- நந்திதாவுக்கு இவன் என்னை செலக்ட் செய்ய வில்லையா….?அவி தான் செய்தானா….?
- என்று நினைத்துக் கொண்டு இருந்தாள் என்றால் அவிநாத்துக்கு அத்தனை பேர் நடுவில் தன்னை அடித்து கிருத்துகாவை கூட்டிக் கொண்டு போனது அவமானம் என்றால்…..தனக்கு மனைவியா வரப்போறவள் தன்னை விடுத்து இன்னொருவன் கைய் பிடித்து சென்று விட்டாளே என்று தான் நினைத்தான்.
- அவன் அருந்திய மது அவள் யார் கைய் பிடித்து சென்றாள் தன் அண்ணன் தானே….நம் அண்ணாவை தனக்கு தெரியாதா….? என்று எல்லாம் யோசிக்க விடாது செய்ய.
- அதற்க்கு தூபம் ஏற்றும் வகையில் நந்திதா “என்ன அவி உன் அண்ணா என்னை விட்டு அவளை இழுத்துக் கொண்டு போறார் நீயும் பார்த்துட்டு இருக்கியே….. என்ற பேச்சில் இன்னும் ஆத்திரம் உச்சிக்கு ஏற….
- பக்கத்து ஹாலில் உள்ள மதுவை திரும்ப நாடா….அவனுக்கு நடந்த அவமானம் தனக்கும் தானே நடந்தது என்று நந்திதாவும் அவனுக்கு கம்பெனி கொடுத்தாள்.
- விக்ரநாத் அழைத்த நண்பர்கள் அனைவரும் அவன் சென்ற உடனே சென்று விட்டனர். மீதம் இருந்தவர்கள் அவிநாத் பிரண்ட்ஸ், நந்திதா பிரண்ட்ஸ் தான். பின் அவர்களும் நடுயிரவு பன்னிரெண்டு மணி கடந்து விட்டதாலும்….இங்கு நிலமை சரியில்லை என்ற காரணத்தாலும் ஒவ்வொருவராக விடைப் பெற்று சென்று விட.
- பின் அங்கு இருந்தது அவிநாத்தும் நந்திதாவும் தான். அந்த பார்ட்டி ஏற்பாடு செய்தது ஒரு ஒட்டலில் . விக்ரநாத் தான் புக் செய்தான்.
- ஓட்டல் ஹால் புக் செய்யும் போதே...இரண்டு அறைகளும் சேர்த்து தான் புக் செய்திருந்தான். கிருத்திகா நந்திதாவுக்கு தேவை படுமே என்று. அதுவும் அந்த ஓட்டிலில் வேலை செய்யும் மனேஜர் விக்ரநாத்துக்கு தெரிந்தவர்.
- புக் செய்யும் போதே எதுக்கு என்று சொன்னவன் தங்கள் திருமண பத்திரிகையும் அவரிடம் தந்தார். ஆம் இரு திருமணமும் ஒரே பத்திரிக்கையாக தான் அச்சிட்டான்.
- நந்திதாவும் அவிநாத்தும் தல்லாடி கார் பார்க்கிங்குக்கு நடந்து போவதை பார்த்த அந்த ஓட்டலின் மேனஜர் அவிநாத்தை அடையாளம் கண்டு அவர் பின்னாடியே சென்றவர்.
- “சார் இந்த நிலையில் கார் ஓட்டிக் கொண்டு செல்வது சரியில்லை.அதுவும் திருமணம் அருகில் இருக்கும் இந்த சமயத்தில்.” என்று சொன்னவரிடம்.
- “அப்போ நீ கூட்டிட்டு போறியா….?” என்று தன் கையில் உள்ள சாவியைய் அவரிடம் நீட்ட.
- அவிநாத்துக்கு சுய நினைவு முற்றிலும் இல்லாது இருக்க சாவியைய் அவரிடம் நீட்டினான். அந்த சாவியை வாங்காது “சார் இங்கு நான் வேலை பார்க்கிறேன். இப்படி விட்டு போக முடியாது. வேண்டும் என்றால் ஒன்று செய்யுங்களே…..உங்க அண்ணா இரண்டு அறை முன் பதிவு செய்து இருக்கிறார்.
- இன்று இரவு தங்கி காலையில் செல்லுங்களே….” என்று சொன்னார். அவருக்கு அவிநாத் பக்கத்தில் இருக்கும் நந்திதா தான் அவனுக்கு வர போற மனைவி என்று நினைத்து தான் அப்படி கூறினார்.
- அதுவும் இரு அறை இருக்கே தனி தனியாக தானே தங்கி கொள்வார்கள் என்று நினைத்து தான் கூறினார். அவிநாத் அந்த போதையிலும் ஏதோ மறுத்து பேச வர.
- நந்திதா “ஆமாம் அவி அவர் சொல்வது தான் சரி. எனக்கு ரொம்ப டையடா இருக்கு…” என்று சொல்லி விட்டு அந்த மேனஜர் காட்டிய பக்கம் சென்றாள். பின் அவிநாத்தும் அவள் பின் செல்ல ….
- அவர்கள் செல்வதை பார்த்த மேனஜருக்கு வேறு ஒரு வேலை வந்து விட.. அதனை பார்க்க சென்று விட்டார். அவிநாத்தும் நந்திதாவும் அவர் சொன்னது போல தான் வேறு வேறு அறையில் தங்கினர்.
- நந்திதா இருந்த அறையில் ஏசி. சிறிது நேரத்துக்கு எல்லாம் பிரச்சனை செய்ய ஆராம்பிக்க….போதையிலும் தூக்க கலக்கத்திலும் இருந்த நந்திதா பக்கத்தில் அறையான அவிநாத் அறையைய் தட்ட.
- அது தாழ் போடாது இருந்ததால் இவள் கைய் வைத்த உடன் அது திறந்துக் கொண்டது. நந்திதாவும் தூக்க கலக்கத்தில் போய் அவிநாத் பக்கத்தில் படுத்துக் கொண்டாள்.
- மூன்று மணி வரை நிம்மதியான தூக்கத்தில் தான் இருந்தார்கள் இருவரும். விடியகாலையில் அவிநாத்துக்கு தாகம் எடுக்க தண்ணி குடிக்க தட்டு தடு மாறி லைட்டை போட்டு விட்டு தண்ணி குடித்தவன்.
- பின் தான் கட்டிலில் இந்த பக்கத்தில் இருந்த நந்திதாவை பார்த்தவன். தண்ணி தாகம் போய் வேறு தாகம் ஏற்பட்டது. கிருத்திகாவை காதல் சொன்ன நாள் முதல் இவள் தனக்கு செட்டாவாளா…? மாட்டாளா….? என்ற எண்ணத்திலேயே இருந்தவன்.
- பின் கிருத்திகாவின் அழகு அந்த எண்ணத்தை நிறுத்தியது என்றால்….நந்திதாவை தன் அண்ணாவுக்கு தான் செலக்ட் செய்த நாள் முதலாய் நந்திதாவின் ரசனையும் தன் ரசனையும் ஒத்து போகிறதே….என்று அவளுடம் பழக பழக நினைத்தவன். பெண் என்றால் இது போல் தான் இருக்க வேண்டும் என்று நினைத்தான்.
- ஆனால் அதற்க்கு மேல் அவன் நினைக்கவில்லை. இப்போது தன் பக்கத்தில் சேலை விலக அவள் அழகு தன் கண்ணுக்கு விருந்தாக….பார்த்தால் மட்டும் போதுமா…..?” என்ற நினைவோடு அவளை பார்க்க.
- அப்போது நந்திதாவும் அவிநாத்தை தான் பார்த்துக் கொண்டு இருந்தாள். கோட்டையும் சட்டையும் கழட்டி விட்ட கட்டு மஸ்தான அவன் உடல் அழகு அவளை அவ்வாறு பார்க்க தூண்டியது.
- அதுவும் முதல் முறை அவளை பெண் பார்க்க அண்ணா தம்பி இருவரும் வர. அவள் அவிநாத் தான் மாப்பிள்ளை என்று பால்கனி வழியே பார்த்து விட்டு மகிழ..
- கீழே சென்ற பின் தான் மாப்பிள்ளை விக்ரநாத் என்று தெரிந்தது. அவிநாத் கவர்ச்சியான அழகு என்றால் விக்ரநாத் கம்பீரமான அழகு அதனால் விக்ரநாத் தான் மாப்பிள்ளை என்றதும் எந்த எதிர்ப்பும் தெரிவிக்காது ஒத்துக் கொண்டாள்.
- அவள் ஒத்துக் கொண்டால் என்பதை விட அவள் பெற்றோர்கள் ஒத்து கொள்ள வைத்தனர். இவளை பெண் பார்த்து சென்று விட்ட பின் தான் நினைத்ததை தன் பெற்றோர்களிடம் சொல்ல.
- அதற்க்கு அவள் தந்தை “கெட்டுது போ...அவன் உன்னோடு இரண்டு வயது சிறியவன் . அதுவும் இல்லாது இப்போது நேராக அவர்கள் அவிநாத்துக்கு தான் பெண் பார்க்க போகிறார்கள் அதுவும் மூன்று வருட காதல்.
- அந்த வீட்டில் விக்ரநாத் தான் எல்லாம். சின்ன மகன் இன்னும் விளையாட்டு தனத்தோடு தான் சுற்றிக் கொண்டு இருக்கிறான். அதுவும் பெரியவன் தொழிலில் கெட்டி.” என்று விக்ரநாத் தான் உனக்கான மாப்பிள்ளை என்று அவள் மனதில் பதிய வைக்க.
- நந்திதாவும் விக்ரநாத்துக்கு என்ன குறை என்று ஒப்புக் கொண்டாள். ஆனால் விக்ரநாத் வீட்டுக்கு செல்ல செல்ல தான். விக்ரநாத்தின் முசுடு தன்மையும் அவிநாத்தின் கல கல பேச்சும் அவளுக்கு புரிய ஆராம்பித்தது.
- அதுவும் தன்னை பார்த்ததும் அவிநாத் கண்ணில் மின்னி மறையும் ஒளி...அதை பார்க்கவே அவன் வீட்டுக்கு செல்லும் போது வித வித மாக உடுத்திக் கொண்டு செல்வாள்.
- அதுக்கு ஏற்ற மாதிரி ஒவ்வொரு முறையும் தான் எதிர் பார்த்த பார்வை அவனிடம் கிடைக்க. பார்க்க கூடிய விக்ரநாத்தோ தன் அழகை பார்க்காது மட்டும் இல்லாது தன்னை பற்றி புகழ்ந்து ஒரு வார்த்தை கூட சொன்னது கிடையாது.
- அதற்க்கு பதிலாக என்ன ட்ரஸ் என்பது போல் தான் பார்த்து வைப்பான். இதோ இந்த பார்ட்டிக்கு என்று நான் பார்த்து பார்த்து ட்ரஸ் செய்தால் அதை பார்க்காது மட்டும் அல்லாது கிருத்திகாவை வெறித்து பார்த்தது அவள் கண் முன் வர.
- விக்ரநாத் தன்னை பார்ட்டியில் அவமதித்தது. மூன்று வருடமாக காதலித்த கிருத்திகாவின் மீது அவிநாத்துக்கு அந்த அளவுக்கு எல்லாம் காதல் கிடையாது. என்று தான் பழகி கொஞ்ச நாளில் அவளுக்கு தெரிந்து விட்டதே….
- அதுவும் இல்லாது தான் முதன் முதலில் மாப்பிள்ளை என்று நினைத்தவன் இவன் தான். இவனுடன் வாழ்ந்தால் தான் என் வாழ்க்கை சந்தோஷத்துடன் இருக்கும். என்று நினைத்துக் கொண்டே அவிநாத்தை பார்த்து கவர்ச்சியுடன் சிரிக்க.
- ஏற்கனவே மது போதையும் பாதி மாது போதையுலும் இருந்த அவிநாத் அவள் சிரிப்பில் முற்றிலும் தன்னை தொலைத்தவனாய் எங்கே தவறு நடந்து விடுமோ என்று நினைத்து கட்டிலை விட்டு எழ பார்க்க.
- அவன் கையைய் பிடித்து இழுக்க வலுவான ஆண்மகனான அவிநாத் நினைத்திருந்தால் அவள் மேல் விழாது சமாளித்து இருக்கலாம். ஆனால் விழ வேண்டும் என்று எண்ணம் உள்ளவன் எப்படி சாமளிப்பான்.
- தன் மேல் விழுந்த அவிநாத்தின் இதழ் மீது தன் இதழை பொறுத்த. ஆராம்பம் அவள் தொடங்கி வைத்தாலும் முடிவை அவன் தான் முடித்து வைத்தான்.