அத்தியாயம்…1
சென்னையில் உயர்தரமான நட்சத்திர அந்தஸ்த்து பெற்ற அந்த ஓட்டலில், ஆறு இளம் பெண்களும் முதலில் என்ன பேசுகிறோம் என்று தெரியாது காரணம் இல்லாது தான் பேசிக் கொண்டு இருந்தனர்.
அதில் இன்று “நான் உங்களுக்கு ட்ரீட் கொடுக்கிறேன்.” என்று சொல்லி அழைத்து வந்த யமுனாவின் முகத்தில் தெரிந்த அதிக படியான வெட்கத்திலும், அவள் கண்களில் தெரிந்த மயக்கத்திலும், அவள் தோழிகள்..
“என்னடி கல்யாணம் வரை கூட பொருக்கல போல. என்ன எல்லாம் முடிந்து விட்டதா என்ன.?” என்று தன் திருமணம் முடிவாகி உள்ளது என்று தன் தோழிகளுக்கு ட்ரீட் கொடுக்க அழைத்து யமுனாவிடம், அவள் தோழிகளில் ஒருத்தியான காயூ என்கிற காயத்ரி கேட்டாள்.
அதற்க்கு யமுனா இன்னும் வெட்கப்பட்டவளாக “ சீ போடி “ என்று அவள் சொன்ன அந்த சிணுங்கலான வார்த்தையில், மற்ற தோழிகளும் சேர்ந்து கொண்டனர்.
“அடிப்பாவீ. அது எல்லாம் இல்ல என்று சொல்லாம சிணுங்குறாளே.” என்று இன்னொரு தோழியான ரேவு என்கிற ரேவதி சொல்ல.
இப்படி என்ன பேசுகிறோம் ஏது பேசுகிறோம் என்று தெரியாது பேசி கொண்டும், சிரித்துக் கொண்டும், மொத்தத்தில் சிரிக்க வேண்டும் என்று கங்கணம் கட்டி கொண்டு தான் அந்த ஓட்டலுக்கு வந்து இருப்பது போல் தான் அந்த தோழிகளில் ஐந்து தோழிகளும் இருந்தனர்.
ஆனால் அதில் ஒருத்தி மட்டும் ஏதுவும் பேசாது, அவர்கள் பேசுவதையும், சிரிப்பதையும், பார்த்தும், கேட்டு கொண்டு மட்டும் இருந்தாள். அவள் தான் இந்துமதி.
தோழிகள் அந்த ஆறு பேர் கொண்ட கூட்டணி. கல்லூரியில் ஆரம்பித்து, இப்போது ஐடி கம்பெனி வரை தொடர்கிறது. அவர்கள் இருக்கும் இடத்தில் சிரிப்புக்கு எப்போதும் பஞ்சம் இருக்காது..
எந்த ஒரு விசயம் ஆனாலும், முதலில் ஆரம்பித்து வைப்பது இந்துமதியாக தான் இருக்கும்.ஆனால் இன்று அவள் அமைதியாக இருப்பதை பார்த்து விட்டு மற்றவர்கள்.
“என்ன இந்து அமைதியா இருக்க.” என்று கேட்டனர்.
அதற்க்கும் எதுவும் சொல்லாது, அவள் அமைதியை தொடர்ந்தாள்.
யமுனா தான் “ என்ன இந்து நான் எவ்வளவு சந்தோஷமா இருக்கேன். அதை கொண்டாட உங்களை எல்லாம் இங்கு கூட்டிட்டு வந்தா, நீ அதை செலபரேட் செய்யாம இப்படி இருக்க.” என்ற யமுனாவின் கேள்விக்கு, இந்துமதியிடம் இருந்து உடனே பதில் வந்தது.
“இந்த உன் சந்தோஷம் நிலைக்குமா.?” என்ற அவள் பேச்சில், மற்ற தோழிகள் அனைவரும் ஆடி போய் விட்டனர்.
“என்ன பேச்சு இது.?” என்று காயத்ரி யமுனாவின் அதிர்ந்த முகத்தை பார்த்து, கோபத்துடன் இந்துமதியிடம் கேட்டாள்.
“உண்மை சொன்னா கோபம் தான் வரும் காயூ.இப்போ அவள் மனது காயம் பட கூடாது என்று பார்த்து பேசினால், பின் நாளில் அவள் காயம் பட போவதை யாரும் தடுக்க முடியாது போயிடும்.” என்று அவள் புரியாத பேச்சில், மற்ற தோழிகள்.
“சொல்வதை புரியும் படி சொல் இந்து.” என்று கேட்டனர்.
இந்துமதியும் சொன்னாள். “ஈசியா கிடைக்கும் எந்த பொருளுக்கு எப்போதும் மதிப்பு இருக்காது. அது உங்களுக்கு தெரியும் தானே.” என்று கேட்ட அவளின் இந்த பேச்சு பாவம் மற்ற தோழிகளுக்கு புரியவில்லை.
இருந்தும் அவள் சொல்ல வருவது என்ன என்று கேட்போம் என்று அனைவரும் அமைதி காத்தனர்.
“இவளுக்கு திருமணம் பிக்ஸ் ஆகி ஒரு மாதம் ஆகிறது.” என்று யமுனாவை காட்டி இந்துமதி சொன்னாள். இது தெரிந்தது தானே.. இதில் என்ன இருக்கு என்பது போல் மற்றவர்கள் இந்துமதியை பார்த்தனர்.
அதே தான் இந்துமதியும் சொன்னாள்.” இதில் என்ன இருக்கு…? இது தானே நீங்க நினைக்கிறிங்க…? என்று அவர்கள் நினைப்பதை கேட்ட இந்திமதி..
பின் அவளே… “ இந்த ஒரு மாதத்தில் யமுனா அவள் பியான்ஸிக்கு அழைத்து பேசியது அதிகமா.? யமுனாவின் வுட்பீ இவளை அழைத்தது அதிகமா.?” என்று அவள் கேள்விக்கு, அனைவரும் யமுனாவை தான் பார்த்தனர்.
அது இந்து கேட்ட கேள்விக்கு பதில் தெரியாது இல்லை. அனைவருக்கும் தெரியும். யமுனா தான் அவள் வருங்கால கணவன் சாருகேசனை அழைப்பாள். அதை வைத்தும் தான் தோழிகள் அனைவரும் யமுனாவை கிண்டல் செய்து ஓட்டுவதும்.
“இது தெரிந்தது தானே. இவள் தானே ஜொள்ளோ, ஜொள்ளுன்னு ஊத்துவது. இதை வைத்தும் தானே நாம் இவளை ஓட்டுவது.” என்று கவிதா கேட்டாள்.
“நான் அதை தான் சொல்ல வர்றேன். எப்போதும் இது போல் விசயத்தில் ஆண்கள் தான் முதல் ஸ்டெப் எடுத்து வைப்பாங்க. ஆமாவா….? இல்லையா….? ” என்று இது தான் என்று ஆரம்பித்த அவளின் கருத்தை, அதே என்று அவளின் தோழிகளையும் சொல்ல வைத்தாள்.
“ஆமாம். இதில் என்ன சந்தேகம்.” என்று மற்ற தோழி காவ்யா கேட்டாள்.
“ஆனால் இவள் விசயத்தில் என்ன நடக்குது.?” என்று இந்துமதி யமுனாவை சுட்டு காட்டி கேட்டாள்.
இப்போது இந்துமதி என்ன சொல்ல வருகிறாள் என்று மற்ற தோழிகளுக்கு லேசாக புரிந்தது.
“எனக்கு அவரை ரொம்ப பிடித்து இருக்கு இந்து. அது தான்.” என்று வெட்கப்பட்டு கொண்டே சொன்னாள்.’அவள் வெட்கத்தை பார்த்து முன் போல் அவள் தோழிகள் அவளை கிண்டல் செய்யவில்லை. அவர்களும் இந்துமதியின் கருத்து ஏற்றுக் கொண்டது போல் தான் அமைதி காத்தனர்.
யமுனா தான். “நான் தான் அவரிடம் இறங்கி போகிறேனா.?” என்று இந்துமதியிடம் கேட்டாள்.
“இவர்களிடமே கேள்.” என்று இந்துமதி மற்றவர்கள் பக்கம் கை காட்டினாள். அதற்க்கு அனைவரும் ஒன்று போல் ஆமாம் என்று தான் சொன்னார்கள்.
“அவர் என்னை ரொம்ப அலையிறேன் என்று நினைத்து இருப்பார் இல்லை.” என்று திரும்பவும் அவளே கேட்டாள். தன் கேள்விக்கு, மற்றவர்களிடம் பதில் இல்லாது போகவும்.
“இப்போது நான் என்ன செய்ய வேண்டும்.” என்று யமுனா தன் வாழ்க்கை எனும் விடைக்கு கேள்வி எழுத இந்துமதியிடம் கேட்டாள்.
இந்துமதியும் அனைத்தும் கற்ற ஞானி போல.” இந்த ஆண்கள் சமூதாயம் எப்போதும் பெண்களை ஒரு கணக்கீடலில் தான் அளவிடும். அதாவது காதல். இது அனைவருக்கும் பொதுவானது என்று தான் எல்லோரும் சொல்றாங்க….”
“ஆனால் நடை முறையில், ஒரு பெண்ணுக்கு ஆண் மீது காதல் வந்து, தன் மனதை அவனிடம் வெளிப்படுத்தினால் ‘என்ன இது வெட்கமே இல்லாம சொல்றா.” என்று தான் பேசுவாங்க. அந்த பெண்ணின் காதல் வெற்றி அடைந்து அது திருமணத்தில் முடிந்தாலுமே,
அந்த கணவன்” நீ தான் என்னை தேடி வந்த.” ஏதாவது பிரச்சனை என்று அவர்களுக்குள் வந்தால், இந்த வார்த்தையை அவன் சொல்லி விடுவான்.”
“இதே ஆண் ஒரு பெண்ணை விரும்பி அனைவரும் முன்னும், மண்டி இட்டு ப்ரபோஸ் பண்ணுவதை பெருமையாக தான் அனைவரும் பார்ப்பார்கள்….”
“ஏன் இன்னும் கேட்டால், அந்த பெண் அவன் காதலை ஏற்காது போனாலும், அவள் பின் சுற்றி நான் அவளை மடக்கி விட்டேன் என்று தன் நட்புக்களிடம் சொல்வதையும் நாம் கேட்டு இருக்கோம் தானே.”
“இது தான். இது போல் ஒரு விசயத்தில், ஆண் தான் முதல் அடி எடுத்து வைக்க வேண்டும். காதலே இப்படி என்றால், மற்றது.” என்ற இந்துமதியின் போதனைகளை யமுனா அட்சுகம் பிழகாது கேட்டு கொண்டதோடு விடாது. அதை நடை முறை படுத்தவும் தீர்மானித்து விட்டாள்.
அதுவும் இந்துமதி சொன்ன.’ முதலில் பெண் காதல் சொல்லி அது திருமணத்தில் முடிந்தாலுமே, அந்த கணவன் சொல்லி காண்பிப்பான்.’ என்ற வார்த்தையில் யமுனா மொத்தமாக வீழ்ந்து போனாள்.
மேலும் இப்போது தன் வுட்பியுடம் நாம் தான் அழைத்து இருக்கிறோம். அவன் ஒரு முறையாவது தன்னை அழைத்து இருக்கிறானா..? அதுவும் ஒரு சில சமயம் தான் போனில் அழைத்தும், எடுக்காது விட்டது.
பின் எடுத்தாலுமே ஒரு சில சமயம்.” எனக்கு வேலை இருக்கு யம்மீ. அப்புறம் பேசட்டுமா.” என்று சொல்லி, தன் பதிலை கூட எதிர் பாராது போனை அணைத்து விட்டது.
அவள் நினைவுகள் ஒன்றன் பின் ஒன்றாக அவளுக்கு வந்தது. இந்த ஓட்டலுக்கு வந்த போது அவள் முகத்தில் தெரிந்த மகிழ்ச்சி சுத்தமாக மறைந்து, இப்போது அந்த இடத்தில் குழப்பம் குடி கொண்டது.
வாழ்க்கை எனும் அடிப்படை கூட தெரியாத அந்த இளம் பெண்கள். அதுவும் கணவன் மனைவி உறவு. தாம்பத்தியத்தில் இருக்கும் நீக்கு போக்கு தெரியாது. இது தான் . நாம் மறுத்தால் தான் நமக்கு மதிப்பு. அதுவும் இது போல் விசயத்தில் என்று மற்றவர்கள் சொல்ல கேட்டு, அந்த தோழிகள் பேசிய அந்த பேச்சுக்களின் பின் விளைவுகள் தெரியாது பேசி விட்டு சென்று விட்டனர்.
அதுவும் இந்துமதி கடைசியாக சொன்ன, அதுவும் டெமோ செய்தும் காட்டிய. தன் இரு கையையும் யமுனா முன் நீட்டி இருந்தாள்.
அதில் ஒரு கை விரித்தும், மற்றொரு கை மூடியும் அவள் முன் காட்ட, யமுனா கண் என்ன மற்ற தோழிகள் கண் மொத்தமும், இந்துமதியின் மூடிய கை மீது தான் இருந்தது. அதில் என்ன வைத்து இருக்கிறாள் என்று அறிந்துக் கொள்ள வேண்டி.
அவர்களின் பார்வை தன் மூடிய கையில் தான் இருக்கிறது என்பதை பார்த்ததும், தன் கை விரித்து காட்ட, அதில் ஒன்றும் இல்லாது போகவும் அவர்களின் சுவாரசியம் குறைந்து போனது போல், அவர்களின் பார்வை வேறு ஒரு பக்கம் திரும்பியது.
“இது தான். ஆண்களின் மனதும். உடனே எல்லாத்துக்கும் சம்மதித்து விட்டால், நம் மீது இருக்கும் அவர்களின் சுவாரசியம் குறைந்து போக வாய்ப்பு இருக்கிறது.. ஒரு முத்தம் வாங்கவே நம் பின் ஒரு மாதம் அலைய விட வேண்டும்.” என்று சொன்ன இந்துமதியும் மோசமான பெண் கிடையாது.
அவள் சிறுவயதில் பட்ட அவமானம். தன் தோழியும் பட கூடாது என்ற நல்ல எண்ணத்தில் சொல்வதாக நினைத்து தான் அவளும் சொன்னாள்.
ஆனால் அவர்கள் அனைவரும் வாழ்க்கை இது தான் என்று தெரியாது பேதையின் நிலையில் இருபத்தி மூன்று வயதுடைய பெண்கள்.
அவர்கள் நட்பிலேயே யமுனாவுக்கு தான் முதலில் திருமணம் முடிவாகி உள்ளது. அதனால் வாழ்க்கையில் இருக்கும் நெளிவு, சுளிவு தெரியாது போனதால், பாவம் யமுனா வாழ்க்கை தான் பாதிப்புக்கு உள்ளாக போவது என்று கூட தெரியாது நல்லது தான் சொல்கிறேன் என்று இந்துமதி சொன்னாள்.
அவள் சொல்லே நாளை அவளுக்கும் வினையாக போகும் என்று அவளும் நினைத்து பார்த்து இருக்க மாட்டாள்.
தன் வருங்கால மனைவி தனக்கு வேட்டு வைக்க போவது தெரியாத அந்த அப்பாவி ஜீவன் சாருகேசன், ஒரு விசாரணையில் தீவிரமாக ஈடுப்பட்டு கொண்டு இருந்தான்.
தன்னிடம் இருக்கும் ஆதாரத்தை காட்டி. “அவனை அரஸ்ட் செய்ய இது போதும்.” என்று சொல்ல, அங்கு இருந்த மற்றொரு காவலன்.
“இது போதாது. கண்டிப்பா இன்னும் ஸ்டாங்கான எவிடென்ஸ் இருந்தா தான், நாம் அவன் பக்கத்திலேயே போக முடியும்.” என்று சொன்ன வீர ராகவ்வை கோபத்துடம் முறைத்தான் சாருகேசன்.
இவர்களின் இந்த சண்டை இப்போதைக்கு முடியாது என்று நினைத்து, அவர்கள் சுற்றி இருந்த மற்ற காவலர்கள் சென்றதும், ஒரு சிரிப்போடு சாருகேசனின் தோள் மீது கை போட்ட வீர ராகவன்.
“அப்புறம் என்ன சொல்றாங்க நம்ம சிஸ்டர்.” என்ற வீர ராகவ் வார்த்தையில், இப்போது சாருகேசன் உண்மையாகவே அவனை முறைத்து பார்த்தான்.
“ஏன் முறையை மாத்தி சொல்ற.” என்று கேட்டுக் கொண்டே தன் தலை மீது இருக்கும் தொப்பியை கழற்றியவன், தன் நண்பன் வீர ராகவின் தொப்பியையும் கழற்றி விட்டு.
“ஐந்து நாளா சம டென்ஷன் டா…. இந்த அரசியல்வாதிங்களுக்கு பந்தோ பஸ்த்து வேலை இருக்கு பாரு.. யப்பா முடியல சாமீ.” என்று நொந்து போய் பேசியவனை ஒரு உணவகத்துக்கு அழைத்து சென்றான் வீர ராகவ்.
இருவருக்கும் காவலர் பயிற்சியில் தொடங்கியது நட்பு. இதோ இன்று வரை அந்த நட்பு தொடர்ந்தாலுமே, இடை இடையே வழக்கு சம்மந்தமாக மோதியும் கொள்வார்கள் தான். இருவரும் ஐ.பி.எஸ் அதிகாரிகள். சம பதவி. சம அந்தஸ்த்து. ஆனால் கொள்கையில் இருவருக்கும் ஒரு சில மாற்று கருத்து இருப்பதால், அவ்வப்போது மோதல்கள் வந்தாலுமே, நட்புக்கு அதனால் எந்த வித பாதிப்பும் இல்லாது தான் இருக்கின்றனர்.
“அதை விடு. என் சிஸ்டர் பத்தி சொல். என்ன நல்ல மாதிரி தானே.” என்று அவன் கேட்டதுமே, சாருகேசன் கண் இரண்டும் மேல் தூக்கி ஏதோ யோசிப்பது போல் இருந்தவனின் செயலை பார்த்து வீர ராகவன்.
“வேண்டாம் மச்சான். பெரிய பெரிய அக்யூஸ்ட் முகத்தை கூட நான் அசால்ட்டா பார்த்துடுவேன். ஆனா உன் வெட்க படும் முகத்தை என்னால் பார்க்க முடியல.. முதல்ல உன் ரியாக்க்ஷனை மாத்து.” என்று சொன்னதும், ஒரு சிரிப்போடு தன்னை பார்த்த சாருகேசனை இப்போது அதே சிரிப்போடு வீர ராகவன் பார்த்தான்.
“உன் முகத்தை பார்த்தாலே தெரியுது. உனக்கு சிஸ்டரை ரொம்ப பிடித்து விட்டது என்று.”
இப்போது சாருகேசனும் தன் விளையாட்டை கை விட்டு. “ பிடித்து இருக்கு. ஆனா அதோட அவளின் புரிதல் எனக்கு ரொம்ப பிடித்து இருக்குடா … நம்ம வேலை தான் நேரம் காலம் தெரியாதது. இதுல பெரியவங்க பார்த்து வைக்கிற கல்யாணம்.”
“நம்மையும், நம்ம வேலையையும் இந்த பெண் புரிந்து கொள்ள வேண்டுமே என்ற பயம் எனக்கு இருந்துட்டு தான் இருந்தது. ஆனா..” என்று சொன்னவனுக்கு இப்போது நிஜமாகவே வெட்கம் வந்து விட்டது.
அதை தன் போனில் க்ளிக்கிய வீர ராகவ் “சந்தோஷமா இருக்கு டா.” என்று சொல்லி நண்பனின் மகிழ்ச்சியில் அந்த காவலன் பங்கு கொண்டான்.
“இந்த ஒரு மாசத்தில் நானாவே ஒரு நாள் கூட பேசினது கிடையாது. ஒரு சில சமயம் அவள் போன் செய்தா கூட அதை என்னால் அட்டண் செய்ய முடியாத சூழ்நிலையில் நான் இருப்பேன். சரி பின் அழைக்கலாம் என்று தான் நான் நினைப்பேன்.”
“நம்ம வேலை டென்ஷனில் அதையும் மறந்தும் போய் விட்டு இருக்கேன். ஆனால் அவள் அதை எல்லாம் பார்க்காது, திரும்பவும் அவளே தான்டா அழைப்பாள்.. அவளே அழைக்கும் சில சமயத்தில் கூட அவள் கிட்ட பேச முடியாது போய் விடும். ரொம்ப புரிந்து கொள்ளும் பெண்டா நான் ரொம்ப லக்கி.” என்று சொல்லி கொண்டான் அந்த அன்லக்கி.