Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம், "கதையருவி" தளத்திற்கு தங்களை வரவேற்கிறோம்!

    இத்தளத்தில் எழுத எங்களை "vskathaiaruvi@gmail.com" என்ற மின்னஞ்சலில் தொடர்புக் கொள்ளவும். நன்றி!

பனியும் பத்திக்குமே....18

  • Thread Author
அத்தியாயம்….18

ஒரு மாதம் காலமாகவே கீர்த்தனாவுக்கும் கிஷோருக்கும் பிரச்சனை தான்… அவர்கள் புதியதாக வீடு கட்டும் விசயத்தில், இரண்டு வருடமாக அந்த வீடு கட்டப்பட்டு கொண்டு இருக்கிறது..

அவர்கள் வாங்கி போட்ட இடம் சிட்டியில் மிக முக்கியமான இடத்தில் இருக்கும் இடம்… கிஷோரின் தந்தை அவர் வைத்து இருந்த இரண்டு வீட்டில் முதலிலேயே ஒரு வீட்டை இவனுக்கு கொடுத்து விட்டார்..

மற்றோரு வீட்டில் தன் சின்ன மகன் மருமகளோடு இருக்கிறார்…. அதோடு கிஷோரின் தந்தை வழியாக மூதையார் சொத்தின் பங்காக கிஷொருக்கு ஒரு பெரும் தொகை வந்தது… அதை வைத்தும் தன் கிஷோர் இந்த இடம் வாங்கியது..

கூட சிறிது லோனும் போட்டு தான். அந்த இடத்தை கிஷோர் வாங்கியது…. அந்த இடம் வாங்கிய லோனும் அடைந்து விட.. ஒரு புதிய லோன் போட்டு அந்த இடத்தில் ஒரு பெரிய பங்களா போல அமைப்பில் கட்ட வேண்டும் என்பது கீர்த்தனா கிஷோரின் திட்டம்.

லோன் எத்தனை தொகை வாங்கினாலும், அதற்க்கு எத்தனை ஆயிரம் பிடித்தாலுமே, கிஷோர் வாங்கும் இரண்டரை லட்சம் சம்பளத்திற்க்கு தாங்கள் வாழும் வாழ்க்கை தரத்தில் எந்த வித குறைவும் இருக்காது என்று தான் அறுபது லட்சத்திற்க்கு லோன் போட்டு தந்தை கொடுத்த நாற்பது லட்சத்தையும் சேர்த்து ஆடம்பரமாக வீடு கட்டலாம் என்று நினைத்து இரண்டு வருடம் முன் கட்டவும் தொடங்கி விட்டனர்..

ஆம் தொடங்கி தான் விட்டனர்… ஆனால் இன்றும் அந்த வீடு முடியும் பாட்டை தான் காணவில்லை…

அந்த வீடு இன்றைய அளவில் ரூப் வரை தான் கட்டி முடித்து இருக்கிறது… இனி தான் அதிக செலவு….

ஆனால் அதற்க்குள் கிஷோர் அந்த வீட்டிற்க்கு இரண்டு கோடி செலவு ஆகி விட்டது.. இன்னும் ஐம்பது லட்சம் பணம் தேவை என்று… கீர்த்தனாவிடம் கேட்டு கொண்டு இருக்கிறான்.

“என் கிட்ட எங்கு இருக்கு.. வேலைக்கு போயிட்டு இருந்தேன்… என்னையும் போக விடாது செய்துட்ட…” என்று மனைவி பேச..

கணவனோ… “ நீ சோம்பேறி… அது தான் வேலைக்கும் போயிட்டு குழந்தையையும் பார்த்துக்க முடியல … நான் சும்மா வேலைக்கு போக கஷ்டம் என்றால் விட்டுடு என்று சொன்னேன் தான்… ஆனா நீ இது தான் சாக்கு என்று விட்டுட்ட…” என்று கிஷோர் பேச.

பதிலுக்கு கீர்த்தனாவோ…. “சம்பாதிக்கல என்றாலும் இந்த வீட்டுக்கு என் நகை மட்டும் இல்லாது என் அம்மாவின் பாதி நகையை கொடுத்துட்டேன்…

அதோட அம்மா கிட்ட இருந்து இருபது லட்சமும் வாங்கிட்டு வந்து கொடுத்தேன்… இது உங்க நியாபகத்தில் இருக்கா….? இல்ல மறந்துட்டதா…?” என்று பேசியவளிடம்…

“ நீ தானே ஆடம்பரமா வீடு கட்டனும் என்று சொன்னே…. அதுக்கு இத்தனை கோடி பிடிக்கும் தானே…. வீடு கட்ட தொடங்கி விட்டால் நம்ம பட்ஜெட்டில் வராது.. ” என்று சொன்னான்…

கீர்த்தனாவுக்கு படிப்பு வந்த அளவுக்கு இது போலான விசயங்களில் விவரங்கள் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்…

இல்லை என்றால் ரூப் வரை என்பது வீடு கட்டுவதில் கால் பங்கு தான் பணம் பிடிக்கும்… அதன் பிறகு தான் ஒவ்வொன்றாக என்று பணம் இழுக்கும் என்று தெரியவில்லை. ..

அதனால் தான் ஆறு மாதங்கள் முன் தாங்கள் கட்டிக் கொண்டு இருக்கும் வீட்டை ரூப் போட்ட அளவில் பார்த்ததும் முழுவதுமாக முடிந்து விட்டது போல் என்று.. பரவாயில்லை என்று நினைத்து கொண்டாள் கீர்த்தனா…

கிஷோர் சொன்னது போல் கீர்த்தனா சோம்பாறி என்று தான் சொல்ல வேண்டும்… இல்லை என்றால் கோடி அளவில் கட்டிக் கொண்டு இருக்கும் வீட்டை ஆறு மாதம் முன் பார்த்த அளவோடு சரி என்று வீட்டில் இருந்து இருப்பாளா…?

பணத்தின் அறுமை தெரியாது கணவன் இன்னும் வீடு கட்ட பணம் தேவை எனும் போது எல்லாம் அம்மாவிடம் வாங்கி தான் கணவனிடம் கொடுத்து இருப்பாளா…?

ஒரு வாரம் முன் தான் கீர்த்தனா தாங்கள் கட்டிக் கொண்டு இருக்கும் வீட்டை போய் பார்த்தது. அதுவும் கணவனோடு சொல்லாது.. தான்.

இதுவுமே இவளாக செல்லவில்லை. பக்கத்து வீட்டு பெண் சொன்ன. “ என்ன கீர்த்தனா இன்னுமா நீங்க வீட்டை கட்டி முடிக்கல…. உனக்கு பின் ஆரம்பித்து நான் கட்டி குடிச்சிட்டேன்…” என்று சொன்ன போது தான் கீர்த்தனாவுக்கு…

ஆமாம் இவங்களும் பெரிய வீடு தான் கட்டி இருக்காங்க. அவங்க எட்டு மாசத்தில் கட்டி முடிச்சிட்டாங்க. அதோடு அந்த பெண் அந்த வீடு கட்டி முடித்த சொன்ன தொகையானது..

கீர்த்தனா இது வரை இவர்கள் கட்டிக் கொண்டு இருக்கும் பாதி தொகை கூட கிடையாது என்று தான் சொல்ல வேண்டும்…

அதன் தொட்டு தான் கணவனிடம் கூட சொல்லாது ஒரு வாரம் முன் கீர்த்தனா போய் பார்த்தது… அவள் பார்த்த போது வெறும் மேல் பூச்சு மட்டுமே பூசிக் கொண்டு இருந்த வீட்டை தான் கீர்த்தனா பார்த்தது….

இதை வைத்து தான் கீர்த்தனா ஒரு வாரமாக கணவனிடம் இத்தனை பணம் வீட்டிற்க்கு வீட்டிற்க்கு என்று வாங்கி கொண்டு போனது என்ன ஆச்சு…? என்று கேள்வி கேட்க..

கணவனோ… “ உன் ஆடம்பர செலவுக்கு அங்கு இங்கு கடன் வாங்கினேன்… அவங்க கேட்கவும் கொடுத்துட்டேன்…” என்று கிஷோர் சொல்ல..

கீர்த்தனாவோ… “ அப்போ உங்க சம்பளம்…?” என்று கேட்டதற்க்கு…

“லோன் போட்டு இருக்கேன் தானே அதுக்கு பிடிக்க மாட்டானா….?” என்று இவன் பதில் சொல்ல… என்று ஒரு வாரமாக கணவன் மனைவி இருவருக்கும் ஒரே சண்டை தான்..

இதில் காலையில் எப்போதும் போல் கீர்த்தனாவின் அம்மா சுபத்ரா பேசும் போது… “ இப்போ தான் வசி பேசினா டி.. நாம நினைத்தது போல் எல்லாம் அவளை கொடுத்த இடம் வசதி இல்லாது எல்லாம் கிடையாது டி….

இரண்டு நாளுக்கு முன் அவங்க தெருவிலேயே இருக்கும் வீட்டை வாங்கி இருக்காங்க டி….அதுவும் மாப்பிள்ளை அந்த வீட்டை நம்ம வசி பெயருக்கு தான் ரிஜிஸ்ட்டர் பண்ணி இருக்காருடி…ஒன்னரை கோடி டி… அதுல இருபத்தி ஐந்து லட்சம் தான் லோனாம்.. நம்ம வசி நகை மீது கை வைக்கல.

அதோட அந்த வீட்டு முன்ன கடை ஒன்று இருக்கா.. அதுல மாப்பிள்ளை எலெட்ரிக் கடை வைக்க போறாராம்… அந்த வீடும் வாடகைக்கு விடுவது போல நாளு போர்ஷன் இருக்காம்.. அதை வைத்து அந்த லோன் அடைத்து விடுவாராம்..

இதை பத்தி உன் அப்பா கிட்ட சொல்லும் போது உன் அப்பா சொல்றாரு.. அவரும் அவர் அண்ணன் காரன்களும் ஏற்கனவே நிறைய இடம் வாங்கி போட்டு இருக்காங்கககாம். இப்போ தான் விசாரித்ததில் நம்ம மாப்பிள்ளையே இத்தனை சம்பாதிக்கிறார் என்று சொல்றாரு… ஆனா பாரேன் இத்தனை சம்பாதித்தும் சிக்கனமா இருக்கிறதை…” என்று சொன்ன அன்னையின் பேச்சுக்கு கீர்த்தனா அத்தனை பேச்சுக்கு ம் ம் என்று மட்டும் சொன்னவள் போனை வைத்த பின் மனதே ஆறவில்லை.

எப்போதும் எதிலும் நான் தான் முன் நிற்க வேண்டும் என்று நின்னைத்தும் கொண்டு இருப்பவள்…

இன்று வசீ முன் நிற்பதை அவளாள் ஏற்றுக் கொள்ள முடியவில்லை… கூடவே தன்னை பற்றியும் தன் கணவன் பற்றி மட்டுமே உயர்வாக பேசிக் கொண்டு இருந்த அவளின் அம்மாவின் பேச்சை அவள் மனது ஏற்றுக் கொள்ளவும் இல்லை…

இதை கொண்டும் கணவனிடம் சண்டை பிடித்து கொண்டு இருந்தாள்…

எவ்வளவு பணம் வருக்கிறது….? என்ன ஆகிறது…? கணவன் அதை என்ன செய்கிறான்….? தான் என்ன என்ன வீண் செலவு செய்கிறோம் என்று இது வரை அவள் யோசித்து கூட பாராதவள்..

இந்த ஒரு வாரத்தில் அனைத்தும் யோசித்து கணவனிடம் சண்டை பிடித்து கொண்டு இருக்கும் சமயத்தில் தான் கிஷோரை பற்றி ஒரு வீடியோ மீடியாவில் வைரல் ஆனது..

அதாவது நாற்பது வயது உடைய சந்தியா என்ற பெண்மணி…. அவள் வீட்டில் எடுத்த வீடியோ தான் அது… அந்த பெண் யூடியுபில் உள்ளாள் போல்… லட்சக்கணக்கில் சப்ஸ்கிரைபும் அந்த பெண் மணிக்கு இருக்க்கிறது..

அந்த பெண்மணி பெரும்பாலும் பதிவு செய்யும் வீடியோ… உடற்பயிற்ச்சி தான்…. சும்மா சொல்ல கூடாது அந்த பெண் செய்யும் உடற்பயிற்ச்சிகள்… அவளின் உடல் வடிவத்திற்க்கு நியாயம் செய்து உள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.. உடல் வடிவம் அத்தனை கச்சிதாக இருந்தது..

அதன் தொட்டு தான். அந்த பெண்மணிக்கு அத்தனை பேர் சப்ஸ்கிரைப் செய்து இருக்கிறார்கள்…

முதன் முதலில் என் உடற்பயிற்ச்சி இல்லாத வீடியோ என்று குறிப்பிட்டு தான் சந்தியா அந்த வீடியோவை வெளியிட்டு இருந்தாள்…

அதில் தான் கிஷோர் வீட்டில் தன் வீடு போல் ஹாலில் சட்டை இல்லாது அமர்ந்து டிவி பார்த்து கொண்டு இருப்பது போல்… அந்த பெண் சாப்பிட உணவு கொண்டு வந்த தருவது பக்கம் பக்கம் அமர்ந்து பேசிக் கொண்டு இருப்பது போல்… இதை பார்த்த அனைவருக்கும் தெரிந்து விடும்.. அவர்களுக்குள் என்ன மாதிரியான உறவு என்பது…

இதை முதலில் ஜெயேந்திரனின் பெரிய அண்ணன் மகள் ப்ரித்தி தான் முதலில் பார்த்தது… முதலில் பார்த்த உடன் எல்லாம் ப்ரீத்தி கிஷோரை அடையாளம் காணவில்லை…

அது தான் கிஷோர் தன் மைத்துனி திருமணத்திலேயே நான் யார் தெரியுமா என்று இருந்தானே…. ஆனால் எங்கோ பார்த்த முகமாக இருக்கிறதே என்று யோசித்து மாலை வேளையில் இந்தி ட்யூஷன் முடித்து விட்டு கிழே வந்து மனைவி தந்த டீயை குடித்து கொண்டே…

“இப்போவும் வாந்தி வருதா… பரவாயில்லையா….? என்று கேட்டு கொண்டு இருந்த சமயம் தான் ப்ரீத்தி..

“சித்தா சித்தா…” என்று அழைத்து கொண்டு ஓடி வந்து அவன் அருகில் அமர்ந்தவள்…

“சித்தா இது யாரு சித்தா…. பார்த்தா மாதிரி இருக்கு…” என்று சொல்லிக் கொண்டு இருக்கும் போதே அந்த சின்ன பெண்ணுக்கு நியாயபகம் வந்து விட்டது போல்./.

“அய்யோ சித்தா வேண்டாம் நீங்க பார்க்காதிங்க..” என்று சொல்லி தன் கையில் இருந்த கை பேசியை தன் சித்தப்பா பார்க்காத வாறு மறைக்க பார்த்தாள்…

அந்த சமயம் வீட்டில் இருக்கும் பெண்கள் மட்டும் அல்லாது ஆண்களுமே வேலை முடிந்து வீட்டிற்க்கு வந்து விட்டனர்…

கூட வசீகடி குழந்தை உண்டாகி இருக்கிறாள் என்று பெரிய அக்கா சின்ன அக்கா என்று இப்போது அடிக்கடி தாய் வீட்டிற்க்கு வசீகரியின் வாய்க்கு தோதாக ஏதாவது சமைத்து கொண்டு வருவதால், அன்றும் இரு அக்காக்கள் மட்டும் அல்லாது அக்கா குடும்பமும் வந்து வேறு இருக்க…

சாதாரணமாக இருந்தால் எப்படியோ… ஆனால் இது போல் கை பேசியை மறைத்து ஒரு மாதிரி பயந்தது போல் இருந்த ப்ரீத்தியை வீட்டவர்கள் அப்படி அந்த கை பேசியில் என்ன தான் இருக்கிறது என்று பார்க்காது விட்டு விடுவார்களா என்ன….?

அப்போது கூட ஜெய் குடும்பத்தினர்… ஏதாவது பார்க்க கூடாத விசயத்தை பார்க்க போகிறாள்… தெரியாது பெண் ஏதாவது பிரச்சனையில் சிக்கி கொள்ள போகிறாள் என்று நினைத்து ஜெய் தான்.

“ப்ரீத்தி தா… என் கிட்ட காட்ட தானே வந்த. தா நான் பார்க்கிறேன்….” என்று குழந்தையின் மனது கஷ்டப்பட கூடாது என்று நினைத்து அவள் கையில் இருந்த கை பேசியை இப்படியாக கேட்டான்…

ப்ரீத்தியோ மறுப்பாக…” வேண்டாம் சித்தா.. இது தப்பா இருக்கு. வேண்டாம்…” தன் சின்ன சித்தி வசீகரியை ஒரு பார்வை பார்த்து கொண்டே தன் சித்தப்பாவிடம் சொன்னாள்..

சின்ன பெண் தப்பா இருக்கு என்று சொன்னதும் வீட்டு பெரியவர்கள் சும்மா இருப்பார்களா.

ப்ரீத்தியின் தந்த தீபக்… “ தப்பா அது என்ன…?” என்று கேட்டுக் கொண்டே மகளின் கையில் இருந்த கை பேசியை பிடுங்கினான்..

ப்ரீத்தி அப்பா பிடுங்கி கொண்டதும்… தன்னை திட்ட போகிறார்கள் என்று நினைத்து பயந்து மாடிக்கு ஓடி விட்டாள்..

தீபக்கோ வாங்கிய உடனே… அது என்ன என்று அந்த வீடியோவை பார்த்து விட்டான்…. மகள் போல் பார்த்த ஆள் மாதிரி இருக்கே என்று யோசிக்கவும் எல்லாம் இல்லை.. அவனுக்கு பார்த்த உடனே தெரிந்து விட்டது..

அவனுக்குமே அதிர்ச்சி தான்… முகத்தில் அப்பட்டமாக அதிர்ச்சியை காட்டி விட… ஜெய்..

“என்ன அண்ணா….?” என்று கேட்டுக் கொண்டே அவனுமே வாங்கி பார்த்தான்.. அவனுக்கு தான் முன்பே சந்தேகம் ஆயிற்றே… சந்தேகம் தானே…. ஆனால் இந்த அளவுக்கு.. இப்படியாக சோஷியல் மீடியா வரை வந்து நிற்க்கும் என்று அவனுமே எதிர் பார்க்கவில்லை..

பார்த்தாவன் தன் பக்கத்தில் இருந்த மனைவியை தான் திரும்பி பார்த்தது… வசீயின் பார்வையோ அவனில் இல்லாது அவன் கையில் இருந்த கை பேசியில் தான் இருந்தது..












 
Well-known member
Joined
Jun 1, 2024
Messages
263
நைஸ் அப்டேட் 🤩🤩🤩🤩
மாட்டினான் கிஷோர்...
 
Top