Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம், "கதையருவி" தளத்திற்கு தங்களை வரவேற்கிறோம்!

    இத்தளத்தில் எழுத எங்களை "vskathaiaruvi@gmail.com" என்ற மின்னஞ்சலில் தொடர்புக் கொள்ளவும். நன்றி!

அத்தியாயம்.12

  • Thread Author


அத்தியாயம்------12

கிருத்திகாவுக்கு அந்த முத்தம் எங்கோ வேறு உலகத்துக்கு அழைத்து செல்வது போல் இருந்தது என்றால் விக்ரநாத்துக்கு அவள் இதழை விட மனதே இல்லாது இருந்தான்.

இதழ் சுவை அறிந்த விக்ரநாத் அவள் உடல் சுவை அறிய விறைய …தான் இருக்கும் இடம் கூட கருத்தில் கொள்ளாது அவன் கைய் அவள் உடலின் மென்மையான பாகத்தை பரிசோதிக்க.

கிருத்திகா என்ன தான் அவன் முத்தத்தி.ல் ஆழ்ந்து இருந்தாலும் இருக்கும் இடம் கருதி பெண் மனம் விழித்து கொள்ள. அத்து மீறி இருந்த அவன் கைய் பர்றியவாரே… “. விக்ரா வேண்டாம் விடுங்க. இது கார் பார்க்கிங்.” என்ற அவள் வார்த்தை காதில் விழாது இன்னும் அவளுள் புதைய பார்க்க.

அவன் பாக்கெட்டில் இருந்த போன் அதற்க்கு தடையாக ஓசை எழுப்ப. அதை சட்டை செய்யாது அவள் கழுத்து வளைவில் முகம் புதைந்தவனை திரும்பவும் அவன் போனின் ஓசை தடை செய்ய.

“சே…” என்ற எரிச்சலில் போனை எடுத்தவன் அதே எரிச்சலில் “ ஹாலோ….” என.

“என்ன விக்ரா வேலையா இருந்தியா தொந்தரவு செய்துட்டேனா….?” என்ற தன் அன்னையின் குரலில் நிகழ் உலகத்துக்கு வந்த விக்ரநாத் கிருத்திகாவை பார்க்க.

அவன் படுத்திய பாட்டில் அவள் சேலை நெகிழ்ந்து இயற்க்கையிலேயே சிவப்பாய் இருக்கும் அவள் உதடு இன்னும் சிவந்து இருக்க…அவன் முகம் பார்க்க வெக்கப்பட்டு குனிந்து இருந்த கிருத்திகாவை பார்த்துக் கொண்டே….

“ஆமாம் அம்மா வேலையா தான் இருந்தேன்.” என்ற அவன் பேச்சில் தலை நிமிர்ந்து பார்த்த கிருத்திகாவை பார்த்து கண் சிமிட்ட.

நிமர்ந்த தலை திரும்பவும் குனிந்துக் கொள்ள….அதை பார்த்து சிரித்துக் கொண்டவனை போனில் அவன் “அம்மா என்னடா எப்போதும் வேலையில் இடைஞ்சல் செய்தால் கோபப்படுவாய் இப்போ என்ன என்றால் சிரிக்கிற வேலை என்ன அவ்வளவு முக்கியமானது இல்லையா….?இல்லை அவ்வளவு கஷ்டமானதா…..?” என்று கேட்ட தன் தாயிடம்.போனை ஸ்பீக்கர் மோடில் போட்டவன்.

“என் வாழ்க்கையில் இதை விட முக்கியமான வேலை வேறு எதுவும் இல்லை. கஷ்டமா என்று இப்போது தெரியவில்லை...ஏன் என்றால் இது நான் மட்டும் பார்க்க கூடியவேலை இல்லை.

வேறு ஒருத்தரும் இதில் சம்மந்தம் பட்டு இருக்காங்க அவங்களோட ஒத்துழைப்பை வைத்து தான் இது ஈசியா இல்லை கஷ்டமா என்று தெரியும்.”

“என்ன விக்ரா புதுசா தொழில் துவங்கி இருக்கிறாயா….பார்ட்னர் ஷிப்பிலா….?உனக்கு பார்ட்டனர் ஷிப் பிடிக்காதேப்பா….”என்று சொன்னவர்.

பின் “ நான் தொந்தரவு கொடுத்துட்டேனா…..? சாரிப்பா நீ உன் வேலையய் பாரு…..” என்று வருந்தி சொல்ல.

“அம்மா கவலை படாதீங்க நீங்க எந்த தொந்தரவும் கொடுக்கலை இது ஆக்சுவலா...இங்கு பார்க்க வேண்டிய வேலையே இல்லை. வீட்டில் ஆரா அமர செய்ய வேண்டிய வேலை நான் தான் கொஞ்சம் அவசர பட்டுட்டேன். அப்புறம் என்ன சொன்னிங்க எனக்கு பார்ட்டனர் பிடிக்காதா….?இந்த பார்ட்டனர் ரொம்ப பிடிச்சி இருக்குமா…..இந்த பார்ட்டனர் உதவி இல்லாமல் இந்த வேலையில் ஒரு அடி கூட என்னால் எடுத்து வைக்க முடியாது.” என்ற தன் மகன் பேச்சி இன்று ஏனோ புதியதாக இருக்க.

“நீ பேசுவது என்னவோ இன்று ரொம்ப வித்தியாசமா இருக்கு விக்ரா. சரி நான் சொல்ல வேண்டியதை சொல்லிடறேன். இப்போ கொஞ்ச நேரத்துக்கு முன் உன் மாமனார் வந்துட்டு போனார் நாளை கிருத்திகாவுக்கு பிறந்த நாள் என்று ஒரு புடவை கொடுத்துட்டு போய் இருக்கார்.

கிருத்திகா உன் கிட்ட சொன்னளா...என்று எனக்கு தெரியாது. அது தான் உங்கிட்ட சொன்னேன்….ஏதாவது சர்பிரைஸ் கொடுக்கிறது என்றால் கொடுப்பாய் தானே...அது தான்.” என்று சொல்லி விட்டு போனை வைத்து விட.

இங்கு இவ்வளவு நேரமும் ஸ்பீக்கர் மோடில் போட்டு பேசிக் கொண்டு இருந்த விக்ரா “இனி என்ன சர்பிரைஸ் கொடுக்கிறது.” என்று சொன்னவன்.

இத்தனை நேரம் இவன் பேசிய பேச்சில் அச்சமும் ஆர்வமும் போட்டி போட்டுக் கொண்டு கேட்டுக் கொண்டு இருந்தவள். தன் அத்தை சொன்ன சர்பிரைஸில் சிரித்துக் கொண்டே அவனை பார்க்க.

அவள் காது பிடித்து திருகியவன் “சிரிக்கிறாயா….?” இரு இரு இன்னிக்கி பார்த்துக் கொள்கிறேன்.” என்ற அவன் வார்த்தையில் இது வரை இருந்த ஆர்வம் மறைந்து ஏனோ….அச்சம் மட்டும் குடிக் கொண்டது.

“என்னடா என் கிட்ட உனக்கு என்ன பயம்.” என்ற கேள்விக்கு பதில் அளிக்காது தலை குனிந்து கொள்ள.

அவள் தலையை நிமிர்த்தி “உன் மனசுல என்ன பயம் கிருத்திகா….” என்று கேட்டதுக்கும் பதில் இல்லாது போக.

“நான் அவி பத்தி நினைச்சி உன்னை சந்தேகப்படுவேன் என்று நினைச்சியா…..” என்ற அவன் பேச்சில் தலை நிமிர்ந்து பார்த்து அது தான் என்று அவனுக்கு தெரியப்படுத்த.

“ ஆலாம் சுத்தும் போது அந்த வார்த்தை என்னை அறியாது வந்தது….அறியாது வந்தது என்றாலும் நான் அப்படி பேசி இருக்க கூடாது சாரி.” என்று உணர்ந்து மன்னிப்பு கேட்டவனை தடுத்த கிருத்திகா.

“நா..ன் ..நான் அ...தை பற்றி பேசனும்.”

“எதை பற்றி …” என்று கூர்மையுடன் கேட்க.

“உ..ங்க த...ம்பி நான்.” அவன் உதட்டை மூடிய விக்ரநாத் “நான் தான் இனி அது பற்றி பேச மாட்டேன் என்று சொல்லிடேன் இல்லையா….? திரும்ப ஏன் அந்த பேச்சி கிருத்திகா.” என்றவனின் கையைய் தன் உதட்டில் இருந்து எடுத்து விட்டு.

“இல்லை நான் பேசியாக வேண்டும்.” என்று இப்போது மிக தெளிவாக சொன்னவளை யோசனையுடன் பார்த்தவன்.

“மனசை போட்டு குழப்பிக்க வேண்டாம் கிருத்திகா. வாழ்க்கை அது போகும் வழியில் போவது தான் சரி. ஏன் எதுக்கு என்று கேள்விகள் கேட்டா நம் சந்தோஷம் தான் கெடும்.

யார் வாழ்க்கையில் காதல் இல்லை. காதலித்தவனையே திருமணம் செய்துக் கொண்டவங்க எத்தனை பேர்…? என்பவனை சந்தேகத்துடன் பார்க்க.

“அம்மா தாயே நான் யாரையும் காதலிக்க வில்லை. ஒரு பாட்டு கூட இருக்கே காதலிக்க நேரம் இல்லை...என்று அது மாதிரி தான் நானும். என் படிப்பு முடிந்த உடன் அப்பா இறந்துட்டார்.

தொழில் அம்மா தம்பி அனைவரையும் நான் தான் பார்த்துக் கொள்ள வேண்டும் .இது தான் என் மனதில் இருந்ததே தவிர. இந்த காதல் செய்ய எல்லாம் எனக்கு நேரம் இல்லை.” என்று சொல்லி விட்டு அவளை பார்க்க.

அவள் முகத்தில் தெரிந்த குற்ற உணர்ச்சியில் “என்ன கிருத்திகா உன் மனசு புண்படும் படியா ஏதாவது பேசிட்டேனா….?” என்று கேட்டதுக்கு.

“இல்லை இல்லை. நீங்க சரியா தான் பேசினிங்க. நான் தான் படிக்கும் வயதில் காதல் என்று டைமை கடத்திட்டேன். நீங்க சொன்னிங்க தெரியுமா காதல் யார் வாழ்க்கையில் தான் இல்லை.

காதலித்தவங்களையே எல்லோரும் கல்யாணம் செய்துக்கிறாங்களா என்று நீங்க சொல்வது சரி தான். ஆனால் அவங்க எல்லாம் காதலித்த வீட்டிலேயே அவனுக்கு அண்ணியா போறது இல்லையே…..ஏதோ சொல்ல வந்த விக்ராவை தடுத்து விட்டு நான் பேசிடறேங்க. இனி இது பத்தி பேச மாட்டேன்.

நான் காலேஜ் முதல் நாளிலேயே உங்க தம்பியே பார்த்தேன் .பார்த்த உடன் காதல் எல்லாம் இல்லை. ஆனால் பார்த்தேன் ஏன்னா ஒரு கும்பல் சூழ நடுவில் அவி இருந்தான்.

அந்த கும்பலில் ஒருவர் கூட பையன் கிடையாது. எல்லோரும் பெண்கள் தான் அந்த முந்நாள் தான் வீட்டில் பழைய படம் பார்த்தேன்.அதில் கிருஷ்ணர் புல்லாங்குழல் இசைக்க அவரை சுற்றி கோபியர் சூழ்ந்து இருப்பர். எனக்கு அது தான் நியாபகம் வந்தது. அதை நினைச்சி சிரிச்சிட்டே அவனை கடந்து சென்று விட்டேன்.

பின் தினம் தோறும் அவனை பார்ப்பேன் பார்க்க வேண்டி எல்லாம் இல்லை. நான் எப்போ எப்போ பார்க்கிறேனோ அப்போ எல்லாம் பெண்கள் அவனை சுத்தி இருப்பாங்க.

ஆனால் ஒன்னு அவியா பெண்களை தேடி போனதை நான் பார்த்தது கிடையாது . அது போல பெண்கள் என்ன தான் அவன் மீது வீழ்ந்து பழகினாலும் அவி அவர்களிடம் தப்பா பேசியோ தப்பா பழகியோ நான் பார்த்ததோ கேள்வி பட்டதோ கிடையாது.

என் காலேஜ் வாழ்க்கை ஆறு மாதம் கடந்து இருக்கும் அப்போ ஒரு தடவை அவியா வந்து என் கிட்ட ப்ரபோஸ் செய்தான். என்னால் நம்ப முடியவில்லை.

ஆனால் இது நான் ஒத்துக் கொண்டு தான் ஆகனும் காலஜே அவன் தன்னை பார்க்க மாட்டானா...என்று ஏங்க …அவன் என்னிடன் காதல் சொன்னது கர்வமாக தான் இருந்தது.

அந்த கர்வத்திலேயே என் தலை தானாக அசைந்து அவனுக்கு சம்மதம் கொடுத்து விட்டது என்று அவன் என்னிடம் தேங்ஸ் சொல்லும் போது தான் எனக்கே புரிந்தது.

தப்பு செய்து விட்டமோ என்று அடுத்து யோசிக்கும் போதே சுத்தி இருக்கிற பெண்கள் அனைவரும் கைய் கொடுத்து நீ ரொம்ப லக்கிடி என்று புகழ புகழ அந்த தப்பு மறைந்து அவி நல்ல பையன் தானே….காதலித்தால் என்ன தப்பு.

எப்படியோ திருமணம் செய்து கொள்ள போகிறேன் அது அவியா இருக்கட்டுமே...என்று யோசிக்க வைத்தது உன் தம்பியா என் வயதா என்பது அப்போது எனக்கு புரியவில்லை.

இந்த மயக்கம் எல்லாம் கொஞ்ச நாள் தான் நீடித்தது. அதுவும் வீட்டுக்கு வந்தால் என் அப்பாவை பார்க்கும் போது ஏதோ தப்பு செய்கிறோமோ என்று தான் நினைக்க தோன்றும்.

அதுவும் என் தங்கைகளை பார்க்கும் போது அவங்களுக்கு நான் ஒரு நல்ல வழிகாட்டியா இல்லாமல் இருக்கோமோ என்று நினைப்பு தான் எனக்கு அடிக்கடி வரும்.

இந்த நினைப்போடு உங்கள் தம்பி எங்காவது வெளியில் கூப்பிட்டால் நான் போக மாட்டேன்.உங்க தம்பி அந்த கோபத்தில் இரண்டு மூன்று நாள் பேசாது இருப்பார்.

அவனுக்கும் ஆசை இருக்கும் அல்லவா….?. வேறு ஒரு பெண்ணை காதலித்தால் அவன் நன்றாக இருப்பானோ என்று நினைத்து நான் அவனை சமாதானம் செய்வேன்.

நான் நினைத்ததையே தான் அவியும் சொல்வான். நான் உன்னை காதலித்ததுக்கு வேரு ஒரு பெண்ணை காதலித்து இருக்கலாம் என்று. இந்த சண்டையில் தான் எங்க மூன்று வருட காதல் சென்றது. அந்த மூன்று வருடத்திலேயே எனக்கு தெரிந்து விட்டது.

அவி வாழ்க்கை முறை வேறு என் வாழ்க்கை முறை வேறு என்று. ஆனால் காதலை முறித்துக் கொள்ள தோன்ற வில்லையா இல்லை முடியவில்லையா என்று எனக்கு தெரியவில்லை.

அப்பா வீட்டில் என் கல்யாணப் பேச்சி எடுத்த உடன் அவி கிட்ட தான் சொன்னேன். அப்போ கூட அப்பா சம்மதித்தால் தான் என்று. ஒரு வேளை அப்பா சம்மதிக்க வில்லை என்றால் அப்பாவோடு அவி தான் வேண்டும் என்று ஒரு நிமிடம் கூட எண்ணம் தோன்ற வில்லை.

காதலித்து விட்டேன் அவனையே கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்று எண்ணியது போல திருமணம் செய்து விட்டேன் உங்க கூட வாழ்ந்து ஆக வேண்டும் என்ற எண்ணம் தோன்றவில்லை. உண்மையா ...ஆத்மார்த்தமா...வாழனும் என்று நான் ஆசை படுகிறேன்.

ஆனாலும் நான் உங்களுக்கு பொருத்தம் இல்லையோ….என்று எனக்கு ரொம்ப குற்ற உணர்ச்சியா இருக்குங்க. நீங்க என்னை சந்தேகப்பட்டாலோ...இல்லை அதை சொல்லி காமிச்சா கூட இந்த அளவுக்கு குற்ற உணர்ச்சியா இருந்து இருக்காது.

ஆனால் நீங்களும் சரி. அத்தையும் சரி இது பத்தி ஒரு வார்த்தை கூட எங்கிட்ட பேசினது கிடையாது. உங்க குணதுக்கும் உங்க வசதிக்கும் இன்னும் நல்ல பெண்ணாவே உங்களுக்கு கிடைத்து இருப்பா…

என் அப்பா குடும்ப சூழ்நிலையும் உடல் நிலையும் மனசுல வச்சி தான் அத்தையும் நீங்களும் இந்த முடிவு எடுத்திங்கன்னு எனக்கு தெரியும். இதே அப்பா நல்லா இருந்தா நீங்க வேறு பெண்ணை…” அதற்க்கு மேல் பேச விடாது அவன் இதழை தன் இதழால் மூடியவன். அவள் மூச்சி வாங்க தான் விட்டான்.

“என்ன விட்டா பேசிட்ட போற….சரி சின்ன பெண் தானே….சொன்னா புரிஞ்சிப்பான்னு பார்த்தா...விட்டா ஓ..ஓன்னா…” என்று கோபத்தில் தொடங்கிய பேச்சி கேலியில் முடிய.

முதலில் அவன் பேசியதில் பயந்தவள் பின் அவன் கேலியைய் புரிந்துக் கொண்டு அவன் மார்பிலேயே குத்தியவள் “சீ நீங்க ரொம்ப மோசம்.”

“நான் என்னம்மா செய்தேன் என்னை மோசம் என்று சொல்லும் அளவுக்கு.அப்போ இனி நான் செய்ய போவதை.” அதற்க்கு மேல் பேச விடாது அவன் வாயைய் பொத்தி “ப்ளீஸ்..” என்றவளை பார்த்து “சரி விட்டுர்றேன்….ஆனால் இது மாதிரி நான் ப்ளீஸ் கேட்டா நீ விட்டுடனும்.” என்று பேரம் பேசியே தன் பேச்சை முடித்தவனிடம்.

கைய் நீட்டி டைமை காமித்தவள் “அரை மணி நேரமா வண்டி இங்கயே இருக்கு. இந்நேரம் நாம் நடந்து சென்று இருந்தாலும் வீடு போய் சேர்ந்து இருப்போம் போல்.” என்று பேசும் தன் மனைவியைய் ஆசையோடு பார்த்தவன்.

“சரி எடுக்கிறேன் ஆனால் பிறந்த நாள் பரிசாக நீ என்ன தரப்போற….”

“என்ன இது அநியாயமா இருக்கு பிறந்த நாள் எனக்கு. நீங்க தான் எனக்கு பரிசு தரவேண்டும். என் கிட்ட கேட்கிறிங்க.” என்று கேட்டவளிடம்.

“சரி நான் பரிசு தர்றேன் ஆனால் அது உனக்கு பத்து மாதம் கழித்து தான் கிடைக்கும்.” என்று சொல்லி விட்டு தன் கையைய் தொட்டில் போல் ஆட்டி காட்ட.

அவன் பேச்சிலும் அவன் செய்கையிலும் வெட்கப்பட்ட கிருத்திகா “சீ நீங்க ரொம்ப மோசம்.”

“ஆமாம் நீ ஏன் இந்த வார்த்தையே சொல்லிட்டு இருக்கே…?” என்று கேட்டவன் பின் “ஆ இப்போ புரியுது “ என்று அவள் காதில் ஏதோ சொல்ல..

“நீங்க ரொ…” ஆராம்பித்தவள் முடிக்காது அவன் மார்பில் சாய.

அவள் தலை தடவிக் கொண்டே தன் வண்டியைய் எடுத்தான் மிக மகிழ்ச்சியாக.
 
Top