Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம், "கதையருவி" தளத்திற்கு தங்களை வரவேற்கிறோம்!

    இத்தளத்தில் எழுத எங்களை "vskathaiaruvi@gmail.com" என்ற மின்னஞ்சலில் தொடர்புக் கொள்ளவும். நன்றி!

Paniyum Pathikume....4

  • Thread Author
அத்தியாயம்….4

வசீகராவுக்கு அவள் வீட்டில் கடந்த மூன்று வருடங்களாகவே மாப்பிள்ளை பார்த்து கொண்டு தான் இருக்கிறார்கள்… இது வரை அவளுக்கு ஒரு ஐம்பது வரன்கள் பார்த்து இருப்பார்கள்

இதில் நாற்பது வரன் அவளின் பையோடேட்டாவில் இருக்கும் நிறம் என்ற இடத்தில் இடம் பெற்று இருக்கும் மாநிறம் என்றதிலேயே பாதி வரன் தட்டி கழிந்தது என்றால், மறு பாதி அவளுக்கு வரன் பார்க்க ஆரம்பிக்கும் போது பி.ஏ தமிழ் லிட்ரேச்சர் தான் முடித்து இருந்தாள்..

பின் தான் வீட்டில் இருந்தே எம்.ஏ தமிழ் லிட்ரேச்சர் முடித்தாள்…முதல் டிகிரி இரண்டாம் டிகிரி முடித்தும் எந்த வித்தியாசமும் இல்லாது தமிழில் எத்தனை படித்தும் என்ன உபயோகம் என்பது தான் மாப்பிள்ளை வீட்டவர்களின் எண்ணமாக இருந்தது போல்… அதனால் அவளின் அந்த படிப்பை வைத்து வேண்டாம் என்று மறுத்து விட..

மீதம் இருந்த அந்த பத்து வரன் அவளை பெண் பார்க்க வந்து இருக்கின்றார்கள் தான்… வீட்டிற்க்கு வந்து பேரம் பேசி…

ஆம் அதை பேரம் என்று தான் சொல்ல வேண்டும்…. முதல் பெண்ணை அத்தனை செலவு செய்து படிக்க வைத்து இருக்கிங்க…. கல்யாணம் செய்து கொடுக்கும் போது அந்த பெண் நல்லா சம்பாதித்தும் இருந்தது அழகுமே…. சின்ன பெண்ணை விட கூட..

அப்படி இருக்க இரண்டு பேருக்குமே ஒன்று போல தான் நகை போடுவீங்கலா…? சின்ன பெண்ணுக்கு இரு நூறு சவரன் போட்டா …. பெண் பரவாயில்லையா இருந்தா கூட எங்களுக்கு பரவாயில்லை என்று என் மகனுக்கு பெண் எடுத்து கொள்கிறோம்…” என்று சொன்னதில் இவளே.. வேண்டாம்… என்று விட்டாள்…

அதனால் இன்று ஜெயேந்திரன் அவளை பதினொன்னாவது மாப்பிள்ளையாக தான் அவளை பார்க்க வருவதால் கொஞ்சமும் பதட்டம் இல்லாது தான் தன்னை தயார் செய்து கொண்டாள்..

சுபத்ரா … “ இன்னும் கொஞ்சம் முகத்திற்க்கு பவுடர் போட்டுக்க வேண்டியது தானே.. கொஞ்சம் லிப்ஸ்ட்டிக் போட்டுக்க.” என்று சொன்னதை எல்லாம் அவள் காதில் வாங்கி கொள்ளவில்லை…

முடிவில் எப்போதும் போல் சுபத்ரா… “ ஆனாலும் உனக்கு இத்தனை அழுத்தம் கூடாது டி…” என்று சொல்லி விட்டு சென்று விட்டார்…

ஆனால் இங்கு வசீகராவுக்கு எதிர் பதமாக ஜெயேந்திரன் தனக்கு உண்டான உடையை பார்த்து பார்த்து ஒன்னொன்றாக போட்டு போட்டு பார்த்தவன் கடைசியில் முடிவாக ராம்ராஜ் வேட்டி சட்டையை தேர்தெடுத்தவன் அதையே அணிந்து கொண்டு கண்ணாடி முன்பு நின்று தன் சிகை அலங்காரத்தை இப்படியும் அப்படியுமாக மாற்றி மாற்றி சீவி கொண்டு பின் அனைத்தும் சலித்து போனவனாக கையில் இருந்த சீப்பை கீழே போட்டு விட்டு தன் கை கொண்டே அப்படியும் இப்படியுமாக ஒதுக்கி கொண்டவன்..

கண்ணாடியின் முன்பு நின்று கொண்டு அவனை பார்த்தவனுக்கு ஏனோ வெட்கமாக இருந்தது….

இத்தனை நேரம் இவன் அறை கதவு திறக்கும் என்று காத்து கொண்டு இருந்த இவனின் குடும்ப உறுப்பினர் இன்னும் இவன் வராது போகவும்…

“இன்னும் இவன் என்ன பண்றான்….” இவனின் பெரிய அக்கா வித்யா தன் அன்னையிடம் கேட்டாள்..

அதற்க்கு கெளசல்யா.. “தெரியல டி.. இரு நான் போய் பார்க்கிறேன்…ராகு காலம் பத்தரை பண்ணிரெண்டு… பத்து மணிக்குள் பெண் வீட்டில் இருப்போம் என்று அந்த தரகர் கிட்ட சொன்னேன்….ஆனால் இவன்.” என்று முனு முனுத்து கொண்டே மாடி ஏற போனவரை தடுத்து நிறுத்திய வித்யாவின் கணவன் ஸ்ரீதர்…

“நான் போய் மாப்பிள்ளையை கூடிட்டு வரேன் அத்தை…. “ என்று சொல்லி ஜெய் அறைக்கு ஸ்ரீதர் சென்ற போது தான் அவன் கண்ணாடி முன் நின்றுக் கொண்டு இருந்ததை பார்த்தது.

“மாப்பிள்ளை உங்க முகத்துல இப்போவே கல்யாண கலை வந்துட்டுச்சி….” என்று தோள் மீது கை போட்டு கொண்டு….

ஒரு வாடகை வேனை ஏற்பாடு செய்து இது எங்கள் குடும்பம் என்று பதினைந்து பேராக அதாவது அந்த குடும்பத்தில் பெண் ஆணுக்கு என்று அனைவருமே தலா ஒரு பெண் குழந்தைகளை பெற்று இருக்க. அனைவரையும் சேர்த்து பதினைந்து பேராக வசீகராவை பெண் பார்க்க அவள் வீட்டிற்க்கு வந்தனர்..

ஜெயேந்திரன் வீட்டிற்க்கு எதிர் பதமாக இங்கு பெண் மட்டும் தன்னை அலங்காரம் செய்யவில்லை…. பெண் வீடே அப்படியாக தான் இருந்தது..

மூத்த பெண்ணுக்கு மாப்பிள்ளை வீடாக கீர்த்தனாவை கிஷோர் பார்க்க வந்த போது வீட்டையே மாற்றி அமைத்தவர் தான் இந்த சுபத்ரா…

திரை சீலையில் இருந்து ஷோபா கவர்… கால் மிதியடி… என்று ஒரு வாரம் முன் இருந்தே வீட்டை வேலையாட்களை வைத்துக் கொண்டு ஒரு வாரம் தன் வேலையில் விடுப்பை சொல்லி விட்டு ஒட்டடை அடித்து என்று வீட்டை பளிச் என்று வைத்திருந்தார்..

ஏன் அந்த வீட்டில் இருக்கும் அனைத்து படுக்கை அறையில் இருந்த படுக்கையின் விரிப்பை கூட புதியதாக தான் அன்று போட்டு இருந்தார்,..

பார்த்திபன் கூட…. “ வரவங்க பெட் ரூமுக்கு எல்லாமா போக போறாங்க….?” என்று கூட அன்று கிண்டலாக கேட்டார்….

ஆனால் இன்று.. இது எதையும் செய்யாது எப்போதும் போல் தான் காலை உணவை சாப்பிட்டு முடித்து விட்டு குளித்து அவர்கள் வந்தால் வரவேற்க என்று கூடத்தில் அமர்ந்து இருந்தனர்….

வசீகராவின் தந்தை பார்த்திபன் கூட…. “ஸ்கீரினாபது மாத்தி இருந்து இருக்கலாம் சுபா….” என்று சொன்ன போது..

“அவங்களுக்கு எல்லாம் இதுவே அதிகம் தான்…” என்று விட்டார்..

அதில் பார்த்திபன்… “ என்ன சுபா பேச்சு… இது…” என்று அதட்டிய போது .. கீர்த்தனா..

“ப்பா அம்மாவஒ எதுக்கு திட்ருறிங்க…. இவர் என்னை பார்க்க வரும் போது அத்தனை செய்தாங்க என்றால் என் மாமியார் வீடு அத்தனை பெருசா இருந்தது.. கூட வீட்டு வேலைக்கு என்று இரண்டு வேலையாட்கள் வைத்து இருந்ததால் என் மாமியார் வீடு எப்போதுமே சுத்தமா தான் இருக்கும்.. அதனால அவங்க பார்வைக்கு நம்ம வீடு குறைவா தெரிஞ்சிட கூடாதுல என்று அப்படி செய்தாங்க…

ஆனா இப்போ வர மாப்பிள்ளை வீடு எப்படி இருக்கு என்று தான் நீங்க அனுப்பிய ஆளு வந்து சொன்னாருலேப்பா. அவங்களுக்கு நம்ம வீடு இப்படி சாதாரணமா இருப்பதே பெருசு தான்….” என்று விட்டாள்…

ஆம் ஒரு வகையில் கீர்த்தனா சொல்வது சரி தான்… பார்த்திபன் கீர்த்தனாவை பெண் பார்க்க அழைக்கும் முன்பே… மாப்பிள்ளை வீடு எப்படி இருக்கு என்று தெரிந்து கொள்ள வேண்டி… தனக்கு தெரிந்த ஒருவரை… ஏதோ ஒரு காரணம் சொல்லி மாப்பிள்ளை வீட்டிற்க்கு அனுப்பி வைத்து அவர் வந்து பரவாயில்லை நல்லா இருக்கு என்று சொன்ன பின்பு தான் கிஷோரை பெண் பார்க்க வர சொன்னது…

அதே போல் தான் இப்போதும் வசீகராவுக்கு வர இருக்கும் மாப்பிள்ளை வீட்டை பார்க்க அவரையே அனுப்பி வைத்தார்.

ஆனால் மாப்பிள்ளையான ஜெயேந்திரன் வீட்டிற்க்கு பார்த்து விட்டு வந்த அவர்… சொன்னது இது தான்.

“வீடு எல்லாம் பெருசா தான் இருக்கு பார்த்திபன்… அத்தனை பேர் இருக்க… அத்தனை பெரிய வீடா தான் இருந்து ஆகனும்… ஆனா வீடு புதுசா இல்ல பார்த்திபா.



விசாரித்ததில் இவங்கலே இருபது வருஷத்துக்கு முன்பு பழைய வீட்டை தான் வாங்கினாங்க போல… அதுல ஒரு சின்ன சின்ன மாற்றங்களை செய்து கீழேயும் மேலேயும் அறைகள் கட்டி என்று வீட்டை அப்படியே தான் வைத்து இருக்காங்க.. அதோட வீட்டில் இருக்கும் ஷோபா முதல் பழைய காலத்துதா தான் இருக்கு.” என்று விட்டார்.

அதனை தொட்டு தான் சுபத்ரா இத்தனை அலட்சியம் காட்டுவது.. பாவம் சுபத்ராவுக்கு தெரியாத ஒரு விசயம்… ஜெயேந்திரன் வீட்டில் இருக்கும் அனைத்து பர்னிச்சர்களுமே பழமையானது தான்..

ஆனால் அனைத்துமே தேக்கு…. அதற்க்கு அத்தனை மதிப்பு இப்போதுமே விற்றால் இருக்கிறது என்பது அவருக்கு தெரியவில்லை..

அதே போல் தன் வீட்டில் இருக்கும் பர்னிச்சர்களும்… கீர்த்தனா வீட்டில் இருக்கும் பர்னிச்சர்களும் பார்க்க தான் ஷோ… ஆனால் அதற்க்கு மதிப்பு இல்லை என்பதை..

இந்த காலத்தில் பள பளப்புக்கு தானே மதிப்பு அதிகம்.. அதனால் தான் இன்று வரும் மாப்பிள்ளை வீட்டவர்களின் மதிப்பு தெரியாது இருந்தார்..

அதே போல் பார்த்திபனுக்கும் தெரியவில்லை தான்… ஆனால் அவர் இதை வைத்து தன் சின்ன பெண்ணின் வாழ்க்கையில் ஏதாவது பிரச்சனை வந்து விட போகிறது என்று…

“இதோ பார் சுபா… இது நம்ம பெண் வாழ்க்கை பிரச்சனை… கொஞ்சம் பார்த்து நடந்துக்கோ புரியுதா…” என்று கேட்டவரின் சுபத்ரா..

“எனக்கும் தெரியும்ங்க…. அதோடு கீர்த்தனாவை பார்க்க வந்த போது நாம என்ன என்ன செய்தோம் என்று இவங்களுக்கு தெரிந்து இருக்காது தானே…எனக்குமே வசீ வாழ்க்கை மீது அக்கறை இருக்கு தான்…” என்று சொன்னவர் சொன்னது போலவே…

ஜெயேந்திரன் குடும்பத்தினரை சிரித்த முகத்துடன் தான் வர வேற்றனர்… அதில் எல்லாம் எந்த குறையும் வைக்கவில்லை…

அதே போல் அமர்ந்தும் தண்ணீர் கொடுத்து உபசரித்த பின்… பார்த்திபன் முறையாக தன் குடும்பத்தை ஜெயேந்திரனின் தந்தையிடம்….

“இவள் தான் என் மூத்த மகள்… கீர்த்தனா… ஐடியில் வேலை பார்த்துட்டு இருந்தா….” என்று அவர் சொல்லும் போதே சுபத்ரா இடையில்…

கீர்த்தனா வாங்கிய சம்பளத்தை குறிப்பிட்டு…. “ இரண்டு குழந்தைகளை பார்த்துக்க வேண்டி இத்தனை சம்பளத்தை விட்டு விட்டு வீட்டில் இருக்கா….” என்று சொல்லி முடித்தார்…

என்ன தான் இருந்தாலும் சுபத்ராவின் தன் பெருமை பேசும் தனம் அவரை விட்டு போகவில்லை என்று தான் சொல்ல வேண்டும்…

அதோடு வந்தவர்களின் அலங்காரமும்… சுபத்ராவுக்கு முழு திருப்தி இல்லாது போய் விட்டது… வந்த பெண் மணிகள் அனைவரும் பட்டு புடவை உடுத்திக் கொண்டு தான் வந்தனர்… அதே போல் நகைகளும் அணிந்து கொண்டு தான் வந்தனர்…

ஆனால் உடுத்திக் கொண்டு வந்த புடவை புதியது கிடையாது… அதே போல் தான் நகைகளும்… வீடும் வீட்டில் இருக்கும் பொருட்களும் தான் பழையது என்று நினைத்தால், இவங்க எல்லோர் நகைகளுமே பழையதா தான் இருக்கு….

ஆம் சுபத்ரா நினைத்தது போல் தான் பழையது தான்… புது டிசைன் வேண்டும் என்று நகைகளை மாத்தி மாத்தி தங்கள் வீட்டு பணத்தை சேதாரத்தில் சேதாரம் செய்ய மாட்டார்கள்…

நகையிலும் பணம் போட வேண்டும் என்று.. நினைத்து அதையுமே ஒரு முதலீடாக கணக்கு போட்டு வருடத்திற்க்கு இவ்வளவு தொகை என்று ஒதுக்கி வைப்பவர்கள் அதையுமே காய்னாக தான் வாங்கி வைப்பார்கள்..

இப்படி ஏன் என்று கேட்டால் கெளசல்யா சொல்வது….

“எல்லோருமே பெண்கள் வைத்து இருக்கிங்க. அப்போ அவங்களுக்கு ஏத்தது போல அப்போ வந்த டிசைன் தான் போட ஆசைப்படுவாங்க. காயின் இருந்தா.. அது ஈசி…. அதே போல்.. ஏதாவது சொத்து வாங்க கூட இந்த காயின் பயன் படும் என்று சொல்வார்.

அதற்க்கு என்று நகைகளே வாங்க மாட்டார்கள் என்பது கிடையாது.. வாங்குவார்கள் தான்.. அவர்களிடம் இருக்கிறது தான்.

இன்று பெண் பார்க்க தானே செல்கிறோம்…. இருக்கும் அந்த நகைகளை நிச்சயம் பெண் அழைப்பு . முகூர்த்தத்திற்க்கு அணிந்து கொள்ளலாம் என்று பெண் வீட்டவர்களை பற்றி தெரியாது வந்து விட்டனர்… சுபத்ரா வீட்டவர்களுக்கு இதுவுமே மாப்பிள்ளை வீட்டவர்களை பற்றி இன்னுமே இலப்பமாக நினைத்து விட்டது….

சுபத்ரா தன் பெரி பெண் பற்றி இப்படி கூறியதும்….பாவம் கெளசல்யா…. “ ஏன் மாமியார் கூட இல்லைங்கலா…” என்று குழந்தைகளை அவர்கள் பார்த்து கொள்ள மாட்டார்களா என்று நினைத்து கேட்டார்…

அதற்க்கு கீர்த்தனா…. “கல்யாணம் முடிந்ததுமே அவங்கலே எங்களை தனியா வைத்து விட்டாங்க.. அதுல எல்லாம் என் மாமியார் நாகரிகம் தான்… என்று சொன்னாள்..

இவன் திருமணம் முடிந்து அந்த ஒரு மாதத்தில் செய்த அலப்பறையில்… அவளின் மாமனார்..

“தோ பாருடி… ஒழுங்கு மரியாதையா அவங்களை தனியா வெச்சிடலாம்.. இல்லேன்னா உன் மருமகள் உன்னை தனக்கு என்று தனிப்பட்ட வேலைக்காரியா நினச்சிக்குவா….” என்று அந்த ஒரு மாத காலமாக பெட் காபி முதல் தன் மனைவி மருமகளுக்கு செய்வதை பார்த்து விட்டு சொல்ல.

அவருமே என்ன டா என்று இருந்தவர் கணவர் இப்படி சொல்லவும்…

“நம்ம இன்னொரு வீட்டிற்க்கு நீங்க தனியா போய் விடுங்க டா.. சின்ன சிறுசுங்க. இப்போ வாழ்க்கையை அனுபவித்தா தானே உண்டு… “ என்று கீர்த்தனா சொன்னது போல் நாகரிகமான பேச்சில் தான் இவர்களை தனியே வைத்தது…

இப்போது கீர்த்தனாவின் இந்த பேச்சில் கெளசல்யா தன் வீட்டவர்களை பார்த்தவட் கடைசியாக தன் மகன் முகத்தை பார்க்க… அவனோ கண் மூடி நான் பார்த்து கொள்வதாக சாடை காட்டினான்..

அதை ஜெயேந்திரன் வீட்டவர்கள் மட்டும் கிடையாது பார்த்திபனுமே பார்த்து விட்டதில் தன் வீட்டவர்களை ஒரு முறை முறைத்தவர்..

பின் மாற்றும் பொருட்டு… ஜெயேந்திரன் தந்தையான கோதண்ட ராமனிடம்… “ நீங்க உங்க வீட்டவங்களை அறிமுகம் படுத்தவில்லையே….” என்று கேட்டவரிடம்..

அவர்… சொன்னது இது தான்… “ உங்க பெண்ணை எங்களுக்கு பிடிச்சி… எங்க வீட்டிற்க்கு மருமகளா வந்தா… நீங்க எங்க சொந்தம்… சொந்தத்திற்க்குள் ஒருவர் பெயர் ஒருவர்… ஆபிஸ் இன்டெர்வ்யூ போல சொல்லி எல்லாம் அறிமுகம் தேவை இருக்காது..பேசி பழகும் போது தெரிந்தால் தான் அது சொந்தம்… அதனால நீங்க முதல்ல உங்க பெண்ணை வர சொல்லுங்க….” என்று சொல்லி விட்டார்..

இந்த பேச்சு பெண் வீட்டவர்கள் புரிந்து கொண்டது என்ன என்றால்.. நம்மை போல படிப்பு வேலை சம்பளம் என்று சொல்லி கொள்வது போல எதுவும் இல்லை… அதை மறைக்க என்னம்மா பேச்சு பாரு… என்று நினைத்து கொண்டனர்..

அதை கீர்த்தனா தன் தங்கை அறைக்கு சென்று… அவளை அழைத்து வரும் போது சொல்லவும் செய்ய.

இந்த பேச்சில் வசீகரா தன் அக்காவை ஒரு பார்வை பார்த்து விட்டு அவள் உடன் நடக்க. அவளின் அந்த பார்வையில் கீர்த்தனா தான்.

“என்ன டி…” என்று கேட்டது.

அதற்க்கு வசீகரா.. “ ஒன்றும் இல்லை..” என்று சொல்லி விட்டு கூட வர.

இப்போது கீர்த்தனா மேலும்… “ உனக்கு சரியான இடம் தான் இது… உன் படிப்பு வேலையும் சொல்லிக்கிறது போல இல்லை தானே..” என்று சொல்ல.

இப்போது வசீகராவிடம் ஒரு அழுத்தம் குடிக் கொண்டது.. அவளின் அந்த அழுத்தம் எல்லாம் மாப்பிள்ளையையும் மாப்பிள்ளை வீட்டவர்களையும் பார்க்குன் வரை தான்..

அவர்கள் தன்னை பார்த்த அந்த பார்வையில். அதுவும் மாப்பிள்ளையான ஜெயேந்திரன் தன்னை விழி அகலாது பார்த்த அந்த பார்வையில், வசீகரா பார்த்த…

அந்த பார்வையில் தன்னை பிடித்ததிற்க்கு உண்டான சாயலையும் மீறி… ஜெயேந்திரனின் பார்வையில் தெரிந்த அந்த ஆசை… மயக்கம்… இது வரை தன்னை பார்க்க வந்த மாப்பிள்ளையின் பார்வையில் அவள் இது வரை பார்த்தது கிடையாது..

அதிலேயே… பெண்ணவள் ஆணவனிடம் விழுந்து விட்டாள் என்று தான் சொல்ல வேண்டும்….
 
Well-known member
Joined
Jun 23, 2024
Messages
214
கல்யாணம் நல்ல படியாக முடியுற வரைக்கும் ஜெய் வீட்டை கீழாவே நினைச்சுக்கட்டும் 🤨🤨🤨🤨🤨

வசி ஜெய்யோட பார்வையே உன் மீதான காதலை சொல்லிடுச்சா 🥳🥳🥳🥳🥳🥳🥳🥳

கீர்த்தனா லட்ச லட்சமாக சம்பளம் வாங்குன பெருமை எல்லாம் சீக்கிரம் எருமையில் ஏறட்டும் 🤬🤬🤬🤬🤬
 
Last edited:
Well-known member
Joined
Jun 1, 2024
Messages
244
சுபத்ராவும் கீர்த்தனாவும் ரொம்ப ஓவரா பண்ணுதுங்க 😤😤😤😤 மாப்பிள்ளை வீட்டை ரொம்ப மட்டமா நினைக்குதுங்க..... 😬😬😬😬😬
அவங்க உங்களை மாதிரி ஆடம்பரமா ஷோ காட்டி இருந்தா தான் மதிப்பீங்களா 😡 உண்மை தெரிய வரும் போது ரெண்டு பேருக்கும் ஹார்ட் வெடிக்க போகுது....
 
Active member
Joined
Mar 18, 2025
Messages
51
Wow nice epi
Pls விஜிமா next epi late பண்ணாம போடுங்களன்.
இந்த்ரன் வீட்டுக்கு போய் இந்த சுபா கீர்த்தி மூஞ்சி போற போக்க பார்க்க ஆசையா இருக்கு
எப்படியும் சுபா அந்தர் பெல்டி அடிக்க போவது sure
 
Top