Chapter…13
கார்முகில்.. “தமிழ் தூங்குறாளா..? என்று கீழே இறங்கி வந்த தன் தங்கை தாமரையிடம் கேட்டார்..
“ஆமா அண்ணா..” என்று பதில் அளித்தவரின் குரலில் சுரத்து இல்லை..
“சாப்பிட்டாளா..?”
“ம் ஆச்சு அண்ணா…” கேட்டதற்க்கு மட்டும் பதில் கொடுத்து கொண்டு இருக்கும் அத்தையையே பார்த்திருந்த சுகன்..
“தமிழ் ஏதாவது சொன்னாளா அத்தை..?” என்ற மருமகனுக்குமே ..
“சொன்னா தான் தேவலையே.. ஏதோ பரி கொடுத்தது போல் இருக்கா.. சிரிச்ச முகமா.. குழந்தை போல் சுத்திட்டு இருந்தா.. நான் அமைதியா இருக்க மாட்டியா..? அடங்கி நிற்க மாட்டியா..? அந்த வாயில் ஏதாவது அரைக்காது இருக்க மாட்டாயா..? என்று.. நான் கேட்டு கேட்டே என் பொண்ணு மொத்தமா அடங்கி போய் உட்கார்ந்துட்டா… சொல்வாங்க ஆத்தா கண்ணு தான் பொல்லாத கண்ணு” சொல்லி அழுத தங்கையை தேற்ற முடியாது இருந்தார் கார்முகிலன்..
பின் ஏதோ யோசித்த வாறு சுகனிடம்.. “நீ நம்ம தமிழ் அந்த வீரா தம்பியை விரும்பி இருக்கும் என்று நினைக்கிற..?” என்ற தந்தையின் இந்த கேள்விக்கு சுகன் அதிர்ந்து போனவனாக தான் தந்தையை பார்த்தார்..
இவருமா..? என்பது போல்.. இவருமா என்றால் வேறு யார் என்பது தானே கேள்வி. நயனி தான்… தமிழ் இந்த வீட்டிற்க்கு மீண்டும் வந்த நாள் முதல் பேசியில் இதே பேச்சு தான்..
“எனக்கு என்னவோ சந்தேகமா இருக்கு.. அன்னைக்கு நாம பேசிட்டு இருந்ததை தமிழ் கேட்டு இருப்பாளோ என்று.”
உடனே சுகன்.. “சீ கேட்டு இருக்க மாட்டா..? அப்படி கேட்டு இருந்தா அவள் ரியாக்ஷனே வேறு மாதிரி தான் இருக்கும்.. நீ சொன்னது போல் அமைதியா எல்லாம் இப்படி செய்ய மாட்டாள். அவளுக்கு செய்யவும் தெரியாது. அந்த செகண்ட் சத்தம் வேணா போட்டு இருப்பா.” என்று அவ்வளவு நம்பிக்கையுடன் சொன்னான்..
“ரொம்ப தான் தெரியும்.” என்று நயனி சடைத்து கொண்ட போது.
“ஆமா சின்ன வயதில் இருந்து வளர்ந்த கூட பெண் தெரியும் தான்..” என்று விட்டான்..
“அப்போ அவளையே கல்யாணம் செய்து கொள்ள வேண்டியது தானே..? என்னை ஏன் லவ் பண்ண இப்போ பாரு.. எதுவும் பண்ண முடியாது சீ. நரக வேதனையா இருக்கு. உங்க வீட்டில் வேறு என்னை கல்யாணம் செய்து கொடுத்த பின் தான் தமிழை அனுப்புவேன் என்று சொல்லிட்டு போயிட்டாங்கா. அண்ணன் தினம் ஒரு ஜாதகத்தை எடுத்துட்டு தான் வீட்டிற்க்கு வருது.” என்று புலம்பி தள்ளி விட்டாள்..
அதோடு.. “தமிழ் என் அண்ணாவை லவ்வே பண்ணல என்று தான் நான் சொல்லுவேன்.. அன்னைக்கு நாம பேசியது கேட்டு இருப்பா.. அதுவும் நான் சொன்ன அந்த சிஸ்டர்.. அதுக்கு தான் தமிழ் என் அண்ணாவை அவசரமா கல்யாணம் செய்து கொண்டாள்..”
கிரிமினல்.. மற்ற கிரிமனல் செயல் பாடுகளை அறிந்து கொண்டவளாக உள்ளதை தான் கூறினாள். ஆனால் சுகன் தான் அதை நம்பாது..
“அப்போ உன் அண்ணன் எதுக்கு தமிழ் கழுத்தில் தாலி கட்டினான்.. சொல்.” என்ற சுகனின் இந்த கேள்விக்கு தான் நயனியிடம் பதில் இல்லை..
“அது தான் தெரியல சுகன்..” என்று கூறியவள்.. ஆனா ஒன்னு சொல்வேன்.. அவங்க இரண்டு பேரும் லவ் பண்ணல இதுல வேறு எதோ ஆணித்தரமா இருக்கு..” என்று அடித்து கூறினாள்.
அவள் பேச்சை அதற்க்கு மேல் கேட்க முடியாது தான் .. “அப்பா கூப்பிடுவது போல் இருக்கு..” என்று சொல்லி பேசியை அணைத்தவன்.. தந்தையிடம் செல்லாது..
மாடிக்கு அத்தை வீட்டிற்க்கு வந்தான். நயனி சொல்வது உண்மையாக இருக்குமா..? என்று.. வந்தவன் கண்கள் மூடி படுத்து கொண்டு இருந்த தமிழை தான் பார்த்தது.
கண் மூடி இருந்தாலுமே அவள் தூங்கவில்லை என்று தெரிந்து கொண்டவன்..
“தமிழ் எப்படி இருக்கு உடம்பு..?”
அதற்க்கு தமிழ். “ம்.. பரவாயில்லை” என்று மட்டும் கூறினாள்..
“அப்போ ஏன் படுத்துட்டே இருக்கே..?” என்ற இந்த கேள்விக்கு கண் மூடி பதில் கொடுத்தவள் கண் திறந்து அவனை பார்த்தாள்.. எதுவும் பேசவில்லை.. ஆனால் அந்த பார்வையில்
“தமிழ் ஏதாவது என் கிட்ட சொல்லனுமா..?” என்று கேட்டான்.. இந்த கேள்வியை அவன் சட்டென்று எல்லாம் கேட்டு விட வில்லை.. திக்கி திணறி தான் கேட்டான்.. ஏன் என்றால் அவள் பார்வை அப்படி இருந்தது.
“நீ என் கிட்ட ஏதாவது சொல்லனுமா என்ன.?” எறு தமிழ் சுகனை திருப்பி கேட்டாள்..
தமிழின் இந்த பார்வையும் புதிது.. இந்த பேச்சும் புதிது.. அந்த பார்வைக்கே அவளை பார்க்க முடியாது தடுமாறி நின்றவன். அவள் பேச்சுக்கு.
“ஒன்னும் இல்ல..” என்று அவசரகதியில் பதில் அளித்து விட்டு கீழே வந்தால், மீண்டும் தமிழின் பேச்சு.. அதுவும் தன் தந்தை நயனி சொன்னதே சொல்லவும்..
“ஏன் அப்பா எல்லோரும் அதையே சொல்றிங்க..?” என்று சுகன் கேட்டு விட்டான்,
உடனே சுகனின் தந்தை.. “எல்லோருமா.. யார்..? யார்..?” என்று கேட்ட பின் தான் தான் வாய் விட்டது தெரிந்து..
“இவ்வளவு நேரமும் எனக்கு நானே அது தான் பா கேட்டுட்டு இருந்தேன்..” என்று எதோ சமாளித்து விட்டான்..
கார்முகிலம் அப்போதும் விடாது.. “பார்த்தியா..? உனக்கே சந்தேகம்.. எனக்கும் அது இருக்குடா.. உன் அம்மா கூட அது தான் சொன்னா.. நம்ம எதிரில் வளர்ந்த பெண் அவள் கண்ணில் நான் எந்த திருட்டு தனமும் பார்க்கலை..” என்று தந்தை சொல்லும் போதே அவன் கண்கள் திருட்டு முழி முழித்தது..
‘அய்யோ நாமே நம்மை காட்டி கொடுத்து விடுவோம் போல் என்று கடையில் வேலை இருக்கு என்று சொல்லி அந்த இடத்தில் இருந்து அகன்று விட்டான்.
இப்படி அனைவரையும் குழப்பத்தில் ஆழ்த்திய வீரவேலோன் இளந்தமிழில் கல்யாண குழப்பமும் ஒரு தெளிவுக்கு வந்தது..சுகன் நயனியின் பேச்சின் மூலம்..
சுகனுக்கு நயனி சொன்ன போது தோன்றாத சந்தேகம் இப்போது வந்தது.. அதுவும் தமிழிடம் பேசும் போது அவனின் அந்த சந்தேகம் அதிகம் ஆகியது.
எப்போது பட பட என்று பேசுவள் இப்போது தன்னிடம் அது போல் பேசுவது இல்லை என்பது.. அவள் இப்போது இருக்கும் நிலை.. அப்படி எடுத்து கொண்டாலுமே தன் முகம் கூட பார்க்காது கேட்டதற்க்கு மட்டும் பதில் அளிப்பது..
வார்த்தைக்கு வார்த்தை தன்னை அத்தான் என்று அழைத்து பேசுபவள்.. இப்போது எல்லாம் அவள் வாயில் இருந்து ஒரு முறை கூட அந்த அழைப்பு இல்லாதது.. முக்கியமாக.. ஒரு சில முறை..
சாப்பாடு செய்வதில்.. எனக்கு எல்லாம் நயனி மாதிரி வராது எதிலுமே..” என்று கீழே வரும் போது தன் அம்மாவிடம் பேசுவது.. அதுவும் குறிப்பாக சுகனை ஒரு பார்வை பார்த்து கொண்டே.
தன் அம்மா அவர்கள் குடும்பத்தின் மீது இருந்த கோபத்தில்.. “அவள் பேச்சை எடுக்காதே தமிழ்.. இங்கு இருக்கும் போது உன் மீது எவ்வளவு பாசமா இருந்தா. உனக்கு அது பிடிக்கும் இது பிடிக்கும் என்று செய்து கொண்டு வந்தவள். அவள் வீட்டில் ஒரு நாள் முழுவதும் நீ சாப்பிடாது இருந்து இருக்க.. ஏன் என்று கண்டு கொண்டாளா..? அதுவும் அன்னைக்கு அவள் ஆத்தாக்காரி அந்த பேச்சு பேசுறா.. இவள் கை கட்டி நின்னுட்டு இருக்கா..யம்மா நான் நல்ல பெண் என்று நினைத்தேன் ஆனா..” என்று பெரும் மூச்சு விட்டு கொண்ட தன் தாயை சுகன் பாவம் போல பார்க்க.
ஆனால் தமிழோ.. “நீங்க நல்லவ என்று நினைக்க தானே அது எல்லாம் செய்தது அத்தை.” என்று விட்டாள் ..
அவளின் இந்த பேச்சுக்கு சுகன் அதிர்ச்சியோடு அவளை பார்க்க அதே அதிர்ச்சியோடு தான் அவளின் அத்தையும்..
“என்ன தமிழ் சொல்ற..?” என்று கேட்டதற்க்கு.
“இல்ல எல்லோரிடமும் நல்ல பெயர் எடுக்க தானே எல்லோரும் விரும்புவாங்க. நான் அதை சொன்னேன் அத்தை..” என்று சொன்னவள் சுகனையும் பார்த்து..
“ஆமா தானே..” என்றும் கேட்டாள்..
உடனே அவளின் அத்தை.. “அது போல் பேர் எடுக்க வேண்டாம்.. உன்னை போல நடிப்பு இல்லாம்மா இருந்தாலே போதும் ..” என்ற இந்த வார்த்தை தமிழை தாக்கியது.. இப்போது எல்லாம் நினைத்து கொண்டு இருக்கும்.. நாம் அன்று அவர்கள் பேச்சை கேட்டதும் அவர்களை விட்டு விலகி இருக்க வேண்டும்.. இல்லை ..
பெரியவர்களிடம் சொல்லி இருக்க வேண்டும்.. இரண்டும் இல்லாது அன்று தான் செய்தது.. என் மனது ஆசையை இப்படியாக நிறைவேற்றி கொண்டு விட்டேனோ.. என்று கணவன் வீட்டில் இருந்து இங்கு வந்த இந்த ஒரு மாத காலத்தில் எத்தனை முறை நினைத்து கொண்டு இருப்பாள் என்று அவளுக்கே தெரியாது..
அதுவும் தன்னை பற்றி அத்தை பேசியதில் முகம் மாறியவளாக. “நான் மேல போறேன் அத்தை தூக்கம் வருது.” என்று சொல்லவும் அவளின் அத்தை.
“நான் ஒரு முண்டம்.. உடம்பு சரியில்லாத பெண்ண உட்கார வைத்து பேசி கொண்டு இருக்கிறேன்.. நீ போய் தூங்குமா..” என்று சொல்லி அனுப்பி வைத்த பாக்யவதி.
தன் மகனிடம்..”எப்படி இருந்த பெண்ணை எப்படி ஆக்கி இருக்காங்க பாருடா. அவங்களுக்கும் தானே ஒரு பெண் இருக்கு..” என்று சொன்னதோடு சும்மா இராது.
“உன் அத்தையும் உன் அப்பாவும் அந்த நயனி பெண்ணுக்கு கல்யாணம் செய்து கொடுத்து விட்டால், தமிழை அங்கு திரும்ப அனுப்ப நினைக்கிறாங்க.. ஆனா அதுல எனக்கு துளி கூட விருப்பம் இல்லை..” என்ற அம்மாவை சுகன் ஏன் என்பது போல் பார்த்தான்..
“அந்த பவானி அம்மா பேச்சு எல்லாம் சரியில்ல சுகன்.. பேசாம நீயே தமிழை கட்டிக்க. முதல் பேச்சு அது தானே.. ஏதோ சின்ன பெண்.. தெரியாம அந்த பையனை விரும்பிட்டா.. விரும்பினாளோ இல்ல. அந்த பையன் ஏதாவது சொல்லி மிரட்டினனா..? என்பதும் எனக்கு சந்தேகம் தான்டா.
அதோடு அங்கு இருந்த நாளா நம்ம தமிழ் அந்த பொம்பளை அறையில் தான் தங்கிட்டு இருந்து இருக்கா.” அது தான் முக்கியம் போல் அம்மா பேசியதில் பயந்து போய் விட்டான் சுகன்…
“அம்மா.” என்று அதிர்ந்தவனை பார்த்த அவன் அம்மா.
“நான் பார்த்து வளர்ந்த பெண்டா. இந்த கல்யாணத்தில் வேறு ஏதோ இருக்கு என்று எனக்கு தோனுது.” என்று அன்னையும் அதையே சொல் அனைத்தும் சேர்ந்து பார்த்து யோசித்தவனுக்கு.
“அப்போ அன்னைக்கு நயனியும் நானும் பேசிட்டு இருந்ததை கேட்டு இருப்பாளோ…?” என்ற சந்தேகம் அவனுக்குமே வந்து விட்டது..
அதனால் நயனியிடம் பேச விரும்பினாம்.. வெளியில் தனித்து இருவம் சந்தித்து பேசியது கிடையாது.. அது தான் வீட்டோடு தமிழ் இருந்தாள்.. அவளை பார்க்கும் சாக்கில் அவள் வீட்டிற்க்கே வந்து பார்ப்பாள்.. அவளை வைத்து கொண்டே பொதுவாக பேச்சுக்கள் கூட பேசிக் கொள்வார்கள்.. ஆனால் அதற்க்கு வேறு ஒரு அர்த்தமும் இருக்கும் என்பது அவர்கள் இருவருக்குமே தெரிந்த ரகசியம்..
இப்போது அந்த ரகசியம் தமிழுக்கும் தெரிந்து விட்டது தான்.. தனித்து இருக்கும் சமயம் எல்லாம் இதை எல்லாம் நினைத்து பார்த்து தன் அவள் மனது அவ்வளவு வேதனை அடைந்தது.. தன்னை வைத்து கொண்டே என்ன என்ன பேசி இருக்கிறார்கள்.. என்னை சின்ன பெண் என்று நினைத்து விட்டார்களா.? இல்லை எதுவும் எனக்கு தெரியாது முட்டாள் என்று நினைத்து கொண்டார்களா.? என்று தான் கோபம்..
சுகனுக்கு இப்போதைய பிரச்சனை நயனியிடம் பேச வேண்டும் எப்படி என்று யோசித்தவன்.. நயனி பக்கத்து வீட்டு பையன் சிறு வயதில் ஒன்றாக விளையாடிய நட்பு தான்..
இப்போது வளர்ந்த பின் அவர் அவர் வேலை என்று பார்க்க சரியாக இருப்பதால் வெளியில் பார்த்தால் மட்டும் சிரிக்கும் அளவில் இருக்க இன்று வலிய அந்த நண்பன் வீட்டிற்க்கு காலையிலேயே சென்று விட்டான்..
சுகனை பார்த்த அவன் நண்பன்.. “என்ன டா அதிசயம்..?” என்று கேட்டதற்க்கு..
“அம்மா அப்பா வீட்டில் இல்ல தானே..?” என்று கேட்க..
“ஆமா அக்கா வீட்டிற்க்கு போய் இருக்காங்க.. என்ன டா என்ன விசயம்..?” ஏதோ விசயம் இருக்கு என்று கேட்க.
“அது பக்கத்து வீட்டில் ஒரு பெண்..” என்று சுகன் சொல்லும் போதே..
“நயனியா.?” என்று கேட்டு தான் வயது பையன் என்று நிருபித்தான்..
சுகம் கோபத்துடன்.. “அது என் ஆளுடா..” என்றதும் தான் சிறிது யோசித்த அந்த நண்பன்..
“அந்த பெண் உனக்கு வேறு முறை ஆகுதேடா..” என்று சொல்ல. அட இங்குமா என்பது போல் தான் பார்த்தான் சுகன்..
பின்..”அது எல்லாம் நான் பார்த்து கொள்கிறேன்.. மொட்டை மாடி கேட் சாவீ மட்டும் கொடுத்து விட்டு போ..” என்று சொல்லி சாவீயை கேட்டு வாங்கி கொண்டான்ன்..
கொடுக்கும் போது.. “ ஏழரையை கூட்டிடாதே.. பார்த்துடா.” என்று சொல்லி விட்டு தான் சாவீயை சுகனிடம் கொடுத்தான்..
நயனியிடம். அவள் அண்ணன் வீட்டில் இல்லாத நேரமாக பார்த்து அவளின் வீட்டு மொட்டை மாடிக்கு வர சொன்னான்.. சுகனின் நண்பன் வீடும் நயனியின் வீடும் பக்கம் பக்கம் இரு வீட்டின் மொட்டை மாடிக்கும் ஒரே சுவர் தான்.. அதுவும் சின்ன அளவில் தான் இருக்கும்.. அதனால் தான் நண்பனின் மொட்டை மாடியை சுகன் தேர்ந்தெடுத்தது..
நயனியும் அண்ணன் அந்த சமயம் வீட்டில் இருக்க மாட்டான்.. அம்மா மதிய வேளை மாத்திரை போட்டு படுத்து கொள்வார்கள் என்று திட்டம் இட்டு இருவரும் மொட்டை மாடிக்கு ஒரே நேரத்தில் சந்திக்க திட்டம் தீட்டினர்..
பாவம் அவர்களுக்கு தெரியாத ஒரு விசயம்.. மதியம் சாப்பிட்டு விட்டு தன் ட்ராவல்ஸ்க்கு சென்றவனுக்கு அன்று ஏனோ மனது ஒரு நிலையில் இல்லாது இருக்க திரும்ப வீட்டிற்க்கு வந்து விட்டான்..
அதுவும் தன் ட்ராவல்ஸ் கார் என்று கஸ்டமரை பிக்கப் செய்ய தன் வீட்டு வழியாக செல்ல. அதில் அமர்ந்தவன்.. ஒட்டுனரிடம்.. “வீட்டு அருகில் விட்டு விடு.” என்று சொல்லி கண்ணை மூடிக் கொண்டான்.
இன்று அவன் வண்டி எடுக்கும் நிலையில் கூட இல்லை.. புதிய பழைய நினைவுகள் வந்து அவன் மனதை போட்டு வாட்டி எடுத்து விட்டது.
ஒட்டுனர்.. “சார் வீடு வந்து விட்டது..” என்று சொல்லவும் தான் கண் திறந்து பார்த்தது.. அப்போது சுகன் தன் வீட்டு பக்கத்து வீட்டின் உள் நுழைவதை பார்த்து கொண்டே காரில் இறந்து இறங்கியவன் தன் வீட்டிற்க்குள் சென்றவன் யாரையும் தொந்திரவு செய்யாது மொட்டை மாடியில் இருக்கும் ஒரு சிறிய அறைக்குள் புகுந்தவன் அங்கு இருந்த இரும்பு கட்டில் மீது திரும்பவும் கண்ணை மூடி படுத்து கொண்டான்..
பாவம் சுகனை .. வீரா பார்த்தது போல் சுகன் வீராவை பார்க்கவில்லை.. அதனால் நயனிக்கு தன் பேசியில் அழைத்து நான் வந்து விட்டேன் என்று சொல்ல.. அவளுமே தன் அண்ணன் இருப்பது தெரியாது மொட்டை மாடிக்கு வந்து சேர்ந்தாள்..