அத்தியாயம்….17
இவர்கள் வீடு வந்த போது ஜெயேதிரன் குடும்பத்தினர் அனைவரும் கூடத்தில் தான் இருந்தனர்… அதனால் இவர்களும் தங்கள் அறைக்கு சட்டென்று சென்று விடாது அவர்களோடு ஜெயேந்திரனும் வசீகரியுமே சென்று அமர்ந்தனர்…
வசீ கருவுற்று இருக்கு செய்தி தெரிந்தவர்கள் முதலில் அதை பற்றி மகிழ்ச்சியுடன் தான் பேசிக் கொண்டு இருந்தனர்.. ஆனால் அதற்க்கு எதிர்வினையாக இருவரிடமும் அந்த சந்தோஷம் இல்லாது போனதில்
கூடவே ஜெயேந்திரனின் வீட்டு ஆட்களுக்கு மகன் மருமகளின் முகம் சரியில்லை என்று சட்டென்று தெரிந்து விட்டதிலும்… இருவருக்கும் இடையில் ஏதாவது பிரச்சனையா…? என்று தான் நினைத்து கொண்டு தான் ஜெய்யின் அன்னை இருவரையும் பார்த்தது..
ஆனால் மருமகள் சங்கடத்துடன் அமர்ந்து இருக்க.. மகன் மனைவியை தேற்றுவது போலான அந்த பார்வை பரி மாற்றத்தை கவனித்த கெளசல்யா…. உடம்புக்கு ஏதாவதா…? அதுவும் குழந்தை என்று யோசிக்கும் போதே அவருக்கு சட்டென்று ஒரு பயம்..
அதில் மருமகளிடம்… “ உடம்புக்கு ஒன்றும் இல்லை தானேம்மா…? எல்லாம் நல்லா தானே இருக்கு…?” என்று கேட்டவரிடம்..
வசீகரி ஏன் கேட்கிறார்கள் என்று குழம்பி போனாலுமே… “ எனக்கு என்ன அத்தை… நல்லா தானே இருக்கேன்…?” என்று பாவம் வசீகரி தான் குழந்தை உண்டாகி இருக்கிறேன் என்பது கூட மறந்த நிலையில் தான் வசீகரியின் மன நிலை இருந்தது…
அதுவும் அவளின் அன்னை அப்படி அழுது அவள் பார்த்ததே கிடையாது… எப்போதும் எனக்கு என்ன….? என் படிப்பு… என் வேலை …. என் சொந்தத்தின் நடுவில் எல்லோரையும் விட நான் நன்றாக இருக்கிறேன் என்ற பெருமிததோடு தான் அவர் இருப்பார்…
அதன் தொட்டு தானே இவள் தமிழ் லிட்ரேச்சர் எடுத்து படித்ததில், அதுவும் ஆங்கிலம் வராது கவர்மெண்ட் பள்ளியில் இவள் படித்ததும் தானே.. உன்னால் எனக்கு சொந்தந்தின் நடுவில் தலை இறக்கமாக போய் விட்டது என்ற வருத்தம் கூட ..
கூடவே அதனால் எனக்கு பெரிய இடத்தில் இருந்து இடம் வராது ஜெயேந்திரனுக்கு கட்டி கொடுத்ததில் மூத்த மாப்பிள்ளை போல் வசதியில் இவர் இல்லை என்று ஜெயேந்திரனின் உண்மை நிலை தெரியாது மன குறையும்…
அப்படி அனைவரின் முன்னும் நான் என்ற கெளரவமாக இருந்த சுபத்ரா… மகன் இப்படி செய்து விட்டு சென்றதில் மனம் உடைந்து போய் அழுது அவரை தேற்றி சாப்பிட வைப்பதற்க்குள்..
பாவம் வசீ குழந்தை உண்டாகி இருக்கிறாள் என்று சுபத்ராவுக்கு என்ன வசீக்குமே மறந்து தான் விட்டது.. அதனால் தான் அவளின் மாமியார் கேட்டும் என்ன என்று குழம்பி போய் பார்த்தாள்…
ஜெயேந்திரன் தான் அன்னையின் பயம் புரிந்தவனாக… “ அம்மா அது எல்லாம் ஒன்னும் இல்ல. நாளைக்கு தான் டாக்டர் கிட்ட அப்பாயிட்மெண்ட் வாங்கி இருக்கேன்…” என்று கணவன் சொன்ன பின் தான் வசீக்கு தன்னுடைய இப்போதைய நிலையே புரிந்தது..
தன்னால் தன் வயிற்றின் மீது கை வைத்து கொண்டவள்.. அய்யோ நான் இன்னும் சாப்பிடலையே குழந்தைக்கு பசிக்குமே என்ற நினைவும் வர…
“அத்தை நான் இன்னும் சாப்பிடல…” என்று சொன்னவளை கெளசல்யா மட்டும் அல்லாது குடும்பமே அதிர்ந்து தான் பார்த்தது … என்ன இது…? என்பது போல்..
ஏன் என்றால் அப்போது நேரம் பதினொன்றரை.. இந்த சமயம் சாதாரணமானவகவே சாப்பிட்டு இருந்து இருப்பார்கள்.. குழந்தை என்று தெரிந்த பின் எப்படி அவள் வீட்டில் சாப்பிடாது அனுப்பி இருக்கிறார்கள்..
அதுவும் தலை தீபாவளிக்கு என்று சென்ற பெண்ணையும் மாப்பிள்ளையையும் என்று நினைத்தாலுமே, ஆளுக்கு ஒவ்வொரு வேலையாக ஓரு மருமகள் சட்னி அரைக்க சென்றாள் என்றால், இன்னொரு மருமகள் தோசை ஊற்ற தவ்வாவை ஸ்ட்டவின் மீது வைத்தாள்..
மருமகளே இன்னும் சாப்பிடவில்லை என்றால் மகன் எங்கு இருந்து சாப்பிட்டு இருக்க போகிறான் என்று கெளசல்யா…
“ஜெய்யுக்கும் சேர்த்து தோசை ஊத்தும்மா….” என்று சமையல் அறையை நோக்கி குரல் கொடுத்தார்… சாப்பிட கொடுத்த பின் ஜெயேந்திரன் வீட்டவர்கள் அவர்கள் இருவரிடமும் வேறு எதை பற்றியும் கேட்கவில்லை… வசீயின் அன்னை வீட்டில் ஏதோ பிரச்சனை என்ற அளவில் மட்டும் புரிந்து கொண்டனர்.. அதனால் அதன் தொட்டு எதுவும் கேள்வி எழுப்பாது அவர்கள் சாப்பிட்ட பின் .
“எதை பற்றியும் யோசிக்காது தூங்குங்க… இந்த நேரத்தில் மனது நிம்மதி தான் முக்கியம்…” என்பது போல் சொல்லி அவர்கள் அறைக்கு அனுப்ப பார்த்தார் த்தார் கெளசல்யா….
ஆனால் வசீக்கு தன் வீட்டு பிரச்சனையை இங்கு செல்ல வேண்டுமே…என்று நினைத்து அறைக்கு போகாது தயக்கத்துடன் இருக்க.
கெளசல்யா தான்…. “ எது என்றாலும் நாளை பார்க்கலாம்… இப்போ எதை பற்றியும் யோசிக்காது போய் தூங்கு…” என்று சொன்ன மாமியாரின் இந்த புரிதலில். மனது பெண்ணவள் அத்தனை லேசாக உணர்ந்தாள்..
அந்த உணர்வின் தாக்கமோ.. இல்லை இந்த நேரத்தில் தான் தன் பசிக்கு ஏன் சாப்பிடவில்லை என்று கூட கேளாது . தன் அம்மா வீட்டை பற்றியும் குறை சொல்லாது இருந்தவரிடம்..
அனைத்தும் சொல்லி விட்டாள்… பின்.. “ அம்மாவை தான் பார்க்க முடியல….” என்றும் சேர்த்து சொல்ல.
கெளசல்யாவுக்குமோ என்னவோ போல் தான் ஆனது.. வசீயின் அண்ணன் ஸ்ரீகாந்த் பற்றி கெளசல்யாவுக்கு ஆரம்ப முதலே ஒரு நல்ல அபிப்பிராயம் இல்லை தான். சொந்த தங்கையின் எந்த நிகழ்ச்சிக்குமே தலையிடாது யாரோ போல் இருந்ததில் இருந்தே அவனை பற்றி அவருக்கு தெரிந்து விட்டது தான்..
ஆனால் தன் கல்யாணத்தை அப்பா அம்மாவுக்கு கூட தெரியாது செய்து கொண்டது.. மதம் மாறியது என்று அவன் விருப்படி செய்து முடித்ததில்,
இதை நினைத்து இவர்கள் ஏன் வருந்த வேண்டும்.. அதுவும் தன் மருமகள் குழந்தை உண்டாகி இருக்கும் இப்போது என்று எப்போதும் தன் குடும்பம் என்று வந்தால், அதை முன் நிறுத்தி பேசும் கெளசல்யா..
இப்போதும் அதே போலவே… “ உன் அண்ணனை பற்றி நான் சொல்லி உனக்கு தெரிய வேண்டியது இல்லை வசீ…இப்போ உன் நிலைக்கு உன் குழந்தை பற்றி மட்டும் யோசி…. நாளை ஜெய் டாக்டர் கிட்ட அப்பாயிட்மெண்ட் வாங்கிட்டான் என்று சொன்னான்… நேரமா தூங்கினா தான் காலையில் எழுந்து கொள்ள முடியும்…” என்று சொன்னவர்…
மேலும் “ வீட்டில் இருக்க மத்தவங்க கிட்ட இதை பத்தி நீ சொல்ல வேண்டாம்.. ஒவ்வொரு முறை சொல்லும் போதும் மனம் அழுத்தம் கொடுக்கும்.. அது குழந்தைக்கு நல்லது கிடையாது.. நானே நேரம் பார்த்து சொல்லி கொள்கிறேன்…” என்றவர்..
பின்… “ இனி கோலம் போட காலையில் நீ சீக்கிரம் எழுந்துக்க வேண்டாம். அந்த வேலையை மத்த மருமகள்கள் பார்த்துப்பாங்க….” என்று சொல்லி தான் அனுப்பினார்..
விசீகரியும் அதன் பின் ஒன்றும் சொல்லாது மாமியார் பேச்சில் இருந்த உண்மையில் படுக்க சென்று விட்டாள்..
காலையில் கணவன் முன் பதிவு செய்து இருந்த மருத்துவரிடம் சென்று பார்த்ததில் குழந்தை தான் என்று உறுதியானது.. எடுத்த பரிசோதனை வரையில் அனைத்தும் சரியாக தான் இருக்கிறது என்றதில் கணவன் மனைவி இருவரும் நிம்மதியுடன் வீடு வந்தனர்…
எப்போதும் ஒரு பிரச்சனை வந்தால் அதை தொடர்ந்தார் போல இன்னொரு பிரச்சனையும் வரும் என்பார்கள்.. அது போல் தான் மகன் தான் இப்படி செய்து விட்டான் என்ற அவமானத்திலும், மனது வேதனையிலும் வசீயின் பெற்றோர்கள் இருவரும் வேலைக்கு கூட போகாது விடுமுறை எடுத்து ஒரு வாரம் வீட்டிலேயேயே முடங்கி இருந்த சமயம்…
அடுத்த மாதத்தில் அவரின் மூத்த பெண்ணால், மகனாவது வீதி சொந்தம் பந்தம் நடுவில் தலை குனிந்து நிற்பது போல் ஆகி விட்டது.. ஆனால் தன் பெண்ணை கட்டி கொடுத்த தன் மூத்த மாப்பிள்ளையால், சொந்தம் பந்தம் என்று அனைவரும் இவர்கள் குடும்பத்தை பார்த்து காறி துப்பும் படியான ஒரு செயலை செய்து இருக்கிறான் என்று தெரியாது மூத்த பெண்ணிடமும் மூத்த மாப்பிள்ளையிடமும் சுபத்ரா தன் மன வேதனையை கொட்டி கொண்டு இருந்தார்..
எப்போதும் தன் பேச்சுக்கு ஆறுதல் அளிக்கும் அவரின் மூத்த மகள் ஆறுதல் அளிக்கவில்லை என்றால், மூத்த மருமகன் கிஷோர் கூட தைரியமாக ஒரு வார்த்தை கூட பேசாது இருந்தனர்.
ஆனால் அதை எல்லாம் கவனிக்கும் நிலையில் சுபத்ரா இல்லை என்பதினால், அதை அவர் பெரியதாக எடுத்து கொள்ளவில்லை..
ஆனால் பெரியதாக எடுத்து கொண்டு இருந்து இருக்க வேண்டுமோ…. அதை பற்றி கேட்டு இருந்து இருக்க வேண்டுமோ.. என்று பின் யோசித்தார் தான் சுபத்ரா..
ஆனால் என்ன தான் யோசித்தும் கவனித்தும் ஏன் அதை பற்றி கேட்டும் இருந்தாலுமே, சுபத்ராவினால் தடுத்து இருக்க முடியாது என்று தான் சொல்ல வேண்டும்..
மகன் செய்த செயலை தன் செயலால் பின்னுக்கு தள்ளி இருந்தான் கிஷோர்… யாருமே எதிர் பார்க்கவில்லை… ஆனால் ஜெயேந்திரன் கொஞ்சம் எதிர் பார்த்தான் என்று தான் சொல்ல வேண்டும்..
ஆம் அவனுக்கு தீபாவளி முடிந்த மறுநாள் மருத்துவமனைக்கு சென்று வந்த அன்று எப்போதும் போல் அவன் வாடிக்கையாளர் ஒருவர்.. “ பெட் ரூமில் இருக்கும் ஏசி கொஞ்சம் பிரச்சனை பண்ணுது ஜெய்…” என்றதும் ஜெய்…
“சார் இப்போ எல்லாம் நான் இது போல வேலைகளை ஒத்து கொள்வது இல்ல சார்…. போன முறை வந்த போதே சொன்னனே தானே சார்… “ என்று சொன்னான்..
ஆம் அவனுக்கு இது போல் வீடு வீடாக சென்று வேலைகள் செய்வதை விட… ஒரு கடை வைத்து ஆட்களை வைத்து செய்தால் என்ன என்று ஒரு எண்ணம்.. கூடவே அனைத்து எலெட்ரிக் பொருட்களை விற்பனை செய்யும் எண்ணமும் அவனுக்கு…
இந்த எண்ணம் அவனின் திருமணத்திற்க்கு முன்பே இருந்தது தான்.. அதை கூட்டும் வகையாக திருமணம் முடிந்த புதியதில் கூட மனைவிக்கு என்று நேரத்தை ஒதுக்க முடியாத அவனின் வேலை பளூவும் பின் அவனின் சீரா தன்னுடனா தனிமையை விரும்பியது.. அதை அவளுக்கு கொடுக்க முடியாது போனதில், அவனின் ஆசையான தனியாக எலெக்ட்ரிக் கடை வைக்க நினைக்க… அதை செயல் ஆற்றும் வகையாக அவர்கள் வீட்டில் இருந்து மூன்றாம் வீடு விற்பனைக்கு வந்தது.. அதுவும் வீட்டின் முன் பக்கம் ஒரு பெரிய கடையோடு… அதை பற்றி வீட்டில் அனைவரோடும் பேசி கலந்து ஆலோசித்து அந்த வீட்டை வாங்க ஒரு தொகையாக முன் பணம் கொடுத்த பின் தான் வேலை பார்த்த ஆபிசில் பேப்பர் கொடுத்து விட்டான்..
அதே போல் தான் வீடு ஏசி ரிப்பேர் செய்து கொடுத்த வீட்டவர்களிடமும்…” இனி ஆட்களை வைத்து தான் அனைத்துமே என்னையே நீங்க எதிர் பார்க்க கூடாது என்று….”
வீட்டில் கெளசல்யா அந்த வீட்டின் பழக்கமான…. “ வீடு வாங்கி முடித்த பின் தான் மற்றவர்களிடம் சொல்ல வேண்டும்… மற்றவர்கள் என்பது அவர் அவர் அம்மா வீட்டையும் தான்…” என்று தன் மூன்று மருமகளிடமும் சொல்லி விட்டார்… அதன் தொட்டு வசீ இதை பற்றி தன் அம்மா வீட்டவர்களிடம் சொல்லவில்லை…
“இன்று வீட்டிற்க்கு வந்து செய்து கொடுக்க முடியுமா…?” என்று கேட்டவரிடம் ஜெய் தயங்க.. அவரோ… “ வீட்டில் பெண் தனியா இருக்கா... இன்னைக்கு ஆபிசில் வேறு எனக்கு முக்கியமான மீட்டிங்க் இருக்கு .. .. அதோட பொண்ணு கற்பமா இருக்கா.. ஹார்மோன் மாற்றமா தெரியலே வேத்து கொட்டுது… இல்லேன்னா வேறு யாரையும் கூட வர வைப்பேன்…” என்று சொன்னதில் சரி என்று விட்டு சென்றவன் கண்ணில் தான் கீர்த்தனாவின் கணவன் கிஷோர் பட்டான். அதுவும் நாற்பது வயதுடைய ஒரு பெண் மணியுடன்…
ஜெய் ஏசி ரிப்போர் செய்ய சென்ற வீடு ஒரு அடுக்கு மாடி குடியிருப்பு… இவன் சென்ற வேலை முடிந்த பின். மின் தூக்கிக்காக காத்து கொண்டு இருந்த சமயம் தான்.. அந்த தளத்தில் இருந்த மற்றோரு வீட்டில் இருந்து கிஷோர் வெளி வருவதை பார்த்தது…
வேறு ஒரு வீட்டில் இருந்து வந்தான் என்று தவறாக நினைக்கும் அளவுக்கு ஜெயேந்திரன் முட்டாள் கிடையாது.. பார்த்த விதம்.. ஏதோ தவறாக பட்டது… தவறாக என்றால் அவர்கள் கட்டி அணைத்து கொண்டு இருந்ததையோ …. முத்தம் கொடுத்து கொண்டு இருந்ததையோ ஜெய் பார்க்கவில்லை…
ஆனால் அவர்கள் நின்று கொண்டு இருந்த விதமும்… அவர்கள் பேசும் போது அவர்கள் முகம் காட்டிய பாவனையும் சரியானதாக ஜெயேந்திரனுக்கு தோன்றவில்லை..
இன்னும் கேட்டால் அந்த பெண் சின்ன பெண் எல்லாம் கிடையாது.. கண்டிப்பாக நாற்பது வயதை கடந்த பெண்மணியாக தான் அந்த பெண் இருப்பாள்… வயதை வைத்து பார்த்தால் அக்கா போல் இருக்கும் என்று கூட நினைக்கலாம்…ஆனால் நினைக்க முடியாத அளவுக்கு இருவரின் உடல் மொழிகள் இருந்தன..
அதற்க்குள் ஜெயேந்திரன் நின்று கொண்டு இருந்த மின் தூக்கியும் திறந்து கொள்ள.. ஜெயேந்திரன் சென்று விட்டான்.. வீட்டிற்க்கு வந்த பின்னுமே கியஹோர் பற்றிய யோசனை தான்..
மனைவியிடம் சொல்லலாம் என்றால், இந்த நிலையில் இதை பற்றி சொல்லி இன்னும் அழுத்தம் கொடுக்க வேண்டாம் என்று விட்டு விட்டான்…ஒரு வேலை அவர்களின் உறவு சாதாரணமானதாக கூட இருக்கலாம்.. அதை நாம் தவறாக கூட நினைத்து இருக்கலாம் என்று விட்டான்..அதோடு அவனின் மனைவி குழந்தை வரவு அதோடு அவனின் தனிப்பட்ட வேலையா… ஆபிசில் பேப்பர் போட்டு விட்டதால் முடித்து கொடுக்கும் வேலைகள் இரு பக்கம் இருந்தது… பின் இந்தி ட்யூஷன் கூடவே வாங்கும் இடத்திற்க்கு பெரிய பணம் தேவை.. முக்கால் வாசி இருக்கிறது தான். கொஞ்சம் தான் பிரட்ட வேண்டும்.. பிரட்டி விடுவான் தான்.. இருந்துமே அதற்க்கும் கொஞ்சம் அலைய வேண்டும் அல்லவா..
அண்ணங்களிடம் கேட்டால் கொடுத்து விடுவார்கள் தான்.. ஆனால் அவன் அன்னை முன்பே சொல்லி விட்டார். அவர் அவருக்கு சொத்து வாங்கிகிறிர்களா… சந்தோஷம் தான்.. ஆனால் அண்ணன் தானே தம்பி தானே என்று உடன் பிறப்பிடம் பணம் வாங்கி வாங்க கூடாது என்று இருந்தார்..
அப்படி கெளசல்யா சொல்லாமல் இருந்து இருந்தாலுமே ஜெய் தன் அண்ணன்களிடம் கேட்டு இருந்தது இருக்க மாட்டான் என்பது வேறு விசயம்… பணத்திற்க்கு ஏற்பாடு செய்து கொண்டு இருக்க..
வசீகரி தான்… “ வெளியே ஏன் அலையிறிங்க.. என் கிட்ட தான் இத்தனை நகை இருக்கே… பேங்கில் வைத்து விடலாம்… ஒரு வருடத்தில் திருப்பிடலாம்…” என்று சொன்னாள்..
இப்போது தான் பெண்ணவளுக்கு கணவனின் மாத வருமானம் எவ்வளவு என்பது தெரியுமே… எப்போதும் இன் முகத்துடன் பேசும் ஜெய்.. இதற்க்கு மட்டும்..
“உன் நகையா வேண்டாம்….” என்று விட்டான்..
கணவனின் இந்த ஒரு மாதிரியான பேச்சில், வசீகரியின் முகம் ஒரு மாதியாக ஆகி விட்டது.. அதை பார்த்த ஜெய் தான்..
“இப்போ என்ன சொல்லிட்டேன் என்று இப்படி முகத்தை வைத்து கொள்ற..” என்று இதையும் ஒரு அதட்டல் போல் தான் சொன்னான்..
பின் தான்… “ உன் அம்மா ஏற்கனவே நான் எதுக்குமே வக்கு இல்லாதவன் என்று தான் நினைச்சிட்டு இருக்காங்க..இதுல கல்யாணம் நடந்து கொஞ்ச மாதத்திலேயே உன் நகையை அடகு வைத்தால் அவ்வளவு தான்…” என்று விட்டு இருந்தான்…
என்ன தான் ஜெயேந்திரன் வசீகரியை பிடித்து திருமணம் செய்து கொண்டு இருந்தாலும், ஒரு ஆண் மகனாக தன் திருமண நிகழ்வின் போது தன் மாமியார் வீட்டவர்ள் தன் வீட்டவர்களை நடத்திய விதத்தையும் தன்னை கீழாக நினைத்ததுமே அவன் அடி மனதில் தங்கி விட்டது என்று தான் சொல்ல வேண்டும்.. அதன் வெளிப்பாடாக கோபத்தில் வார்த்தைகளை விட்ட பின் மனைவியின் முக மாற்றத்தை கவனித்த பின் தான் தன் தவறை உணர்ந்தவன்..
பின் மென்மையாக பேசினான்.. “ இல்ல சீரா உன் நகை வைத்தால் உன் வீட்டில் என்ன பேசுவாங்க நீயே சொல்…” என்றதும் பெண்ணவளாலுமே…
“ஏன் அம்மா வீட்டில் அப்படி எல்லாம் பேச மாட்டாங்க… என்று உறுதியாக சொல்ல முடியாததினால் அமைதியாகி போக..
பின் ஜெயேந்திரன் தான்.. “ இதை எல்லாம் மனசுல போட்டு குழப்பி கொள்ளாதே…நம் குழந்தையை பத்திரமா பாரு.. பின் உன் படிப்பான தமிழில் பி.எச் டி படிப்பதை பற்றி யோசி…” என்று சொன்ன மனைவியின் மனதை திசை திருப்பி விட்டான்…
பின் ஒரே வாரத்தில் பணத்தை பிரட்டி அந்த இடத்தை மனைவியின் மீது பத்திர பதிவு செய்த உடனே… அந்த வீட்டை சீர் திருத்தம் செய்யும் வேலையையும்.. முன் பக்கம் இருக்கும் கடையை எலெக்ட்ரிக் கடைக்கு ஏற்பது போல மாற்றம் செய்யும் வேலையையுமே தொடங்கி விட்டான்…
கெளசல்யா இப்போது வசீயிடம் .. “ இப்போ உன் வீட்டில் சொல்லு வசீ..” என்றதில் தினம் பேசும் தாயிடம்… இது போல் இடம் வாங்கி இருக்கோம் ம்மா. என் பெயரில் தான் வாங்கி இருக்கிறார்…” என்று கூடுதல் தகவலாக கூறினாள்..
தன் கணவன் வீட்டை தன் அம்மா வீட்டவர்கள் கீழாக தானே பார்த்தார்கள்.. அப்படி இல்லை என்பது போல் தான் அவளின் பேச்சி இருந்தது…
இதை மகள் சொன்ன போது கூட சுபத்ரா…. எங்காவது வாங்கி இருப்பார் என்று தான் நினைத்தார்.. அதை கேட்கவும் செய்தார்..
ஆனால் வசீ… “ என் வீட்டுக்கு மூன்றாவது வீடும்மா…” என்று சொன்னதில் சுபத்ரா ஒரு சில அடையாளங்கள் சொல்லி அந்த இடமா….? என்று கேட்டார்….
வசீ… “ அந்த இடம் தான்ம்மா…” என்று சொன்னதுமே… சுபத்ராவுக்கு அதிர்ச்சி தான்…
“ அது ரொம்ப பெரிய இடம் ஆச்சே… பழைய வீடு என்றாலுமே பெரிய வீடா…. நல்லா தான் இருந்தது.. ரொம்ப ஆகி இருக்குமே…” என்று கேட்டதற்க்கு.
வசீ… “ ஆமாம் ம்மா ஒன்னரை கோடி…” என்று சொன்னதுமே சுபத்ரா…
“ஏன்னது ஒன்னரை கோடியா….?” என்று கேட்டவர்..
ஜெயேந்திரன் அகல கால் வைத்து.. அதனால் தன் மகள் வாழ்க்கை பாழாகி விடுமோ என்ற பயத்தில் “ ரொம்ப கடன் வாங்கினாரா…?” என்று கேட்டார்..
வசீ… “ இல்லேம்மா இருபத்தி ஐந்து லட்சம் தான்…” என்று சொல்லவும்…
சுபத்ரா… அப்போது கூட விடாது… “ அப்போ உன் நகையை வைத்தாரா இல்லை வித்துட்டாரா…” என்று தான் கேட்டது.
அதில் வசீக்கு அத்தனை கோபம்… கணவன் சொன்னது போல் தானே அன்னையின் பேச்சு இருக்கிறது… அதன் தொட்டு..
“ஏன் நகை மீது கை வைக்கலேம்மா…ஆனா பாருங்க என் மீது சொத்தை பதிவு செய்யும் போது என் மாமியார் இதை பத்தி ஒரு வார்த்தை பேசல….” என்று சொல்லி தான் வைத்தாள்..
ஆனால் சுபத்ராவுக்கு அந்த பேச்சு எல்லாம் ஒரு பொருட்டே இல்லாதது போல் வசீ போனை வைத்ததும் தன் கணவனிடம்..
“ஏனுங்க…” என்று அழைத்து மகள் சொன்னதை சொன்னவர்..
பின்… “ பரவாயில்லை சிக்கனம் பிடித்தே கோடியில் சேர்த்து விட்டார்….” என்று சொன்ன மனைவியை பார்த்து தலையில் அடித்து கொள்ளலாம் போல் தான் இருந்தது பார்த்திபனுக்கு..
இருந்தும் தன்னை அடக்கி கொண்டார்.. தன் மனைவியின் இந்த பீற்றலுக்கு தானும் தானே ஒரு காரணம்.. முதலிலேயே இந்த ஆடம்பரம் எல்லாம் வேண்டாம் என்று சொல்லி அடக்கி இருந்து இருக்க வேண்டும்..
அதுவும் சமீபகாலமாக தன் பெரிய மகள் கீர்த்தனா… அந்த வீடு கட்டி முடிக்காது இருப்பதிலும் அதன் தொட்டி தன் அம்மாவிடம் அவ்வப்போது பணம் வாங்கி கொண்டு செல்வதும் அவருக்கு தெரிந்து இருந்தது.. ஆனால் எவ்வளவு பணம் என்று தான் தெரியவில்லை..
மனைவியும் படித்து வங்கியில் வேலை செய்கிறாள்… கூடவே திருமணம் முடிந்ததில் இருந்து அவர் அவர் செலவு செய்து கொள்வர்.. உன் பணம் எங்கே…? என் பணம் எங்கே என்று எல்லாம் கேட்டது கிடையாது… அதன் தொட்டு கணவனுக்கு மனைவி இது வரை பெரிய பெண்ணுக்கு எவ்வளவு கொடுத்தார் என்ற விவரம் தெரியவில்லை… தெரிய வரும் போது… பார்க்கலாம்….