Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம், "கதையருவி" தளத்திற்கு தங்களை வரவேற்கிறோம்!

    இத்தளத்தில் எழுத எங்களை "vskathaiaruvi@gmail.com" என்ற மின்னஞ்சலில் தொடர்புக் கொள்ளவும். நன்றி!

அத்தியாயம்...11

  • Thread Author
அத்தியாயம்----11

நந்திதா “அவி தட்டை பார்த்து சாப்பிடுங்க.” என்று சொல்ல.

அவள் ஏன் அவ்வாறு சொல்கிறாள் என்று அங்கு இருந்த அனைவருக்கும் புரிந்து போக. கிருத்திகா பாதி சாப்பிட்டில் எழ பார்க்க. அவள் கைய் பிடித்து நிறுத்திய விக்ரநாத் “சாப்பிடும்மா…..இதுக்கு ஒரு வழி செய்றேன்.” என்று அனைவரின் முன்நிலையிலுல் சொன்னான்.

அவிநாத்துக்கு தான் மிக அவமானமாக இருந்தது. நந்திதாவை அவனால் அடக்க முடியவில்லை. இந்த ஒரு வாரமாக அவள் செயல் ஒன்றும் அவனுக்கு பிடிக்கவில்லை.

காலையில் எட்டு மணி வரை படுக்கையில் கிடந்தவளை எழுப்பி “எழுந்துடு நந்திதா அம்மாவும் அவங்களும் கிச்சனில் வேலை பார்க்க. இப்படி நீ படுத்துக் கொண்டு இருப்பது நல்லா இல்லை.” என்று ஒரு தடவை கேட்டதுக்கு….

“ஓ அது தான் விசயமா….அவங்க. அது தான் உங்க அவங்க அங்கு சமையல் அறையில் வேலை பார்ப்பது உங்களுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு...அவளுக்கு என்னை வேலை பார்க்க சொல்றிங்க.” என்று கிண்டலுடன் கேட்க.

“நான் அம்மாவையும் தானே சொன்னேன். அதுவும் இல்லாமல் இப்போது அவங்க என் அண்ணாவை மணந்து இருக்காங்க இப்படி பேசாதே…..” என்றவனிடம்.

“அய்யோ அப்படியா…..?ரொம்ப யோக்கியம் தான். அண்ணா கல்யாணம் செய்ய வேண்டிய பெண் மீது கைய் வைத்த நீங்கள். மூன்று வருடம் காதலித்த பெண்ணை அப்படி பார்க்க மாட்டிங்கன்னு என்ன நிச்சயம்.” என்ற அவள் வார்த்தையில் அதற்க்கு மேல் பேச பிடிக்காதவனாய் அந்த இடத்தை விட்டு அகன்றான்.

அவனும் பேசியிருக்கலாம் தான்...என் தவறில் உனக்கும் தானே சரி பங்கு இருக்கிறது என்று சொல்லலாம். தான். இவன் ஒன்று சொல்ல கண்டிப்பாக அது இரண்டாக தான் தன்னிடம் வரும்.

அதுவும் இல்லாது அவள் பேசும் சத்தம் அறையை தாண்டி கேட்கும் அளவுக்கு தான் சத்தமாக பேசுகிறாள். அடுத்த அறையில் இருக்கும் அண்ணன் காதில் விழுந்தால் பிரச்சனை தான்,. ஏற்கனவே என்னால் குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனை போதும் என்று அமைதி காத்தான்.

ஆனால் அந்த அவசியம் விக்ரநாத்துக்கு இல்லாததால் அனைவரும் சாப்பிட்டு முடித்ததும் தன் பேச்சை தொடர்ந்தான். “அம்மா அவி கோயம்பத்தூரில் இருக்கும் பிரான்சை பார்த்துக் கொண்டு அங்கு இருக்கும் வீட்டிலேயே அவன் குடும்பத்துடன் இருக்கட்டும்.” என்று சொல்லி விட்டு எழ பார்க்க.

நந்திதா “அப்படி சொன்னா...எப்படி. நீங்க அங்கு போய் அந்த பிரான்சையும் அந்த வீட்டையும் நீங்க பார்த்துக்கோங்க. கூட வேனா உங்க அம்மாவையும் நீங்களே வைச்சிகோங்க. நானும் என் கணவரும் இந்த வீட்டிலேயே இருந்துக் கொண்டு இங்கு இருக்கும் தொழிலை பார்த்துக் கொள்கிறோம்.” என்று சொல்லி விட்டு அந்த வீட்டை ஆசையுடன் பார்த்தாள்.

அனுஷியா “இந்த வீடு மற்றும் அனைத்து தொழிலும் என் அப்பா எனக்கு கொடுத்தது. அதை என் கணவர் இரு மடங்காக பெருக்கினார் என்றால்…. என் பெரிய மகன் நான்கு மடங்காக அதை பெருக்கி வைத்திருக்கிறான். இன்னும் தொழில் அதிகாரம் என்னிடம் தான் இருக்கிறது. விக்ரா சொன்னது போல செய்வது என்றால் கோயம்பத்தூர் வீட்டுக்கு போங்க. இல்லை என்றால் உங்க அப்பா தொழிலை உன் கணவரை பார்க்க சொல்லிட்டு உங்க வீட்டோட மாப்பிள்ளையா அவனை கூட்டுட்டு போ.” என்று சொல்லி விட்டு அத்தோடு பேச்சி முடிந்தது போல் எழ.

அய்யோ சொத்து முழுவதும் இவர் பெயரிலா இருக்கு தெரியாமல் போயிடுச்சே….என்று நினைத்தவள்.

தன் பேசும் தன்மையைய் மாற்றி “அத்தை சொத்து உங்க பெயரில் இருந்தால் என்ன...இல்லை உங்க மகன்கள் பெயரில் இருந்தால் என்ன…? எல்லாம் சரி சமமாக இரண்டு மகன்களுக்கு தானே….?” என்று சொல்ல.

அனுஷியாவும் அவள் பேசுவதை போலவே “அது எப்படிம்மா …? சரி சமமா பிரிக்கிறது.பெரிய மக அவன் படிப்பு முடிந்த உடன் இந்த தொழிலை பார்த்துக் கொண்டான். ஆனால் உன் கணவர் ….? என்று கேட்டவள். இதற்க்கு மேல் பேச எதுவும் இல்லை என்பதை போல் இருக்க.

அதை எப்படி விட முடியும் என்று நினைத்த நந்திதா “எனக்கு கோயம்பத்தூர் ஒத்துக்காது அத்தை இங்கு டிநகரில் இருக்கும் ஹோரூமையாவது நாங்க பார்த்துக் கொள்கிறோம்.” என்று கேட்டாள்.

நேற்று தான் அவள் அப்பா அதில் கிடைக்கும் லாபத்தை பற்றி சொன்னார். அதை கேட்டதில் இருந்து அதை எப்படியாவது கைய் பற்ற நினைத்து கேட்க.

“அய்யோ அதில் எனக்கே எந்த உரிமையும் இல்லையேம்மா…. டீ நகரில் இருக்கும் கார் ஹோரூம் விக்ரா லோன் போட்டு ஆராம்பித்தது. அதன் முழு உரிமையும் அவனுக்கு தான்.” என்று சொல்லி விட்டு கைய் கழுவ சென்றவர்.

நந்திதாவை கடக்கும் போது “இது தெரிந்திருந்தால்” ….அடுத்து பேசாது அங்கு இருந்து அகன்றார். நந்திதா சத்தியமாக இதை எதிர் பார்க்கவில்லை. அப்பா ஏன் விக்ரநாத்தை தனக்கு பேசி முடித்தார் என்று இப்போது விளங்கியது.

அவள் நினைத்தது இந்த வீட்டுக்கு இருவரும் மகன் தானே...என்ன ஒன்று அவிக்கு அந்த அளவுக்கு சாமர்த்தியம் இல்லை. அந்த சாமர்த்தியம் தான் தன்னிடம் இருக்கிறதே ...அதனால் கவலை இல்லை என்று தான் நினைத்தாள். ஆனால் இப்போது. ஒன்றும் பேசாது பேச முடியாது என்று அவளும் எழ.

விக்ரநாத் கிருத்திகாவிடம் “இனி அந்த ஹோரூம் நீ தான் பார்த்துக் கொள்கிறாய். இன்றில் இருந்து ஒரு மாதம் நான் உனக்கு வேலைய் கற்றுக் கொடுக்கிறேன். பிறகு நீ தான் அதை தனியாக பார்த்துக் கொள்ள வேண்டும்.” என்று சொல்ல..

“நானா….?” பயத்துடன் கேட்டதுக்கு.

“நீயே தான் வா…” என்று கைய்யோடு விக்ரா கிருத்திகாவை அழைத்து செல்வதை நந்திதா வயித்தெரிச்சலோடு பார்த்துக் கொண்டு இருந்தாள்.

நந்திதாவுக்கு அதற்க்கு பின் வேறு எதுவும் வழி இல்லாததால் விக்ரநாத் சொன்ன படி அவியுடன் கோயம்பதூருக்கு சென்று அங்கு இருக்கும் தொழிலை பார்த்துக் கொள்ள.

இங்கு விக்ரநாத்தின் பயிற்ச்சியில் கிருத்திகா தொழிலை நல்லவிதமாக கற்று தேர்ந்தாள். கிருத்திகா அந்த கார் ஹோரூமை பொறுப்பேற்று அன்றோடு மூன்று மாதம் முடிவடைந்தது.

அந்த மூன்று மாதமும் விக்ரா கிருத்திகாவை கார் ஹோரூம் வாசலிலேயே இருக்கி விட்டு விடுவான். அது போலவே மாலை ஆனால் கூட்டி செல்ல அந்த இடத்துக்கு வந்து காத்திருப்பான். உள்ளே வருவதே இல்லை.

அன்று வருடாந்திர கணக்கு பார்க்கும் நாள் என்பதால் விக்ரநாத் கிருத்திகாவுடன் கூடவே வர.என்ன என்பது போல் பார்த்தவளிடம் காரணத்தை சொல்லவும்.

“ஏன் காரணம் இருந்தால் தான் வருவீங்களா….?” என்று கேட்டதுக்கு.

“அப்படி இல்லேம்மா….ஒருத்தர் கிட்ட பொறுப்பை ஒப்படைத்தால் நாம் ஒதுங்கி விடனும். கூடவே நான் ஏதாவது சொல்லிட்டு இருந்தால் அவங்களா...ஏதூம் செய்யாது அப்படியே இருந்து விடுவாங்க. இது எங்க அப்பா எனக்கு சொன்னது.” என்று சொல்லிக் கொண்டே

கணக்கை பார்த்தவன் “பரவாயில்லை கிருத்திகா நான் எதிர் பார்த்ததை விட இந்த மூன்று மாதத்தில் நல்ல விற்பனை தான்.” என்ற கணவரின் பாராட்டு கிருத்திகாவுக்கு மிக மகிழ்ச்சியாக இருந்தது.

அந்த மகிழ்ச்சியோடு கடை விரிவுக்கு தனக்கு தெரிந்த அளவுக்கு ஒரு சிலவற்றை சொல்ல…

“பரவாயில்லை கிருத்திகா நான் எதிர் பார்த்ததை விட. விசயத்தை சீக்கிரம் கத்துக்குற…” என்று சொன்னவன்.

பின் “அனைத்து விசயத்திலும் அதோ போல் இருந்தால் நன்றாக இருக்கும் கிருத்திகா.” என்றவனை புரியாது பார்த்தாள்.

“என்ன புரியலையா….?” என்று கேட்டவனிடம்.

“புரியலே நீங்க சொல்றது எல்லாம் கேட்டுட்டு தானே இருக்கேன்.”

“எல்லாத்தையும் சொல்லி தான் செய்யனும் இல்ல கிருத்திகா ஒரு சிலது சொல்லாமலேயே செய்யனும். நானும் அனைத்தையும் வெளிப்படையாக கேட்க முடியாது இல்லையா….?” என்று அவன் சொல்ல சொல்ல.

ஒரு வேளை…என்று நினைத்தவள் “நான் நினைப்பது தான் நீங்க சொல்றிங்கன்னா நான் மறுக்கவில்லையே…..” என்று அவள் சொல்ல.

“ஓ” என்று ஒரே வார்த்தையில் முடித்த தன் கணவனின் முகம் பார்த்தாள்.

பின் அது பற்றி ஏதுவும் பேசாது தொழிலை பற்றி மட்டும் பேசி விட்டு மாலை வருகிறேன் என்று சொல்லி செல்பவனை பயத்துடன் பார்த்து கொண்டு இருந்தாள். ஒரு சமயம் நான் பேசியதில் கோபம் வந்து விட்டதோ என்று.

கதவு வரை சென்றவன் பின் திரும்பி “எனக்கு கோபம் இல்லையடா….நீ சொன்னது சரி தான். இது பற்றி இதற்க்கு மேல் இங்கு பேசுவது சரியில்லை வீட்டுக்கு சென்று பேசிக் கொள்ளலாம் என்று தான் அதை பற்றி எதுவும் பேசவில்லை.” என்று சொல்லி விட்டு சென்றவனின் நினைவாகவே அன்று மாலை வரை இருந்தாள்.

எப்போதும் மாலை வீட்டுக்கு செல்லும் போது முகம் கழுவிக் கொள்வதோடு சரி நெற்றில் ஒரு ஸ்டிக்கர் பொட்டை வைத்து கொண்டு கணவர் காரை பார்த்ததும் ஹான் பேகை மாட்டிக் கொண்டு காரில் ஏறி விடுவாள்.

அன்று வழக்கத்துக்கு மாறாக முகம் கழுவியதோடு மட்டும் அல்லாது தன் ஹான் பேகில் வைத்து உள்ள அனைத்து மேக்கப் சாதனத்தையும் உபயோகித்தவள்.

பின் முகத்தை பார்க்க நன்றாக மிக நன்றாகவே இருந்தது. ஆனால் எப்போதும் மிக எளிமையாக இருந்த நான் இப்படி அதிகபடியான அலங்காரத்தை பார்த்தால் ஏதாவது நினைத்துக் கொள்வானோ….

என்று கண்ணாடியில் அப்படி இப்படி என்று முகத்தை பார்க்க அவள் மனது சொன்ன கருத்தையே தான் கண்ணாடியும் சொன்னது. நொடியில் முடிவெடுத்தவள்.

வாஷ் ரூமை நோக்கி செல்லும் போதே விக்ரநாத்தின் கார் ஒலி கேட்க அவசர அவசர மாக முகத்தை கழுவி எப்போது [போல் ஒற்றை ஸ்டிக்கர் பொட்டில் காரில் ஏறி அமர.

“என்னை ஏமாத்திடியேடா….” என்ற பேச்சில்.

“என்ன ஏமாத்திட்டேன்…” அது கேட்கும் போதே அவள் வாய் தந்தி அடித்தது.

“ இப்போ எதுக்கு இப்படி பயப்படுற….?” என்று கேட்டவன்.பின் “இன்னிக்கு கொஞ்சம் விசேஷமா நான் உன்னை எதிர் பார்த்தேன் ஆபிசின் ஜன்னலை காமித்து அங்கயே எனக்காக காத்திருப்ப….

அப்புறம் கொஞ்சம் பதட்டத்தோடு….அவள் கண்ணை சுற்றி தன் ஒற்றை விரலால் வலம் வந்துக் கொண்டே இந்த அழகான கண்ணை சுற்றி கண் மைய்….

என்று சொல்லிக் கொண்டே கன்னத்தில் தன் விரலை கொண்டு வந்தவன் இந்த இடத்தைல் கொஞ்சமே கொஞ்சமாக ரூஜ்...என்ன கிருத்திகா ரூஜ் போடாமயே உன் கன்னம் சிவக்குது. இதழ் மீது விரல் வைத்தவன். இங்கு உதட்டு ச...ய். அதன் பின் அவன் உதட்டை பயன் படுத்தினான் தான் ஆனால் பேசுவதற்காக இல்லை.
 
Top