Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம், "கதையருவி" தளத்திற்கு தங்களை வரவேற்கிறோம்!

    இத்தளத்தில் எழுத எங்களை "vskathaiaruvi@gmail.com" என்ற மின்னஞ்சலில் தொடர்புக் கொள்ளவும். நன்றி!

Paniyum Pathikume....5

  • Thread Author
அத்தியாயம்…5

ஜெயேந்திரன் தன் வீட்டில் இருந்து கிளம்பும் போது மிக ஆவலாக தான் பெண்ணவள் வீட்டிற்க்கு வந்தான்.. ஆனால் வந்த இடத்தில் பெண்ணின் அன்னையும் அக்காவும் கூட்டிய அலப்பறையிலும், அந்த வீட்டின் மூத்த மாப்பிள்ளை கிஷோர்… என்னவோ அவனிடம் ஒரு சமாஸ்தானேமே தன் கீழ் உள்ளது போல அவன் பார்க்கும் அந்த பார்வையும்…

கூட பெண்ணின் அண்ணன் அந்த வீட்டின் ஒரே மகன் ஸ்ரீ காந்த்… தனக்கும் இந்த வீட்டிற்க்கும் சம்மந்தமே இல்லாதது போல்…

மாப்பிள்ளை வீட்டவர்களிடம் பேசவோ இல்லை குறைந்த பட்சம் தன் தங்கையை இவனுக்கு கொடுக்கலாமா…. வேண்டாமா…?

இவன் நல்லவனா….? கெட்டவனா…? என்று தன்னை பார்க்காது தன்னிடம் தன்னை பற்றியோ… தன் வேலையை பற்றியோ எதுவும் விசாரிக்காது தன் கை பேசியில் மூழ்கி இருப்பதை பார்த்தவனுக்கு என்ன டா என்று தான் நினைக்க தோன்றியது.

தான் எல்லாம். இன்னும் கேட்டால் தன் இரண்டு அக்காக்களில் மூத்த அக்காவுக்கு திருமணம் பேசும் போது நான் பன்னிரெண்டாம் வகுப்பு தான் படித்து கொண்டு இருந்தேன்… அப்போதே மாப்பிள்ளை பற்றி விசாரிக்க வேண்டும்.. தெரிந்து கொள்ள வேண்டும் எப்படி எல்லாம் அன்று மாப்பிள்ளையை ண்ஹான் ன் நோட்டம் விட்டது. பேசியது.

அது எல்லாம் இன்றுமே அவனின் மாமா தன்னிடம். “அன்னைக்கு உன் அக்காவை விட நீ தான் டா என்னை அதிகம் சைட் அடிச்சே…” என்று கிண்டலாக பேசுவார்…

ஆனால் இங்கு என்ன….? என்று யோசித்தவன்… கூடவே இது சரியாக வருமா….. ? பெண்ணை பிடித்து இருக்கு என்று தன் தன்மானத்தை விட்டு விட முடியாது தானே… கூட தன் குடும்பத்தையும் அது போலான ஒரு சூழ் நிலையில் தள்ளி விட முடியாது தானே..?

ஜெயேந்திரனுக்கு இந்த யோசனை எல்லாம் வந்தது தான்.. ஆனால் அவனின் அந்த யோசனை அனைத்துமே அவனின் வசீகரா அவள் அறையில் இருந்து வரும் வரை தான்…

வந்த பின்.. வந்து தன் எதிரில் நின்று அனைவரையும் பார்த்து பொதுவாக கை , கூப்பியவளின் அந்த கையை இப்போதே பிடித்து கொண்டு தன் வீட்டிற்க்கு அழைத்து சென்று விடலாம் என்பது போலான நினைப்பு தான் அவன் மனது முழுவதும் ஆக்கிரமித்து கொண்டது….

அதுவும் தான் பார்த்த தன் பார்வையை பார்த்த பெண்ணவள் ஒரு நிமிடம் அதிசயமாக ஒரு பார்வை தன்னை பார்த்து விட்டு பின் தலை குனிந்த விதத்தை பார்த்தவன் முடிவு செய்து விட்டான்..

தனக்கானவள் இவள் தான்… இவள் மட்டும் தான்… இவள் தானே நம்ம வீட்டிற்க்கு வர போகிறாள்… இவளின் அம்மா அக்காவா வர போகிறார்கள்… எப்போதாவது விசேஷம் என்றால் வர போகிறார்கள்…. இன்று போல் சமாளித்து கொள்ளலாம் என்று நினைத்து விட்டான்..

பாவம் நினைத்தவனுக்கு தெரியாது… இந்த தன் கல்யாணம் முடியும் வரையும் கூட ஒவ்வொன்றுக்கும் பெண் வீட்டவர்கள் எத்தனை அலப்பறையை கூட்ட போகிறார்கள் என்று….

இதோ அதன் முதல் கட்டமாகவே இப்போதே…. ஜெயேந்திரன் நேரிடையாகவே வந்ததில் இருந்து கொஞ்சம் பரவாயில்லையாக தங்களிடம் பேசிக் கொண்டு இருக்கும் பெண்ணின் தந்தையான பார்த்திபனிடம் தான்.

“எனக்கு உங்க பெண்ணை பிடித்து இருக்கு அங்கிள். உங்க பெண் கிட்டேயும் ஒரு வார்த்தை கேட்டுக்கோங்க பிடிச்சி இருக்குன்னா… அடுத்த முகூர்த்ததிலேயே கல்யாணத்தை வைத்து கொள்ளலாம் …” என்று தன் விருப்பதை அனைவரின் முன் நிலையிலும் வெளிப்படையாக சொல்லி விட்டான்..

அவனின் இந்த பேச்சில் பெண்ணவளின் முகம்… வெடுக்கென்று அவனை நிமிர்ந்து பார்த்தது… காரணம்.. இன்னுமே சவரன் வேறு எதை பத்தியும் பேசவில்லையே… என்று நினைத்து தான் பெண்ணவள் மாப்பிள்ளையை அப்படி பார்த்தது..

ஆனால் பெண்ணவளின் அந்த பார்வைக்கு பதிலாக ஜெயேந்திரன் தன் ஒற்றை புருவத்தை உயர்த்தி என்ன என்று தன்னை பார்த்து அந்த கேட்ட பாங்கில்… வசீகராவை ஆணவன் வசீயம் செய்து விட்டான் என்று தான் சொல்ல வேண்டும்….

பெண்ணவளுக்கு முதல் முறையாக ஒரு வெட்கம்….இது வரை அவள் உணராத ஒரு விசயம்.. யாரும் உணர வைக்காத ஒரு விசயத்தை ஜெயேந்திரன் பெண்ணவளுக்கு கொடுத்து கொண்டு இருந்தான்…

இங்கு இடைப்பட்ட நேரத்தில் எப்போது நிச்சயம் திருமணம் என்று பெரியோர்கள் பேசி முடித்து விட்டார்கள்..

இரு வீட்டு பெரியவர்களும் பேசிய விசயத்தின் சாராம்சம் இது தான்.. வசீகராவின் தந்தையான பார்த்திபன் ஜெயேந்திரனின் தந்தை கோதண்ட ராமனிடம்…

“முதலில் நிச்சயத்தை அடுத்த மாதம் வைத்து கொள்வோம்.. பின் இரண்டு மாதம் கழித்து திருமணத்தை வைத்து கொள்ளலாம்…” என்று கூறினார்…

அவர் சொன்னதற்க்கு கோதண்ட ராமன் அவருக்கு உடனே எல்லாம் பதில் சொல்லி விட வில்லை.. தன் மனைவியின் பக்கம் ஒரு பார்வை செலுத்தியவர்… மனைவியின் முகத்தில் அவர் என்ன கண்டாரோ…

மீண்டும் பார்த்திபனை பார்த்தவர்… “ எதுக்கு நிச்சயம் அதன் பின் கல்யாணம் என்று இரண்டு செலவு… கல்யாணத்திற்க்கு முதல் நாளே நிச்சயத்தை வைத்து கொள்ளலாம்…” என்று சொன்னார்..

இவர் பேச்சுக்கு பார்த்திபன் பதில் சொல்லும் முன்பே இடையில் சுபத்ரா….

“நிச்சயம் நாங்க எங்க செலவில் செய்து கொள்கிறோம்…” என்று சொன்னவர்.. பின் அதோடு விடாது..

“எங்க பெரிய பெண் கீர்த்தனாவுக்கு நிச்சயம் சம்மந்தி வீட்டில் தான் செய்தாங்க….கல்யாணம் தான் நாங்க செய்தோம்…” என்று சொன்னவர் கூடவே நிச்சயம் செய்த பெரிய ஒட்டலின் பெயரையும் சேர்த்து தான் சொல்லி முடித்தது..

இப்போது இவர்களின் இந்த பேச்சில் ஜெயேந்திரனின் பார்வையில் அவனின் அன்னை கெளசல்யா இடை புகுந்தார்…

“எங்க வீட்டில் தனியா எல்லாம் யாருக்கும் நிச்சயம் வைத்தது கிடையாங்க. அதோட கல்யாணம் மாப்பிள்ளை வீடான நாங்க தான் செய்வோம்…” என்று கூறினார்..

இந்த பேச்சில் மீண்டும் சுபத்ரா..” கல்யாணம் நீங்க செய்வீங்கலா… ஆனா நாங்க என் பெரிய பெண்ணுக்கு விஜயா மாஹாலில் கல்யாணம் செய்தோம்… அத்தனை வகை உணவு வகை …” என்று சொல்லி கொண்டு போனவரின் இந்த பேச்சை இப்போது மாப்பிள்ளையே நேரிடையாக..

அனைவரையும் பொதுவாக பார்த்து…. “ இப்போ நாம எங்க கல்யாணத்தை பத்தி பேசுறோம்… அதாவது உங்க இரண்டாம் பெண் கல்யாணத்தை பற்றி பேசுறோம்…” என்று விட…

இப்போது பார்த்திபன்… தன் மனைவியை பார்த்து… “ சுபா விடு… அவங்க வழக்கப்படி செய்யட்டும் விடு…” என்று விட..

பின் மீண்டும் நகையை பற்றிய பேச்சில் கெளசல்யா.. “ உங்க விருப்பம் தான்… “ என்று விட்டார்..

பின் ஒரு வழியாக வசீகராவின் கூந்தலில் ஜெயேந்திரன் வீட்டவர்கள் கொண்டு வந்த பூவை மாமியாராக கெளசல்யா வைத்து விட்டு அன்றே…. இந்த பெண் என் வீட்டின் கடைசி மருமகள் என்பதை உறுதி செய்து விட்டு,

பெண் வீட்டவர்கள் ஓட்டலில் இருந்து வாங்கி வந்த உணவை உண்டு முடித்து கையும் நனைத்த திருமணத்தை உறுதி செய்த பின் தான் ஜெயேந்திரன் வீட்டவர்கள் சென்றது..

ஜெயேந்திரன் வீட்டவர்களின் மனதில் பெண்ணவர்கள் வீட்டவர்கள் பந்தா பேர் வழி என்று பதிந்து போயினர் என்றால்,

பெண்ணவர்கள் வீட்டில் ஜெயேந்திரன் வீட்டவர்கள் சென்றதுமே. கீர்த்தனா.

“என்னம்மா இவங்க இப்படி கஞ்சத்தனமா இருக்காங்க… இவங்களை நம்பி நாம கல்யாணம் இவங்க செய்யட்டும் என்று விட்டா அப்புறம் சொந்தக்காரங்க மத்தியில் நம்ம மானம் தான் போகும்மா..

அதுவும் என் மாமியார் வீட்டவங்க மத்தியில் .. போன மாசம் என் ஓரகத்தி அண்ணனுக்கு கல்யாணம் நடந்தது.. நீங்களும் தான் வந்து பார்த்திங்க தானே.. எவ்வளவு கிராண்டா நடந்து முடிந்தது…

என் அம்மா வீடும்.. அப்படி செய்தா தானே எனக்கு என் ஓரவத்தி எதிரில் மரியாதையா இருக்கும்…” என்று ஒரு முழம் நீளத்திற்க்கு அவள் புலம்பி தள்ளி விட்டார்..

சுபத்ரா தான்.. “ நான் என்ன டி செய்வது…? நான் பேசி நாம செய்யலாம் என்று நினச்சா எங்கே உன் அப்பா… விடுறார்… எல்லாம் அவங்க விருப்பட்டி செய்யட்டும் என்று சொல்லிட்டாரு… எனக்குமே இவங்க என்னத்தை செய்ய போறாங்க என்று தான் இருக்கு…” என்று சொன்னார்…

இதில் இடையில் கீர்த்தனாவின் கணவன் கிஷோர் வேறு…. “கீத்து அவங்க என்ன செய்வாங்க… அவங்க வசதிக்கு ஏத்தது போல் தானே செய்ய முடியும்…. வேண்டும் என்றால் கல்யாணம் முடிந்து ஒரு ரிசப்ஷன் நம்ம வசதிக்கு ஏற்றது போல ஒரு பெரிய ஒட்டலில் வைத்து விடலாம்…” என்று அவன் ஒரு ஆலோசனை சொல்ல.

மாமியாரும் மாமனாரும் ஒரு சேர. “ ஆமாம் மாப்பிள்ளை நீங்க சொன்னது போல் தான் செய்யனும்…” என்றனர்… பின் ஏன் ஆமா சாமீ போட மாட்டங்க… பெரிய மாப்பிள்ளை கொஞ்சம் பெரிய இடம் ஆயிற்றே …. ஆமாம் சாமீ தான் போட்டு ஆகனும்..

ஆனால் இவர்களின் எந்த பேச்சும் வசீகராவின் மனம் மகிழ்ச்சியை ஒரு துளி அளவுக்கு கூட குறைக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும்..

ஆனால் ஒரு கவலை இருந்தது… இந்த திருமணம் இந்த இடையூறும் இல்லாது நடக்க வேண்டும் என்று..

அதற்க்கு வழி வகுக்கும் வழியாக இங்கு ஜெயேந்திரன் வீட்டில் அனைவரும் இருக்கும் போது கெளசல்யா தன் கணவனிடம்..

“தோ பாருங்க… அந்தம்மா பண்ற அலப்பறைக்கு என் வாய் வேறு நம நம என்று இருக்கு…. நம்ம பையனுக்கு பெண்ணை ரொம்பி பிடிச்சி இருக்கு என்று நான் எதுவும் பேசாது இருக்கேன்….” என்று அவர் சொல்லும் போதே ஜெயேந்திரம்..

“ம்மா அப்படி எல்லாம் அடங்கி போகனும் என்று எந்த அவசியமும் இல்ல… புரியுதுங்கலா… அந்த அம்மா ஏதாவது பேசினாங்கன்னா நீங்களும் பேசிடுங்க…” என்று சொன்னவனிடம் அவனின் அன்னை…

“அது தான் ஏன் என்று கேட்கிறேன்…முதல் கோணல் முற்றும் கோணல் என்று சொல்லுவாங்க….அந்த அம்மாவை பத்தி தான் நமக்கு தெரிஞ்சி போயிடுச்சிலே…. அந்த அம்மாவை விட்டு நாம கொஞ்சம் தூரம் நின்னுப்போம்…. வசீ அப்பா கொஞ்சம் பரவாயில்லையா இருக்கார்….

அதனால இந்த கல்யாண வேலை பத்தி எது என்றாலும் நம்ம அப்பா அவர் கிட்டேயே பேசட்டும்…. “ என்று விட,.

ஆனாலுமே ஜெயேந்திரன் விடாது… “ அப்போ அந்த அம்மா எது பேசினாலும் நீங்க அமைதியா தான் இருப்பிங்கலா….?” என்று கேட்டவன் பின்,..

“ஆனா என்னால அப்படி இருக்க முடியாதும்மா… எனக்கு அவங்க பெண்ணை பிடித்து இருக்கு தான்.. அதுக்கு என்று இந்த கூழ கும்பிடு எல்லாம் என்னால போட முடியாது…” என்று உறுதியாக சொன்னவனிடம் கெளசல்யா..

“நீ அப்படி இருந்தா நானே உன்னை அடிப்பேன் ஜெய்….நான் சொல்றது கல்யாணம் முடியும் வரை அமைதியா போ என்று தான்…. கல்யாணத்துக்கு பின்னுமே… அந்த அம்மா அப்படி பேசினா நீயும் பேசி விடு…” என்று சொல்ல.

இப்போது கோதண்ட ராமன்…. “ என்னம்மா பையனுக்கு இப்படி சொல்லி கொடுக்குற.. அவன் அப்படி அந்த அம்மாவை பேசி விட்டா…. மருமகள் மனசு தானே கஷ்டப்படும்… எந்த பெண்ணுக்கு தான் அம்மாவை பேசினா பிடிக்கும்…” என்று கேட்டவர்..

பின் அவரே.. “ அப்படி ஆரம்பமே இப்படி மனசு சங்கடத்துடன் இந்த பெண்ணை கட்டனுமா… என்னை பொறுத்த வரை… இந்த வீட்டிற்க்கு வரும் மருமகள் மனசு நிம்மதியோடு குடும்பம் நடத்தனும்….” என்று அவர் சொன்னது தான் தாமதம்.

ஜெயேந்திரன்… “ ப்பா இந்த இடம் வேண்டாம்… அந்த பேச்சு வேண்டாம் ப்பா…. நான் பார்த்துக்குறேன்…. நல்ல பெண் என்றால் அவளுமே புரிஞ்சிப்பா தான்… அவங்க அம்மா பேசுறதுக்கு தான் நான் பதில் பேசுறேன்… என்று…”

ஜெயேந்திரனின் இந்த பேச்சில் அவனுக்கு இந்த பெண்ணை எத்தனை பிடித்து இருக்கு என்று அந்த வீட்டில் இருப்பவர்கள் அனைவரும் புரிந்து கொண்டனர்….அதை வைத்து வீட்டில் இருப்பவர்கள் அவனை சிறு கலாட்டா செய்து என்று அன்றே ஜெயேந்திரன் வீட்டில் கல்யாணம் கலை கட்டி விட்டது…

பின் கெளசல்யா சொன்னது போல் தான்…. கல்யாணத்தை பற்றி எந்த வேலை என்றாலும், கோதண்ட ராமன்.. பார்த்திபனை அழைத்து பேசி விடுவார்..

அதன் படி பத்திரிக்கை அடிப்பது…. யார் யாருக்கு கொடுப்பது என்பது வரை பேசியவர்கள் இடையில் பெண்ணுக்கு புடவை நகைகள் எப்போது எடுப்பது….? எங்கு எடுப்பது….? என்பது பற்றி பேச்சு வர…

இதற்க்கு மட்டும் பார்த்திபன் உடனே பதில் அளிக்க முடியவில்லை…

“இது பொம்பளைங்க சமாச்சாரன் சார்.. அதனால வீட்டில் கேட்டு சொல்றேன்…” என்று சொன்னவர் சொன்னது போலவே அன்று வேலையில் இருந்து வந்த பின்..

தன் மனைவியிடம் சம்மந்தி போன் செய்து தன்னிடம் சொன்னதை கூறினார்… அப்போது கீர்த்தனாவும் அங்கு தான் இருந்தாள்…

பார்த்திபனின் பேச்சுக்கு கீர்த்தனா தான்… “ என்னப்பா அவங்க கேட்டது, எனக்கு எங்கு எடுத்தோம்மோ அங்கேயே நகையும், புடவையும் எடுத்துடலாம்… என்று சொல்ல வேண்டியது தானே….?” என்று சொன்னதற்க்கு…

சுபத்ரா….. “அவங்க ஒத்துக்கனுமே கீத்து….உனக்கு நகை எடுத்த கடை சேதாரம் அதிகம் போடுவாங்க… புடவை எடுத்த கடையும் காஸ்லி தான்… அது இவங்க பட்ஜெட்டுக்கு செட்டாகுமா…? என்று தெரியலையே….” என்று கேட்டதற்க்கு..

கீர்த்தனாவும்… “ ஆமாம் ஆமாம்.. ஆனா எனக்கு வாங்கின நகை கடை ஆகட்டும்.. புடவை கடை ஆகட்டும்.. லேட்டஸ்ட் டிசைன்… நல்லா யூனிக்கா இருக்கும்.. ஆனா காஸ்லி தான்.. கண்டிப்பா ஒத்துக்க மாட்டாங்க…” என்று சொன்னவள்..

பின் தன் பக்கத்தில் அமர்ந்திருந்த வசீகராவிடம்… “ அது என்ன வசீ.. உனக்கு எதுவுமே பெஸ்ட்டா அமைய மாட்டேங்குது….” என்று கேட்ட கேள்விக்கு வசீகரா எப்போதும் போல் பதில் அளிக்காது அக்காவை அழுத்தமாக ஒரு பார்வை மட்டும் பார்த்தவள்..

தன் அறைக்கு சென்று விட்டாள்… அவளின் பார்வை எப்போதும் போல் தான் இருந்தது… ஆனால் மனது… எப்போதும் போல் இல்லாது நிறைவுடம் இருந்தது… காரணம் இன்று காலை தான் ஜெயேந்திரன் முதல் முதலில் அவளை அழைத்து பேசினான்.

பேசியது காதல் வார்த்தைகள் கிடையாது தான்.. ஆனால் தன் மனம் உணர… தெரிய வேண்டி… தன் விருப்பத்திற்க்கு மதிப்பு கொடுத்து பேசிய அந்த பேச்சானது…. வாழ்க்கையில் அவளுக்கு ஒரு நம்பிக்கையை கொடுத்தது… அது தன் வாழ்க்கை இவரோடு நன்றாக இருக்கும் என்பதை விட… தன் தாய் வீட்டவர்களை போல் தன்னை கீழாக நினைக்க மாட்டார்கள் என்று….
 
Active member
Joined
May 12, 2025
Messages
23
♥️♥️♥️

வசீ பேமிலி - 😡😡😡😡இவங்களே முடிவ பண்ணிப்பாங்கனா எதுக்கு அவங்க கிட்ட கேட்கணும்? தங்களை விட யாரும் உயர்த்தி இல்லைனு என்ன அப்படி ஒரு எண்ணம்? அதுக்கு ஆப்படிக்கணும் ஜெய் நேரம் பார்த்து
 
Well-known member
Joined
Jun 23, 2024
Messages
214
கல்யாணம் முடியும் வரை தான் சுபா கீத்து ஆட்டம் எல்லாம் 🤣🤣🤣🤣🤣🤣 அதுக்கு பிறகு ஜெய் உங்களை எல்லாம் தலை தெறிக்க ஓட விடுவான் 😂😂😂😂😂

வசீ சந்தோஷமா கல்யாண கனவில் இருக்கா 🥳🥳🥳🥳🥳

வசிக்கு பிடிச்ச மாதிரி புடவை நகை வாங்குறதை பத்தி கேட்டானோ ☺️☺️☺️☺️☺️
 
Last edited:
Well-known member
Joined
Jun 1, 2024
Messages
244
இந்த கீர்த்தனா அவ வீட்டுக்கு போகவே மாட்டாளா 😬😬😬 இங்க உட்கார்ந்து நாட்டாமை பண்ணிட்டு இருக்கா .... 😤

நீங்க எல்லாம் பந்தா பார்ட்டிங்க..... அவங்க கஞ்சம் இல்ல பணத்தோட அருமை புரிஞ்சவங்க.....

ரொம்ப கீழா பேசுற இந்த வாய் அவங்க அருமை பெருமை எல்லாம் தெரிய வரப்போ எப்படி பேசும்ன்னு பார்க்கணும்....

ஜெய் சூப்பர் 🥰
 
Top