Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம், "கதையருவி" தளத்திற்கு தங்களை வரவேற்கிறோம்!

    இத்தளத்தில் எழுத எங்களை "vskathaiaruvi@gmail.com" என்ற மின்னஞ்சலில் தொடர்புக் கொள்ளவும். நன்றி!

அத்தியாயம்...14

  • Thread Author


அத்தியாயம்----14

கணவனின் பார்வை உன் இஷ்டம் என்று சொல்வது போல் இருக்க. நிமிர்ந்து அவிநாத்தை பார்த்தவள். “உங்க அண்ணாவே மன்னிச்சிடாரு...இதில் நான் தனியாக மன்னிக்க எதுவும் இல்லை அவிநாத்.

ஏன் என்றால் உங்க அண்ணாவை வைத்து தான் நம் உறவு. அதாவது என் கணவருக்கு நீங்க தம்பி என் மைத்துனர். என் கணவருக்கு உங்க மீது கோபம் போய் விட்ட போது எனக்கு தனிப்பட்ட முறையில் வேறு என்ன இருக்கு.” என்று அவிநாத்திடம் பேசியவள். தன் கணவனை பார்த்து நான் பேசியது சரி தானே என்ற வகையில் பார்க்க.

அவன் முகத்தில் அளவு கொள்ள மகிழ்ச்சி காணப்பட்டது. என்ன தான் அவன் கிருத்திகாவிடம் போனது விடு இனி நமக்கு நிகழ் காலம் தான் முக்கியம் என்று பேசினாலும் தன் மனைவி தன்னை தான் முக்கியமாக கருத வேண்டும் என்ற எண்ணம் இருக்கும் அல்லவா….?

அந்த எண்ணம் தான் திருமணத்தின் அன்று தன்னை அறியாது அப்படி பேச தூண்டியது. இதில் அவள் தவறு ஏதும் இல்லை என்று தெரிந்த போதும். ஆனால் இப்போது தன் மனைவி தம்பியிடம் பேசிய பேச்சி என் கணவனை தாண்டி நமக்குள் என்ன உறவு இருக்கிறது என்று சொல்லாமல் சொல்லியது.

என் கணவன் என்ற வார்த்தையில் அவள் கொடுத்த அழுத்தம். அதில் தெரிந்த உரிமையில் மகிழ்ந்து போய் தன் பக்கத்தில் அமர்ந்து இருந்த மனைவியின் தோள் மீது கைய் போட்டவன்.

அவிநாத்தை பார்த்து “அது தான் அவளே சொல்லிட்டா இல்லையா...அப்புறம் என்ன சாப்பிடு.” என்று சொல்ல.

முதலில் கிருத்திகாவின் பேச்சை கேட்டவன் இவள் இவ்வளவு பேசுவாளா….? என்று எண்ணியவன் பின் தன் அண்ணனின் பேச்சும் அவர் செய்கையும் ...அந்த செய்கையில் கிருத்திகாவின் முகம் மலர்ந்ததையும் பார்த்து தனக்குள் இருந்த குற்ற உணர்ச்சி விலகியதோடு….அண்ணா கொடுத்து வைத்தவர் என்றே என்ன தோன்றியது அவர்களின் அன்னியோனியத்தை பார்த்து.

நந்திதாவும் அவிநாத்துக் குடும்பம் நடத்துகிறார்கள் தான்.ஆனால் எப்போ பார்த்தாலும் சண்டை சச்சரவு என்று தான் காலம் ஓடிக் கொண்டு இருக்கிறது.

எப்போ பார்த்தாலும் தன் அண்ணாவோடு தன்னை கம்பெர் செய்து பேசுவது. நான் அவரையே திருமணம் செய்து இருக்கலாம் என்று சொல்லுவது. இந்த வார்த்தை எந்த ஆண் மகனால் தான் தாங்கிக் கொள்ள முடியும் .ஒப்பிடுவது தன் அண்ணனே ஆனாலும்.

மேலும் கிருத்திகா கெட்டி காரிதான் உன்னை கழட்டி விட சான்ஸ் கிடைத்தது கழட்டி விட்டு உன் அண்ணாவை திருமணம் செய்து கொண்டாளே….பார்க்க பூனை மாதிரி இருந்தாலும் காரியத்தில் கண்ணா தான் இருந்து இருக்கிறாள் என்று எப்போது பார்த்தாலும் சொல்லுவதை கேட்டு…

“எதற்க்கு தேவை இல்லாது கிருத்திகாவை சொல்கிறாய்...நாம் செய்த தப்பால் தானே….கிருத்திகா அண்ணாவை திருமணம் செய்து கொண்டாள்.” என்று ஒரு தடவை சொன்னதுக்கு.

“என்ன பழைய பழக்கம் எல்லாம் நியாபகம் வருதோ...அவளுக்கு சப்போட் செய்யிறிங்க.” என்று கண்ட மேனிக்கு பேச…

அதில் இருந்து நந்திதா என்ன பேசினாலும் கண்டுக் கொள்ளாது இருக்க பழகிக் கொண்டான். சில சமயம் என்னடா வாழ்க்கை என்று நினைத்தாலும்….அப்பாவாய் வளர்த்த அண்ணாவுக்கு நாம் செய்த துரோகத்துக்கு இந்த தண்டனை எனக்கு தேவை தான் என்று அதை ஏற்றுக் கொண்டான்.

அதனால் தான் அவன் உடல் நிலையில் கவனம் கொள்ளாது இப்படியாகி விட்டான். தன்னை பார்த்து அம்மாவும், அண்ணாவும் தன் மீது இருந்த கோபம் பதறி போய் கேட்டதில் இருப்பதை சொன்னால் கண்டிப்பாக வருந்துவார்கள் என்று நினைத்து தான்.

தொழிலால் தான் பிரச்சனை என்று சொன்னான். அதுவும் ஓர் அளவுக்கு உண்மையே…..நந்திதா மத்த விஷயத்தில் எப்படியோ….தொழில் விசயத்தில் கெட்டியாக தான் இருந்தாள்.

ஆனால் இந்த சமயத்தில் ஏற்படும் மசக்கையின் காரணமாக அவளாள் தொழிலை பார்க்க முடியவில்லை. இவன் ஏதாவது தப்பாக செய்து விட்டால் தான் தன் அண்ணாவோடு தன்னை ஒப்பிட்டு திட்டுவது.

இதை தவிற்க்க தான் நந்திதா “போய் உங்க அம்மாவை அழைச்சிட்டு வாங்க.” என்று அனுப்பியும் வைத்திருக்கிறாள். முதலில் நம் அம்மாவை ஏதாவது பேசிவிடுவாளோ...என்று நினைத்தவன். பின் அந்த எண்ணத்தை மாற்றிக் கொண்டான்.

ஏன் என்றால் தொழில் அனைத்தும் அம்மாவின் பெயரில் தானே இருக்கு...அதற்க்காவது மரியாதை கொடுப்பாள் என்று நினைத்து தான் தன் அம்மாவை அழைக்க வந்தான்.

முதலில் தயங்கிய அனுஷியா பேரன் பேத்தியின் ஆசையில் அவிநாத்தோடு சென்று விட.

யாரும் இல்லாத வீடு கிருத்திகாவுக்கு ஒரு மாதிரியாக விச்சோன்னு இருந்தது. அதை தன் கணவனிடமும் சொல்லி விட…..”கவலை படாதே….இன்னும் கொஞ்ச நாளில் நாம் இங்கு அழைத்து வந்து விடலாம்.” என்று சொன்னதுக்கு.

“அது எப்படிங்க குழந்தை ஆசையில் தானே அத்தை அங்கு போனாங்க. அவங்க ஆசையைய் கெடுத்துட்டு நாம் இங்கு வரவழைக்க வேண்டாமுங்க.” என்று சொன்ன கிருத்திகாவின் பின் பக்கமாக அணைத்துக் கொண்டு அவள் காதில் தன் உதடு படும் அளவுக்கு நெருக்கமாக….

“அவங்க ஆசையைய் நாமும் நிறைவேத்தி விட்டால்….” என்று கேட்டுக் கொண்டே அவளைய் தூக்கியவனை பார்த்து “ஏங்க என்ன செய்யிறிங்க...விடுங்க...யாராவது பார்க்க போறாங்க.”

“யாரு….?”

அப்போது தான் பார்த்தாள் வீட்டில் யாரும் இல்லாததை…. அனுஷியா அவிநாத்தோடு போனவுடன் விக்ரநாத்ன் வீட்டில் இருக்கும் அனைத்து வேலையாளையும் வீட்டுக்கு அனுப்பி விட்டு நாளை மாலை வந்தால் போது என்று விட்டான்.

அதை அறியாது கிருத்திகா சுற்று முற்றும் பார்க்க….அவள் பார்ப்பதை பார்த்த விக்ரநாத் “தேடினாலும் கிடைக்காது….வா என்னிடன் வசமாய் மாட்டிக் கொண்டாய்.” என்று சொல்லிக் கொண்டே தங்கள் படுக்கை அறைக்கு தூக்கிக் கொண்டு தங்க மெத்தையில் படுக்க வைத்தவளை எழ விடாது பக்கத்தில் படுத்துக் கொண்டு அவளை சிறை பிடிக்க.

“என்னங்க என்ன செய்யிறிங்க.” என்று குரல் நடுங்க கேட்க.

“பார்த்தியா கல்யாணமாகி இத்தனை நாள் கழித்து கூட ...இதை பற்றி தெரியாது உன்னை வைத்துக் கொண்டு இருக்கிறேன்…..” என்று சொல்லிக் கொண்டே….

“கிருத்திகா உனக்கு பிடித்திருக்கிறது தானே…..?” என்று அவள் கழுத்து வளைவில் முகம் பதித்துக் கொண்டு கேட்பவனை என்ன செய்தால் தகும் என்ற ரீதியில் பார்க்க.

அவள் பதிலை எதிர் பார்த்து அவளை பார்த்த விக்ரநாத்….”என்ன பிடித்து இருக்கா….” என்று திரும்பவும் கேட்க.

தான் நினைத்தையே கேட்ட கிருத்திகாவின் “நான் உன்னுடையவன் கிருத்திகா நீ என்னை என்ன என்றாலும் செய்யலாம்….நான் வேண்டாம் என்று சொல்ல மாட்டேனாக்கும்.” என்று சொல்லியவன் காரில் முத்த மிட்டது நினைவு வர…

அதன் சுவையை மீண்டும் அறியும் பொருட்டு….அவள் இதழை நாட…..

“நான் உங்களிடம் பேச வேண்டும்.” என்ற மனைவியின் பேச்சை காதில் வாங்காது “பேசலாமே…..” என்று சொல்லிக் கொண்டே அவள் இதழின் சுவை அறிந்த பின்பே அவளை விட்டவன்.

“ஆ இப்போ சொல்.” என்று சொன்னாலும்….விக்ரநாத்தின் கண் அவள் உதட்டு மீதே இருந்தது.

“நீங்க இப்படி பார்த்தா ...நான் எப்படி பேசுவதாம்.””

“எப்படி பார்த்தால்….?” என்று புரியாது போல் கேட்டவனை பார்த்து முறைத்துக் கொண்டே…

“ஆ பச்சை குழந்தை தான். ஏதுவும் தெரியாது பாருங்க.” என்று சொல்ல.

“நான் அப்படி சொல்லவே இல்லையே…எனக்கு தெரியும் உனக்கு தெரியுமா….? அப்படி தெரியவில்லை என்றாலும் பரவாயில்லை….இதில் ஒருத்தருக்கு தெரிந்து இருந்தாலே போதும்.” என்று சொல்பவனை.

“உங்களை என்ன செய்தால் தகும்.” என்று பாதி கோபமும் பாதி கூச்சமுமாய் கேட்க.

“நீ என்ன செய்ய நினைக்கிறியே தாரளமா செய்யலாம். நான் எல்லாம் உன்னை பாதிரி இல்லேமா….இங்கு கைய் வைச்சா தள்ளி விடுறது அங்கே கைய் வைச்சா தள்ளி விடுறது.” என்று சொல்லிக் கொண்டு கைய்யும் வைக்க.

அவன் தொடுகையிலும் அவன் பேச்சிலும் தான் பேச வந்தது மறந்தவளாய் மயங்கி “நீங்க இப்படி பேசினால் நான் எப்படி நான் சொல்வ வருவதை சொல்லுவதாம்.” என்று கேட்க.

மயக்கும் புன்னகையுடன் “இப்பவே சொல்லனுமா…..?” என்று கேட்டுக் கொண்டே விளக்கை அணைக்க.

தன்னையே மறந்த கிருத்திகாவுக்கு தான் கேட்க நினைத்ததா நியபாகத்தில் இருக்க போகிறது.முதலில் கொஞ்சம் தயங்கிய கிருத்திகா பின் தன் கணவனின் தேடலுக்கு வழி விட. மனைவியின் முழு சம்மதத்துடன் அவளை ஆண்ட விக்ரநாத்.

“ஆ இப்போ சொல்.” என்று கேட்டதுக்கு.

“என்ன சொல்ல சொல்றிங்க.” என்று இது மண்ணுலகமா விண்ணுலகமா என்ற வகையில் கேட்டு வைக்க.

“ஓ அம்மணி இன்னும் பூ லோகத்துக்கு வரவில்லையோ….?” என்று கேட்டுக் கொண்டே அவனின் தேடலை திரும்பவும் தொடங்க.

அவன் கையைய் தட்டி விட்ட கிருத்திகா “எல்லாம் நியாபகத்தில் இருக்கு.உங்களுக்கு தான் நியாபகமே இல்லை.” என்று சொல்லிக் கொண்டே ஏதோ பேச ஆராம்பித்த கிருத்திகாவின் வாய் மீது கய் வைத்தவன்.

விளக்கை போட்டு விட்டு எழுந்த விக்ரநாத் கிருத்திகாவுக்கு தெரியாது ஆர்டர் செய்து வரவழைத்து கேக்கை அங்கு இருக்கும் டீப்பா மீது வைத்து கேண்டிலும் ஏத்தியவன்.

“நீ எனக்கு இப்போ கொடுத்த கிப்ட் போல் இல்லை ….இருந்தாலும் என்னால் முடிந்தது என்று சொல்லி கேக்கை கட் செய்ய சொல்லி அவளுக்கு ஊட்டி அவளையும் தனக்கு ஊட்ட சொல்லி மறைத்து வைத்த டைமன் நெக்லஸை எடுத்து அவள் கழுத்தில் மாட்டியவன்.

“நன்றாக இருக்கா….?” என்று கேட்க..

அதன் டிசைனில் வியப்பும் ...ஆச்சரியமும் அடைந்தவளாய்….”இது எப்போ வாங்கினிங்க. இந்த டிசைன் நான் எப்போதும் என் வீட்டு வாசப்படியில் போடும் கோலம் போல் உள்ளதே…..?” என்று வியந்து கேட்க.

“ஆம் அதை பார்த்து தான் நான் டிசைன் செய்ய சொன்னேன்.” என்று சொல்லி விட்டு தன் செல்லில் பிடித்த படத்தை காண்பிக்க.

“இது எப்படி….?’ என்று திக்க கொண்டே கேட்டாள்.

அது விக்ரநாத் அவள் வீட்டுக்கு திருமணம் முடிந்த பின் அனுஷியா ஏதோ வேலையாக கிருத்திகா வீட்டுக்கு மூன்று நான்கு முறை அனுப்பிய போது அவள் வீட்டில் வாசப்படியில் இருக்கும் ஓரே கோலத்தை பார்த்து விட்டு கிருத்திகாவின் தங்கையிடம் “உனக்கு இதை தவிர வேறு கோலமே போட தெரியாதா….?” என்று கேட்க.

“இது நான் போடவில்லை கிருத்திகா அக்கா தான் போட்டாங்க. ஆ அக்காவுக்கும் நிறைய கோலம் தான் தெரியும். அது என்னவோ இந்த கோலத்தின் டிசைன் பிடித்து போய் இதுவே போடுகிறாள்.” என்று சொன்னதை கேட்டு அன்றே அந்த கோலத்தை ஏனோ தன் செல்லில் சிறை பிடிக்க எண்ணி ஏன் என்று தெரியாது படம் பிடிக்க.

தன் அன்னை தன் வீட்டுக்கு மருமகள்களாக முதன் முறை வரும் போது நம் குடும்ப வழக்க படி ஏதாவது வைர நகை கொடுப்பதுக்கு வாங்கி வா என்று விக்ரநாத்திடம் சொல்ல….

விக்ரநாத்தும் சாதரணமாக தான் எப்போதும் வாங்கும் நகை கடைக்கு சென்றான். முதலில் நந்திதாவுக்கு நெக்லஸ் வாங்கியவன். பின் கிருத்திகாவுக்கு வாங்கும் போது ஏனோ தன் செல்லில் படம் பிடித்த கோலத்தின் டிசைனிலேயே வாங்கினால்…

கிருத்திகா எப்படி மகிழ்ந்து போவாள் என்று நினைத்து அந்த டிசைனில் ஆர்டர் செய்தும் விட்டான்.ஆனால் நடந்த பிரச்சனையில் அந்த இருநகையும் விக்ரநாத்திடமே தங்கி விட…

இப்போது தன் மனைவி பிறந்த நாளுக்கு என்ன வாங்குவது என்று யோசித்தவனுக்கு அந்த நகை நியாபகத்தில் வர...அதையே கொடுத்து விட்டேன் .”என்று சொன்னவன்.

பின் “உனக்கு வருத்தம் இல்லையே….?” அவன் பேச்சில் நெகிழ்ந்து போய் இருந்தவள். அவன் கேள்வி புரியாது.

“எதுக்கு வருத்தம்.” என்று கேட்க.

“இல்லை உன் பிறந்த நாளுக்கு எதுவும் வாங்காது இருப்பதையே கொடுத்து விட்டனே….அதுவும் இல்லாது இந்த பிறந்த நாள் நமக்கு ஸ்பெஷல் தானே…?” என்று கண்ணடித்து கேட்க.

கூடலுக்கு பின் கூட தானே அவனை நெருங்கி வராது இருந்தவள் இப்போது அவன் நெஞ்சில் சாய்ந்து கொண்டு….

“இதை விட உயர்ந்த பரிசு இல்லங்க. இது வைரம் என்பதுக்காக சொல்லலே….சந்தர்ப்ப வசத்தால் திருமணம் செய்துக் கொண்ட ஒவ்வொருவருக்கும் இருக்கும் ஆதாங்கம் தான். எனக்கும்.

நான் ஏற்கனவே ஒருவரை விரும்பினவள் தான் இருந்தும் இந்த மனம் இருக்கே….அது தன் கணவன் தன்னை தான் விரும்ப வேண்டும் ….அதுவும் தனக்காக என்று அடித்துக் கொள்கிறது.” என்று சொல்லிக் கொண்டே அவனை இருக்கி அணைத்தவளை தானும் இருக்கி…

“நீ தப்பா நினைக்கலேன்னா நான் ஒன்னு சொல்லட்டா….?” என்று கேட்டவனிடம்.

“என்னிடம் என்ன தயக்கமுங்க...எது என்றாலும் சொல்லுங்க.” என்ற தன் மனைவியின் பேச்சில்…

“நாங்கள் முதலில் நந்திதாவை பெண் பார்த்து விட்டு அப்படியே உன் வீட்டுக்கு வந்தோம்….உன்னை பார்த்ததும் எப்போதும் என் தம்பியைய் நினைத்து நான் பொறாமை பட்டதே இல்லை.உலகத்தில் இருக்கும் நல்லது எல்லாம் அவனுக்கு கிடைக்க வேண்டும் என்று தான் எப்போதும் நான் நினைப்பேன்..

ஆனால்...அன்று உன்னை பார்த்த பிறகு என் தம்பி மீது லேசா...என்று சொன்னவன் பின் அதிகமாக பொறாமை வந்தது. அப்புறம் நந்திதாவை உன்னையும் வைத்து கம்பெர் செய்து கூட பார்த்தேன். அது தப்பு என்று தெரிந்து அதை அடக்கினாலும் அந்த நினைவை என்னால் அடக்க முடியவில்லை.

அதுவும் அந்த பார்ட்டி அன்று…...உண்மையா சொல்லனும் என்றால் என் தம்பி செய்த தவறால்….நம் குடும்பத்தின் மானத்தை விட உன்னை பற்றி தான் அதிக கவலை பட்டேன்.

இந்த பெண் அவனை உயிருக்குயிறா விரும்பி இருந்தா…?இதை எப்படி தாங்கிக் கொள்வாள் என்று தான் நினைத்தனே தவிர...இதனால் இந்த சமூகம் என்னை எப்படி கேவளமாக பார்க்கும் என்று கூட யோசித்து பார்க்கவில்லை.

அம்மா நம் இருவருக்கும் திருமணம் என்று சொன்ன பிறகு என்னையும் அறியாது ஒரு சந்தோஷம் இருக்கா தான் செய்தது. ஆனால் இதனால் நீ எப்படி கஷ்டபடுவாய் என்று நினைத்து தான் நான் கொஞ்சம் தயங்கினேன்.” சொல்லிக் கொண்டே போனவன் கிருத்திகாவின் அணைப்பு கொஞ்சம் தளரவும்.

“என்ன கிருத்திகா என்னை தப்பா நினைக்கிறியா….?” தன் மனதில் இருப்பதை வெளிப்படையாக சொல்கிறேன் என்று சந்தோஷமான நாளை நானே கெடுத்து விட்டேனோ என்று நினைத்து பயத்துடன் கேட்க.

“இல்ல” என்று தலையாட்டி மறுத்தவள்.

“நாம் என்ன தான் நினைத்தாலும் கடவுள் யாருக்கு யார் என்று அவர் தீர்மானித்தது தான் நடக்கும் என்பது சரியாக தான் இருக்கிறது. அந்த கடவுள் நாம் இருவர் என்று எழுதி அனுப்பி இருக்கிறார் போல்...அதை யாரால் மாற்ற முடியும் .” என்று கேட்க.

“ஓ அதில் உனக்கு ரொம்ப கவலை போல….”

“பின் இருக்காத இந்த கோபமனுஷனை எப்படி சமாளிப்பது என்று.”

“உனக்கு தெரியாதா….” என்று சொல்லிக் கொண்டே அவளை அருகில் இழுத்தவன் “இப்படி தான்.” என்று சொல்லி நகைக்க….அங்கு சந்தோஷம் மட்டுமோ குடிக் கொண்டது.

மூன்று வருடதுக்கு பின்..

சென்னையில் புது பிரான்ச் திறப்புக்காக கோயம்பத்தூரில் இருந்து அவிநாத்தும் நந்திதாவும் அவர்களின் இரண்டரை வயது மகன் நிஷாந்துடன் வந்து இறங்க….

நிஷாந்த்தை பார்த்த விக்ரநாத்தின் இரண்டு வயது மகள் விகிதா….தன் அம்மா இடுப்பில் இருந்து இறங்கி தத்து பித்து என்று நடந்து வந்து தன் மழலை பேச்சால்….

ஷா என்ற எழுத்து வராததில் “நிசா அண்ணா...தித்தி...தித்தா….” என்று ஓடி வந்து அவர்களின் காலை கட்டிக் கொள்ள.

அந்த மழலையின் பேச்சுக்கு ஈடாக நந்திதாவும் “ நிசா...தித்தி தித்தப்பாவை அழைக்கும் அளவுக்கு பெரிய மனுஷியா ஆயிட்டாங்களா…?” என்று கொஞ்ச….நிஷாந்த் தன் அன்னையின் பிடியில் இருந்து தன் பிடிக்கு மாற்றிக் கொண்டு…

“நீ வா விகி...நாம் விளையாடலாம்.” என்று அழைத்து போக பார்க்க அவர்களை தடுத்த அனுஷியா “பார்த்தியா என்னிடம் வராமல் போறிங்களே….” என்று கோபம் போல் பேசுவதை பார்த்த அந்த இருமழலைகளும் “அச்சோ….நாங்க உங்க கூட தான் விளையாட போறோம்.” என்று இருவரும் இருபுரமாக அணைத்துக் கொள்ள

தன் பேரன் பேத்திகளின் பிடியில் இருந்த அனுஷியா “உலகில் இதை விட சுகம் இருக்கா….” என்ற நினைவில் திலைத்து இருந்தவரை விக்ரநாத் “அம்மா முதலில் சாப்பிட வாங்க….மூனு நாளுக்கு உங்க பேரன் இங்கு தான் இருப்பான். அதனால் பொறுமையா கொஞ்சுக்கலாம்.” என்று டையினிங் டேபுளுக்கு அழைத்து போக.

அங்கும் தன் இரு பேர பிள்ளைகளை தன் இருப்பக்கத்தில் அமர்த்திக் கொண்டு சாப்பாடு பரிமாறிய கிருத்திகாவின் கைய் பற்றி “நன்றிம்மா….” என்று கூற…

ஏன் எதற்க்கு என்று கேட்காத கிருத்திகா “அத்தை வீட்டில் இருப்பவங்களுக்கு யாருக்காவது நன்றி சொல்லுவாங்களா….?” என்று சொல்லிக் கொண்டே…. சாப்பிட்டு எழ பார்த்த அவிநாத்தை பார்த்து “ ப்ரூட் சாலட் சாப்பிடாம எழுந்துக்கிறிங்களே...இருங்க பிரிஜ்ஜில் இருக்கு எடுத்துட்டு வர்றேன்.” என்று அந்த இடத்தை விட்ட நகர பார்க்க.

“இருங்க நானே எல்லோருக்கும் எடுத்துட்டு வந்து தர்றேன்.” என்று சொல்லி அனைவருக்கும் தானே கொடுக்க…...கிருத்திகாவுக்கு கொடுக்கும் போது அதில் இருந்த பப்பாயி பழத்தை எடுத்து விட்டு கொடுக்க.

அதை பார்த்த நந்திதா “ பப்பாயி உடம்புக்கு நல்லது. அவங்க தான் பிடிக்காது என்று சொல்லுறாங்கன்னா….சாப்பிடு என்று சொல்லாம நீங்களும் எடுத்துட்டு கொடுக்கிறிங்களே…” என்று தன் கணவனை அதட்ட.

“அப்படியா நந்திதா….” என்று கேட்டவன்.

கிருத்திகாவிடம் “ நாளைக்கு நம் வீட்டு சாப்பாட்டில் கண்டிப்பாக பாவக்காய் இருக்கனும்.” என்று சொல்ல.

அதை கேட்ட அலறிய நந்திதா “அம்மா தாயே….கிருத்திகா கிண்ணத்தில் என்ன என் கிண்ணத்தில் இருக்கும் பப்பாயியைய் கூட எடுத்து விட்டு தாங்க.” என்று சரணகதி அடைய…

“அது…” என்று சொல்லி சிரித்து விட்டு தன் அண்ணனின் தோளில் கைய் போட்டு கொண்டே கோயமத்தூரில் இருக்கும் கார் ஷோ ரூமை பற்றி பேசிக் கொண்டே போகும் தன் இருமகனையும் பார்த்த அனுஷியா கிருத்திகாவை பார்க்க.

அவர் பார்வையைய் பார்த்த கிருத்திகா ஒரு புன்சிரிப்புடன் தனக்கு உதவி செய்துக் கொண்டே ஏதோ பேசிக் கொண்டு இருக்கும் நந்திதாவுக்கு பதில் அளித்துக் கொண்டே தன் வேலையை பார்த்துக் கொண்டு இருக்கும் கிருத்திகாவை பார்க்க பார்க்க அவருக்கு பெருமையாக இருந்தது.

மூன்று வருடத்துக்கு முன் கிருத்திகா விக்ரநாத்தையும் தன்னையும் வைத்துக் கொண்டு…”உங்க இருமகன்களும் ஒத்துமையா இருக்கனும் என்றால்...உங்க சொத்தை அவிநாத்துக்கு கொடுத்துடுங்க. எங்களுக்கு அந்த கார் ஷோரூம் மட்டும் போதும்..இந்த சொத்தால் பிரச்சனை ஏற்படுவதை நான் விரும்பவில்லை.

நந்திதா அவிநாத்தை பிடித்து தான் கல்யாணம் செய்து இருக்கா...ஆனால் இந்த சொத்தாலையும்...விக்ரநாத்தை பார்த்து இவரை போல் அவரால் தொழில் செய்ய முடியவில்லை என்பதால் தான் பிரச்சனை செய்துக் கொண்டே இருக்கா….” என்று தன் மாமியாரை எப்படி எப்படியோ பேசி சொத்து பிரிக்க வைக்க.

விருப்பம் இல்லை என்றாலும் சொத்தை பிரித்தார். ஆனால் மொத்தத்தையும் கொடுக்காது மூக்கால் பாகம் அவிநாத்துக்கும் கால் பாகம் விக்ரநாத் குழந்தைக்கும் எழுதி வைக்க.

இதை நந்திதா துளியும் எதிர் பார்க்காது அந்த சொத்து பத்திரத்தை கையில் வைத்திருப்பதை பார்த்த அவிநாத் “இது தான் எங்க அண்ணா….உனக்கு விருப்பம் இல்லேன்னாலும் நான் இப்போ கிருத்திகா பற்றி சொல்லி தான் ஆகானும்...இந்த சொத்துக்கு எல்லாம் ஆசைபடுபவள் இல்லை.” என்று சொல்லியும் திருந்ததா நந்திதா.

விக்ரநாத் கோயம்பத்தூரில் நந்திதாவுக்காக வைத்து கொடுத்த கார் ஷோரூமை பார்த்து அசந்தே போயிட்டா...ஏன்னா சென்னையில் விக்ரநாத் வைத்த ஷோரூம் போலவே அச்சு அசல் இருக்க.

விக்ரநாத் நந்திதாவிடம் “சாரி நீ ஆசை பட்ட சென்னை கார் ஷோரூமை என்னால் கொடுக்க முடியல...அது முதன் முதலில் நானே சுயமுயற்ச்சியில் வாங்கியது.

அதுவும் இல்லாது அதில் கிருத்திகாவுக்கு ட்ரையினிங் கொடுத்து ஏம்.டி சீட்டிலும் உட்கார வைத்து விட்டேன்.அதை கொடுக்க மனசு வரலே...என்னால் முடிந்த அளவு அது போலலே செய்து கொடுத்து இருக்கேன்.

இது ஓர் அளவுக்கு உனக்கு செட்டாகும் வரை நான் இருந்து கத்து கொடுக்கிறேன்.” என்ற விக்ரநாத்தின் பேச்சில் மொத்தமாய் வீழ்ந்தாள் என்று தான் சொல்ல வேண்டும்.

அன்றில் இருந்து ஒரே அடியாக நந்திதா மாறவில்லை என்றாலும் கொஞ்சம் கொஞ்சமாக இதோ இந்த குடும்பத்தோடு இப்படி இணைந்து விட்டாளே...இத்தோடு தனக்கு என்ன வேண்டும் என்ற மகிழ்ச்சியில் அனுஷியா தன் பேர குழந்தைகளுடன் முன் பக்கம் இருக்கும் தோட்டம் நோக்கி சென்றார்.
 
Top