Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம், "கதையருவி" தளத்திற்கு தங்களை வரவேற்கிறோம்!

    இத்தளத்தில் எழுத எங்களை "vskathaiaruvi@gmail.com" என்ற மின்னஞ்சலில் தொடர்புக் கொள்ளவும். நன்றி!

அத்தியாயம்....7.1 டீசர்

  • Thread Author
அத்தியாயம்….7.1

மகனின் பேச்சுக்கு “சரிப்பா…” என்று திரிபுர சுந்தரி சொன்னாலுமே…. அவர் மனதில் ஏதோ தவறாக பட்டது… ஏதோ சரியில்லை… ராஜேந்திர பூபதியின் பேச்சு இப்போது எல்லாம் குறைந்தது போல் இருப்பதாக அவருக்கு தோன்றியது…

அதை கணவனிடமும் கூட அன்றே திரிபுர சுந்தரி சொன்னார் தான்… ஆனால் எதையுமே நேர் கொண்டு யோசிக்கும் நீல கண்ட பூபதியோ…

“இந்தியாவில் இருந்து போகும் போது ராஜேந்திரனுக்கு இருபத்திரெண்டு வயது தாயி… இப்போ இருபத்தி ஆறு வயது ஆகுதும்மா … அதோடு அங்கு வேலை பார்க்கிறான்… கொஞ்சம் வேலை மீது கவனம் போகும் தானே….

புதுசா அங்கு அங்கே நட்பா இருப்பாங்க…. அதுல அங்கும் கொஞ்சம் பேச்சு இருக்கும்” என்று மனைவி தந்த வெற்றிலையை வாயில் அதக்கி கொண்டே சொன்னதை திரிபுர சுந்தரி மனது ஏற்க தான் மறுத்தது….

இன்னுமே மனைவியின் முகத்தில் தெளிவு வராததை கவனித்த நீல கண்ட பூபதி… “ என்ன தாயி…” என்று அழைத்து தன் மனைவியின் தாடையை நிமிர்த்தி தன்னை பார்க்கும் படி செய்தவர்..

“எது தாயி உன் மனசை போட்டு உழட்டுது… எது என்றாலும் சொல்லு தாயி.. நான் உன் பக்கம் இருக்க. உன் முகம் இப்படி கலக்கத்தில் இருந்தா அப்புறம் என்ன நான் ஆம்பிள்ளை என்று மீசையை முறுக்கிட்டு இருக்குறது….” என்ற கணவனின் இந்த பேச்சில் திரிபுர சுந்தரியின் முகம் முன்பு இருந்த கலக்கம் முகத்தில் மட்டும் தான் மறைந்தது…

“அதை ஏன் முறுக்கிட்டே இருக்கிங்க… இந்த மீசையை பார்த்து தானே நான் கட்டுனா உங்களை தான் கட்டுவேன் என்று நின்னு கட்டிக்கினது…” என்று சொன்ன மனைவியின் கண்ணில் தெரிந்த அந்த காதலில் கணவனின் முகம் கர்வத்தில் கொஞ்சம் மிளிர்ந்தது என்று தான் சொல்ல வேண்டும்….

அப்படியுமே மனைவி இது போல் பேச ஆரம்பித்தால் கணவனாக அந்த பேச்சை வளர்க்கும் நீல கண்ட பூபதியோ…

“மீசை அப்படியே தான் இருக்கு.. ஆனா வெள்ளை முடி வந்து நான் கிழடு தட்டிட்டேன் என்று எனக்கு அது சொல்லுதே தாயி….” என்று சொன்னார்..

இந்த பேச்சுக்கு மனைவியின் பதில் என்னவாக இருக்கும் என்று தெரிந்தே தான் அவர் அப்படி சொன்னது..…. அவர் நினைத்தது போல் தான் அவரின் மனைவியும்…

“ஆமா ஆமா கிழடு தான்… அதை நீங்க தான் சொல்லிக்கனும்.. நல்ல வேல குடும்ப கட்டுப்பாடு பண்ணிட்ட தொட்டு என் மானம் காப்பாந்தா இருக்கு.. இல்லேன்னா மருமகள் எடுக்கும் நேரத்தில் கையில் குழந்தையோடு தான் கல்யாண வேலையை பார்க்குறது போல ஆகி இருக்கும்… என்று சொன்ன மனைவியின் பேச்சையும் ரசித்தார்… மனைவியின் முகத்தையும் ரசித்தார்.

ஆனால் பாவம் நீல கண்ட பூபதிக்கு தெரியவில்லை.. இன்று தன் மனைவி இந்த முகத்தை கணவனிடம் காட்ட மனதில் இருக்கும் குழப்பத்தை அனைத்தும் மறைத்து கொண்டு இது பேச எத்தனை கஷ்டப்பட்டார் என்பது…

அதுவும் கணவனுக்காக தான்.. ஆனால் மனதில் மட்டும் ஏதோ தவறாக நடப்பதாக பட்டது.. அதனால் தான் கணவனிடம் மருமகள் எடுக்கும் வயதில் என்று பேசும் போதே கணவன் சொன்ன மகன் இங்கு இருந்து போகும் போது இருபத்திரெண்டு வயது.. இப்போது இருபத்தி ஆறு என்றது நியாபகத்தில் வர.

இதை நான் எப்படி மறந்தேன்.. அவர் இனத்தில் பையனுக்கு இருபத்தி ஐந்து எல்லாம் பெரிய வயது… அந்த வயதில் ஒரு குழந்தையோ இல்லை இரு குழந்தைக்கோ அப்பவாக மாறி இருப்பார்கள்.

மகன் கண் எதிரில் இருந்தால், மகனுக்கு வயது ஆகிறது என்று நினைத்து இருந்துப்பேன் போல். இனி ஒரு நல்ல பெண்ணாக பார்த்து திருமணத்தை முடித்து விட வேண்டியது தான்.

அதன் பின் அவன் அங்கு இருப்பதோ.. இல்லை இங்கு இருப்பதோ… அவன் விருப்பம். அவன் மனைவியின் விருப்பம்…. என்று நினைத்தவர் நினைத்ததை செயல் படுத்த உடனே தொடங்கி விட்டார்..

கையில் பணம் இருந்தால் செயல் படுத்துவது என்ன அவ்வளவு கடினமா என்ன… கணவனிடம் சொன்னவர் பின் ஒரே வாரத்தில் அடுத்த ஊரில் இவர்கள் அளவுக்கு வசதியும், செல்வாக்கும் நிறைந்த இடத்தில் இருந்து ராஜேந்திர பூபதிக்கு பெண் தேடுவது தெரிந்ததும்… அவர்களாகவே முன் வந்து பெண் எடுத்து பெண் கொடுக்கலாம் என்று சொல்ல.

இவர்களும் அந்த குடும்பத்தை தெரியும் என்பதினால் சரி என்று ஒத்து கொண்டனர்.. மகன் இங்கு இருந்து செல்லும் முன்பு…

“நான் அந்த நாட்டு பெண்ணை எல்லாம் கல்யாணம் செய்துக்க மாட்டேன் ம்மா. இந்த ஊரு பெண்ணை தான் கல்யாணம் செய்துப்பேன்…. உங்க விருப்படி தான்..” என்ற மகனின் வாக்கை நம்பி தட்டை மாற்றிக் கொள்ள. அது தான் அவர்கள் குடும்பமே மாறி போக காரணமாக ஆக போகிறது என்பது தெரியாது….




 
Top