அத்தியாயம்…4.1
மகேந்திரன் சுதாகரன். வினோத் மூவரையும் முதலில் அழைத்து கொண்டு காவல் நிலையத்திற்க்கு எல்லாம் செல்லவில்லை… முதலில் இவர்களின் மீது எப்.ஐ.ஆர் கூட போடவில்லை.. ஒரு வீட்டிற்க்கு தான் கொண்டு சென்றது….
மூவரின் எண்ணமும் இது சட கோபனின் இடமாக தான் இருக்கும் என்பது.. அவர்கள் நினைத்தது சரி தான் என்பது போல் அந்த இடம் சட கோபனின் தனிப்பட்ட இடம் தான்..
மூன்று பேரையுமே தான் அடித்தார்கள்.. அதுவும் மகேந்திரனுக்கு இன்னுமே அடி பலமாக தான் விழுந்தது.. அடித்தது காவலர்கள் கிடையாது சட கோபனின் அடியாட்கள்… அடியாட்களுக்கு பந்தோ பஸ்த்தாக தான் அந்த காவலர்கள் காவல் காத்து கொண்டு இருந்தது…
மகேந்திரனுக்கு இந்த அடி எல்லாம் ஒன்றும் இல்லை.. ஏன் சுதாகரனுக்கும் தான்.. வினோத் இளைஞன் இன்னும் கேட்டால் ஆரோக்கியமானவன்.. அதனால் ஒரளவுக்கு சமாளித்து கொண்டான் தான்..
ஆனால் மூவரின் மனதிலும் இருந்த கவலை அவர்கள் வீட்டு பெண்கள் மீது தான்.. அதுவும் எந்த விசயமும் தெரியாத வினோத்துக்கு இன்னுமே பயம் தான்…
ஆனால் மகேந்திரனுக்கும் சுதாகரனுக்கும் தெரியும். நிலமை கை மீறி போனால் கண்டிப்பாக தங்கள் வீட்டின் மூத்த பெண்மணி.. ஏதாவது செய்வார் என்பது.
ஆனால் மகேந்திரனுக்கு தான்.. இந்த நிலை வரவே கூடாது என்ற எண்ணம்… அடுத்து
இரண்டே மணி நேரத்தில் அந்த எதிர் வீட்டு யூடியூப் வைத்து நடத்தும் பெண்ணால் விசயம் பூதாகரமாக மாற.. இதை எதிர் கட்சி ஊதி பெரியதாக ஆக்க…. உடனே மூன்று பேரின் மீதும் எப். ஐ. ஆர்… போடப்பட்டு முறையாக அனைத்தும் செய்தது,, அதன் பின் அடிக்கவும் செய்யவில்லை…
எதிர் கட்சி பிரஸ் சோஷியல் மீடியாவை வைத்து ஏதாவது பிரச்சனை வந்து விடுமோ என்ற பயத்தில். ஆனால் பிரச்சனை… ஆளும் கட்டியினாலேயே வரும் என்று… இவர்கள் மூன்று பேரையும் டிமெண்டில் வைத்த அந்த காவல்கள் நினைத்து கூட பார்க்கவில்லை…
சட கோபன் கூட. “மீடியா கொஞ்சம் அடங்கட்டும் அவனுங்களை வைத்து செய்யலாம்…” என்று தான் சொன்னது..
அது என்னவோ சட கோபனின் இடத்தில் இருந்து காவல் நிலையத்திற்க்கு மூன்று பேரையும் அழைத்து வரும் போது மகேந்திரன் அவர்களிடம் ஒன்றை மட்டும் சொன்னான்..
அது.. “ தம்பி நீங்க புலி வாலை பிடித்து விட்டிங்க…” என்று அதற்க்கு அங்கு இருந்த நான்கு காவர்களும் கொல் என்று சிரித்தும் விட்டார்கள்…
பின் அவர்களில் ஒருவர்… “ இந்த சோஷியல் மீடியா கொஞ்சம் அடங்கட்டும்… இங்கு யாரு புலி…? பூனை…?” என்று பார்த்துடலாம்…
“என்னவோ இந்த மாநிலத்தையே ஆளும் வீட்டு ஆட்கள் போல் தான் பேச்சு… சட கோபன் சார் மகன் கையை வெட்டி இருக்கிங்க.. அவர் ஆளுங்கட்சியின் எம்.எல்.ஏ.. கூட ஆளும் கட்சிக்கு அவர் நெருக்கமும் கூட.. இனி உங்க கதியே அதோ கதி தான்.. இதுல எங்களை சொல்றாரு… அடிச்சதுல மூளை கீளை குழம்பி போய் விட்டதா என்ன….? என்றும் கேட்டார்.
ஆனால் மூன்றாவது நாள் மகேந்திரன் சொன்னது போல் தான் அனைத்து காட்சியும் மின்னலாக மாறி விட்டது…
முதலில் கமிஷனர் தான் அந்த காவல் நிலையத்திற்க்கு வந்தது.. வந்தவர் அவர் கையினாலேயே மூன்று பேரும் இருக்கும் சிறை கதவை திறந்து விட்டு…
“மன்னிக்கனும்.. தெரியாம நடந்து விட்டது…” என்று பேசியதில். அங்கு இருந்த காவலர்களுக்கு அதிர்ச்சி தான்… ஆனால் பயப்படவில்லை..
ஆளும் கட்சி எம்.எல்.ஏ சட கோபன் சொல்லி தானே அனைத்தும் செய்தது.. இவர்கள் கமிஷனருக்கு தெரிந்தவர் போல்..
இப்போது எல்லாம் அரசாங்க அதிகாரிகளை விட அரசியல் வாதிகளுக்கு தானே செல்வாக்கு அதிகம்.. இவரே அவர்களுக்கு கீழ் தானே என்ற மிதப்பில் தான் அந்த காவல் அதிகாரிகள்..
கோபமாக தன்னை பார்த்த கமிஷனரிடம்… “ சார். எம்.எல்.ஏ மகன் கையை உடைத்து இருக்காங்க சார்.. எம்.ஏல்.ஏ சார் தான் இவங்களை நல்லா கவனிக்க சொன்னது..” என்று கூறினர்..
சொன்னது எல்லாமே உண்மையும் தான்.. ஆனால் இதை சொன்னால் தங்களுக்கு பிரச்சனை இல்லை என்று அவர்கள் நினைத்து கொண்டு இருக்க…
அப்போது தான் பெரிய பிரச்சனையாக முதல் அமைச்சரின் உதவியாளரே அங்கு வரவும்.. அங்கு இருந்த அனைவருக்குமே ஆட்டம் கண்டு விட்டது..
அதுவும் விவேகானந் வந்ததுமே மூன்று பேரின் முன் நின்று…” சாரி சார். .. சாரி. தப்பு நடந்துடுச்சி..” என்று அத்தனை முறை மன்னிப்பு கேட்டதை பார்த்து அந்த காவலர்களுக்கு பயம் வந்து விட்டது என்றால் வினோத்துக்கு இங்கு என்ன நடக்கிறது என்பதில் குழப்பம்..
அதன் பின் கூட அவனின் குழப்பங்கள் நீடித்ததே தவிர குறையவில்லை.. இதோ ஊரை தான்டிய ஒரு இடம்.. இடமும் சரி அந்த பங்களாவும் சொன்னது… அதன் செழுமையை… அனைத்தும் பார்க்க பார்க்க வினோத் தன் அப்பா மாமாவை தான் பார்த்தது..
அவர்கள் முகத்தில் இவனுக்கு இருக்கும் குழப்பம் இல்லை. ஆனால் தன் தந்தையின் முகத்தில் இப்போது நடப்பது எல்லாம் எனக்கு பிடிக்கவில்லை என்ற ஒரு பிடித்தமின்மை மட்டுமே தெரிந்தது..
மகன் தன் முகத்தையே பார்ப்பதை கவனித்தவர்..
“இன்னும் கொஞ்சம் நேரத்தில் எல்லாம் உனக்கு தெரிந்து விடும் வினோ….” என்று மட்டும் சொல்ல..
அதற்க்கு பின் வினோத் ஒன்றும் பேசவில்லை தான்.. ஆனால் மனதில் பெரியதாக ஏதோ இருக்கிறது..
அதுவும் சடகோபன் மகனுடன் தன் வீட்டிற்க்கு வந்த அன்று தந்தையின் செயல்களில் தெரிந்த மாற்றங்கள்… உண்மையில் ஏதோ இருக்கிறது என்பது அவனுக்கு உறுதியானதில்… என்ன அது என்று தெரிந்து கொள்ள அவனுமே ஆர்வமாக தான் இருந்தான்.
ஆனால் தன் பாட்டி அம்மா அத்தை மந்ரா. அவர்களுக்கு என்ன பிரச்சனையோ…. என்று நினைத்து..
“ப்பா நம்ம வீட்டிற்க்கு போய் அங்கு என்ன ஆச்சு… என்று முதலில் பார்க்கலாம் ப்பா..” என்று தன் தந்தையிடம் கூறினான்..
மகனின் முகத்தில் தெரிந்த பதட்டத்தை பார்த்து…
“இனி அவங்களுக்கு ஒன்னும் ஆகாது வினோ…” என்று சொன்ன மகேந்திரன்..
பின் அவராகவே… “ கடைசி வரை நான் என் அம்மாவை யாரின் முன்னும் நிறுத்த கூடாது என்று நினச்சேன்.. ஆனா….” என்று மட்டும் சொன்னவர் கண் மூடிக் கொண்டார்…
புது உடை அவர்களின் விருப்பத்தை கேட்டு அந்த உணவை கொண்டு வந்து சாப்பிட வைத்து…
அவர்களை ஒய்வு எடுக்க. மூன்று பேருக்கும் தனி தனி அறை கொடுத்து என்று அனைத்துமே ராஜ உபச்சாரம் என்பார்களே… அது தான் அங்கு நடந்தது…
பிடிக்கவில்லை என்றாலும் சுதாகரனும் மகேந்திரனும் அதை ஏற்றுக் கொள்ளும் படியாகி விட்டது.. வினோத் இது தான் என்று தெரியாது யாரோ வீட்டில் அனுபவிக்கும் அந்த வசதியை ஏற்றுக் கொள்ள முடியாது ஒரு வித கூச்சத்துடன் தான் ஏற்றுக் கொண்டது..
ஆனால் அனைவரும் தத்தம் அறைக்கு சென்று.. அந்த மெத்தையில் படுத்த உடனே… அப்படி ஒரு தூக்கம்… என்ன தான் ஆரோக்கியமான உடம்பாக இருந்தாலும்.. போலீஸ் அடி. அதுவும் மூன்று நாட்களாக சரியான சாப்பாடு இல்லாது. தூக்கம் இல்லாது கூட வீட்டு பெண்களின் நிலை நினைத்து கவலையும் சேர்ந்து சோர்வில் இருந்தவர்களுக்கு இந்த தூக்கம் என்பது வரும் தானே..
இங்கு மந்ராவின் வீட்டில் தன் பாட்டி பேசிய பேச்சில் அப்படியே அதிர்ச்சியாகி நின்றவள் நின்றவள் தான்.. பின் அனைத்தும் என்ன நடக்கிறது என்று அவள் உணரும் முன்பே.. தன் வீட்டிற்க்கு பாதுகாவலாக இரு போலீஸ்.. அதுவும் கமிஷனரே நேரில் வந்து தன் பாட்டியிடம் மட்டும் அல்லாது அனைவரிடமும் பேசிய பாங்கு… விட்டால் நான் உங்கள் காலில் விழ கூட தயார் என்பது போல் அத்தனை பணிந்து..
அதுவும் தன்னிடம்.. “ மேடம் நீங்க எதுவும் மனசுல வைத்து கொள்ள கூடாது….” என்று பேசி விதம்… அவளுக்கு கண்ணை கட்டி விட்டது…
இதில் வியக்கத்தக்க விசயம் என்ன என்றால், தன் அத்தையும் கூட அதை ஏற்று கொண்ட விதமாக நின்று கொண்டு இருந்த விதத்தை பார்த்து..
அப்போ இது விசயமா நம்ம அம்மாவுக்கும் தெரியுமா என்று நினைத்து எங்கே நம்ம குடியிருந்த கோயில் தன் ஜீவிதாவை பார்த்தாள்..
பார்த்ததும் அவளுக்கு சிரிப்பு தான் வந்து விட்டது.. பின் என்ன தனக்கும் மேல் தன் அன்னை ஒரு வித பயத்துடன் பாட்டி திரிபுர சுந்தரியிடம் கமிஷன் பேசிக் கொண்டு இருப்பதை பார்த்து..
தன் யோசனை அனைத்தையும் தள்ளி வைத்து விட்டு தன் அன்னையின் அருகில் நின்று கொண்டு அவர் தோளை பற்ற.
அவரோ தன் நடுங்கும் கைய் கொண்டு தன் கையை இறுக்கமாக பிடித்து கொண்டவர்…
“பொம்மா என்ன நடக்குது…? கமிஷனர் ஏன் இப்படி நம்ம கிட்ட பேசுறாங்க..” என்று குழந்தை போல் பேசும்.. கேள்விகள் கேட்கும் தன் தாயை எப்போதும் போல் தன் அன்னைக்கு நான் அன்னை என்ற விதமாக..
“ம்மா அவங்க கமிஷனர் தான்.. ஆனால் நம்மல மிரட்ட வரலலே… சாரி கேட்க தானே வந்து இருக்காங்க. இதுக்கு ஏன் நீங்க பயப்படுறிங்க….?” என்று தன் குழந்தையிடம் பேசுவது போல் தான் மந்ரா ஜீவிதாவிடம் பேசினாள்..
“ஆமா ஆமா…” என்று பலமாக தலையாட்டிய ஜீவிதா பின்..
“ஆமா ஏன் இவங்க இப்படி நம்ம கிட்ட பேசுறாங்க ….” என்றும் ஜீவிதா கேட்டார்…
பாவம் மந்ரா இதற்க்கு மட்டும் பதில் சொல்ல தெரியாது தன் தாயை பார்த்தாள்..
மனதில் …‘ என்னை பெத்த ஆத்தாவே இந்த வீட்டில் என்னை விட பெரியவங்க நீங்க தான்…. உங்க தாய் தெய்வம்.. இந்த மாநிலத்தின் முதல் அமைச்சரையே டேய் போட்டு பேசுறாங்க. பின் எல்லாமே மந்திரம் போல் எல்லாம் நடக்கிறது…
அதன் காரணம் என்ன என்று என் அத்தைக்கு அதாவது வாழ வந்தவங்களுக்கு கூட தெரியுது.. ஆனா பாருங்க இந்த வீட்டு பெண்ணான உங்களுக்கு தெரியல.. இதுல நம்ம குடும்பத்தில் முன்ன என்ன நடந்து இருந்தது என்று தெரிந்து நீங்க என் கிட்ட சொல்லனும்.. ஆனா பாருங்க என்னை சொல்ல சொல்றிங்க.. என்று நினைத்தவள் …. ‘ பின் என்ன என்று தெரியாம தானே நானே இருக்கேன்..
ஆனால் இத்தனை குழப்பத்திலும் நடந்த ஒரு நல்ல விசயம். அனுமான் சீதையை கண்டேன் என்பது போல்..
இங்கு வந்த உடன்…. கமிஷனர் “ மகேந்திரன் சார்… சுதாகரன் சார்… வினோத் சார்… சீப் மினிஸ்ட்டரின் தனிப்பட்ட கெஸ்ட் அவுஸில் சேப்பா இருக்காங்க….” என்றது தான்..