அத்தியாயம்….9
வசீகராவுக்கு ஜெயேந்திரனின் உண்மையான பொருளாதார நிலை தெரியாது அல்லவா….? சம்பளம் ஐம்பது ஆயிரம்.. இதில் கூட்டு குடும்பமாக பெரிய குடும்பம்.. மற்றவர்கள் என்ன வேலை எத்தனை சம்பளம் என்ற எந்த விவரங்கள் கூட பெண்ணவளுக்கு தெரியாது…
அதுவும் தன் வருங்கால மாமியார் அனைத்திற்க்கும் பார்த்து பார்த்து செலவு செய்வதை பார்த்தால், கண்டிப்பாக கை இருப்பு அந்த அளவுக்கு அதிகமாக இருக்காது போல…
இதில் மூத்த அக்காவின் பெண்… மூன்று மாதம் முன் தான் பெரிய மனுஷி ஆனாள்… விழா நம்ம திருமணம் தொட்டு மூன்று மாதம் தள்ளி வைத்து இருக்காங்க…. இன்று பேசும் போது பேச்சு வாக்கில் ஜெயேந்திரன் பேச்சு வேறு பெண்ணவளுக்கு நியாயபகத்தில் வந்தது.. விழா வைக்கும் போது இவர்கள் வரிசையில் நகை வைக்கனும்… தாய் மாம என்று இவரும் செய்யனும்.… அதற்க்கு செலவு ஆகும் .. பணம் வேண்டும்… இப்போது தங்களின் திருமணம் செலவு என்று இருக்கும் சமயம் வேறு.. ஆசை என்று சொல்லி அவர்களுக்கு அதிக செலவு வைத்து விட்டோமோ… என்று நினைத்த நொடி பெண்ணவள் சட்டென்று எதை பற்றியும் யோசிக்காது ஜெயேந்திரனை கை பேசியில் அழைத்து விட்டாள்…
ஜெயேந்திரன் அப்போது தான் தன் வீடு வந்து அன்னை கொடுத்த டீயை குடித்து கொண்டே தன் அண்ணிகள் செய்யும் கிண்டலுக்கு அவனும் சலிக்காது பதில் பேசிக் கொண்டு இருந்த சமயம் தான் பெண்ணவள் அவனை அழைத்தது…
அதை பார்த்த அவனின் பெரிய அண்ணி.. இன்னும் கிண்டல் செய்ய.. அவனும் சிரித்து கொண்டே தன்னவளின் அழைப்பை ஏற்றதும்…
வசீகரா… கட கட என்று தான் நினைத்ததை எல்லாம் சொல்லி விட்டு.
“சாரிங்க சாரிங்க… எனக்கு இந்த யோசனையே இல்ல… வித்யா அண்ணி பொண்ணு பங்ஷனுக்கு தாய் மாமனா நாம ஏதாவது செய்யனுமே….” என்று சொன்னவளின் குரலில் அத்தனை பரிதவிப்பு…
தன்னவள் பேச பேச… ஜெயேந்திரனின் முகத்தில் இன்னுமே மென்னகையின் சாயல்…. பின்… “ நீ இது எல்லாம் யோசிக்காதே சீரா… நான் பார்த்துக்குறேன்…” என்று சொன்னவனிடம்..
மீண்டுமே … “ கடன் வாங்கினிங்கலா….?” என்று திக்கி திக்கி மெல்ல கேட்டாள்…
“கடன் வாங்கல.. இனி வாங்கவும் மாட்டேன் புரியுதா…?” என்று சொல்லி அவளை பணத்தை பற்றி யோசித்து பயப்படாதே என்று ஒரு வழியாக அவளை அமைதி படுத்தி விட்டு தான் ஜெயேந்திரன் கை பேசியை வைத்தது..
ஜெயேந்திரன் பெண்ணவளை பயப்படாதே என்று சொன்னாலும் வசீகரா ஒரு முடிவு செய்து கொண்டாள்.. இனி ஆசைப்பட்டதை சட்டென்று கேட்டு விட கூடாது… என்று..
இங்கு ஜெயேந்திரனின் பேச்சின் மூலம் அங்கு இருந்தவர்களுக்கு என்ன என்று புரிந்து விட்டது…
அதில் கெளசல்யா.. “ என்ன ஜெய்.. இது…? முதல்ல தான் வரவ என் பணத்தை பார்த்துட்டு வர கூடாது என்று சொன்னே… அது மாதிரி தான் இந்த இடம் முடிந்தது… இப்போ இவள் தான் உன் மனைவி என்று முடிவும் ஆகிடுச்சி… இப்போவும் உன் உண்மையான நிலை சொல்லாம இருப்பது தப்பு ஜெய்.. இப்போ பார்.. அவள் ஆசைப்பட்டது கையில் கிடைத்தும் அவள் ஏதேதோ யோசித்து நிம்மதி இல்லாம இருப்பது…” என்றவரின் பேச்சில்
ஜெயேந்திரன்… “ சொல்றேன் ம்மா. அவள் கிட்ட இனி சொல்ல கூடாது என்று எல்லாம் இல்ல… ஏதோ கேள்விக்கு பதில் போல் என் மாத சம்பளம் வங்கி சேமிப்பு… இந்த இந்த இடத்தில் இடம் வாங்கி போட்டு இருக்கேன்.. இது போல சொல்லாம அவள் வந்த பின் ஒவ்வொன்னா பார்த்து புரிஞ்சிக்கட்டும் ம்மா….” என்று சொல்ல..
கெளசல்யா தான்.. “ ஏதோ சொல்ற… நாளை பின்ன எந்த பிரச்சனையும் வராது பார்த்துக்கோங்க அவ்வளவு தான் சொல்வேன்…” என்று சொல்லி தன் பேச்சை முடித்து கொண்டார்…
இங்கு வசீகரா ஜெயேந்திரனின் பேசி விட்டு…. கூடத்திற்க்கு வர… அப்போது தான் கிஷோர் தன் இரண்டு குழந்தைகளை மியுசில் க்ளாஸ்சில் இருந்து அழைத்து கொண்டு மாமியார் வீட்டிற்க்கு வந்து இருந்தான் மனைவியை அழைத்து செல்ல வேண்டி…
சமையல் செய்யும் செய்து கொடுத்த ஆனியன் ஊத்தப்பத்தை சாப்பிட்டு கொண்டே வசீயிடம்..
“என்ன வசீ உன் ஜெய் வீட்டிற்க்கு வந்து இருந்தார் போல. வெளியிலும் கூட்டிட்டு போனதா கீத்து சொன்னா… என்ன கிப்ட் வாங்கி கொடுத்தாரு….” என்று கேட்டான்..
அவனுக்கு ஜெயேந்திரன் என்ன பெரியதாக வாங்கி கொடுத்து விட போகிறான்.. மிஞ்சு மிஞ்சு போனால் ஒரு சுடிதார் வாங்கி கொடுத்து இருப்பான். இல்லை என்றால் ஒரு புடவை வாங்கி கொடுத்து இருக்க போகிறான் என்று நினைத்து தான் கேட்டது..
மாமனின் கேள்விக்கு… “ நகை வாங்கும் போது முத்து செட் ஆசைப்பட்டேன் மாமா….” என்று அவள் சொல்லி கொண்டு இருக்கும் போதே கிஷோர்..
“ஆமாம் ஆமாம் உன் அக்கா சொன்னா…. அதை வாங்கி கொடுக்கலேன்னும்…” என்றவனிடம்..
வசீகரா… “ இன்னைக்கு வாங்கி கொடுத்தார் மாமா… அதோடு கம்பல் வளையல் என்று செட்டா வாங்கி கொடுத்தார்…” என்று சொன்னதுமே கீர்த்தனா…
“எங்கே கொண்டா… இதை எல்லாம் எங்க கிட்ட காட்ட மாட்டியா…. நேரா உன் ரூமுக்கு கொண்டுட்டு போயிட்டே….” என்று சொன்னவளிடம்..
“இல்லேக்கா உங்களுக்கும் சரி அம்மாவுக்கும் சரி முத்து வைத்தது எல்லாம் பிடிக்காது தானே… காட்டினா இதா வாங்கினே என்றறு சொல்ல போறாங்கன்னு தான்.. “ என்று சொன்னவள்..
இப்போது தன் அறைக்கு சென்று அந்த முத்து செட் நகையை எடுத்து கொண்டு வந்து அனைவரின் முன்னும் வைத்து விட… அதை முதல் ஆளாக சுபத்ரா தான் எடுத்து பார்த்தது.
அப்படியே ஒரு செட்டாக இருந்தது… அழகாகவும் இருந்தது… அழகு என்பது வைரம் மட்டும் தான் கொடுக்கும் என்பது கிடையாது.. முத்துவும் கிடைக்கும் என்பதை..
தன் மகளின் திருமணத்தின் போது.. மாப்பிள்ளை வீட்டு முறைப்படி கூரை புடவை… அடர் சிவப்பு நிறத்திற்க்கு தோதாக வசீகரா முத்து கம்பல் ஆரம். மோதிரம்.. அடர் சிவப்பு நிறத்தின் கண்ணாடி வளையலுக்கு பார்டராக ஜெயேந்திரன் வாங்கி கொடுத்த அந்த முத்து வளையலும்… வசீகராவின் மாநிறத்திற்க்கு அவள் மூக்கில் வந்து அமர்ந்து கொண்ட அந்த முத்து மூக்குத்தியும்.. அப்படி பார்க்க அவ்வளவு அழகாக இருந்தது..
சுபத்ரா முதன் முதலாக தன் பெண் இத்தனை அழகா என்று வியந்து பார்த்து கொண்டு இருந்தாள்.. அதுவும் சத்திரம் நவீனமாக இல்லை என்றாலும் பாரம்பரியமான அந்த பெரிய கல்யாண மண்டபத்தில் தான் மாப்பிள்ளை வீட்டவர்கள் திருமணம் செய்தனர்..
உணவு வகைகள் அத்தனை.. அதுவும் சுவை உண்மையில் அத்தனை அருமையாக இருந்தது.. கீர்த்தனாவுக்கு இவர்கள் அனைத்தும் கேட்டரிங்கில் தான் விட்டனர்..
ஆனல் ஜெயேந்திரன் வீட்டவர்கள் சமையல் செய்யும் தெவசபிள்ளையை வைத்து இவர்கலே மளிகை காய் கறி வாங்கி போட்டு என்று இவர்கள் ஆட்கள் சமையல் செய்யும் இடத்தில் நின்று என்று அனைத்துமே இவர்களின் நேரிடையாக செய்தனர்…
அதோடு கீர்த்தனாவுக்கு அனைத்துமே அதற்க்கு அதற்க்கு என்று இருக்கும் ஆட்களை வைத்து செய்து முடித்ததில் வர வேற்க சந்தனம் தெளிக்க என்று ஒரே போல் உடை அணிந்து யூனி பாம் போல் நின்று கொண்டு செயற்கையாக ஒரு புன்னகை புரிந்து என்று தான் திருமனத்திற்க்கு என்று வந்த சொந்தங்களையும் பந்தங்களையும் வர வேற்றனர்..
ஆனால் ஜெயேந்திரன் குடும்பத்தினர்.. பெரிய அக்கா சின்ன அக்கா இரண்டு அண்ணன்கள் அனைவரும் பெண்பிள்ளைகள் தானே… அதுவும் ஒவ்வொரு பெண்ணும் ஒவ்வொரு வயதில் அதற்க்கு ஏற்றது போல் ஆடை அணிந்து அணிகலன் பூட்டி கொண்டு…
தன் மாமன் தன் சித்தப்பன் என்ற அந்த உரிமையில் வர வேற்க நின்று கொண்டு வந்தவர்களை முறை கொண்டு அழைத்து என்று பார்க்கவே அவ்வளவு கவிதையாக இருந்தது…
அதை விட முகூர்த்த நேரத்திற்க்கு ஜெயேந்திரன் குடும்பம் முழுவதுமே எந்த வேலை செய்து கொண்டு இருந்தாலும், எந்த சொந்த பந்தங்களோடு பேசிக் கொண்டு இருந்தாலும், சரியாக அந்த நேரத்திற்க்கு மேடைக்கு வந்து விட்டனர்..
ஜெயேந்திரன் தாலி கட்டும் முன் பெண்ணவளின் சம்மதம் கேட்க.. அதை பார்த்த அவர் குடும்பத்தினர்.. ஒ…ஓ என்று சத்தம் போட…மங்கல இசையோடு ஜெயேந்திரனின் குடும்ப உறுப்பினர் சிரிப்போலியும் சேர்ந்து ஒலிக்க…ஜெயேந்திரன் வசீகராவை தன் சரிபாதியாக்கி கொண்டான்…
இதை எல்லாம் பார்த்த கீர்த்தனாவே… தன் கணவரிடம் . “ கிஷோர் சூப்பரா இருக்குலே . நம்ம மேரஜ் கிராண்டா தான் நடந்தது… ஆனா இது போல இல்லலே…?” என்று சொன்னவளிடம்.
கிஷோர்.. “ எது போல இல்ல….?” என்று கேட்டவனுக்கு கீர்த்தனா இது என்று என்று குறிப்பிட்டு அவளுக்கு சொல்ல தெரியவில்லை…
அதனால் உண்மையை சொன்னாள்… “ எனக்கு தெரியலே கிஷோர்…” என்று..
ஆனால் அதற்க்கு கிஷோர்… “ ஆனா எனக்கு தெரியும்.. இது போல சொந்தம் எல்லாம் எப்போவாவது ஒன்னா சேர்ந்தா பிரச்சனை இல்ல… ஹாப்பியாவே இருக்கலாம்.. ஆனால் எந்த நேரமும் இத்தனை பேர் வீட்டில் இருந்தால், அதை நீ நினச்சி பாரு….?” என்று சரியாக யோசித்து கொண்டு இருந்த மனைவியை கிஷோர் குழப்ப..
அவளுமே… “ ஆமாம் லே…” என்று சொன்னவளிடம்…
“எனக்கு என்னவோ வசீ அந்த வீட்டில் எத்தனை நாள் தாக்கு பிடிப்பா என்று தெரியல… ஒரு வீட்டில் இத்தனை பேர் இருந்தால் கண்டிப்பா குடும்ப அரசியல் நடக்கும்…” என்று சொன்னவனின் பேச்சு உண்மை தான்..
வசீகராவும் ஒரு சில பிரச்சனைகளை சந்திக்கும் படி தான் இருக்கும்.. ஆனால் ஒரு வீட்டில் பெரியவர்கள் சரியாக இருந்தால், முதலில் பிரச்சனை வரும் வழியை அடைக்க தான் பார்ப்பார்கள்..
வசீகரா ஆசைப்பட்ட முத்து செட்டை கெளசல்யா வாங்கி கொடுக்காதது போல்.. அது அந்த சமயத்திற்க்கு பாதிக்கப்பட்டவர்களின் மனது கஷ்டப்பட தான் செய்யும்…
ஆனால் இன்றைக்கு கஷ்டப்பட கூடாது என்று அந்த வீட்டின் பெரியபவர்கள் ஒன்று செய்தால், அது பின் நாளில் பிரச்சனையில் தான் முடியும்….
அதே போல் எத்தனை பார்த்து பார்த்து நடந்தாலுமே, அதையும் தான்டி ஒரு சில பிரச்சனைகள் எழும் தான். ஆனால் அதை வீட்டின் பெரியவர்கள் ஓரு தல பட்சமாக பார்க்காது சம்மந்தப்பட்டவர்களை வைத்து கொண்டு தீர்த்து வைத்தால், அந்த பிரச்சனை பெரியதாகது நிறுத்தப்படும்…
இன்றும் ஜெயேந்திரன் வீட்டில் இது போல பிரச்சனைகள் எழுந்து அடங்கி இருக்கிறது தான்.. நாளை வசீகராவும் இது போல பிரச்சனைகளை சந்திக்கும் படி இருக்கும் தான்.. அதை வசீகரா எப்படி ஏற்றுக் கொள்கிறாள் என்று பின் பார்க்கலாம்..
இப்போது மகிழ்ச்சியாக இருக்கு ஜெயேந்திரன் வசீகராவை பார்க்கலாம்… தாலி கட்டும் போதே ஜெயேந்திரன் குடும்பத்தினர் அத்தனை அமர்கலம் செய்தனர் என்றால் கட்டிய பின் அடுத்து அடுத்து நிகழ்ந்த திருமண சடங்கில் மணமக்களை வைத்து செய்து விட்டனர்..
ஒரு சில முறை பேச்சு எல்லை தாண்டும் போது எல்லாம் வசீகராவின் முகம் சிவந்து ஒரு மாதிரியாக ஆகும் போது எல்லாம் ஜெய்..
“போதும் போது பேச்சு ரொம்ப நீளமா போகுது…” என்று தடுத்து விடுவான்..
பின் முதலில் மாப்பிள்ளை வீட்டில் மணமக்கள் கால் மிதித்து முகூர்த்த தேங்காய் உடைத்து என்று பெண்ணை வர வேற்று.. அவள் கொண்டு வந்த வெள்ளி காமாட்சி அம்மன் விளக்கை ஏற்றும் போது தான் வசீகரா அந்த பூஜை அறையை பார்த்தாள்..
அத்தனை தெய்வீக கலாட்சமாக இருந்தது அந்த வீட்டின் பூஜை அறை.. தன் வீடு போல் வெள்ளியில் பூஜை சாமான் இல்லாது அனைத்துமே பித்தளையில் தான் இருந்தது..
ஆனால் அந்த பித்தளை பொன் போல் ஜொலித்து கொண்டு இருந்தது… அத்தனை பளிச் என்று அந்த பூஜை சாமான் இருக்கு… ஏற்றி வைத்த விளக்கில் இருந்து வந்த அந்த ஒளியானது அதில் பட்டு.. பார்க்கவே தெய்வீகமாக இருக்க… வசீகராவுக்கு அத்தனை பிடித்து விட்டது… மாமியார் வீட்டின் பூஜை அறை..
வீடுமே பழமையாக இருந்தாலுமே,… அவர் அவர் அறையின் உள்ளேயே குளியல் அறை என்று அவர் அவர் தக்க ஏற்ப மாற்றம் செய்யப்பட்டு வசதியாக தான் இருந்தது.. ஆனால் மாற்றதது… தரை தான்..
தற்காக நவீனம் போல் இல்லாது ரெட் சிமெண்டினால் வழித்த அந்த தரையானது அத்தனை குளிச்சியாக இருந்தது.. அவளின் பாதம் மூலம் அந்த குளிர்ச்சியை உணர்ந்தாள்…
வசீகரா தன் மனதில் இருப்பதை அப்படியே சொல்லவும் செய்தாள் …. பூஜை சாமான் பற்றி சொல்லும் போது .
“வாரம் வாரம் நானும் இவளும் தான் மாத்தி மத்தி துலக்குவோம்…” என்று ஜெயந்தி கோமதியை காட்டி சொல்ல…
அதற்க்கு கோமதி… “ இனி நீயும் ஒரு வாரம் துலக்கும் முறை வரும்…அப்போ எங்களுக்கு ஒரு வாரம் தள்ளி வரும்…” என்று சொன்னவளின் பேச்சில் வசீகரா முழித்து விட்டாள்..
பாவம் அவளுக்கு இது தெரியாத ஒன்று.. அது போல் சமையல் அறைக்கு செல்லும் போது ஒவ்வொரு வேலை என்று பிரித்து பிரித்து செய்வோம்.. இனி நீயும் செய்வாய் எங்களுக்கு வேலை குறையும் …” என்று சொல்ல சொல்ல பாவம் வசீகராவுக்கு கொஞ்சம் பயம் தட்டி விட்டது என்று தான் சொல்ல வேண்டும்…
கடைசியாக தான் ஜெயேந்திரன் அவனின் பெண்ணவளை தன் அறைக்கு அழைத்து சென்றது… பழமையும் ,புதுமையும் மிகவும் விசாலமாக பெரிய அளவிலேயே தான் அந்த படுக்கை அறை இருந்தது.. படுக்கை அறை ஒட்டினது போல் ஒரு பெரிய பால்கனி… இந்த கால வீடு கட்டுபவர்களின் படுக்கை அறை கூட அந்த பால் கனியை விட அளவில் சின்னதாக தான் இருக்கும்..
அந்த அளவில் பெரியதாக இருந்தது.. அங்கு தான் ஜெயேந்திரன் உடற் பயிற்ச்சி செய்வான் போல்.. அதன் உபகரண்கள் எல்லாம் கீழே வைத்து இருந்தான்…
“ஓ தினன் எக்ஸஸைஸ் செய்வீங்கலா….?” என்று கேட்டு கொண்டே பெண்ணவள் ஜெயேந்திரனின் புஜத்தை பார்வையிட்டாள்..பார்த்தவளின் கண்களுக்கு கை பகுதி மறைத்து இருக்க…
இது வரை கீழ் பார்வை பார்த்துக் கொண்டு இருந்த பென்ணவள் மெல்ல மெல்ல மேல் நோக்கி அவனின் முகம் பார்க்கும் போது தான் ஜெயேந்திரனின் அவளின் பார்வையை கவனித்து சிரிப்பு வருவதும்.. தன் தொட்டு அதை மறைப்பதும் அவளுக்கு தெரிந்தது..
அதில் பெண்ணவள் ஒரு மாதிரி தான் ஆனால்… இருந்துமே தன் கெத்து விடாது… “ இல்ல நீங்க டெய்லி எக்ஸைஸ் செய்யிறதா சொன்னிங்க… அது உண்மையா என்று தான் பார்த்தேன்…” என்று சொன்னவளிடம்..
“தெரிந்ததா…?” என்று கேட்டவனின் குரலும் , கண்ணும்.. அவன் முகமுமே… அவன் கேள்விக்கு சம்மந்தம் இல்லாது வேறு ஏதோ சொன்னது தான்.. ஆனால் அது என்ன என்று தான் பெண்ணவளுக்கு தெரியவில்லை..
இருந்தும் பெண்ணவள் தன்னால் அவன் கேள்விக்கு … “ இல்லை….” என்று ஆட்டியவளிடம்..
“கவலை படாதே… நீ இன்னைக்கு நையிட் சரியா பார்க்கலாம்… பார்க்கவும் செய்யலாம்.. நான் டெய்லி எக்ஸ்ஸைஸ் செய்யிறேன்னா இல்லையா என்று என் செயல் மூலம் உணரவும் செய்யலாம்… “ என்று சொன்னவனின் பேச்சு பெண்ணவளுக்கு புரியவே சிறிது நேரம் தேவைப்பட்டது..
புரிந்ததும்… அய்யோ கடவுளே… என்று எல்லாம் மனதில் சொல்லி கொண்டவள் விடு விடு என்று அந்த அறைக்குள் போக… பெண்ணவளின் பின்னே.. ஜெயேந்திரனும் சென்றவன்…
அது பழைய காலத்து வீடு என்பதினால், தூளி கட்ட வேண்டி ஒரு ஊக்கு இருக்க… அதை காண்பித்து…
“ என் அண்ணங்கள் இருக்கும் ரூமுக்கு இதை வைத்தது உபயோகமா இருந்தது.. இனி தான் நம் ரூமுக்கு இதுக்கு வேலை வரும் போல்…” என்று சொன்னவனை முறைத்து பார்த்தவள்..
அதை தொடர முடியாது அவனின் பார்வையில் அனைவரும் இருக்கும் இடத்திற்க்கு வந்து விட்டாள்..
பின் ஒரு வழியாக மாப்பிள்ளை வீட்டில் சடங்கு அனைத்தும் முடிந்த பின்.. பெண் வீடான வசீகரா வீட்டிற்க்கு மண மக்கள் வந்தனர்..
அங்கும் செய்ய வேண்டிய சடங்கு அனைத்தும் முறையாக நடந்து முடிந்தது.. சுபத்ராவே அனைத்தும் முன் நின்று சரியாகவே செய்தார் என்று தான் சொல்ல வேண்டும்..
அது என்னவோ இந்த இடம் முடிந்ததில் இருந்து இது வரை இல்லாத ஒரு நிறைவை சுபத்ரா இன்று உணர்ந்தார்…
அவரின் சொந்தம் மட்டும் இல்லாது அவரோடு வேலை செய்பவர்கல் கூட இன்று வசீயின் திருமணத்தை பார்த்து விட்டு…
“இந்த காலத்துல மனுஷாலுக்கு மதிப்பு கொடுக்குறது சுத்தமா நின்னு போச்சு என்று நினச்சேன் பரவாயில்லை மிஸஸ் சுபத்ரா.. அது இருக்கு என்று உங்க சம்மந்தி வீட்டவங்க காமிச்சிட்டாங்க. ..
சாப்பாட்டை மொத்தமா கேட்டரிங் காரன் கிட்ட விட்டுட்டு கல்யாணம் நடத்துறவங்க.. சாப்பிடும் இடத்து பக்கம் யாரும் எட்டி கூட பார்க்காது வந்தவங்க வா என்று கூட கூப்பிட ஆள் இல்லாது குடும்பமா போட்ட்டோவுக்கு போஸ் கொடுத்துட்டு இருக்கிறவங்க மத்தியிலே.. எல்லாம் பார்த்து பார்த்து மாப்பிள்ளை வீட்டவங்க டையினிங்க் இடத்துல இருந்து.. இது வேண்டுமா…? அது வேண்டுமா.. என்று கேட்டு… இது போல ஒரு கல்யாணத்தை அட்டெண் செய்து ரொம்ப நாள் ஆகுது சுபத்ரா.. சாப்பாடு எல்லாம் அவ்வளவு அருமை…” என்று சொன்னவர்கள் எல்லாம் மறக்காது..
“ ஜோடி பொருத்தம் அருமை மிஸஸ் சுபத்ரா… மாப்பிள்ளை சூப்பரா இருக்கார்… மரியாதையாவும் பேசுறார்…” என்று சொன்னவர்கள் அனைவரும் மறக்காது…
“ உங்க பொண்ணு பொட்டுட்டு இருக்க அந்த முத்து செட் எங்கே வாங்கினிங்க.. ரொம்ப நல்லா இருக்கு.. கடை பேர் சொல்லுங்க எனக்கும் என் பொண்ணுக்கும் வாங்கனும்..” என்று கேட்க கேட்க.. எப்போதும் மற்றவர்கள் முன் அந்தஸ்த்தாக இருக்க நினைக்கும் சுபத்ரா… அதை கொடுத்த ஜெயேந்திரனை நல்ல முறையில் பேசி உணவு இட்டு என்று இருக்க..
ஜெயேந்திரன் கூட அவனின் சீராவிடம்… “ உங்க அம்மா எந்த போதி மர அடியில் உட்கார்ந்தாங்க…” என்று கேட்டவனை பெண்ணவள் முறைக்க…
“இன்னைக்கு நீ இந்த பார்வை பார்க்க கூடாது வேறு பார்வை தான் பார்க்க வேண்டும்…” என்று சொன்னவனின் பேச்சுக்கு எதிர் பதமாக தான்..
அன்றைய இரவு அமைந்தது.. அவர்களின் முதல் இரவில் அவள் கண்கள் திறந்து பார்க்கும் படியாகவும் அவன் அவள் எதிரில் நிற்கவில்லை.. அவளையும் அப்படி இருக்க விடவில்லை…
பெண்ணவளின் ஒவ்வொரு உடை மீதும் ஜெயேந்திரன் கை வைக்கும் போது பெண்ணவள்..
“அய்யோ அதாவது இருக்கட்டுமே இந்திரன்..” என்று சொன்ன பெண்ணவளின் பெயர் அழைப்புக்கு ஏற்ப ஜெய் அவளுக்கு மட்டும் முழு இந்திரனாகவே மாறி விட்டான்..
அதுவும் அவனின் வேகம் அதிகரிக்கும் போது.. அவள் அதிர்ந்து பார்த்தவலின் கண்ணை பார்த்து..
“கல்யாண வேலையில் இன்னைக்கு புஷ்ஷப் எடுக்க மறந்துட்டேன்.. “ என்று சொன்னவனின் வாயை மூடினாள் பெண்ணவள்…
