அத்தியாயம்…1
“சமயபுரத்தாளே மாரியம்மா
அம்மா சங்கரியே எங்கள் முன்னே வாருமம்மா ..
மல்லிகைச் சரம் தொடுத்து மாலையிட்டோம்…” என்ற பாடல் அந்த வீதியில் இருந்த அம்மன் கோயிலில் சத்தமாக ஒலித்து கொண்டு இருந்தது..
அது நம் கதையின் நாயகி இளந்தமிழின் செவியில் அந்த சத்தம் சிறிது அளவுக்கு கூட குறையாது விழுந்த வண்ணம் இருந்தது.. காரணம் கோயில் முட்டு சந்தில் இருந்தது என்றால், இவளிடம் வீடு முட்டு சந்து ஒட்டினது போல் இருக்கும் வீடு..
அந்த பாட்டு சத்தம் கேட்காத வண்ணம் தன் உடலை போர்த்தி கொண்டு இருந்த போர்வையை கொண்டே தன் செவியையும் அடைக்க பாடாத பாடு பட்டு கொண்டு இருந்தாள் இளந்தமிழ்..
அவளின் அந்த முயற்சி அனைத்தையும் முறியடித்து விட்டு அந்த பாடலின் வரிகள் அட்சுரம் பிறழாது அவளின் செவிகளில் ஒங்கி ஒலித்து கொண்டே இருந்தது..
அதில் வெறுத்து போய் .. “ கடவுளே..” என்று சொல்லிக் கொண்டு இத்தனை நேரம் ஏசியின் குளிர்ச்சிக்கு கத கதப்பை கொடுத்து கொண்டு இருந்த அந்த போர்வையை எடுத்து எரிந்தவளின் கண் முன் பிரசனம் ஆனார் அவளின் அன்னை தாமரை செல்வி..
தன் முன் நிற்கும் அவளின் அம்மா என்ன சொல்வாள் என்று தெரிந்தே மிக சாவகாசமாக படுக்கையில் இருந்து எழுந்து அமர்ந்து தன் எதிரில் மாட்டி இருந்த நேரம் காட்டியில் நேரத்தை, தன் அன்னை லைட் போட்டதால் திடிர் என்ற வெளிச்சத்தை வாங்கிய அவள் கண்கள் கூச்சத்தில் ஒற்றை கண் மூடி ஒற்றை கண் கொண்டு மட்டும் கூர்ந்து பார்த்தாள்..
இளா நேரம் காட்டியில் உற்று பார்க்கும் போதே இளாவின் அன்னை தாமரை செல்வி …
“டைம் எட்டு..” என்று கடுப்புடன் கூற..
“எட்டு தான் ஆகுதா..? என்று ஒரு கொட்டாவி விட்ட வாறு கேட்ட இளா..
“இதை சொல்லவாம்மா எல்லாம் வேலையும் விட்டு விட்டு வந்திங்க.. இன்னைக்கு தமிழ் வருடப்பிறப்பு எவ்வளவு வேலை இருக்கும்..” என்று கூறியவளின் தலையிலேயே டொங்க் என்று ஒரு கொட்டு வைத்தாள் தாமரை செல்வி..
கொட்டு விழுந்ததை தடவி விட்ட வாறே.. “நல்ல நாள் அதுவுமா அடிக்கிறிங்க..” என்று சொன்னவளிடம் தாமரை..
“அது தான்டி நானும் சொல்றேன் நானும்.. . நல்ல நாள் அதுவுமாவது நேரத்திற்க்கு எழுந்துக்க கூடாதா…?” என்று கடிந்து கொண்டவரின் வார்த்தை எல்லாம் புரம் தள்ளி விட்டு எப்போதும் போல..
அவளின் வேலைகளை மெல்ல ஆரம்பித்தாள்.. எழுந்ததும் உடலை அப்படி இப்படி என்று திருப்பி முதலில் உடலில் இருந்த பிடிப்பை எல்லாம் போக்கி கொண்டவளையே பார்த்து இருந்தால் நம் வேலை தான் கெடும் என்று இத்தனை வருட அனுபவத்தில் அறிந்து இருந்த தாமரை தன் வேலையை கவனிக்க சமையல் அறைப்பக்கம் சென்று விட்டாள்..
நம் இளா நல்ல நாளாவது..? கெட்ட நாளாவது..?” நானா வேலை செய்ய போகிறேன் என்ற ரீதியில் எப்போதும் போல அவள் வேலைகளை அன்று தொடங்கினாள்..
அவளின் காலை முதலில் தொடங்கும் வேலை தன் தாய் மாமன் வளர்க்கும் புறாவுக்கு இறை போடுவதில் தொடங்கும்..
இவர்கள் வசிப்பது முதல் தளம்.. இவர்கள் என்றால், இவளும் இவள் அன்னையும் மட்டுமே.. அவள் அப்பாவை கேட்டால் இல்லை.
இல்லை என்றால் உயிரோடு இல்லையா..? என்று கேட்டால், அதுவும் இல்லை.. அப்போ அவர் எங்கே…? என்பது தானே உங்களின் கேள்வி. சொல்கிறேன்.. கண்டிப்பாக அவரை பற்றி சொல்லாது இந்த கதை நகராது..
காரணம் நம் நாயகியின் போக்கு மாற்றத்தில் முக்கிய பங்கு அவர் எனும் போது கண்டிப்பாக சொல்லி தான் ஆக வேண்டும். ஆனால் இப்போது கிடையாது…
பல்லை கூட விலக்காது மொட்டை மாடிக்கு சென்றவள் பெரிய டப்பாவில் இருந்த கம்பை ஒரு சின்ன கிண்ணத்தில் கொட்டியவள்..
புறா அடைப்பட்டு இருந்த கூண்டுகளை திறந்து விட்டு.. கம்பை தரையில் சிறிது சிறிதாக இறைத்து விட்டு.. ஒரு சில புறாக்கள் சாப்பிடாது ஆட்டம் காட்டி கொண்டு இருந்த புறாவும் கம்பை சாப்பிட வேண்டி..
“போப்போ..” என்று அழைத்து அவற்றையும் உண்ண வைத்த பின் அவளின் கவனம் முட்டையை அடை காத்து கொண்டு இருந்த புறாக்களின் கூண்டை திறந்து அதன் முன் கம்பை வைத்து விட்டு பக்கத்தில் ஒரு சிறிய குவளையில் நீரையும் வைத்து விட்டு மூடியவளின் பார்வை இப்போது தான் அக்கம் பக்கம் சென்றது..
சென்றவளின் பார்வையில் விழுந்தான்.. இவள் வீட்டில் இருந்து மூன்று வீடு தள்ளி இருந்த வீட்டின் மொட்டை மாடியில் நின்று கொண்டு இருந்த வீரவேலோன்…
எப்போதும் போல் அவன் கண்ணில் பட்டதும்.. அந்த பக்கம் தன் பார்வையை செலுத்தாது இந்த பக்கம் மட்டுமே பார்த்து கொண்டு புறாவையும் ஒரு பார்வை பார்த்த வாறு.. அங்கு இருந்த ஒரு சிறிய அறையில் இருந்த தன் பேஸ்ட் பிரஷை கொண்டு பல் விலக்கி கொண்ட பின்…
புறாக்களை அதன் அதன் கூண்டில் அடைத்து விட்டு .. அந்த பக்கமே பார்க்காது கீழே தங்கள் போர்ஷனிக்குள் அடங்கியவளின் காதில் எப்போதும் போல் தன் அன்னையின் திட்டு விழுந்தது.. என்ன ஒன்று இப்போது பின் பாட்டு பாட அவரோடு அவர் அண்ணி.. சந்திரமதியும், சேர்ந்து கொண்டார்..
“எல்லாம் உங்க அண்ணன் செல்லம் தான்.. நம்மளை ஒன்னு சொல்ல விடுறாரா உங்க அண்ணன்.. இப்போ அவர் மகனும் சேர்ந்து கொண்டு அவளை ஒன்னும் சொல்ல விடுறது கிடையாது. ” என்று சொல்லி கொண்டு இருந்தவர்களின் பேச்சை எல்லாம் எப்போதும் போல் காதில் வாங்காது குளித்து முடித்து விட்டு… அவர்கள் முன் வந்து நின்றாள்..
அவள் மாமி இவ்வளவு நேரமும் திட்டிக் கொண்டு இருந்தவர் நம் இளாவை பார்த்ததும் .. அதுவும் தன்னை பார்த்ததும் சிரித்தவளின் அந்த முகத்தை பார்த்து எப்போதும் போல திட்ட மனது இல்லாது.. அவளின் ஈர கூந்தலை ஒரு துண்டை கொண்டு துடைத்து விட்ட வாறு..
“தலையாவது ஒழுங்கா துடைக்கிறியா..? உனக்கு தான் சைனஸ் இருக்குலே.. இப்படி ஈரத்தோடு இருந்தா தலை வலிக்காது..” என்று கடிந்து கொண்டே தலையை துவட்டி விட்டவருக்கு தோதாக தன் தலையை அவரிடம் காட்டிய வாறு அந்த சுகத்தை அனுபவித்து கொண்டு இருந்தாள்..
சந்திரா.. அவள் வரும் முன் திட்டியது பின்.. இப்போது பேசுவது எல்லாம் நடிப்பு கிடையாது.. சந்திரமதிக்கு தன் நாத்தனார் மகளை எப்போதும் பிடிக்கும்..
ஆனால் நாளை இவள் தன் மருமகள் எனும் போது இவளின் இந்த விட்டேத்தியான குணத்தில் நாளை தன் மகன் கஷ்டப்பட கூடாதே என்ற எண்ணத்தில் தான் தாமரை தன் மகளை குறை சொல்லும் போது இப்படி பேசுவது..
அப்போது கூட தாமரை பற்றி எல்லாம் குறை சொல்ல மாட்டார்.. தன் கணவனை தான் சொல்லுவார்.. அது ஒரு வகையில் சரி தான்..
தாமரையின் அண்ணன் கார்முகில் தங்கை என்றால் உயிர் என்று கூட சொல்லலாம்.. அவள் தன் வாழ்க்கையை தொலைத்து விட்டு பன்னிரெண்டு வயது பெண்ணை கையில் பிடித்து கொண்டு தாய் வீடு வந்த போது…
அதுவும் அவள் கண்ணில் ஜீவனே இல்லாது வந்து தன் முன் நின்றவளை பார்த்ததும் கார்முகிலுக்கு தங்கை கணவனை வெட்டி போடும் அளவுக்கு ஆத்திரம் வந்தது..
“வேண்டாம் அண்ணா விடுங்க.. இது அவருக்காக சொல்லலே.. உங்களுக்காக தான் சொல்றேன்.. எங்க இரண்டு பேருக்கும் உங்களை விட்டா இனி யார் இருக்கா.?” என்று கேட்டவளை அன்றில் இருந்து அரவணைத்து கொண்டார் கார்முகிலன்..
அதுவும் அவர் மருமகள் இளந்தமிழ் என்றால் அவ்வளவு தான்.. அவளை ஒருவர் ஒரு வார்த்தை சொல்ல விட மாட்டார்.. அது இன்று வரை தொடர்கிறது..
இளாவுக்குமே மாமா என்றால் உயிர்.. மாமா வடிவில் தான் அவள் அனைத்தையும் பார்க்கிறாள்.. சாமி பக்தி எல்லாம் கிடையாது.. ஆனால் தன் தாய் மாமன் மீது பக்தி உண்டு அவளுக்கு..
சந்திராவின் அக்கறையில் சிறிது நேரம் குளிர் காய்ந்தவள் அடுத்து தாய் மாமன் மடி சாய அவர்கள் இருக்கும் தரை தளத்திற்க்கு சென்றாள்..
அங்கு எப்போதும் போல் அவர் சாப்பிடாது மருமகளுக்காக காத்து இருக்க.. இருவரும் அமர்ந்து சாப்பிட்ட பின்.. மாமனோடு அந்த வீதியில் இருக்கும் கோயிலுக்கு வந்தாள்..
சாமீ பக்தி இல்லை என்றாலுமே, தன் மாமன் அழைத்தால் சென்று விடுவாள்.. இதோ அதன் படி கோயிலுக்கு படி ஏறியவள் முன் பிரசனம் ஆனான் காலையில் மொட்டை மாடியில் பார்த்த வீரவேலோன்.. நம் கதையின் நாயகன் அவன் குடும்பத்தோடு கோயிக்கு வந்து இருந்தான்..
எப்போதும் போல் அவன் பக்கம் பார்வையை செலுத்தாது, தன் உயிர் தோழி.. வீரவேலோனின் தங்கை நயனிகாவிடம் பேச ஆரம்பித்தாள்..
உயிர் தோழி என்றால் சிறு வயது முதலே நட்பு எல்லாம் கிடையாது.. வீரவேலோன் இங்கு இந்த வீட்டை வாங்கியதே மூன்று வருடத்திற்க்கு முன் தான்..
நயனிகா வேறு ஒரு கால்லூரியில் படித்து கொண்டு இருந்தாள்.. அது இங்கு இருந்து தூரம் என்பதால், அருகில் இருந்த இவள் பயிலும் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு மாணவியாக வந்து சேர்ந்தவள்..
இவள் முதலாம் ஆண்டு B.E EC கற்கும் ,கல்லூரியில் வந்து அதே பிரிவிலும் மூன்றாம் ஆண்டு மாணவியாக வந்து இணைந்தவள்..
ஒரே கல்லூரி.. ஒரே கல்லூரி பேருந்து… ஒரே வீதி.. என்று முதலில் பேச ஆரம்பித்த இவர்களின் பழக்கம்… இப்போது உற்ற தோழி என்ற எல்லையில் வந்து நிற்கிறது..
அனைத்தும் சரி தான்.. ஆனால் அவளின் அண்ணன்.. அது தான் பிரச்சனை.. பிரச்சனை என்று முழுவதும் அவன் மீதே பழியை தூக்கி போட இவள் தயாராக இல்லை..
காரணம் முதலில் இவளும் தான் அந்த வயதுக்கே உரிய ஆர்வத்துடன் மூன்று வருடத்திற்க்கு முன்பு வீரா அவன் வீட்டின் மொட்டை மாடியில் உடற்பயிற்ச்சி செய்து கொண்டு இருந்த போது, புறாவுக்கு உணவு போட வந்த இளா வீராவை பார்த்தது..
அதுவும் அவனின் அந்த ஹாம்ஸ்.. இன்றும் முதன் முதலில் அந்த சூர்ய வெளிச்சத்தில் வியர்வை வடிய அவள் பார்த்த அந்த தேகம் கண் முன் வந்து போகும்..
ஆனால் அப்போது அவள் ஆர்வத்துடன் வீராவை பார்க்கும் போது தன் வீட்டவர்களுக்கு தன்னை மாமன் மகன் சுகதீபனுக்கு கட்டி கொடுக்க நினைக்கிறார்கள்..
அதுவும் தன் மாமனுக்கு மிக பிடித்தம் என்று தெரியாது.. அது எப்போது தெரியும் என்றால், இளா வீராவை ஆர்வத்தோடு பார்த்து விட்டு தன் வீட்டுக்கு வந்த போது..
அவள் அம்மா அவள் கையில் ஏதோ ஒரு பாத்திரத்தை கொடுத்து.. “ இதை மாமீ கிட்ட கொடு இளா..” என்று சொன்னதுமே அடுத்த நிமிடம் படிக்கட்டில் அவள் பாதம் நடந்தது என்பதை விட ஒடியது என்று சொன்னால் சரியாக இருக்கும்..
இவள் ஒடுவதை பார்த்து தாமரை.. “ மாமீயோட அண்ணன் குடும்பம் வந்து இருக்காங்க.. கொஞ்சம் வாயை திறக்காது இதை கொடுத்து விட்டு ஒழுங்கா வா..” என்று சொல்லியே அவளை அனுப்பியது...
அதற்க்கும் இளா.. “ அவங்க பேசுவதை வைத்து தான்.. நான் வாயை மூடுவதிலும், திறப்பதிலும், இருக்கு..” என்று சொல்லி விட்டு தான் தன் மாமன் வீடான கீழ் தளத்திற்க்கு வந்தது..
கீழே மாமன் வீட்டிற்க்கு சென்ற போது ஹாலில் யாரும் இல்லாது வெறிசோடி இருந்தது.. இந்த சமயம் மாமாவும், அத்தானும் அவர்கள் சொந்தமாக வைத்து இருக்கும் ஹார்ட்வேர்ட் கடையில் இருப்பார்கள் என்று தெரியும்..
கூடவே மாமீ கணவரையும், மகனையும் அனுப்பி விட்டு இந்த சமயம் அவர் தன் அறையில் ஒய்வு எடுக்கும் நேரம் என்பதும் தெரியும்..
ஆனால் அம்மா மாமீ வீட்டு உறவு வந்து இருப்பதாக சொன்னாங்களே.. அவங்க இருந்தா வீடு இவ்வளவு அமைதியா இருக்காதே.. அதுவும் அவங்க மூன்று பெண்கள் தன்னை பார்க்காது என்பதை விட தன்னை நெட்டு எடுக்காது போக மாட்டார்களே என்று எண்ணம் இட்ட வாறே தான் அவள் கொண்டு வந்ததை சமையல் அறையில் வைத்து விட்டு தன் மாமியின் அறைக்கு சென்றது..
இது எப்போதும் நடக்கும் வழக்கம் தான்.. ஆனால் அன்று இளா நினைத்தது போல் குடும்பத்தோடு தான் சந்திரமதியின் அண்ணன் குடும்பம் வந்தது..
வந்து இறங்கிய உடன் சந்திராவின் அண்ணன்.. கார்முகிலனிடம்.. “ மூத்த பெண்ணுக்கு வயது ஆகி கொண்டு போகிறது..” என்ற அவர் பேச்சை ஆரம்பித்தார்..
கார்மிகிலேனோ.. “மாப்பிள்ளை பார்க்கட்டுமா மச்சான்..” என்று சொல்லி முடித்து வைக்க இவர் நினைக்க.. அவரோ அவரின் அந்த பேச்சையே ஆரம்ப புள்ளியாக வைத்து சண்டையை தொடங்கி விட்டார்..
“உரிமை பட்ட என் தங்கை மகன் ராஜா மாதிரி இருக்க.. நான் ஏன் வெளியில் மாப்பிள்ளை பார்க்க வேண்டும்..” என்று..
அடுத்து ஒன்றன் பின் ஒன்றாக பேச்சு வளர்ந்து சந்திரமதியின் அண்ணன் தன் மூன்று பெண்களை அழைத்து தன் வீட்டுக்கு சென்றவர் தன் மனைவியை மட்டும் கண்ணை காட்டி இங்கு விட்டு சென்று உள்ளார்..
தான் இங்கு தங்கியதற்க்கு உண்டான வேலையாக சந்திரமதியின் அண்ணி.. “ஏன் நீங்க சொல்லலாம் இல்லையா.. என் அண்ணன் மகள் தான் என் மருமகளாக வர வேண்டும் என்று..” என்று சொன்ன போது தான் சந்திரமதி..
“இல்ல அண்ணி அவரு இளா தான் இந்த வீட்டு மருமகள் என்று.. இது இப்போது எடுத்த முடிவு இல்ல இது.. ஆறு வருடம் முன் எடுத்த முடிவு..” என்று சந்திரமதி சொல்லும் போது தான் இளா அந்த அறைக்கு செல்ல முயன்றது..
முயன்றவளின் காதில் இந்த வார்த்தை விழுந்ததால், வந்தது தெரியாது மீண்டும் மாடிக்கு சென்று விட்டாள்.. மாடிக்கு என்றால் தன் வீட்டிற்க்கு கிடையாது. மொட்டை மாடிக்கு.. அவளுக்கு இந்த செய்தி புதியது.. மருமகள் என்ற அழைப்பு தான் அவள் மாமன் இவளை அழைப்பது.. அது உறவு முறை அழைப்பு மட்டும் தான் என்று அன்று வரை அவள் நினைத்து கொண்டு இருந்தது..
காரணம் அவள் முன் இது வரை இது போலான பேச்சுக்கள் நடந்தது கிடையாது.. கூட கல்யாணம் இதை பற்றி யோசிக்கும் வயதும் அவளுக்கு கிடையாது தானே..
இன்னும் கேட்டால் மூன்று வருடம் முன் கூட அவளுக்கு அப்போது தான் பதினெழு முடிந்து பதினெட்டு வயதின் ஆரம்பத்தில் இருந்தாள்..
அந்த வயது கூட திருமணத்தை பற்றி எல்லாம் யோசிக்கும் வயது இல்லை தான்.. அதுவும் போன வாரம் தான் ரிசல்ட் வந்து அவளின் அத்தான் சுகதீபன் பயின்ற கல்லூரியிலேயே சேர்க்க விண்ணப்பம் வாங்கி இருந்த நிலையில்..
அடுத்து என்ன படிப்பது என்ற யோசனை தான் அவளுக்கு இருந்து இருக்க வேண்டும்.. இப்போது அவள் மாமியின் அந்த பேச்சில், அதுவும் தன் மாமனுக்கு பிடித்தம் என்ற அந்த பிடித்தத்தை தனக்கு பிடித்தமாக்கும் முயற்சியில் தான் அவள் இன்று வரை முயன்று கொண்டு இருக்கிறாள்..
சுகதீபனும் நல்ல மாதிரி தான்.. இவளை விட ஐந்து வயது பெரியவன்.. இவள் இந்த வீட்டிற்க்கு வந்த போது அவன் பன்னிரெண்டாம் வகுப்பு படித்து கொண்டு இருந்தான்..
தான் வந்த அந்த நிலையில் தன்னை சுற்றி கவனிக்கும் நிலையில் கூட இல்லாதவளை அன்போடு கவனித்து கொண்டவன் அவன்.. அதனால் அவனை திருமணம் செய்து கொள்வதில் அவளுக்கு எந்த வித பிரச்சனையும் கிடையாது தான்..
ஆனால் இடை இடையே இந்த வீரவேலோன் பக்கம் ஏன் என் பார்வை போகிறது.. அது தான் அவளுக்கு புரியவில்லை.. ஒரு சமயம் தன் அப்பாவின் ஜூனும் தன்னுள் கலந்து இருப்பதால் இருக்குமோ.. என்று நினைத்ததும்..
“சீ நான் அவ்வளவு எல்லாம் மோசம் கிடையாது.. பார்க்க நல்லா மேன்லி லுக்கா இருக்கான்.. இது சும்மா சைட் தான்.. இதை எல்லாம் பெருசா எடுத்துக்க கூடாது என்று தன்னையே திட்டி தன்னையே திட்டம் செய்து கொண்டாள் தான்..
ஆனால் அவனை.. அவனை என்றால் வீரவேலோனை.. யார் திட்டம் செய்வது.. இப்போது எல்லாம் அவனின் பார்வை தன்னில் தான் இருக்கிறது என்பதனை இவள் பாராதே அவளாள் நன்கு உணர முடிகிறது…
வீரவேலோனை பார்த்த அன்று தான் … தன் மாமனுக்கு தன்னைமருமகளாக்கி கொள்ள ஆசை என்பது தெரிய வந்தது.. அதில் இருந்து அவள் அவனை பார்ப்பது கிடையாது தான்..
அதுவும் அவனின் தங்கை தனக்கு தோழியாக ஆனதில் இருந்து அவனை தவிர்க்கவே.. நயனி வீட்டிற்க்கு போகாது, அவளை தன் வீட்டிற்க்கு அழைத்து கொள்வாள்..
நயனி இவள் வட துருவம் என்றால், அவள் தென் துருவம் என்று சொல்லலாம்.. அனைத்திலும் இருவரும் வேறுப்பட்ட குணத்தை கொண்டவர்கள்..
எப்படி இருவருக்கும் நட்பு வந்தது.. அது இன்று வரை இளாவுக்கே தெரியாத போது, எப்போதும் சந்திரா மாமி கேட்கும்.. “எப்படி இரண்டு பேரும் பிரண்ஸ்ஸா இருக்கிங்க.. “ என்ற கேள்விக்கு இவள் என்ன என்று பதில் சொல்வாள்..அது அவளுக்கே அதிர்ச்சியாக இருக்கும் போது..
இளா சூர்ய உதயத்தை பார்த்ததே கிடையாது.. ஆனால் நயனி விடியற்காலையில் எழுந்து தண்ணீர் தெளித்து கோலம் போட்டு என்று ஆரம்பிக்கும் அவள் வேலையின் நீட்டம் மிக பெரியதாக இருக்கும்..
அதுவும் விடுமுறை என்றால் போதும்.. ஏதாவது உணவில் ஒரு புதிய ஐட்டத்தை செய்து தனக்கு கொண்டு வருவாள்.. சில சமயம் இளா..
“எனக்கு இது பிடிக்கும்..”என்று எப்போதாவது சொன்னதை நியாபகத்தில் வைத்து செய்து கொண்டு வருபவளை நினைக்கும் போது..தோன்றும் இவள் அண்ணனுக்காக இதை எல்லாம் செய்கிறாளா என்று.. பின் தான் தெரிந்தது இல்லை என்று.. அவளுக்கு பிடித்தவர்களுக்கு இதை எல்லாம் செய்வாள் என்று…
என்ன ஒன்று நயனி செய்து கொண்டு வரும் உணவு வகைகளை கீழே வீட்டிலேயே பெரும் பாலும் தீர்ந்து போய் விடும்.. நயனி வந்தாளே அவளின் மாமி..
“என்ன நயனி.. என்ன கொண்டு வந்து இருக்க..” என்று சொல்லி அவளிடம் இருப்பதை வாங்கி ருசி பார்க்கிறேன் என்று சாப்பிட ஆரம்பித்தால் போதும் பாதியை அவரே காலி செய்து விடுவார்..
மீதியை மாமன் தீபன் சாப்பிட்ட மிச்சம் தான் இவளுக்கு கிட்டும்.. அந்த அளவுக்கு ருசியாக இருக்கும் அவளின் கைப்பக்குவம்.. இவளே வியந்து போய் விடுவாள்.
“இத்தனை வருடம் சமைக்கும் என் அம்மா மாமி கூட இந்த அளவுக்கு ருசியாக சமைத்தது இல்லடீ…” என்று சொல்லி அம்மா மாமியிடம் கொட்டும் வாங்கிய அனுபவங்கள் அவளுக்கு இருக்கிறது..
இதோ இப்போது கூட கோயிலில் பிரசாதம் உபையம் வீரவேலோன் குடும்பதுடையது தான்.. இந்த அம்மன் கோயிலுக்கு ஆகும் செலவு முழுவதும் அந்த தெருவாசியே பார்த்து கொள்வார்கள்..
அதன் படி தமிழ் வருடத்தின் முதல் நாளான இன்றைய கைங்கரியத்தை நயன் குடும்பத்தார் ஏற்று கொண்டதில் இன்றைய செலவு முழுவதும் அவர்களுடையது தான்..
அந்த தெருவில் இருப்பவர்கள் மூக்கால் வாசி பேர் சொந்த வீடு வைத்து இருப்பவர்கள்.. ப்ளாட் போட்டு விற்ற போது வாங்கி கட்டி கொண்டு வந்தவர்கள் என்பதால் அனைவருமே நன்கு பரிச்சயம் தான்.
மாமா அத்தை என்று கூட உறவு முறை வைத்து அழைத்து கொள்வார்கள்..
இதோ நயனி தான் இன்றைய பிரசாதம் சமைத்தாள் என்று தெரிந்ததும். அதன் ருசியில் அவளை அனைவரும் பார்ராட்டி கொண்டு இருந்தார்கள்..
அதில் ஒருவர் காலை சர்க்கரை பொங்கல் தானே பிரசாதமா செய்வாங்க.. நீ என்ன புளிசாதம் செய்து இருக்க..” என்று கேட்டவருக்கு பதில் அளிக்காது நயனி திருட்டு தனமாக முழித்து கொண்டு இருப்பதிலேயே இளாவுக்கு தெரிந்து விட்டது.. நயனி இதை தனக்காக தான் செய்தாள் என்று..
பிரசாதம் சாமிக்கு படைத்த பின் அனைவருக்கும் விநியோகம் ஒருவர் செய்து கொண்டு இருந்தார்..
இளா தனக்கு உண்டானதை வாங்கி கொண்டு ஒரு மூளையில் அமர்ந்து சாப்பிட்டு கொண்டு இருக்கும் போது பக்கத்தில் வந்து அமர்ந்த நயனி தன் கையில் உள்ள பிரசாதத்தையும் அவளுக்கே கொடுத்து விட..
“நீ சாப்பிடலே..? என்று இளா கேட்டதற்க்கு நயனி..
“ வீட்டில் கொஞ்சம் இருக்கு இளா நீ சாப்பிடு..” என்று சொன்னாள்.. நயனி இளாவை விட இரண்டு வயது தான் பெரியவள்.. ஆனால் அவளின் செய்கைகள் அனைத்திலும் ஒரு முதிர்ச்சி தெரியும்..
இளாவின் மாமி சந்திரமதி கூட.. “உன்னை விட பெரியவள் தானே அக்கா என்று கூப்பிடு ..” என்று எத்தனையோ முறை சொல்லியும் ஏனோ அந்த அக்கா என்ற வார்த்தை கொண்டு இது வரை இளா நயனியை அழைத்தது கிடையாது..
நயனி கொடுத்ததை சாப்பிட்டு கொண்டு இருக்கும் போது நயனியின் பக்கத்தில் அவளின் அண்ணன் வீரவேலோன் வந்து அமர்ந்தான்..
அவன் அமர்ந்த உடன் தான் எழுந்தால் நயனி என்ன நினைப்பாளோ என்று தான் இளா அமைதியாக நயனி கொடுத்த பிரசாதத்தை சாப்பிட்டு கொண்டு இருந்தது..
ஆனால் அவன் கையில் இருந்த அந்த பிரசாதத்தை நயனி கையில் கொடுக்க.. நயனி அதை தான் சாப்பிட்டு கொண்டு இருந்தவற்றில் கொட்டும் முன் சட்டென்று எழுந்து விட்டவள்..
சாப்பிட்டு முடித்த அந்த தொன்னையை அங்கு இருந்த குப்பை கூடையில் போட்டு விட்டு தன் மாமன் பக்கம் வந்து நின்று கொண்டாள்..
தன் மாமன் அவர் கையில் இருந்த பிரசாதத்தை தனக்கு ஊட்டும் போது எந்த மறுப்பும் சொல்லாது உண்பவளையே பார்த்து கொண்டு இருந்த வீரவேலோனை பார்க்காமலேயே அவன் தன்னை தான் பார்க்கிறான் என்பதை உணர்ந்து மறந்தும் அவள் அவன் பக்கம் பார்வையை செலுத்தாது இருந்தாள்..
பார்க்கலாம்.. இது எத்தனை நாளுக்கு தாக்கு பிடிக்கும் என்று..