Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம், "கதையருவி" தளத்திற்கு தங்களை வரவேற்கிறோம்!

    இத்தளத்தில் எழுத எங்களை "vskathaiaruvi@gmail.com" என்ற மின்னஞ்சலில் தொடர்புக் கொள்ளவும். நன்றி!

Paniyum Pathikume....10

  • Thread Author
அத்தியாயம்…10

வசீகராவுக்கு தன் வீட்டில் விருந்து மூன்று நாட்களுக்கு முடிந்து தன் மாமியார் வீட்டிற்க்கு வந்தடைந்தாள்… தாய் வீட்டில் தான் ஏதாவது பிரச்சனை வருமோ என்ற பயம் பெண்ணவளுக்கு இருந்தது…

காரணம் தன் அன்னையும், தன் அக்காவும் தன் மாமியார் வீட்டை பற்றி குறைவாக பேசும் அந்த பேச்சினால், இவர்கள் எதாவது பேசி, அது அவர் காதில் விழுந்து விட்டால்,

கூடவே என்ன தான் இது வரை எந்த பிரச்சனையும் இல்லாது போனாலும் ஒரு சில முறை தன் அன்னையின் பேச்சினால், ஜெயேந்திரனின் முகம் மாற்றத்தை கவனித்து தான் இருந்தாள் பெண்ணவள்..கூடவே அதை அவன் அடக்குவதும் தான்..

எத்தனை நாள் இது போல் அடக்கி கொள்வான்.. இவர்கள் பேசுவதற்க்கு பதிலுக்கு ஏதாவது அவன் பேசி விட்டால், பேசினால் தப்பு இல்லை தான்.. இருந்துமே பெண்ணவளுக்கு தாய் வீடும் வேண்டும் அல்லவா…

அங்கு அங்கு திருமணம் முடிந்து தான் பெண்களுக்கு தாய் வீட்டிற்க்கும் மாமியார் வீட்டிற்க்கும் இடையே போராடுவார்கள்.. இங்கு நம் வசீ அதை திருமணத்திற்க்கு முன்பே யோசிக்க தொடங்கி விட்டாள்..

ஆனால் அவள் நினைத்ததிற்க்கு மாறாக… தன் அன்னை நல்ல மாதிரியாக நடந்து கொண்டதும். தன் கூட பிறந்தவன் எப்போதும் போல் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருந்ததும்.. தன் அப்பா முன்பே ஜெயேந்திரன் வீட்டவர்களிடம் நல்ல மாதிரியாக தானே நடந்து கொள்கிறார்… அதனால் அவரை பற்றிய பயம் பெண்ணவளுக்கு இல்லாது தான் இருந்தது.

கிஷோர் மாமா ஏதாவது சொல்வாரோ… எப்போதும் அவருக்கு நான் தான் உயர்வு என்ற எண்ணம் இருக்குமே அதை வைத்து சகலை பிரச்சனை தொடங்கி விடுமோ என்று நினைக்க..

அது என்னவோ.. இவள் திருமணம் முடிந்து முதல் இரவு முடிந்து மறு நாள் காலை தன் அறையை விட்டு கூடத்திற்க்கு வரும் போதே… அவளின் அக்கா அவள் கணவன் குழந்தைகளோடு சென்று விட்டாள்…

இவள் கூட. “ என்னம்மா ஏன் இத்தனை சீக்கிரம்…?” என்று கேட்டதற்க்கு…

சுபத்ரா தான்… “ அது என்னவோ தெரியலடி… அந்த இன்ஞ்சினியர் அவசரமா வர சொன்னாங்கலாம்… ஐந்து மணிக்கே அவங்க ரூமை விட்டு வெளியில் வரும் போதே கைய்யோடு பையை எடுத்து கொண்டு தயாரா தான் வந்தாங்க … குழந்தைங்க தூங்கிட்டு இருந்தவங்களை ஆளுக்கு ஒன்னா தூக்கிட்டு போனாங்க.

“ நான் கூட சனி ஞாயிறு குழந்தைங்களுக்கு லீவ் தானே இங்கேயே விட்டுட்டு போ என்று கூட சொன்னேன்.. ஆனால் கேட்கல..” என்று சொன்னவர்.. அதை பெரியதாகவும் எடுத்து கொள்ளவில்லை..

அவரை பொறுத்த வரை தன் பெரிய பெண் அறிவாளி.. புத்திசாலி, மாப்பிள்ளை திறமையானவன் கை நிறைய சம்பாதிக்கிறான்… அவளுக்கு என்ன கஷ்டம் வந்து விட போகிறது என்ற நினைப்பு அவருக்கு…

அதனால் தான் கிஷோர்…. தாங்கள் அவசரமாக சென்றதற்க்கு காரணமாக…. “ நம்ம வீட்டை கட்டுற இன்ஞ்சினியர் கூப்பிட்டாரு… அத்தை…” என்று சொன்னதே போதுமாக இருந்தது… அதில் அவருக்கு பெருமையும்..

பின் இடம் வாங்கி.. அத்தனை பெரியதாக வீடு கட்டும் மாப்பிள்ளையை நினைத்து அவருக்கு பெருமை இருக்க தானே செய்யும்… என்ன ஒன்னு கட்ட ஆரம்பித்து ஒரு வருடங்களுக்கு மேல் ஆகி விட்டது.. ஆனால் இன்னும் பாதி அளவுக்கு தான் வேலை முடிந்து இருக்கிறது..

பார்த்திபன் கேட்டதற்க்கு கீர்த்தனா. “ ப்பா உங்க மாப்பிள்ளை சும்மா பெட் ரூம் கிட்சன் இது போல் எல்லாம் சாதாரணமா கட்டலேப்பா…. அவர் பிளானே வேறு.. உங்களுக்கு தான் அவரை பற்றி தெரியுங்கலே… அவருக்கு எல்லாமே கிளாஸ்ஸா இருக்கனும் …” என்றறு சொன்ன பெரியவளின் பேச்சு உண்மை தானே…

அதோடு ஆடம்பரமாக வீடு கட்டி தன் பெண் வாழ்ந்தால் சொந்தத்திற்க்கு முன் தனக்கு அது பெருமை தானே… நினைத்து கொண்டார்..

அதனால் பெரிய பெண் அந்த வீட்டிற்க்காக தானே சென்று இருக்கிறாள் என்று அதை பற்றி கவலை படாது சின்ன மாப்பிள்ளையை நல்ல மாதிரியாகவே நடத்தி அனுப்பி வைக்க..

கணவனோடு வாழ்ந்த அந்த பூரிப்பு மனதில் நிறைவில் முகம் இன்னுமே மின்ன தான்… மாமியார் வீட்டிற்க்கு வந்தாள்..

வந்தவளின் இரவு உணவு முடியும் வரை நல்ல மாதிரியாக தான் சென்றது.. இரவும் இனிமையாக கணவோடு இருந்தவளின் காலை தொடக்கமாக தன் மாமியார் வீட்டில் விடிந்தது…

முன் நாளே ஜெயேந்திரன் இரவில் கடந்த மூன்று நாட்கள் இல்லாதது போல் நேரம் எடுத்து கொள்ளாது விரைவிலேயே…

“தூங்கு…” என்றவனை பெண்ணவள் புரியாது தான் பார்த்தாள்..

அவளின் பார்வையை பார்த்த ஜெயேந்திரன்… “ நீ இந்த பார்வை பார்த்து வைத்தா அப்புறம் என்னை கட்டுப்படுத்தியது எல்லாம் விட்டு விட்டு ராத்திரி முழுக்க உன்னை தூங்காது செய்துடுவேன் சீரா…” என்று சொன்னவன் ..

பின்.. “நாளைக்கு காலையில் சீக்கிரம் எழுந்துக்கனும் சீரா.. உங்க வீட்டில் எப்படியோ இங்கு சமையல் பூஜை கோலம் போடுவது வீட்டு பெண்கள் தான் செய்யனும்.. மேல் வேலைக்கு மட்டும் தான் வேலையாள் வைத்து இருக்கோம்…” என்று சொன்ன போது பெண்ணவள் ஒன்றே ஒன்று தான் கேட்டாள்..

அது… “ தனியா சமைக்க விட மாட்டங்க தானே…?” என்ரு தான்..

அதற்க்கு ஜெயேந்திரன்.. “ சே சே…. எடுத்த உடனே அப்படி விட மாட்டங்க… சீரா…” என்ற கணவனின் பேச்சில் பெண்ணவள் நிம்மதியை உணர்ந்தாள்..

அப்போ பரவாயில்லை.. சமையல் சொல்லி கொடுத்துட்டு.. கொஞ்சம் பழகிய பின் தான் விடுவாங்க. மேல் வேலை தானே செய்யலாம் என்று நினைத்து …

பெரிய அண்ணன் ஏழரை மணிக்கே கிளம்பி விடுவதால், டிபன் சமையல் செய்ய ஐந்து மணிக்கே சமையல் வேலையை ஆரம்பித்து விடுவாங்க என்றும் கணவன் சொல்லி இருக்க..

பெண்ணவள் தன் கை பேசியில் நாலரை மணிக்கு அலாரம் அடிப்பது போல் வைத்து தான் பன்னிரெண்டு மணிக்கு தூங்க தொடங்கியது…

அலாரமும் அடித்தது.. இவளும் எழுந்து கொண்டாள் தான்.. ஆனால் கண்கள் திறந்தாலே… எரிவது போல் அப்படி ஒரு எரிச்சல் அவளுக்கு..

சுபத்ராவும் வேலைக்கு செல்வதால், அவள் வீட்டில் சமையலுக்கு என்று ஒரு ஆள் காலையில் வந்து செய்து விட்டு போவார்கள்.. அதனால் அவளின் அன்னையே ஏழரைக்கு தான் எழுவது.. அவள் அன்னையே அப்படி என்றால் இவள்..

படிக்கும் காலம் தொட்டே அருகில் தான் பள்ளி கூடம்.. அதே போல் தான் கல்லூரி.. பின் இடைப்பட்ட நாட்களில் அருகில் இருக்கும் பள்ளிக்கு தான் ஆசிரியராக வேலைக்கு சென்றது..

அதனால் பெண்ணவள் இத்தனை சீக்கிரம் எழுந்து கொள்ளும் சூழ்நிலை அவளுக்கு வந்தது கிடையாது.. அதோடு இது வரை நேரத்திற்க்கே தூங்கியவளை பன்னிரெண்டு மணி வரை விழித்து பின் இத்தனை சீக்கிரம் எழுந்தாள்…

இதற்க்கு எல்லாம் பழக்கப்படாத அவளின் கண் எரிச்சலை காட்ட… குளிர்ந்த நீரை கண்ணில் தெளித்து பின் குளித்து ஒரு வழியாக கணவன் சொன்னது போல் சரியாக ஐந்து மணிக்கு நம் வசீகரா சமையல் அறையில் ஆஜாராகி விட்டாள்..

சமையல் கட்டில் அவளை பார்த்த மாமியார் கெளசல்யா.. ஒரு பேச்சுக்கு கூட. “ எதுக்கும்மா இவ்வளவு சீக்கிரம் எழுந்து வந்தே…” என்று ஒரு பேச்சுக்கு கூட கேட்காது.. அவள் கையில் நான்கு பூண்டை கையில் கொடுத்து “ இதை உரித்து கொடும்மா..” என்று சொல்ல.

பெண்ணவளும் இது தானே என்று ஒரு நிம்மதி பெரும் மூச்சு விட்டு கொண்டு அதை உரிக்க ஆரம்பித்தாள். உரிக்கும் போது தான் தெரிந்தது.. இது எவ்வளவு கஷ்டமான வேலை என்பது..

அதுவும் அந்த பூண்டின் பல் சின்னதாக இருந்தது.. அவள் வீட்டில் மலை பூண்டு தான் வாங்கிவார்கள்… அவளுக்கு என்ன தான் எத்தனை சட்னி இருந்தாலும், இட்லிக்கு பூண்டி மிளகாய் பொடி வைத்து சாப்பிட பிடிக்கும்..

அதன் தொட்டு அவளே இரண்டு பல் பூண்டை உரித்து இருக்கிறாள்… அதில் மிக ஈசியாகவும் தோல் உரிந்து வரும்.. இது என்ன என்று உரித்து கொண்டு இருந்தவள்.. அரை மணி நேரத்தில் ஒரு பூண்டை மட்டும் தான் அவள் உரித்து முடித்தாள்.

இதில் ஆண்கள் எழுந்து விட்டார்கள் என்று… பில்டர் காபி அவர் அவர் கணவன் மார்களுக்கு கலந்து கொண்டு அவளின் ஓரவத்தி செல்ல. சமையல் அறையிலேயே கீழே அமர்ந்து இருந்தவளின் அந்த காபி மணமானது.. சூடாக குடித்தால் நன்றாக இருக்குமே என்று மனம் ஏங்கியது.. கூடவே இரவு நீண்ட நேரம் முழித்து இருந்தது.. காலையில் சீக்கிரமே எழுந்து கொண்டதில், அவளுக்கு பசிக்கவும் ஆரம்பித்து விட்டது..

ஆனால் சமையல் வேலை செய்து கொண்டு இருந்தவர்கள் காபியை கலக்கி கணவன்களுக்கு தான் கொடுத்தார்களே தவிர.. அவர்கள் யாரும் குடிக்காத போது தான் எப்படி கேட்பது என்று தயங்கி கொண்டு இருந்த சமயம் தான்..

கெளசல்யா. “ என்ன வசீ பூண்டை உரிச்சிட்டியா…” என்று கேட்டு அவள் பக்கம் திரும்பினார்..

அவருமே உட்கார்ந்தப்படி சின்ன வெங்காயம் உரித்து முடித்து இஞ்சி தோள் எடுத்து… பின் தேங்காயை சின்ன சின்ன துண்டுகளாக கட் செய்து முடித்து இருந்தவர்..

குருமாவுக்கு அனைத்தும் தயார் செய்த பின் தான் இவள் பக்கமே பார்வையை திருப்பியது.. இவள் ஒன்றே ஒன்று உரித்து மாமியார் கேட்டதும் விழித்து கொண்டு இருக்க..

கெளசல்யா ஒன்றும் சொல்லாது அவள் பக்கம் இருந்த பூண்டில் ஒன்றை உரிக்க தொடங்க. பெரிய மருமகள் மாமியார் உரித்து வைத்து இருந்த சின்ன வெங்காயத்தை எடுத்து வதக்கி கொண்டே இடை இடையே அவளும் மற்றொரு பூண்டை எடுத்து உரிக்க. சிறிது நேரத்திலேயே இருவரும் முடித்து விட்டு அதையும் சேர்த்து வதக்கி.. என்று என்னவோ பங்கஷன் போல் தான் அந்த வீட்டில் சாப்பாடு செய்யும் வேலை நடந்து கொண்டு இருந்தது..

இத்தனை பர பர என்று.. அதுவும் இத்தனை விரைவாக வேலை செய்து கொண்டு இருந்த அந்த மூன்று பெண்மணிகளையே தான் வசீகரா அதிசயத்து பார்த்து கொண்டு இருந்தாள்..

இது எல்லாம் அவளுக்கு புதியது.. அவள் வீட்டில் நான்கு பேர் தான்.. அதுவும் மிகவும் எளிதாக தான் சமையல் நடைப்பெறும்.. இங்கு குருமா ஒரு பக்கம் இட்லி ஒரு ப்ச்க்கம் மற்றோரு பக்கம் பொரியல் கூட்டு என்று செய்து கொண்டு இருந்தனர்..

கூட இது கூட்டு குடும்பம் பொரியலுக்கு ஒரு கிலோ கோஸ் அரிய வேண்டும்.. கூட்டுக்கு முக்கா கிலோ… இவளோடு சேர்த்து மொத்தம் பத்து பேர் இருக்கின்றனரே…

பின் ஒரு வழியாக சமையல் வேலை முடியும் சமையம் தான்… ஜெயேந்திரன் தன் அறையில் இருந்த பால் கனியிலேயே தன் உடற் பயிற்ச்சியை முடுத்து கொண்டு ஆறு மணிக்கு முதல் பேட்சாக க்ளாஸ் எடுக்கும் இந்தி ட்யூஷனுக்கு ரெடியாகி கூடத்திற்க்கு வந்தான்..

இவன் இந்தி வகுப்பு எடுப்பது இவர்கள் வீட்டு மொட்டை மாடியில் தான்.. மொட்டை மாடி என்றால் திறந்த வெளியில் இருக்காது முறையாக ஷெட் கட்டி.. பெஞ்ச் போர்ட் என்று அனைத்தும் முறையாக தான் இருக்கும்..

பின் இருக்காதா… இருக்க தானே வேண்டும்.. இந்தி எக்ஸாம் எழுதும் சென்டராகவும் இருப்பதினால் அனைத்துமே சரியாக தான் இருக்கும்..

அதுவும் மொட்டை மாடிக்கு செல்ல வெளியில் இருந்து தனியாக படிக்கட்டும் இருந்தது… இது எல்லாம் மெல்ல மெல்ல ஒவ்வொன்றாக… தான் வசதி செய்தனர்.. தேவை என்று வந்த போது…

மொட்டை மாடியில் தான் என்பதினால் சாதாரண உடை என்றாலும் பிராப்பராக தான் உடை உடுத்தி கொண்டு வந்தான்..

வந்தவனை பார்த்த கெளசல்யா வசீகராவிடம்… “ ஜெய் வந்துட்டான் பாரு… அவனுக்கு காபி கலந்து கொடு..” என்று சொல்ல.

வசீகராவும் காபியை கலக்கினால்,,, சுறு சுறுப்பாக இல்லாது மெல்ல தான் கலக்கினாள்.. ஆனால் அதற்க்குள் படிக்கும் பிள்ளைகள் வருவதை பார்த்த ஜெய்… மாடிக்கு சென்று விட..

கையில் காபியோடு கூடத்திற்க்கு வந்து பார்த்தவள் அங்கு கணவன் இல்லாததை பார்த்து மீண்டும் சமையல் அறைக்கு வந்தவள்..

“அத்தை அவர் இல்லை….” என்று சொன்னவளிடம்..

“ஓ இந்தி க்ளாஸ்க்கு டைம் ஆகி இருக்கும்..” என்று மாமியார் சொல்லவும்..

வசீகரா… “ அவர் இந்தி படிக்கிறாரா அத்தை….?” என்று கேட்க..

மகங்களுக்கு சாப்பாடு கட்ட ஒரு பெரிய்ச் தட்டில் சாதத்தை ஆற வைக்க கொட்டி கொண்டு இருந்த கெளசல்யா தன் வேலையை விட்டு மருமகளை நிமிர்ந்து பார்த்தார் என்றால்,

குருமாவில் கடைசியாக கொத்து மல்லி தழையை போட அதை கிள்ளி கொண்டு இருந்த ஜெயந்தியுமே தன் வேலையை விட்டு அவளை தான் பார்த்தனர்..

பின் பெண்ணை கிளப்ப வேண்டும் என்று சமையல் கூடத்தில் இருந்து செல்ல பார்த்த கோமதியுமே செல்லாது இவளை பார்க்க..

இவளோ நாம ஏதாவது தப்பா கேட்டுட்டோமா.. என்று ஒரு நிமிடம் பெண்ணவள் பயந்து… தான் என்ன கேட்டோம் என்று நினைவு கூர்ந்தவள்..

பின் இல்லையே நாம எதுவும் தப்பா கேட்கலையே… என்று தன்னை பார்த்த மூவரையும் இவள் பார்க்க.

இப்போது ஜெயந்தி தான்.. “ ஜெய் தம்பி உன் கிட்ட எதுவும் சொல்லலையா….” என்று கேட்டதற்க்கு பாவம் வசீகராவுக்கு என்னத்தை சொல்லலையா என்று கேட்கிறாங்க என்று புரியலையே…?” என்று நினைத்து கொண்டவள்..

பின் அவளே இந்தி ட்யூஷன் பத்தி தானே பேசியது என்று நினைத்து..

“இல்ல அக்கா அவர் இந்தி ட்யூஷன் போறதை பத்தி என் கிட்ட சொல்லலே…” என்று சொன்னவள் பின் அவளே..

“இந்தி படிச்சா ஆபிசுல பிரமோஷன் அது போல ஏதாவது கிடைக்கும் என்று போகிறாரா அக்கா….?” என்றும் இவள் கேட்டு வைக்க.. அதில் ஒரவத்தி இருவரும் சிரித்து விட்டனர்….

கெளசல்யா தான் வசீகராவின் பேச்சில் அவளுக்கு தெரியவில்லை என்பதை புரிந்து கொண்டு “ அவன் க்ளாஸ்க்கு போகலே.. அவன் க்ளாஸ் எடுக்கிறான்.. நம்ம வீட்டு மாடியில் தான்… கையில் இருக்கும் காபி ஆறும் முன் போய் கொடுத்துட்டு வா… வெளியில் போனா படிக்கட்டு இருக்கும்… போ .” என்று சொன்னதில்…

அத்தை சொன்னது போல் சென்று படிக்கட்டு ஏறிக் கொண்டே ஓ டியூஷன் எடுக்கிறாரா… ? சம்பளம் பத்தாம எடுக்கிறார் போல்… இத்தனை கஷ்டப்படுவர் கிட்ட தான் எதையும் யோசிக்காம முத்து மாலை கேட்டு எட்டு லட்சம் அவருக்கு செலவை இழுத்து வெத்து இருக்கேன்.. இனி பார்த்து நடந்துகனும் என்று நினைத்த வசீகரா நினைத்தது… ஐந்து எட்டு பிள்ளைகள் இருக்கும் வேலைக்கு போகும் முன் கை செலவுக்கு ட்யூஷன் எடுக்கிறார் என்று…


 
Well-known member
Joined
Jun 23, 2024
Messages
227
என்ன தான் கூட்டு குடும்பமா இருந்தாலும் வந்த முதல் நாளே வேலை செய்ய சொல்லணுமா 😏 😏 😏 அதுவும் ஒரு காபி கூட கொடுக்காமல் 🤧🤧🤧 வந்த உடனே அவளே எப்படி உரிமையா போட்டுக்க முடியும் 🥺 🥺 🥺 🥺 🥺

ஜெய் கொஞ்சம் அவனை பத்தி சொல்லி இருக்கலாம் 😔 😖 😔 இப்படி பல்ப் வாங்கிருக்க மாட்டா 🤧 🤧 🤧

கீர்த்தனா புருஷன் வீடு விஷயத்தில் ஏமாந்திடுவானோ ☹️☹️☹️☹️
 
Last edited:
Active member
Joined
May 12, 2025
Messages
30
எல்லோரும் வேலை செய்யணும்னாலும் கொஞ்சம் காபியை குடிக்க சொல்லிட்டு வேலையை கொடுத்துருக்கலாம். இதையெல்லாம் அனுசரித்து, தன்னையும் அட்ஜஸ்ட் பண்ணி எப்படி வசீ கொண்டு போகப்போறா?
 
Well-known member
Joined
Mar 3, 2025
Messages
266
அருமையான பதிவு 😍 😍 😍 😍.
என்றாளு மூனு நேரம் தூங்கி ஆறு நேரம் சாப்பிட்டு வஞ்சனையில்லாம வளந்தவ🤧🤧🤧🤧🤧 ஒரு காபி தண்ணியக் கூட கண்ணுல காட்ட மாட்டேங்குறாங்களே.
அதுவும் பூண்டு மூனு கட்டிய வுழிக்க சொல்லறாங்களே🥺🥺
1000017286.jpg
 
Well-known member
Joined
Jun 1, 2024
Messages
258
மருமகளுக்கு ஒரு காபியை குடுத்துட்டு பூண்டை உரிக்க விட்டிருக்கலாம்....

ஜெய் வேற அவனை பத்தி எதுவும் சொல்லாம எல்லார்கிட்டயும் பல்பு வாங்குறா என்னைக்கு அவன் வாங்கப் போறானோ இவகிட்ட 🤭🤭🤭
 
Well-known member
Joined
Aug 16, 2024
Messages
465
சூப்பர்.மூத்த மாப்பிள்ளை வீடு கட்டுகிறேன் பேர்வழி என்று அநாவசியமான செலவை இழுத்து வைத்து இருக்கிறாரோ.
 
Top