Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம், "கதையருவி" தளத்திற்கு தங்களை வரவேற்கிறோம்!

    இத்தளத்தில் எழுத எங்களை "vskathaiaruvi@gmail.com" என்ற மின்னஞ்சலில் தொடர்புக் கொள்ளவும். நன்றி!

மேவியமே மந்ராவின் மந்திரம்...3.1

  • Thread Author
அத்தியாயம்…3..1

இங்கு ராஜேந்திர பூபதியின் மனைவி கைகள் நடுங்க தன் கணவனின் கையை கெட்டியாக பிடித்து கொண்டவர்.. அதே பயப்பார்வையோடு தன் கணவன் முகத்தையும் நிமிர்ந்து பார்த்தவரின் கண்ணுக்கு கணவனின் முகத்தில் தெரிந்த அந்த சோகம்.. மனைவியவளை பலமாக தாக்கியது…

அதுவும் பிடித்து இருந்த தன் கையை விலக்கி விட்டு அவரும் விலகி நின்று கொண்டவர்… கைகள் நடுங்க அந்த கை பேசியை கையில் எடுத்து ஸ்பீக்கர் மோடை விடுவிக்க முயலும் போது.. இந்த இடைப்பட்ட நேரத்தில் தீக்ஷேந்திரனுக்கு திரிபுர சுந்தரி என்ற பெயர் அவனின் நியாபகத்திற்க்கு வந்து விட்டது… தன் தந்தையின் அம்மா பெயர்….

அதில் தீக்ஷேந்திரன் தன் தந்தையிடம்.. ஸ்பீக்கர் மோடை விடுவிக்க வேண்டாம் என்பது போல சைகை செய்தவனின் பேச்சை தந்தையும் கேட்டார்…

திரிபுர சுந்தரியும் சிறிது நேரம் எதுவும் பேசாது தான் இருந்தார்.. என்ன தான் தைரியமான பெண் மணியாக இருந்தாலுமே, தன் சீமந்த புத்திரன்… தனக்கு அம்மா என்ற அந்தஸ்த்தை முதலில் கொடுத்தவன்… தன் கணவர் நீல கண்ட பூபதி தன் தலை மீது வைத்து கொண்டாடிய தன் மூத்த மகன்..

நீண்ட நெடிய இருபத்தி ஆறு வருடங்கள் கழித்து பேசினால், அதன் பாதிப்பு அந்த தாய்க்கு இருக்க தானே செய்யும்.. அதுவும் என்ன தான் மகன் மீது தீராத கோபம் இருந்தாலுமே,

பின் ஒரு வாறு தன்னை சமாளித்து கொண்டவராக… அதுவும் எப்போதும் தனக்கு துணையாக இருந்த மூன்று பேரின் நியாபகம் அவருக்கு வந்த நொடி.. முன் இலக பார்த்தவரின் மனது மீண்டும் இறுக்கத்தை தத்து எடுத்து கொண்டது….

அதில்.. ராஜேந்திர பூபதியின். “ம்மா.” என்ற அழைப்பில் அவர் மனது சிறிது தடு மாறினாலும்… இன்னுமே தன்னை நிலைப்படுத்திக் கொண்ட திரிபுர சுந்தரி.

“உன் கிட்ட நான் அம்மா மகன் பாசத்தை வளர்க்க வரல…. நாளு நாள் முன்னாடி.. உன் கட்சி காரன் சட கோபனால என் மகன் மருமகன் பேரனை போலீஸ்ல கூட்டிட்டு போனாங்க…. அவங்களுக்கு அவங்க உயிருக்கும் எந்த ஆபத்தும் இல்லாம என் கிட்ட கொண்டு வந்து சேர்த்துடு.. அதோட அவனுங்க இனி பொண்ணு கொடு என்று சொல்லி கொண்டு எங்க வீட்டுப்பக்கம் தலை வைத்து கூட படுக்க கூடாது…” என்று சொன்ன பேச்சில் ராஜேந்திர பூபதி நின்று கொண்டு இருந்தவரின் உடல் தல்லாட….

மகன் தான் தந்தையின் கை பிடித்து இருக்கையில் அமர வைத்தவன்.. அங்கு இருந்த தண்ணீரை எடுத்து கொடுத்து குடிக்க வைத்த பின்..

“ப்பா…. முதல்ல நீங்க கொஞ்சம் ரீலாக்ஸ் ஆகுங்க ப்பா..” என்று சொல்லி தண்ணீரை குடிக்க வைத்து தந்தையை கொஞ்சம் அமைதி படுத்த முயன்றான் தீக்ஷேந்திரன். முன்றான் தான்.. ஆனால் அவனால் தந்தையிடம் முழு அமைதியை கொண்டு வர முடியவில்லை.

கை பேசியின் அந்த பக்கம் பேசிக் கொண்டு இருப்பது தன் அன்னை.. அதுவும் இத்தனை ஆண்டுகளாக இறந்து விட்டார்கள் என்று நினைத்து கொண்டு இருக்கும் தன் அன்னை..

கூடவே இப்போது சொன்ன… மகன் மருமகன் பேரன்… அப்போ எல்லோரும் உயிரோடு தான் இருக்காங்கலா.. அதை நினைத்த நொடி.. அவனுக்கு அத்தனை மகிழ்ச்சி கூடவே… இத்தனை ஆண்டுகள் தெரியாது விட்டதை நினைத்து அவருக்கு மனது குன்றி போய் விட்டது.. இவங்க ஏன் வரவில்லை.. குழப்பம்..

அதை எல்லாம்.. அதுவும் பழையதை எல்லாம் நினைக்க நினைக்க. அவருக்கு பதட்டம் கூடியதே தவிர குறையவில்லை..

அதில் வார்த்தைகள் திக்க.. “ ம்மா என்னம்மா. தம்பி தங்கை எல்லாம்…” என்று சொல்லி கொண்டு வந்தவர் பின் அன்னை சொன்னது நியாபகத்திற்க்கு வர இத்தனை நேரம் தூரம் நின்று கொண்டு அதிசயத்து ராஜேந்திர பூபதியின் பேச்சை கேட்டு கொண்டு இருந்த விவேகானந்தனை அழைத்தவர்.

“சட கோபன் சொல்லி அரெஸ்ட் செய்தவங்களை உடனடியாக நம்ம கெஸ்ட் அவுஸ். என்றவர் பின் ஏதோ யோசித்தவராக.

“ ம் அங்கு வேண்டாம் என் தனிப்பட்ட கெஸ்ட் அவுஸ்க்கு கூட்டிட்டு வந்துடுங்க.. ஆ பார்த்து பத்திரம்…” என்றவரின் பேச்சை நிறை வேற்ற விவேகானந்தன் தன் மற்றொரு கை பேசியை எடுத்தார்.. அவருக்குமே இப்போது காப்பற்ற சொன்ன நபர் யார் என்பது தெரிந்து விட்டதே..

அதோடு சிறிது நேரம் முன் தான் பேசிய பெண்மணி.. கடவுளே என்று அவர் மனது அலறினாலும் ராஜேந்திர பூபதி சொன்னதை செய்ய முயலும் போது தான்..

இத்தனை நேரம் தன் தந்தையின் பதட்டம்.. துடி துடிப்பு. கூடவே தன் அன்னையின் முகத்தில் வந்து போன பயம் என்று அனைத்துமே அனுமானித்து கொண்டு இருந்தாலுமே, கை பேசியில் பேசிக் கொண்டு இருக்கும் அந்த நபர்… உண்மையில் தன் தந்தையின் அன்னை தானா….?

அதில் விவேகானந்திடம்… “ கொஞ்சம் இரு…” என்று அவரை தடுத்து நிறுத்திய தீக்ஷேந்திரன் தன் தந்தையிடம்…

“ப்பா முதல்ல நீங்க கொஞ்சம் அமைதியா இருங்க… பதட்ட படாதிங்க… முதல்ல பேசுறது உண்மையில் உங்க அம்மா தானா….” என்று அவன் சொல்லும் போதே அழைப்பின் அந்த பக்கம் தீக்ஷந்திரனின் பேச்சை. அதுவும் அவன் குரல் தன் கணவனை போலவே இருக்கும் அந்த குரலை கேட்ட திரிபுர சுந்தரிக்கு அவரையும் மீறி அவர் உடல் பூரிப்பில் அதிர தான் செய்தது.

ஆனால் தன் கணவன் குரல் கொண்டு பேசிய அந்த பேச்சில்…. “ ம் பரவாயில்லை உன்னை சேக்கிழான் அவனை போலவே தான் வளர்த்து வைத்து இருக்கிறான்…” என்ற இந்த வார்த்தை தான் திரிபுர சுந்தரி தன் பேரனிடம் பேசிய முதல் பேச்சு..

இடையில் ராஜேந்திர பூபதி… “ என் அம்மா தான்… இந்த குரல். கண்டிப்பா என் அம்மா தான்..” என்று அவர் திட்ட வட்டமாக சொல்ல…

இதில் தீக்ஷேந்திரன் தன் தாத்தாவை ஒருவர் அவன் இவன் என்று பேசுவதா என்ற கோபம் தன்னால் குறைந்தது… தந்தை அத்தனை திட்ட வட்டமாக தன் அம்மா என்று சொல்லும் போது. பாட்டியை பேச மனது வரவில்லையோ என்னவோ…

பின் என்ன அடுத்து மின்னல் வேகத்தில் தான் அனைத்தும் நடந்து முடிந்தது.. விவேகானந்தர் சுதாகரன் மகேந்திரன் வினோத் மூவரையும் பத்திரமாக மீட்டு ராஜேந்திர பூபதியின் தனி கெஸ்ட் அவுஸ்க்கு பாதுகாப்பாக மட்டும் அல்லாது மிக மிக மரியாதையோடும் அழைத்து வர பட்டனர்..

இன்னொன்று இங்கு சொல்லியே ஆக வேண்டும்.. இந்த ராஜேந்திர பூபதியின் தனிப்பட்ட கெஸ்ட் அவுஸ்க்கு இது வரை யாரும் வந்தது கிடையாது.. இதில் மனைவி மகனுமே அடக்கம்…

ஒரு முறை தீக்ஷேந்திரன் பதினைந்து வயதாக இருக்கும் போது வெளி நாட்டில் இருந்து அவனின் மாமன் வந்த போது கிண்டலாக.. அவனிடம்..

“என்ன டா. உங்க அப்பா அங்கு உனக்கு இன்னொரு அம்மாவை வைத்து இருக்கிறாங்கலா என்ன…?” என்று கேட்ட போது தீக்ஷேந்திரன்… அந்த வயதிலேயே கோபமாக…

“மாமா பார்த்து பேசுங்க.. எங்க அப்பாவுக்கு என்று ஒரு சில பர்சனல் இருக்கும்… அங்கு எங்க அப்பாவோட மறக்க முடியாத மறக்க கூடாத நினைவுகள் வைத்து இருப்பார்…”

தீக்ஷேந்திரனுக்கு தெரியும்.. தன் தந்தையின் குடும்பம் இருபத்தி ஆறு வருடங்கள் முன் தீக்கு இரையாகி விட்டது என்பது… அவர் உறவின் நினைவுகள் அங்கு இருக்கும் என்பதை புரிந்து கொண்டவன்.. அப்படி பேசினான்..

கூடவே தன் அன்னை தந்தையின் உறவில் இருக்கும் முரண்பாடுகள்… தன் தந்தைக்கும் தாத்தாவுக்கும் இருக்கும் கருத்து மோதல்கள் அனைத்தும் தெரிந்து இருந்தவனுக்கு காரணம்..

அன்று தந்தையின் குடும்பம் ஜாதி பிரச்சனையின் மொத்தமாக இறந்து விட. அதை வைத்து தான் சேக்கிழார் அத்தனை தொகுதியிலும் அத்தனை வாக்கு வித்தியாசத்திலும் வெற்றி பெற்று முதலமைச்சராகினார்.. அதனை கொண்டு தந்தைக்கு மனம் வருத்தம் என்று தான் அவன் எண்ணிக் கொண்டது..

இந்த பேச்சு நடக்கும் போது அனைவரும் அங்கு தான் இருந்தனர்… சேக்கிழாருக்கு… “ என்ன தான் நம் பேரனை தான் கவனித்து தன் பக்கமாக வளர்த்தாலுமே, பாசம் தன் தந்தையின் மீது தான் அதிகமாக இருக்க செய்கிறது..

அதுவும் தன் பேரனின் உருவம்… குரல். இதை எல்லாம் ஊன்றி கவனிக்கும் போதும் கேட்கும் போது தன்னால் அவர் உடலில் நடுக்கம் ஏற்படும் தான். பின் தனக்கு தானே… இல்ல இல்ல இவன் என் பேரன். என் பேரன். என் பேரன் மட்டும் தான் என்று சொல்லி கொள்வார்.

இன்று யாருமே செல்லாத ராஜேந்திர பூபதியின் தனிப்பட்ட அந்த இடத்திற்க்கு அவர்கள் மூவரையும் அழைத்து செல்ல வேலைகள் நடந்தது…

ராஜேந்திர பூபதி இதில் மூம்முரமாக இறங்க தீக்ஷேந்திரனோ… சிறிது நேரம் விவேகானந்த பேசிக்கு வந்த அந்த அழைப்பின் எண்ணை கொண்டே அனைத்து விவரங்களும் கடந்த ஒரு மணி நேரத்திற்க்குள் அனைத்து விவரங்களையும் சேகரித்து விட்டான்.

இந்த காலத்தில் பணம் இருந்தால் அப்பா அம்மாவை தவிர அனைத்தும் வாங்கி விடலாம் எனும் போது பணத்தோடு அதிகார பலமும் கொண்ட தீக்ஷேந்திரனுக்கு இது எல்லாம் ஒரு விசயமே இல்லை தானே…

இதோ திரிபுர சுந்தரி குடும்பத்தின் விவரங்கள் அனைத்தும் புகைப்படத்தோடு அவன் கணினியில் இடம் பெற்று இருந்தது…

இன்று தந்தையும் மகனும் தங்களின் அனைத்து வேலைகளையும் தள்ளி வைத்து விட்டனர்…

தீக்ஷேந்திரன் முதன் முதலில் பார்த்த விவரங்கள் மந்ராவுடையது தான்.. மந்ராவின் கை பேசி எண்ணை கொண்டு தான் விவரங்கள் அனைத்தும் சேகரிக்க சொன்னதினால் பெண்ணவளை கொண்டு தான்..

பெயர் மந்திரா.. மந்ராவின் புகைப்படத்தோடு … இதோ தீக்ஷேந்திரன் அந்த புகைப்படத்தை தான் பார்த்து கொண்டு இருக்கிறான் .. பார்க்கிறான் பார்க்கிறான் பார்த்து கொண்டே இருக்கிறான்..

அவனின் பார்வையும் சரி அவனின் கவனமும் சரி… அதற்க்கு அடுத்து பார்க்க முயலவில்லை… அவன் மூளை அடுத்து பார் என்று அவனுக்கு எடுத்து உரைத்தது தான்.. எப்போதும் மூளையின் பேச்சை கேட்கும் அவன் அதை செயல் படுத்த முயன்றான் தான்..…. ஆனால் முடியவில்லை…

வயது முப்பது தொட்டு விட்டது…. திருமணம் வயது தொட்டும் விட்டது தான்.. வயதை தொட்டு விட்டால் போதுமா…? அவனின் மனம் இன்னுமே திருமணம் என்ற அந்த இடத்தை தொட முயவில்லையே…

காரணம் அவனுக்கு பிடித்த பெண்ணாக பார்க்கும் எந்த பெண்ணும் அவன் கண்ணுக்கு தெரிகிறது தான்.. ஆனால் மனதிற்க்கு… அவன் மனதிற்க்குள் எந்த பெண்ணும் அவனை பிடித்து நிறுத்தவில்லை…

மந்ரா என்ன மந்திரம் செய்தாளோ தெரியவில்லை… தன் புகைப்படத்திலேயே ஆணவனை பிடித்து பிடித்தம் என்ற பிடிக்குள் பிடித்து நிற்க வைத்து விட்டாள்…








 
Well-known member
Joined
Jun 23, 2024
Messages
205
மந்திராவோட மந்திரத்தில் மயங்கிட்டாரு ஹீரோ 😘😘😘😘😘 சொந்த அத்தை பொண்ணு வேற 😉😉😉😉😉

தன் குடும்பத்தோட இழப்பை வச்சு மாமனார் அரசியல் செஞ்சும் அவரோடு ஒத்துமையா இருக்காருன்னா நல்ல மருமகன் தான் 😡😡😡😡😡
 
Last edited:
Well-known member
Joined
Jun 1, 2024
Messages
217
சேக்கிழார் வேலையா இருக்குமோ..... 🤔

இப்போ பாசமா உருகுற பூபதி அம்மா வெறுக்குற அளவுக்கு என்ன தப்பு பண்ணினாரு 🤔

அத்தை பொண்ணு முதல் பார்வையிலயே கவர்ந்துட்டா 😍
 
Active member
Joined
Apr 2, 2025
Messages
43
அப்போ அந்த ex cm தான் ஏதோ பண்ணி இருக்காரு.. நான் guess பண்ணது போல பாட்டி cm க்கு அம்மா தான்...

ஒரு சந்தேகம்.. மந்த்ரா cm வீட்டுக்கு போனதா சொன்னாலே அவள பாத்து யாருக்கும் சந்தேகம் வரலையா... எதுக்கு கேக்குரனா அவ, அவ பாட்டி அம்மா போல தான் இருக்கானு சொல்லி இருந்திங்க அதான்...🤔

ஃபேமிலி மேல இவளோ பாசம் வச்சி இருக்குற cm எப்டி அவங்கள safe பண்ணாம விட்டாரு ... வக்கீல் அம்மா எதுக்கு பயம்.. அப்போ நீங்களும் உடந்தையா எதுக்காது 🤷

பாருடா ஃபோட்டோ பாத்து sir reaction... Kastam kastam🤭😁

இதனால் தான் மந்த்ரா அம்மா அரசியல்வாதிக்கு பயபடுறங்களோ...
 
Administrator
Staff member
Joined
May 9, 2024
Messages
1,370
அப்போ அந்த ex cm தான் ஏதோ பண்ணி இருக்காரு.. நான் guess பண்ணது போல பாட்டி cm க்கு அம்மா தான்...

ஒரு சந்தேகம்.. மந்த்ரா cm வீட்டுக்கு போனதா சொன்னாலே அவள பாத்து யாருக்கும் சந்தேகம் வரலையா... எதுக்கு கேக்குரனா அவ, அவ பாட்டி அம்மா போல தான் இருக்கானு சொல்லி இருந்திங்க அதான்...🤔

ஃபேமிலி மேல இவளோ பாசம் வச்சி இருக்குற cm எப்டி அவங்கள safe பண்ணாம விட்டாரு ... வக்கீல் அம்மா எதுக்கு பயம்.. அப்போ நீங்களும் உடந்தையா எதுக்காது 🤷

பாருடா ஃபோட்டோ பாத்து sir reaction... Kastam kastam🤭😁

இதனால் தான் மந்த்ரா அம்மா அரசியல்வாதிக்கு பயபடுறங்களோ...
அன்று யாரும் வீட்டில் இல்லை.. சேக்கிழார் அடையாளம் காணவில்லை என்ற காரணம் இனி வரும் பா
 
Active member
Joined
May 7, 2025
Messages
65
தன் குடும்பத்தோட இழப்பை வச்சு மாமனார் அரசியல் செஞ்சும் அவரோடு ஒத்துமையா இருக்காருன்னா நல்ல மருமகன் தான் 😡😡😡😡😡
உங்க ஹீரோவின் அப்பாவாச்சே 😕😕😕😕
 
Well-known member
Joined
Mar 3, 2025
Messages
214
அருமையான பதிவு 😍 😍 😍.
மொறைப்பொண்ணு ன்னு போட்டோவ மொறச்சு மொளச்சு பாக்கறானோ!!!!😆
 
Well-known member
Joined
May 12, 2024
Messages
327
Vinoth kum athai ponnu… Theekshendran kum athai ponnu 🤣🤣🤣

Antha Youtube video la Magendran ah parthu thane iruppar CM? Appo adhu than thambi nu adaiyalam theriyalaya??? @Vijayalakshmi
 
Top