Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம், "கதையருவி" தளத்திற்கு தங்களை வரவேற்கிறோம்!

    இத்தளத்தில் எழுத எங்களை "vskathaiaruvi@gmail.com" என்ற மின்னஞ்சலில் தொடர்புக் கொள்ளவும். நன்றி!

Paniyum Pathikume....14

  • Thread Author
அத்தியாயம்…14

அப்போ உங்களுடையது லவ் மேரஜா என்று தன் மனைவி தன் அம்மாவை கேட்டதை ஜெயேந்திரன் கேட்டு கொண்டு தான் வீட்டிற்க்குள் நுழைந்தது…

“ம் நல்ல கேள்வி … மாமியார் கிட்ட கேட்க வேண்டிய கேள்வி தான் இது….” என்று கணவன் கேட்டு கொண்டே வசீகராவின் பக்கத்தில் வந்து அமர்ந்தான்..

அய்யோ கணவன் கோபித்து கொண்டானோ என்று நினைத்து வசீகரா அவனை பயம் பார்வை பார்க்க..

கெளசல்யாவோ… “ இது போல எல்லாத்துக்குமே பயந்தா இவன் கிட்ட குடும்பம் நடத்த முடியாது பார்த்துக்கோ…” என்று சொல்ல..

அதற்க்கு ஜெயேந்திரனோ… “ நீங்களே என் பொண்டட்டிக்கு சொல்லி கொடுப்பிங்க போல.. “ என்று பதிலுக்கு அவன் கிண்டல் செய்தான்..

ஆனால் பாவம் இருவரும் கிண்டலாக பேசிக் கொள்கிறார்கள் என்று கூடபெண்ணவளுக்கு புரியாது தன்னால் பிரச்சனை வந்து விடுமோ என்று நினைத்து பயந்து இருவரையும் மாறி மாறி வசீகரா பார்த்து கொண்டு இருந்தவளிடம்..

மீண்டும் ஜெயேந்திரன்… “ பார்த்திங்கலா என் மனைவி எவ்வளவு வெகுளி.. நாம விளையாட்டா பேசுறது கூட தெரியாது பயந்து போயிட்டா.. நீங்க அவளை கெடுத்துடாதிங்க..” மீண்டும் இதே வார்த்தையை சொன்ன மகனின் காதை பிடித்த கெளசல்யா..

“என் மருமகள் இது போல வெகுளியா இருப்பது உனக்கு வசதியா தான் இருக்கும்… ஆனா அதுக்கு நான் விட மாட்டேன்.. ஒரு சில விசயத்தில் பொண்ணுங்க புருஷன் கிட்டேயே உஷாரா தான் இருக்கனும்.. அதுவும் இந்த காலத்தில் கண்டிப்பா இருந்து தான் ஆகனும்.. நானே என் மருமகளுக்கு சொல்லி கொடுப்பேன்…” என்று மகனிடம் பேசிய கெளசல்யா..

மருமகள் வசீகராவிடம் முன் கேட்ட கேள்விக்கு பதிலாக.

“ எங்களுடையது காதல் கல்யாணம் எல்லாம் இல்லம்மா… தூரத்து சொந்தங்க ஒருத்தர் மூலமா உங்க மாமா ஜாதகம் எனக்கு சம்மந்தம் பேச எங்க வீட்டுக்கு வந்தது.. மாப்பிள்ளை வீட்டில் ஜாதகம் பொருத்தம் பார்த்துடாங்கலாம்.. நீங்களும் ஒருக்கா பார்த்துட்டா பெண் பார்க்க வராங்கலாம் என்று…”

ஏன் அப்பாவும் சரி அம்மாவும் சரி… மாப்பிள்ளை இராணுவத்தில் இருக்காங்க என்று சொன்னதும் “ வேண்டாவே வேண்டாம் …” என்று எடுத்த உடனே மறுத்துட்டாங்க.. என்று கெளல்யா சொல்லி கொண்டு இருக்கும் போதே… வசீகரா இடையில்…

“ஏன் அத்தை…?” என்று கேட்டாள்..

அதற்க்கு… கெளசல்யா. “ ஏன்னா ராணுவத்தில் வேலை செய்யிறவங்களுக்கு உயிர் நிலையானது கிடையாது.. அதோடு கல்யாணம் செய்துட்டு பொண்டாட்டியை ஊரில் விட்டு விட்டு அவன் பாட்டுக்கு நாட்டை காப்பத்துறேன் என்று போயிடுவான். அப்புறம் வீட்டை யார் பார்த்துப்பா என் மகள் தான் ஒன்டியா எல்லாத்துக்கும் அல்லாடனும்…” என்று மாப்பிள்ளை வீட்டவங்க.. என் அப்பா வேண்டாம் என்று சொன்னதும் மாப்பிள்ளையே என் அப்பாவை வெளியில் பார்த்து கேட்ட போது என் அப்பா உன் மாமா கிட்ட இப்படி சொல்லி இருக்கார்.

அதற்க்கு உன் மாமா என்ன சொன்னார் தெரியுமா..?” என்று மாமியார் கேட்க மருமகளோ மிக ஆவலாக.

“என்ன சொன்னார் அத்தை…?” என்று கேட்டவளின் குரலிலும் முகத்திலுமே அதை தெரிந்து கொள்வதில் அத்தனை ஆர்வம் தெரிந்தது..

அதில் ஜெயேந்திரன் மனைவியின் தலையில் கொட்ட. வசீகராவோ முகத்தை சுருக்கி கொண்டே கொட்டு வாங்கிய இடத்தை தடவி கொண்டே..

“நீங்க சொல்லுங்க அத்தை மாமா என்ன சொன்னார்…?” என்று கேட்டாள்…

மகன் மருமகளின் செய்கைகளை சிரிப்புடன் பார்த்து கொண்டே கெளசல்யாவும்..

“எந்த பையனுக்கு உயிருக்கு இத்தனை ஆண்டு என்று உத்திரவாதமா எழுதி தரான்னோ அவனுக்கே உங்க பொண்ணை கட்டி கொடுங்க…” என்று சொன்னார்..

இத்தனை ஆர்வமாக கேட்டு கொண்டு இருந்த வசீகராவின் பாவனையானது கெளசல்யாவின் இந்த பதிலில் காற்று போன பலூன் போல சொத் என்று ஆகி போனது..

“அப்புறம் எப்படி தான் உங்க கல்யாணம் நடந்தது அத்த…?” என்று கேட்டவலின் குரலில் முன்பு இருந்த ஆர்வம் இல்லை…

கெளசல்யா. சொன்ன… “ உங்க மாமா சொன்னதை என் அப்பா என் அண்ணன் கிட்ட சொன்னதை கேட்ட நான் அடுத்து எந்த மாப்பிள்ளை முன் நிற்கல.. கட்டினா இவரை தான் கட்டுவேன் என்று அடமா நின்றேன்…” என்று சொன்னதுமே.

வசீகரா. “ ஓ. பெண் அடமா நிற்கவும் உங்க அப்பா நம்ம மாமாவுக்கே உங்களை கல்யாணம் செய்து கொடுத்துட்டாரா….?” என்று கேட்டவளிடம்..

“இல்லை.” என்று தலையாட்டிய கெளசல்யா..

“ஒரு வருஷம் கழித்தும் என் மனது மாறாது அப்படியே இருக்கவும்.. கூட என் அண்ணனுக்கு எங்க அத்தையின் பெண் கட்ட ரெடியாக இருக்க.. நான் இப்படி வீட்டில் இருந்தா எப்படி என்று திரும்ப உங்க மாமா ஜாதகத்தை எடுத்து எங்க இரண்டு பேருக்கும் பொருத்தம் பார்த்தாங்க…

அந்த ஜோதிடரோ… இந்த இரண்டு ஜாதகமும் சுத்தமா பொருந்தல.. இந்த ஜாதகக்காரருக்கு உங்க வீட்டு பொண்ணை கல்யாணம் செய்து கொடுத்தா வாழாம உங்க வீட்டுக்கு திரும்ப தான் வந்துடுவா…. என்று சொன்னதில் எங்க அப்பா திரும்ப மலை ஏறி உட்கார்ந்துட்டாரு….”

“அய்யோ அப்புறம் என்ன ஆச்சு அத்தை…?”

வசீகராவுக்கு மீண்டும் ஆர்வம் வந்து விட்டது…

கெளசல்யா… “ அப்புறம் என்ன. நானுமே திரும்ப ஒரு வருடம் அடமா நின்னேன்.. கட்டினா அவரை தான் கட்டுவேன்.. இல்லேன்னா இந்த வீட்டு பெண்ணாவே எப்போவும் இங்கேயே இருந்து விடுவேன் என்று….”

“உங்களுக்கு மாமாவை பார்த்ததுமே அத்தனை பிடித்து விட்டதா அத்தை..?” என்று மீண்டும் இடையில் வசீகரா கேட்டாள்…

“நான் எப்போ உங்க மாமாவை பார்த்தேன் என்று சொன்னேன் வசீ..?” என்ற கேள்வியில் பெண்ணவள் அதிர்ந்து தான் விட்டாள்..

“அப்போ நீங்க மாமாவை நேரில் பார்க்கவே இல்லையா..? போட்டோவில் பார்த்ததுக்கா அத்தை… இரண்டு வருஷம் உங்க வீட்டு ஆளுங்களோடு போராடினிங்க….?” என்று கேட்டவளிடம் கெளசல்யா.

“நான் போட்டோவிலும் பார்த்ததா சொல்லவே இல்லையே வசீகரா…?” என்று கேட்டதை வசீகரா புரிந்து கொள்ளவே சிறிது நேரம் தேவைப்பட்டது.

பின்.. “ அத்த.. அத்த எப்படி அத்த…? எப்படி பார்க்காத ஒருத்தவங்க மேல இத்தனை நம்பிக்கை வந்தது…?” என்று பெண்ணவள் கேட்க.

அதற்க்கு கெளசல்யா…. “ எனக்கே தெரியல .. உங்க மாமா என் அப்பா கிட்ட பேசுன அந்த நாளு வார்த்தை எனக்கு பிடிச்சி இருந்தது .. இன்னும் கேட்டா அந்த இரண்டு வருஷத்தில் உங்க மாமாவுக்கு கல்யாணம் கூட நடந்து இருக்குமோ என்று தெரியாம தான் நான் இருந்தேன்..” என்ற அந்த வார்த்தையில் வசீகரா என்ன மாதிரி உணர்கிறாள் என்று அவளுக்கே புரியவில்லை என்பது தான் உண்மை,.

இது போலான மனதை தொடும் உணர்வு பூர்வமான பேச்சுக்கள் அனைத்தும் அவளுக்கு புதியது.. அவள் வீட்டில் அவள் கேட்டது எல்லாம்… ஸ்டேட்டஸ்.. மரியாதை… மற்றவர்கள் முன் தாங்கள் உயர்ந்து தெரிய வேண்டும் இது போலான பேச்சுக்களை மட்டும் தான்…

அதிலும் இது போல் மிக நுட்மான உணர்வை வசீகராவினால் சாதாரணமாக எடுத்து கொள்ளவே முடியவில்லை.. அது என்னவோ தெரியவில்லை..

அவளுக்கு தொண்டை அடைப்பது போல் இருந்தது.. அதன் தாக்கம் அவளின் கண்களும் கலங்கி விட.

அதை பார்த்த ஜெய்.. கெளசல்யா இரண்டு பேரும்…

“பயப்படாதே உன் மாமாவுக்கு அது வரை கல்யாணம் ஆகல. மிலிட்ரி காரனுக்கு பெண் கிடைப்பது என்பது அவ்வளவு எளிதா என்ன..?” என்று இருவரும் விளையாட்டு போல பேசியவர்கள்..

வசீகரா கேட்ட … “ அப்போ மாமாவை நீங்க எப்போ தான் பார்த்திங்க அத்தை….?” என்று கேட்டதற்க்கு கெளசல்யா..

“எங்க நிச்சயத்து அன்னைக்கு….” என்றதும் வசீகராவின் இருந்து மீண்டும் ஒரு அதிர்வான பார்வை..

“அப்போ அவங்க வீட்டில் இருந்து உங்களை பெண் பார்க்கும் போது கூட மாமா வரலையா அத்தை….?” என்று கேட்டவளிடன் தலையில் மீண்டும் ஒரு குட்டு வைத்த ஜெயேந்திரன்..

“கேள்வியின் நாயகி போல் கேட்டுட்டே இருக்காதே… அம்மா சொல்றதை கேளு….” என்ற பேச்சில் கணவனை ஒழுங்கு காட்டினாலும், அவன் சொன்னதை செய்தாள்..

அது தான் அமைதியாகி அத்தையின் பேச்சை கவனித்தாள்…

“உங்க மாமா வீட்டில் இருந்து பெண் எல்லாம் தனியா பார்க்க வரல வசீகரா… நிச்சயம் அன்னைக்கு தான் உங்க மாமாவை மட்டும் இல்ல என் மாமியார் வீட்டு ஜனத்தையே பார்த்தேன்..

என் வீட்டவங்க நான் இப்படி அடமா இருப்பதை பார்த்துட்டு உங்க மாமா வீட்டவங்க கிட்ட போய்… பேசிட்டாங்க… பெண் கொடுக்கிறேன் .. முறையா வாங்க என்று சொன்னதோடு.. நான் இப்படி அடமா இருப்பதையும் உன் மாமா கிட்ட சொல்லிட்டாரு.

அதுக்கு உன் மாமா அவங்க வீட்டவங்க கிட்ட பெண் எப்படி இருந்தாலும் பரவாயில்லை… அதே போல் நகை பத்தி பேச கூடாது…கல்யாணமும் நான் தான் செய்வேன் என்று..அதுக்கு அவங்க அம்மா அப்போ அதுக்கு எதுக்கு தனியா போய் பெண் பார்த்துட்டு நேரா நிச்சயமே வைத்து விடலாம்…” என்று விட்டார்..

எங்க வீட்டிலும் என் விருப்பம் இல்லாது தான் இந்த கல்யாணம் நடக்குது என்று எனக்கு ஒன்னும் போடலே.. அதோடு ஏதாவது பிரச்சனை என்றால் இங்கு வரவே கூடாது என்று விட்டாங்க… அந்த வார்த்தை தான்… நான் அம்மா வீட்டு முன் நல்லா வாழனும் என்ற வைராகியமா எண்ண வைத்தது…

எங்க வீட்டில் சொன்னது போல் தான் பிரச்சனை என்று நான் போனது கிடையாது… தனியா ஐந்து பிள்ளைகளை வைத்து எல்லாமே நானே தான் பார்த்துக்கிட்டேன்…..என் அப்பா மட்டும் இல்லாம என் அண்ணன் அண்ணி எல்லோரும். நாங்க சொன்னோம் தானே பாரு கஷ்டப்படரே என்று.. ஆனால் நான் அதை எல்லாம் காதுல வாங்கிக்கலே..

பின் உன் மாமா இராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற வந்த பணத்தில் தான் இந்த வீட்டை வாங்கினது… பின் எல்லா சொந்தமும் நெருங்கி தான் வந்தாங்க தான்.. ஆனா நான் தான் என்ன என்றால் என்ன என்ற அளவுக்கு வைத்து கொண்டேன். என் அண்ணன் உங்க பிள்ளைக்கு என் பொண்ணை கட்டிக்கோ என்று கூட வந்தாரு..

அப்போ நான் சொன்னது இதை தான். என் பசங்க ஆசைப்பட்டா எனக்கு ஒரு பிரசன்னையும் இல்லை என்று.. ஆனா என் பசங்க இத்தனை சொந்தம் இருந்தும் நான் தனியா எல்லாத்துக்குமே போராடியது பார்த்தவங்க ஆச்சே… அதனால் வேண்டாம்.. வெளியில் இருந்தே எடுங்க என்று என் மூன்று பசங்களும் சொல்லிட்டாங்க… அதுக்கு கூட புது பணம் பார்க்கிறாங்கலே… அது தான் என்று கூட சொன்னதா என் காதில் விழுந்தது.. ஆனா நான் அதை எல்லாம் சட்டை செய்யலே…” என்று சொல்லி முடித்த அத்தையை வசீகரா பெருமையாக பார்த்தார்..

வசீகராவுக்கு மாமியார் வீடு நிம்மதியும் மகிழ்ச்சியும்.. நிறைவுமான ஒரு வாழ்க்கை கொடுத்தது என்று தான் சொல்ல வேண்டும்..

ஆனால் வாழ்க்கை இப்படியே போனால் என்ன சுவாரசியம் இருக்கும் என்று கடவுலள் நினைத்தாரோ என்னவோ…

அதனால் தான் அதற்க்கு வேட்டு வைப்பது போல் முதல் பிரச்சனையா அவர்களின் தலை தீபாவளி அன்று அவனின் அன்னை வீட்டில் அவளின் அண்ணன் ஸ்ரீ காந்த் செய்து கொண்ட திருமணம் மூலம் ஆரம்பம் ஆனது..


 
Well-known member
Joined
Jun 23, 2024
Messages
227
வசி இப்போ தான் குடும்பம் என்கிற அமைப்பில் வாழ ஆரம்பிச்சிருக்கா 🙂🙂🙂🙂🙂

வீட்டு வேலைகள் எல்லாத்தையும் கொஞ்சம் கொஞ்சமாக கத்துக்கிறா 🤗🤗🤗🤗🤗

அண்ணன் கல்யாணம் செஞ்சுட்டு வந்துட்டானா 🤬 🤬 🤬 🤬 🤬
 
Last edited:
Administrator
Staff member
Joined
May 9, 2024
Messages
1,439
Awes blossom… chinna china epi sister 😭
இப்போது நான் ஒரு கடை எடுத்து நடத்துகிறேன் பா... தினம் தருகிறேன்... கூடிய மட்டும் பெரியதாகவும்..
 
Active member
Joined
Mar 18, 2025
Messages
58
இப்போது நான் ஒரு கடை எடுத்து நடத்துகிறேன் பா... தினம் தருகிறேன்... கூடிய மட்டும் பெரியதாகவும்..
மாஷாஅல்லாஹ்
Us u whish mom💐
 
Well-known member
Joined
Jun 1, 2024
Messages
258
இப்போது நான் ஒரு கடை எடுத்து நடத்துகிறேன் பா... தினம் தருகிறேன்... கூடிய மட்டும் பெரியதாகவும்..
All the very best sis 💐💐💐💐💐💐💐💐
 
Well-known member
Joined
Jun 1, 2024
Messages
258
வசீ மாமியார் லவ் ஸ்டோரி கேட்குறதுக்கு எவ்வளவு ஆர்வம் 😂😂😂

நல்ல குடும்பம் அமைஞ்சிருக்கு வசீக்கு.... 😍😍😍 இவளும் வேலை எல்லாம் கத்துக்கிட்டு அவங்களோட இணக்கமா இருக்கா 🥰🥰🥰🥰

அண்ணன் கல்யாணம் பண்ணிக்கிட்டானா... அவன் தான் எப்போன்னு இருந்தானே 😤😤😤😤
 
Top