Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம், "கதையருவி" தளத்திற்கு தங்களை வரவேற்கிறோம்!

    இத்தளத்தில் எழுத எங்களை "vskathaiaruvi@gmail.com" என்ற மின்னஞ்சலில் தொடர்புக் கொள்ளவும். நன்றி!

பனியும் பத்திக்குமே....20

  • Thread Author
அத்தியாயம்…..19

“நீ வீட்டில் இரு டி….கொஞ்ச நேரம் முன் கூட வாந்தி எடுத்தே….” என்று ஜெயேந்திரன் சொல்வதை பெண்ணவள் கேட்பதாக இல்லை…

“இல்ல இல்ல நானும் வருவேன்…” என்று பெண்ணவள் அடமாக நிற்க…வீட்டவர்கள் ஒன்றும் சொல்லாது பார்த்து கொண்டு இருந்தனர்…

வேறு ஏதாவது விசயம் என்றால் ஜெயேந்திரனின் அன்னை கெளசல்யா தீர்த்து சொல்லி இருப்பார்..

“நீ போக தேவையில்லை….” என்று… தவறு என்றால் திட்டம் செய்ய எல்லாம் கெளசல்யா தயங்க மாட்டார் தான்..

ஏன் சிறிது நேரம் முன்பு கூட அந்த கை பேசியில் வசீ பார்த்த அந்த காட்சியில் சிலையாக அமர்ந்து கொண்டு இருக்க…

ஜெயேந்திரன் தன் இரு அண்ணனிடமும்… “ இவ்வளவு வரை போகும் என்று நான் நினைக்கல….” என்ற கணவனின் அந்த ஒரு வார்த்தையை கேட்ட வசீ..

“அப்போ உங்களுக்கு முன்பே தெரியுமா…? அதை ஏன் என் கிட்ட சொல்லலே… நீங்களும் கூட்டா….?” என்று கேட்ட மனைவியின் கேள்விக்கு ஜெயேந்திரன் பதில் அளிக்கும் முன்.. கெளசல்யா..

“பார்த்து பேசு வசீ… குழந்தை உண்டாகி இருக்கேன்னு பார்க்குறேன்.. இல்லேன்னா… ஒரு அடி கூட என் கிட்ட நீ வாங்கி இருப்ப… யாரை பார்த்து என்ன பேசுற….?” என்று மாமியார் கோபமாக பேசிய பின் தான் வசீகரிக்கு தான் பேசிய வார்த்தையின் வீரியம் புரிந்தது..

புரிந்த நொடி தன் மாமியாரிடம்… “ சாரி அத்த…” என்று மன்னிப்பும் கேட்க..

கெளசல்வோ…. “ என்னை பத்தியா நீ தப்பா பேசுன.. உன் புருஷனை தானே பேசுன…”

நீ மன்னிப்பை உன் கணவனிடம் தான் கேட்க வேண்டும் என்று மறைமுகமாக சொன்னவரிடம் வசீகரி…

“இல்ல அத்த… அவருக்கு இது தெரியும் போல சொன்னாரு தானே அத்த…?” என்று தன் மாமியாரிடம் கேட்டவள்..

தன் இரண்டு மூத்தார்களையும் பார்த்து … “ அவர் சொன்னாரு தானே மாமா….?” என்று கேட்டவளை..

தன்னை பார்க்க வைத்த ஜெயேந்திரன்… “ அவங்களை ஏன் கேட்குற…? நேரா என் கிட்டேயே கேளு….” என்று சொன்னவன்..

“ஆமாம் அது போல தான் சொன்னேன்…” என்று சொன்னவன்..

பின் கிஷோர் எங்கு எப்போது அந்த பெண்மணியோடு பார்த்தேன்…. என்பதையும் சேர்த்து சொன்னவன்..

பின்… “ இதை நான் என்ன என்று உன் கிட்ட சொல்லுவேன்…?” என்ற கேள்விக்கு வசீகரியிடம் பதில் இல்லை… அதில் பெண்ணவள் அமைதியாகி விட்டாள்…

அந்த வீட்டில் இருக்கும் மற்றவர்கள் தான்… “ என்ன என்று நமக்கு முழுசா தெரியாது… என்ன என்று பார்க்கலாம்… முதல்ல நீ உன் அம்மாவுக்கு போன் போட்டு என்ன என்று கேளு….?” என்று அவளின் ஓரவத்திகள் சொன்ன பின் தான் பெண்ணவளுக்கு…

“அய்யோ அம்மா… அப்பா….” என்று அவள் மனது பதறியவளாக…

தன் கை பேசியை நடுங்கிய கை கொண்டு எடுத்தவளின் கை பேசிக்கு அவள் அன்னையே அவளை அழைத்து இருந்தார்..

யார் அழைப்பது….?” என்று மனைவியின் கை பேசியை எட்டி பார்த்த ஜெயேந்திரன்…

“முதல்ல அவங்க என்ன சொல்றாங்க என்று கேளு சீரா… அவங்களுக்கு இந்த விசயம் தெரியாம கூட இருக்கும்… நீ பாட்டுக்கு சட்டுன்னு சொல்லிட போற..” என்ற கணவனின் பேச்சுக்கு பெண்ணவள் தலையாட்டிக் கொண்டே.. கை பேசியை ஏற்றவளிடம் அவளின் அன்னை இடி என செய்தியாக.

“வசீ இந்த பொண்ணு என்ன காரியம் செய்து வைத்து இருக்காடி…” என்ற அன்னையின் பேச்சிலேயே வசீகரிக்கு கை நடுக்கத்தோடு கால் நடுக்கமும் சேர்ந்து கொண்டு விட்டது..

மனைவியின் நிலையை பார்த்த ஜெயேந்திரன் தான்.. இது போலான நிலையில் விழுந்து விட போகிறாள் என்று நினைத்து கை பிடித்து அங்கு இருந்த இருக்கையில் அமர வைத்து விட்டு பின் அவளின் கை பேசியை அனைவரும் கேட்கும் படியாக ஸ்பீக்கரில் போட்டு விட்ட பின்….

இப்போ பேசு என்பது போல் இவன் சைகை செய்வதற்க்குள்ளாக வசீகரியின் அன்னை சுபத்ரா..

“ ஏன்டி நான் எத்தனை பெரிய விசயம் சொல்றேன் நீ பாட்டுக்கு அமைதியா இருக்க…. அவ உன் அக்காடி….” என்று கத்திக் கொண்டு இருந்தவரின் பேச்சில் ஜெயேந்திரன் இதை தான் நினைத்தான்…. ஒரு சிலரை திருத்த முடியாது என்பதை…. மற்றவர்களும் ஜெய் நினைத்ததை தான் நினைத்தார்கள் போல்..அதன் தொட்டு அவன் முகத்தை பார்த்தவர்கள்..

“ நீ வாங்கி பேசு…” என்று ஜாடை செய்ய.. ஜெய்யேந்திரனுமே அதை தான் நினைத்ததினால் அன்னையின் பேச்சுக்கு பதில் சொல்லும் நிலையில் கூட இல்லாத மனைவியின் கையில் இருந்த கை பேசியை வாங்கியவன்.

“அத்த அவள் நீங்க பேசினதை கேட்கல.. காபி குடிச்சதும் வாந்தி எடுத்துட்டா. அந்த மயக்கத்துல இருந்தா அது தான்..” ஜெயேந்திரன் உண்மையை மறைத்து பேசினான்.

காரணம் இன்னுமே சுபத்ராவுக்கு விசயம் தெரியுமா என்பது தெரியாததினால், ஆனால் விசயமானது… இவர்களுக்கு தெரிவதற்க்கு ஐந்து மணி நேரத்திற்க்கு முன்பே தெரியும் என்பதை சுபத்ரா அடுத்து சொன்ன….

“கீத்து சூசைட் அட்டம் பண்ணி ஆஸ்பத்திரியில் சேர்த்து இருக்கோம் மாப்பிள்ளை… இப்போ எதுவும் சொல்ல முடியாது என்று டாக்டர் சொல்றாரு மாப்பிள்ளை….” என்று சொன்ன சுபத்ரா கீர்த்தனா ஏன் தற்கொலைக்கு முயன்றாள் என்ற காரணம் சொல்லவில்லை..

ஜெயேந்திரனுமே… ஏன் என்று கேட்காது அவனுக்கு தெரிந்து இருந்தாலுமே அதை பற்றி சொல்லாது…

“எப்போ அத்த …? ” என்ற ஜெயேந்திரனின் கேள்விக்கு, அழைப்பில் இந்த பக்கம் சுபத்ராவின் கை பேசியை வாங்கி கொண்ட பார்த்திபன்…….

“கீர்த்தனா கூட இரு… அவ புருஷன் வந்து இருக்கான்… அவனை பார்க்க பிடிக்கல… நீ என்ன என்று கேளு….” என்று மனைவியிடம் சொன்னவர்.

அழைப்பில் இருந்த ஜெயேந்திரனிடம்…. “ மூத்த மாப்பிள்ளை என்று தலையில் தூக்கி வைத்து கொண்டாடினோம் மாப்பிள்ளை… ஆனா அதுக்கு நல்லா செய்துட்டான்….மார்னிங்கல இருந்து அப்படி தைரியம் சொல்லிட்டு இருந்தேன் கீர்த்தனாவுக்கு ஆனா இப்படி செய்துக்குவா என்று நான் நினைக்க கூட இல்ல… இந்த பொண்ணுங்க என்ன படிச்சு என்ன பிரயோசனமோ என்று எனக்கு புரியல… அந்த குழந்தைகளையாவது இவ நினைத்து பார்த்து இருக்கனும் லே….”

என்ன ஏது என்று சொல்லவில்லை என்றாலும் இது போல் சொன்னவரிடம்.. ஜெயேந்திரனுமே தூண்டி துருவாது…

“எந்த ஆஸ்பிட்டல் மாமா….?” என்று ஜெய்யின் கேள்விக்கு பார்த்திபன் கீர்த்தனாவை சேர்த்து இருந்த மருத்துவமனையின் பெயரை கூறி கொண்டு இருக்கும் போதே….

“ஏங்க போலீஸ் வந்து இருக்குங்க… எனக்கு ரொம்ப பயமா இருக்கு…..” என்ற சுபத்ராவின் குரல் கேட்க…. ஜெயேந்திரனுமே கை பேசியை அணைத்து விட்டு அந்த வீட்டின் மாப்பிள்ளையாக இந்த சமயம் தான் அங்கு இருக்க வேண்டும் என்று நினைத்து மருத்துவமனைக்கு செல்ல நினைக்கும் போது தான் ஸ்பீக்கர் மோடில் இருந்ததால் அனைத்தும் கேட்ட வசீகரிக்கு தான் மனதில் என்ன நினைத்தாலோ …? இல்லை பயந்தாலோ என்று தெரியவில்லை… வாந்தி எடுத்து விட்டாள்..

அதுவும் ஒரு முறை கிடையாது பல முறை..

அதன் தொட்டே ஜெய். “ வேண்டாம் நான் மட்டும் போறேன்….” என்றதற்க்கு தான் வசீ ..

“இல்லை இல்லேன்னா என் அண்ணனுங்களையும் கூட்டிட்டு கூட போறேன்.. நீ வந்து அங்கு என்ன செய்ய போற…? ஏற்கனவே வாமிட் பண்ணிட்டு இருக்க. ஆஸ்பித்திரி ஸ்மெலில் இன்னுமே தான் வாமிட் வரும்…” என்று ஜெயேந்திரன் அத்தனை சொல்லியும் பெண்ணவள் நானும் வருவேன்.. என்று அடமாக நிற்க…

வேறு வழி இல்லாது ஜெயேந்திரன் மனைவியுடன் தான் ஆஸ்பித்திரிக்கு செல்லும் படியான சூழல்… மருமகள் அழுது ஏதாவது இழுத்து வைக்க போகிறாள் என்று கெளசல்யாவும் துணைக்கு சென்றனர்..

இவர்கள் மருத்துவமனைக்கு சென்ற சமயம் கீர்த்தனா கண் முழித்து விடால் போல்…. காவலர் வந்து என் சூசைட் அட்டம்ட் செய்திங்க என்று கேட்ட போது..

இது போலான சூழலில் கணவனை காப்பற்ற என்று பெரும் பாலும் பெண்கள் சொல்லும் காரணமான வயிற்று வலி என்ற பொய்யை தான் கீர்த்தனாவும் சொன்னது…

கணவனான கிஷோர் முகத்தை பார்த்து விட்டு காவலருக்கு விசயம் இன்னது என்று தெரிந்து விட்டது தான்… கீர்த்தனா சொல்வது பொய் என்பதும் தெரிந்தே கீர்த்தனா சொன்னதையே எழுதி கைய்யெப்பம் வாங்கி கொண்டு சென்று விட்டனர்…

ஆனால் செல்லும் முன் கிஷோரை பார்த்து. “ பொண்டாட்டி உன்னை காப்பாத்திட்டா. ஆனால் உன் வைப்பாட்டி என்ன செய்வா என்று பார்க்கலாம்…” என்று சொல்லி விட்டு தான் சென்றார்…

கீர்த்தனா கண் முழித்த பின் தன் கணவனான கிஷோர் முகத்தை என்ன யார் முகத்தையுமே பார்க்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும்…

இன்னும் கேட்டால் சுபத்ராவோடு வசீ தான் அக்காவின் இரு பிள்ளைகளையும் பிடித்து கொண்டு அத்தனை ஆறுதலாக இருந்தாள்..இருந்துமே சட்டென்று தன் நிலை கிழ் இறங்கியதை ஏற்றுக் கொள்ள முடியாத கீர்த்தனா யாரையும் கண் கொண்டு பார்க்கவில்லை என்பதை விட பார்க்க முடியவில்லை என்று தான் சொல்ல வேண்டும்…

அனைவரின் முன்னும் கெத்தாக வாழ ஆசைப்பட்ட அப்படியே வாழ்ந்தும் கொண்டு இருந்த கீர்த்தனாவுக்கு அனைவரின் முன்னும் இப்படியான நிலையில் படுத்துக் கொண்டு இருப்பது அவளுக்கு அவமானமாக இருந்தது..

கூடவே இப்படி செய்து விட்டானே… அனைத்துலுமே இப்படி செய்து விட்டானே… நான் என்ன குறை வைத்தேன்… இப்படி பல யோசனைகள் மனதில் ஓடிக் கொண்டு இருக்க.. யாரையும் பார்க்கும் நிலையில் கீர்த்தனாவின் உடல் நிலையும் இல்லை… மன நிலையும் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்…

தேவைக்கு தன் அன்னையை மட்டுமே அணுகினாள்.. அவ்வளவே.. அவளை புரிந்து கொண்ட வசீகரி மட்டும் அல்லாது அனைவரும் அவளின் தேவைகளை கவனித்து கொண்டு இருந்தனர்..

வசீ வீட்டவர்கள் அவளின் இரு குழந்தைகளையும் கவனித்து கொண்டனர்… ஆனால் இவர்கள் பின் பார்க்கலாம். அமைதி காப்போம் என்று நினைத்தாலும், அது போல் மற்றவர்க்ஸ்ள் இருக்க வேண்டுமே.

சொந்தங்கள் இவர்கள் எப்போது விழுவார்கள் என்று காத்து கொண்டு இருந்தார்கள் போல்.. அதுவும் சுபத்ரா முன் செய்த அந்த பெறுமையை வைத்தே… போன் செய்து போன் செய்து துக்கம் விசாரிக்கிறேன் என்ற பெயரில் இவர்களின் துக்கத்தை அதிகரித்து கொண்டு இருந்தார்கள் என்று தான் சொல்ல வேண்டும்..

இவர்கள் ஒரு பக்கம் என்றால், கிஷோர் மனைவியை சமாதனம் செய்யும் பொருட்டு மருத்துவமனையிலேயே கதியாக கிடந்தான்.. தான்… மனைவியிடம் பேசினால் சேர்ந்து விடலாம் என்பது அவனின் எண்ணம். அப்படியான ஒரு எண்ணத்தை தான் கீர்த்தனா காவலர்களிடம் கொடுத்த வாக்குமூலம் அவனுக்கு நம்பிக்கையை கொடுத்தது…

ஆனால் கீர்த்தனா மருத்துவமனையில் இருக்கும் வரையில் கணவனை அருகிலேயே சேர்க்கவில்லை…

பின் ஒரு வழியாக ஒரு வாரம் கழித்து மருத்துவமனையில் இருந்து கீர்த்தனாவை சுபத்ரா பார்த்திபன் தம்பதியர் தன் மகளை வீட்டிற்க்கு அழைத்து வந்தனர்.

எலி மருந்து குடித்து விட்டதால், இது சாப்பிட வேண்டு. அது சாப்பிட கூடாது என்று அத்தனை பத்திரம் சொல்லி தான் கீர்த்தனாவை டிச்சார்ஜ் செய்தனர்.

பெரிய மருத்துவமனை .. அதனால் டிச்சார்ஜ் ஆகும் நாளில் பில் என்று மருத்துவமனை கொடுத்த பில்லின் தொகையும் மிக அதிகமாகவே வந்தது.

பார்த்திபன் பில்லை கையில் வாங்கும் சமயம். அவர் அருகில் சுபத்ரா ஜெய்.. ஏன் கிஷோரும் அங்கு தான் இருந்தான்… எப்படியாவது மனைவியிடம் பேசி விட மாட்டோமா ….? பேசி தங்கள் வீட்டிற்க்கு அழைத்து சென்று விட மாட்டோமா…? என்று அவன் காத்துக் கொண்டு இருக்கும் சமயத்தில் தான் அந்த மருத்துவமனையின் நிர்வாகம் அந்த பில்லை பார்த்திபன் கையில் கொடுத்தது….

பார்த்திபனின் கையில் அந்த பில் வந்த அடுத்த நொடி கிஷோர் மாயமாக மறைந்து விட்டான்…

பார்த்திபன் ஏதாவது இன்சூரன்ஸ் இருக்கா…? என்று கிஷோரிடம் கேட்க நினைத்தார் தான்.. ஏன் என்றால் மருத்துவமனை கொடுத்த பில்லின் தொகை அந்த அளவுக்கு வந்து இருந்தது…

இத்தனை நேரம் இருந்த கிஷோர் தன் கையில் பில் வந்த நொடி மாயமாக மறைந்ததில் பார்த்திபனுக்கு சீ என்று தான் ஆகி விட்டது.. என்ன மாதிரியானவன் இவன் என்று..

பார்த்திபன் கிஷோரிடம் கீர்த்தனாவுக்கு மெடிக்கல் இன்சூரன்ஸ் ஏதாவது போட்டு இருக்கியா என்று கேட்க நினைத்தது கூட அவரிடம் தற் போது சுத்தமாக பணம் கிடையாது என்பதினால் தான்..

ஆம் அவரிடம் பணம் இல்லை தான். தன் சேமிப்பை வைத்து ஏதாவது இடம் வாங்கி போடலாம்.. என்று அவர் நினைக்கும் அளவுக்கு பணம் இருந்தது.. இடம் வாங்குவதில் சின்ன மருமகனிடம் அதை பற்றி ஆலோசனை கேட்க வேண்டும் கூட நினைத்து இருந்தார் தான்.

ஆனால் அதன் பின் நடந்த நிகழ்வுகள்…. ஜெய்யிடம் அதை பற்றி கேட்க முடியவில்லை என்றால், தற்போது அவர் மனைவி செய்து வைத்த செயலில் இனி கேட்க தேவை இருக்காது என்று தான் இது வரை தெரிந்த விசயத்தில் அவர் புரிந்து கொண்டது..

இன்னுமே அவருக்கு பண விசயத்தில் முழு விவரங்கள் தெரியவில்லை என்று தான் சொல்ல வேண்டும். ஆம் முழுமையாக தெரியவில்லை தான்..

கணவன் மனைவிக்கு என்று தனி தனி வங்கி கணக்கு இருந்தாலுமே. இருவரும் சேர்ந்து ஜாயினாக ஒரு வங்கியில் கணக்கு இருக்கிறது..

அது இன்று நேற்று தொடங்கியது கிடையாது.. திருமணம் செய்த ஆரம்ப காலத்தில் தொடங்கிய வங்கி கணக்கு…. இருவருமே அதில் பணத்தை போடுவர்… இது வரை அதில் பணத்தை போட்டு தான் உள்ளனர்.. எடுத்தது கிடையாது… அதன் தொட்டு அதில் ஒரு பெரும் தொகை சேர்ந்து உள்ளது.

வங்கியில் பணத்தை வைத்து இருந்தால், வளராது அதை நிலத்தில் போட்டால் தான் பெரும் என்று ஜெய் மூலம் தெரிந்து கொண்டு நிலம் வாங்கலாம் என்று நினைத்து மனைவியிடம் இதை பேசும் போது மனைவி முழித்த முழியில் என்ன ஏது என்று கேட்க.

கீர்த்தனா வீடு கட்ட கேட்டால் கொடுத்து விடுவாள் என்று சொன்ன சுபத்ரா கூட எத்தனை தொகை என்று தெரியவில்லை..

இப்போது கிஷோர் செய்து வைத்து இருக்கும் செயலே சொன்னது அந்த பணம் எல்லாம் வீடு கட்ட போய் இருக்குமா வேறு எங்கு போய் இருக்கும் என்று…

இப்போது கீர்த்தனா நிலை என்ன… கீர்த்தனாவின் குழந்தைகள் நிலை என்ன என்பதே கீர்த்தனா உடல் நிலையிலும், உள்ளத்திலும் கொஞ்சம் தேறி வந்த பின்பு தான் தெரியும்….அது வரை கீர்த்தனாவிடம் இந்த பணத்தை பற்றி எல்லாம் பேச முடியாது.

இப்போது முதலில் இந்த பில்லை செட்டில் மெண்ட் செய்ய என்ன செய்யலாம் என்று யோசிக்கலாம் என்று நினைத்து மனைவியை பார்த்தார்…

கணவரின் அந்த பார்வையை சுபத்ராவும் எதிர் பார்த்தார் போல்.. அதன் தொட்டு தன் கையில் உள்ள வளையலை கழட்ட முயற்பட்டார்.. சுபத்ராவினால் சட்டென்று அந்த வளையலை கழட்ட முடியவில்லை….

அதற்க்கு காரணம் வளையல் சின்னதாக இருப்பதினால் கிடையாது… முதன் முதலில் அடகு வைக்க என்று தன் கையில் இருந்து ஒரு வளையலை கழட்டுவதினால்..

அதன் தொட்டு சுபத்ராவின் கண்களில் இருந்து ஒரு சொட்டு கண்ணீர் கூட வர பார்த்தது தான்.. பக்கத்தில் சின்ன மருமகன் இருக்கும் தொட்டு கண்ணீரை அடக்கி கொண்டாலுமே ஒரு கேவல் வந்து விட….

அதில் இருந்து பார்த்திபனுக்கு புரிந்து விட்டது.. கீர்த்தனாவிடம் தன் மனைவி அனைத்தையும் கொடுத்து விட்டாள் என்பதை..

இதை அனைத்தையும் பார்த்த பின்பு தான் ஜெய்க்கு பணமும் பிரச்சனை என்பதே அவனுக்கு புரிந்தது…




 
Active member
Joined
May 12, 2025
Messages
34
கேட்டா போல யூடி கொடுத்ததுக்கு நன்றி விஜி சிஸ். இதே போல் கொஞ்சம ரெகுலராக யூடி கொடுக்க ட்ரை பண்ணுங்க சிஸ்

மனதைரியம் இல்லாமல் என்ன மாதிரி பொண்ணு கீர்த்தனா? இதுக்கு மேல் தான் இந்த உலகை சந்திக்க வேண்டும், வேலைக்கு போக வேண்டும், கணவனின் உறவை பற்றி என்ன செய்வது என்று சிந்திக்க வேண்டும், குழந்தைகளை நன்றாக பார்த்துக்கொள்ள வேண்டும். இதெல்லாம் விட்டுட்டு என்ன மாதிரி முடிவு எடுக்கப்பாத்தா?

அதுக்கு மேல இந்த சுபத்ரா. மாசமா இருக்க பொண்ணு கிட்ட அதிர்ச்சியான விஷயத்தை இப்படியா தடால்னு சொல்லுவாங்க. தலையில் தூக்கி வைத்து ஆடிய மூத்த மாப்பிள்ளை பில் வந்தவுடனே எப்படி எஸ் ஆனான் பாத்தீங்களா சுபி மம்மி! பெரிய பொண்ணு கேட்க கேட்க கணக்கில்லாமல் தந்திருக்கீங்க போலயே. இதே சின்ன பொண்ணு கேட்ருந்தா அட்வைஸ் தான் கொடுத்துருப்பீங்க. பாடம் படிச்சுக்கங்க நீங்க முதல்ல
 
Well-known member
Joined
Mar 31, 2025
Messages
128
கேட்டா போல யூடி கொடுத்ததுக்கு நன்றி விஜி சிஸ். இதே போல் கொஞ்சம ரெகுலராக யூடி கொடுக்க ட்ரை பண்ணுங்க சிஸ்

மனதைரியம் இல்லாமல் என்ன மாதிரி பொண்ணு கீர்த்தனா? இதுக்கு மேல் தான் இந்த உலகை சந்திக்க வேண்டும், வேலைக்கு போக வேண்டும், கணவனின் உறவை பற்றி என்ன செய்வது என்று சிந்திக்க வேண்டும், குழந்தைகளை நன்றாக பார்த்துக்கொள்ள வேண்டும். இதெல்லாம் விட்டுட்டு என்ன மாதிரி முடிவு எடுக்கப்பாத்தா?

அதுக்கு மேல இந்த சுபத்ரா. மாசமா இருக்க பொண்ணு கிட்ட அதிர்ச்சியான விஷயத்தை இப்படியா தடால்னு சொல்லுவாங்க. தலையில் தூக்கி வைத்து ஆடிய மூத்த மாப்பிள்ளை பில் வந்தவுடனே எப்படி எஸ் ஆனான் பாத்தீங்களா சுபி மம்மி! பெரிய பொண்ணு கேட்க கேட்க கணக்கில்லாமல் தந்திருக்கீங்க போலயே. இதே சின்ன பொண்ணு கேட்ருந்தா அட்வைஸ் தான் கொடுத்துருப்பீங்க. பாடம் படிச்சுக்கங்க நீங்க முதல்ல
Well said raji sis😍
 
Well-known member
Joined
Mar 3, 2025
Messages
272
கேட்டா போல யூடி கொடுத்ததுக்கு நன்றி விஜி சிஸ். இதே போல் கொஞ்சம ரெகுலராக யூடி கொடுக்க ட்ரை பண்ணுங்க சிஸ்

மனதைரியம் இல்லாமல் என்ன மாதிரி பொண்ணு கீர்த்தனா? இதுக்கு மேல் தான் இந்த உலகை சந்திக்க வேண்டும், வேலைக்கு போக வேண்டும், கணவனின் உறவை பற்றி என்ன செய்வது என்று சிந்திக்க வேண்டும், குழந்தைகளை நன்றாக பார்த்துக்கொள்ள வேண்டும். இதெல்லாம் விட்டுட்டு என்ன மாதிரி முடிவு எடுக்கப்பாத்தா?

அதுக்கு மேல இந்த சுபத்ரா. மாசமா இருக்க பொண்ணு கிட்ட அதிர்ச்சியான விஷயத்தை இப்படியா தடால்னு சொல்லுவாங்க. தலையில் தூக்கி வைத்து ஆடிய மூத்த மாப்பிள்ளை பில் வந்தவுடனே எப்படி எஸ் ஆனான் பாத்தீங்களா சுபி மம்மி! பெரிய பொண்ணு கேட்க கேட்க கணக்கில்லாமல் தந்திருக்கீங்க போலயே. இதே சின்ன பொண்ணு கேட்ருந்தா அட்வைஸ் தான் கொடுத்துருப்பீங்க. பாடம் படிச்சுக்கங்க நீங்க முதல்ல
கரக்கிட்டா சொன்னீங்க மச்சீ பாடம் படிக்க வேண்டியது சுபத்ரா தான்.
 
Well-known member
Joined
Jun 1, 2024
Messages
263
நைஸ் அப்டேட் 😍😍😍😍😍

சுபத்ரா பணக்கார மருமகன் கேட்டா எவ்வளவு பணம் வேணாலும் தரலாம்.... 😒😒😒
இப்போ மொத்தமா போச்சு 🤭🤭

யாரை குறைவா நினைச்சீங்களோ அந்த சின்ன மருமகன் தான் இப்போ உங்களுக்கு துணையா இருக்கான்....
 
Top