காக்க வைத்திருப்பான் என்று சொன்னால் சரியாக இருக்கும்.. காதலுக்கு ஒத்து கொள்ளும் வரை பின் தொடர்ந்தவன்… இவள் சரி என்றதும்…

“உன்னை என் காதலுக்கு ஓகே சொல்ல வைக்க. என் வேலை எல்லாம் இந்த ஒன் மந்த் சரியாவே பார்க்கல கோல்ட்…. அதுவும் லாஸ்ட் வீக் நான் தான் சிங்கப்பூர் போக வேண்டியது..

எனக்கு பதிலா என் கசின் சசி மாறனை அனுப்பி வைத்தேன். அவன் அங்கு சொதப்பி வெச்சு இருக்கான்… நான் அதை சரி செய்ய நாளை போக வேண்டும்… டா.. இனி அடிக்கடி எல்லாம் நேரில் பார்க்க முடியாது புரியுதா.. இப்போவே நீ என் ஒர்க் ஷட்யூல புரிஞ்சி நடந்தக்கனும் என்ன..?”

அவன் சொன்னது போல் தான் காதலித்த இந்த ஆறு மாதங்களாக அவன் தொழில் பொருட்டு தனித்து எல்லாம் அதிகம் சந்தித்தது கிடையாது.. அப்படி சந்தித்த பொழுதில் மாறன் இப்படி சொன்னால் போதும் பெண்ணவள் முகம் சிவந்து சரி என்று விடுவாள்…

சரி என்று மாறன் சொல்ல வைத்து விட்டு இருந்தான்.. தன் பேச்சினால், அப்படி இருக்க… தந்தை அந்த வீட்டு பெண்களின் ஒருவர் கூட வேலைக்கு செல்லவில்லை என்று கேட்டால் இவள் எப்படி சொல்லுவாள்.. பாவம் அவளுக்கே இப்போது தான்… ஆமாம் ஏன் வேலைக்கு அனுப்பவில்லை என்று தந்தையின் கேள்வியில் யோசிக்க ஆரம்பித்தாள்..

பின் ஏதோ சமாளிப்பாக. “டாட் நமக்கு எதுக்குப்பா அது பத்தி எல்லாம்.. மாறன் நல்லவர் டாட்… அந்த வீட்டின் பெரியவங்க மாதிரி எல்லாம் அவர் இல்ல டாட்… ப்ளீஸ் . மாம் நீங்களாவது சொல்லுங்க மாம்… “ என்று தந்தையிடம் கெஞ்சியவள் தன் அன்னையையும் துணைக்கு அழைத்தாள்..

ஆனால் அவளின் அன்னை ஜெயசுதாவுமே… “பிரச்சனை வரும் என்று தெரிந்தே எப்படி அம்பிகை உன் காதலுக்கு நாங்க ஓகே சொல்ல முடியும்…

நீயே இந்த காதல் இதை ஓரம் கட்டி வெச்சிட்டு கொஞ்சம் யோசிச்சி பார்… ஏன்னா அந்த குடும்பத்தை பத்தி நான் புதுசா உனக்கு சொல்ல தேவையில்லை..” என்று சொன்ன ஜெயசுதாவின் பேச்சை ஏற்று காதலை தூரம் விலக்கி வைத்து அவள் யோசிக்கவில்லை.. காரணம். தன் காதல் ஜெயிக்க வேண்டும்.. பெண்ணவளின எண்ணம் இதுவாக தான் இருந்தது..அப்படி எண்ணவும் வைத்து இருந்தான் வெற்றி மாறனும்….

கூடவே ஸ்வர்ணாம்பிகையின் பெற்றோரும் அனைத்திற்க்கும் அவள் விருப்படி விட்டவர்கள் இதில் அடமாக இருந்ததோடு மட்டும் அல்லாது.. தன் மகனுக்கு பெண் பேசி வைத்த இடத்தில் இருந்து இவளுக்கும் ஒரு நல்ல வரன் வரவும் அதை பார்க்கவும் செய்ய.

ஸ்வர்ணம்பிகை தான் வெற்றி மாறனிடம்.. “ மாறா நீ வீட்டில் வந்து பேசு மாறா….” என்று அழைத்தவளிடம் மாறா..

“நீ நம்ம காதலை சொன்ன தானே கோல்ட்..அதுவும் என்னை லவ் பண்ற என்று சொன்ன தானே…” என்று தான் கேட்டது..

இவள் சொல்லி விட்டேன் என்று சொன்னதில் வெற்றி மாறன்…. “நீ சொல்லியும் உனக்கு வேறு இடம் பார்க்கிறாங்க என்றால், அது என்னை இன்சல்ட் பண்ணுவது போல தானே.. அதோடு என் வீட்டில் நம்ம காதலை ஒத்துக்காது எனக்கு வேறு இடத்தில் பெண் பார்க்க ஆரம்பிச்சிட்டாங்க என்று நான் உன் கிட்ட , நீ வந்து என் வீட்டில் பேசு என்று நான் உன் கிட்ட சொன்னா நீ பேசுவீயா கோல்ட்.?” என்று கேட்ட கேள்வியில் ஸ்வர்ணாம்பிகையின் மனம் அவன் பக்கம் தான் யோசித்து..

“நீங்க சொல்வது சரி தான் மாறா.” என்று சொல்ல வைத்தது..

பின் அவளே. “ இப்போ என்ன செய்யிறது…?” என்று கேட்டதின் விளைவு தான்.. இதோ இன்று இவர்களின் திருமணம் முடிந்து கெஸ்ட் அவுஸ்ஸை நோக்கி செல்வது…
 
Active member
Joined
Oct 23, 2024
Messages
252
Yenna ithu nethu heading kadhal kodnu karam pidithavalai nu iruthuchu innikku kathalinaal nu pottu question mark vera irukku
 
Well-known member
Joined
Aug 16, 2024
Messages
447
மொத்தத்தில் வெற்றி நினைத்ததை மட்டுமே செய்து முடிப்பேன்.
 
Top