Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம், "கதையருவி" தளத்திற்கு தங்களை வரவேற்கிறோம்!

    இத்தளத்தில் எழுத எங்களை "vskathaiaruvi@gmail.com" என்ற மின்னஞ்சலில் தொடர்புக் கொள்ளவும். நன்றி!

காதல் கொண்டு கரம் பிடித்த பெண்ணவளே....4

  • Thread Author
அத்தியாயம்…4

வெற்றி மாறனின் தாத்தா ராஜ சுந்தர மாறனின் அந்த பேச்சே பெண்ணவளுக்கு அதிர்வை தந்தது என்றால், அதற்க்கு மாறன் சொன்ன பதில் பெண்ணவளுக்கு பேரதிர்வை தந்தது என்று தான் சொன்ன வேண்டும்…

இவன் இவன் என்ன சொல்கிறான்.. “ இவள் அவள் அம்மா போல இல்ல.. அப்போ என் அம்மா என் அம்மா எது போல…?

அதே போல இனி நம்ம குடும்பத்திற்க்கு ஏற்றது போல இருப்பா.. ஏன் என் குடும்பத்தில் நான் இருந்ததுக்கு என்ன குறைச்சல்…? என்று மனதில் நினைத்தவள் அதை சூடாக கேட்க வரும் போது தான்..

அவள் வீட்டவர்களும் வந்தது.. அவர்களை பார்த்த நொடி அப்படி ஒரு அழுகை… இது வரை காதலித்தேன் காதலித்தவனை திருமணம் செய்து கொண்டேன்… இதில் என்ன தப்பு இருக்கு…? ஒருவனை காதலித்து இன்னொருவனை திருமணம் செய்து கொள்வது தான் தவறு…

அதோடு வெற்றி மாறன் குடும்பம் பழைய கால பஞ்சாங்கம். இது தானே.. ஆனால் வெற்றி மாறன் அப்படி இல்லையே இப்படி எல்லாம் நினைத்து தான் திருமணம் செய்து கொண்டது..

கூடவே தன் வீட்டவர்களின் கோபமும்.. கொஞ்ச நாளில் சரியாகி விடும் என்றும் நினைத்து கொண்டு இருந்தாள்..

ஆனால் இது இரு குடும்பத்தில் கோபமும் மீறி மரியாதை தரும் விசயம் என்பது தெரிந்த நொடி.. நான் தப்பு செய்து விட்டேனோ… என்ற பயம்.. அதில் அழுகையும் வர..

ஸ்வர்ணாம்பிகையின் அப்பா அம்மா அண்ணன் மூன்று பேரும் வந்தவர்கள்… ஒன்றும் பேசாது தலை குனிந்து நிற்க.

ராஜ சுந்தர மாறன் தான் தொடர்ந்து பேசிக் கொண்டு இருந்தார்… முன் பேச்சை ஒட்டியது போல் தான் இருந்தது.

தன் தந்தையிடம்.. கூடவே “ உனக்கு தான் நன்றி இல்லை உன் மகளுக்குமா..? என்ற அவர் பேச்சில் புதுசா இது என்ன என்று பார்த்த போது தெரிந்த விசயம் இது..

அதாவது ஸ்வர்ணாம்பிகையின் அப்பா கிரிதரனுக்கு சிறு வயதிலேயே பெற்றோர் இறந்து விட. ராஜா சுந்தர மாறன் தான் தூரத்து தங்கை மகளை படிக்க வைத்தது.. அனைத்தும் செய்தது..

அனைத்தும் என்றால் வீட்டில் வைத்து எல்லாம் பார்த்து கொள்ளவில்லை.. வீட்டில் வயது பெண்கள் இருக்கும் போது அப்படி வீட்டோடு வைத்து கொள்ள மாட்டார்கள்..

அதனால் விடுதியில் தங்க வைத்து தான் அனைத்தும் செய்தது… கிரிதரன் நன்றாக படிப்பவர்.. படித்து முடித்து வேலை செய்து கொண்டே அரசாங்க வேலைக்கும் தேர்வு எழுதிக் கொண்டு இருந்தார்.

அவரின் இருபத்தி ஐந்தாவது வயதில் வங்கியில் வேலையும் கிடைத்தது.. வேலைக்கு பயிற்ச்சி காலம் என்று ஒரு ஆறு மாதம் வெளி மாநிலத்தில் இருந்த போது தான் கிரிதரனுக்கு ஜெய சுதா மீது காதல் வந்தது.. ஜெய சுதாவும் காதலித்தார்.

கிரிதரனும் பெற்றோர் இல்லை.. அதே போல் தான் ஜெய சுதாவுக்கும் இல்லாது தன் காலில் நிற்க வேண்டும் என்ற முயற்ச்சியில் தான் இவர்கள் இருவரும் இத்தனை தூரம் வந்தது..

இனி இணைந்து செல்வோம் என்று கை கோர்த்துக் கொண்டனர்.. யாரிடம் அனுமதி கேட்க வேண்டும்.. அது தான் யாருமே இல்லையே என்று…

ஆனால் கிரிதரன் படித்து முடித்து சின்ன வேலைக்கு செல்லும் போதே ராஜ சுந்தர மாறனின் இரண்டாம் மனைவி…

ஆம் ராஜ சுந்தர மாறனுக்கு இரண்டு மனைவி.. இரண்டு மனைவியும் உயிரோடு இருக்கிறார்கள்.. அதே போல் இருவரும் ஒரே வீட்டில் தான் இசைந்து இன்றளவும் வாழ்ந்து கொண்டு இருப்பது..

அதை வைத்து தான் அந்த குடும்பத்தை பற்றி அனைவரும் பின் தான் பேசிக் கொள்வார்கள்.. அந்த வீட்டவர்கள் முன் பேசும் தைரியம் இன்னும் யாருக்கும் வரவில்லை..

ராஜ சுந்தர மாறன் இரு மனைவிகளும் அக்கா தங்கை தான்.. அக்காவான மணி மேகலையை தான் முதலில் திருமணம் செய்து கொண்டது…

திருமணம் முடிந்து ஐந்து ஆண்டுகள் கடந்தும் குழந்தை இல்லாது போனதால், அத்தனை சொத்துக்கள் இருந்தும் வாரிசு இல்லையே என்று அவர் தங்கையான வைஜெயந்தியை இரண்டாவதாக ராஜ சுந்தர மாறன் திருமணம் செய்து கொண்டு ஒரே வீட்டில் தான் வசித்தது..

இதில் என்ன கொடுமை என்றால், ராஜ சுந்தர மாறன் இரண்டாவது திருமணம் செய்து கொண்ட பின்.. முதலில் ஆண் குழந்தையான ஜெய மாறன் பிறந்தது என்னவோ முதல் மனைவியான மணிமேகலைக்கு தான்.. அவர் தான் வெற்றி மாறனின் தந்தை…

பின் தான் இரண்டாம் மனைவிக்கு ஒரு பெண் பிறந்தது.. இப்படி இரண்டு மனைவிக்கும் தலா மூன்று குழந்தைகள் ஆண்கள் இரண்டும் பெண்கள் ஒன்றுமாக பிறந்து இன்றுமே வீடு ஆகட்டும் தொழில் ஆகட்டும் தனித்து போகாது கூட்டு குடும்பமாக தான் இருக்கிறார்கள்..

இப்படி கூட்டு குடும்பமாக இன்றும் இருக்க ஒரு காரணமாக உறவில் சொல்லப்படும் காரணம்.. சொந்தத்தில் மட்டுமே திருமணம் செய்து வைப்பதினால் தான்..

அதுவும் அந்த வீட்டில் பிறக்கும் பெண்கள் சின்ன வயதில் இருந்தே… அந்த வீட்டு ஆண்களுக்கு தகுந்தது போல வளர்ப்பதினால் தானோ…

அப்படி இருக்க… தான் கிரிதரன் சின்ன வேலையில் சேர்ந்த போதே ராஜ சுந்தர மாறனின் இரண்டாம் மனைவி வைஜெயந்தி…

“ஏனுங்க… நம்ம பொண்ணு சாரதாவை நம்ம கிரிக்கு முடிச்சிடலாமா…?” என்று கேட்டது…

அவருக்குமே அந்த எண்ணம் இருந்தது.. காரணம் சாரதாவுக்கு ஒரு கை வளர்ச்சி குறைந்து இருக்கும்.. இரு நெருங்கிய சொந்தத்திலுமே யாரும் சாரதாவை பெண் கேட்டு அது வரை வரவில்லை…

சுந்தர மாறனுக்கோ தானே வலிய சென்று பெண் கொடுக்கிறேன் என்று கேட்க தன்மானம் இடம் தரவில்லை.. அதோடு தான் கேட்டு அவர்கள் மறுத்தால், அது இன்னுமே அசிங்கம் தானே என்று இருக்க. அவருக்குமே தன் பெண்ணை கிரிதரனுக்கு முடித்து வீட்டோடு மாப்பிள்ளையாக்க எண்ணம் இருந்தது..

அதனால். “ நானுமே அப்படி நினச்சிட்டு தான் இருந்தேன்…. பெரிய மருமகள் பிரவசத்துக்கு போய் வந்த பின் இதை பத்தி கிரி கிட்ட பேசுறேன் …” என்று சொல்லி விட்டார்..

அப்போது வெற்றி மாறனின் அன்னை சுபத்ரா.. வெற்றியை பிரசவிக்க தாய் வீடு சென்று இருந்த சமயம் அது…

இந்த பேச்சுக்கு வைஜெயந்தி… “ அது என்னங்க மாமா… அது பாட்டுக்கு குழந்தை பிறக்குது.. நீங்க இதை பத்தி கிரி தம்பி கிட்ட ஒரு வார்த்தை காதில் போட்டு வெச்சிடுங்கலே….” என்று சொன்னார்…

அவருக்கு அவர் பயம்.. அவர்கள் இனத்தில் அதுவும் அந்த காலத்தில் ஒரு பெண் இருபத்தி மூன்று வயது வரை எல்லாம் கல்யாணம் செய்யாது வீட்டில் வைத்து இருக்க மாட்டார்கள்.

அதோடு அக்காவின் பெரிய மகன் ஜெய மாறன்.. தன் மகள் சாரதாவை விட ஒரு வயது தான் மூத்தவன்… இருபத்தி நான்கு வயதிலேயே ஆண்மகனான ஜெய மாறனுக்கு திருமணம் முடிந்து குழந்தையே பிறக்க போகிறது..

தன் மகளுக்கு இப்போது திருமணம் பேச கூட இது தடையாக இருக்க வேண்டுமா…? என்ற நினைப்பு.. ஆனால் இத்தனை நினைப்பு மனதில் இருந்தாலும், வெளியில் எதையும் காட்டாது தான் பேச்சு இருக்கும்..

ஆனால் இதற்க்மே ராஜ சுந்தர மாறன். “ என்ன ஜெயந்தி.. ஆம்பிள்ளை நான் ஒன்னு சொல்றேன் நீ அதுக்கு மறுப்பு தெரிவிக்கிற….” என்ற அந்த வார்த்தை அவர் சொன்ன பின் வைஜெயந்தி அடுத்து பேசாது அமைதியாகி விட்டார்..

அந்த வீட்டில் ஆண்கள் குரல் மட்டும் தான் கேட்க வேண்டு,…என்ற சட்டமே இருக்கிறது.. அதனால்.

இதன் நடுவில் கிரிதரனுக்கு அரசாங்க வேலை கிடைத்து பயிற்ச்சிக்கு என்று செல்லும் முன் ராஜ சுந்தர மாறனிடம் ஆசி வாங்க இவர்கள் வீட்டிற்க்கு கிரிதரன் சென்ற போது கூட.

வைஜெயந்தி தன் கணவன் முகத்தை முகத்தை பார்த்தார் தான்.. இப்போதாவது சொல்லுவார் என்று.. ஆனால் அவரே… ஆசி வழங்கியதோடு.. விட்டார்…

அவருக்கு என்ன என்றால், நான் வளர்த்தவன்.. என் சொல் பேச்சு கேட்பான்.. அதோடு கிரிதரனின் இருப்புக்கு இந்த ராஜ சுந்தர மாறனின் மருமகன் ஆவது என்பது வரம் தானே.. மறுக்க மாட்டான் என்ற நம்பிக்கை…

ஆனால் காதல் என்ற ஒன்று வந்து விட்டால் அனைத்தையும் மறக்க அடித்து விடும் என்பது… ஆண் ஆதிக்க மனப்பான்மையும்.. தான் என்ற அகங்காரம் கொண்ட ராஜ சுந்தர மாறனுக்கு தெரியாது போயிற்று…

இங்கு கிரிதரன் காதலித்ததோடு மட்டும் அல்லாது இருவருக்கும் ஒரே இடத்தில் போஸ்ட்டிங்க கிடைத்து விட. இருவரும் திருமணம் செய்து கொண்ட பின் தான் சென்னைக்கே வந்தது..

ராஜ சுந்தர மாறன் தான் கிரிதரனை படிக்க வைத்து எல்லாம்.. ஆனால் அன்பாக எல்லாம் செய்யவில்லை.. ஏதோ பணம் இருக்கிறது.. தூரத்து சொந்தம் விட்டால், சொந்தங்கள் நம்மை தப்பாக நினைப்பார்கள்… என்று தான்… ராஜ சுந்தர மாறன்.. ஊர் பெருமைக்கு என்று இது போல் ஒரு சிலதை செய்வது தான்…

அதோடு அவர் பெண்ணுக்கு எந்த குறையும் இல்லாது இருந்து இருந்தால், அவர் கவனத்தில் கூட கிரிதரன் ஒருவன் இருக்கிறான் என்று நினைத்து இருந்து இருக்க மாட்டார்.. மகள் தொட்டு கிரிதரன் வேலை கிடைத்த விசயம் தெரிந்து அதுவும் சென்னையில் தான் என்று தெரிந்ததில், கண்டிப்பாக இதற்க்கும் ஆசி வாங்க தன் வீட்டிற்க்கு வருவான்…

அப்போது மகள் விசயத்தை பேசி விடலாம் என்று இது வரை தான் வைஜெயந்தி மட்டுமே பேசிய இந்த விசயத்தை தன் நான்கு மகன்கங்கள் முதல் மனைவி மணிமேகலை இருக்கும் போது பொதுவில் சொல்லி விட்டார்..

அவரை பொறுத்த வரை. ஆண்களின் அபிப்பிராயம் கேட்டாபார் அவ்வளவே… ஏன் இன்னும் கேட்டால், ஐந்து மாத கை குழந்தையான வெற்றி மாறன் தன் பாட்டி மணிமேகலையின் மடியில் இருக்க.. அவனிடம் கூட.

“என்ன சிங்க குட்டி.. நீ என்ன சொல்ற.. உங்க அத்தையை கிரிதரன் மாமாவுக்கு கல்யாணம் செய்யலாமா…?” என்று கிண்டலாக கூட கேட்டார்… என்றால் பார்த்து கொள்ளுங்கள்..

ஆண்கள் நான்கு பேருமே… “ கிரி நல்ல பையன் தான் ப்பா.. இன்னைக்கு ஞாயிறு.. வந்தாலும் வருவான்… இன்றே பேசி விடுங்கள்… “ என்று சொன்னார்கள்.

அவர்கள் சொன்னது போல தான் அன்று மாலை கிரிதரன் அங்கு சென்றார்… ராஜ சுந்தர மாறன் நினைத்தது போல் ஆசி வாங்க தான் சென்றது..

என்ன ஒன்று தனித்து செல்லாது மனைவி ஜெயசுதாவோடு சென்றவர்…

அவர் காலில் சாட்சாங்கமாக விழுந்து… ஆசி வழங்கு அய்யா…. உங்களால தான் இன்னைக்கு நான் குடும்பமா இருக்கேன்…” என்று சொன்னவருக்கு அந்த பெரியவர் ஆசி வழங்கவில்லை..

அதற்க்கு மாறாக அன்று கிரிதரனும் ஜெய சுதாவும் பெரியவரிடம் சாபம் தான் வாங்கி கொண்டு அன்று தம்பதியர் வீடு வந்தது…










 
Well-known member
Joined
May 28, 2025
Messages
67
அடப்பாவி பழி வாங்கவா கல்யாணம் செய்த இதற்கெல்லாம் பிற்காலத்தில் நீ தான் கிரி மகள் கிட்ட பட போற போ உனக்கு கெட்ட நேரம் ஆரம்பம்
 
Well-known member
Joined
Jun 1, 2024
Messages
217
இவங்களா ஒன்னு நினைச்சுட்டு அது நடக்கலைன்னா கிரி என்ன பண்ணுவாரு....
சுயநலம் பிடிச்ச குடும்பம் 😖
 
Top