அத்தியாயம்----13
முகம் கொள்ள பூரிப்புடன் வீட்டுக்குள் நுழைந்த மகனையும் மருமகளையும் பார்த்த அனுஷியா மகிழ்ந்தவராய் இனி எல்லாம் சரியாகி விடும் என்ற நம்பிக்கை மனதில் எழ…
மகனையும் மருமகளையும் பார்த்து “சாப்பிட ஏதாவது எடுத்துட்டு வரட்டா….?” என்று கேட்டுக் கொண்டே சமையல் அறைக்கு செல்லும் அத்தையைய் தடுத்து நிறுத்திய கிருத்திகா “நீங்க அவர் கூட பேசிட்டு இருங்க அத்தை நான் போய் எடுத்துட்டு வர்றேன்.” என்று சொல்லி சமையல் அறைக்கு செல்லும் மருமகளை முகத்தில் சிரிப்புடன் பார்க்க.
“உங்களுக்கு கிருத்துகாவை பார்த்த உடன் ரொம்ப பிடித்து விட்டது தானே….” என்று கேட்ட விக்ரநாத்தை பார்த்து “அவளை யாருக்கு தான் பிடிக்காது.” என்று கேட்டவர்.
பின் “ஏன் உனக்கு பிடிக்கவில்லையா……?”
“ம் எனக்கும் பிடிக்கும் பார்த்த நாளில் இருந்தே….” என்று மனதுக்குள் முனக.
மகன் பேச்சி காதில் விழாது அவன் முகத்தை பார்க்க “ எனக்கும் பிடிக்கும் என்று சொன்னேன் அம்மா.” என்று சொல்லியும் தன்னை சந்தேகத்துடன் பார்த்த அன்னையைய் என்ன சொல்லி சமாளிப்பது என்று யோசித்துக் கொண்டு இருக்கும் போதே….
இரண்டு கையில் தட்டுடன் வந்த கிருத்திகாவுக்கு உதவி செய்வது போல அதை வாங்கி வைத்தவன். பின் தன் பேச்சை திசை திருப்பி பேசிக் கொண்டு இருக்கும் போது அவிநாத் பற்றி பேச்சி வர.
அந்த இடத்தில் இருந்து எழ பார்த்த கிருத்திகாவின் கைய் பிடித்து நிறுத்திய விக்ரநாத் “இனி ஒரு தடவை இப்படி செய்யாதே….அவன் என் தம்பி. அவன் பேச்சி என்ன ஒரு சிலசமயம் அவனையே எதிர் நோக்கும் சமயமும் வரும்.
இப்படி ஒவ்வொரு தடவையும் போவது சரியில்லை. உண்மையய் சொல்ல வேண்டும் என்றால் உனக்கு சங்கடமா இருக்கும் என்று நினைத்து தான் நானும் அம்மாவும் சேர்ந்து அவனை கோயம்பதூர் அனுப்பலாம் என்று முடிவு செய்தோம்.
ஆனால் வழ்க்கை முழுவதுக்கும் அவனை ஒதுக்கி வைக்க முடியாது கிருத்திகா. அவன் தப்பு செய்தவன் தான் நான் இல்லை என்று சொல்லவில்லை. ஆனாலும் அவன் என் தம்பி..அவனை முற்றிலுமா ஒதுக்கி வைக்க முடியாது.” என்ற கணவனின் பேச்சை கேட்டு.
“அய்யோ நான் அப்படி நினைத்து கூட பார்க்க வில்லைங்க. இன்னும் கேட்டா அவரை கோயம்பத்தூர் அனுப்பியது எனக்காக தான் என்று நீங்க சொல்லாமலேயே எனக்கு தெரியும்.
அதுவே எனக்கு ஒரு மாதிரியாக இருக்கு. என்னால் தானே நீங்களும் ,அத்தையும் அவரை பிரிஞ்சி இருக்கிங்கன்னு. ஒரு தயக்கத்துடன் அவர் என்னிடம் பேசும் போது எல்லாம் உங்களை பற்றி தான் நிறைய பேசுவார்.
அதுவும் அவர் அண்ணாவை பற்றி பேசும் போது அவர் குரலிலும் சரி முகத்திலும் சரி அப்படி ஒரு மென்மை தெரியும். நான் கூட சில சமயம் தப்பான நபரை தேர்வு செய்து விட்டோமா என்று நினைக்கும் போது எல்லாம்.
அவர் குடும்பத்து மீது அவர் வைத்திருக்கும் பாசம் நினைத்து பார்த்து தான் என்னை தேத்தி கொள்வேன். குடும்பத்து மீது இவ்வளவு பாசம் வைத்திருப்பவர் எப்படி தப்பான நபராய் இருப்பார் என்று.
இதுவும் தான் இவரே இவ்வளவு பாசம் வைத்திருந்தால் அவர்கள் எவ்வளவு இவர் மீது பாசத்தை வைத்திருப்பர் என்று. அவர் தவறு செய்து விட்டார் என்று சொன்னதை கேட்டு என்னால் முதலில் நம்ப கூட முடியவில்லை.
ஏன் என்றால் அவர் அண்ணா மீது அவர் எவ்வளவு பாசம் வைத்திருக்கிறார் என்று எனக்கு நன்கு தெரியும். அப்படி இருக்கும் போது எப்படி அவர் தப்பு செய்து இருப்பார் அதுவும் அண்ணனுக்கு மனைவியாக வரும் பெண்ணிடம் என்று தான் நினைக்க தோன்றியது.
அவர்கள் சொன்ன குற்ற சாட்டுக்கு ஏதுவும் சொல்லாது அவர் தலை குனிந்த நின்ற போது தான் அவர்கள் சொன்னது சரியோ என்று நினைக்க தோன்றியது.
அவர் செய்தது பெரிய தப்பு தான் அதற்க்ககா அவரை விட்டு நீங்க பிரித்து இருப்பது எனக்காக தான் என்று நினைக்கும் போது எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு…” மேலும் அவள் என்ன சொல்லி இருப்பாளோ….
அனுஷியா “போதும் கிருத்திகா இனி நீ இது பற்றி கவலை படதேவையில்லை…..” என்று பேச்சை மாற்றினார். என்ன தான் கிருத்திகா அவிநாத் விரும்பினார்கள் என்று தெரிந்திருந்தாலும்…..அதை பற்றிய பேச்சி கேட்க அனுஷியாவுக்கு பிடிக்க வில்லை.
மேலும் விக்ரநாத் சூழ்நிலையை புரிந்துக் கொள்பவனாக இருந்தாலும் ஒரு ஆண்மகனாய் இதை பற்றி கேட்க விருப்பம் இருக்காது என்று நினைத்து பேச்சை மாற்றும் பொருட்டு …”நந்திதா அம்மா நீங்கள் வருவதுக்கு முன் தான் என்னிடம் பேசினாங்க. நந்திதா விசேஷமா இருக்காளம்.
உதவிக்கு வரமுடியுமா என்று நந்திதா அவள் அம்மாவை அழைத்து இருக்கா...ஆனால் இவங்களுக்கு போக முடியாதா சூழ்நிலையாம். நீங்க போக முடியுமா….என்று கேட்டாங்க. நான் அதுக்கு ஒன்னும் சொல்லலை.” என்று சொன்ன தன் அன்னையிடம்.
“அம்மா நீங்க போக விருப்ப பட்ட போயிட்டு வாங்கம்மா…” என்று சொன்னதற்க்கு.
“அவன் இது பற்றி இன்னும் என்னிடம் ஒரு வார்த்தை சொல்ல வில்லை. தப்பு செய்த அவனே அப்படி இருக்கும் போது நான் ஏன் வலிய சென்று செய்யனும்.”
என்ன தான் மகன் தவறு செய்து இருந்தாலும் தன் குடும்பத்துக்கு ஒரு வாரிசு வரப்போகிறது என்று தெரிந்ததும் மனது துடிக்க தான் செய்கிறது. இருந்தும் அந்த வீராப்பு நான் ஏன் இறங்கி போக வேண்டும் என்ற எண்ணம் அவரை தடுக்க…
தன் ஆதாங்கத்தை வார்த்தையால் கொட்டிய அன்னையைய் புன்னகையுடன் பார்த்துக் கொண்டே “அம்மா அவன் மாமியாருக்கு அவனா சொன்னான். அவன் மனைவி தானே…
உங்களுக்கு சொல்ல அவனுக்கு ஆசை இருக்க தான் செய்யும் . எங்கு இதுக்கும் சேர்த்து வைத்து அவனை திட்ட போறிங்களோ என்ற பயமா கூட இருக்கலாம் அல்லவா….”
“ஏன்டா இது எவ்வளவு மகிழ்ச்சியான விசயம் இதுக்கு போயா நான் திட்டுவேன்.”
“அவனுக்கு தெரியலையே…..உங்களுக்கு அவன் மீது இருந்த கோபம் போயிடுச்சின்னு….”
“நான் எங்கு சொன்னேன் அவன் மீது கோபம் போய் விட்டது என்று.”
“அம்மா எனக்காக அவனை தள்ளி வைக்காதிங்கம்மா….” என்று தன் மனதில் இருந்த உண்மையைய் சொல்லும் மகனை பார்த்து “உனக்கு அவன் மீது இருந்த கோபம் போயிடுச்சா விக்ரா…”
“அவன் மீது கோபம் எல்லாம் இல்லைம்மா…வருத்தம். அவன் செய்த செயல் சாதரணமானது இல்லம்மா….எப்படி அவனால் அப்படி செய்ய முடிந்தது என்ற வருத்தம்.
நாம் வளர்த்ததில் எங்கு தவறினோம் என்ற ஆதாங்கம். எனக்கு நந்திதா மீது பெரிய ஈடுபாடு எல்லாம் இல்லை. அப்படி இருந்து இருந்தால்......?இதை அவன் யோசித்தே பார்க்கவில்லையே….என்ன தான் குடிபோதையில் இருந்தாலும் உறவு முறை கூடவா தெரியாமல் போகும்.”
கிருத்திகாவை பார்த்துக் கொண்டே “ இப்போது அனைத்தும் சரியாகி விட்டது. அதனால் பிரச்சனை இல்லை. இதுவே வேறு மாதிரியாகி இருந்தால் மூன்று குடும்பத்துக்கு தானே அவப்பெயர்.” என்று தன் பெரிய மகன் கூறுவது அனைத்தும் உண்மை தானே….
“அம்மா கவலை படாதீங்க. இந்த வருத்தம் கூட கொஞ்ச நாளில் சரியாகி விடும். அவி கூப்பிட்டால் நீங்க கோயம்பத்தூர் போயிட்டு வாங்க. நானும் பேசாது நீங்களும் ஒதுக்கி விட்டால் அவன் உடைந்து போயிடுவான்மா.” என்ற மகனின் தலை தடவிய அனுஷியா…
“உன் நல்ல மனசுக்கு தான் விக்ரா கிருத்திகா உனக்கு மனைவியா வாய்ச்சி இருக்கா…” என்று பேசும் போதே….
அந்த இடத்துக்கு அவிநாத் வந்து விட அவனை பார்த்த அனைவரும் தன் பேச்சை நிறுத்தி விட்டு அவனை பார்க்க.
கொஞ்ச நாளில் ஒரு மனிதனிடம் இந்த அளவுக்கு மாற்றம் தெரியுமா…?தெரியும் என்பதை அவிநாத் நிறுப்பித்தான். உடல் கருத்து மெலிந்து பார்க்கவே ஒரு மாதிரியாக காணப்பட்டான்.
என்ன தான் அவன் மீது கோபம் இருந்தாலும் அவனின் இந்த தோற்றம் தாய் மகன் இருவருக்கும் அதிர்ச்சியைய் ஏற்ப்படுத்த அனுஷியா விக்ரநாத் ஒரே சமயத்தில் “என்ன அவி என்ன கோலம்.” இது என்று கேட்க.
“அண்ணா அம்மா நீங்க என் கிட்ட பேசிட்டிங்களா….பேசிட்டிங்களா…?அண்ணா என்னை மன்னிச்சிடுண்ணா….நான் செய்தது பெரிய தப்பு தான்.” என்று அவன் காலில் விழ…
“சரி எழுந்துடு “ என்று தூக்கி நிறுத்திய அண்ணாவிடம். “அண்ணா என்னை மன்னிச்சிட்டிங்களா….?” என்று திறும்பவும் கேட்க.
“சரி விடு அவி. இனி போனதை பற்றி பேச வேண்டாம். என்று கிருத்திகாவை பார்த்துக் கொண்டே சொல்ல.
தன் அண்ணன் சொல்ல வருவதை புரிந்துக் கொண்ட அவிநாத் “சரிண்ணா….” என்றவனிடம்.
“அது சரி நீ ஏண்டா இது மாதிரி இருக்கே….?” என்று கேட்டதுக்கு.
பழைய அவிநாத் திரும்பியவனாய் “ஏன் கேட்க மாட்டிங்க. கோயம்பத்தூர் பிசினஸ் பத்தி எனக்கு ஒன்னும் தெரியலே….நந்திதா பார்த்துக்கிட்டா தான். ஆனால் இப்போ அவளாலும் முடியலே…
எனக்கா ஒரு மண்ணும் விளங்கலே...எப்போ பார்த்தாலும் அவள் உங்க அண்ணா எப்படி பிசினஸ் பண்றார் நீங்களும் இருக்கிங்களே என்று குத்தி காட்டி பேசிட்டே இருக்கா….
எனக்கு அங்கு யாரை நம்புவது என்றே தெரியலே அண்ணா….நீங்க எவ்வளவு கஷ்டப்பட்டு அந்த கம்பெனியே முன்னுக்கு கொண்டு வந்திங்கன்னு எனக்கு தெரியும்.
நான் ஏதாவது சிறிய தப்பு செய்துட்டு அதனால் ஏதாவது பிரச்சனை வந்துட போகுதுன்னே...நான் எந்த முடிவு எடுக்காமல் திண்டாடுறேன் அண்ணா…
அண்ணா நீங்க சொன்னா மாதிரி நானே அங்கு இருக்கும் பிசினஸை பார்த்துக்கிறேன்.ஆனால் வேலை பிடிபடுகிற வரை நீங்க என்னை கைய்ட் செய்தால் நன்றாக இருக்கும் அண்ணா.” என்று பொறுப்புடன் பேசும் அவிநாத்தை பார்த்து.
“சரிடா ஆனால் அதுக்காக நீ உன்னை பார்த்துக்காம இருப்பியா….? என்று அதட்டியவன். கிருத்திகாவை பார்க்க.
கிருத்திகா அவிநாத்துக்கு சாப்பிட எடுத்து வந்து வைத்தவள் விக்ரநாத் பக்கத்தில் சென்று அமர.
அன்னை அண்ணா அனைவரிடமும் மன்னிப்பு கேட்டவனால் கிருத்திகாவை மட்டும் மன்னிப்பு என்ன அவள் முகம் பார்க்க கூட அவனால் முடியவில்லை. தட்டில் இருப்பதை சாப்பிடாது ஒரு வித சங்கடத்துடன் அமர்ந்து இருக்க.
விக்ரநாத் “அது தான் எல்லோரும் மன்னிச்சாச்சே அப்புறம் என்ன சாப்பிடு.” என்று சொல்ல.
விக்ரநாத் அனைவரும் மன்னிச்சாச்சே என்ற வார்த்தையில் அவிநாத் கிருத்திகாவை பார்க்க.கிருத்திகாவுக்கு தான் என்னவோ போல் இருந்தது. இப்போது நான் அவனிடம் பேச வேண்டுமா….?பேச கூடாதா….? என்று கணவனை பார்த்தாள்.