அத்தியாயம்…13
இந்துமதியின் கை பேசிக்கு வந்த அழைப்பின் எண்ணை விசாரிக்க சொன்னவர்… வாசுதேவ்வின் முழுவிவரத்தையும் வீர ராகவ்விடம் சொல்லி கொண்டு இருந்தார்.. வீர ராகவ் தன் வருங்கால மனைவியின் கை பேசிக்கு வந்த எண் என்று எல்லாம் தெரிவிக்காது தான் தன் கீழ் உள்ள காவலரிடம் விசாரிக்க சொன்னது…
அதன் தொட்டு அந்த காவலர்…. “ நான்கு நாளாக தான் சார் இந்த எண்ணில் இருந்து இந்த எண்ணுக்கு அழைப்பு போய் இருக்கு…” என்று சொன்னவர் கூடவே..
“சார் இந்த பெண் எண்ணுக்கு வேறு எந்த எண்ணில் இருந்து எல்லாம் கால் வருது என்று விசாரிக்கவா… சார்..” என்ற கேள்வியின் வீர ராகவ் உடனடியாக.
“இல்ல வேண்டாம்.. வேண்டாம்… அந்த பெண் செல்லை எல்லாம் ட்ரேஸர் செய்ய வேண்டாம்.. வாசுதேவ் கால ட்ரேஸர் செய்யுங்க.. அதோடு இவனின் முழுவிவரமும்.. எனக்கு தேவை.. இன்னைக்கு ஈவினிங்குள் வேண்டும்..” என்று சொன்னவன்..
சாருகேசனை அழைத்தவன்… சம்மந்தம் இல்லாது ஏதேதோ பேசினான்.. கேட்டான்… முதலில் பதில் அளித்து கொண்டு வந்த சாருகேசன் பின் தான் உணர்ந்தான்..
தன்னிடம் ஏதோ கேட்க தான் அழைத்து இருக்கிறான்.. ஆனால் அதை கேட்காது ஏதேதோ பேசுகிறான் என்பது.
“ என் கிட்ட ஏதாவது கேட்கனுமா வீர்…?” என்று கேட்ட போது கூட வீர ராகவனால் அதை கேட்க முடியவில்லை…
காரணம் என்ன தான் சாரு கேசவன் தன் உயிர் நண்பனாக இருந்தாலும் இந்துமதி அவன் திருமணம் செய்து கொள்ளும் பெண்… அவளை பற்றி எனக்கு ஒரு சில விசயநள் தெரியனும்.. அதை உன் மனைவியிடம் கேட்டு சொல் என்று கூற அவனுக்கு ஒரு மாதிரியாக இருந்தது..
அதனால். “ஏதாவது கேட்க தான் நான் உனக்கு போன் செய்வேனா..?” என்று கேட்டு வீர ராகவன் பேச்சை திசை திருப்பினான்…
வீர ராகவனின் பேச்சில் சாரு கேசவன்.. “ ஆமா ஆமா ட்யூட்டி டைம்ல சார் போன் போட்டு.. அம்மாவை பார்க்க போணியா. அப்பா என்ன சொன்னாரு.. காலையில் வீட்டில் சாப்பிட்டியா. வெளியில் சாப்பிட்டியா..?” என்று கேட்க தான் எனக்கு நீ போன் செய்தப்பா… “ என்று கிண்டலாக பேசியவன்..
பின் சீரியஸாக.. “ உனக்கு இந்துவை பற்றி யமுனா மூலம் ஏதோ தெரியனும்.. கரைக்ட்..?” என்று கேட்டவனுக்கு வீர ராகவ்…
“ம்..” என்று மட்டும் மெல்ல சொல்ல..
“என்ன தெரியனும்.. வீர்.. ஒன்னு மட்டும் சொல்றேன்… எது இருந்தாலும் பேசிடனும்.. நாம் விசாரணையை தான் ஒருத்தர் அறியாது விசாரிக்கனும்.. ஆனா நம்ம வாழ்க்கை அப்படி கிடையாது.. உன் வருங்கால மனைவி கிட்ட மனசு விட்டு உனக்கு ஏதாவது தெரியனும் என்றால் கேட்டு விடு, அதே போல தான் உன்னை பத்தியும் ஏதாவது இருந்தா சொல்லி விடு.. நான் செய்த தப்பை நீயும் செய்து விடாதே.. அதோடு உங்க மேடம் மத்தவங்களையே அந்த குழப்பம் குழப்பி விடுறவங்க.. தன் விசயத்தில் உன்னை பத்தி என்ன என்ன கற்பனை எல்லாம் செய்து வைத்து இருக்காங்கலோ… அதை எல்லாம் தெளிவு படுத்தி விட்டு தாலி கட்டினா தான் உன்னால குடும்பம் நடத்த முடியும்.. அனுபவப்பட்டவன் சொல்றேன்… அவ்வளவு தான்…” என்று பேசி விட்டான்.
ஆனால் வீர ராகவுக்கு தான் வேறு ஏதாவது இருந்தால், மற்றவர்களிடமோ… இல்லை இந்துமதியிடமோ கேட்டு இருந்து இருப்பான்.. ஆனால் இது..
சாருகேசன் யமுனாவை பற்றி அவளுக்கு வேறு யாராவது பிடிக்கும் போல. அது தான் என்னை நெருங்க விட வில்லை என்று சொன்ன போது சந்தேகம் பட கூடாது என்று சொன்னவன்.. எப்படி இந்துமதியின் மீதான தன் சந்தேகத்தை வீர ராகவன் கேட்பான்..
ஆம் சந்தேகம் தான்.. ஆனால் அந்த சந்தேகம் இந்துமதியின் மீது தவறாக எல்லாம் இல்லை. காதலித்து இருந்து இருப்பாள்.. தவறானவன் என்று தெரிந்து விலகி கொண்டு இருந்து இருப்பாள்… இவளோடன ஏதாவது ஒரு விசயத்தை வைத்து ஏதாவது பிளாக் மெயில் செய்கிறானோ என்ற சந்தேகம் தான் அவனுக்கு…
அதுவும் அலுவலகத்தில் இந்துமதி வாசுதேவ்வை பார்த்த அந்த பார்வையின் அத்தனை வெறுப்பை பார்த்தவனுக்கும் கூடவே புடவை எடுக்க போகும் போது என்ன தான் தனக்கு தெரிய கூடாது என்று வாசுதேவன் பேசுவதை சாதாரணமான பேச்சாக பேசினாலுமே, அவள் முகத்தில் தெரிந்த அந்த அருவெருப்பான முகத்தை வைத்தே வீர ராகவன் புரிந்து கொண்டு விட்டான்.. கண்டிப்பாக பேசியின் அந்த பக்கத்தின் பேச்சும் அருவெருக்க தக்கதாக தான் இருக்கும் என்பதை…
ஏதாவது சொன்னால் தானே… சரி செய்ய முடியும்.. உனக்கு ஏதாவது பிரச்சனையா …” நீ என் கிட்ட ஏதாவது சொல்லனுமா…?” எது கேட்டாலுமே ஒன்னும் இல்ல . ஒன்னும் இல்ல என்று சொன்னா… என்று மனதில் இந்துமதியை திட்டினாலுமே, வீர ராகவ் இந்துமதியின் பக்கமும் யோசித்தான்..
இன்னுமே தன் வருங்கால கணவனிடம் கடந்த காலம் காதல் பற்றியதான சூழலில் பெண்கள் நிலை இல்லை என்பது..
இதே ஒரு கணவன் மனைவியிடம்… ஒரு பெண்ணை காட்டி.. “ இவள் என்னுடைய எக்ஸ்…” என்று சொன்னால், பெண்கள் அதை பெரியதாக எடுத்து கொள்ளாது கடந்து செல்வதை போன்று ஆண்கள் கடந்து செல்வது கிடையாது என்பது அவனுக்கு புரிந்தது தான்.
ஆனால் வீர ராகவனுக்கு, இந்து மதி ஏதாவது பிரச்சனையில் மாட்டிக் கொள்வாளா…? என்ற் பயத்தில் வாசுதேவனை பற்றி விசாரிக்க.
வாசுதேவ் ஒரு வாரமாக தான் இந்துமதி வேலை செய்யும் அலுவலகத்திற்க்கு மாற்றலாகி வந்து இருக்கிறான் என்ற விவரமும், கல்லூரி வீடு என்று எந்த வகையிலும்.. இந்துமதியோடு இந்த வாசுதேவ் எந்த வகையிலுமே தொடர்பு இல்லாது தான் இருக்கிறது..
இந்து மதி படித்த கல்லூரி பற்றி இந்துமதியின் அண்ணனிடம் பேச்சு வாக்கில் பேசுவது போல கேட்ட போது கிடைத்தது வைத்து பார்க்கும் போது இவள் வேறு கல்லூரியில் தான் படித்து இருக்கிறாள்..
ஏன் முகநூல் இன்ஸ்டாகிராம். என்று எதன் வழியும் இருவருக்கும் ஒரு தொடர்பும் கிடையாது என்பது தான் அவன் விசாரித்த வரை தெரிந்த தகவல்கள்..
வீர ராகவ் நினைத்தது விசாரித்தது அனைத்துமே சரி தான்.. ஆனால் இந்துமதியும் வாசுதேவ்வும் எந்த கல்லூரியில் படித்தார்கள் என்று விசாரித்தவன்.. அதற்க்கு முன் பாகமான எந்த பள்ளி என்று விசாரித்து இருந்து இருந்தால் நன்றாக இருந்து இருக்கும்..
ஆனால் பாவம் பள்ளி படிப்பு படிக்கும் போதே காதலா…?” இதை அவன் நினைத்து பார்த்து இருந்து இருக்க மாட்டான் தான்…
தன் முன் நின்று கொண்டு இருந்த இந்துமதியிடம்… “ நேத்து ஆபிஸ்க்கு லீவ் போட்டுட்டு எங்கு போய் இருந்திங்க மேடம்…?” என்ற கேள்விக்கு இந்து மதி.
“ அது தான் மெய்யில்ல மென்ஷன் பண்ணி இருந்தேனே சார் எல்த் இஷ்யூ என்று…” என்று சொன்னவளின் பேச்சை வாசு தேவ் நம்பவில்லை…
“உடம்பு சரியில்லேன்னா… முகம் எல்லாம் டல்லா தான் இருக்கும்.. ஆனா உன்னை போல தேஜஸா எல்லாம் இருக்காது.” என்று சொன்ன வாசு தேவ்.. இந்துமதியின் முகத்தில் இருக்கும் அந்த தேஜஸை ரசித்தும் பார்த்து கொண்டு இருந்தான்..
இந்து மதிக்கோ… அந்த கேடு கெட்டவன் தன்னை இப்படி பார்ப்பாது பிடிக்கவில்லை. அதை தன் முகத்தில் காட்டியவளாக.
“அப்போ நான் போகிறேன் சார்.” என்று சொல்லி விட்டு அந்த இடத்தை விட்டு போக பார்த்தவளிடம் அலுவலக வேலையாக ஒன்று கேட்டவன்.
பின்… “ இது ஐடி கம்பெனிம்மா…. என்னவோ ஸ்கூல் போல சார் எல்லாம் கூப்பிட்டு… என் பேரையே கூப்பிடு.. இந்து உனக்கு பிடித்த மாதிரி தேவ்…”
வாசு தேவ் தன்னை தேவ் என்று கூப்பிடு என்று சொல்லும் போது இந்துமதிக்கு அவன் மீது வந்த கோபத்தை விட தன் மீது தான் அதிகமான கோபம் வந்தது..
ஏன் என்றால் இந்துமதி வாசு தேவ்விடம் தன் காதலை சொல்லும் போதும் சரி.. அந்த கிரீட்டிங்க கார்டிலும் சரி தேவ் என்று தான் எழுதினாள் .. கூப்பிட்டாள்.. இப்போது அதை நினைக்கும் போது அவள் மீதே கோபம் தான் வந்தது.. இப்போது இவன் முகத்தில் தெரியும்.. இந்த கபடம் அன்று தனக்கு தெரியாது போயிற்றே எத்தனை முறை அவள் தன்னை தானே திட்டிக் கொண்டாலுமே நடந்து முடிந்ததை மாற்ற முடியுமா என்ன..?
இதோ மீன்டும்… “ உனக்கு பிடித்த மாதிரி தேவ்வோ கூப்பிடு இந்து… ஸ்கூல் போல சார் எல்லாம் வேண்டாம்.. நமக்கு இடையில் வருப்போற அந்த நெருக்கத்திற்க்கும் இந்த சாருக்கும் ரொம்ப ரொம்ப இடிக்குது அதனால தான் சொல்றேன்..” என்ற வாசு தேவ்வின் பேச்சிற்க்கு…
இந்துமதிக்கு பக்கத்தில் ஏதாவது இருந்தால் அவன் மண்டையில் ஒன்று போட்டு விடலாமா.? என்று கூட நினைத்து விட்டாள்.. ஆனால் முன் அவள் செய்த அந்த முட்டாள் தனம் அவளை தடுத்து நிறுத்தியது..
அதனால் பல்லை கடித்து கொண்டு… “ சார்.. நீங்களுமே இதை ஸ்கூல் என்று நினச்சிட்டு தான் பேசுறிங்க சார்.. அதனால் தான் லீவ் எடுத்ததிற்க்கு நிற்க வைத்து காரணம் கேட்டுட்டு இருக்கிங்க…”என்று சொன்னவள் கூட வாசு தேவ் முன் கேட்ட வெளியில் சென்றாயா…? என்ற கேள்விக்கு .
இப்போது..” ஆமாம் சார் வெளியில் தான் போனேன்.. எங்கு என்று கேட்கலையே…?” என்று கேட்டு விட்ட இந்து மதி வாசுதேவ்வை பார்த்தாள்..
வாசு தேவ்வும் இந்துமதியை தான் பார்த்து கொண்டு இருந்தான்.. ஆனால் எங்கு என்று கேட்கவில்லை..
ஆனால் இந்து மதி கேட்காத போதும் சொன்னாள்… “காஞ்சிபுரத்திற்க்கு.. நீங்க எதுக்கு என்று கேட்காத போதும் நானே சொல்லிடுறேன்… என் கல்யாணத்திற்க்கு மூகூர்த்த புடவை எடுக்க என் வருங்கால கணவனோடு போனேன்..” என்று சொன்ன இந்து மதி வாசு தேவ்வின் அதிர்ந்த முகத்தை பார்க்க ஆவளோடு அவன் முகத்தை பார்த்தாள்..
ஆனால் வாசு தேவ் இந்து மதி எதிர் பார்த்தது போல அதிர எல்லாம் இல்லை.. அவன் பேச்சில் இவள் தான் அதிர்ந்து போனாள்..
“காங்கிரஜிலேஷன் இந்து..” என்று வாழ்த்தியவன் கூடவே.
“என்ன நீ நான் ஷாக் ஆகிடுவ என்று நினச்சியா..? உன்னை நான் கல்யாணம் பண்ணவா கேட்டேன்.. ஒன் நையிட் ஸ்டே. அவ்வளவு தான்.” என்ற இந்த பேச்சில் அவளின் முகம் அதிர்ச்சி… அருவெறுப்பு காட்டியவள்..
“பொறுக்கி…” என்றும் சொல்ல..
வாசு தேவ்..” இதுல என்ன பொறுக்கி தனம் இருக்கு.. என்னை பிடிச்ச பெண் கிட்ட அந்த பெண்ணின் விருப்பத்தை நிறைவேற்ற கூப்பிடுறேன்..” என்று சொன்னவன் கூடவே..
“நீ படிக்கும் போது என் கிட்ட நீ பிரபோஸ் பண்ணியதை என் பிரண்ட் எதிரில் சொல்லாது தனியா இருக்கும் போது சொல்லி இருந்தா நானுமே என் லவ்வை ஏத்து இருந்து இருப்பேன்..” என்றவனின் பேச்சில் இந்துமதி வாசிதேவ்வை கூர்ந்து பார்த்தாள்..
அடுத்து என்ன சொல்ல போகிறான் என்று.. ஆனால் சொல்வது சரியானதாக இருக்காது என்பதும் அவளுக்கு தெரியும்..
அவள் நினைத்தது போல் தான்… “இதோ இப்போ கேட்டதை அப்போ நான் கேட்காமலேயே உன்னை என் கிட்ட கொடுத்து இருந்து இருப்ப.. எனக்குமே உன்னை பிடித்து தான் பார்த்தேன்… சும்மா அப்போவே அப்படி இருப்ப..” என்று சொல்லி விட்டு அவன் தன்னை பார்க்கும் இடத்தை பார்த்த இந்துமதியின் முதுகு தன்னால் கூன் போட்டு கொண்டது..
“ ஆனா சும்மா சொல்ல கூடாது அப்போ ஒரு மாதிரி மாதிரி அழகுன்னா இப்போ வேறு மாதிரி அழகு… ம் கட்டிக்க போறவவன் கொடுத்து வைத்தவன் தான். ஆனா அதன் தொடக்கம் நானா இருக்கனும்.. எனக்கு அவ்வளவு தான் வேண்டும்..” என்று பேசியவனின் பேச்சை இந்துமதியால் அதற்க்கு மேல் கேட்க முடியாது அங்கு இருந்து வந்து விட..
அவளுடன் வேலைப்பார்ப்பவர்கள்.. “ என்ன வாசு தேவ் கூட ரொம்ப நேரம் பேசிட்டு இருந்த போல..” என்று வாசு தேவ்வையும் அவளையும் வைத்து கிண்டல் பேச..
இந்துமதிக்கு அந்த கிண்டல் பேச்சு கூட பிடிக்கவில்லை.. இவர்கள் தவறாக எல்லாம் கிண்டல் செய்யவில்லை.. அதாவது வாசு தேவ் தன்னை பார்ப்பதை வைத்து தான் அது காதல் என்று நினைத்து கிண்டல் செய்கிறார்கள்..இது போலான பேச்சு அங்கு சகஜம் தான்.. .
ஆனால் வாசு தேவ் தன்னை பார்ப்பதின் நோக்கம் இந்துமதிக்கு தான் தெரியுமே. இத்தனை கண்ணியமாக தோற்றத்தில் இப்படி ஒரு கழுசடை குணம் ஒளிந்து கொண்டு இருக்குமா.?
‘இவனையா தான் காதலித்தோம்.. அப்படி படிப்பான்… கடவுள் படிப்பு தோற்றம் என்று கொடுத்தவன் குணத்தை கொடுக்காது விட்டு விட்டான் போல. என்று நினைத்து கொண்டவள்..
வாசு தேவ் சொன்ன. “ நீ நான் தனியா இருக்கும் போது பிரபோஸ் பண்ணி இருந்தா நானும் அக்சப் பண்ணி இருப்பேம். அப்போதே எல்லாம் முடிந்து இருக்கும்..” என்று சொன்னவனின் பேச்சும் கூடவே அவன் தன்னை பார்த்த பார்வையும் நியாபகத்தில் வர.
நல்ல வேளை கெட்டதிலும் ஒரு நல்லதாக அவன் பிரண்ட் இருக்கும் போது சொன்னேன்.. இல்லை என்றால், கண்டிப்பாக அன்று இவன் மீது தனக்கு இருந்த அந்த பிடித்தத்தில் இவன் சொன்ன போல நடந்து கூட இருந்து இருக்கலாம்.. என்று கண்டதையும் நினைத்தவளுக்கு தலை வலி தான் வந்தது..
சரி காபி குடித்து விட்ட வரலாம் என்று கேண்டின் வந்தால், அங்கும் இவளுக்கு முன் வாசு தேவ் வந்து இருக்க .. அய்யோ என்று தான் ஆனது இந்துமதிக்கு.
இதில் அவன்.. “என்னை தொடர்ந்து வர போல…” என்று கேட்டவனை அவன் கையில் இருந்த ஆவி பறக்கும் காபியை பிடிங்கி அவன் முகத்திலேயே ஊற்றி விடலாமா என்று கூட நினைத்தாள்..
இருந்தும் இருக்கும் இடத்தை கொண்டு தன்னை அடக்கி கொண்டவளாக. “ இது போலவே பேசிட்டு இருந்தா வெச்சிக்கோங்க..” என்ற அவளின் பேச்சில் வாசு தேவ்…
“ எனக்கு பர்மெண்டா வெச்சிக்கோ ஓகே தான்… அதுக்கு நீ வெர்த்தும் கூட..” என்று சொல்ல.
உண்மையில் இந்து மதிக்கு இவனை என்ன செய்யலாம் என்று தெரியாது தான் விழித்தாள்.. கடைசியாக.
“என் வுட்பீ கிட்ட சொன்னா .. “ என்று சொன்னவளின் பேச்சை இடைநிறுத்தி தடுத்து நிறுத்திய வாசு தேவ்..
“என்ன என்று சொல்லுவம்மா. என்ன என்று சொல்லுவ. நான் உன் கிட்ட மிஸ் பிகேவியர் பண்றேன் என்றா.. சொல்லேன் சொல்லி தான் பாரேன்… என் கூட ஸ்கூல்ல படிச்சவங்க இன்னுமே என் கூட தொடர்பில் தான் இருக்காங்க.. அதுவும் பர்ட்ட்டிகுலரா அன்னைக்கு நீ என் கிட்ட பிரபோஸ் பண்ணும் போது என் கூட இருந்தவங்க…” என்றவனின் பேச்சில் இந்துமதியால் ஒன்றும் சொல்ல முடியாது அந்த இடத்தை விட்டு அவள் தான் ஓடும் படியாகி விட்டது…
இந்து மதி குறைந்த பட்சம் எனக்கு நிச்சயம் ஆகி விட்டது என்று சொன்னவள்… நிச்சயத்தவன் ஐ.பி. எஸ் என்று சொல்லி இருந்து இருக்கலாம்…