Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம், "கதையருவி" தளத்திற்கு தங்களை வரவேற்கிறோம்!

    இத்தளத்தில் எழுத எங்களை "vskathaiaruvi@gmail.com" என்ற மின்னஞ்சலில் தொடர்புக் கொள்ளவும். நன்றி!

அத்தியாயம்..10

  • Thread Author
அத்தியாயம்-----10

அனுஷியா விக்ரநாத்திடம் “நீ தானே விக்ரா சொன்ன தீர்க்க முடியாத பிரச்சனை என்பது இல்லை என்று. “

“ஆமாம் சொன்னேன். ஆனால் அதன் தீர்வு இது தானா…?”

“சரி வேறு என்ன….?நீயே சொல்.”

கிருத்திகாவின் அப்பாவை காண்பித்து “நாம் சம்மந்தம் பேச போன போது பெரிய இடம் என்று இவர் எவ்வளவு தயங்கினார். நாம் தானே பேசி அவரை சம்மதிக்க வைத்தோம். மூன்று பெண்பிள்ளை பெற்ற அவர் நிலையில் யோசித்து பார்.

முதல் பெண் நடக்க இருந்த திருமணம் நின்றால் இந்த சமூகம் யோசிக்காது பெண் மீது தான் பழி போடும். அப்படி இருக்கும் போது அவளின் திருமண வாழ்க்கை கேள்வி குறியாவதோடு அடுத்த இரு பெண்களின் வாழ்வும் கேள்வி குறியாக தான் நிற்கும்.

சொல் நம்மிடம் சம்மந்தம் பேச நினைத்ததுக்கு இந்த கதியாக விடலாமா….? கிருத்திகா வேறு யாரை திருமணம் செய்தாலும் பிரச்சனை தான். நமக்கு என்றால் உண்மையான காரணம் தெரியும். அதுவும் மட்டும் அல்லாது இது இரு குடும்பங்களின். மான பிரச்சனை.” என்று குறிப்பிட்டார்.

இதில் நந்திதா குடும்பத்தை சேர்க்கவில்லை. இந்த தவறு நந்திதா அவி இரண்டு பேரின் சம்மதத்தோடு தான் நடந்து இருக்கிறது அவர்களை பற்றி அவர் கவலை படவில்லை.

ஆனால் தன் மூத்த மகன் அவன் திருமணம் நின்றால் ஏன் எதற்க்கு என்று உலகம் ஆயிரெத்தெட்டு கேள்விகள் கேட்காதா…..எல்லோருக்கும் இந்த அசிங்கத்தை சொல்லிக் கொண்டா இருக்க முடியும்.பின் கிருத்திகாவின் நிலை அவள் குடும்ப சூழல் இதை சொல்லியே அனுஷியா இந்த திருமணத்தை நடத்தி முடித்து விட்டார்.

கல்யாண மண்டப்பதில் கூட பெரும் பாலோருக்கு பெண் மாறிய விசயம் தெரியவில்லை. ஏன் என்றால் ஒப்புதாம்பூலம் யாருக்கும் சொல்லாமல் சம்மந்தப்பட்டவர்கள் மட்டும் கூடி வீட்டோடு முடித்துக் கொண்டதால்….

மற்றவர்களுக்கு தெரியவில்லை என்றாலும் திருமணம் செய்தவர்களுக்கு தெரியும் அல்லாவா …

இப்படி நடந்த திருமணத்தை அவர் அவர் நினைத்துக் கொண்டு இருக்கும் போதே பொழுது விடிந்து விட்டது. விடிந்த சூரியனை பார்த்த விக்ரநாத் ஒன்று மட்டும் நினைத்துக் கொண்டான்.

இனி நடந்ததை மாற்ற முடியாது. நடக்க இருப்பதை சரியாக அமைத்துக் கொள்வது நம் கையில் தான் இருக்கிறது. ஆராத்தி சுத்தும் போது கிருத்திகாவிடம் தான் பேசியது சரியில்லை.

எல்லாம் தெரிந்த நானே அப்படி பேசலாமா...நான் பேசியதில் அவள் முகம் எப்படி பயத்தை காட்டியது. இனி ஒரு தரம் அது போல் நடவாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்துக் கொண்டு படுக்கை அறையில் சென்று பார்க்க.

அங்கு படுக்கை காலியாக இருப்பதை பார்த்து தான் குளித்து விட்டு கீழே சென்ற போது கிருத்திகாவும் அம்மாவும் காபி குடிப்பதை பார்த்து இரு பேரிடமும் பொதுவாக “காபி …” வேண்டும் என்று சொல்லிக் கொண்டே அங்கு இருக்கும் பேப்பரை புரட்ட.

தான் குடித்து கொண்டு இருந்த காபியை கீழே வைக்க இருந்த கிருத்திகாவிடம் “நீ குடித்து விட்டே எடுத்துக் கொண்டு வா கிருத்திகா.” என்று பேப்பரை பார்க்க.

அவன் சாதாரண பேச்சை கேட்ட பிறகு தான் கிருத்திகாவுக்கு கொஞ்சம் ஆசுவாசம் கிட்டியது. ஆலாம் சுற்றுக் போது அவன் பேசிய பேச்சை கேட்டதில் இருந்து.

இனி இது போல் எவ்வளவு குத்தல் பேச்சை கேட்க வேண்டுமோ என்று...டீன் ஏஜில் ஏதோ மயக்கத்தில் நான் ஒத்துக் கொண்ட காதல் என் வாழ்கையே புரட்டி போட்டு விட்டதே என்று.

அவிநாத் தப்பு செய்து விட்டான் என்று தெரிந்ததில் இருந்து தான் என்ன மாதிரி உணர்கிறோம் என்று அப்போது அவளாள் வரையறுக்க முடியவில்லை.

அவிநாத் விளையாட்டு பிள்ளை வாழ்க்கை குறித்து சீரினஸ் தெரியாதவன் என்று தான் இது வரை நினைத்துக் கொண்டு இருந்தாள். ஆனால் அவன் செய்த காரியம் நாம் நினைத்தது தவறோ ...என்று அவனை பற்றி அடுத்து யோசிக்க கூட விடாது.

தன் அப்பாவின் உடல் நிலை அதற்க்கு அடுத்து அத்தையின் பேச்சு வேறு எதுவும் பேச முடியாது இதோ திருமணம் வரை வந்தாயிற்று. அவளுக்கு இந்த திருமணம் முடிந்ததை விட.

அய்யோ அவிநாத் முகத்தை பார்த்துக் கொண்டே இதே வீட்டில் தான் இருக்க வேண்டுமே என்ற வேதனை தான் அதிக மாகியது. அது அடுத்தவள் கூட வாழ போவதை பார்க்க முடியாததால் இல்லை. விக்ரநாத் என்ன நினைப்பானோ...என்று தான்.

இந்த யோசனையுடன் காபி கலந்து விக்ரநாத்திடம் நீட்ட அதை வாங்கி ஒரு மிடரு குடித்தவன் .”பரவாயில்லை காபி நல்லாவே போடுறே….” என்று சொன்னவன்.

பின் “இன்று கோயிலுக்கு போகலாமா…..? என்று கிருத்திகாவுக்கு அழைப்பு விடுக்க.

கிருத்திகாவும் சரி என்று தலைடாட்டியவளிடம் “டிபன் சாப்பிட்டு போகலாம்.” என்று புன்னகையுடன் கூறி பேப்பரின் அடுத்த பக்கத்தை புரட்ட.

அனுஷியா கிருத்திகா இருவருக்குமே அவன் முயற்ச்சி புரிந்தது. அனுஷியா தன் மூத்த மகன் மீது வைத்த அதிக படியான நம்பிக்கை தானே அவரை இந்த முடிவை எடுக்க தூண்டியது.

கிருத்திகா காபி கோப்பையைய் கையில் வைத்துக் கொண்டு அசையாமல் இருப்பதை பார்த்து “என்ன கிருத்திகா நின்னுட்டே இருக்கே போய் கிளம்பு.” என்று சொன்ன அத்தையிடம்.

இல்லே அத்தை இன்னிக்கி டிபன் நான் செய்யலாம் என்று நினைத்தேன்.” என்று சொல்லி விட்டு அவரை பார்க்க.

“செய்யலாம் செய்யலாம். இந்த வீடு எங்கு போக போகுது இந்த வீட்டை விட்டு நீ எங்கு போயிட போற…பொறுமையா செய்யலாம். இப்போ முதலில் நீ கோயிலுக்கு கிளம்பு.” என்று அவர் சொல்லிக் கொண்டு இருக்கும் போதே….

அவிநாத் நந்திதா படியிறங்கி வருவதை பார்த்த அனுஷியா அந்த இடத்தை விட்டு அகல...விக்ரநாத் ஏதும் நடவாது போல் மிக மூம்முரமாக பேப்பரை படிக்க.

கிருத்திகாவுக்கு தான் இப்போது இங்கு இருப்பதா இல்லை செல்வதா என்று யோசித்துக் கொண்டு இருக்கும் போதே….விக்ரநாத் “அம்மா சீக்கிரம் கிளம்ப சொன்னங்களே….போ கிளம்பு.” என்று சொன்னதும் கட கட என்று மாடி படி கடக்க.

அவிநாத் தான் வந்த தொட்டு தான் கிருத்திகாவை அந்த இடத்தை விட்டு போக சொன்னார் என்று நினைத்து வேதனை அடைய. விக்ரநாத்துக்கும் தான் சொன்ன உடன் தான் கிருத்திகா தவறாக நினைத்து இருந்து இருப்பாளோ என்று நினைக்க தோன்றியது.

தர்ம சங்கடத்துடன் அங்கு அவள் நிற்பதை பார்த்து தான் அவன் அப்படி கூறினான். இப்படி ஒவ்வொரு பேச்சிக்கும் பார்த்து பார்த்து பேசுவது என்றால் என்ன செய்வது . இதற்க்கு ஏதாவது வழி செய்தே ஆகவேண்டும் என்று முடிவோடு அவன் எழுந்தான்.



ஒரு வாரம் அதே மாதிரி கடக்க. அன்று காலை ஆபிஸ் கிளம்பிக் கொண்டு இருந்த விக்ரநாதுக்கு சாப்பிட டையினிங் டேபிளில் உணவை வைத்துக் கொண்டு இருந்த கிருத்திகா.

சாப்பிட விக்ரநாத்துக்கும் முன் அவிநாத் வந்து உட்கார்ந்ததும். யாராவது அவனுக்கு பரிமாறுவார்களா...என்று பார்க்க. அப்போது தான் அவளுக்கு நினைவு வந்தது. அத்தை வேலையாளை கடைக்கு அனுப்பியது.

அத்தையும் இப்போது தான் சுகர் மாத்திரை போட தன் அறைக்கு சென்றதும். அவர்களாவது வருவார்களா…..என்று அவர் அறைபக்கம் பார்வை செலுத்த. கிருத்திகாவில் நிலை உணர்ந்த அவிநாத் சாப்பிடாது எழ போக.

கிருத்திகாவுக்கே ஒரு மாதிரியாகி விட்டது.சாப்பிட அமர்ந்தவன் சாப்பிடாமல் எழுந்து போவதை பார்த்து. அந்த நிகழ்வுக்கு பிறகு அவிநாத்தும் கிருத்திகாவிடம் பேசவில்லை. கிருத்திகாவும் அவிநாத்தின் முகத்தை கூட பார்க்கவில்லை..

அவிநாத் எழுவதை பார்த்துக் கொண்டே படியிறங்கிய நந்திதா “என்ன கிருத்திகா சாப்பிட அமர்ந்தவருக்கு டிபன் வைக்காம இருக்க.” என்று அவள் கேட்டதுக்கு.

நந்திதாவின் பின் பக்கம் இருந்து பதில் வந்தது.” உன் புருஷன் சாப்பிட்டில் அக்கரை இருந்தா நீ தான் வந்து போடனும். அவள் விக்ரநாத்துக்கு ஆபிசுக்கு டைமாயிடுச்சே என்று தான் வைத்துக் கொண்டு இருக்கிறாள்.” என்று அனுஷியா குரல் கொடுக்க.

இது வரை பேசாது இருந்த தன் அம்மா குறைந்த பட்சம் குத்தல் பேச்சாவது நந்திதாவிடம் பேசுகிறார்களே என்று மகிழ்ந்து “பரவாயில்லை அம்மா அண்ணா முதலில் சாப்பிடட்டும் நான் வீட்டில் தானே இருக்கிறேன்.” என்று சொல்ல. அவன் பேச்சுக்கு எந்த எதிர் பேச்சும் பேசாது அனுஷியா அமைதி காக்க.

இதை அனைத்தும் பார்த்து கொண்டும் கேட்டுக் கொண்டும் இருந்த நந்திதாவுக்கு தான் வெறுப்பாக இருந்தது. இந்த வீட்டில் என்ன எப்போ பார்த்தாலும் விக்ரநாத்துக்கு முதலிடம் ஏன் அவியும் இந்த வீட்டு பிள்ளை தானே…

இதில் இந்த அவி பேச்சு வேறு ஆத்திரத்தை கிளப்பியது.அண்ணா ஆபிசுக்கு போறானாம். ஏன் இவன் போக மாட்டானா…? என்று நினைத்தவள் அதையே அவியிடம் கேட்க.

“அதை பற்றி பேசதான் நானும் நினைத்திருந்தேன்.” என்று சொல்லிக் கொண்டே தன் அன்னை அருகில் அமர்ந்து கிருத்திகாவிடம் “நீயும் உட்கார் கிருத்திகா அனைவரும் சேர்ந்தே சாப்பிடுவோம்.” என்று அனைவரையும் பொதுவாக பார்த்து விட்டு சொல்ல.

நந்திதா ஆவாளுடனும் அவி யோசனையுடனும் அமர. அனைவருக்கும் பரிமாறிய கிருத்திகாவிடம் “அவர் அவரே போட்டுக் கொள்வார்கள். நீ முதலில் சாப்பிட்டு என்னுடன் கிளம்பு..” என்று சொன்னவனிடம்.

“எங்கே நீங்க காலையில் கூட என்னிடம் ஏதும் சொல்லவில்லையே…?” என்று கேட்க.

அவள் இயல்பான பேச்சை அவிநாத் அதிசயத்து பார்த்தான். கிருத்திகா எப்போதும் ஒருவரிடம் சட்டென்று பேசி விடமாட்டாள். தன்னிடம் பேசுவதுக்கே ஒரு வருடம் பிடித்தது.அதுவும் அளந்து அளந்து தான் பேசுவாள். இப்போது தன் அண்ணாவிடம்...

அவனுக்கு தெரியாதது திருமணம் நடந்த மறுநாளே விக்ரநாத் கிருத்திகாவிடம் “நாம் ஒரே வீட்டில் மட்டும் அல்லாது ஒரே அறையிலும் இருக்கிறோம் நாம் கணவன் மனைவியாக வாழ கொஞ்சம் காலம் பிடிக்கும் என்றாலும் ஒரு நண்பர்களாக பேசிக் கொள்ளலாமே….?” என்று வினவ.

இவளுக்கும் அவனிடம் பேசிவிட வேண்டும் என்று தான் நினைத்துக் கொண்டு இருந்தாள் அவனே அவ்வாறு சொல்லவும் “சரி “ என்று விட்டாள்.

கிருத்திகாவின் சகஜமான பேச்சை கண்டும் காணாது அவிநாத் சாப்பிட்டுக் கொண்டே பார்த்துக் கொண்டும் கேட்டுக் கொண்டும் இருந்தான். இதை அனைத்தையும் நந்திதாவும் பார்த்துக் கொண்டு தான் இருந்தாள்.
 
Top