Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம், "கதையருவி" தளத்திற்கு தங்களை வரவேற்கிறோம்!

    இத்தளத்தில் எழுத எங்களை "vskathaiaruvi@gmail.com" என்ற மின்னஞ்சலில் தொடர்புக் கொள்ளவும். நன்றி!

ஆசைகள் அடங்காது....10

  • Thread Author
அத்தியாயம்…10

இந்துமதி தன் அழைப்பை ஏற்காது போகவும், யமுனாவுக்கு ஒரு சமயம் இவளுக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லையோ. தன் திருமணம் அன்று கூட ஏதோ போலீஸ் பத்தி சொன்னாளே.

“ ரொமன்ஸ்சுக்கும் இவங்களுக்கும் காத தூரம் என்று.” என்று நினைத்தும் கொண்ட யமுனா. இவள் மட்டும் வீராவிடம் சரியாக நடந்து கொள்ளவில்லை என்றால், எனக்கு தான் பிரச்சனை என்று நினைத்து, யமுனா இந்துமதிக்கு விடாது பேசியில் அழைப்பு விடுத்துக் கொண்டே இருந்தாள்.

நிறைய அழைப்புக்கு பின் அழைப்பை ஏற்ற இந்துமதியை பேச விடாது யமுனா. “ ஏன் குரங்கே எவ்வளவு தடவை நான் உன்னை கூப்பிடுறது.?” என்று சத்தம் போட்டவளுக்கு பதில் சொல்லும் மன நிலையில் இந்துமதி இல்லை.

இருந்தும் பொறுமையாகவே.. “ எனக்கு இங்கு ஏற்கனவே பிரச்சனை போயிட்டு இருக்கு யம்மீ. இதுல நீ வேற கடுப்பை ஏத்தாதே. என்ன விசயம் சொல் சீக்கிரம். இல்லேன்னா டி.எல் வந்து சத்தம் போடுவார்.” என்று அங்கு ஆபிசில் இருக்கும் நிலவரத்தை சொன்னாள்.

யமுனாவும் முன் அதே ஆபிசில் வேலை செய்தவள் தானே அதனால்.. “ ஏன்டி என் கிட்டயே நடிக்கிறியா.? அந்த கொசுக்கு எல்லாம் நாம எப்போ பயந்து இருக்கோம். “ என்று அவர்கள் பழைய டி.எல். லை மனதில் வைத்து யமுனா பேசினாள்.

“இல்ல இப்போ அவர் இல்ல. வேறு ஒருத்தர் புதுசா வந்து இருக்கார்.” என்று முழு விவரத்தையும் சொல்லாது புது டி.எல் மாறியதை மட்டும் சொன்னாள்.

ஏன் என்றால் இவர்கள் அனைவரும் கல்லூரியில் இருந்து தான் இந்துமதிக்கு தோழிகளாக இருந்தவர்கள். தன் பள்ளியில் நடந்த அந்த பழைய விசயத்தை அவளே நினைக்க பிடிக்காது இருக்கும் போது, அதை ஏன் இவர்களிடம் சொல்ல போகிறாள். அதுவும் இல்லாது இது ஒன்றும் அவ்வளவு பெருமையான விசயம் ஒன்றும் இல்லையே. அதனால் அதை பேச என்ன.. மறந்தே விட்டாள் என்று தான் சொல்ல வேண்டும்.

ஆனால் மறந்த விசயம், இப்போது உயிர் கொண்டு நடமாடிக் கொண்டு இருக்கும் போது, அதன் தாக்கம் இந்துமதியை பலமாக தாக்கியது.

ஆனால் இந்துமதி இதை பற்றி குறைந்த பட்சம் யமுனாவிடமாவது சொல்லி இருக்கலாமோ. ஆனால் சொல்லாது விடுத்து.

“சொல்லு யம்மீ. ஏதாவது முக்கியமான விசயம் இருந்தா சொல். இல்லேன்னா நானே உன்னை அப்புறம் கூப்பிடுறேன்.” என்று சொல்லி அழைப்பை துண்டிக்க பார்த்தவளை.

“ஏய் இந்து வைத்து விடாதே. நான் முன் உன் கிட்ட கேட்டது ரொம்ப உன் வாழ்க்கைக்கு முக்கியமான விசயம் தான். சொல் உனக்கு பிடித்து தானே இந்த கல்யாணம் நடக்குது.” என்ற யமுனாவின் பேச்சில், இப்போது இந்துமதிக்கு நிஜமாகவே கோபம் வந்தது.

நிச்சயம் முடிந்து, அதிலும் குழம்பி போய் இருக்கிறேன். இங்கு வந்தா இதோ என் பழைய கணக்கு புது கணக்காக புதுப்பிக்க முன் வந்து நிற்கிறது. இதில் வேலை இல்லாது இவள் வேற என்ற எரிச்சலில்.

“இப்போ பிடிக்கவில்லை என்றால் என்ன செய்ய போற. கல்யாணத்தை நிறுத்த போறியா. உன் கணவரோட பிரண்ட் தானே மாப்பிள்ளை. உன்னால் முடிந்தால் இந்த கல்யாணத்தை நிறுத்து, உனக்கு புன்னியமாக போகும்.” என்று சொல்லி அழைப்பை கோபத்துடன் வைத்து விட்டாள்.

யமுனா அதிர்ச்சியில் பேசியை வைக்காது அதையே அதிர்ந்து பார்த்து கொண்டு இருக்கும் போது, தோளை யாரோ தொடவும், இன்னும் பயந்தவளாக திரும்பி பார்க்க அங்கு சாருகேசன் நிற்பதை பார்த்ததும், முதலில் .. ஓ இவர் தானே..? என்று நினைத்து யமுனா ஆசுவாசம் அடைந்தாள்.

பின் இந்துமதி பேசிய பேச்சு நினைவுக்கு வரவும், போன பயம் திரும்பவும் அவளிடம் பற்றி கொண்டது. மனைவியின் முக பாவனைகளையே பார்த்து கொண்டு இருந்த சாருகேசன்.

“என்ன யம்மீ ஏதாவது பிரச்சனையா.?” என்று கேட்டு, அவளையும், அவள் கையில் இருந்த கை பேசியையும் மாறி மாறி பார்த்து கேட்டான்.

“பிரச்சனையா.? அது எல்லாம் ஒன்னும் இல்லையே. ஒன்னும் இல்லையே. இந்து கிட்ட தான் சும்மா. சும்மா தான் பேசிட்டு இருந்தேன்.” என்று யமுனா பேசிய விதத்திலேயே சாருகேசனுக்கு புரிந்துவிட்டது.

இந்த இந்துமதி தான் ஏதோ சொல்லி இருக்கிறாள் என்று.. “இந்த பெண்ணுக்கு பெயரில் மட்டும் தான் மதி போல. அவளும் குழப்பி. மத்தவங்களையும் நல்லாவே குழப்பி விடுறா.

ஆனா இந்த வீருக்கு. அந்த பெட்ரோமாஸ் லைட்டே தான் வேணுமாம். என்ன செய்ய. ? இதோ இப்போ வரும் போது கூட சொன்னேன். நல்லா யோசிச்சிக்க மச்சான் என்று. ஆனால் அவன் கேட்பதாக இல்லையே. என்று நினைத்தவன் தன் கவனத்தை தன் மனைவி பக்கம் திருப்பினான்.

“இப்போ என்ன சொன்னாங்க. உன் பிரண்ட். குழந்தை இப்போ பெத்துக்காதே. பெத்துக்குனா அழகு போயிடும். அப்புறம் உன் புருஷன் உன்னை விட்டு விட்டு வேறு ஒருத்தி பின்னாலே போயிடுவான் என்று சொன்னாங்களா..? “ என்று சாருகேசன் தன் மனைவியிடம் கிண்டலாக கேட்டான்.

“சீ அதை பத்தி எல்லாம் நான் ஏன் அவள் கிட்ட பேச போறேன்..” என்று சொன்னவளின் கன்னத்தை பிடித்து கிள்ளிய சாருகேசன் . “ அது வரை விவரமா இருந்தா போதும். சரி வா பசிக்குது சாப்பிடலாம் .” என்று சாருகேசன் சொன்னதும் தான் யமுனாவுக்குமே இப்போது தான் அவள் பசியும் தெரிந்தது.

இந்துமதிக்கு பேசியில் அழைத்து அழைத்தே நேரம் சென்றது தான் மிச்சம்… இன்னும் தான் என்னை பயம் ஏத்தி விட்டு இருக்கா, என்று நினைத்து கொண்டு கணவனுடன் சாப்பிட சென்று விட்டாள்.

இங்கு இந்துமதியின் நிலை சொல்ல முடியாத நிலையில் இருந்தது. முதலில் தன்னை தெரியாதது போல் மற்றவர்களிடம் காட்டி கொண்ட வாசுதேவன் பின், தன் முகத்தை பார்த்து யோசிப்பது போல் பாவனை செய்தவன் பின் முகத்தில் ஒரு தெளிவு போல் பிம்பத்தை கொண்டு வந்து.

“நீ அந்த ***** ஸ்கூல் படித்த இந்துமதி தானே.?” என்று வியந்து கேட்பது போல் பாவனை செய்தவன் பின்

“நான் உன்னை அடையாளம் தெரியாது விட்டு இருந்தால் பரவாயில்லை. உனக்கு எப்படி என்னை தெரியாது போகும் இந்து .?” என்று கேட்டவன் பின் அவனே.

“ஓ அதை பத்தி தனியா பேசிக்கலாம் என்று நினைத்து விட்டாயா இந்து.” என்று வாசுதேவன் ஒவ்வொரு வார்த்தை சொல்லும் போதும், அவளின் ஹார்ட் பீட் அடித்து அடித்து ஓய்ந்து போனது.

இவன் இதற்க்கு மேல் பேசினால் நிச்சயமாக ஒரே அடியாக நின்று போய் விடும். அது மட்டும் நிச்சயம் என்று தான் இந்துமதி நினைத்தாள்.

அவனும் அதே தான் நினைத்தான் போல, இன்று இது போதும் என்று நினைத்து விட்டானா. ? இல்லை இந்த வேளை இது போதும் என்று விட்டானா தெரியவில்லை.

செய்ய வேண்டிய வேலையை சொல்லி விட்டு அங்கிருந்து சென்று விட்டான். ஆனால் போகும் போதும் அவன் தன்னை பார்த்து விட்டு சென்றது. அது மற்றவர்களும் பார்த்தது

எல்லோரும் பார்க்க வேண்டி தான் அப்படி செய்தானோ, அப்போது தான் யமுனா நேரம் காலம் தெரியாது அழைத்தது. இவளும் இருக்கும் நிலைக்கு மனதில் பட்டதை பேசி விட்டாள்.

ஆம் மனதில் பட்டதை தான் பேசினாள். வீர ராகவ் வீட்டில் பார்த்த மாப்பிள்ளை. மறுக்க எந்த காரணமும் இல்லை என்று தான் ஒத்துக் கொண்டாள்.

இந்த திருமணத்தால் மனது மகிழ்ந்து இருக்கா விட்டாலும், பயத்தோடு இருக்க கூடாது அல்லவா.? பயம் பயம் பயம் மட்டுமே.

இதோ இப்போது வாசுதேவன் வந்து இருக்கிறான். அவன் பார்வையும் சரியில்லை. பேச்சும் சரியில்லை. இவன் என்ன செய்ய காத்து கொண்டு இருக்கிறானோ என்று இந்துமதி நினைக்க . அதற்க்கு பதில் அவளுக்கு மாலையே கிட்டியது.

இந்துமதி அமர்ந்து இருந்த இடத்துக்கு வந்த வாசுதேவன் . “ என்ன வேலை முடிந்து விட்டதா.? ” என்று கேட்டவனுக்கு, கழுத்து சுளுக்கு பிடிக்கும் அளவுக்கு நிமிர்ந்து பார்த்து தான் இந்துமதி.

“இன்னும் கொஞ்சம் தான்.” என்று சொல்ல வேண்டி இருந்தது. ஏன் என்றால் , வாசுதேவன் அவ்வளவு பக்கம் இந்துமதி அமர்ந்து இருந்த இருக்கைக்கு ஒட்டிய வாறு நின்று கொண்டு தான் கேட்டான்.

அதோடு. “இன்னும் என்ன பெட்டிங் இருக்கு.” என்று கேட்டு கொண்டே தன் கனிணியை அவன் பார்க்க இன்னும் அவன் முகம் தன் முகத்தின் அருகில் கொண்டு வந்து நிறுத்தியும், கணினியின் மவுசை அவன் பிடிக்க தன் கைக்கு இடையே அவன் கையை விட்டு, என்று அவன் செயல்கள் அனைத்தும் அவளை நிலை தடுமாற வைத்தது. அதுவும் அனைவரும் பார்க்க.

அவர்களும் அவர்கள் வேலையை விட்டு அனைவரின் பார்வையும் இங்கு தான் இருந்தது. இதற்க்கு தான் எப்படி ரியாக்ட் செய்ய வேண்டும் என்று கூட அவளுக்கு முதலில் புரியவில்லை.

பின் பல்லை கடித்து கொண்டு. “ கை எடுத்துட்டு தள்ளி நிள்ளுங்க வாசுதேவன்.” என்று இந்துமதி அழுத்தமாக சொல்லவும், வாசுதேவன் கை எடுத்து விட்டான் தான். இந்துமதியை விட்டு கொஞ்ச,ம் தள்ளியும் நின்றுக் கொண்டான் தான்.

ஆனால் அவ்வளவு தள்ளி எல்லாம் இல்லாது, லேசாக தன் உடலை நகர்த்தினான் அவ்வளவே. முன் அவன் உடல் இந்துமதியின் உடலோடு ஒட்டி இருந்தது. அது இப்போது இல்லை. அவ்வளவே..

ஆனாலுமே மற்றவர்களின் பார்வைக்கு இப்போதும் அவர்கள் நெருக்கமாக இருப்பது போல் தான் ஒரு காட்சி. வாசுதேவனும் இதை தான் எதிர் பார்த்தானோ என்னவோ.

பின் “ சரி சீக்கிரம் முடிங்க.” என்று பொதுவாக அனைவரையும் பார்த்து சொன்னவன், இந்துமதியிடன் மட்டும் இரு விரல் காட்டி. “ ஓகே.” என்று தனிப்பட்டு சொல்லி விட்டு செல்வது போல் சென்று விட்டான்.

பின் அவள் பக்கத்தில் அமர்ந்து இருந்த சுரேகா. “ என்ன இந்து உங்க இரண்டு பேருக்கும் நடுவே சம்திங் சம்திங்கா.? ஆனா வாசு பார்க்க சும்மா அசத்துறார் இந்து.

அவர் பக்கத்தில் நீ கொஞ்சம் கம்மியா தான் தெரியிற. இவர் மைசூர் பிரான்சில் இருந்து வந்து இருக்கிறார். அங்கு என் பிரண்ட் இவரை பத்தி அவ்வளவு சொல்றார் இந்து. படிப்பு எப்போவும் இவர் முதல் தானாம். “ என்று எதேதோ சொல்லிக் கொண்டு வந்தவள் கடைசியாக.

“ அவரை பத்தி உன் கிட்ட சொல்றேன் பார்த்தியா..? என்ன ஸ்கூல் படிக்கும் போதே உனக்கு அவர் மேல இன்ரெஸ்ட்டா, கொஞ்ச நேரம் முன் கூட அவர் எதோ சொன்னாரே, எனக்கு தான் அடையாளம் தெரியல. உனக்குமா.? என்று.

ஓ அப்போவே அவர் மேல உனக்கு க்ரேஸியா.? ஆனா அதுக்கு வெர்த்தனாவன் தான் இந்து வாசு. முதல் காதலா இருந்தாலும் சரி, ஈர்ப்பா இருந்தாலும் சரி, அது ஸ்பெஷல் தான் இல்ல.

அப்போ அவருக்கு உன் மீது க்ரேஸி இருந்ததா தெரியல. ஆனால் இப்போ சும்மா அவர் பார்வையே சொல்லுது இந்து. நீ ரொம்ப லக்கி தான் இந்து.

யாருக்கு இது போல் நடக்கும். சின்ன வயதில் பிடித்த ஒருவன். இப்போ ரொம்ப வருஷம் கழித்து அவனே உன் கிட்ட நெருங்கி வர நினைக்கிறான்.” என்று அந்த சுரேகா இன்னும் ஏதேதோ தத்து பித்து என்று உலறிக் கொண்டு இருந்தாள்.

“ சும்மா நீயே கண்ட மேனிக்கு உலறாதே.” என்று சுரேகாவை இந்துமதி அடக்க சுரேகா ஒரு நமுட்டு பார்வை பார்த்து கொண்டே.

“ அக்கட சூடு.” என்று அவள் கை காட்ட., என்ன என்று இந்துமதி பார்க்கும் போது வாசுதேவனின் பார்வை இவர்கள் பக்கம் இருந்தது. குறிப்பாக அவன் இந்துமதியையே பார்த்த வாறு இருந்தான்.

தலையில் அடித்து கொள்ளாத குறை ஒன்று தான் இந்துமதிக்கு. ஒரு நாளில் அந்த அளவுக்கு மண்டை காய்ந்து விட்டது அவளுக்கு.

ஏன் இவன் இப்படி செய்கிறான். காரணம் என்ன புரியவில்லை. இது மட்டும் வீர ராகவுக்கு தெரிந்தது அவ்வளவு தான் என்று நினைக்கும் போது தான், தனக்கு நிச்சயம் ஆனதை ஆபிசில் இருப்பர்கள் யாரிடமும் சொல்லவில்லை என்பது இப்போது தான் அவள் நினைவுக்கே வந்தது.

இந்துமதிக்கு இப்போது தோன்றுகிறது சொல்லி இருக்க வேண்டுமோ என்று. அவள் பிரண்ஸ் அனைவரும் இங்கு இருந்து சென்ற பின், இந்துமதி எதிலும் ஒரு பிடிப்பு இல்லாது தான் இருந்தாள்.

இங்கு வேறு யாரிடமும் அவளுக்கு அந்த அளவுக்கு நெருக்கம் எல்லாம் கிடையாது. என்ன என்றால் என்ன அவ்வளவே அவள் பேச்சாக இருக்கும்.

அதனால் யாரிடமும் சொல்லவில்லை. அதோடு யமுனா பிரச்சனையும் சேர்ந்து கொண்டதால், அவளின் கவனம் ஒரு நிலையில் இல்லாது விட்டு விட்டாள். அதோடு வீட்டோடு தானே நிச்சயம். கல்யாணத்திற்க்கு அழைத்து கொள்ளலாம் என்ற மெத்தனமும் கூட.

ஆனால் இப்போது சொல்லி இருந்தால், தன்னை வாசுதேவனோடு இணைத்து பேசாது இருந்து இருப்பார்களோ என்று ஒன்றன் பின் ஒன்றாக நினைத்துக் கொண்டு இருந்தவளுக்கு, தலை வலி பின்னி எடுக்க ஆரம்பித்து விட்டது.

சரி ஒரு காபி குடிக்கலாம் என்று புட்கோட்டுக்கு போகும் போது, கூடவே வாசுதேவனும் இவளோடு வந்து இணைந்து கொண்டான்.

இந்துமதி இதற்க்கு ஒரு முடிவு கட்ட வேண்டி. “உங்க மனசுல என்ன நினைத்து கொண்டு இது எல்லாம் செய்யிறிங்க வாசுதேவன் எனக்கு புரியல.” என்று தைரியமாகவே அவன் கண்ணை பார்த்து கேட்டு விட்டாள்.

“நான் ஒன்றும் நினைக்கல. அப்போ இருந்து நீ தானே என்னை நினைத்த. சரி சின்ன பெண் மனது கஷ்டம் பட கூடாது என்று தான்.” என்று ஒரு மாதிரி சிரிப்பு சிரித்து விட்டு சென்றவனின், முதுகை கோபத்துடன் பார்த்து கொண்டு இருந்தவளின் செவியில்.

“உன் கிட்ட அவன் ஏதாவது பிரச்சனை செய்யிறானா.?” என்று வீர ராகவின் குரலில், இன்று எத்தனையாவது முறையாக அதிர்ந்து போகிறாள் என்ற கணக்கே இல்லாது அதிர்ந்து அவனை திரும்பி பார்த்தாள் இந்துமதி.














 
Active member
Joined
Aug 16, 2024
Messages
267
வீரிடம் இந்து சொல்லலாம். ஆனால் சொல்வாள🤔
 
Top