- அத்தியாயம்----9
- அதில் மூத்தவர் போல் உள்ள ஒருவர் “பிரச்சனை என்ன என்றா…. கேட்குறே…..? நல்ல குடும்பம் என்று சம்மந்தம் வைத்தால் ….” என்று அவர் சொல்லி முடிப்பதற்க்குள்.
- “வயதுக்கு மரியாதை கொடுத்து தான் இப்போ நீங்க பேசியதுக்கு ஒன்னும் செய்ய வில்லை. இனி ஒரு வார்த்தை என் குடும்பத்தை பற்றி பேசினாய் அந்த வயதுக்கு கூட மரியாதை தர மாட்டேன்.” என்று சொல்ல.
- அதை கேட்ட நந்திதாவின் அப்பா அய்யோ இந்த பெரியப்பா காரியத்தையே கெடுத்துடுவார் போலவே….பெரிய இடம் என்று தான் இங்கு சம்மந்தம் செய்ய ஆசை பட்டேன். அதுவும் விக்ரநாத்தின் தொழில் ஆர்வத்தில் மகிழ்ந்து போய் தானே இருந்தேன்.
- அந்த மகிழ்ச்சிக்கு தீயை வைப்பது போல் ஒரு காரியத்தை செய்து வந்து இருக்கிறாளே என் பெண்….சரி இனி விக்ரநாத்தை தன் மகள் கட்ட முடியாது. நடந்த தப்பை சொல்லி அட்லீஸ் அவிநாத்துக்கு பேசி முடிக்க நான்கு பெரிய மனிதர்களை கூப்பிட்டு வந்தால் இவர்கள் காரியத்தையே கெடுத்து விடுவார்கள் போலவே…. என்று நினைத்தவர்.
- இனி நானே தான் பேசியாக வேண்டும் என்று நினைத்து “மாப்பிள்ளை….” என்று கூப்பிட்டவர்.
- பின் “இனி அப்படி கூட முடியாதே….” என்று சொல்ல.
- விக்ரநாத் நந்திதா சொன்னது போல் செய்து விட்டாளா…..? என்று நினைத்து அவளை பார்க்க. அவள் எங்கே இவன் பக்கம் திரும்புவேனா…….என்று தரையே பார்த்திருக்க. இவள் இப்படி பட்ட டைப் இல்லையே….. என்று நினைத்து தன் வருங்கால மாமனாரை பார்க்க.
- “எனக்கு தெரியும் தம்பி நீங்க என் பெண் மேல் எவ்வளவு ஆசை வைச்சி இருக்கிங்க.” என்று சொல்ல.
- மண்ணாங்கட்டி ஏதாவது நடந்து இந்த திருமணம் நிக்காதா….என்று யோசித்துக் கொண்டு இருக்கிறேன் இவர் என்ன வென்றால் சொல்ல வருவதை சொல்லாது தேவையில்லாதது எல்லாம் பேசிக் கொண்டு இருக்கிறாரே…...என்று நினைத்து.
- “என்ன விஷயம் எது என்றாலும் நேரிடையா சொல்லுங்க.” என்று கேட்டும்.
- “ என் பெண்ணை இந்த வீட்டுக்கு மூத்த மருமகளாய் அனுப்ப தான் எனக்கு ஆசை….ஆனால் விதி வேறு மாதிரி இருக்கிறதே….” என்று சொல்லி விட்டு திரும்பவும் அவனை பார்க்க.
- இவர் நேரிடையாக எதுவும் சொல்ல மாட்டாரா….என்று இவர் என்ன தான் சொல்ல வருக்கிறார். அது என்ன என்று தன் அன்னைக்கு தெரியுமா என்று பார்த்ததில்.
- இன்னும் தன் கைய் பிசைதலை நிறுத்தாது முகம் வெளிரி நின்றுக் கொண்டு இருந்த தன் அன்னையை பார்த்தவுடனே தெரிந்து விட்டது தன் அன்னைக்கு தெரியும் என்று.
- அதுவும் விஷயம் ஏதோ பெரியது போல். இல்லை என்றால் அவ்வளவு தைரியமான அனுஷியா இப்படி நிற்க மாட்டாரே என்று எண்ணிக் கொண்டே நந்திதாவின் அப்பாவிடம் “எது என்றாலும் நேரிடையாக சொல்லுங்க.” என்று கோபத்துடன் கேட்க.
- அவர் ஏதோ வாய் திறக்கும் வேளையில் தன் காலில் அவிநாத் விழ. பதறிய விக்ரநாத் “ஏய் அவி என்னடா...முதலில் நீ எழுந்துடு.” என்று சொன்னதோடு மட்டும் அல்லாது அவனை எழுப்பி நிக்க வைத்தவன்.
- “நீ யாரு காலிலும் விழ கூடாது .அது நானே ஆனாலும். செய்த தப்பை உணர்ந்தாலே போதும்.” என்று சொல்லி விட்டு அவனின் தோளில் கைய் போட்டுக் கொண்டான். விக்ரநாத் நேற்று தன்னிடம் நடந்து கொண்டதுக்கு தான் தன் காலில் விழுந்தான் என்று நினைத்து தான் அப்படி சொன்னான்.
- தன் அண்ணன் தன் மேல் எவ்வளவு பாசம் வைத்துள்ளார். அதை ஒரு நிமிட சபலத்தில் அனைத்தும் நாசமாக்கி விட்டேனே என்று அவன் நினைத்துக் கொண்டு தன் அண்ணாவை பார்க்க.
- விக்ரநாத் வாசலை அதிசயத்துடன் பார்த்துக் கொண்டு இருப்பதை பார்த்து யார் என்று அவனும் பார்க்க. அங்கு கிருத்திகாவின் குடும்பம் மொத்தமும் வந்துக் கொண்டு இருந்தனர்.
- அவிநாத்தால் அவர்களை தலை நிமிர்ந்து பார்க்க முடியவில்லை. தான் செய்த செயல் எந்த எந்த பின் விளைவுகளை ஏற்படுத்துமோ...என்று பயந்துக் கொண்டு நிற்க.
- அதிசயத்துடன் கிருத்திகா குடும்பத்தை பார்த்துக் கொண்டு இருந்த விக்ரநாத்தை பார்த்த நந்திதாவின் அப்பா “நான் தான் அவர்களை வர சொன்னேன்.”
- “ஓ…” என்று மட்டும் சொன்னவன். பின் அனைவரையும் சுற்றி ஒரு பார்வை பார்த்தான். விஷயம் நாம் நினைத்ததை விட பெரியது போல...எது என்றாலும் அவர்களே சொல்லட்டும் என்று நினைத்தவன் தன் அன்னையின் அருகில் நின்றுக் கொண்டு பிசைந்துக் கொண்டு இருந்த அவர் கைய் பற்றி…
- “அம்மா எதுக்கும் கவலை படாதீங்க. தீர்க்க முடியாதது எதுவும் இல்லை.” என்று என்ன விஷயம் என்று தெரியாமலேயே தன் அன்னைக்கு ஆருதல் கூறுபவனை அணைத்துக் கொண்டவர். தன் சின்ன மகனை அருவெருப்புடன் பார்க்க.
- அவர் பார்வையை பார்த்த விக்ரநாத் அப்போ தவறு அவியிடம் தான் என்று நினைத்தாலும் ஒன்றும் சொல்லாது நந்திதாவின் அப்பாவை பார்க்க. தன்னை பார்ப்பதை பார்த்த அவர்…
- “தம்பி நேத்து தம்பிக்கு மனைவியா வர போறவளை அழைச்சிட்டு போன நீங்க. உங்களுக்கு மனைவியா வரப்போறவளை அழைச்சிட்டு போயி இருந்தா இந்த நிலைமையே வந்து இருக்காதே….
- “எந்த நிலமை…”
- “என் பெண்ணை உன் தம்பிக்கு தான் கட்டி வைக்கனும் என்ற நிலமை.” அந்த ஒரே வார்த்தையில் அவனுக்கு அனைத்தும் விளங்கி விட்டது.
- தன் தம்பியா….? சின்ன பையன் என்று நினைத்த தன் தம்பியா….? இது தான் எண்ணினானே தவிர அவன் தம்பியை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. தன் அம்மாவை பார்க்க.
- அவர் முகத்தில் அப்படி ஒரு அவமானம் இது மாதிரி மகனை பெத்து விட்டனே என்று. விக்ரநாத்தும் கூனி குறுகியது எல்லாம் ஒரு நொடி தான்.
- நந்திதாவின் அப்பாவை பார்த்து “சரி குறித்த முகூர்தத்திலேயே இவங்க கல்யாணத்தை வைச்சிடலாம்.” என்று அவன் சொல்லிக் கொண்டு இருக்கும் போதே தொப் என்ற சத்ததில் திரும்பி பார்க்க.
- அங்கு கிருத்திகாவின் அப்பா விழுந்து கிடந்தார். “அய்யோ இவர்களை பற்றி நினைக்கவே இல்லையே நேத்து தானே இவரின் உடல் நிலை பற்றி கிருத்திகா சொன்னா….. என்று நினைத்துக் கொண்டே அவரிடம் செல்ல…
- கிருத்திகா அவர் சட்டை பாக்கெட்டில் இருந்த மாத்திரையை எடுத்து விக்ரநாத்திடம் “மாமா தண்ணீர் கொண்டு வாங்க.” என்று சொல்லி விட்டு மாத்திரைய பிரித்து எடுக்க.
- அசந்த சந்தர்பமாக நேத்து அவள் அப்பா எதுக்காக கிருத்திகாவிடம் தன்னை மாமா என்று கூப்பிட சொன்னார். அது தான் இப்போ இல்லாது போயிற்றே….என்று நினைத்துக் கொண்டே தண்ணியை எடுத்துக் கொண்டு அவளிடம் நீட்ட.
- கையில் வாங்கியவள் பாதி மயங்கிய நிலையில் உள்ள அப்பாவின் வாயில் எப்படி போடுவது என்று தன் இரு கையில் உள்ள தண்ணியயும் மாத்திரையும் பார்க்க.
- இதை அனைத்தையும் ஒரு குற்ற உனர்ச்சியுடன் பார்த்திருந்த அவிநாத் சம்பந் குமாரின் தலையை தூக்க அவர் அருகில் போக. அதை புரிந்த கிருத்திகா விக்ரநாத்திடம் “நீங்க தூக்குங்க.” என்று சொன்னதும்.
- நீட்டிய அவிநாத் கைய் துவள….விக்ரநாத் கிருத்திகா சொன்னது போல் தலை பிடித்துக் கொண்டான். மாத்திரை போட்ட கொஞ்ச நேரத்துக்கு எல்லாம் சுயநினைவு வந்தவர்.
- இனி இங்கு இருப்பது வீண் என்று நினைத்து கலங்கிய தன் கண்ணை துடைத்துக் கொண்டே தன் குடும்பத்தை கூட்டிக் கொண்டு வெளியேற போக. அனுஷியா போகும் அவர்களிடம் “கொஞ்சம் நில்லுங்க அண்ணா….” என்றவரிடம்.
- “இனி நான் இங்கு நின்று என்ன ஆக போகிறதும்மா….?” என்று கேட்டதுக்கு.
- “ஏன் கல்யாணம் தான்.” என்ற அவர் பேச்சில் அங்கு இருந்த அனைவரும் அதிர்ச்சியுடன் அவரை பார்க்க.
- நந்திதாவின் அப்பா மட்டும் “என்னம்மா விளையாடுறிங்களா…..?உங்க கிட்ட பணம் இருந்தா என்ன வேணா செய்துட்டு கைய் கழுவி விட்டு விடுவீங்களா….?என் பெண்ணின் வாழ்க்கைக்கு என்ன பதில்…” என்ற அவர் பேச்சில்.
- கிருத்திகாவின் அப்பா “ கவலை படாதீங்க இனி அவனுக்கு என் பெண்ணை கொடுக்க மாட்டேன். அண்ணி என்பது பாதி அம்மா மாதிரி….அப்படி பட்ட உறவிடமே இப்படி நடந்துக் கொண்டான் என்றால்….எனக்கு இவளுக்கு அடுத்து இரண்டு பெண் பிள்ளைகள் இருக்கு…” என்று பாதியில் நிறுத்த.
- அந்த பேச்சை கேட்ட அவிநாத்துக்கு நடு ஹாலில் அனைவரும் முன்நிலையில் துணி இல்லாமல் இருப்பது போல் இருந்தது. அனுஷியாவின் நிலை சொல்லவே தேவையில்லை….
- இப்படி ஒரு பிள்ளையா நான் வளர்த்தேன் என்று நினைக்க விக்ரநாத் தன் தம்பியை உக்ரத்தோடு பார்க்க அவிநாத்தோ யாரின் முகத்தையும் பார்க்க முடியாது நின்றான்.
- அனுஷியா இந்த நிலையில் தான் பேசாது இருந்தால் நல்லது இல்லை என்று நினைத்தவர் சம்பந் குமாரிடம் “சம்மந்தி….” என்று ஏதோ பேச ஆராம்பித்தவரிடம்.
- “அது தான் இல்லை என்று ஆயிடுச்சே...இன்னும் என்ன….?” என்று சொன்னவரிடம்.
- “ஏன் அண்ணா என் பெரிய மகனுக்கு உங்கள் மகளை தரமாட்டிங்களா…..? என்று வினாவ…
- அவர் பேச்சில் விக்ரநாத் கிருத்திகா ஒரு சேர அலர….அவிநாத் திக் பிரம்மை பிடித்தவன் போல் நின்று விட்டான்.