அத்தியாயம்….16
கூடத்திற்க்கு வந்துமே அக்னி தன் மனைவியின் கை பிடியை விடவில்லை… மரகத்தத்தின் பார்வையோ அவர்களின் கை பிடியை ஒரு பார்வை பார்த்த பின்பு தான் அக்னி ஸ்வேதாவின் முகத்தையே பார்த்தது…
ஸ்வேதா வெளியில் செல்வது போல் தயாராகி இருப்பதை பார்த்து..
“நீ கூட போறியா…?” என்று அதிர்ச்சியாக கேட்டார்..
உண்மையில் மரகதத்தின் இந்த கேள்வியில் ஸ்வேதா தான் அதிர்ச்சியாகி இருக்க வேண்டும் …
ஆனால் அதை எப்போதும் போல் முகத்தில் காட்டாது… “ ஆமாம்.. அத்தை…” என்று அமைதியான முக பாவத்தோடு நிதானமாக பதில் அளித்தாள்..
அவளின் அந்த அமைதியும் நிதானமும் உண்மையில் மரகத்திற்க்கு பிடிக்கவில்லை தான்… மகன் இந்த பெண்ணை தான் கட்டுவேன் என்று கை காட்டியதில் இருந்து அத்தனை கோபம்.. அதனால் அவரின் ரத்த அழுத்தமும் ஏறி இருக்க..
இந்த பெண் என்ன இத்தனை நிதானமாக இருக்கிறாள் என்ற கோபம் அவருக்கு.. அதுவும் நேற்று வரை பரவாயில்லை இல்லாத வீட்டு பெண் என்பதினால் அமைதியாக இருக்கிறாள் என்று நினைத்தவருக்கு..
இரவு இங்கு இடம் இல்லை என்று அதே தெருவில் இருக்கும் தன் பெண் வீட்டிற்க்கு படுக்க சென்றார்.. அங்கு மகளும் மருமகனும் பேசிய பேச்சான.
“உங்களுக்கு என்ன தலையெழுத்தாம்மா இப்படி வந்து அடுத்த வீட்டில் படுத்து இருக்க…” சொந்த வீடு கட்டிய பின்னுமே ப்ரீத்தா இன்னுமே வாடகை வீட்டில் தான் இருக்கிறாள்..
இன்னும் புதிய வீட்டிற்க்கு குடி போகவில்லை.. பால் மட்டும் காய்ச்சி விட்டு ஒருத்தரை வாடகைக்கு விட்டு விட்டாள்..
அதற்க்கு காரணம்.. ப்ரீத்தாவும் சுந்தரமும் முதலில் பெரிய அளவில் அனைவரையும் கூட்டி கிரகபிரவேசம் மிக கிரண்டாக நடத்த தான் நினைத்தார்கள்…
கிரகபிரவேத்திற்க்கு நல்ல நாள் பார்த்து அக்னியிடம்… “ இந்த நாள் வைத்து இருக்கேன் அண்ணா கண்டிப்பா நீங்க வந்து தான் ஆகனும்.” என்று சொன்ன போது.
அக்னி. “ இப்போ தான் உன் பெண் காது குத்துக்கு இந்தியா வந்து போனேன் ப்ரீத்தா.. திரும்ப இங்கு உடனே எல்லாம் லீவு கொடுக்க மாட்டாங்க… கிரகபிரவேசம் தானே.. நீங்களே செய்து கொள்ளுங்க. நான் அங்கு வரும் போது வீட்டை பார்த்துக்குறேன் …” என்று விட்டான்..
ப்ரீத்தா அண்ணனை அத்தனை வருந்தி அழைத்தது.. அண்ணன் தன் வீட்டை வந்து பார்க்கவா.. அண்ணன் வந்தால் கண்டிப்பாக ஒரு பெரிய தொகை கொடுப்பான் என்று தான்..
பெண் மொட்டை அடித்ததிற்க்கு கூட இந்தியா வந்த அக்னி… இரண்டு லட்சம் கொடுத்தான்.. முன்பே அம்மா வீட்டு சீராக மரகதம் பெண்ணுக்கு நிறைக்க தான் செய்தது… அதுவுமே அக்னி பணம் தான்..
அதை நினைத்து தான் ப்ரீத்தா தன் அண்ணனை அழைத்தது.. அண்ணன் நீயே செய்..கிரகபிவேசத்தை செய்யாது மிக எளிமையாக பால் மட்டும் காய்ச்சி பேச்சிலராக பார்த்து குடித்தனம் வைத்து விட்டாள்.
அக்னி கூட. “ ஏன்…?” என்று கேட்டதற்க்கு..
ப்ரீத்தா. “ நீ இல்லாம்மா செய்ய பிடிக்கலேண்ணா.. நீ வந்த பின் தான் நான் செய்வேன்.” என்று விட்டாள்..
எப்படியாவது அண்ணனிடம் வசூலித்து விட வேண்டும் என்று நினைத்து விட்டாள் போல்.. அதனால் தான் இப்போது ப்ரீத்தா சுந்தரம்..
மரகத்தத்திடம்… “ இப்படி அத்தனை பெரிய இடம் இருக்க எங்களுக்கு தான் தலையெழுத்து இங்கு இருக்கோம்.. உங்களுக்கு என்ன…?” என்று அவரை ஏத்தி விடும் வேலையை செய்ய..
மரகதம் .. “ அது தான் அவன் இனி அங்கு வேலை செய்ய மாட்டேன். இங்கேயே என்று விட்டானடி.. என்ன செய்ய…” என்று அவருமே குறைப்பட தான் செய்தார்…
சுந்தரம் தான்.. “ அது தான் அத்த எனக்கு புரியல.. உங்க மகன் தான் வெளிநாட்டு வாழ்க்கைக்கு அப்படி ஆசைப்பட்டு அத்தனை பணம் கஷ்டத்திலும் படிச்சு முடிச்சு.. வேலை கிடச்சி.. பத்து வருஷம் வேலை பார்த்து. இதோ க்ரீன் கார்ட்டும் கிடச்ச பின்.. இனி இங்கு தான் என்று சொல்றான்…
அதுவும் தும்பு தூசி இல்லாம ஏசி ரூமில் உட்கார்ந்து வேலை பார்ப்பதை விட்டு விட்டு.. இத்தனை ரிஸ்க் எடுத்து இங்கு வந்து செட்டில் ஆக என்ன காரணமா இருக்கனும்…” என்று சொல்லிக் கொண்டெ சுந்தரம் தன் மனைவிக்கு கண் ஜாடை காட்டினான்.
ப்ரீத்தாவும் அதை உடனே புரிந்து கொண்டு.. “ ம்மா எனக்கு என்னவோ இது ஸ்வேதாவுக்காக தான் என்று எனக்கு தோனுதும்மா…” என்றவளின் பேச்சி, மரகதம். குழம்பிய முகபாவனையில் தன் மகளை பார்த்தார்.
ப்ரீத்தாவோ எனக்கு இது தானே வேண்டும் என்பது போல்… “ ம்மா நீங்களே நல்லா யோசிச்சு பாருங்க. அண்ணாவுக்கு வெளி நாட்டு வாழ்க்கை அங்கு தான் என் லைப் இது தானே சொல்லிட்டு இருப்பான். அதுவும் அந்த க்ரீட் கார்ட் கிடைக்க கொஞ்சம் லேட் ஆனதுக்கே எத்தனை டென்ஷனா அண்ணா உங்க கிட்ட போனில் பேசினார்..
அப்படி பட்டவர்.. இப்போது இப்படி இங்கு தான்னா என்னம்மா காரணமா இருக்க முடியும்.. அதுவும் கல்யாணம் ஆனவுடனே…” என்று சொல்லி இரவு முழுவதும் மகளும் மருமகனும் அவரை நன்றாக குழப்பி விட்டு தான் இங்கு அனுப்பி வைத்ததே….
அவர்களின் பேச்சில் மரகதமும் மகன் இவள் பேச்சை கேட்டு தான் இந்தியாவில் இருப்பதாக முடிவு எடுத்தானா என்ற சந்தேகமும் வர ஆரம்பித்ததில் இருந்து முதலில் பிடிக்காததை விட இப்போது விரோதியாகவே பார்க்க ஆரம்பித்து விட்டார் என்று தான் சொல்ல வேண்டும்..
இவர்கள் நினைத்தது போல் அக்னி ஸ்வேதாவை கட்ட முடிவு செய்த பின் தான் இந்தியாவில் செட்டில் ஆக முடிவு செய்தது.. ஆனால் அதை ஸ்வேதா சொல்லவில்லை.. ஸ்வேதாவின் மீது இருக்கும் காதலில் அக்னி முடிவு செய்தது..
எதுவும் தெரியாத போதே இத்தனை வன்மமாக பார்க்கும் மரகதம். உண்மை தெரிந்தால் என்ன ஆகுமோ….
மரகதம் இதை எல்லாம் மனதில் வைத்தும் கொண்டு ஸ்வேதாவை ஒரு மாதிரியாக கோபமாக பார்த்து கொண்டு தான்.
“நீ வழி அனுப்ப போக வேண்டாம். அக்னி தம்பி போவான்.. அண்ணனும் தம்பியும் போகட்டும்.” என்று சொல்ல.
அதற்க்கு ஏற்றது போல் அகரனும் அந்த அதிகாலையில் கிளம்பி வந்தவன்..
“போகலாமாண்ணா எல்லாம் எடுத்து வெச்சிட்டியா….?” என்று கேட்டவனை பார்த்து ஸ்வேதா..
“ இல்ல நானே போறேன்…” என்று சொன்னவளின் பேச்சில் அத்தனை அழுத்தம் இருந்தது..
அவளின் அந்த அழுத்தமான பேச்சில் பக்கத்தில் நின்று கொண்டு இருந்த அக்னியே திரும்பி அவளை பார்த்தான் என்றால், அவளின் அந்த ஒரு வார்த்தையில் எத்தனை அழுத்தத்தை கொடுத்து இருப்பாள் என்று பாருங்கள்…
மரகததிற்க்கு அவளின் பேச்சில் மகளும் மருமகனும் சொன்னது உண்மை தான் போல்… ஊமை மாதிரி அமைதியா இருந்துட்டு இப்போது இப்படி பேசுறா… என்று மனதில் நினைத்தவர் அதை முகத்திலும் காட்டிக் கொண்டவராக..
“ஏம்மா அண்ணனும் தம்பியும் போகட்டும்… நீ இரு..” என்று அதிகாரமாக சொல்ல.
இந்த முறை அக்னி… “ ம்மா ஸ்வேதாவே வழி அனுப்ப வரட்டும்…” என்று முடித்து கொண்டவன்..
ஸ்வேதாவை பார்த்து வா.. என்பது போல் ஜாடை காட்டினான். ஸ்வேதாவுமே அதற்க்கு அடுத்து எதுவும் பேசவில்லை.. ஏன் யாரின் முகத்தையும் கூட பார்க்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.
அவளுக்கு இப்போது அனைத்தையும் விட தன் கணவனை பார்க்க இன்னும் ஒரு மாதம் காத்திருக்க வேண்டும்.. அதுவே பெரியதாக அவள் நினைவில் தங்க..
கணவனின் கை பிடித்து கொண்டு தான் சென்றது..
அவர்கள் சென்றதை அத்தனை கோபமாக பார்த்து கொண்டு இருந்த மரகதத்திற்க்கு முன் கோபமாக வந்து நின்ற அகரன்..
“ அவமானம் படுத்துறது என்னம்மா இது.. இந்த நேரத்தில் மாசமா இருக்கும் பெண்ணை எழுப்பி ரெடியாகி வந்து நின்னா உங்க பெரிய மகன் அவர் பொண்டாட்டிய கூட்டிட்டு கிளம்பிட்டாரு… ரெடியாகி நின்னு நான் தான் இப்போ பேக்கு மாதிரி நிற்கிறேன்.. உங்க பெரிய மகன் இப்போ இல்ல எப்போவுமே அப்படி தான் என்னை ஒரு மாதிரி தான் நடத்துவான்..
இப்போ அவன் பொண்டாட்டி எதிர்க்க இப்படி அசிங்கப்படுத்திட்டு போறாரு,, அந்த பெண் என்னை என்ன என்று மதிக்கும்…?” என்ற சின்ன மகனின் பேச்சில் மரகதம் மற்றதை விடுத்து.
ஸ்வேதா தன் சின்ன மகனை மதிக்க மாட்டாளாம்மா…? என்ற அது தான் பெரியதாக தோன்ற
“ வீசின கையும் வெறும் கைய்யோட வந்தவள் உன்னை மதிக்க மாட்டாலாமா…?” என்று கேட்டவரை
ப்ரீத்தா.. “ ம்மா இப்போ அது தான் முக்கியமா..? என்பது போல் கேட்டவள்..
பின். “ ம்மா இனி இது போல நாம சண்டை போட்டா எல்லாம் வேலைக்கு ஆகாது சொல்லிட்டேன்… “ என்று சொன்னவளை முறைத்து பார்த்த அகரன் தன் அறைக்கு சென்று விட்டான்..
மரகதம்.. “ உனக்கு என்னடி…?” என்று கேட்ட போது ப்ரீத்தா ஒன்னும் இல்லை என்று தலையாட்டினாலும் ப்ரீத்தாவின் மனதில் ஓராயிரம் விசயம் இருந்தது என்று தான் சொல்ல வேண்டும்..
ப்ரீத்தாவின் முகம் தெளிவு இல்லாமல் தான் இருந்தது.. ஏனோ தான் ஏதோ ஒன்று நினைக்க இப்படி அனைத்துமே எதிர்பதமாக நடப்பது அவளுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை.
இன்னும் கேட்டால் அவளின் அன்னை அவனின் தம்பி அகரனை வீட்டிற்க்கு அழைத்து கொள்வதில் கூட அவளுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை..
அதை அவளின் அன்னையிடம் சொல்லவும் செய்தாள்..
“ இப்போ எதுக்கு அவன் இங்கு வந்து இருக்கனும் என்று ஒத்தக்கால நிற்கிறிங்கம்மா…?” என்று கேட்டதற்க்கு.
மரகதம்… மகள் தன் நிச்சயம் அன்று அவன் திருமணம் செய்து கொண்டு தன் வாழ்க்கையை குழப்ப பார்த்தானே என்ற கோபத்தில் தான் இப்படி பேசுகிறாள் என்று நினைத்து.
“அந்த வயசுல ஏதோ தெரியாம செய்துட்டான் டி அதை விடேன்… இப்போ மனைவி உண்டாகி இருக்கவும் துணை தேடுறான்… கூட யார் யாரோ நம்ம மகனின் காசை சாப்பிடும் போது அவன் சாப்பிட்டால் என்ன…” என்று கேட்டார்..
உண்மையில் ப்ரீத்தாவுக்கு தன் நிச்சயத்திற்க்கு அகரன் திருமணம் செய்து கொண்டு வந்தது எல்லாம் மறந்தே போய் விட்டது என்று தான் சொல்ல வேண்டும்..
இப்போது அவள் நினைவில் நிற்பது எல்லாம் இந்த வீடு.. இதில் தன் பங்கு… அதோடு அக்னி வெளி நாட்டிலேயே தான் இருந்து விடுவான். அவன் சம்பாதிப்பதை இந்தியாவில் தான் சொத்து வாங்கி போடுவான் அதை இங்கு பார்த்து கொள்ள வேண்டும் என்ற நினைப்பில் இருந்தவள்.
முதலில் அவளின் தம்பி அகரன் இங்கு வந்ததே பிடிக்கவில்லை.. பின் அன்னை பேச்சு வாக்கில் சொன்ன உஷாவுக்கு இருக்கும் சொத்தை பற்றி கேட்டதில்.. இது எல்லாம் அவளுக்கு ஒன்றும் இல்லை என்று நினைத்து விட்டு விட்டாள்…
அவளின் திட்டம் எல்லாம் அண்ணன் வெளிநாட்டில் செட்டில் ஆனால் இந்த பரம்பரை சொத்து எல்லாம் அவனுக்கு ஒன்றுமே இல்லை.. மொத்தமாகவோ இல்லை அகரன் கேட்டால் அவனுக்கு ஒரு பாகம் முக்கால் வாசி தான் எடுத்து கொள்ளலாம் என்ற திட்டதில் இருந்தவளுக்கு… அதுவும் அண்ணன் இந்த இடத்தி பெரிய வீடா கட்டினால் வீட்டோடு தான் எடுத்து கொள்ளலாம் என்று நினைத்து இருந்தவளின் நினைப்பில் ஒரு கூடை நெருப்பை எடுத்து போட்டது போல்…
அக்னி இங்கு தான் என்று ஆனாதில் கோபம் கோபம்.. அதை யார் மீது காட்டுவது என்று காத்துக் கொண்டு இருந்தவள்.
அப்போது தான் அங்கு வந்த அவள் கணவன் மீது தான் அவளின் மொத்த கோபத்தையும் கொட்டினாள்..
“நம்ம கல்யாணம் பண்ணப்பவே… அண்ணனோடு அங்கு போங்க. அங்கே வேலை பாருங்க.. நாமலும் அங்கு செட்டில் ஆகலாம் என்று சொன்னேன் தானே.” என்று பிடி பிடி என்று பிடித்து கொண்டு விட்டாள்..
சுந்தரமும் மனைவிக்கு குறை இல்லாது. “ என்னவோ உன் அண்ணன் எனக்கு வேலை கையில் வெச்சிட்டு இங்கு வா வா என்று அழச்சது போலவும். நான் அங்கு போகவே மாட்டான் என்று சொன்னது போலவோம் போல தானே நீ பேசிட்டு இருக்க…” என்று பதிலுக்கு கத்தினார்… இருவருக்கும் இடையில் அவர்கள் குழந்தை தான் மாட்டிக் கொண்டு அழ ஆரம்பித்து விட..
மரகதம் தான் ஒரு வழியாக மகள் மாப்பிள்ளையை ஒரு வழியாக சமாதானம் செய்து சாப்பிட வைத்து குழந்தையை தான் வாங்கி கொண்டு அவர்களை வேலைக்கு அனுப்பி வைத்தார்.
இந்த பேச்சு வார்த்தைகளை எல்லாம் அறையில் அமர்ந்து கேட்டு கொண்டு இருந்த அகனும் உஷாவும் கடைசியாக ப்ரீத்தா சொன்ன.
“அங்கு வேலை பார்த்து இருக்கலாம்.. “ என்றதில் உஷா.
“ஏங்க நீங்க மாமா கிட்ட சொல்லி உங்களுக்கு அங்கு வேலைக்கு ஏற்பாடு செய்ய சொல்லுங்கலேன்….” என்று சொல்ல.
அகரனுக்கும் அது சரி என்று தான் தோன்றியது..
இருந்தும் அக்னியே இங்கு வந்து விடுவானே என்று நினைத்தவன் அதை மனைவியிடமும் சொல்ல.
உஷா… “ இத்தனை வருஷத்தில் கண்டிப்பா உங்க அண்ணனுக்கு அங்கு நிறைய பேர தெரிஞ்சி இருக்கும்.. கூட அவர் வேலை பார்த்த இடத்தில் கூட அவர் உங்களுக்கு ரெக்கமெண்ட் செய்யலாம்.. அதோடு அதுவா இதுவா என்று நாமலே யோசிச்சி இருந்தா வேலைக்கு ஆகாது…
வாய் உள்ள பிள்ளைங்க தான் பிழைக்கும்.. நம்ம தேவைக்கு நாம தான் வாயை திறந்து கேட்கனும்..” என்று உஷா சொல்ல.
அகரனும்.. “ கேட்கிறேன் உஷா. நாம ஏதாவது செய்து தான் ஆக வேண்டும்.. இல்ல என்றால் நம்ம குழந்தைக்கு நாம வளமான ஒரு எதிர் காலத்தை கொடுக்க முடியாது…” என்று சொல்லிக் கொண்டே தன் மனைவியின் மீது கை வைத்தான்..
இப்படி அவர் அவர் எதிர்கால வாழ்க்கையை பற்றி சுயநலமாக யோசித்துக் கொண்டு இருக்க.
இங்கு விமான நிலையத்தில் ஸ்வேதா அவர் போகும் போது அழ கூடாது அழ கூடாது என்று என்ன தான் கண்ணீரை கட்டுப்படுத்தி வைத்து கொண்டு இருந்தாலும் அக்னி..
விடை பெறும் விதமாக பிடித்து கொண்டு இருந்த அவளின் கையில் அழுத்ததை கூட்டியவன்..
“அப்போ நான் வரேன் டா…” என்று அவன் சொன்னது தான் தாமதம்..
சத்தமாக அழவில்லை.. ஏன் குரல் கூட எழும்பவில்லை.. அவனுக்கு பதிலாக தலையை மட்டும் சரி என்பதாக அப்படி இப்படி என்று ஆட்டியவளின் கண்களில் மட்டும் கண்ணீர் விடாது வந்த வண்ணம் இருந்தது.. அதுவும் அவள் கண்ணீர் வர கூடாது என்று கண்ணை சிமிட்டி சிமிட்டி உள் இழுக்க பார்த்தவளின் முயற்ச்சியையும் தான்டி கண்ணீர் வந்து விழ. அதை பார்த்தவனுக்கு என்னவோ போல் தான் ஆனது.
கூடவே பணம் என்ன பணம். இப்போ தான் ஒன்றும் ஒன்னும் இல்லாது இல்லையே. இருக்கு தான். ஆனால் இப்போது தான் சென்று முடிக்க வேண்டிய வேலைகளை முடித்து கொடுத்தால் கண்டிப்பா அமெரிக்கன்காரன் தரும் அந்த பணமானது… பெரிய தொகை..
அந்த தொகை இருந்தால் பயம் இல்லாது தங்களின் எதிர்கால வாழ்க்கையை பற்றி திட்டம் இடலாம்.. ஆனால் அந்த வளமான வாழ்க்கைக்கு தன் மனைவியை இப்படி கஷ்டப்பட்டு தான் கிடைக்கும் என்றால் அது வேண்டாம் என்று முடிவு செய்தவனாக.
மனைவியின் கண்ணீரை துடைத்து விட்ட அக்னி..
“வா டா நாம வீட்டுக்கே போகலாம்…” என்று சொன்னதுமே ஸ்வேதாவின் முகம் சட்டென்று விளக்கு போட்டது போல் பிரகாசமாக மிளர்ந்தது…