Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம், "கதையருவி" தளத்திற்கு தங்களை வரவேற்கிறோம்!

    இத்தளத்தில் எழுத எங்களை "vskathaiaruvi@gmail.com" என்ற மின்னஞ்சலில் தொடர்புக் கொள்ளவும். நன்றி!

Prithariyaa Pithana Podhum-4

  • Thread Author
அத்தியாயம்…4

முன் தினம் தான் சோமசுந்தரம் கல்லூரிக்கும் சரி.. பள்ளிக்கும் சரி .. தனக்கு கீழ் உள்ளவர்களிடம்.. “ மாலை நம்ம ஸ்டாப் மொத்த பேரும் அசம்பல் ஆவது போல் பார்த்து கொள் ..” என்றார்..

இப்போது சிவ பிரகாஷ் கீழ் நிர்வாகம் இருந்தாலுமே, இன்னும் அங்கு சோமசுந்தரத்திற்க்கு மதிப்பு இருக்க தான் செய்தது…

அதனால் ஒரே நாளில் யாரும் எதிர் பாரா வகையில் குறைந்த நேரம் இருந்தாலுமே நிறைவாகவே அந்த s,m பள்ளி கல்லூரி நிர்வாகம் கீழ் இயங்குபவர்கள் செய்து முடித்து விட்டனர்..

சோமசுந்தரமும் மதியமே அனைத்தும் சரியாக இருக்கிறதா என்று அவரே பார்க்க செல்ல. அனைத்தும் நிறைவாக இருந்ததில்.. செய்தவர்களை பாராட்டவும் செய்தார்..

இது தான் சோமசுந்தரம் .. தவறு செய்தால் கடுமையாக நடந்து கொள்பவர்.. திறமையை கண்டால் உடனே பாராட்டியும் விடுவார்..

இது அந்த குழுமத்தின் பழைய ஊழியர்களுக்கு நன்கு தெரியும்.. அவரின் ஒவ்வொரு பாராட்டிற்க்கும் மனதில் மகிழ்ந்து போனாலுமே.

வெளியில் ..” இதில் என்ன ஐய்யா இருக்கு.. நாங்க செய்யும் கடமை தானே..” என்று விடுவார்.. இருந்தும் அடுத்த முறை சோமசுந்தரம் கொடுக்கும் வேலைகளை இன்னும் கச்சிதமாக செய்து முடிப்பர்…

மனித இயல்பு பாராட்டுக்கு மகிழ்ந்து போவது தானே… இது தான் சோமசுந்தரத்தின் வெற்றிக்கு வித்திட்டது எனலால்..

அதே போல் வேலை செய்பவர்களிடம் சொல்லி விட்டோம் இனி அவர்கள் பார்த்து கொள்வார்கள் என்றும் விட்டு விட மாட்டார்.. அனைத்தும் சரியாக இருக்கிறதா…? என்று இடையில் இவர் சென்றும் பார்த்து கொள்வார்.

இதோ இன்று போல் தான்.. அதனால் தான் எஸ்.எம் குழுவில் வேலை செய்பவர்கள் சோமசுந்தரம் சொல்லும் நேரத்திற்க்கு முன் முடித்து விடுவர்.. ஏன் என்றால் அவர்களுக்கு தெரியும்.. அவர் இடையில் வந்து பார்ப்பார் என்றும்..

அது போல் வந்தவருக்கு விழா ஏற்பாட்டை பார்த்து முழு திருப்தி.. ஒன்று இரண்டு .. “இது செய்.. அது செய்..” என்றதோடு அவ்வளவு தான்..



அனைத்தும் செய்து முடித்தவர்களுக்கு இந்த ஏற்பாடு ஏன் என்று தான் தெரியாது போயிற்று… ஆனாலும் நிர்வாகத்தில் இருப்பவர்களுக்கு மனதில் ஒரு சந்தேகம் நிர்வாகம் கை மாறுகிறதா என்று.

சிவ பிரகாஷ் இந்த கல்லூரி.. பள்ளியை பார்த்து கொண்டாலுமே, சட்டப்படி நிர்வாகம் மாறுகிறது என்று எல்லாம் அறிவிக்கைப்படவில்லை..

லிங்காவின் தந்தைக்கு வேறு தொழில் இருப்பதால் வேறு என்றால் மால் சினிமா தியேட்டர்.. கல்யாண மண்டபம் பார்த்து கொள்வது தான்..

கல்லூரி பள்ளி நிர்வாகம் பற்றி அவருக்கு ஒன்றும் தெரியாததால் சிவ பிராகாஷே அந்த பொறுப்பை தான் ஏற்றுக் கொண்டார். பின் நாளில் இது தனக்கு அனைத்து விதத்திலும் வசதியாக இருக்கும் என்று கருதி.

அதனால் நிர்வாகம் சிவ பிராகஷிடம் கை மாறுகிறதா.. என்று கேட்டவர்களுக்கு. இப்போது அவர் தானே பார்த்து கொள்கிறார் என்று சொல்ல..

அது சட்டப்படி எல்லாம் கிடையாது.. பெரியவருக்கு உதவியாக தானே செய்து கொண்டு இருக்கிறார்.. என்று விளக்கம் சொல்லினர்.

அப்போதும் ஓரு சிலர் லிங்காவின் தந்தையான ஜெய பிரகாஷை குறிப்பிட்டு.. “ ஒரு வேள அவர் கீழ் நிர்வாகம் போகுதோ..” என்ற சந்தேகமும் எழுந்தன..

ஒட்டு மொத்தம் இவர் கீழா.. ? அவர் கீழா..? என்று கேட்டனரே ஒழிய லிங்கேஷ்வரன் கீழ் இந்த நிர்வாகம் செல்லும் என்று அங்கு யாருமே எதிர் பார்க்கவில்லை.. ஏன் என்றால் அந்த வீட்டில் அவன் ஒருவன் இருக்கிறான்.. இருந்தான் என்பதையே அனைவரும் மறந்து விட்டனர்.. மறக்கடித்து விட்டனர் என்று தான் சொல்ல வேண்டும்..

ஏஸ்.. எம் நிர்வாக குழுவினர் அனைவரும் காத்து கொண்டு இருக்க முதலில் லிங்காவின் விஜயம் பள்ளியில் இருந்து ஆரம்பித்தது.. லிங்காவுடன் சோமசுந்தரம் ஒரு காரில் முதலில் வந்து இறங்கினர்..

யாரும் கேட்காத போதும்.. அது என்னவோ லிங்கா சோமசுந்தரத்தின் பிரதிபிம்பமாக இருந்ததாலோ என்னவோ.. நிர்வாகம் அவன் கீழ் தான் வர இருக்கிறது என்று தெரியாத போதும், அவனுக்கு சோமசுந்தரத்திற்க்கு நிகராகாக தான் மரியாதை கொடுக்கப்பட்டது..

அதன் பின் ஒவ்வொரு காராக வந்து இறங்கிய சோமசுந்தர குடும்பத்திற்க்கும் வர வேற்ப்பு கிடைத்தாலுமே, இவர்கள் அளவுக்கு இல்லை என்பது தான் உண்மை..

அதை அனைவருமே கவனித்தாலுமே, ஒன்றும் சொல்ல முடியாது பல்லை மட்டுமே கடித்து அவர்கள் கோபத்தை கட்டுப்படுத்தி கொண்டு இருந்தனர்..

இந்த நிர்வாகம் கை மாறுவதில் சோமசுந்தர குடும்பத்தில் இருப்பவர்கள் அனைவருக்கும் பிடித்தம் இல்லை என்று சொல்ல முடியாது..

லிங்காவின் சின்ன அத்தை காயத்ரியின் குடும்பத்திற்க்கு பள்ளியும் , கல்லூரியும் நல்ல முறையில் இயங்க வேண்டும்.. அவ்வளவு தான்.. அதனால் பிடித்தம் இன்மை என்பது எல்லாம் கிடையாது தான்..

ஆனாலுமே… பெயர் பெற்ற பள்ளி கல்லூரி.. இதில் எந்த பாதிப்பும் வந்து விட கூடாது.. அது மட்டுமே அவர்களுக்கு வேண்டும்.. அதோடு சின்ன வயதில் தன்னுள் ஒடுங்கி இருந்தவன்.. அதன் பின் கனடா சென்று விட்டவனுக்கு .

இந்தியாவின் சட்ட திட்டங்கள் அனைத்தும் தெரியுமா…? அதோடு இவனுக்கு நிர்வாகத்தை பற்றி என்ன தெரியும்.. ? ஏதாவது செய்து கல்லூரி பள்ளிக்கு கெட்ட பெயர் வந்து விட்டால், இது மட்டும் தான் அவர்களுடைய கவலையாக இருந்தது.

அடுத்த தலை முறைக்கு அதாவது சிவ பிரகாஷ் மகன் சிவகுமாரை தவிர.. மற்றவர்களுக்கு அந்த கவலையும் கிடையாது.. அவர்களை பொறுத்த வரை ராமர் ஆண்டால் என்ன. ராவணன் ஆண்டால் என்ன அவ்வளவே..

நிர்வாகம் ஏற்பாடு செய்த மேடையில் சோமசுந்தரம் அருகில் லிங்கேஷ்வரன் அமர்ந்து இருக்க. அவர்கள் இருவரும் ஒருவருக்குள் ஒருவர் வாயை கை கொண்டு மறைத்தார் போல்.. ஏதோ பேசிக் கொண்டு இருந்ததை பார்த்த அனைவர்களுக்கும் இப்போது விளங்கி விட்டது.

நிர்வாகம் இனி லிங்கேஷ்வரன் கீழ் தான் என்று.. அதோடு இது அவர்கள் எதிர் பாராத ஒன்று.. கூடவே எப்போதும் நிர்வாகம் கை மாறினால் தங்களுக்குள் பேசி கொள்வார்களே..

“இவனால் என்ன செய்ய முடியும்..” என்று எதிர் மறையான பேச்சும்..”ஒரு சிலர்.. “கிடையாது இவர் செய்வார்.. இன்னும் கேட்டால் நம்ம சோமசுந்தரம் ஐய்யாவையே மிஞ்சு விடுவார்..” என்ற நேர் மறையான பேச்சுக்கள் எழுந்தன தான்..



ஆனால் இந்த பேச்சுக்கள் அனைத்துமே, அவர்களுக்குள் தான் பேசிக் கொண்டனரே ஒழிய.. நிர்வாகத்திடம் என்ன அவர்கள் காதிற்க்கு விழுந்து விட கூடாது என்பது போல் தான் அவர்கள் பேச்சுக்கள் இருந்தன..

முதலில் நிர்வாகத்தின் முக்கிய உறுப்பினர்கள் பேசினர்.. பின் சோமசுந்தரம்.. தன் இருக்கையில் இருந்து எழுந்ததுமே..

இவ்வளவு நேரமும் மேடையின் கீழும் ஏன் மேடையில் இருப்பவர்கள் கூட தங்கள் பக்கத்தில் அமர்ந்து இருப்பவர்களிடம் பேசிய அந்த மெல்ல பேச்சுக்கள் கூட அடங்கி அந்த இடம் முழுவதும்.. ஒரு குண்டு ஊசி விழுந்தால் கூட சத்தம் கேட்கும் அளவுக்கு அமைதியாக ஆனது..

சோமசுந்தரத்திற்க்கு அங்கு இருந்த மதிப்பை லிங்கா உடனே தெரிந்து கொண்டவன் பின் தாத்தா பேசும் பேச்சில் கவனத்தை செலுத்தினான்..

சோமசுந்தரம் முதலில் நன்றி உரையில் இருந்து ஆரம்பித்து, பின் முதலில் தான் இந்த பள்ளியை ஆரம்பித்த கதை.. கதை என்றால் நீட்டி முழுக்கி எல்லாம் கிடையாது… சுருக்கமாக சொல்லியவர் பின் தான் ஏன் இங்கு உங்கள் அனைவரையும் அழைத்து இருக்கிறேன் என்று உங்களுக்கு ஒரளவுக்கு தெரிந்து இருக்கும் என்று சொல்லி விட்டு..

லிங்காவின் பக்கம் பார்வையை செலுத்த.. லிங்கா அவர் கண் பார்வையில் உடனே எழுந்தவனின் அந்த வேகத்தை பார்த்தமுமே அங்கு இருந்தவர்களுக்கு ஒரு புத்துணர்ச்சி தானாக எழுந்தன.

பின் அவர்கள் ஒரளவுக்கு கணித்து வைத்து இருந்ததை தான் சோமசுந்தரமும்.. சொன்னார்..

அதாவது. “இது வரை இந்த பள்ளி நல்ல முறையில் இயங்க. எனக்கு கொடுத்த ஒத்துழைப்பை என் பேரனுக்கு கொடுபிங்க என்ற நம்பிக்கையில் இந்த நிர்வாகம் என்னிடம் இருந்து என் பேரனிடம் கை மாறுக்கிறது. அதே போல் மிஸ்டர் சிவ பிரகாஷ் எனக்கு உதவியது போல.. என் பேரனுக்கும் உதவியாக இருப்பார்..” என்ற அந்த பேச்சில் இவ்வளவு நாளும் நான் தான் இதன் நிர்வாகி என்று மிதப்பில் சுத்தி கொண்டு இருந்த சிவ பிரகாஷை உதவியாளனாக மாற்றி விட்டார்.

அதில் ஒரு சிலர் சத்தமாகவே சிரித்து விட்டனர்… அதுவும் சிவகுமாருக்கு.. கேட்கவே தேவையில்லை…



“என்னப்பா. இந்த பள்ளி கல்லூரி எனக்கு தான் என்று சொன்னிங்க. இப்போ நீங்கலே இங்கு உதவி தான் செய்துட்டு இருந்து இருக்கிங்க என்று உங்க மாமனாரு சொல்லாமல் சொல்லிட்டார்.. இப்போ என்ன அவர் பேரனுக்கு உங்களை போல நான் உதவியாளனா இருக்கட்டுமா.” என்று கோபமாக கேட்டவன்..

விருட்டென்று யார் என்ன நினைப்பார்கள் என்று கூட பராது விறு விறு என்று மேடையை விட்டு இறங்கியதோடு அந்த இடத்தை விட்டும் சென்றும் விட்டான்…

பார்த்த அனைவருக்கும் தெரிந்தது… லிங்காவின் கீழ் இந்த நிர்வாகம் செல்வது பிடிக்கவில்லை என்று. பின் இதுவும் பேசிக் கொண்டார்கள்..

அப்பாவுக்கு அடுத்து தான் வந்து அதிகாரம் செய்யலாம் என்று நினைத்து இருப்பான்.. ஆனால் பெரியவர் இவன் அப்பனையே.. உதவியாக வைத்து கொண்டு இருந்தேன் என்று தானே சொல்லி விட்டார்..

என்று இவர்களுக்கு எதிராக பேசினாலும் லிங்காவுக்கு எதிராகவும் பேச ஒரு சிலர் இருக்க தான் செய்தனர்..

சிவ பிரகாஷ் பந்தா பேர்வழியா இருந்தாலுமே, இந்த எஸ். எம்.. பெயரை காப்பாற்றினார். இவர் என்ன செய்யிறார் என்று பார்ப்போம்.. “ என்று.. இதை மறுக்க முடியாது. ஒன்று தான்..

அதே போல் கல்லூரியிலும் இந்த விழா எந்த பிரச்சனையும் இல்லாது நல்ல முறையில் நடந்து முடிந்தது..

இந்த நிர்வாகம் கை மாறும் நிகழ்ச்சியில் விறு விறுப்பு எல்லாம் பள்ளியிலும் சரி.. கல்லூரியிலும் சரி இரண்டு வாரம் தான் அமளி துமளிப்பட்டது பின் மெல்ல மெல்ல சாதாரண நாட்களாக தான் சென்றது..

ஆனால் அங்கு பயலும் பெண்களுக்கு, குறிப்பாக கல்லூரியில் பயலும் பெண்களுக்கு, லிங்கா இந்த இடைப்பட்ட நாட்களில் அனைவருக்கும் நாயகன் ஆகி விட்டான் என்று தான் சொல்ல வேண்டும்..

இன்னும் கேட்டால் அவன் தன் தோற்றத்திற்க்கும், உடைக்குமே முக்கியத்துவம் கொடுக்காது, ஏன் கனடாவில் உடுத்துவதை விட மிக சாதாரணமாக கேசுவல் உடையில் தான் தினம் தினம் ஒரு முறை பள்ளியையும், கல்லூரியையும் வளம் வந்து கொண்டு இருந்தான்..

சாதாரண உடை என்றால், ஒரு ஜீன். டீ ஷர்ட் என்று தான் செல்வான்.. தாத்தா கூட.. “ என்ன இது..” என்று தான் கேட்டார்..



அவரே அப்படி என்றால் லிங்காவை பிடிக்காத மற்றவர்களின் பேச்சை கேட்கவும் வேண்டுமோ..

“எங்கு எப்படி போவது என்று கூட இவனுக்கு தெரியவில்லை.. இவன் எல்லாம் அங்கு என்ன செய்து கிழிக்க போகிறான்..” என்று தான் அவனை மிக தாழ்த்தி நினைத்து விட்டனர்.

சிவ பிரகாஷ் இதை வைத்தே தன் கோபம் கொண்டு தன் மகனை சமாதானம் படுத்தினார்..

“இதோ பார் சிவா லிங்கா எல்லாம் ரொம்ப நாள் காலேஜ் ஸ்கூல் என்ன இந்தியாவிலேயே அவனால் தாக்குப்பிடிக்க முடியாது.. நீ கவலை படாதே இன்னும் மூன்று மாதத்தில் அவன் துண்டை காணும் துணியை காணும் என்று ஒட போகிறான்..” என்று மகனுக்கு நம்பிக்கை கொடுத்தார்..

சிவ குமார்.. “ போகாது.. காலேஜ்.. ஸ்கூல் எந்த பிரச்சனையும் இல்லாது நிர்வாகம் நல்லா செய்தா..” என்று தன் சந்தேகத்தை கேட்ட மகனிடம்..

“பிரச்சனை இல்லை என்றால் என்ன நாம பிரச்சனையை உருவாக்கி விட்டா போச்சி..” என்று வில்லங்கமாக சொன்னார்..



லிங்காவின் இல்லத்தில் தான் அவன் உடையை தாழ்த்தி நினைத்தது.. ஆனால் அதே உடையே.. பள்ளியிலும், கல்லூரியிலுமே அவனுக்கு வயது வித்தியாசம் இல்லாது ஆண் பெண் பேதம் இல்லாது அவனுக்கு ஒரு ரசிகர் வட்டத்தை உருவாக்கி விட்டது…

இளம் பெண்கள்.. “ அப்போ இந்த ட்ரஸ்லேயே என்ன சமாயா இருக்கான் டி..” என்று சொல்லி ஜொள்ளி வழிய.

கொஞ்சம் அதிக வயதுடையர்வகளோ.. எவ்வளவு பணம் இருந்தும் அவனின் எளிமையை நினைத்து வியந்து பேசிக் கொண்டனர்… அதுவும் சிவ பிரகாஷ் சிவ குமார் செய்யம் அலம்பரையும் சேர்த்து இருவருக்கும் இருக்கும் வித்தியாசத்தையும் சொல்லியே லிங்காவை புகழ்ந்தனர்.

இளம் வயது ஆண்களுக்கு சொல்லவே வேண்டாம் லிங்கா தான் தங்கள் ரோல் மாடல் போல அவன் உடை நடை மேனலிசம் என்று பாலோ செய்யும் அளவுக்கு இருந்தது.

இது எதுவும் தெரியாது லிங்கா எப்போதும் போல் பள்ளியில் இரண்டு மணி நேரம் இருந்து விட்டு அடுத்து கல்லூரிக்கு வந்தான்..

வந்தவனின் அறைக்கு அவன் அனுமதி பெற்றுக் கொண்டு மது சென்றாள்.. அவள் பின் இன்னும் ஐந்து பெண்கள் நின்று கொண்டு அவள் முதுகில் ஒரு விரலை கொண்டு குத்திய வாறு..

“சொல்லு டி.. சொல்..” என்று குசு குசு என்று சொல்ல..

அமைதியாக இருந்த அந்த அறையில் மெல்ல அந்த பேச்சும் லிங்காவின் காதில் நன்றாகவே விழுந்தது..

இருந்தாலும் வாய் பேசாது அமைதியாக இருந்தான்.. வாய் பேசாது தான் இருந்தான்.. ஆனால் அவன் கண்கள் பேசியது.. அதுவும் யாரும் பார்க்கும் முன் அவளிடம் என்ன…? என்பது போல் இரு புருவமும் மேல் எழுப்பி அவளிடம் வினா எழுப்பினான்..

எப்போதும் அவன் இப்படி தான் தன்னை பார்த்தாலே செய்கிறான்.. அதுவும் யார் இருந்தாலுமே யாரும் பார்க்காது படி சட்டென்று செய்து விடுகிறான்.. பின் மிக சாதாரணமாக தாத்தாவிடம் அவன் பாட்டுக்கு பேச ஆரம்பித்து விடுகிறான்..

இவள் தான் அவன் தன்னை பார்க்கும் அந்த பார்வையிலும், அந்த புருவ ஏற்ற இறக்கத்திலும் சில நிமிடம் சிலையாக நின்று விடுகிறாள்..

ஒரு முறை அவள் அம்மாவே. “ என்ன டி ஆச்சி உனக்கு.. இப்போ எல்லாம் நீ அப்போ அப்போ இது போல நின்னு விடுற..” என்று அவன் எதிரிலேயே கேட்டு விட…

அதை கேட்டதும் அவன் முகத்தில் மின்னி மறைந்த அந்த புன்னகையை பார்த்து மீண்டும் நின்று விட்டது தான் மிச்சம்..

ஆனால் அவன் இது போல செய்வதை யாருக்கும் தெரியாது பார்த்து கொள்கிறான்.. சில சமயம் இவனின் இந்த செயல் விளையாட்டு போலவும் தெரிகிறது.. ஒரு சில சமயம்.. இவன் தன்னை தப்பான கண்ணோட்டத்தில் பார்க்கிறானா.. என்று நினைக்கும் படியாக அவனின் பார்வை தன் மீது விழும் இடத்தை பார்த்து நினைக்க தோன்றுகிறது..

ஆம் அவன் முதல் முறை அவளிடம் சொன்ன. பெருசாக இல்லை.. என்ற அந்த வார்த்தையும், அப்போதும் அவன் தன் உடல் மீது படிந்த இடத்தை தான்,. லிங்கா தன்னை பார்க்கும் போது எல்லாம் பார்க்கிறான்..

ஏன் என்று தான் தெரியவில்லை.. கேட்கவும் பயமாக இருக்கிறது.. வீட்டில் இதை பற்றி சொல்லவும் முடியவில்லை.. அதுவும் இப்போது வீட்டில் நிலவும் இந்த சூழ்நிலையில் கண்டிப்பாக இதை சொன்னால் இதை வைத்தே பெரியப்பா இவனை வீட்டை விட்டு அனுப்பி விடுவது நிச்சயம்..

இவன் வீட்டை விட்டு போவானா.. இல்லை வீட்டில் இருப்பர்கள் அனைவரையும் வீட்டை விட்டு துறத்தி விடுவானா. என்று தெரியவில்லை.. ஆனால் குடும்பம் உடையும் என்பது நிச்சயம்.

அதோடு சிறு வயதில் தன்னை காட்டி என்ன பிரச்சனை எழுந்தது என்பதனை அவளின் அம்மா மூலம் அறிந்ததில் இருந்து மூச்..

ஆனால் கல்லூரியில்.. இந்த விசயத்தை நீ தான் லிங்கா சாரிடம் சொல்ல வேண்டும் என்று வம்படியாக இதோ இவன் முன் இழுத்து வந்து நிறுத்தி விட்டார்கள்..

சரி கல்லூரி ஆச்சே இங்காவது ஒழுங்கா இருப்பான் என்று நம்பி வந்தேன்.. இங்கும் அவன் வேலையை காண்பித்து விட்டான் என்று அவளாள் மனதில் மட்டும் தான் புலம்ப முடிந்தது..

சிறிது நேரம் விளையாட்டில் இருந்த லிங்கா பின் என்ன நினைத்தானோ.. “ எதுக்கு வந்திங்க என்று சொல்றிங்களா..” என்று சொன்னவனின் முகம் இப்போது கண்டிப்பை காட்டியது.

அதில் மதுவும்.. இது போல் பார்த்தால் பேசலாம் என்று நினைத்து தாங்கள் அவன் அறைக்கு வந்ததிற்க்கு உண்டான காரணத்தை கூறினாள்..

அதாவது அந்த கல்லூரியில் உடைக்கு மிக முக்கியத்துவம் கொடுப்பர்… நவநாகரிக உடைக்கு அங்கு தடா. சுடி தவாணி புடவை இது மட்டுமே அணிந்து வர வேண்டும்.

அந்த நடை முறையை மாற்றியமைக்க.. அதாவது முன் இந்த கல்லூரியை நிர்வாகம் செய்தவர் வயதானவர்.. நீங்க யூத் தானே.. ஜீன் எல்லாம் அணிய அனுமதி வழங்கலாமே..

அதுவும் நீங்க வெளிநாட்டில் இருந்து வந்தவர்.” என்று இத்தனை நாள் அதாவது லிங்காவின் கீழ் இந்த கல்லூரி வந்த நாள் முதலே பெண்கள் இதை நிர்வாகத்திடம் பேச காத்து கொண்டு இருந்தார்கள்..

இந்த இடைப்பட்ட நாட்களில் லிங்காவிடம் என்ன என்ன பேசுவது என்பது போல்.. பெண்கள் பாயிண்ட் சொல்ல. மது இங்கு அப்படியே அவனிடம் ஒப்பு வித்தாள்..

மது பேச பேச குறுக்கே பேசாது கேட்டு கொண்டு இருந்தவன் மது பேசி முடித்த பின்னுமே அமைதியாக இருக்க.. மதுவுக்கு மட்டும் அல்லாது அவளோடு வந்த பெண்களுக்கும், இதற்க்கு மேல் என்ன பேசுவது என்று புரியாது போனது..

இருந்தும் கடைசி பாயிண்டாக மதுவோடு வந்த ஒரு பெண்.. “ நீங்க கூட பாருங்க சார்,.. இதோ இந்த இலகுவான உடை உங்களுக்கு எவ்வளவு கம்பர்டபுலா இருக்கு..”என்று அப்போது அவன் அணிந்து இருந்த ஜீன் டீஷர்ட்டை காண்பித்து சொன்னாள்..

ஒருவகையில் லிங்கா கல்லூரிக்கு அவன் அணிந்து வரும் அந்த உடையும், தாங்கள் தங்கள் கோரிக்கையை அவன் முன் வைக்க தைரியத்தை கொடுத்ததோடு, தங்கள் கோரிக்கையை ஏற்று கொள்வான் என்ற நம்பிக்கையையும் கொடுத்தது..

ஆனால் தாங்கள் இவ்வளவு சொல்லியும் அமைதியாக இருப்பதை பார்த்து தான் மதுவுடன் வந்த பெண்.. அவன் உடையை குறிப்பிட்டு சொன்னது.

அந்த பெண்ணின் அந்த பேச்சில் சிரித்தவன். “ ஆமா.. ஆமா எனக்கு இந்த உடை. அதுவும் இந்தியாவில் இந்த உடை தான் கம்பர்டபுலா இருக்கு.. அது ஒத்து கொள்ள வேண்டிய விசயம் தான்..” என்று லிங்கா சொல்லவும், அங்கு இருந்த பெண்களின் முகத்தில் அளவுக்கு அதிகமான புன்னகை தவழ்ந்தது..

அவனின் அந்த பேச்சு.. தங்கள் கோரிக்கையை ஏற்றுக் கொள்வான் என்ற நம்பிக்கையை அவர்களுக்கு தந்தது..

இவ்வளவு நேரமும் தன் இருக்கையில் அமர்ந்து இருந்த லிங்கா இப்போது எழுந்து நின்று முன் வந்தவன் தன் மேஜைக்கு முன் அதன் மீது சாய்ந்தது போல் நின்றவனின் கால் ஒன்றின் மேல் ஒன்று படிந்தது போல் நின்றவன்..

தான் அணிந்து இருந்த டீ ஷர்ட்டின் முன் பகுதியை தன் கை கொண்டு சுட்டி காட்டி..

“ இதுல ஏதாவது எழுதி இருக்கா. யூ கிஸ் மீ.. யூ டச் மீ.. லுக் ஹியர்.. என்று அப்படி ஏதாவது..” என்ற அவன் பேச்சில் அவன் எதை சொல்ல வருகிறான் என்று அங்கு இருந்த பெண்களுக்கு தெரிந்து விட்டது. தெரிந்த உடன் அனைவரின் முகமும் தன்னால் நிலத்தை தழுவ. லிங்காவோ.. “சீ மீ..” என்று சொல்ல அனைவரின் பார்வையும் அவன் முகத்தில் படிந்தது.

“நீங்க சொல்வது சரி தான்.. இலகுவான உடை தான் நமக்கு கம்பர்டபுலா இருக்கும்.. ஆனால் நீங்கள் அந்த இலுகுவை எங்கு எங்கு இலக வைப்பிங்க… வார்த்தை எழுதி.. அதை மத்தவங்க படிச்சி.. என்று இது ஒரு தினம் பஞ்சாயத்தா அது ஒரு பக்கம் போகும்.. நான் அதுக்கு நேரம் ஒதுக்கி வைத்து அந்த பஞ்சாயத்தை தீர்த்து வைக்க வேண்டும்..” என்று லிங்கா சொல்வதும் ஒருவகையில் வாஸ்த்வமான பேச்சாக தான் இருந்தன..

ஆம் உடை தங்களின் விருப்பம் என்று சொல்லி விட்டாள், ஒரு சில பெண்கள் அதை வேறு மாதிரி தான் பயன் படுத்தி கொள்கிறார்கள்.. அதனால் லிங்கா தங்கள் கோரிக்கையை ஏற்று கொள்ள மாட்டான் என்றதில் அனைவரின் முகமும் ஒரு மாதிரியாக ஆகி விட்டது..

லிங்கா. “ அதற்க்குள் சோர்ந்து போயிடாதிங்க. கண்டிப்பா உங்கள் கோரிக்கையை நான் பார்க்கிறேன்.. இதில் ஏதாவது செய்ய முடியுமா.. என்று.. அதோடு இதை நான் மட்டுமே முடிவு செய்யும் விசயம் கிடையாது.. யோசித்து மற்றவர்களின் கருத்தையும் ஏற்ற பின் தான் நடை முறைப்படுத்த முடியும்..” என்றதும்.. பெண்களின் முகம் மலர்ந்து விட்டது.

பின் “ செல்கிறோம்..” என்றதும் சரி என்றவன் பெண்கள் அவன் அறையின் கதவு பக்கம் செல்லும் போது.

“மிஸ் மதுமதி. உங்களிடம் ஒரு விசயம் பேசனும். நீங்க மட்டும் இருங்க.” என்று சொன்னதும் மற்ற பெண்கள் சென்று விட்டனர்.

































 
Administrator
Staff member
Joined
May 9, 2024
Messages
1,454
மிஸ் மதுமதி
இப்போதைக்கு மிஸ் மது மதி தான்.. நாளைய பின்னே.. மிஸ்ஸஸ் லிங்கேஷ்வரனாக மாற கூடும்.. நன்றி பா தொடர்ந்து படித்து கருத்துக்கள் சொல்லவும்.. மீண்டும் நன்றி
 
Well-known member
Joined
Jun 1, 2024
Messages
270
அப்பாவும் பையனும் சேர்ந்து லிங்காவுக்கு குடைச்சல் குடுக்கப் போறாங்களா.....🥶🥶🥶 எதுவா இருந்தாலும் சமாளிப்பான்....😎😎😎😎
உங்க திட்டம் பலிக்காது... 🤓🤓🤓

அத்தை பொண்ணை அதிகமா கவனிக்கிறானே.... 🤪🤪🤪🤪 இப்போ என்னவாம் எதுக்கு நிக்க வச்சிருக்கான் .... 😛
 
Administrator
Staff member
Joined
May 9, 2024
Messages
1,454
அப்பாவும் பையனும் சேர்ந்து லிங்காவுக்கு குடைச்சல் குடுக்கப் போறாங்களா.....🥶🥶🥶 எதுவா இருந்தாலும் சமாளிப்பான்....😎😎😎😎
உங்க திட்டம் பலிக்காது... 🤓🤓🤓

அத்தை பொண்ணை அதிகமா கவனிக்கிறானே.... 🤪🤪🤪🤪 இப்போ என்னவாம் எதுக்கு நிக்க வச்சிருக்கான் .... 😛
அத்தை பெண் தான் ஜோடி அப்போது கதவனிது தானே ஆக வேண்டும்.. நன்றி பா நன்றி🙏💕
 
Administrator
Staff member
Joined
May 9, 2024
Messages
1,454
நன்றி பா தொடர்ந்து
Nalla poguthu story...Sivakumar um sivapragash kum enna aapu ready panuwinga nu paaka waiitng...
படித்து கருத்துகள் சொல்லவும் பா.. மீண்டும் நன்றி🙏💕
 
Well-known member
Joined
May 12, 2024
Messages
330
Athai magaloda pesa office room ah da kidaichithu unakku 🤣🤣🤣
 
Member
Joined
May 11, 2024
Messages
83
ஜெயபிரகாஷ் உங்க சொத்து மேலையும் அக்கறை இல்ல பையன் மேலையும் அக்கறை இல்ல
 

grg

Well-known member
Joined
Oct 18, 2024
Messages
234
😍😍😍
 
Top